Jump to content

நவராத்திரி விரதம் 1ஆம் திகதி ஆரம்பம்


Recommended Posts

பதியப்பட்டது

article_1474431982-1.jpg

புரட்டாதி மாதத்தில் வரும் வளர்பிறைப் பிரதமை நாள் முதல் நவமி நாள் வரை வருகின்ற ஒன்பது நாட்கள் நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இவ்வாண்டு (துர்முகி வருடம்) புரட்டாதி மாத வளர்பிறைப் பிரதமை எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி அன்று அமைகின்றது. நவமி 10 ஆம் திகதி முன்னிரவில் அற்றுப்போகின்றது. எனவே விரதம் 01 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும். மறுநாள் விஜயதசமி மற்றும் கேதாரகௌரி விரதத்தின் தொடக்க நாளாக அமைகின்றது.

பத்து நாட்கள் வருகின்ற போது துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதிக்கு எப்படி நாட்களைப் பகுப்பது? நாட்களைப் பகுப்பது என்பது ஒரு கருத்தியல்தான். கோவிலில் கும்ப பூசை மூன்று தேவியருக்கும்தான் செய்யப்படுகின்றது.

ஆயினும் சரஸ்வதிக்குரிய நாளை மூலநட்சத்திர நாளில் ஆரம்பித்து திருவோண நட்சத்திர நாளில் நிறைவு செய்ய வேண்டும் என்று விரத நிர்ணய விதி இருப்பதால் இவ்வாண்டு சரஸ்வதி பூசை 08.10.2016 சனிக்கிழமை ஆரம்பமாகி 10.10.2016 திங்கட்கிழமை நிறைவுறும். மறுநாள் 11.10.2016 செவ்வாய்க்கிழமை விஜயதசமி – ஏடு தொடக்குதல் மானம்பு உற்சவம் இடம்பெறும்.

http://www.tamilmirror.lk/182307/நவர-த-த-ர-வ-ரதம-ஆம-த-கத-ஆரம-பம-

  • 2 weeks later...
Posted

தமிழ்சிறி இணைத்த வீடியோயை ஆர்வத்தில் முழுவதும் பார்த்தேன். விஞ்ஞான விளக்கம் என்று தலைப்பு மட்டும்தான் உள்ளதே தவிர மற்றதெல்ல்லாம் பித்தலாட்டமாகவே உள்ளது. தலைப்பைப் போட்டு ஏமாற்றி விட்டார்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, இணையவன் said:

தமிழ்சிறி இணைத்த வீடியோயை ஆர்வத்தில் முழுவதும் பார்த்தேன். விஞ்ஞான விளக்கம் என்று தலைப்பு மட்டும்தான் உள்ளதே தவிர மற்றதெல்ல்லாம் பித்தலாட்டமாகவே உள்ளது. தலைப்பைப் போட்டு ஏமாற்றி விட்டார்கள். :rolleyes:

நான் இனித்தான்.... அந்த வீடியோவை, பார்க்கப் போகின்றேன். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
"மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி...
தேன் தமிழ் சொல்லெடுத்து,  பாட வந்தோம்."
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில், இதுகும் ஒன்று.
Posted

 

விஜயதசமியை முன்னிட்டு இணுவைக்கந்தனில் இடம்பெற்ற மானம்பூ திருவிழா.......

 

 

நல்லூர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்வுக்கு நன்றி நவீனன் ....!  வெட்டு இரண்டு , துண்டு மூன்று .....!!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.