Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

' பணமே வேண்டாம்...போட்டி போட வாங்க...!' -விஜயகாந்தின் வேட்டை

Featured Replies

' பணமே வேண்டாம்...போட்டி போட வாங்க...!'  -விஜயகாந்தின் வேட்டை

vijayakanth%20long%201aaa.jpg

ள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்திலேயே தே.மு.தி.க தொண்டர்கள் இல்லை. ஆனால், ' அனைத்து வேட்பாளர்களையும் தி.மு.க அறிவிப்பதற்குள், நாம் முந்திக் கொள்ள வேண்டும்' என்ற முடிவில் தீவிரமாக இருக்கிறார் விஜயகாந்த். 

தமிழக அரசியல் கட்சிகள் சுதாரித்து எழுவதற்குள், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுவிட்டது தேர்தல் ஆணையம். அதனைத் தொடர்ந்து வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துவிட்டது அ.தி.மு.க. இன்று முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறது தி.மு.க. அதேபோல், மக்கள் நலக் கூட்டணியின் முதல்கட்ட தொகுதிப் பங்கீடும் வெளியிடப்பட்டுவிட்டது. உள்ளாட்சி தேர்தல் களத்தில் தே.மு.தி.க என்ற கட்சியே இருப்பதுபோல் தெரியவில்லை. " கட்சித் தலைமை எங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால், போட்டியிடுங்கள் என்று வற்புறுத்தாமல் இருந்தால்போதும்" என ஆதங்கப்படுகிறார் கொங்கு மண்டல தே.மு.தி.க நிர்வாகி ஒருவர். அவர் நம்மிடம், 

" கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகப்படியான ஓட்டுக்களை தே.மு.தி.க குவித்தது. கவுன்சிலர் இடங்களுக்குப் போட்டியிடுவதில் பெரிய தகராறே வெடித்தது. அந்தளவுக்குக் கட்சி பலமாக இருந்தது. ' தேர்தலில் போட்டியிட்டே ஆக வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜயகாந்த். ஆனால், அதற்குரிய வேட்பாளர்கள் கிடைக்காமல் தடுமாறி வருகிறோம். நேற்று தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி எங்களிடம், ' நாளை மாலைக்குள் விருப்பமனு கொடுத்தவர்கள் பட்டியலை அனுப்பிவிடுங்கள். தி.மு.க முழுப் பட்டியலையும் வெளியிடுவதற்குள் நாம் முந்திக்கொள்ள வேண்டும்' எனக் கட்டாயப்படுத்தினார். அதற்கு நாங்கள், ' மனு கொடுத்தவர்கள்கூட போட்டியிடத் தயங்குகிறார்கள். பலபேர் விருப்பமனுவுக்கு பணம் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களைக் கட்டாயப்படுத்த முடியவில்லை' எனச் சொன்னோம். ' விருப்பமனுவுக்குப் பணமே வாங்க வேண்டாம். எப்படியாவது பட்டியலைத் தயாரித்து அனுப்பிவிடுங்கள். கேப்டன் அவசரப்படுத்துகிறார்' எனக் கேட்டுக் கொண்டார். 

இந்தளவுக்குக் கட்சியின் வளர்ச்சி அதல பாதாளத்திற்குப் போகும் என்று நாங்கள் நினைக்கவில்லை. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தி.மு.க கூடாரத்திற்குச் சென்றுவிட்டனர். இப்போது பார்த்தசாரதியும் இளங்கோவனும் மட்டுமே கட்சிப் பணியை கவனிக்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் கேப்டன் கவலைப்படுவதாக இல்லை. பிரேமலதாவோ, ' கட்சியை விட்டுப் போகிறவர்கள் போகட்டும். நம்மைச் சுற்றி நல்லவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். நமக்கு நல்ல நேரம் வந்துவிட்டது' என கேப்டனிடம் பேசியிருக்கிறார். அவரும், ' உண்மைதான். நாம் பதவியில் உட்கார்ந்துவிட்டால், நம்மைத் தேடி அனைவரும் வந்துவிடுவார்கள்' என விவரித்திருக்கிறார். உண்மையில், தமிழ்நாட்டில் நிலைமை தெரியாமல் இவர்கள் பேசிக் கொள்கிறார்களா என்றும் தெரியவில்லை. 

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா முப்பது பேர் மட்டுமே போட்டியிட மனு கொடுத்திருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் மனுவை வாபஸ் வாங்கிக் கொள்வார்களோ தெரியவில்லை. மாநகராட்சிகளின் 900 கவுன்சிலர் பதவிகளும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளில் 600-க்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன. இவற்றில், 25 சதவீத அளவுக்கு மட்டுமே, எங்களால் வேட்பாளர்களை அறிவிக்க முடியும். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் சமபலத்தில் இருக்கின்றன. தே.மு.தி.க என்ற கட்சி இருப்பதையே மக்கள் மறந்து வருகிறார்கள். அதை உணர்ந்து கொண்டு கட்சியை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளில் தலைமை ஈடுபடவில்லை. மாநகராட்சிகளின் அனைத்து வார்டுகளுக்கும் போட்டியிடுவதற்கு ஆட்கள் இல்லை. ' போட்டியிடுவற்கு யார் வந்தாலும் சீட் கொடுத்துவிடுங்கள்' என்கின்றனர். அப்படி யாராவது விருப்பப்பட்டு வருகிறார்களா எனத் தேடிக் கொண்டிருக்கிறோம்" என்றார் நொந்துபோய். 

http://www.vikatan.com/news/tamilnadu/68928-vijayakanth-in-search-of-candidates-for-local-body-election.art

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

விஜய ராஜ் நல்ல மனிதர்தான் .. மக்களோடு நான் என்று மாநாடு நடத்தி ஏழைகளுக்கு ஆட்டோ .. கணவனை இழந்த பெண்களுக்கு தையல் மிசன் என்று வாரி வாரி சொந்த காசில் இருந்து கொடுத்தார் ..! ஆட்சியில் இருக்கும் போது அடுத்தவன் கைகாசில் (வரிபணம்) வாரி கொடுப்பது வேறு ....! எங்கு இது ஓட்டாக மாற வில்லை ? அதை அவர்தான் சுயபரிசோதனை செய்ய வேண்டும் ..

பொது வெளி நாகரீகம் :


பத்திரிக்கைகாரான் என்றால் என்ன கொம்பா.. ?தூக்கி அடிச்சுருவன் பாத்துக்க.. சொம்பைகளா எண்டா கத்திகொண்டு இருக்கீறீர்கள்,,! ரோடு வேணும் என்று ஏன் எங்கிட்ட கேக்குறீங்கள்.. யாருக்கு ஓட்டு போட்டீங்களோ அவனுங்க கிட்ட போய் கேளுங்க .. நீங்க எல்லாம் பத்திரிக்கை காரனுங்களா த்தூ ..!! ஏண்டா என்னை தொட்டு பார்க்கணும் என்று ஆசை படுகிறீங்கள்..! ஓடுங்கடா..! அதுபோக பேச்சிலும் ஒரு தொடர்வு கிடையாது .. (தூத்துகுடி மேடையில் பண்ருட்டி ராமச்சந்திரன் எடுத்து கொடுத்தது: கேப்டன் !! ஈழத்தில் விக்னேஷ்வரன் ஜெயிச்சுட்டாரு..) அப்படிய்யா..? நல்லது ஒரு தமிழன் ஜெயித்தது நமக்கு பெருமை.. இந்த ராஜபக்சே இருக்கான் தெரியுமா..? தெரியுமா..? அவரபத்தி நான் அப்புறம் பேசுறன்..இந்த ஆற்று மணல் கொள்ளை இருக்கே ..!அதைவிடுவம் இந்த மின்சார கட்டணம் இருக்கே..!

இந்த நேரத்தில் கட்டுமரம் மகன் அவர் நடத்திய "நமக்கு  நாமே"  இருந்து சின்ன சாம்பிள்:

செயா டீவி நிருபர் : யாருங்க நீங்க கோமாளி மாதிரி டிரஸ் போட்டுகொண்டு சுத்தி கொண்டு மக்கள் பிரச்சனைய கேட்க போறன் என்று சுத்திட்டு திரியுறீங்க..?
ரஸ்ய முன்னாள் அதிபர்:  தம்பி நீ யார் என்று யாருக்கும் தெரியாது ..உனது தந்தை யார் என்பது யாருக்கும் தெரியாது.. உன் குடும்பத்தை பற்றி யாருக்கும் தெரியாது ..தெரிந்த ஒருவரை பற்றி தெரியாத நீ.. தெரிந்து  கொள்ள வேணும்..

( இதில் போல்ட் செய்யபட்டுள்ள வார்த்தை திரும்ப திரும்ப நீங்க  படித்தால் அர்த்தம் விளங்கும்..!! இதையும் ஈத்தறை  செயா டீவியில் திரும்ப திரும்ப போட்டு தம்பட்டம் அடித்து கொண்டார்கள்.. இதன் உள்ளர்த்தம் தெரிந்தவுடன் நிறுத்தி கொண்டார்கள் ..இந்த மாதிரி உள்குத்து பேச்சு அவர்களுடைய சொத்து .. எதும் சட்டென்டு பிரியாது .. எதுவும் பதில் உணர்வு காட்டவும் முடியாது ..வெளியல வந்து கொஞ்சம் யோசித்து பார்த்தால்தான்  ..அதன் அருவெறுப்பு நமக்கு பிரியும் ...)

அரசியலுக்கு வந்த சூழ்நிலை:
இவரை இந்த சூழ்நிலைக்கு தள்ளியதே கட்டுமரம்தான்.. அடுத்தவன் அவன் நடிச்சு கல்யாண மண்டபம் கட்டினா ..? அதை இடிப்பீங்களோ.. ? சரி அரசியலுக்கு வந்தாச்சு  இப்படி இந்த நல்ல மனிதன் வீணாக போனதன் காரணம்..?சுற்றியுள்ள உறவினர்கள்தான்..திருமதி விஜய்ராஜ் பிரேமலாதா ( நான் சரியாத்தான் பதிந்துள்ளேன்) மற்றும் சுதீஸ்..

டிஸ்கி:
முழு நேர அரசியல் படம் "மூங்கில் கோட்டை" அது அப்போதே சென்சார் போர்டால் தடை செய்யபட்டு விட்டது ..அதற்கு அப்புறம் வந்த "ஏழை சாதி"  அதனுடைய கதை வசனம் எழுதிய அவருடைய நண்பர் லியகாத் அலிகான் அவரயாவது கட்சியில் சேர்த்து  ஒரு உரை தயார் செய்து அதை மேடையில் படித்திருந்தாலே போதும் .. எல்லோருடைய அண்டர் வேரும் அண்டர் ஏரில் போயிருக்கும்.. திறமை வாய்ந்தவர்களை ஒதுக்கிவிட்டு .. சொந்தமாக பேசுகிறோம் என்று அஸ்டகோணங்கிதனம் அனைத்தும் மேடையில் செய்வதை ..!!! சினிமா நடிகர்களுக்கு என்று ஒரு மாயை உள்ளது அதை அவர் மெயின்டன் செய்து கொண்டு போயிருக்க முடியும்.. ஆனால் அதை அவரே உடைத்து விட்டார்.. ஆக மொத்தத்தில் சில்வர் ஸ்பூன் சில்பா  குமார் ..!! ஒரு சில்லரை குமாராகிவிட்டார் ..!!

 

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

9 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விஜய ராஜ் நல்ல மனிதர்தான்

அட நானும் எதோ நீங்கள் விஜயகாந்த் பற்றி எழுதியிருக்கிறீர்கள் எண்டு நினைச்சுட்டன்.

மன்னிச்சுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

அட நானும் எதோ நீங்கள் விஜயகாந்த் பற்றி எழுதியிருக்கிறீர்கள் எண்டு நினைச்சுட்டன்.

மன்னிச்சுங்கோ

நான் ரேசன் கார்டில் இருக்கும் பேரை எழுதிறன் .. நீங்க ஜாதபடி மாற்றிய விருச்சிக காந்த் போல நினைக்கிறீங்க போல ..

 

6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நான் ரேசன் கார்டில் இருக்கும் பேரை எழுதிறன் .. நீங்க ஜாதபடி மாற்றிய விருச்சிக காந்த் போல நினைக்கிறீங்க போல ..

 

அதை முன்னாடியே சொல்லியிருக்கலாமில்லை. நாம என்ன ரேஷன் கார்ட் எல்லாமே பாத்துட்டுதானா எழுதினதை வாசிப்பம்? கோமளவள்ளியை தெரியும் அதுக்காக இவரையும் அந்தளவுக்கு தெரியணும் என்று இல்லைதானே சார்.

சும்மா தமாசுக்காகத்தான் எழுதினேன் - கோபம் வேண்டாமே :grin:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஜீவன் சிவா said:

அதை முன்னாடியே சொல்லியிருக்கலாமில்லை. நாம என்ன ரேஷன் கார்ட் எல்லாமே பாத்துட்டுதானா எழுதினதை வாசிப்பம்? கோமளவள்ளியை தெரியும் அதுக்காக இவரையும் அந்தளவுக்கு தெரியணும் என்று இல்லைதானே சார்.

சும்மா தமாசுக்காகத்தான் எழுதினேன் - கோபம் வேண்டாமே :grin:

தோழர் நான் கோவித்து கொள்ளவில்லை .. இதான் ரேசன் கார்டு ,,போகட்டும்..

Ration-Card-659x463.jpg

 

உங்களுக்கெல்லாம் ஈழத்தில் இதை கொடுப்பது இல்லையா .?அதாவது பொது உணவு தானிய முறை விநியோக திட்டம் ..?

1 minute ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

உங்களுக்கெல்லாம் ஈழத்தில் இதை கொடுப்பது இல்லையா .?

முன்னர் 70 களில்  இருந்தது குடும்ப அட்டை (கூப்பன் கார்ட்) இப்ப இல்லை என்று நினைக்கின்றேன். ஆனாலும் அதில் படங்கள் இருப்பதில்லை, பெயர் மட்டுமே இருக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் 70 களில்  இருந்தது குடும்ப அட்டை (கூப்பன் கார்ட்) இப்ப இல்லை என்று நினைக்கின்றேன். ஆனாலும் அதில் படங்கள் இருப்பதில்லை, பெயர் மட்டுமே இருக்கும்.

 

பெயர் மட்டுமே இருந்தால் .. படம் இல்லாமல் இருந்தால்  .. !!  பிட்டு சாமி பிட்டு அடிக்காமல் இருக்க முடியுமா ?

நல்லது தோழர் .,. அங்கிட்டும் கஸ்டபடுகிற ஏழை பாழைகளுக்கு .. ரேசன் கார்டு வேண்டும்... அதன் மூலமாக ...குறைந்த பட்சம் போரால் பாதிக்கபட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் ..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.