Jump to content

நவராத்திரி ஸ்பெஷல்


Recommended Posts

நவராத்திரி ஸ்பெஷல்

 

p21.jpg

* பச்சைப்பயறு இனிப்புச் சுண்டல்

*  தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல்

*  வேர்க்கடலை சுண்டல்

*  வெல்லப் புட்டு

*  ராஜ்மா சுண்டல்

*  சிவப்புக் காராமணி சுண்டல்

*  கடலைப்பருப்புப் பாயசம்

*  ஸ்வீட் கார்ன் சுண்டல்

*  பச்சைப்பயறு காரச்சுண்டல்

*  நவதானிய சுண்டல்

*  டபுள் பீன்ஸ் சுண்டல்

*  கட்டா மீட்டா பாஸ்தா சுண்டல்

 

நவராத்திரி... தினம் ஒரு சுண்டல் திருப்தியாக!

வராத்திரி திருநாட்களில், இறை மனம் குளிர நைவேத்தியம் செய்யவும், வரும் விருந்தினர்களை சுவையில் அசத்தவும் சுண்டல் வகைகளைச் செய்துகாட்டுகிறார், சென்னையைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர் சசிமதன்.


பச்சைப்பயறு இனிப்புச் சுண்டல்

தேவையானவை:
 பச்சைப்பயறு - ஒரு கப்
 பொடித்த வெல்லம் - ஒரு கப்
 தேங்காய்த் துருவல் - கால் கப்
 ஏலக்காய்த்தூள் - சிறிது
 நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

p21b.jpg

செய்முறை:
பச்சைப்பயறை வெறும் வாணலியில் வறுத்து குக்கரில் மலர வேக விடவும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்து, அடுப்பில் வைத்து பாகாகக் காய்ச்சவும். இத்துடன் நெய், வேகவைத்த பயறு சேர்த்துக் கிளறி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். இங்கே கொடுத்திருக்கும் அளவுக்கு பாகும் பயறும் சேர்ந்து வரும். ஒருவேளை நீங்கள் செய்யும் போது பாகு நீர்த்துப்போவது போல இருந்தால் தீயை அதிகமாக்கி சிறிது நேரம் வேகவைத்தால் போதும்.

குறிப்பு:
முளைகட்டிய பச்சைப்பயறையும் பயன்படுத்தலாம்.


தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல்

தேவையானவை:

 காய்ந்த வெள்ளைப் பட்டாணி - ஒரு கப்
 தேங்காய்த் துருவல் - கால் கப்
 பொடியாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

தாளிக்க:
 எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
 கடுகு - ஒரு டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிது
 பச்சை மிளகாய் - 3
 பெருங்காயத்தூள் - சிறிது

p21c.jpg

செய்முறை:
பட்டாணியை குறைந்தது 10 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் 3 விசில்விட்டு வேகவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளிக்கவும். வேகவைத்த பட்டாணியை தாளித்தவற்றுடன் சேர்த்துக் கிளறவும். பிறகு மாங்காய்த் துண்டுகள், தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு:
தேங்காயை நறுக்கியும் சேர்க்கலாம்.


வேர்க்கடலை சுண்டல்

தேவையானவை:
 பச்சை வேர்க்கடலை - ஒரு கப்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
 பச்சை மிளகாய் - 4
 உப்பு - தேவையான அளவு

தாளிக்க:
 எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு
 கடுகு - ஒரு டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிது
 பெருங்காயத்தூள் - சிறிது

p21d.jpg

செய்முறை:
வேர்க்கடலையை 5 மணி நேரம் ஊறவைக்கவும். சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில்விட்டு வேகவைக்கவும். தேங்காய்த் துருவல், சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளிக்கவும். வேகவைத்த வேர்க்கடலையைச் சேர்த்துக் கிளறவும். அதோடு அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

குறிப்பு:
தினம் ஒரு பிடி வேர்க்கடலை சாப்பிடுவதால், உடலுக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்கப் பெறலாம்.


வெல்லப் புட்டு

தேவையானவை:
 புழுங்கல் அரிசி - ஒரு கப்
 வெல்லம் - முக்கால் கப்
 நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 தேங்காய்த் துருவல் - கால் கப்
 ஏலக்காய்த்தூள் - சிறிது
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 உப்பு - ஒரு சிட்டிகை
 முந்திரி - 10 (நெய்யில் வறுத்தது)

p21e.jpg

செய்முறை:
புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்ஸியில் ரவையாகப் பொடித்துக்கொள்ளவும். இதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தயிர் சாதம்போல் தளரக் கலந்து, அத்துடன் துவரம்பருப்பையும் சேர்த்து குக்கரில் வேக விடவும். ஆறியதும் கட்டியில்லாமல் நன்றாக உதிர்த்துக்கொள்ளவும். வாணலியில் வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொதிக்கவைத்து வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். பாகை எடுத்துத் தண்ணீரில் போட்டால் முத்துபோல் நிற்க வேண்டும். இந்தப் பதத்துக்கு வந்ததும் உதிர்த்த புட்டு, முந்திரி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துக் கலந்து வைக்கவும். ஆறியதும் எடுத்தால் உதிர்உதிராக இருக்கும்.


ராஜ்மா சுண்டல்

தேவையானவை:
 சிவப்பு ராஜ்மா - ஒரு கப்
 பெருங்காயத்தூள் - சிறிது
 உப்பு - தேவையான அளவு
 மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 2
 கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

தாளிக்க:
 எண்ணெய் - தேவையான அளவு
 கடுகு - ஒரு டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிது
 பச்சை மிளகாய் - 2

p21f.jpg

செய்முறை:
ராஜ்மாவை குறைந்தது 10 மணி நேரம் ஊறவைத்துத் தேவையான அளவு உப்பு சேர்த்துக் குக்கரில் வேகவிடவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் மல்லி (தனியா), காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பொன்னிறமாக வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளித்து, அதில் வேகவைத்த ராஜ்மாவைச் சேர்த்துக் கிளறவும். தயாரித்து வைத்துள்ள வறுத்த பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


சிவப்புக் காராமணி சுண்டல்

தேவையானவை:
 சிவப்புக் காராமணி - ஒரு கப்
 காய்ந்த மிளகாய் - 5
 உப்பு - தேவையான அளவு
 தேங்காய்த் துருவல் - கால் கப்
 கசகசா - ஒரு டீஸ்பூன்

தாளிக்க:
 எண்ணெய் - தேவையான அளவு
 கடுகு - ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிது

p21g.jpg

செய்முறை:
காராமணியை குக்கரில் வேகவைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், கசகசா மூன்றையும் வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். அதில் வெந்த காராமணியைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறி, அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்றாகக் கலந்து இறக்கவும்.

குறிப்பு:
இதே முறையில் வெள்ளைக் காராமணியிலும் சுண்டல் செய்யலாம்.


கடலைப்பருப்புப் பாயசம்

தேவையானவை:
 கடலைப்பருப்பு - ஒரு கப்
 வெல்லம் - ஒரு கப்
 நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
 முந்திரி, திராட்சை - தேவையான அளவு
 தண்ணீர் - 2 கப்
 பால் - கால் கப்

p21h.jpg

செய்முறை:
குக்கரில் நெய் சேர்த்துச் சூடானதும் கடலைப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். இரண்டு கப் தண்ணீர் சேர்த்து 2 விசில்விட்டு வேகவைக்கவும். பிறகு கடலைப்பருப்பை ஒன்றிரண்டாக கரண்டியால் மசித்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லம், ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு வடிகட்டி மீண்டும் கொதிக்கவிட்டு வடிகட்டவும். அதில் வெந்த கடலைப்பருப்பைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். பால், ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.

குறிப்பு:
பாலுக்கு பதில் தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்.


ஸ்வீட் கார்ன் சுண்டல்

தேவையானவை:
 அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் - ஒரு கப்
 பச்சை மிளகாய் - ஒன்று(பொடியாக நறுக்கியது)
 எலுமிச்சைச் சாறு - அரைப்பழம்
 எண்ணெய் - தாளிக்க
 கடுகு - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க

p21i.jpg

செய்முறை:
ஸ்வீட் கார்னை ஆவியில் வேகவைத்து எடுத்து உதிர்த்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்பு உதிர்த்த கார்ன், சிறிது உப்பு சேர்த்துக் கலந்து இறக்கவும். எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:
இந்தச் சுண்டல் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.


பச்சைப்பயறு காரச்சுண்டல்

தேவையானவை:
 பச்சைப்பயறு - ஒரு கப்
 எண்ணெய் - தாளிக்க
 கடுகு - ஒரு டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிது
 காய்ந்த மிளகாய் - 4
 உப்பு - தேவையான அளவு

p21j.jpg

செய்முறை:
பச்சைப்பயறை நான்கு மணி நேரம் ஊறவைத்து, வேகவைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளித்து, வேகவைத்த பச்சைப்பயறு, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.


நவதானிய சுண்டல்

தேவையானவை:
 கொள்ளு, வெள்ளை காராமணி, பச்சைப்பயறு, காய்ந்த மொச்சை,
சிவப்புக் காராமணி,
 பட்டாணி, கறுப்புக் கொத்துக்கடலை, வெள்ளைக் கொண்டைக்கடலை,
சோயா - தலா கால் கப்
 கடுகு - சிறிது
 பெருங்காயம் - சிறிது
 காய்ந்த மிளகாய் - 6
 எள்ளு - கால் கப்
(பொடித்துக் கொள்ளவும்)
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தாளிக்க

p21k.jpg

செய்முறை:
எல்லா தானியங்களையும் நன்கு கழுவி ஒன்றாகச் சேர்த்து 10 மணி நேரம் ஊறவைக்கவும். வெறும் வாணலியில் எள்ளையும், காய்ந்த மிளகாயைச் சிறிது எண்ணெயிலும் வறுத்துக்கொண்டு, எள்ளு, மிளகாய், உப்பு இவற்றை மிக்ஸியில் கரகரப்பாகப் பொடிக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும்  கடுகு, பெருங்காயம் தாளித்து, வேகவைத்த தானியங்களைச் சேர்த்துக் கலந்து, அரைத்து வைத்திருக்கும் பொடியைத் தூவிக் கிளறி இறக்கவும்.


டபுள் பீன்ஸ் சுண்டல்

தேவையானவை:
 காய்ந்த டபுள் பீன்ஸ் - ஒரு கப்
 தேங்காய்த் துருவல் - கால் கப்
 கடுகு - ஒரு டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய்,
பச்சை மிளகாய் - தலா 2
 தாளிக்க - எண்ணெய்
 கறிவேப்பிலை - சிறிது
 உப்பு - தேவையான அளவு

p21l.jpg

செய்முறை:
டபுள் பீன்ஸை 10 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவலுடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். வேகவைத்த பீன்ஸ், அரைத்த தேங்காய் - பச்சை மிளகாய்க் கலவை சேர்த்து, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு:
பச்சை டபுள் பீன்ஸ் என்றால், ஊறவைக்கத் தேவையில்லை.



கட்டா மீட்டா பாஸ்தா சுண்டல்

தேவையானவை:
 ஏதாவது வடிவமுள்ள பாஸ்தா - ஒரு கப்
 இட்லி மிளகாய்ப்பொடி அல்லது பருப்புப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - சிறிது
 ட்யூட்டி ஃப்ரூட்டி - தேவையான அளவு
 கடுகு - ஒரு டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க
 கறிவேப்பிலை - சிறிது

p21m.jpg

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு அதில்
பாஸ்தா, சிறிது உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேகவிடவும். பாஸ்தா நன்றாக வெந்ததும் தண்ணீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும்  கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, பாஸ்தாவைச் சேர்க்கவும். அதனுடன் இட்லி மிளகாய்ப்பொடி, ரெண்டு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கலந்து, நன்றாகக் கிளறி இறக்கி, ட்யூட்டி ஃப்ரூட்டி, கொத்தமல்லித்தழை சேர்த்து அலங்கரிக்கவும்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • 11 months later...

நவராத்திரி நைவேத்தியங்கள்!

நல்லன எல்லாம் தருவாள்

 

p56l.jpg

p56k.jpg

p56j.jpg

p56i.jpgக்தியோடு அழகு உணர்ச்சியும் கைகோத்து இல்லங்களை இன்பத்தில் ஆழ்த்தும் பண்டிகை நவராத்திரி. இந்தப் பண்டிகை கொண்டாடப்படும் தினங்களில் வீட்டில் கொலு வைத்து... அம்மனுக்கு பூஜை செய்து, நைவேத்தியங்களைப் படைத்து பக்திப் பரவசத்தில் திளைப்பது ஒருபக்கம்;  உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினருக்கு அழைப்பு விடுத்து... பூ, பழம், நைவேத்தியங்களை வழங்கி, அவர்கள் வீட்டுக்கும் சென்று கூடி மகிழ்வது மறுபக்கம் என்று பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதில் நவராத்திரிக்கு நிகர் நவராத்திரிதான்! அப்படி ஒன்பது நாள்கள் செய்து மகிழக்கூடிய சுவையான நைவேத்தியங்களை வழங்குகிறார் சமையல் கலைஞர் சரஸ்வதி அசோகன்.

தினைப் பாயசம்

தேவையானவை:
தினை அரிசி, வெல்லம்     - தலா 200 கிராம்
பாசிப்பருப்பு        - 100 கிராம்
தேங்காய்         - ஒரு மூடி   (துருவிக்கொள்ளவும்)
ஏலக்காய்த்தூள்     - கால் டீஸ்பூன்
நெய்             -  4 டீஸ்பூன்
முந்திரி, உலர்திராட்சை     -  தேவையான அளவு

p56h.jpg

செய்முறை:
வாணலியில் நெய்விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து தனியாக எடுத்துவைக்கவும். வெல்லத்துடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். தேங்காயை அரைத்துப் பால் எடுக்கவும். தினை அரிசியைக் கழுவவும். வெறும் வாணலியில் பாசிப்பருப்பை லேசாக வறுத்து எடுக்கவும். குக்கரில் தினை அரிசி, பாசிப்பருப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி, 3 விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கிய பின்னர், மூடியைத் திறந்து வெந்த அரிசி - பருப்பை நன்கு மசிக்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், தேங்காய்ப்பால், வெல்லக்கரைசல் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.


அவல் - வாழைப்பழப் பாயசம்

தேவையானவை:
அவல்     - ஒரு  கப்
வாழைப்பழம்     -  ஒன்று     (தோல் உரித்துப் பொடியாக நறுக்கவும்)
பேரீச்சம்     - 6    (விதை நீக்கி, பொடியாக நறுக்கவும்)
வெல்லக் கரைசல் - தேவையான அளவு
தேங்காய்ப்பால்     - ஒரு கப்
உலர்திராட்சை     - 10
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
நெய்         - 3  டீஸ்பூன்

p56gh.jpg

செய்முறை:
வாணலியில் நெய்விட்டு வாழைப்பழத் துண்டுகள், பேரீச்சம் துண்டுகள், உலர் திராட்சை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே வாணலியில் அவலைச் சேர்த்து லேசாக வறுத்து, தேவையான அளவு தண்ணீர்விட்டு வேகவிடவும். இதனுடன் வெல்லக் கரைசல், தேங்காய்ப்பால், நெய்யில் வறுத்த பழங்கள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும்.

குறிப்பு:
சிவப்பு அவல், வெள்ளை அவல் இரண்டிலும் செய்யலாம்.


வரகு இனிப்புப் பொங்கல்

தேவையானவை:
வரகரிசி, வெல்லம்    - தலா 200 கிராம்
தேங்காய்த் துருவல்    - ஒரு டேபிள்ஸ்பூன்
முந்திரி, திராட்சை    - தேவையான அளவு
ஏலக்காய்த்தூள்        - ஒரு சிட்டிகை
நெய்            - ஒரு டேபிள்ஸ்பூன்

p56e.jpg

செய்முறை:
வெல்லத்துடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரி, திராட்சை, தேங்காய்த் துருவலைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். குக்கரில் வரகரிசியுடன் 600 மில்லி  தண்ணீர்விட்டு மூடி, 3 விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கிய பின்னர் மூடியைத் திறந்து, வெந்த வரகரிசியை நன்கு மசிக்கவும். இதனுடன் வெல்லக் கரைசல், தேங்காய்த் துருவல், நெய் சேர்த்துக் கலந்து சூடாக்கி, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறி, ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கலந்து இறக்கிப் பரிமாறவும்.


அரிசிப் பாயசம்

தேவையானவை:
சீரக சம்பா அரிசி     - 100 கிராம்
பால்             - அரை லிட்டர் (காய்ச்சி ஆறவைத்தது)
சர்க்கரை         - 200 கிராம்
கண்டன்ஸ்டு மில்க்     - ஒரு டேபிள்ஸ்பூன்
சாரைப்பருப்பு         - 2 டீஸ்பூன்
முந்திரி, உலர் திராட்சை     - தேவையான அளவு
நெய்             - ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள்     - சிறிதளவு

p56f.jpg

செய்முறை:  
வாணலியில் சிறிதளவு நெய்விட்டு, உடைத்த முந்திரி, சாரைப்பருப்பு, உலர்திராட்சை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும். மீதமுள்ள நெய்யை குக்கரில்விட்டு சீரக சம்பா அரிசியைச் சேர்த்து 2 நிமிடங்கள் வறுக்கவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு மூடி 5 விசில் விடவும். பிறகு, அடுப்பை சிறு தீயில் வைத்து மீண்டும் ஒரு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கிய பின்னர் மூடியைத் திறந்து, வெந்த அரிசியை நன்கு மசிக்கவும். இதனுடன் பால், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு முந்திரி, உலர்திராட்சை, சாரைப்பருப்பு சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு:  ஒரு பங்கு அரிசிக்கு 4 பங்கு தண்ணீர்விட்டு குழைய வேகவிடவும்.


கல்கண்டு பாத்

தேவையானவை:
பச்சரிசி        - 200 கிராம்
கல்கண்டு         - 250 கிராம்
பால்             - 200 மில்லி (காய்ச்சி ஆறவைத்தது)
நெய்             - 100 மில்லி
முந்திரி, திராட்சை     - தேவையான அளவு
ஏலக்காய்த்தூள்     - சிறிதளவு
பச்சைக் கற்பூரம்      - ஒரு சிட்டிகை

p56d.jpg

செய்முறை:
வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுக்கவும். அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்துக் களையவும். குக்கரில் அரிசியுடன் 200 மில்லி பால், 200 மில்லி தண்ணீர் சேர்த்து மூடி, 5 விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கிய பின்னர் மூடியைத் திறந்து சாதத்தை நன்கு மசிக்கவும். இதனுடன் நெய், கல்கண்டு, சேர்த்துக் கலந்து சூடாக்கி, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறி, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.


தேங்காய்ப் பொங்கல்

தேவையானவை:
பச்சரிசி, வெல்லம்    - தலா 400 கிராம்
தேங்காய்த் துருவல்     - ஒரு கப்
நெய்             - 100 மில்லி
ஏலக்காய்த்தூள்     - கால் டேபிள்ஸ்பூன்
முந்திரி, உலர்திராட்சை     - தலா 10

p56c.jpg

செய்முறை:
வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரி, திராட்சை, தேங்காய்த் துருவலை சேர்த்து வறுத்து எடுக்கவும். பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். வெல்லத்துடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். குக்கரில் அரிசியுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி 5 விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கிய பின்னர் மூடியைத் திறந்து சாதத்தை நன்கு மசிக்கவும். இதனுடன் வெல்லக் கரைசல் சேர்த்துச் சூடாக்கி கிளறவும். ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.


காராமணி -  கேரட் சுண்டல்

தேவையானவை:
காராமணி - 250 கிராம்
கேரட் துருவல், தேங்காய்த் துருவல் -  தலா 2  டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - சிறிதளவு
கரம் மசாலாத்தூள் - 2 சிட்டிகை
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

p56b.jpg

செய்முறை:
வெறும் வாணலியில் காராமணியை லேசாக வறுத்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, குக்கரில் காராமணியுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.  வாணலியில்  எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் கறிவேப்பிலை,  கேரட் துருவல், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, வேகவைத்த காராமணி, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


வெள்ளை கொண்டைக் கடலை சுண்டல்

தேவையானவை:
வெள்ளை கொண்டைக்கடலை - 250 கிராம்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
தோல் சீவி, துருவிய இஞ்சி - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (ஒன்றிரண்டாக நசுக்கவும்)
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு

p56a.jpg

செய்முறை:
வெள்ளைக் கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் களைந்து உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன்  பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும். இறுதியாக வேகவைத்த கொண்டைக்கடலை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


வேர்க்கடலை - மசாலா சுண்டல்

தேவையானவை:
பச்சை வேர்க்கடலை    - 250 கிராம்
தேங்காய்த் துருவல்    - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு     - தலா ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை         - சிறிதளவு
பெருங்காயத்தூள்     -  ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு     - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு  - தலா 2 டீஸ்பூன்,
சீரகம்         - கால் டீஸ்பூன்,
எள்             - 2 டீஸ்பூன்.

p56.jpg

செய்முறை:
வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து வறுத்து, பொடியாக அரைக்கவும். வேர்க்கடலையை முதல் நாளே ஊறவைக்கவும். மறுநாள் களைந்து உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.  வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் வேகவைத்த வேர்க்கடலை, அரைத்த பொடி சேர்த்துக் கிளறவும். இறுதியாக தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடங்கீட்டாங்கள்.....  அவல் கடலையெண்டு தொடங்கீட்டாங்கள்........ஒரு மூலையுக்கை ஒளிச்சுவைச்சிருந்த மாசிக்கருவாட்டுத்துண்டைக்கூட  காணேல்லையப்பா...:grin:

எங்கை பாத்தாலும் ஒரே மரக்கறிமயம்....மனிசனுக்கு வாழ்க்கை சீயெண்டு போகுது..:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

தொடங்கீட்டாங்கள்.....  அவல் கடலையெண்டு தொடங்கீட்டாங்கள்........ஒரு மூலையுக்கை ஒளிச்சுவைச்சிருந்த மாசிக்கருவாட்டுத்துண்டைக்கூட  காணேல்லையப்பா...:grin:

எங்கை பாத்தாலும் ஒரே மரக்கறிமயம்....மனிசனுக்கு வாழ்க்கை சீயெண்டு போகுது..:cool:

எலி...கிலி...ஏதாவது கொண்டு போயிருக்கும்!

இதுக்குத் தான் சொல்லுறது..இப்படியான சாமான்களை எப்பவுமே...கட்டித் தூக்கி விட வேணுமெண்டு...!

Link to comment
Share on other sites

கொலுவின் ஸ்பெஷல் உணவுகள்...

 

 
கொலுவின் ஸ்பெஷல் உணவுகள்...

 

 இறைவனுக்கு உணவு படைத்தல் எவ்வாறு நல்லது என்றும் ஒன்பது நாட்கள் இறைவனுக்கு அளிக்கும் முக்கிய உணவுகளை பற்றி பார்ப்போம். 

முதல் நாள் உணவுகள் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை. 

இரண்டாம் நாள் உணவுகள்  : புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்.

மூன்றாம் நாள் உணவுகள் : கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல். 

நான்காம் நாள் உணவுகள்  : தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல். 

ஐந்தாம் நாள் உணவுகள் : சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல். 

ஆறாம் நாள் உணவுகள்  : தேங்காய் சாதம், தோங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம். 

ஏழாம் நாள் உணவுகள் : எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு. 

எட்டாம் நாள் உணவுகள் : பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல். 

ஒன்பதாம் நாள் உணவுகள் : சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக் கடலை, எள் உருண்டை.  

இறுதிநாள் அன்று பயிர் வகைகள், இனிப்பு கொண்ட பாலகாரங்கள் ,விதவிதமான உணவுகள் படைப்பதால் இறையாருள் கிட்டும்.

http://zeenews.india.com/tamil/culture/the-special-of-the-kolu-foods-297394

Link to comment
Share on other sites

நவராத்திரி நல்விருந்து!- கோதுமைச் சுண்டல்

 

17CHLRDWHEAT
 
17CHLRDMINIPURI
17CHLRDPULI
17CHLRDWHEAT
 

வராத்திரியை வழிபாட்டுப் பண்டிகையாக மட்டும் சுருக்கிவிட முடியாது; பெண்களும் குழந்தைகளும் ஒன்றுகூடும் விழாவாகவும் அது விளங்குகிறது என்று சொல்கிறவர்களும் உண்டு. புரட்டாசி மாதத்தின் வளர்பிறை பிரதமை தொடங்கி அடுத்த ஒன்பது நாட்களும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சில வீடுகளில் கொலுவைத்து, அம்மனை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அலங்கரிப்பார்கள். விதவிதமான பலகாரங்கள் சமைத்து, வீட்டுக்கு வரும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கொடுப்பார்கள். நவராத்திரியின் சிறப்பைக்கூட்டும் விதமாகப் புதுவிதமான பதார்த்தங்களைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி சீனிவாசன்.

முளைவிட்ட கோதுமைச் சுண்டல்

 

என்னென்ன தேவை?

முளைவிட்ட கோதுமை - 200 கிராம்

பச்சை மிளகாய் - 4

உப்பு - ஒன்றரை டீஸ்பூன்

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

புதினா, மல்லி (நறுக்கியது) - கால் கைப்பிடி

கடுகு - அரை டீஸ்பூன்

பெருங்காயப் பொடி - அரை சிட்டிகை

பொடித்த பொட்டுக்கடலை

- ஒரு டேபிள் டீஸ்பூன்

கேரட் - ஒரு டேபிள் டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள் டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு - சிறிதளவு

 

எப்படிச் செய்வது?

சம்பா கோதுமையைக் கழுவி, தண்ணீரில் பத்து மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டுங்கள். அதை ஈரத்துணியில் சுற்றி முளைகட்டவிடுங்கள். கோதுமை முளைவிடக் கிட்டத்தட்ட 12 மணி நேரம் ஆகும். முளைகட்டிய கோதுமையை மூழ்கும் அளவு நீர்விட்டு குக்கரில் ஆறு முதல் ஏழு விசில் விட்டு, வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். (வடிகட்டிய நீரில் சிறிது உப்பு, மிளகுத் தூள், சர்க்கரை சிறிது, அரை டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து ‘சூப்’போல் குடிக்கலாம்).

வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு தாளித்து, பச்சை மிளகாயைப் போட்டு வதக்குங்கள். பிறகு வேகவைத்த கோதுமையைப் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கிவையுங்கள். அதனுடன் மல்லி, புதினா, துருவிய கேரட், தேங்காய்த் துருவல், பொடித்த பொட்டுக்கடலை, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறுங்கள்.

மினி பூரி பாயசம்

 

என்னென்ன தேவை?

மைதா, ரவை - தலா 100 கிராம்

உப்பு - ஒரு சிட்டிகை

எண்ணெய் - 150 கிராம்

நெய் - 100 கிராம்

பால் - அரை லிட்டர்

சர்க்கரை - 150 கிராம்

வறுத்த முந்திரி, திராட்சை - தலா 2 டீஸ்பூன்

கசகசா விழுது - 2 டீஸ்பூன்

குங்குமப்பூ இதழ்கள் - சிறிதளவு

 

எப்படிச் செய்வது?

மைதா, ரவை இவற்றுடன் சிறிது உப்பு, நெய், தேவையான அளவு நீர்விட்டுப் பூரி மாவுபோல் பிசைந்துகொள்ளுங்கள். இதை ஈரத்துணியால் மூடி அரை மணி நேரம் அப்படியே வையுங்கள். கசகசாவை அரை மணி நேரம் ஊறவைத்துப் பால் விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.

சுண்டக் காய்ச்சிய பாலில் சர்க்கரையைக் கரையவிட்டு அடுப்பில் வைத்துச் சூடாக்குங்கள். பால் லேசாகக் கொதித்ததும் கசகசா விழுது, சிறிதளவு நீர் சேர்த்து இறக்கிவையுங்கள். அதில் ஏலக்காய்ப் பொடி சேர்த்து மூடிவையுங்கள்.

பிசைந்து வைத்திருக்கும் மாவுக் கலவையைப் பெரிய சப்பாத்தியாகத் திரட்டுங்கள். அதைச் சிறு சிறு வட்டமாக வெட்டி, சூடான எண்ணெய் அல்லது நெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள். பொரித்தெடுத்த பூரிகளை இளம் சூடான பாலில் போடுங்கள். அதில் வறுத்த முந்திரி, திராட்சை, குங்குமப்பூ தூவிப் பரிமாறுங்கள். பாலில் மிதந்து வரும் குண்டு குண்டான சிறிய பூரிகள் பார்க்க அழகாகவும் சுவைக்க அருமையாகவும் இருக்கும்.

கடுகு புளியோதரை

 

என்னென்ன தேவை?

உதிரியாக வடித்த பச்சரிசி சாதம்

- 2 ஆழாக்கு

கடுகுப் பொடி - ஒரு டீஸ்பூன்

பெருங்காயப் பொடி - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 150 கிராம்

புளி விழுது - 3 எலுமிச்சை அளவு

தாளிக்க

கடுகு, சீரகம், பெருங்காயம்

- தலா அரை டீஸ்பூன்

கடலைப் பருப்பு, உளுந்து, வேர்க்கடலை - தலா 3 டீஸ்பூன்

கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது

பச்சை மிளகாய் (சிறியது) - 3

சிவப்பு மிளகாய் - 3

 

எப்படிச் செய்வது?

புளியை ஊறவைத்துக் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளுங்கள். வடித்த சாதத்தில் ஐம்பது கிராம் நல்லெண்ணெய், சிறிது உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி, கடுகுப் பொடி இவற்றைக் கலந்துவையுங்கள். மீதமுள்ள நல்லெண்ணெய்யை வாணலியில் ஊற்றிச் சூடானதும் தாளிக்கும் பொருட்களைச் சேர்த்துத் தாளியுங்கள். அவை நன்றாகப் பொரிந்ததும் புளி விழுது, சிறிது உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். புளிக்காய்ச்சல் பதம் வந்தவுடன் ஆறிய சாதத்தில் கொட்டிக் கலந்து நன்றாகக் கிளறுங்கள். நன்றாக ஊறிய பிறகு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

பழுப்பரிசி புட்டு

என்னென்ன தேவை?

பழுப்பரிசி - 200 கிராம்

பாகு வெல்லம் - 150 கிராம்

ஏலக்காய்ப் பொடி - சிறிது

தேங்காய்த் துருவல் - முக்கால் கப்

வறுத்த முந்திரி, திராட்சை - 50 கிராம்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

பாதியளவு வேகவைத்த துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்

தேன் - ஒரு டீஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

பழுப்பரிசியைத் தண்ணீரில் கழுவி, வெயிலில் உலர்த்தி, ரவை பதத்தில் பொடித்துக்கொள்ளுங்கள். பழுப்பரிசி ரவையைச் சிறு தீயில் சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். அதில் உப்பு கலந்து சிறிதளவு வெந்நீர் தெளித்துப் பிசறி, பத்து நிமிடம் ஆவியில் வேகவையுங்கள். ஆறியதும் உதிர்த்துக்கொள்ளுங்கள்.

வெல்லத்தில் ஒரு கரண்டி நீர் விட்டுக் கரைத்து, லேசாகக் காய்ச்சி வடிகட்டுங்கள். மீண்டும் அதை அடுப்பில் ஏற்றி, வெல்லப்பாகு நுரை வரும்போது உதிர்த்த ரவை, நெய், துவரம் பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி, வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து நன்றாகக் கிளறி மூடி, அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அரை மணி நேரத்துக்குப் பின் பாகில் வேகவிட்ட ரவை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கைவிடாமல் கிளறுங்கள். உதிரி உதிரியாக வரும். கூடுதல் சுவைக்கு ஒரு டீஸ்பூன் தேனை ஊற்றிக் கிளறிப் பரிமாறுங்கள்.

மைதா கோதுமை நொறுக்கு

என்னென்ன தேவை?

மைதா, கோதுமை மாவு - தலா 100 கிராம்

பாசிப் பருப்பு - 4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மிளகாய்ப் பொடி, பெருங்காயப் பொடி,

வறுத்த எள் - தலா ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - 300 கிராம்

நெய் - 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, வேகவையுங்கள். அந்த நீருடனேயே ஆறவிடுங்கள். உருக்கிய நெய், உப்பு, SmallCode.pngமிளகாய்ப் பொடி, பெருங்காயப் பொடி, வறுத்த எள், மாவு வகைகளைப் பாசிப் பருப்பில் சேர்த்து, பூரி மாவு போல் கெட்டியாகப் SmallCode.pngபிசையுங்கள்.

பத்து நிமிடம் கழித்து மாவைச் சிறிய சுண்டைக்காய் அளவு எடுத்து உருட்டி, சிறிய பட்டன் போல் தட்டுங்கள். எல்லா மாவையும் இப்படி உருட்டி, சூடான எண்ணெய்யில் மிதமான சூட்டில் சிவக்கப் பொரித்தெடுங்கள். இது 15 நாட்கள்வரை கெடாது.

இனிப்புச் சோளச் சுண்டல்

என்னென்ன தேவை?

சோள முத்துக்கள் - 2 கப்

உப்பு - தேவையான அளவு

பெருங்காயம் - சிறிது

தாளிக்க

நெய் - ஒரு டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் - 4

கறிவேப்பிலை - சிறிதளவு

தேங்காய்த் துருவல் - தேவையான அளவு

சிவப்பு நிற டூட்டி ஃபுரூட்டி - ஒரு டீஸ்பூன்

மதுளை முத்துக்கள் - ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

இனிப்புச் சோளத்தை வேகவைத்து, முத்துக்களை உதிர்த்துக்கொள்ளுங்கள். நெய் உருகியதும் தாளிக்கும் பொருட்களைச் சேர்த்துத் தாளியுங்கள். உப்பு, சோள முத்துக்கள் சேர்த்துக் கிளறி இறக்கிவையுங்கள். அதில் தேங்காய்த் துருவல், மாதுளை முத்துக்கள் டூட்டி ஃபுரூட்டி சேர்த்துப் பரிமாறுங்கள்.

இனிப்புச் சதுரம்

என்னென்ன தேவை?

மைதா - 200 கிராம்

சர்க்கரை - 200 கிராம்

நெய், டால்டா - 50 கிராம்

ஆப்ப சோடா, கசகசா

- தலா ஒரு சிட்டிகை

கொப்பரைத் தேங்காய்த் துருவல்

- ஒரு டீஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி - ஒரு டீஸ்பூன்

சமையல் எண்ணெய் - 200 கிராம்

நெய் - 100 கிராம்

எப்படிச் செய்வது?

சர்க்கரையை ஒரு கப் நீர்விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்துச் சூடாக்குங்கள். இதில் நெய், ஏலக்காய்ப் பொடி, கசகசா, கொப்பரைத் துருவல், ஆப்ப சோடா சேர்த்து இறக்கிவையுங்கள்.

மைதா மாவைச் சிறிதளவு நீர்விட்டுப் பூரி மாவு போல பிசைந்துகொள்ளுங்கள். இந்த மாவைப் பத்து நிமிடம் SmallCode.pngஊறவிடுங்கள். வாணலியில் நெய்யும் எண்ணெயும் ஊற்றிச் சூடாக்குங்கள். ஊறிய மாவைச் சப்பாத்தி போல் இட்டு, சிறு சிறு சதுரங்களாக வெட்டிச் சூடான எண்ணெயில் போட்டுப் போட்டுப் பொரித் தெடுங்கள்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

கொண்டைகடலை புதினா சுண்டல்

 

நவராத்திரி கொலு வீடுகளில் பிரசாதம் என்றாலே அனைவருக்கும் பிடித்தது சுண்டல்கள் தான். இன்று கொண்டைகடலை புதினா சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கொண்டைகடலை புதினா சுண்டல்
 
தேவையான பொருட்கள் :

கொண்டைகடலை - 1 கப்,
வெங்காயம் - 1,
காய்ந்த மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கொத்தமல்லி - சிறிதளவு,
சீரகம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அரைப்பதற்கு  :

இஞ்சி - சிறியது துண்டு,
பூண்டு - 3 பல்,
தேங்காய் - விருப்பத்திற்கு ஏற்ப,
பச்சை மிளகாய் - 3,
புதினா - 2 கொத்து

201709230903133387_1_fd._L_styvpf.jpg

செய்முறை :

கொண்டைக்கடலையை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறவைத்த கொண்டைகடலையை குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரைக்கக்கூடிய பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து வைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

அதன்பின் கொண்டைகடலை, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்த விழுதையும் போட்டு நன்கு கிளறவும்.

கடைசியாக தேவையான அளவு உப்பு போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.

சுவைமிகு புதினா கொண்டைகடலை சுண்டல் தயார்.
Link to comment
Share on other sites

காராமணி சுண்டல்

 

நவராத்திரி சிறப்பு சுண்டல் வகைகள்.
Karamani Sundal

தேவையான பொருட்கள்

காராமணி – ஒரு கப் (அரை உப்பு போட்டு வேகவைத்தது)

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்

பொடி செய்ய:

மிளகு – ஒரு டீஸ்பூன்,

கரிவேபில்லை – ஒரு கை பிடி,

தேங்காய் துண்டு – ஒரு டீஸ்பூன்

அனைத்தையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

தாளிக்க:

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

கடுகு – அரை டீஸ்பூன்

கரிவேபில்லை – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – ஒன்று

 

செய்முறை

 

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பிறகு, வேகவைத்த காராமணி, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து மூன்று நிமிடம் கிளறவும்.

பின், பொடி, சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.

Link to comment
Share on other sites

நவராத்திரி ஸ்பெஷல்: தேங்காய் போளி

நவராத்திரிக்கு இன்று கடவுளுக்கு என்ன செய்யலாம் என யோசிக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த தேங்காய் பூரண போளி செய்து பாருங்களேன்.

 
நவராத்திரி ஸ்பெஷல்: தேங்காய் போளி
 
தேவையான பொருட்கள் :

மைதா - 2 கப்
ரவை - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
வெல்லம் - 1 1/2 கப்
தேங்காய் - 2 கப் (துருவியது)
ஏலக்காய் - 2-3 (பொடி செய்தது)
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

201709281317580274_1_coconutpoli._L_styv

செய்முறை :

ஒரு பௌலில் மைதா, ரவை, மஞ்சள் தூள், பொடி செய்த ஏலக்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு, நன்கு கரைய வைக்க வேண்டும்.

வெல்லமானது நன்கு கரைந்ததும், அதில் துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு, பாகு சற்று கெட்டியாக வரும் போது அதனை இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொரு உருண்டையின் நடுவிலும் விரலால் ஓட்டை போட்டு, அதன் நடுவே வெல்ல கலவையை வைத்து, முனைகளை மூடி மீண்டும் உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.

கல்லானது சூடாவதற்குள், ஒரு பிளாஸ்டிக் கவரில் நெய் தடவி, அதில் ஒரு உருண்டையை வைத்து, தட்டையாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு நெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், தேங்காய் போளி ரெடி!!!

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போளி சூப்பர்....மலாயன் கஃபேயை  அடிச்சிக்க ஆளே கிடையாது....! tw_blush:

ஒரு பேணி மாவுக்கு 1/2 பேணி கடலைமா கலந்தால் அல்லது கடலைப்பருப்பு வேகவைத்து நருவல் நொருவலாய்  அரைத்து சேர்த்தால்  கீல வெடக் நே .....!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • எல்லாரும் போய் கொழும்பில் கும்மி அடித்தால் இது தான நிலமை.இங்கால பல காணிகள் தரிசாக இருக்கிது.வந்து தோட்டம் செய்யலாம்.ஆரோக்கியத்துக்கும் நல்லம்.மனதுக்கும் இதமாக இருக்கும்.
    • அரசநிதியை கையாள்வது எப்படி என தெரியாவிட்டால் அரசாங்கம் "பாட்டனாரிடம்" ஆலோசனை பெறவேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கு நிதியை எவ்வாறு கையாளவேண்டும் என்பது தெரிந்திருக்கவேண்டும், அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை இரண்டு கட்டமாக அதிகரிக்கவேண்டும் என்ற உதய செனிவிரட்ணகுழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கு இது தெரிந்திருக்கவேண்டும் தெரியாவிட்டதால் பாட்டனாரிடம் கேளுங்கள் என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் மூன்றாவது தொகுதி கடன் இந்த வருட இறுதியில் கிடைக்கும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளமை குறித்து  கருத்து தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால் மாத்திரமே இது சாத்தியம் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/198157
    • எங்களுக்கு, உங்களுடைய தைரியமும் பிடிச்சிருக்கு புட்டின் சார். 😂
    • இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை (Arjuna Mahendran) நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நாம் சட்டமா அதிபரிடம் கலந்துரையாடினோம். சட்ட இடையூறுகள் இந்தநிலையில் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சில சட்ட இடையூறுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். நாம் மீண்டும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இது தொடர்பில் எழுத தீர்மானித்துள்ளோம். இந்தநிலையில் நாடுகடத்தல் சட்டம் இதற்கு தடையாக இருக்காது என்ற தர்க்கத்தை இந்த தரப்பிலிருந்து அனுப்பியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  எனவே, நாம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முயல்கின்றோம் அத்தோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்து. அது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்றுள்ளன, மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை மேற்கொள்வதாக இருந்தால் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு தடவை அனுமதியை பெற்றுகொள்ள வேண்டும். இதனடிப்படையில், அடுத்த வழக்கு விசாரணை நடைபெறும் தினத்தில் அதற்கு அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/action-to-bring-arjuna-mahendran-to-the-country-1731023300#google_vignette
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.