Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடாநாட்டு பாடசாலைகளை புறக்கணிக்க முடிவு: தமிழ் மாணவர் ஒன்றியம் அறிவிப்பு.

Featured Replies

குடாநாட்டு பாடசாலைகளை புறக்கணிக்க முடிவு: தமிழ் மாணவர் ஒன்றியம் அறிவிப்பு.

கடத்தப்பட்ட வடமராட்சி மாணவர்களின் விடுதலையினை வலியுறுத்தி யாழ். குடாநாட்டு பாடசாலைகள் அனைத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் மாணவர்கள் குதிக்கும் நிலை தோன்றியுள்ளதாக தமிழ் மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

கடத்தப்பட்ட க.லதீஸ்வரன் உள்ளிட்ட வடமராட்சி பாடசாலை மாணவர்களான ப.தனஞ்சயன், மு.பரமானந்தம் ஆகியோரை விடுவிக்கக் கோரி வடமராட்சி மாணவர்கள் இவ்வாரம் பாடசாலை செல்லாது புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நடவடிக்கைக்கு மதிப்பளித்து சாதகமான சமிக்ஞையினை படைத்தரப்பினர் தெரிவிக்காதததால் அடுத்த வாரம் முதல் யாழ். குடாநாட்டு மாணவர்கள் தங்கள் பாடசாலை செயற்பாடுகளை முற்றாக நிறுத்தி கடத்தப்பட்ட சகோதர மாணவர்களுக்காக போராட்டத்தில் ஈடுபடும் முடிவுக்கு வந்துள்ளனர்.

இதனை விளக்கும் வகையில் தமிழ் மாணவர் ஒன்றியத்தினர் வெளியிட்ட அறிக்கையில்:

"கடந்த காலங்களில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்ற வேளைகளில் மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை சிங்கள அரசிடமிருந்து பெற்றுத்தருவதாக கூறிய அரச அதிகாரிகள், சமூகப் பெரியவர்கள், நல்லெண்ணம் கொண்ட குழுக்கள் எல்லாம் தற்போது வாய்மூடி மௌனிகளாக இருப்பது மாணவர்களாகிய எமக்கு கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

வன்முறைகள் அற்ற குடாநாட்டு மாணவர்களின் சுதந்திரமான கல்விக்காக அனைத்து தரப்பும் அயராது பாடுபட வேண்டுவதோடு அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் போன்றோர் மாணவர்களாகிய எமக்கு நல்லாதரவினை தருமாறு வேண்டுகின்றோம்" எனத் தெரிவித்துள்ளார்கள்.

-Puthinam-

உலகில் மனிதவாழ்க்கையில் எமக்கு கிடைத்த மாபெரும் பாக்கியங்களில் பாடசாலைக்கல்வியும் ஒன்று! பாடசாலைக்குப் போய் அதன் இன்பங்களை இன்று நினைத்துப்பார்க்கும் உங்கள் எல்லோருக்கும் இது தெரியும். படிப்பை மட்டுமா அங்கு சொல்லித் தந்தார்கள்? கலைகள், விளையாட்டுக்கள், பண்பாடு, கூட்டுமுயற்சி, இனிய நண்பர்கள், கடவுள் நம்பிக்கை ...... இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம். இவை எல்லாமே பாடசாலையில் தான் கட்டி எழுப்பப்படுகின்றன.

டசின், டசினாக வருடாவருடம் 8டீ க்கள், 4ஏ க்கள் தந்த யாழ் குடாநாட்டு பாடசாலைகள் இப்போது சோபையிழந்து மயானங்களாகக் கிடப்பது மனதிற்கு பெரும் வேதனையைத் தருகின்றது. விளையாட்டுக்களில் முன்பு இவை பெற்ற வெற்றிகள் சொல்லி அடங்காது. யாழ் குடா நாட்டை சிங்கள் அரக்கர்கள் கைப்பற்றும் வரை ஒரு சில பாடசாலைகளை விட மிகுதியானவை மிகச்சிறப்பாக செயற்பட்டுக் கொண்டு இருந்தன.

ஆனால் இப்போது நிலமை என்ன? எழுதுவதற்கு பேனை, பென்சில், கொப்பி இல்லை, உண்பதற்கு உணவு இல்லை, வீட்டை விட்டு வெளிக்கிடுவதற்கு அனுமதியில்லை. இதை வித ஆள் கடத்தல்கள், சித்திரவதைகள், கொலைகள் வேறு நடைபெறுகின்றது.

படிப்பதற்கான சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ள யாழ் குடாநாட்டு மாணவர்களின் துன்பங்களை துடைப்பதற்கு உலகில் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் முயற்சிகள் செய்யுமா?

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 25-01-2007 23:54 மணி தமிழீழம் [மயூரன்]

நான்காவது நாளாக போராட்டம்

சிறீலங்கா படைப்புலனாய்வாளர்களால் கடத்தப்பட்ட ஹட்லிக்கல்லூரி, வேலாயுத மகா வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவர்கள் இருவரின் விடுதலையை வலியுறுத்தி வகுப்பு பறக்கணிப்பு நான்காவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் 12000 மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதை தவிர்த்திருந்தார்கள்.

மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பை மேற்கொண்டாலும் ஆசிரியர்கள், பாடசாலை அதிபர் ஆகியோரை சிறீலங்கா படையினர் பாடசாலைக்கு சமூகமளிக்கவேண்டும் எனகடுமையாக உத்தரவு பிறப்பித்துள்ளதோடு பாடசாலைகளின் சுற்றாடலை கண்காணிப்புகளையும் மேற்கொண்டுவருகிறார்கள்.

தமிழ் மாணவர் ஒன்றியம் அறிக்கை வருமாறு

குடாநாட்டு பாடசாலைகள் அனைத்தையும் பகிஸ்கரிக்கும் நிலை தோன்றியுள்ளது

கடத்தப்பட்ட வடமராட்சி மாணவர்களின் விடுதலையினை வலியுறுத்தி யாழ்குடாநாட்டு பாடசாலைகள் அனைத்தையும் பகிஸ்கரித்து எதிர்வரும் வாரம் போராட்டத்தில் மாணவர்கள் குதிக்கும் நிலை தோன்றியுள்ளது. கடத்தப்பட்ட க.லதீஸ்வரன் உள்ளிட்ட வடமராட்சி மாணவர்கள் ப. தனஞ்சயன், மு. பரமானந்தம் ஆகியோரின் விடுதலை கோரி இவ்வாண்டின் ஆரம்பம் முதல் பாடசாலை மாணவர்களால் பகிஸ்கரிப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அவை எவற்றுக்கும் படைத்தரப்பு செவிசாய்காது கொலைகளையும், கடத்தல்களையும் அதிகரித்து வருகின்றது.

கடத்தப்பட்ட மாணவர்களை விடுவிக்கக் கோரி வடமராட்சி மாணவர்கள் இவ்வாரம் பாடசாலை செல்லாது பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அதற்க்கு மதிப்பளித்து நல்ல சமிக்ஞையினை டடைத்தரப்பினர் காட்டாத நிலையில் குடாநாட்டு மாணவர்கள் அடுத்த வாரம் முதல் தங்கள் பாடசாலை செயர்பாடுகளை நிறுத்தி கடத்தப்பட்ட சகோதர மாணவர்களுக்காக போராட்டத்தில் ஈடுபடும் முடிவுக்கு வந்துள்ளனர்.

கடந்த காலங்களில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்ற வேளைகளில் மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை சிங்கள அரசிடமிருந்து பெற்றுத்தருவதாக கூறிய அரச அதிகாரிகள், சமுகப்பெரியவர்கள், நல்லெண்ணம் கொண்ட குளுக்கள் எவையும் வாய்மூடி மௌனிகளாக இருப்பது மாணவர்களாகிய எமக்கு கவலையினை ஏற்ப்படுத்தியுள்ளது.

வன்முறைகள் அற்ற குடாநாட்டு மாணவர்களின் சுதந்திரமான கல்விக்காக அனைத்து தரப்பும் அயராது பாடுபட வேண்டுவதோட அதிபர்கள், ஆசிரியர்கள் , கல்வி அதிகாரிகள் போன்றோர் மாணவர்களாகிய எமக்கு நல்லாதரவினை தருமாறு வேண்டுகின்றோம்.

-நன்றி-

தமிழ் மாணவர் ஒன்றியம்

யாழ் மாவட்டம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.