Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரியின் மகனே கேளிக்கை விடுதியில் தாக்குதல் மேற்கொண்டார் – சிசிரிவி ஆதாரம் சிக்கியது!

Featured Replies

மைத்திரியின் மகனே கேளிக்கை விடுதியில் தாக்குதல் மேற்கொண்டார் - சிசிரிவி ஆதாரம் சிக்கியது!

கடந்த சனிக்கிழமை இரவு கேளிக்கை விடுதிமீது சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹ்ராம் சிறிசேனவின் தலைமையில் தாக்குதல் நடாத்தப்பட்டமை, சிசிரிவி காணொளிமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அதிகாலை 2.00 மணியளவில், மைத்திரியின் மகன் தஹ்ராம் மற்றும் அவரது நெருங்கிய உறவினரான டயஸ் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சிலரும் இரவுநேர கேளிக்கை விடுதிக்குள் நுழைவதற்குத் தடைசெய்யப்பட்டனர்.

உடனே அந்தக் குழு அங்கிருந்து சென்று மீண்டும் பொல்லுகளுடன் உள்நுழைந்து தாக்கத் தொடங்கினர். அதில் ஒருவர் அங்கு நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரின் தலையில் பூச்சாடியால் தாக்கியுள்ளார். பின்னர் வெறிபிடித்த அந்தக் கூட்டம் அங்கிருந்த குவளைகள், தட்டுக்கள், கண்ணாடிகள் என அனைத்தையுமே உடைக்கத் தொடங்கினர். அத்துடன், இரவு கேளிக்கை விடுதிக்கு வந்திருந்த சிலரையும் இந்தக் கும்பல் தாக்கத் தொடங்கியது.

அன்று அதிகாலையே சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடைத்த இரகசிய அறிக்கையின்படி, இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உயர் பதவியில் இருப்பவர் ஒருவரின் மகன் சம்பந்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Video Player
 
 
00:00
 
00:57
 

dhama-sirisena-night-club-attackdhama-sirisena-night-club-attack-1-1-768x1024dhama-sirisena-night-club-attack-1-2-768x1024dhama-sirisena-night-club-attack-1-3

http://thuliyam.com/?p=44785

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புகைப்படத்தில் இருப்பது ஒரு தரமான கேளிக்கைவிடுதியாக தெரியவில்லை. கேளிக்கைவிடுதியின் பின்வாசல் போல உள்ளது.

மைத்திரியின் ரவுடி மகனான தஹம் தனது காடைத்தனத்தை காட்டுவது இது முதல் தடவையல்ல. மட்டக்களப்பு, பாசிக்குடா, பொலநறுவை, கொழும்பு என்று பல இடங்களில் இந்த ரவுடி தனது கைவரிசைகளை முன்னர் காட்டியுள்ளான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மைத்திரியின்ரை மோன் செய்த வேலையெண்டு எனக்கு முதலே தெரியும்.....


மைத்திரியோ மகிந்தவோ ஆரெண்டாலும் ஒரே குட்டையிலை ஊறின  மட்டையள் தான்.
ஆனால் இஞ்சையும் முகநூலிலையும் மைத்திரி நல்லாட்சியின் தலீவர் எண்டு  கூத்தடிக்கிறதுகளைத்தான் சகிக்க முடியேல்லை.
இதுக்கை நல்லாட்சி மைத்திரி சிங்கப்பூருக்கு தனிய தன்ரை காசிலை போறாரம்.
கசங்கின சட்டையோடை போறாராம்
சப்பாத்து வாங்க தனிய போறாரம்

அதாவது மகிந்தவை விட மைத்திரி நல்லவராம்.....இதை எல்லாத்தையும் சொல்லுறது ஆரெண்டு பார்த்தால் புலி அழிப்பு கோஷ்டியள்.

களியாட்ட விடுதி மோதல்! பொலிஸாரை மிரட்டும் பிரபல அரசியல்வாதி

கடந்த எட்டாம் திகதி அதிகாலை கொழும்பு – யூனியன் பிளேஸ் பகுதியிலுள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலான காணொளிகளை, தன்னிடம் காட்டுமாறு நாட்டின் உயர்மட்ட அரசியல்வாதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த அரசியல்வாதி அனைத்து கண்காணிப்பு கமரா காணொளிகளையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தவிட்டுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அத்துடன் தனது மகன் அல்லது தனது பாதுகாப்பாளர்கள் குறித்த காணொளியில் உள்ளார்களா என்பது தொடர்பில் தன்னிடம் காட்டுமாறு அவர் உத்தரவிட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரியை அடிப்படையாக கொண்டு அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான கணொளியை தன்னிடம் காட்டுமாறு குறித்த அரசியல்வாதி, பொலிஸாருக்கு உத்தரவிடுவது சட்ட விரோதமான செயல் என குறிப்பிடப்படுகின்றது. சம்பவத்திற்கு தனது மகன் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படுகின்றமையினால் அரசியவாதியினால் அவ்வாறு பொலிஸாருக்கு உத்தரவிட முடியாது.

அத்துடன் நாட்டின் உயர் மட்ட அரசியல்வாதியாக இருந்த போதிலும் சட்டத்தை மீற முடியாதென குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் குறித்த அரசியல்வாதியின் மகனிடம் பொலிஸார் விசாரணை மேற்கொள்ளவில்லை என ஆங்கில ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.tamilwin.com/security/01/121313?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.