Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின் இரகசிய நடவடிக்கைகள் மகிந்தவை சென்றடைகின்றன-அமைச்சர் ராஜித விசனம்

Featured Replies

ஜனாதிபதியின் இரகசிய நடவடிக்கைகள் மகிந்தவை சென்றடைகின்றன-அமைச்சர் ராஜித விசனம்
 
 
ஜனாதிபதியின் இரகசிய நடவடிக்கைகள் மகிந்தவை சென்றடைகின்றன-அமைச்சர் ராஜித விசனம்
முன்னைய குடும்ப ஆட்சியில் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் இரகசியமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் ஜனாதிபதி இரகசியமாக எடுக்கும் நடவடிக்கைகள், ஒரு சிலரது தனிப்பட்ட விபரங்கள் தொடர்பில் ஆராயும் போது அவை எந்த வழியிலேனும் மஹிந்த ராஜபக்ஷவை சென்றடைந்து விடுகின்றன என அமைச்­சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 
 
ஆட்சி மாறினாலும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு விசுவாசமான நபர்கள் இன்னும் அரசாங்கத்திலும் அரச நிறுவனங்களிலும் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார். 
 
அமைச்ரவை தீர்மானங்களை தெரிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று  தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், 
 
ஜனாதிபதி இரகசியமாக எடுக்கும் நடவடிக்கைகள், ஒரு சிலரது தனிப்பட்ட விபரங்கள் தொடர்பில் ஆராயும் போது அவை எந்த வழியிலேனும் மஹிந்த ராஜபக்ஷவை சென்றடைந்து விடுகின்றன. ஆரம்பத்தில் இருந்து இவ்வாறு இரகசியங்களை ஒருசிலர் மஹிந்த ராஜபக்ஷவிடம்  தெரிவித்து வருகின்றனர். 
 
ஆட்சி மாறினாலும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு விசுவாசமான நபர்கள் இன்னும் அரசாங்கத்திலும் அரச நிறுவனங்களிலும்  உள்ளனர். 
 
ஜனாதிபதி மற்றும் ஒருசிலர் குற்றவாளிகளுக்கு எதிராக ஏதேனும் நகர்வுகளை எடுக்கும் போது அதை வெளிப்படுத்தி உண்மைகளை மறைத்து விடுகின்றனர். 
 
அதேபோல் டுபாய் வங்கிக் கணக்கு தொடர்புடைய விவகாரம் தொடர்பில் இன்னும் அரசாங்கம் வாய்திறக்கவில்லை. நிதி மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு டுபாய் வங்கிக் கணக்குகளில் யார்? யார் நிதியை பதுக்கி வைத்துள்ளனர் என்ற விபரத்தை பெறுவதற்கு அனுமதி பெற்றார்.  
 
ஆனால் அவர் அவ்வாறு செயற்பட்டு ஒருமணி நேரத்தில் மஹிந்தராஜபக்ஷ ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு தமது சொத்துக்களை விசாரிக்கவும் டுபாய் வங்கிக் கணக்கு தொடர்பில் ஆராயவும் நடவடிக்கை எடுப்பதாக கூறுவது உண்மையா என வினவுகின்றார்.

http://onlineuthayan.com/news/19156

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் இரகசிய நடவடிக்கைகள் மகிந்தவை சென்றடைகின்றன

 

அலரி மாளிகையை விட்டு போகும்போது 
படுக்கை அறையில் அந்தாள் காமாரவை பூட்டிவிட்டு 
போயிருக்குமோ ??? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.