Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுபான்மை இனத்தவர்கள் இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் – ரீடா இசாக்

Featured Replies

சிறுபான்மை இனத்தவர்கள் இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் – ரீடா இசாக்

rita-met-tna
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு

சிறுபான்மை இனத்தவர்கள் இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுபான்மை விவகாரம் குறித்த பிரதிநிதி ரீடா இசாக் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இசாக், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்துள்ள நிலையில் பாதுகாப்புப் படைகளில் சிறுபான்மை சமூகத்தினர் உள்வாங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் சிறுபான்மை சமூகத்தினர் பாதுகாப்புப் படையில் அங்கம் வகிக்காமை சிறுபான்மை சமூகத்தினர் எதிர்நோக்கி வரும் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சிறுபான்மை சமூகத்தினர் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அனைத்து இன சமூகங்களினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அரசியல் சாசனம் அமைய வேண்டுமெனவும் சம்பந்தன் ஐக்கிய நாடுகள் பிரதிநிதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

சிறுபான்மை சமூகங்களுக்கு தேசிய வாழ்வில் உரிய இடமில்லை! சம்பந்தனுக்கு ரீட்டா தெரிவிப்பு


சிறுபான்மை சமூகங்களுக்கு தேசிய வாழ்வில் உரிய இடம்கொடுக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிவதாக சிறுபான்மை இன விவகாரங்களை ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா தெரிவித்துள்ளார். எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரை பாராளுமன்றத்தில் உள்ள எதிர்கட்சித்தலைவரின் அலுவலகத்தில் நேற்றைய தினம் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தில் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கையில் அதனை அடிப்படையாக கொண்டு சமாதானம், சகவாழ்வு, சம உரித்து அனைத்து மக்களுக்கும் இருப்பதாக சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  முதற்கட்டமாக இராணுவத்தில் அமிலப் பரீட்சையொன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

சிறுபான்மையினரின் பிரச்சினையே இந்நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்சினைக்கும் அடிப்படையாக இருப்பதாகவும் அதனை எவ்வாறு தீர்க்கலாம்? சிறுபான்மை மக்களுக்கு இடையில் என்ன சந்தேகங்கள் உள்ளன போன்ற விடயங்கள் குறித்து அவர் கேட்டறிந்து கொண்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதிய அரசியலமைப்பில் எல்லா மக்களும் தங்களின் இறைமையை உபயோகிக்க கூடிய வண்ணமாக பேரினவாத ஆட்சியற்றதாக புதிய அரசியலமைப்பு அமையவேண்டும் என்றும் அதற்கான பரிந்துரைகளை தாங்கள் விசேட அறிக்கையாளர் செய்யவேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இதன்போது கேட்டுக்கொண்டார்.

http://globaltamilnews.net/archives/3665

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

சிறுபான்மை சமூகங்களுக்கு தேசிய வாழ்வில் உரிய இடமில்லை! சம்பந்தனுக்கு ரீட்டா தெரிவிப்பு

ரீட்டா சொல்லியா சம்பந்தனுக்கு தெரியவேண்டும்?....

இலங்கையில் சிறுபான்மையினருக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை - சம்பந்தனுடனான சந்திப்பில் ரீட்டா தெரிவிப்பு

இலங்கையில் சிறு­பான்மைச் சமூ­கங்­களுக்கு தேசிய வாழ்க்­கையில் சரி­யான இடம் கொ­டுக்­கப்­ப­ட­வில்லை என்­பது ெதளிவாகத் தெரி­கின்றது என்று சிறு­பான்மை இன விவ­கா­ரங்­களை ஆராய்­வ­தற்­கான ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட அறிக்­கை­யா ளர் ரீட்டா ஐசாக் நாடியா எதிர்க்­கட்­சித் ­த­லை  வரும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மை­ யி­லான குழு­வி­ன­ரி­டத்தில் தெரி­வித்­துள் ளார்.  

இலங்கை இரா­ணு­வத்தில் ஒரு இனத்­தைச் ­சேர்ந்­த­வர்கள் இருக்­கையில்  அதனை அடிப்­ப­டை­யாக கொண்டு சமா­தானம், சக­வாழ்வு, சம உரித்து அனைத்து மக்­க­ளுக்கும் இருப்­ப­தாக சொல்ல முடி­யாது எனக் குறிப்­பிட்ட ரீட்டா, முதற்­கட்­ட­மாக இரா­ணு­வத்தில் அமி­லப்­ப­ரீட்­சை­யொன்றை மேற்­கொள்­ள­வேண்­டி­யுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.  

இலங்­கைக்கு உத்­தி­யோக பூர்வ விஜயம் மேற்­கொண்டு வரு­கை­தந்­துள்ள சிறு­பான்மை இன விவ­கா­ரங்­களை ஆராய்­வ­தற்­கான ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நாடி­யா­வுக்கும் எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்­கு­மான சந்­திப்பு நேற்று புதன்­கி­ழமை நடை­பெற்­றது.

பாரா­ளு­மன்­றத்தில் உள்ள எதிர்­கட்­சித்­த­லை­வரின் அலு­வ­ல­கத்தில் அரை­ம­ணி­நே­ர­மாக நடை­பெற்ற இச்­சந்­திப்பு குறித்து தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும், யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் கருத்து வெளியி­டு­கையில்,

இந்த நாட்டில் உள்ள சிறு­பான்­மை­யி­னரின் பிரச்­சினை முக்­கி­ய­மா­ன­தொன்­றாக காணப்­ப­டு­கின்­றது. இந்­தப்­பி­ரச்­சி­னையே இந்­நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்­சி­னைகளுக்கும் அடிப்­ப­டை­யாக இருக்­கின்­றது. அதனை எவ்­வாறு தீர்க்­கலாம். சிறு­பான்மை மக்­க­ளுக்கு இடையில் காணப்­ப­டு­கின்ற சந்­தே­கங்கள் போன்ற அனைத்து விட­யங்­க­ளையும் அவர் ஐ.நா. அறிக்கையாளர் பெற்­றுக்­கொண்­டுள்ளார். இந்­நி­லை­யி­லேயே அவர் எதிர்க்­கட்­சித்­த­லைவர் தலை­மை­யி­லான எமது குழு­வி­னரை சந்­தித்­தி­ருந்தார்.

பிர­தான கோரிக்கை

இதன்­போது எதிர்க்­கட்­சித்­த­லைவர், புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. அதன்­மூ­ல­மாக வெவ்­வேறு மக்கள் கூட்­டங்கள் வாழும் இந்த நாட்டில் ஒவ்­வொ­ரு­வரும் தங்­களின் இறை­மையை உப­யோ­கிக்க கூடிய வண்­ண­மாக பேரி­ன­வாத ஆட்­சி­யற்­ற­தாக புதிய அர­சி­ய­ல­மைப்பு அமை­ய­வேண்டும். அதற்­கான பரிந்­து­ரை­களை தாங்கள் (விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா) செய்­ய­வேண்­டு­மென கேட்­டுக்­கொண்டார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு

இதே­வேளை 1972, 1978ஆம் ஆண்­டு­களில் உரு­வாக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­புக்கள் பெரும்­பான்மை சமூ­கத்தை மட்டும் மைய­மாக வைத்து தனிக்­கட்­சி­யொன்றால் உரு­வாக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­புக்­க­ளாகும். தற்­போது பிர­தான கட்­சிகள் கூட்­டி­ணைந்து தேசிய அர­சாங்கம் உரு­வா­கப்­பட்­டுள்­ளது. அதன் பின்­னரே புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ளன. அதற்கு நாமும் ஒத்­து­ழைப்­புக்­களை வழங்கி வரு­கின்றோம். அந்த வகையில் அனை­வ­ராலும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வகை­யி­லான அர­சி­ய­வ­ல­மைப்­பொன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டு­மென்­பதே எமது நிலைப்­பா­டா­க­வுள்­ளது என்­ப­தையும் அவ­ரி­டத்தில் எடுத்­து­ரைத்தோம்.

தெளிவான தன்மை

இலங்­கையில் உள்ள சிறு­பான்மை சமூகங்­க­ளுக்கு தேசிய வாழ்க்­கையில் சரி­யான இடம்­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை என்­பது தெளிவாக தெரி­கின்­றது என ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நாடியா எம்­மி­டத்தில் குறிப்­பிட்டார்.

அமி­லப்­ப­ரீட்சை

அத்­தோடு, இந்த நாட்டில் பல சிறு­பான்மை சமூகங்கள், மக்கள் கூட்­டங்கள் இருக்­கின்­றன. அவ்­வாறு அவர்கள் இருக்­கின்­றார்கள் என்­பது கூட இந்த நாட்டில் உள்­ள­வர்­க­ளுக்கே தெரி­யா­தி­ருக்­கின்­றது. ஆகவே முதற்­கட்­ட­மாக இரா­ணு­வத்தில் அமிலப் பரீட்­சை­யொன்றை செய்­ய­வேண்­டி­யுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டினார்.

குறிப்­பாக இந்த நாட்டில் உள்ள இரா­ணு­வத்­தினை பார்த்தால் ஒரு இனத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள். அத­ன­டிப்­ப­டையில் சமா­தானம், சக­வாழ்வு, சம உரித்து அனைத்து மக்­க­ளுக்கும் இருப்­ப­தாக சொல்ல முடி­யாது. அந்த­நி­லை­மையில் மாற்றம் ஏற்­பட்டு ஆகக்­கு­றைந்­தது ஒவ்­வொரு இனத்தின் விகி­தா­ச­ரத்தின் அடிப்­ப­டையில் நாட்டின் படைத்­த­ரப்பு இருக்­கு­மாயின் அது­வொரு சரி­யான படை­யாக இருக்கும் என்­பதை ஏற்­றுக்­கொள்ள முடியும். அதற்­கா­கவே முதற்­கட்­ட­மாக இவ்­வா­றான அமி­லப்­ப­ரீட்­சை­யொன்றை செய்யவேண்டியுள்ளதாக அவர் எம்மிடத்தில் கூறினார்.

சிபார்சுகள்

மேலும் இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் எதிர்கொள்கின்ற அனைத்துப்பிரச்சினைகள் தொடர்பாகவும் விசேடமாக யுத்ததத்தால் பதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற அனைத்துப் பிரச்சினைகள் தொடர்பாகவும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடருக்கு முன்னதாக சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் உள்ளடக்கவுள்ளதோடு தனது சிபார்சுகளையும் முன்வைப்பார் எனவும் அவர் உறுதியளித்தார் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.