Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.கொக்குவில் விபத்தில் யாழ் .பல்கலை மாணவர்கள் இருவர் பலி

Featured Replies

யாழ்.கொக்குவில் விபத்தில் யாழ் .பல்கலை மாணவர்கள் இருவர் பலி
 
 
யாழ்.கொக்குவில் விபத்தில் யாழ் .பல்கலை மாணவர்கள் இருவர்  பலி
யாழ்.கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 11.30மணியளவில்  இடம்பெற்ற  மோட்டார் சைக்கிள் விபத்தில்  யாழ். பல்கலைக்கழக  கலைப்பீட மூன்றாம்வருட  மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.  
 
இந்த விபத்துச் சம்பவத்தில் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த சுகந்தராசாசுலக்சன் (வயது 24) மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசாகஜன் (வயது 23) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
14813742_783431701795914_1070684115_n.jpg
குறித்த இருவரும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்று வருகின்றார்கள்.
 
 
14580342_783431398462611_1765693396_n.jpg
 
உயிரிழந்த இருவரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேதபரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துக் குறித்த விசாரணைகளை  யாழ்ப்பாணம்   பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
14794218_783431238462627_1616599624_n.jpg

http://onlineuthayan.com/news/19208

இளைஞர்களின் பொறுப்பற்ற செயல்களால் நிகழும் அநியாய மரணங்கள்!

 

  • தொடங்கியவர்



பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை?
 
 

article_1477038548-a.jpg

கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (21) அதிகாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட, இரண்டு மாணவர்களும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்து இடம்பெற்றதாக கூறப்படும் நேரம் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகின்றது.

அத்துடன், விபத்து நடைபெற்ற சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் பொலிஸார் நடமாடியுள்ளனர்.

இந்தத் தகவலினால், மாணவர்களின் உடற்கூறு பரிசோதனை நடைபெறும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் பல்கலைக்கழக மாணவர்கள் சூழ்ந்துள்ளனர்.

கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்களே, இச்சம்பவத்தின் மூலம் உயிரிழந்துள்ளனர்.

article_1477038556-b.jpg

http://www.tamilmirror.lk/184448/பல-கல-க-கழக-ம-ணவர-கள-ச-ட-ட-க-க-ல-

பல்கலைக்கழக மாணவர்கள் விபத்தின் மர்மம் வெளியாகியது.! (காணொளி இணைப்பு)

 

 

(ரி.விரூஷன்)

acc.jpg

யாழ்ப்பாணம், கொக்குவில் - குளப்பிட்டி சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்து தொடர்பாக பல முன்னுக்குப் பின்னான தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

yal.jpg

 

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (23) மற்றும் சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (24) ஆகிய மாணவர்கள் குறித்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியின் அருகில் இருந்த மதிலொன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது மோட்டர் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவனின் கையின் ஊடாக துப்பாக்கி குண்டு துளைத்து கொண்டு சென்றுள்ளதாக தற்போது வெளியாகிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலையேற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

மேலும், கொலை குற்றவாளிகளை கைதுசெய்யும் வரை குறித்த மாணவர்களின் சடலத்தை வைத்தியசாலையில் இருந்து வெளியில் கொண்டு செல்ல தாம் அனுமதிக்கபோவதில்லையென மாணவர்கள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் வைத்தியசாலைக்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும், உண்மைகள் வெகுவிரைவில் வெளிக்கொணரப்படும் எனவும் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, குறித்த விபத்தினை யாழ். நீதிமன்ற நீதவான் எஸ்.சதிஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

(விருஷன்)

 

http://www.virakesari.lk/article/12613

பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரம்: வைத்தியசாலைக்குச் சென்றார் மாவை

 

article_1477041657-a.jpg

சரவணபவ ஆனந்தன் திருச்செந்தூரன்

கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (21) அதிகாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட, இரண்டு மாணவர்களும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியானதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, உடற்கூற்று பரிசோதனை இடம்பெறும் யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்ற தகவலினால் ஆத்திரமடைந்த பல்கலைக்கழக மாணவர்கள், வைத்தியசாலை வளாகத்தில் சூழ்ந்தனர். இதனையடுத்து, அங்கு மாவை சேனாதிராசா மற்றும் வலிகாமம் வடக்கு முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் விஜயம் செய்தனர்.

உடற்கூற்று பரிசோதனை இன்னும் வெளியிடப்படாத நிலையில், மாணவர்கள் மாணவர்களின் இறப்பு தொடர்புடைய விவரங்களுக்காக காத்திருக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பொலிஸ்மா அதிபரின்; கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார் என்று தெரியவருகின்றது.

http://www.tamilmirror.lk/184460/பல-கல-க-கழக-ம-ணவர-கள-வ-வக-ரம-வ-த-த-யச-ல-க-க-ச-ச-ன-ற-ர-ம-வ-

  • தொடங்கியவர்
குளப்பிட்டியில்...
 
 

article_1477039441-a.jpg

கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (21) அதிகாலை இடம்பெற்ற விபத்தில், இரண்டு பல்கலைக்கழல மாணவர்கள் உயிரிழந்தனர். (படங்கள்: எம்.றொசாந்த்)  

article_1477039453-b.jpg

article_1477039459-c.jpgarticle_1477039464-d.jpgarticle_1477039470-e.jpgarticle_1477039476-f.jpg

http://www.tamilmirror.lk/184451/க-ளப-ப-ட-ட-ய-ல-

  • தொடங்கியவர்
மாணவனின் நெஞ்சில் துப்பாக்கிச் சூடு?
 
 

article_1477049469-gun.jpgசொர்ணகுமார் சொரூபன், செல்வநாயகம் கபிலன்

உயிரிழந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரில், ஒருவர் மீது துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட விபத்தால் மற்றைய மாணவனும் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (வயது 24) என்ற மாணவனின் நெஞ்சில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் வெள்ளிக்கிழமை (21) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டு இரண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் உடல்களை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிஸார் ஒப்படைத்தனர்.

விபத்து நடைபெற்றதாக கூறப்படும் நேரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாக அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.

இதனால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற உடற்கூற்று பரிசோதனையின் போது, பெருமளவான பல்கலைக்கழக மாணவர்கள் வைத்தியசாலை வளாகத்தை ஆக்கிரமித்தனர்.

உடற்கூற்றுப் பரிசோதனையில் மாணவன் ஒருவனின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் அதனை சட்ட வைத்தியதிகாரி வெளிப்படுத்தவில்லை.

http://www.tamilmirror.lk/184466/ம-ணவன-ன-ந-ஞ-ச-ல-த-ப-ப-க-க-ச-ச-ட-

  • தொடங்கியவர்
யாழில் இளைஞர்கள் மரணம்: விசாரணைக்கு விசேட பொலிஸ் குழு
 
 

article_1477051118-aaaaaaaa.jpgயாழ். நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற இரு இளைஞர்களின் மரணம் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்திர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

யாழ். நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற இரு இளைஞர்களின் மரணம் தொடர்பில், இன்று  திருகோணமலையில் இடம்பெற்ற ஒரு விசேட நிகழ்வுக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரடியாக சந்தித்த எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தனது கவலையை தெரிவித்ததோடு, இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து, ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்மதுடன் தொடர்புடைய பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில், பக்கச் சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொலிஸ் மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/184469/ய-ழ-ல-இள-ஞர-கள-மரணம-வ-ச-ரண-க-க-வ-ச-ட-ப-ல-ஸ-க-ழ-

வாள் வெட்டுக்கும்பலை அடக்கவென கிளம்பியுள்ள போலீசார் கும்பல் இரவில் வேகமாக வந்த உந்துருளியை மறித்த போது நிற்காமல் சென்றதாகவும், உடன் பொறுப்பற்ற முறையில் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும், அதனால் விபத்து நிகழ்ந்து மாணவர்கள் இருவரும் பலியானதாகவும் தெரிய வருகிறது.

யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மர்ம மரணம் ; ஐந்து போலிசார் கைது

யாழ் பல்கலைக் கழக மாணவர்கள்

விபத்தா’? மரணமடைந்த இரு மாணவர்கள்

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திப் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றதாகக் கூறப்படும் விபத்து என்று முதலில் கூறப்பட்ட சம்பவம் ஒன்றில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து போலிசார் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் கூறுகின்றன. இச்சம்பவம் தொடர்பில் குற்ற புலனாய்வு பொலிசார் ( சி.ஐ.டி) விசாரணைகளை தொடங்கியுள்ளதாகவும் அரசின் தகவல் திணைக்கள அறிக்கையொன்று கூறுகிறது.

மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த அரசறிவியல் பீட மாணவன் நடராஜா கஜன் (23), ஊடகக் கற்கைப் பிரிவைச் சேர்ந்த மாணவன் பவுண்ராஜ் சுலக்ஷன் (24) ஆகிய இருவருமே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர்.

விபத்து காரணமாகவே மரணம் ஏற்பட்டதாகக் காவல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

ஆனால் பின்னர் அரசின் தகவல் திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றில்,இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து போலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருவதாக அந்த அறிக்கை கூறியது.

போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் மரணம் ?

ஆயினும் யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக களமிறக்கப்பட்டுள்ள விசேட காவல்துறையின் அணியொன்று இந்த விபத்து நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்ற இடத்தில் கடமையில் இருந்ததாகவும், விபத்து நடந்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற நேரம் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி செய்த சைகையை மீறிச் சென்றதனால், காவல் துறையினர் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததனால் தடம் மாறிய மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி சகிதம் சென்ற யாழ் மாவட்ட நீதவான் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு விசாரணைகளை நடத்தியுள்ளார். யாழ்ப்பாணம் உயர் காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை நடத்தியிருக்கின்றனர்.

இறந்தவர்களின் உடல்கள் மருத்துவ பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.

உயிரிழந்த இரண்டு மாணவர்களுக்கும் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிவதற்காக நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் பதட்டத்துடன் யாழ் போதனா வைத்தியசாலையில் குழுமியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ததேகூ அறிக்கை

இந்த இளைஞர்களின் மரணம் தொடர்பில் கண்டனம் தெரிவித்த தமிழ்தேசிய கூட்டமைப்பு, இச்சம்பவம் பற்றி இன்று திருகோணமலையில் இடம்பெற்ற ஒரு விசேட நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி அவர்களை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் சந்தித்து தனது கவலையை தெரிவித்தாகவும், இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார் என்று கூறியது.

இதனை தொடர்ந்து ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்தோடு தொடர்புடைய போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர், என்றும் கூட்டமைப்பின் அறிக்கை கூறியது.

இது குறித்து பக்கச் சார்பற்ற விசாரணைகளை நடத்தப்படவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பொலிஸ் மா அதிபரை கோரியது.

http://www.bbc.com/tamil/sri-lanka-37725993

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.