Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலண்டனில் மலையக தொழிலாளரின் சம்பள உயர்வுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தூதரகத்திற்கு முன் போராட்டம்

Featured Replies

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கு ஆதரவாக இலண்டனில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இன்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

”ஆறு ஏழு தலைமுறையாய் மாடாய் நாம் உழைத்து ஆணி முனையில் கூட சொந்த காணியில்லை”, “திண்று கொழுக்கும் திமிங்கலங்கள் கூட்டு சேர்ந்து  கொள்கை வகுக்கும்“, “எவனெவனோ  சொகுசா வாழ எங்கள் உயிரை இங்கு மாய்த்தோம்“ என்று கோசங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும்,அவர்கள் கைகளில் மும்மொழிகளில் எழுதப்பட்ட வாசங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

14639858_667800613383129_471715369826062

14705758_667800610049796_517698616554947

14671219_667800606716463_311363400036673

14725493_667800686716455_635348220530398

14718888_667800766716447_79372372829015014729165_667800860049771_690486202544282

14718739_667801070049750_346407496073435

 

 

http://www.virakesari.lk/article/12625

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த வீசா இல்லாத சிலர் நிற்கிறார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, MEERA said:

எனக்கு தெரிந்த வீசா இல்லாத சிலர் நிற்கிறார்கள். 



Job Seekers Allowance எடுப்பவர்கள்போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, basthiam pillai said:



Job Seekers Allowance எடுப்பவர்கள்போல் தெரிகிறது.

வீசாவே இல்லையாம், அதுக்குள்ள இதுவா.

  • தொடங்கியவர்
3 hours ago, MEERA said:

எனக்கு தெரிந்த வீசா இல்லாத சிலர் நிற்கிறார்கள். 

மீராவை ஸ்காட்லாந்து யார்டு பிடிக்க போகுது! 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, போல் said:

மீராவை ஸ்காட்லாந்து யார்டு பிடிக்க போகுது! 

ஏன் ஐயா???

பி.கு: வீசாவிற்காக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது இப்போதைய ட்ரெண்ட் ஆகிவிட்டது. 

  • தொடங்கியவர்
Just now, MEERA said:

ஏன் ஐயா???

பி.கு: வீசாவிற்காக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது இப்போதைய ட்ரெண்ட் ஆகிவிட்டது. 

ஓ! அப்பிடியா. பி.கு. தகவலுக்கு நன்றி.
விசா இல்லாதவர்களை அடையாளம் காண ஸ்காட்லாந்து யார்டு மீராவை அணுகுமோ என்று நினைத்திருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, போல் said:

ஓ! அப்பிடியா. பி.கு. தகவலுக்கு நன்றி.
விசா இல்லாதவர்களை அடையாளம் காண ஸ்காட்லாந்து யார்டு மீராவை அணுகுமோ என்று நினைத்திருந்தேன்.

அப்படியே அவ்வளவு பேரையும் அள்ளி கையை வைக்க சொன்னால் தெரியும் வண்டவாளம். 

  • தொடங்கியவர்

எது எப்பிடியோ மிகக் கடுமையாக சுரண்டப்பட்ட மலையக தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வந்தவர்களை பாராடாமல் இருக்க முடியாது.


மலையக தமிழர்களின் இந்த மோசமான நிலைக்கு பிரித்தானியாவும், மலையக தமிழர்களின் பிரதிநிதிகளும், சிங்கள-பௌத்த அரச அராஜகங்களும் முக்கிய காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக சுத்த மனதோடு ஆதரவாக குரல் கொடுத்தால் பாராட்டலாம். இலங்கையில் எங்கே ஆர்ப்பாட்டம் செய்யக்கூடிய நிகழ்வு நடக்கும் என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததும் தொடங்கி விடுவார்கள். படங்கள் எடுத்துக் கொண்டு ஊடகங்களுக்கு காசைக் கொடுத்து படங்களுடன் செய்தியாக பிரசுரிப்பார்கள்.

8 minutes ago, போல் said:

எது எப்பிடியோ மிகக் கடுமையாக சுரண்டப்பட்ட மலையக தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வந்தவர்களை பாராடாமல் இருக்க முடியாது.


மலையக தமிழர்களின் இந்த மோசமான நிலைக்கு பிரித்தானியாவும், மலையக தமிழர்களின் பிரதிநிதிகளும், சிங்கள-பௌத்த அரச அராஜகங்களும் முக்கிய காரணம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.