Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் பொலிஸாரை தாக்கிய சந்தேகநபர் கைது

Featured Replies

கிளிநொச்சியில் பொலிஸாரை தாக்கிய சந்தேகநபர் கைது

கிளிநொச்சியில் பொலிஸாரை தாக்கிய சந்தேகநபர் கைது

 

கிளிநொச்சி பிரதேசத்தில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபரை கைது செய்துள்ள பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குறித்த சந்தேகநபரை தர்மபுரம் பொலிஸார் இன்று பகல் கைது செய்து செய்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்புக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாணம் முழுவதும் நேற்றைய தினம் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்நிலையில் வேறு பிரதேசங்களில் இருந்து கிளிநொச்சி பிரதேசத்திற்கு வருகை தந்த வாகனங்கள் மற்றும் பஸ்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதையடுத்து அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதி மற்றும் அறிவியல் நகர் பகுதியில் அதிகளவு பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்தமையால் அங்கு பதற்ற நிலை உருவாகியதாக எமது செய்தியாளர் கூறினார்.

இதன்போது பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட அமைதியின்மையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்திருந்தார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=84792

  • தொடங்கியவர்
கிளிநொச்சியில் பொலிஸாரை தாக்கிய சந்தேக நபருக்கு விளக்கமறியல்
 
 
கிளிநொச்சியில் பொலிஸாரை தாக்கிய சந்தேக நபருக்கு விளக்கமறியல்
கிளிநொச்சியில் பொலிஸாரை தாக்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட வரை, எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.
 
தர்மபுரம் கட்டைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஆறுமுகம் நவநீதராசா என்ற சந்தேகநபர், இன்று (புதன்கிழமை) தர்மபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்த ப்பட்டபோது, நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
 
அத்தோடு, அன்றைய தினம் சந்தேகநபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 
இதேவேளை கிளிநொச்சி நகரின் நடவடிக்கைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது
 
கிளிநொச்சி நகரில் நேற்றைய தினம் மாலை பொலிசாருக்கும் -  மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நள்ளிரவு வரை நீடித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை கிளிநொச்சி நகரில் குவிக்கப்பட்டிருந்த பொலிசாரும், விசேட அதிரடிப்படையினரும் முற்றாக அகற்றி க்கொள்ள ப்பட்ட நிலையில், நகரின் நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

http://onlineuthayan.com/news/19406

  • தொடங்கியவர்

கிளிநொச்சி பிரச்சினை ; பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியவர் கைது

 

 

(எஸ்.என்.நிபோஜன்)

 

கிளிநொச்சி பிரதேசத்தில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபரை கைது செய்துள்ள பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

கிளிநொச்சி ஏ9 வீதி வைத்தியசாலைப்  பகுதியில்  பொலிஸார் மற்றும் இளைஞர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்ப்பட்டத்தையடுத்து பெரும் பதற்றம் ஏற்ப்பட்டிருந்த நிலையில் அங்கு கடமையில் இருந்த பொலிசார் ஒருவர் மீது இனம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தபட்டு காயமடைந்த பொலிஸ்  உத்தியோகத்தர் கிளிநொச்சி வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு  அனுராதபுரம் வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளார்.

பொலிஸாரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் தர்மபுரம் கட்டைக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த  நபர் ஒருவரை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சிப் பொலிஸார் இணைந்து இன்று  பிற்பகல்  கட்டைக்கடுப் பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளனர்.

கைது செய்த சந்தேகநபரை வைத்திய பரிசோதனையின் பின்  கிளிநொச்சி நீதவான்  நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியத்தை அடுத்து குறித்த சந்தேக நபரை  எதிர்வரும் 31 ஆம்  திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

unnamed.png

unnamed__1_.png

unnamed__2_.png

unnamed__3_.png

unnamed__4_.png

unnamed__5_.png

 

http://www.virakesari.lk/article/12788

  • கருத்துக்கள உறவுகள்

பொலிசாருக்கும் - மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் என்றால் அதில் பலர் சம்பந்தப்பட்டிருப்பார்கள். ஒரே ஒருவர் மட்டும் கைதுசெய்யப்பட்ட மர்மம்தான் என்னவோ?
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.