Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியனும் நாங்களும் அண்ணன் தம்பிகளாம் ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியனும் நாங்களும் அண்ணன் தம்பிகளாம் ?


 உணவு பாதுகாப்பு சட்டம்

Image result
தமிழர் வாழ்வில் அரிசி இல்லாத ஒன்று நினைத்து பார்க்க இயலாது. இந்த அரசியலுக்கு வருவம். அதாவது நாம இங்க நெல்லை விளைவிப்பமாம்  .இவனுங்க மத்திய அரசு வாங்கிட்டு போய்விடுவார்களாம்.. கேட்டால் மத்திய தொகுப்பாம் அதை அரிசியாக மாற்றி சட்டீஸ்கருக்கு சலுகை விலையில் கொடுப்பார்களாம்..இங்க தமிழக அரசு பொது விநியோக திட்டத்தின் கீழ் ஏழைக்களுக்கு அதாங்க ரேசன் கார்டு மூலம் கொடுக்க கூடிய அரிசிக்கு கிலோ ஒன்று ரூபாய் 22 என்று எங்களிடம் வாங்கி நீங்கள் உங்களின்ட ஏழைகளுக்கு இலவசமாக கொடுங்க என்கிறது கிந்திய அரசு .. அதாவது தேனை எடுப்பவன் ஒருத்தன் நக்கி தின்பவன் இன்னோருத்தன்.. கேட்டால் நாம் அனைவரும் கிந்தியர்கள் சகோதர்கள் ஒருத்தன்  வறுமையில் இருக்கும் போது நாம அவனுக்கு உதவி செய்ய வேண்டாமா?  என்கிறது கிந்திய அரசு அதையும் நேற்று ஏற்று கொண்டு கையெழுத்து போட்டுள்ளது தமிழக பொம்மை அரசு . கேட்டால் வரிசுமைய நாங்க தாங்குவம் என்று வாய்சவடால் விடுத்து வருகிறார்கள் அதெப்படி தாங்குவார்கள் ..? ஏற்கனவெ கஜானா காலி 2 1/2 லட்சம் கோடி கடன்..  நிச்சயம் தாங்குவார்கள்

Image result

தமிழ்குடிமகன்கள் நிச்சயம் தாங்கி பிடிப்பார்கள்

புதிய கல்வி கொள்கை

  Image result
ஏற்கனவே இந்தியை  கடுமையாக எதிர்த்த தமிழகம் இரண்டு மொழி வழி கொள்கையை ஏற்று கொண்டிருந்த ஒன்று ஆங்கிலம் மற்றும் தமிழ் இன்று மூன்றாவது மொழியாக  சமஸ்கிருதன்ம் மற்றும் இந்தியை சேர்க்குமாறு  வலியுறுத்திவருகிறது. கேட்டால் இதை படித்தால் கிந்திய படித்தால் வேலை கிடைக்குமாம்.. அப்போ எங்க ஊரில்  பானிபூரி மற்றும் பீடா கடை வச்சிருக்கவன் எல்லாருக்கும் வேலை அங்கிட்டு கிடைத்திருக்க வேண்டும் அது இல்லாம தானே இங்க வந்து கடை திறக்குறான்..?
 
குல கல்வி திட்டம்.


மீன் குஞ்சிக்கு நீந்த கற்று கொடுக்கிறார்களாம் . நாம எல்லோரும் படித்து முன்னுக்கு வருவதற்குதான் முயற்சித்து வருகிறம் . நம்முடைய பெற்றோர்களும் அதைதான் விரும்புவார்கள் .நாமும் அதைத்தான் விரும்புவம். தப்பி தவறி ஒரு சில சந்தர்ப்பவச சூழல் காரணமாக சில வருடம் பெயில் ஆவது உண்டு .அதாவது தகுதி தேர்வில் சித்தி அடையாமல் போவதுண்டு. ஆனால மறு வருடம் தவறுதலாக செய்த பிழையை திருத்தி கொண்டு மறுபடியும் சித்தி அடையவதில்லையா? ஆனால் இவனுங்க சொல்வது என்ன? நீங்க சித்தி அடையவில்லையென்றால் உங்களின்ட குலம் மற்றும் ஜாதி அது செய்து வந்த தொழில் என்ன..? அதை ஒட்டி சின்ன டிப்ளமோ கோர்ஸ் கொடுக்கபோறம் ..அதாவது ஒரு மரவேலை செய்பவரின் மகன்  தேர்வில் சித்தியடையாவிட்டால் அவருக்கு மரவேலை குறித்த டிப்ளமோ கோர்ஸ் ரெடி..!

நுழைவு தேர்வு மீண்டும் அறிமுகம்


அதாவது நொண்டி குதிரையையும் சண்டி குதிரையையும்  நேருக்கு நேர் மோத விடுவது.கிராமபுறத்தில் இருப்பவனையும்  கிந்திய சிலபஸில் படித்தவனையும் மோதவிடுவது .. +12  தேர்வில் தமிழக பாடநூல் திட்ட அடிப்படையின் படி  சித்தியடைந்த மாணவர்கள்  இதுவரை மருத்துவ படிக்கும் மற்றும் பொறியியல் படிப்புக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் அனுமதிக்கபட்டு வந்துள்ளார்கள் . இப்போ கிந்திய அரசு சொல்வது என்ன ? நாங்க ஒரு தேர்வு வைப்பம் அதில் சித்தி அடைபவார்களைத்தான் நீங்க சேர்த்து கொள்ளவேண்டும் . சரி இதில் என்ன சிக்கல் வரபோகிறது ..? அதாவது தமிழக அரசு  60 + 40 சீட்டுகளை தனது திட்டமாக வைத்துள்ளது. அதாவது 60 சீட்டுகள் அது கல்லூரிகளில் தன்னால் நிரப்ப முடியும் அது சமூக நீதி அடிப்படையில் . (+12  தேர்வில் தமிழக பாடநூல் திட்ட அடிப்படையின் படி  சித்தியடைந்த மாணவர்கள் ) மீதி 40 காசு கொடுத்து படிப்பவர்க்ள்.. இதில்தான் வில்லங்கம் வருகிறது!! அந்த 60 இடங்களுக்கும் தான் கிந்திய அரசு குறிவைக்கறது.. இவர்கள் வைக்கும் தேர்வில் நம்மளின்ட மாணவர்கள் தேர்ச்சி அடையாவிட்டால் அந்த 60 இடங்களும் அவர்களால் நிரப்பபடும் அதாவது நம்மள அடிச்ச கன்னடன் தெலுங்கன்  மற்றும் மலையாளிகள் மூலமாக..(நம்ம ஆளுங்க நாம வைக்கிற தேர்விலேய தேர்ச்சி பெறவில்லை .. எத்தனையோ சீட்டுகள் காலியாக உள்ளன)அவர்கள் படிப்பதற்கான சலுகைகள் அத்தனையும் தமிழக அரசு செய்து தரவேண்டும்.


மீத்தேன் கேஸ் மற்றும் செல் கேஸ் எடுக்க அருமையான வாய்ப்பு :

Image result

காவிரி சிக்கலில் நாங்களே நாடளுமன்றத்திலே சட்டம் போட்டு நதி நீர் மேலாண்மை வாரியத்தை அமைத்துகொள்ளவம் என்று உச்ச நீதி மன்றத்தில் வாய்சவடால் விடுத்த மத்திய அரசு அதை நிறைவேற்ற முடியுமா ? எல்லாம் வார சந்தை கூச்சல் இட்டு சபையை ஒத்திவைப்பதை பார்த்து கொண்டுதானே இருக்கிறம் ?

இவனுங்க அடிச்ச யூ டேர்ன் சர்க்கஸ்காரே தோற்றுடுவான்

 

பொது சிவில் சட்டம்..

பொது சிவில் சட்டம் என்றால் என்ன? பொது சிவில் சட்டம் வந்தால் சொத்துரிமை, தனிப்பட்ட உரிமைகளான திருமணம், விவாகரத்து, பராமரிப்பு, தத்து எடுத்தல் உள்ளிட்ட பல சட்ட உரிமைகள் எல்லோருக்கும் பொதுவாக இருக்கும். தற்போது உள்ள நிலையில் பல்வேறு வகுப்பினரையும் நிர்வாகம் செய்ய பல்வேறு சட்டங்கள் உள்ளன. பொது சிவில் சட்டம் அமல் செய்யப்பட்டால் இந்த தனி மதச் சட்டங்கள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் வந்துவிடும். இந்த சட்டங்கள் மத சார்பில்லாமல் அமையும். இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும ் அவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் அது பொருந்தும் வகையில் இருக்கும் . இப்படித்தான் சட்ட வரைவு உள்ளது

உதாரணத்திற்கு வாரும் :


நான் ஒரு இந்து. எனக்கு இரண்டு மகன்கள். இரண்டு பேரையும் நன்றாக படிக்க வைக்கிறன். ஒருவன் படித்து முடித்தவுடன் வேலை கிடைத்து குடும்பத்தை கவனிக்காமல் பறந்து விடுகிறான் .. சொத்துகள் சேர்த்து கொண்டு சுகமா இருக்கிறான்...ஆனால் இன்னொருவன் சரியாக வேலை கிடைக்காமல் விவசாயத்தினை பார்த்து கொண்டு என்னையும் குடும்பத்தினையும் கவனித்து கொண்டு உள்ளான் . அந்திம காலத்தில் அப்பா உயிர் போக போகுது என்று தெரிந்து கொண்டு முதலாமானவன் எனக்கும் சொத்தில் பங்கு இருக்கு என்று வந்து நிற்கிறான்.. 2 ஏக்கர் என்று வைத்து கொண்டாலும் எந்த தகப்பனும் 1 :1 என்று பிரிக்க இயலாது ..


டிஸ்கி :

இளிச்சவாயன் பொண்டாட்டி ஊருக்கெல்லாம் ..வை.. படி என்பதை போல நேரம் பார்த்து  சரியான தலைமை இல்லாத நேரத்தில் குறிவைத்து அடிக்கிறது கிந்திய அரசு..நேற்றைய மாநில அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வந்த பாண்டியராஜன் சொன்னது பிரசர் குடுக்கிறங்க .. திட்றாங்க .. என்ன செய்யமுடியும் ?திட்டத்தான் செய்வார்கள் அதற்காக நம்முடைய உரிமையை கிந்தியனிடம் விட முடியுமா?இது ஒரு பொறுப்பு உள்ளவர் பேசுறவர் பேச்சா இது ?

 பொருளாதார வளங்களுக்கே தமிழரும் தமிழ்நாடும் தேவை படுகிறாரகள்..


அசாமில் பெட்ரோல் எடுக்க அந்த அரசிற்கு உரிமைத் தொகை கொடுத்து வரும் “இந்தி”ய அரசு, தமிழகத்தின் காவிரிப்படுகையிலிருந்தும், நரிமணித்திலிருந்தும் திருடிச் செல்லும் பெட்ரோலுக்கு நம்மிடையே “இறக்குமதி” வரியை விதித்துக் கொள்ளையடிப்பதை என்னசொல்ல?

மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தமிழகத்தின் பெரு வணிகங்களை கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். பீகாரிகள் ரயில்வே வேலை, ரோடு வேலை என தமிழகத்திற்குள் நுழைந்து விட்டனர். தமிழத்திலேயே தமிழன் அகதியாக தெருத்தெருவாய் உணவிற்காக  பிச்சையெடுத்து அலையும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது. அயலவன் வந்து சுரண்ட நமது தமிழ் மண் வேட்டைக்காடு அல்ல. நமது எதிரி உலகமய முதலாளிகள் மட்டுமல்ல தில்லி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக இங்கு செயல்படும் “இந்தி”யத் தேசியத்தை ஆதரிக்கும் அனைவரும்தான் என உணர வேண்டும்

 

  • கருத்துக்கள உறவுகள்

அதை விடுங்க தேசி,

'கபாலி 2' படம் எப்போ வருது? அதைப்பற்றி யோசிக்கவே எங்களுக்கு நேரம் போதவில்லையப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

அதை விடுங்க தேசி,

'கபாலி 2' படம் எப்போ வருது? அதைப்பற்றி யோசிக்கவே எங்களுக்கு நேரம் போதவில்லையப்பு.

ரஜனி... அரசியலுக்கு வருவாரா... மாட்டாரா.... என்ற விவாதத்தையும்... இதில் சேர்த்துக் கொள்ளலாம். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ராசவன்னியன் said:

அதை விடுங்க தேசி,

'கபாலி 2' படம் எப்போ வருது? அதைப்பற்றி யோசிக்கவே எங்களுக்கு நேரம் போதவில்லையப்பு.

14720472_652760668239054_532000658918406

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தந்தி ரீவி..

டிஸ்கி:

அடிமை பாய்ஸ்களில் இப்படி ஒரு அமைச்சரா ..? அம்மா கண்விழித்த உடன் ஆப்பு நிச்சயம்...!!

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.