Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சிறிலங்காவை இந்தியா அனைத்துலக நீதிமன்றத்தின் முன்னிறுத்த வேண்டும்': தமிழர் மனித உரிமைகள் மையம்

Featured Replies

]

"சிறிலங்காவினால் தற்போது மீறப்பட்டுள்ள வடக்கு - கிழக்கு இணைப்பு பற்றிய இலங்கை - இந்திய அனைத்துலக ஒப்பந்த விவகாரத்தை, இந்தியாவினால் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் ஒழுங்குவிதிகளின், ஆறாவது அதிகாரத்தின், சாரம் 34, 35, 36 க்கு அமைய, முறையீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் நிறைய உண்டு."

பிரான்சை தலைமையகமாகக் கொண்ட தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் செயலாளர் ச.வி.கிருபாகரன் விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"1987 ஆம் ஆண்டு யூலை 29 ஆம் நாள் கையெழுத்தான சிறிலங்கா - இந்தியா அனைத்துலக உடன்படிக்கையின் பிரகாரம், சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவரினால், 1988 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 8 ஆம் நாள், இவ்விரு மாகாணங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே.

ஆனால் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு 18 வருட காலத்தின் பின்னர், விசேடமாக அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, பதவிக்கு வந்த பின்னர், வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இருவேறு மாகாணங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்ற வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்து.

இதன் பிரகாரம் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பினை கடந்த ஆண்டு ஓக்ரோபர் 16 ஆம் நாள் வழங்கியது. அதன்படி முன்னைய அரச தலைவரினால், வடக்கு - கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டது செல்லுபடியாகாது என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.

இவ் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிந்த அனைத்துலக சமுதாயமும், இந்தியாவும் மிகவும் அதிருப்தியடைந்தன. அத்துடன் இத்தீர்ப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் ஒழுங்கு விதிகளுக்கும் முரணானது. ஆதலால் இவ்விவகாரத்தை இந்தியாவானது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு முறையீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் நிறைய உண்டு.

உலகத்தில் நீதியையும், சர்வதேச சமாதானத்தையம், பாதுகாப்பையும் விரும்பும் ஒவ்வொரு குடிமக்களும், இந்திய அரசிடம் இவ்விவகாரத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிடம் முறையீடு செய்யுமாறு வேண்டுகோள் செய்ய வேண்டும்."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

கோட்மார்ஷல் செய்யவேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.