Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் சமமான உரிமைபெற்று வாழவேண்டும்

Featured Replies

வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் சமமான உரிமைபெற்று வாழவேண்டும்

 

"கிழக்கு மாகாண சபையில் ஒரு முஸ்லிம் மகன் முதல் அமைச்­ச­ராக பதவி வகித்துக் கொண்­டி­ருப்­பதை தமி­ழர்­க­ளா­கிய நாம் சந்­தோ­ஷ­மாக வர­வேற்­கி­றோ­மென்றால் அதற்கு காரணம் தமிழ், முஸ்லிம் உறவு நீடிக்க வேண்­டு­மென்ற எங்கள் எதிர்­கால கன­வாகும்.”

எங்கள் இரு சமூ­கமும் இணைந்து ஒரு அர­சியல் தீர்­மா­னத்தை எடுப்­பதன் மூலமே வடக்கு, கிழக்கு இணைந்த தாய­கத்தில் நாம் சகல உரி­மை­க­ளு­டனும் பல­மாக, பய­மின்றி வாழ முடியும். புதிய அர­சியல் அமைப்பில் வட­ கிழக்­குக்கு வழங்­கப்­படும் உரி­மையின் மூலம் முஸ்லிம் தமிழ் மக்கள் சம­மான உரிமை பெற்று வாழ வேண்­டு­மென்­பதில் நாம் தீர்க்­க­மான முடிவு கொண்­டி­ருக்­கின்றோம். நாங்கள் முஸ்லிம் மக்­களை ஏற்­றுக்­கொள்­வதைப் போல் தமிழ் மக்­க­ளு­டைய உரி­மை­க­ளையும் முஸ்லிம் மக்கள் அங்­கீ­க­ரிக்க வேண்டும்.

தேசிய இலங்­கைக்குள் தமி­ழர்கள், முஸ்­லிம்கள், மலை­யகத் தமி­ழர்கள் தங்­க­ளுக்­கான உரி­மை­களை உரிய முறையில் பெற வேண்­டு­மென்­பதில் த.தே.கூ. அதிக கவனம் செலுத்தி வரு­கி­றது.

கவிஞர் பரஞ்­சோ­தியின் பெரும்­பா­லான கவி­தைகள் ஏழை மக்­களின் அடி­மட்ட வாழ்வில் அல்­ல­லுறும் கிராம மக்­களின் வாழ்­வி­யல்­களைப் பேசு­கின்­ற­வை­யாகக் காணப்­ப­டு­கி­ன்றன. தன்­னு­டைய மக்­களும் உல­கத்­தி­லுள்ள ஏழைப் பாட்­டாளி மக்­களும் தமது அடிமைத் தளையை அறுக்க எவ்­வாறு போரா­டி­னார்கள் என்­பதை அவர் தனது கவி­தை­களில் ஆழ­மா­கவும் அழ­கா­கவும் வடித்­துக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

அடக்கு முறைக்கு எதி­ரா­கவும் சர்­வா­தி­காரத்­துக்கு எதி­ரா­கவும் போரா­டிய விடு­தலைப் போராட்­டங்­களை, அதற்­கு­ரிய தத்­துவப் பின்­ன­ணி­களை அவர் தெரிந்து கொண்­ட­தாலும் உணர்ந்து கொண்­ட­த­னாலும் தான் கவிஞர் பரஞ்­சோ­திக்கு ஈரோஸ் அமைப்பின் மீது நாட்­டமும் ஈடு­பாடும் ஏற்­பட்­டி­ருக்க வேண்­டு­மென்று நான் நினைக்­கின்றேன்.

இன்­றைய இந்த நிகழ்வில் கலந்து கொண்­டி­ருக்கும் முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு­தாவூத் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் கு. நாகேஸ்­வரன் போன்­ற­வர்­களும் ஈரோஸ் அமைப்புப் பாச­றையில் வளர்ந்­த­வர்கள் என்­பதை யான் அறிவேன்.

அடக்கு முறைக்கும் ஒடுக்கு முறைக்கும் ஆளா­கி­யி­ருக்கும் சமூகமொன்று உல­கத்தைத் திரும்பிப் பார்க்க முனை­யுமானால், ஒரு சிந்­தனை வழிப்­பட்ட பார்­வையை செலுத்திப் பார்க்குமே­யானால் நாமும் இந்த அடக்கு முறைக்கும் ஒடுக்கு முறைக்கும் ஆளாக்­கப்­பட்­டி­ருக்­கிறோம் என்­பதை உணர்ந்து கொள்­ளும். அது சமூக ரீதி­யாக, சாதி ரீதி­யாக, இன ரீதி­யாக அதற்கு அப்பால் ஏகா­தி­பத்­தி­யங்­களின் அடக்­கு­மு­றைகள் ஆயுத பலம் போன்­ற­வற்றால் அடக்­கப்­ப­டு­கிறோம் என்­பதை தெரிந்து கொண்டால் அவர்கள் அதற்கு எதி­ராகப் போராட முன்­வ­ரு­கி­றார்கள்.

அந்த வகை­யில்தான் கவிஞர் பரஞ்­சோதி யும் தன்­னை­யொரு போராட்ட கவி­ஞ­னாக மாற்­றிக்­கொண்­டுள்ளார் என்­பது ஆச்­ச­ரியம் தரு­கின்ற விட­ய­மல்ல, அவ­ரது கவி­தை­களில் பார­தியின் தாக்­கமும், பாணியும் நிறை­ய­வே­யி­ருந்­ததை என்னால் உணர முடிந்­தது.

1983 ஆம் ஆண்டு இனக்­க­ல­வரம் உண்­டாக்­கப்­பட்டு தமி­ழர்கள் அழிக்­கப்­பட்ட காலத்தில் அந்தக் கொடூ­ரத்தை, கொடு­மையை ஆவே­சத்­துடன் தனது கவி­தை­களில் எடுத்­துக்­காட்­டி­யுள்ளார். முன்­னொரு கவி­தையில் இளை­ஞர்­களே திரண்டு எழுங்கள் என்று சூளு­ரைத்த கவிஞர் இன்­னொரு சந்­தர்ப்­பத்தில்,

உலக சந்­தையில்

எங்கள் குரு­தியும் சதையும்

எத்­தனை நாளைக்கு

துப்­பாக்கி மொழிகள்

இன்­றைக்கு மட்­டு­மல்ல

என்­றைக்­குமே

வேண்­டா­த­வைதான்

எனக் கூறு­கிறார்.

நான் எனது மாணவப் பரு­வத்தில் மூதூர், வெருகல் பிர­தே­சங்­க­ளுக்கு வருகை தந்து நில ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ராக போரா­டி­யி­ருக்­கிறேன். திரு­மலை உவர்­மலை கிரா­மத்தை விமானப் படை ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ராக போரா­டி­ய­வர்­களை நாம் மறந்­து­வி­ட­வில்லை. அந்­தக்­கா­லத்தில் நான் இங்கு இருந்­தி­ருக்­கின்றேன். உவர்­மலை தங்­க­ளுக்­கு­ரிய மலை­யென்று அங்கு வாழ்ந்த மக்கள் எத்­த­னையோ போராட்­டங்­களை அக்­கா­லத்தில் நடத்­தி­னார்கள். நாங்கள் சுமார் 150 பேருக்கு மேல் முகா­மிட்டு பன்­குளப் பகு­தியில் மக்­களை குடி­யேற்ற பல வேலைத் திட்­டங்­களைச் செய்­தி­ருந்தோம். இந்த அனு­ப­வத்தின் கார­ண­மாக திரு­கோ­ண­மலைப் பிர­தே­சத்தின் பூகோ­ளத்தை நாங்கள் நன்கு அறிந்து வைத்­தி­ருக்­கிறோம்.

உல­கத்தில் எங்கு அடக்­கு­முறை ஏற்­ப­டு­கின்­றதோ அந்த நாடு­களில் ஆயுதம், போராட்­டத்தின் ஒரு கரு­வி­யாக பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. மஹாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங் போன்றோர் தம் நாட்டு மக்­களின் உரி­மை­க­ளுக்­காக அகிம்சை வழிப் போராட்­டங்­களை நடத்­தி­னார்கள். காந்­தியின் அகிம்சை வழிப் போராட்­ட­மா­னது சக்­தி­வாய்ந்­தது என உல­கத்­த­வரால் உண­ரப்­பட்ட போது, அது ஆழ­மாக பதிந்­த­போது எங்­கள்­தே­சத்தில் தந்தை செல்­வா­வினால் சுவீ­க­ரிக்­கப்­பட்டு அந்த சித்­தாந்தம் பேணப்­பட்­டது. இன்­னு­மொரு புறம் ஆயுதம் மூலம் மக்­களை ஆட்­சி­யா­ளர்கள் அடக்கி ஒடுக்க முற்­பட்­ட­போது ரஷ்­யாவை எடுத்துக் கொள்வோம். அதைப்­பின்­பற்­றிய கியூபா நாட்டை எடுத்துக் கொள்வோம். இங்கு மக்கள் புரட்சி வெடித்தது.

ரஷ்­யாவில் சார் மன்­ன­னு­டைய (வல்­லா­திக்கம்) அடக்­கு­மு­றைக்கு எதி­ராக உலகப் பொரு­ளா­தார முறை­மையை மாற்­றி­ய­மைப்­ப­தற்­காக முத­லா­ளித்­துவம், ஏகா­தி­பத்­தியம் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து விடு­தலை பெற வேண்­டு­மென்­ப­தற்­காக அந்­நாட்டு மக்கள் மாக்ஸ் கோட்­பாட்டின் அடிப்­ப­டையில் போராடி வெற்­றியும் கண்­டார்கள். மூத்த தலை­வர்­க­ளாக இருப்­ப­வர்கள் அர­சியல் தலை­வர்­க­ளாகக் காணப்­ப­டு­ப­வர்கள் காந்­தியின் உரு­வச்­சி­லைக்கு அஞ்­சலி செலுத்தி வரு­கி­றார்கள். அதே­வேளை, கால்­மாக்ஸின் சிலையை லண்­டனில் பார்த்­த­போது கவலை கொண்டேன். பரா­ம­ரிப்­பற்று காணப்­ப­டு­கி­றது.

ஆயுதப் போரில் வெற்றி கண்­ட­வர்­களும் உள்­ளனர். அகிம்சை முறையில் போராடி உரிமை பெற்­ற­வர்­களும் உள்­ளனர். எங்கள் தேசத்தில் ஜன­நா­யகம் மதிக்­கப்­ப­டாமல் அகிம்சை வழி உதா­சீ­னப்­ப­டுத்­தப்­பட்­டது. 1971 ஆம் ஆண்டு ஆட்­சியைக் கைப்­பற்­று­வ­தற்­காக ஜே.வி.பி. போரா­ளிகள் போரா­டி­னார்கள். அவர்­க­ளுடன் சிறைக்­கூ­டத்தில் ஒன்­றாக வாச­மி­ருந்­துள்ளோம். கலந்­து­ரை­யா­டி­யுள்ளோம்.

இந்த ஜே.வி.பி. யின் புரட்­சிக்குப் பின்­புதான் எமது இளை­ஞர்கள் ஆயு­தத்தைத் தூக்­கி­னார்கள். ஆட்­சி­யா­ளர்­களின் அடக்கு முறைக்கு எதி­ராக, இது ஒரு தவ­றான விட­ய­மு­மல்ல. ஆனால், இன்­றைய காலத்தில் ராஜ­தந்­திரப் போக்­குகள் முக்­கியம் பெற்று நிற்­கின்­றன. அமெ­ரிக்­காவின் மீது ஆகாய விமானத் தாக்­கு­தல்­களை நடத்­தி­யதன் கார­ண­மாக சில நாடுகள் இயக்க அமைப்­புக்­களை உரு­வாக்­கி­யதன் கார­ண­மாக நிலை­மைகள் மாற்றம் கண்­டன. அமெ­ரிக்க குண்டுத் தாக்­கு­தலின் பின் உலகப் போக்­கிலே பல­மாற்­றங்களை உரு­வாக்­கி­னார்கள். பொஸ்­னியாப் பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ராக யுத்­தத்தைப் பிர­க­டனம் செய்­தார்கள். இதன் கார­ண­மாக இலங்­கை­யி­லுள்ள பயங்­க­ர­வா­தத்தை அழிக்க வேண்­டு­மென இலங்கை அர­சாங்கம் உலக நாடு­களைக் கோரி­யதை நினைத்துப் பார்க்­கிறேன். அன்­றைய கால ராஜ­தந்­திரப் போக்­கு­களை நாமும் உணர்ந்து செயற்­பட்­டி­ருக்க வேண்டும்.

2003 க்கு பின்னும் ஆயுதம் ஏந்திப் போரா­டிய விடு­தலைப் புலி­களும் ஜன­நா­யக ரீதி­யாக வளர்ந்­து­வந்த தமிழர் விடு­தலைக் கூட்­டணி, அதன்பின் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஒன்­று­பட்டு புரிந்­து­ணர்­வோடு செயற்­பட்ட கார­ணத்­தி­னால்தான் தமிழ் மக்கள் மத்­தியில் தேச விடு­தலைப் போராட்டம் பலம் வாய்ந்­த­தாக விளங்­கி­யது.

ராஜ­தந்­திர ரீதி­யான போக்­குகள் இன்று பல மாற்­றங்­களைக் கொண்­டி­ருக்­கி­ன்றன. இந்து மகா சமுத்­தி­ரத்து நாடு­க­ளுக்கு மத்­தியில் சீனாவின் செல்­வாக்கு வளர்ச்சி அடை­கி­றது. பொரு­ளா­தார ரீதி­யாக ஆதிக்கம் செலுத்­து­கின்­றார்கள் என்று முத­லா­ளித்­துவ நாடுகள் கவ­னித்துக் கொண்­டி­ருக்­கி­றது. மாக்­ஸிசம், லெனி­னிஸம், சோஷ­லிஸம் என்­பன ஒரு காலத்தில் புரட்­சி­யா­ளர்­களை உரு­வாக்­கி­ய­துதான் ஆட்சி அமைப்­பு­களை மாற்­றி­ய­மைத்­தது தான். ஆனால் இன்றைய ரஷ்யா அந்த மாற்­றத்தின் வழி செல்­கி­றதா என்­பது கேள்வி. சேகு­வரா, பெடல்­காஸ்ரோ இவர்கள் எல்­லோரும் புரட்­சி­யா­ளர்­க­ளாக இருந்து அமெ­ரிக்­காவை எதிர்த்து யுத்தம் செய்­த­வர்கள். ஆனால் இன்­றைய உல­கப்­போக்கு மாறி­விட்­டது.

இலங்­கை­யி­னு­டைய நிகழ்ச்சி நிரலில் யுத்­தத்­துக்குப் பின் தமி­ழர்கள் அழிந்து போன நிலையில் நாங்கள் எல்லாம் இழந்­த­வர்­க­ளாக ஏங்கிப் போயி­ருந்தோம். ஆயிரம் ஆயிரம் உயிர்­களைப் பறி­கொ­டுத்­தி­ருக்­கிறோம். எமக்கு விடு­தலை கிடைக்­காதா? எனக் கதி­க­லங்கிப் போயி­ருந்தோம். அவ்­வே­ளையில் அமெ­ரிக்கா, கனடா, இங்­கி­லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் எமக்கு உதவ முற்­பட்­டன. மாக்­சிஷம் சோஷ­லிசம் என்ற கொள்­கை­க­ளுக்கு அப்பால் முத­லா­ளித்­துவம் என்னும் தத்­துவம் புதிய வடி­வத்தை எடுத்து வரு­வதைக் காணு­கின்றோம். உலக மய­மாக்கல் என்ற புதிய பொரு­ளா­தார வடிவம் இன்று உல­கத்தை ஆண்டு கொண்­டி­ருப்­பதைக் காண்­கிறோம்.

புதிய பொரு­ளா­தா­ரத்தின் அடிப்­ப­டையில் தங்­க­ளது ஆதிக்­கத்தின் கீழ் நாடு­களைக் கொண்டு வந்து வர்த்­தக முனைப்­பிலே ஆயு­தங்­களை விற்­பனை செய்ய முனை­கி­றார்கள். இந்து மகா சமுத்­திரம் இன்று மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த பிராந்­தி­ய­மாக இருக்­கி­றது. திரு­கோ­ண­மலை ஒரு காலத்தில் யுத்த உபா­யங்­க­ளுக்கு முக்­கிய தள­மாகக் கரு­தப்­பட்ட பிர­தே­ச­மாகும்.

இன்று எமக்கு இருக்கும் சர்­வ­தேச, வாய்ப்­புக்கள் சந்­தர்ப்­பங்­களை முறை­யாகப் பயன்­ப­டுத்த வேண்டும். நாங்கள் ஒரு நாடு அல்ல மனித உரிமைப் பேர­வையில் அங்கம் வகிக்கும் உரிமை கொண்­ட­வர்கள் அல்லர். ஒரு அர­சியல் கட்­சிக்கு பேர­வையில் கலந்து கொள்ளும் சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­டு­வ­தில்லை. ஆனால், மேற்­படி மனித உரிமைப் பேர­வையில் 47 நாடுகள் சீனா­வுக்கு எதி­ராக ஒன்று பட்டு நிற்­கின்ற அந்த ராஜ­தந்­திர ஆத­ரவை தமிழ் மக்­களின் நல­னுக்­காக ஒன்று கூடி நிற்­ப­தையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு அர­சியல் கட்­சி­யாக மாத்­தி­ரமே இருக்­கின்ற த.தே.கூ. அமைப்பு மனித உரிமைப் பேர­வைக்கு தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களைக் கொண்டு சென்­றுள்­ள­தென்றால் தந்தை செல்­வாவுக்குப் பின் தமிழ் மக்­க­ளுக்கு தலைமை தாங்கி நிற்கும் இரா. சம்­பந்த­னு­டைய தலை­மையே கார­ண­மாகும். 2011 ஆம் ஆண்டு அமெ­ரிக்க ராஜாங்க அமைச்சு த.தே.கூ. அமைப்பை அழைத்து மூன்று நாட்கள் உரை­யா­டி­யது என்றால் அதற்குக் காரணம் சம்­பந்தனின் ஆளு­மை­யாகும். எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் கட்­சி­களை அழைத்து பேச்­சு­வார்த்தை நடத்­தாத அமெ­ரிக்க ராஜாங்க அமைச்சு த.தே. கூ. அமைப்பை அழைத்து பேசி­யுள்­ளது என்­பதை நாம் ஒவ்­வொ­ரு­வரும் ஆழ­மாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

எங்­களை அடக்கி ஒடுக்கிக் கொண்­டி­ருந்த இலங்கை நாட்­டுக்கு எதி­ராக 47 நாடு­களை ஒன்­றி­ணைத்து அமெ­ரிக்கா இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னத்தைக் கொண்டு வந்­தது.

இதன் தாக்­கந்தான் அண்­மையில் ஐ.நா. வின் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் இலங்­கைக்கு விஜயம் செய்தார். அதனைத் தொடர்ந்து ஐ.நா. வின் சிறு­பான்மை இன விவ­கா­ரங்­களை ஆராயும் நிபுணர் ரீட்டா வருகை தந்­தி­ருந்தார்.

நாங்கள் ஆய­த­பலம் கொண்­ட­வர்­க­ளா­கவும் ஜன­நா­யக சக்தி கொண்­ட­வர்­க­ளா­கவும் இருந்த காலத்­தை­விட தற்­பொ­ழுது நாம் எங்­களை சுதா­க­ரித்துக் கொண்­டி­ருக்­கிறோம். இதன் பலத்­தி­னா­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியை மாற்ற வேண்­டு­மென்ற நோக்கில் வெற்றி கண்டோம். எமக்கு தற்­பொ­ழுது சர்­வ­தே­சத்தின் ஆத­ரவும் இருக்­கி­றது என்ற நம்­பிக்­கையும் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. சீனா­வுக்கு சார்­பாக ராஜபக் ஷவின் அர­சாங்கம் சென்­ற­வே­ளையில் அதற்கு விரோ­த­மாக அமெ­ரிக்கா, இந்­தியா போன்ற நாடுகள் அவ்­வாட்­சியை மாற்ற ஜன­நா­யக வழி­க­ளுக்கு ஊக்­க­ம­ளித்­தன. அவர்கள் புரட்சி செய்­யுங்கள் என்று தூண்­ட­வில்லை. ஜன­நா­யக வழி­களைப் பின்­பற்­றுங்கள் என்று வழி­காட்­டி­னார்கள். அவர்­களின் நோக்­கங்­களைப் புரிந்து கொண்ட தமிழ் மக்கள் அதற்­காக முயன்று ஆட்சி மாற்­றத்தைக் கொண்டு வந்­தார்கள். அவர்­களின் திட­சங்­கற்­பமே ஆட்சி மாற்­றத்தைக் கொண்டு வந்­தது.

சிறி­சே­னவை தேர்ந்­தெ­டுத்த மக்கள் அவர் மீது நம்­பிக்கை கொண்­டார்கள். அவரின் ஆட்­சியின் நன்மை, தீமை பற்றி நான் இங்கு கூற வர­வில்லை. ராஜ­தந்­திர நகர்­வு­களைப் பற்றிக் கூறு­கிறேன். தமிழ் மக்கள் சர்­வ­தே­சத்தின் நோக்­கங்­க­ளையும் ராஜ­தந்­திர நிலைப்­பா­டு­க­ளையும் புரிந்து கொண்டு ஆட்சி மாற்­றத்தை உரு­வாக்­கி­னார்கள்.

இலங்­கையின் நீண்ட வர­லாற்றில் ஜன­நா­யக ரீதி­யாக பின்பு ஆயுத ரீதி­யாக ஒன்று இணைந்து செயற்­பட்ட காலந்தான் பலம் வாய்ந்த கால­மென்று முன்பே கூறி­யி­ருக்­கிறேன். ஆனால், ராஜ­தந்­திர ரீதி­யாக நாம் வெற்­றி­பெறத் தவ­றி­விட்டோம். அதை நான் தோற்­றுப்­போன அர­சியல் என்று கூற விரும்­ப­வில்லை.

வெற்றி பெற­வில்­லை­யென்று தான் கூற விரும்­பு­கின்றேன். அதற்கு கார­ண­மாக அமைந்­த­தற்கு ஒரு கார­ணத்தை சுட்­டிக்­காட்­டலாம். அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி ஜோர்ஜ் புஷ், தங்கள் நாட்டில் வீசப்­பட்ட குண்­டுக்கு எதி­ராக உலகம் முழு­வதும் செய்த பிர­க­ட­னத்தை நாம் கவ­னத்தில் கொள்ள வேண்டும். இன்றும் அந்த நிலைதான் காணப்­ப­டு­கி­றது. சிரி­யாவில் ஒரு யுத்தம் வெடிக்­கு­மானால் இலங்கைத் தமிழர் விவ­காரம் இன்னும் கவ­னத்தில் கொள்­ளாமல் போய்­விடும். ராஜ­தந்­திர சந்­தர்ப்­ப­மென்­பது எப்­பொ­ழுதும் ஒரே போக்குக் கொண்­ட­தல்ல. எனவே தான், நாங்கள் சந்­தர்ப்­பங்­களை உகந்த முறையில் பயன்­ப­டுத்த வேண்டும்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன தான் வெற்றி பெற்­ற­தற்குப் பிறகு என்ன கூறினார். நான் போட்­டி­யி­டு­கிறேன் என்ற விடயம் முன்பே தெரிந்­தி­ருந்தால் எனது உடல் இப்­பொ­ழுது மண்­ணுக்­குள்தான் இருந்­தி­ருக்­கு­மென்று கூறினார். இர­க­சியம் காப்­பது எவ்­வ­ளவு முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது என்­பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்­பொ­ழுதும் ஆபத்து நீங்­கி­ய­தாக கருத முடி­யாது. அவ­ருக்கு நாங்கள் கூற­வில்லை எங்­க­ளுக்­காக கூறு­கிறோம்.

நாங்கள் மந்­திரிப் பத­வி­க­ளுக்­காக ஆட்சி மாற்­றத்தைக் கொண்­டு­வர விரும்­ப­வில்லை. ஏனைய கட்­சிகள் போல் மந்­திரிப் பத­வி­களை விரும்­பி­யி­ருந்தால் எங்­களில் ஏழு எட்டுப் பேர் மந்­தி­ரி­க­ளாக ஆகி­யி­ருக்க முடியும். புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வதில் கால­தா­ம­தங்கள், தடைகள் காணப்­ப­டு­வது ஏதோ வகையில் உண்­மை­யாக இருந்­தாலும் புதிய அர­சியல் அமைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை விரைவில் வர­வி­ருக்­கி­றது என்­பதை நாம் அறிவோம். இன்­றுள்ள உலக சூழலை நாமாக இழந்­து­வி­டக்­கூ­டாது.

இடைக்­கால அறிக்கை வெளி­வ­ரும்­வரை நாம் பொறுமை காக்க வேண்டும். முன்­னைய ராஜ­தந்­திர முயற்­சி­களை இழந்­தது போல இன்­றைய ராஜ­தந்­திர நகர்­வு­களை நாம் இழந்­து­விடக் கூடாது. இன்­றைய அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை இழந்­து­விட்­டோ­மென்று நாங்கள் முடிவு செய்ய வர­வில்லை. சர்­வ­தேச சமூ­கத்­துடன் நாம் நடத்­தி­வ­ரு­கின்ற பேச்­சு­வார்த்­தை­களை முறித்துக் கொள்­வது நியா­ய­மா­னதா என்று சிந்­தித்துப் பார்க்க வேண்டும். தந்தை செல்வா எமக்கு கற்றுத் தந்த பாடம் "நம்­ப­ நட நம்பி நட­வாதே"யென்ற தத்­து­வ­மாகும். 

சர்­வ­தேச சமூ­கத்தின் ஆத­ரவை இழந்­து­விட்டோம் அல்­லது அதை நம்பி ஏமாந்து விட்­டோ­மென்று நினைக்கும் அள­வுக்கு நாம் நடந்து கொள்­ளக்­கூ­டாது. எங்கள் தலைவர் இரா. சம்­பந்தன் தெளி­வாக கூறி­யி­ருக்­கிறார். இலங்கை ஏன் இனப்­பி­ரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வை காண­வில்­லை­யென்று சர்­வ­தேசம் கேட்­கி­றது?. நாங்கள் இனி­மேலும் ஏமாற்­றப்­பட்டால் சர்­வ­தேச சமூ­கத்­த­வ­ரா­கிய நீங்கள் எங்­க­ளுக்கு ஆத­ரவு தர வேண்­டு­மென அவரைச் சந்­திக்கும் ஒவ்­வொரு ராஜ­தந்­தி­ரி­க­ளி­டமும் அவர் சாணக்­கி­ய­மாகக் கூறி வரு­கிறார் என்­பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எங்­க­ளோடு நிற்க வேண்டும் நாங்கள் இனியும் ஆயு­த­மேந்திப் போராட விரும்­ப­வில்­லை­யென்று கூறி வந்­தி­ருக்­கிறார் ஏற்­பட்­டி­ருக்கும் இச்­சந்­தர்ப்­பத்தை முறிக்க வேண்டும்; குலைக்க வேண்­டு­மென்று விரும்­பு­கின்­ற­வர்கள் உண்­மைக்கு மாறான செய்­தி­களைப் பரப்பி வரு­கின்­ற­வர்கள் ஒரு மாற்றுத் திட்­டத்தை முன்­வைக்­கட்டும் அதை ஏற்­றுக்­கொள்­வோ­மென அவர்­க­ளுடன் பேசி­யி­ருக்­கிறோம். அது அவர்­களால் முடி­யாது. எங்­க­ளுக்கு இப்­பொ­ழுது ஏற்­பட்­டி­ருக்கும் ராஜ­தந்­திர சந்­தர்ப்­பத்தை முறை­யாகப் பயன்­ப­டுத்த வேண்­டு­மென்­ப­தாகும். நாம் நினைத்­த­வாக்கில் எல்லாவற்றையும் உடனடியாக மாற்றி அமைத்து விட முடியாது. எங்களுக்கான சந்தர்ப்பங்களை நாங்களாக முறித்துக் கொள்ளக்கூடாது என்பதுதான் எங்கள் வாதமாகும்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட தம்பி பஷீர் சேகுதாவூத் முன்னாள் ஈரோஸ் அமைப்பின் போராளி. அவர் எங்கள் சார்பான கருத்தை முன்வைப்பது மகிழ்ச்சி தரும் விடயமாகும். ஜனாப் அஷ்ரப் கட்சிக்குத் தலைவராக இருந்தபோது நாங்கள் அவருடன் பல தடவைகள் உரையாடியிருக்கிறோம். முஸ்லிம் மக்களுக்கு எதிராக தமிழரும் தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்களும் மாறுவதற்கு மேலாதிக்க சக்திகள், இனவாத சக்திகள் இரு சமூகத்துக்கும் இடையில் பிரிவினை கொண்டுவர முயற்சித்த காலத்தில் தமிழர்களுடைய தாயகம் முஸ்லிம் மக்களுடைய தாயகம் வட கிழக்கு என்பதை நாம் கூறி வந்திருக்கின்றோம். இவ் விடயத்தில் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமான அடிப்படை அரசியல் பிரச்சினையொன்றுதான். தந்தை செல்வா குறிப்பிட்டது போல் முஸ்லிம் மக்களுக்கும் இந்த நாட்டில் உரிமையுண்டு என்பதாகும். எங்களுக்கு அரசியல் உரிமை அங்கீகரிக்கப்படுகிற அதேவேளை, முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமையும் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பது தான் எமது நிலைப்பாடாகும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-01#page-4

  • கருத்துக்கள உறவுகள்

யாருடைய உரை இது, நவீனா?

  • தொடங்கியவர்
32 minutes ago, Nathamuni said:

யாருடைய உரை இது, நவீனா?

  மாவை சேனாதிராசா.

98a5w3.jpg

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

1971 ஆம் ஆண்டு ஆட்­சியைக் கைப்­பற்­று­வ­தற்­காக ஜே.வி.பி. போரா­ளிகள் போரா­டி­னார்கள். அவர்­க­ளுடன் சிறைக்­கூ­டத்தில் ஒன்­றாக வாச­மி­ருந்­துள்ளோம். கலந்­து­ரை­யா­டி­யுள்ளோம்.

விளக்கம் நல்லாய்தான் இருக்கு .....தீர்வு எப்படியிருக்குமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.