Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனை சந்தித்தது ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு

Featured Replies

சம்பந்தனை சந்தித்தது ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு

 
photo%201.jpg

ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் குழு எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர். 

 

நாடாளுமன்றத்திலுள்ள எதிர்கட்சித் தலைவரது அலுவலகத்தில் இன்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

முதலாம் இணைப்பு

ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் குழு எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பினரின் பிரதிநிதிகளை சந்தித்கவுள்ளனர்.

நாடாளுமன்றத்திலுள்ள எதிர்கட்சித் தலைவரது அலுவலகத்தில் இன்றைய தினம் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

நான்கு நாள் உத்தியோகபூர்வ வியத்தை மேற்கொண்டு நேற்று திங்கட்கிழமை ஸ்ரீலங்காவை வந்தடைந்த ஐரோப்பிய நாடாளும்னறப் பிரதிநிதிகள் எதிர்வரும் வியாழக்கிழமை வரை ஸ்ரீலங்காவில் தங்கியிருக்கவுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளை அவர்கள் சந்திக்கவுள்ளனர்.

இதேவேளை திருகோணமலை மற்றும் ம்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கும் அவர்கள் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள சிவில், அரச பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளனர்.

அதுமட்டுமன்றி மீள்குடியேறியுள்ள மக்களையும் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கு ஜேன் லெம்பர்ட் தலைமை வகிக்கின்றார். நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை நிலவரங்களை மறுபரிசீலனை செய்வதற்காக இந்தக் குழு ஸ்ரீலங்காவிற்கு வந்துள்ளது.

 

இதற்குப் புறம்பாக ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு ஸ்ரீலங்காவில் காணப்படுகின்ற சூழல் தொடர்பாகவும் அவர்கள் அவதானிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

http://ibctamil.com/news/index/32632

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில எல்லாம் நல்லாய் நடக்கின்றது நீங்கள் ஜி.பி.எஸ் வரிச்சலுகை மீள வழங்குங்கள் என்று சொல்லுவாரக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, putthan said:

நாட்டில எல்லாம் நல்லாய் நடக்கின்றது நீங்கள் ஜி.பி.எஸ் வரிச்சலுகை மீள வழங்குங்கள் என்று சொல்லுவாரக்கும்

அதைவிட முக்கியம்

புலிகள் மீதான தடையை எடுக்காதீர்கள்....

  • தொடங்கியவர்

கூர்ந்து அவதானியுங்கள் : ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழுவிடம் த.தே.கூ. கோரிக்கை

 

IMG_0329.jpg

(ஆர்.ராம்)

அரசாங்கத்தினால் சர்வதேசத்திற்கும் எமக்கும் வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் சரியான முறையில் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை கூர்ந்து அவதானிக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழுவிடம் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை சரியான பாதையில் பயணிக்கின்றதா என்பதை அவதானிப்பதற்கு  தொடர்ச்சியான மீளாய்வுக்கு உட்படுத்தும் பொறிமுறையொன்றை தயாரிக்கப்பட வேண்டும் எனவும் பிரதான எதிர்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. IMG_0331.jpg

இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத் தூதுக்குழுவினருக்கும் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழுவின் தெற்காசிய நாடுகளுடனான உறவுகளுக்கான தலைவர் ஜேன் லெம்பர்ட் தலைமையில் சஜ்ஜாட் கரிம், தோமஸ் மென், உலரிக் முல்லர் ஆகியோர் தலைமையிலான குழுவினரும் எதிர்க்கட்சித்தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.  

அரை மணிநேரத்திற்கும் அதிகமாக நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்துவெளியிடுகையில்,

இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அவை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை நாம் அவர்களிடத்தில் வலியுறுத்தினோம். IMG_0344.jpg

மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நல்லிணக்கச்செயற்பாடுகள், புதிய அரசியலமைப்புத் திருத்தம் எனப் பல்வேறு வாக்குறுதிகள் எமக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்தகைய  வாக்குறுதிகள் சரியான முறையில் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை சர்வதேச சமூகம் கூர்ந்து அவதானிக்க வேண்டும். 

இலங்கை புதிய திசையொன்றை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது என்பதை ஏற்கின்றோம். எனினும், இது எந்தளவு தூரம் சரியாக செல்கிறது என்பதை முழுமையாக ஆராய்ந்து மாற்றங்களைச் செய்ய வேண்டும். 

http://www.virakesari.lk/article/13017

  • கருத்துக்கள உறவுகள்

IMG_0331.jpg

கவனம்........ பின்னாலை நிக்கிறவரின்ரை, பல்லு கீழை விழப் போகுது.

  • தொடங்கியவர்

அரசாங்கம் சர்வதேச சமூகத்தினருக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

 

 

(ஆர்.யசி)

இலங்கைக்கு ஜி. எஸ்.பி வரிச்சலுகையை வழங்க  முன்னதாக இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தினருக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

TNA-455g55-e1418338874513.jpg

நாட்டில் நல்லிணக்க பொறிமுறைகளை நிலைநாட்டுவது, மனித உரிமைகள், மீள் நல்லிணக்கம் மற்றும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவது தொடர்பில் அரசாங்கம் கொடுத்த   வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பது குறித்து சரியாக அவதானிக்க வேண்டும் என  இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய  பாராளுமன்ற தூதுக்குழுவினரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.  

 

ஜி. எஸ்.பி வரிச்சலுகையை  இலங்கைக்கு மீண்டும் வழங்குவதை நாம் வரவேற்கின்றோம் எனவும் கூட்டமைப்பு  தெரிவித்துள்ளது. 

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ  விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவினர்  ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பிரதான தரப்புகளை சந்திக்கவில்ல நிலையில் இன்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்தனர். 

ஜேன் லம்பர்ட் தலைமையிலான நால்வர் அடங்கிய இத்தூதுக்குழு வினருக்கும் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான  விசேட சந்திப்பு  இன்று  காலை பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்றது.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

http://www.virakesari.lk/article/13015

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு  அதிகம் கடுப்பேத்துவதே

இவர்கள் இருவர் மட்டுமே எங்கும் தனியே செல்வது.

ஏதோ நடக்குது என்பது மட்டும் தெரியுது

அது தமிழருக்கு நல்லதல்ல என்பதும்

மார்களியில் தமிழர் தலையில் மிளகாய் அரைக்கப்படும் என்பதும் மட்டும் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பஜ்ஜி ..போண்டா ...சாப்பாடு ..வேண்டுமென்றால் எல்லோரும் அவுங்க உழைத்து சம்பாத்தித்த கை காசில் சாப்பிடவேண்டும்..:cool:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது

இந்த சர்வதேச சமுகத்தில் சீனா,ரஸ்யா போன்ற நாடுகள் உள்ளடக்கமோ?.....நாளைக்கே மகிந்தா சார்பு ஆட்சிக்கு வந்தால் எல்லாம் தலைகீழ்....

அதுசரி எங்கன்ட பக்கத்து வீட்டு அண்ணரையும் ஒவ்வொரு தடவையும் கூப்பிட்டு சொல்லுங்கோ இல்லையென்றால் அவையளுக்கு கோபம் வரும்.....நோர்வேயுடன் மட்டும் பேச்சுவார்த்தை நட்த்தியபடியால்தான் முதல் அவையளுக்கு கோபம் வந்ததாம் என்று கதையடிபடுது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.