Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

இங்கிலாந்து ஸ்பின்னர்களின் ‘தரத்தை’ விமர்சித்த பார்த்திவ் படேல் ஜோ ரூட்டிடம் ஆட்டமிழந்த முரண்

 

 
பார்த்திவ் படேல் ஜோ ரூட் பந்தில் பேர்ஸ்டோவிடம் கொடுத்த கேட்ச். | படம்: ராய்ட்டர்ஸ்.
பார்த்திவ் படேல் ஜோ ரூட் பந்தில் பேர்ஸ்டோவிடம் கொடுத்த கேட்ச். | படம்: ராய்ட்டர்ஸ்.
 
 

மும்பை டெஸ்ட் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் நேற்று பார்த்திவ் படேல் இங்கிலாந்து ஸ்பின்னர்களின் திறமை குறைவை விமர்சித்தார். ஆனால் இன்று பகுதி நேர பவுலர் ஜோ ரூட்டிடம் ஆட்டமிழந்துள்ளார்.

“பிட்சை விட பந்துவீச்சின் தரம் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்றே கூறுவேன், இங்கிலாந்து ஸ்பின்னர்களை நம் ஸ்பின்னர்கள் பந்துகளை அதிகம் சுழலச்செய்து திருப்புகின்றனர்.

நமது பவுலர்கள் பிட்ச் உதவுவதற்காக காத்திருப்பதில்லை, காற்றில் பந்தை தூக்கி வீசுவதிலேயே இங்கிலாந்து பேட்ஸ்மென்களின் கணிப்பை ஏமாற்றிவிடுகின்றனர். நிச்சயமாக நம் ஸ்பின்னர்கள் தரத்திற்கும் அவர்கள் ஸ்பின்னர்கள் தரத்திற்கும் பெரிய வேறுபாடு உள்ளது. மொஹாலியில் அவர்கள் ஸ்பின் பவுலிங்கின் தரம் அம்பலப்படுத்தப்பட்டது. நாங்கள் அவர்கள் ஸ்பின்னர்களை இறங்கி வந்து ஆடவோ, தூக்கி அடிக்கவோ தேவையில்லை, நிச்சயம் ஒரு மோசமான பந்து வரும் என்று உறுதியாக இருக்கலாம்” என்றார்.

இன்று மும்பை டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள், இதில் கோலி தவிர மற்றவர்களின் பேட்டிங் இங்கிலாந்து ஸ்பின்னர்களால் கேள்விக்குட்படுத்தப்பட்டது.

குறிப்பாக இங்கிலாந்து ஸ்பின்னர்களை திறமை குறைவானவர்கள் என்று விமர்சித்த பார்த்திவ் படேல் 1 பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் அவர் வகைப்படுத்திய ‘திறமை குறைவான’ மொயின் அலி, அடில் ரஷீத்திடம் ஆட்டமிழந்திருந்தால் கூட பரவாயில்லை எனலாம், ஆனால் ஜோ ரூட் என்ற பகுதி நேர பவுலரின் பந்தில் ஆட்டமிழந்தார் பார்த்திவ் படேல்.

நன்றாக தூக்கி வீசப்பட்ட ரூட்டின் பந்து படேலை முன்னால் வந்து ஆட அழைத்தது, வந்து ஆடினார் பந்து திரும்பி எழும்பியது, எட்ஜ் எடுத்தது, மார்புயர கேட்சை பேர்ஸ்டோ பிடித்துப் போட்டார். நுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கேற்ப அமைந்தது பார்த்திவ் படேல் பேச்சும் அவர் ஆட்டமிழந்ததும்.

இதோடு மட்டுமல்லாமல் ஜோ ரூட், ஆல்ரவுண்டர் அஸ்வினையும் டக் அவுட் ஆக்கினார். கடைசியாக ஜடேஜாவும் 25 ரன்களில் ஆட்டமிழக்க கோலி ஒருமுனையில் சுவராக நின்று 96 ரன்களில் ஆடி வருகிறார், இந்தியா 364/7.

http://tamil.thehindu.com/sports/இங்கிலாந்து-ஸ்பின்னர்களின்-தரத்தை-விமர்சித்த-பார்த்திவ்-படேல்-ஜோ-ரூட்டிடம்-ஆட்டமிழந்த-முரண்/article9421631.ece?homepage=true

  • Replies 157
  • Views 8.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கோலி சதம் விளாசல் : வலுவான நிலையில் இந்தியா

 

23665_17498.jpg

இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது.  முதலில் ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 451 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோலி 147, ஜெயந்த் யாதவ் 30 ரன்களுடன் களத்தில் உள்ளனர். சிறப்பாக விளையாடிய முரளி விஜய் 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணியில் மொய்ன் அலி, ரஷித் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.  இங்கிலாந்து அணியை விட, இந்திய அணி 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

  • தொடங்கியவர்

அதிக அளவில் நெருக்கடி இருந்தது: 136 ரன் குவித்த முரளி விஜய் கூறுகிறார்

 

 
 

மீண்டும் திறமையை வெளிப்படுத்த மிகப்பெரிய நெருக்கடி இருந்தது என்று மும்பை மைதானத்தில் 136 ரன்கள் குவித்த முரளி விஜய் கூறியுள்ளார்.

 
 
 
 
அதிக அளவில் நெருக்கடி இருந்தது: 136 ரன் குவித்த முரளி விஜய் கூறுகிறார்
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து அணியை 400 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது இந்தியா. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 451 ரன்கள் குவித்துள்ளது.

இதற்கு தொடக்க வீரரான முரளி விஜய்யும் முக்கிய காரணமாக இருந்தார். அவர் 136 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோருக்கு முதுகெலும்பாக இருந்தார்.

இந்த தொடர் தொடங்கும்போது ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் சதம் (126) அடித்தார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 20 ரன்னும், 2-வது இன்னிங்சில் 3 ரன்னும் எடுத்தார். மொகாலியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 12 ரன் எடுத்தார். இரண்டாம் இன்னிங்சில் ரன் எடுக்கவில்லை.

கடைசி இரண்டு போட்டியிலும் வேகப்பந்தின் ஷாட்பிட்ச் பவுன்சரில்தான் அவுட்ஆனார். இதனால் ஷாட்பிட்ச் பந்தை எதிர்கொள்ள முரளி விஜய் திணறுகிறார் என்ற விமர்சனம் எழுந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று சதம் அடித்து அசத்தியுள்ளார். இதுகுறித்து முரளி விஜய் கூறுகையில் ‘‘என்னுடைய திறமையை மீண்டும் வெளிப்படுத்தி சதம் அடிக்க நெருக்கடி இருந்தது. நெருக்கடிக்கு மத்தியில் சதம் அடித்தது முக்கியத்துவம் வாய்ந்தது. நேற்றைய ஆட்டம் முடிந்த பின் என்னுடைய அடிப்படை திறமைகள் மூலம் பயிற்சியில் ஈடுபட்டேன். அதனால் இன்று வலிமையுடன் திரும்பி வந்தேன்.

நான் ஷாட்பிட்ச் பந்தில் ஆட்டம் இழக்கிறேன் என்ற பேச்சு அதிக அளவில் இருந்தது. நான் உறுதியுடன், என்னுடைய மனநிலையை எளிமையாக வைத்துக் கொண்டு மும்பை டெஸ்டில் களம் இறங்கினேன். அடிப்படை விசயம் என்னவென்றால் ஷாட்பிட்ச் பந்தில் அவுட்டானதைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை.

எங்களுக்குள்ளாகவே நாங்கள் உத்வேகம் அடைந்தோம். அந்த வகையில் விராட் கோலி தனது ஆட்டத்தை சிறந்த வகையில் தொடங்கினார். அதேபோல் மாலையில் சிறந்த வகையில் ஆட்டத்தை முடித்தார்.

ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது. இதனால் நம்முடைய பந்து வீச்சாளர்கள் சிறந்த முறையில் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. புஜாரா மற்றும் விராட் கோலியுடன் இணைந்து பேட்டிங் செய்ய சிறப்பாக இருந்தது’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/10200304/1055514/It-was-huge-again-I-backed-my-ability-Murali-Vijay.vpf

  • தொடங்கியவர்

விராட் கோலி அபாரம்: 3-வது இரட்டைசதம்; ஜெயந்த் யாதவ்வுடன் இரட்டை சதக்கூட்டணி

 

 
 
கோலி. | படம்: ஏ.எஃப்.பி.
கோலி. | படம்: ஏ.எஃப்.பி.
 
 

மும்பை டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடிவரும் விராட் கோலி 4-ம் நாளான இன்று இரட்டை சதம் அடித்தார்.

இந்த ஆண்டின் 3-வது இரட்டைச் சதமாகும் இது. மே.இ.தீவுகள், நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்குப் பிறகு தற்போது இங்கிலாந்துக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்துள்ளார் விராட் கோலி. கேப்டனாக 3-வது இரட்டைச் சதம்.

இன்று காலை 451/7 என்று தொடங்கிய விராட் கோலி, ஜெயந்த் யாதவ் ஆகியோர் இங்கிலாந்து கேப்டனின் தளர்வான களவியூகம், தவறான பந்து வீச்சு மாற்றம் ஆகியவற்றினால் விரைவு ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

ஜெயந்த் யாதவ் ஆஃப் திசையில் அருமையான பவுண்டரிகளை அடித்தார். 84 ரன்களில் அவர் 12 பவுண்டரிகளை அடித்துள்ளார்.

விராட் கோலி 302 பந்துகளில் 200 ரன்களை 23 பவுண்டரிகளுடன் எடுத்துள்ளார், ஸ்ட்ரைக் ரேட் 66%. இன்று வந்தவுடனேயே பால் வீசிய பந்தை மிக அழகாக மிட் ஆனில் பவுண்டரி அடித்து 150 ரன்களைக் கடந்தார். பிறகு இங்கிலாந்து பந்து வீச்சு சரியாக அமையவில்லை. லெக் திசையில் கோலியின் பேடில் வீசி பவுண்டரிகளை வழங்கினர். முதல் ஒரு மணி நேரத்தில் இருவரும் இணைந்து 78 ரன்களை குவித்தனர்.

தற்போது விராட் கோலி, ஜெயந்த் யாதவ் இணைந்து 8-வது விக்கெட்டுக்காக 200 ரன்கள் சேர்த்துள்ளனர், இதுவும் ஒரு இந்திய சாதனையாக இருக்க வாய்ப்புண்டு.

தற்போது கோலி 203 ரன்களுடனும் ஜெயந்த் யாதவ் 90 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 567 ரன்கள்.

இங்கிலாந்தைக் காட்டிலும் இந்தியா 167 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்தின் எதிர்மறை அணுகுமுறைக்கு இன்று தகுந்த பாடம் கற்பித்தார் விராட் கோலி.

http://tamil.thehindu.com/sports/விராட்-கோலி-அபாரம்-3வது-இரட்டைசதம்-ஜெயந்த்-யாதவ்வுடன்-இரட்டை-சதக்கூட்டணி/article9422113.ece?homepage=true

  • தொடங்கியவர்

இந்தியாவின் முதல் நம்பர் 9 வீரர் சதமடித்தார்: ஜெயந்த் யாதவ் அபார சாதனை

 

 
 
சாதனை சதம் கண்ட ஜெயந்த் யாதவ் ஷாட் ஆடும் காட்சி. | படம்: ஏஎஃப்பி.
சாதனை சதம் கண்ட ஜெயந்த் யாதவ் ஷாட் ஆடும் காட்சி. | படம்: ஏஎஃப்பி.
 
 

மும்பை டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் புதிய ஆல்ரவுண்டராக ஆஃப் ஸ்பின்னர் ஜெயந்த் யாதவ் எழுச்சிபெற்றுள்ளார். ஜெயந்த் யாதவ் 9-ம் நிலை வீரராக சதம் கண்ட முதல் இந்திய வீரரானார்.

கடினமான 364/7 என்ற நிலையில் களமிறங்கிய ஜெயந்த் யாதவ்வுக்கு ஜோ ரூட் கேட்ச் ஒன்றை தொடக்கத்திலேயே விட்டார், ஆனால் அதன் பிறகு இங்கிலாந்தின் வேகம், ஸ்பின் என்று அனைத்து சோதனைகளையும் கடினமான பிட்சில் தனது அபாரமான தடுப்பாட்டத்தினால் எதிர்கொண்டு மீண்டு பிறகு அபாரமான பவுண்டரிகளையும் அடித்த ஜெயந்த் யாதவ் சற்று முன் வோக்ஸ் பந்தை தேர்ட் மேன் திசையில் தட்டிவிட்டு சதம் கண்டார்.

204 பந்துகளைச் சந்தித்த ஜெயந்த் யாதவ் 15 அருமையான பவுண்ட்கரிகளை அடித்து 104 ரன்கள் எடுத்து ரஷீத் பந்தில் ஸ்டம்ப்டு ஆனார்.

இதன் மூலம் 9-ம் நிலை இந்திய வீரர் ஒருவர் சதம் கண்ட பெருமையை எட்டினார் ஜெயந்த் யாதவ். கோலியும் இவரும் இணைந்து 58.4 ஓவர்களில் 8-வது விக்கெட்டுக்காக 249 ரன்களைச் சேர்த்துள்ளனர், இதில் ஜெயந்த் யாதவ் பங்களிப்பு 104. வெற்றிக்கான இன்னிங்ஸ் இது என்பதில் சந்தேகமில்லை.

விராட் கோலி தனது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரை எட்டி 225 ரன்களுடன் ஆடி வருகிறார். இதன் மூலம் கேப்டனாக தோனி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்த அதிகபட்ச 224 ரன்களைக் கடந்தார் கோலி. புவனேஷ்வர் குமார் இறங்கியுள்ளார். இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 611 ரன்கள் எடுத்து 211 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

http://tamil.thehindu.com/sports/இந்தியாவின்-முதல்-நம்பர்-9-வீரர்-சதமடித்தார்-ஜெயந்த்-யாதவ்-அபார-சாதனை/article9422206.ece?homepage=true

  • தொடங்கியவர்

இந்தியா-இங்கி., டெஸ்ட்: 631 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்... கோலி சாதனை..!

 

v_1_600_13485.jpg

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது நாள் ஆட்டம் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இங்கிலாந்து அணி 400 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 631 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் விளாசினார். இந்த போட்டியில் ஒன்பதாவதாக களம் இறங்கிய ஜெயந்த் யாதவும் சதம் விளாசினார்.

கோலி 235 ரன்கள் எடுத்தபோது ஓக்ஸ்சின் பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 224 ரன்களை கடந்த போது டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்த இந்திய கேப்டன் என்ற சாதனையை புரிந்தார். இதற்கு முன் தோனி சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 224 எடுத்ததே இந்திய கேப்டனால் எடுக்கப்பட்ட அதிக ரன்னாக இருந்தது. அந்த சாதனையை தற்போது கோலி முறியடித்துள்ளார். இந்த ஆண்டில் இதுவரை கோலி மூன்று இரட்டை சதம் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இந்திய அணி 231 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
 

http://www.vikatan.com/news/sports/74660-india-all-out-at-631kohli-becomes-the-highest-scoring-test-captain.art

  • தொடங்கியவர்

4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 182-6 என திணறல்

 

cric_%286%29_17370.jpg

4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 182-6 என 2-வது இன்னிங்ஸை தொடர்கிறது. இந்தியாவை விட 49 ரன்கள் பின்தங்கியுள்ளது அந்த அணி. ஜடேஜா, அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார், ஜெயந்த் யாதவ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ரூட் 77 ரன்களில் ஆட்டமிழக்க, பேர்ஸ்டோ 50 ரன்களுடன் களத்தில் உள்ளார். முதல் 3 விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து இழந்த இங்கிலாந்து பின் நிதானித்து விளையாடியது. இறுதியில் மீண்டும் சொதப்பலாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது அந்த அணி.

http://www.vikatan.com/news/sports/74674-day-4-stumps-england-scores-182-6-in-2nd-innings.art

  • தொடங்கியவர்

மும்பை டெஸ்ட்: இங்கிலாந்து 182/6; வெற்றி முனைப்பில் இந்தியா

 

மும்பை டெஸ்டின் 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 182 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்து இக்கட்டான நிலையில் உள்ளது.

 
 
மும்பை டெஸ்ட்: இங்கிலாந்து 182/6; வெற்றி முனைப்பில் இந்தியா
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 400 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 451 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 147 ரன்னுடனும், ஜயந்த் யாதவ் 30 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. விராட் கோலியும், ஜயந்த் யாதவும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். ஜயந்த் யாதவ் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். இருவரின் ஆட்டத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 631 ரன்கள் குவித்தது. விராட் கோலி 235 ரன்னும், ஜயந்த் யாதவ் 104 ரன்னும் குவித்தனர். ஏற்கனவே முரளி விஜய் 136 ரன்கள் குவித்திருந்தார்.

அடுத்து 231 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் சதம் அடித்த ஜென்னிங்ஸ் இந்த இன்னிங்சில் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார். இவர் புவனேஸ்வர்குமார் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து குக் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் களம் இறங்கியது முதலே அதிரடியாக விளையாடினார். குக் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மொயீன் அணி ரன்ஏதும் எடுக்காமல் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார்.

4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். மொயீன் அலி அவுட்டாகும்போது இங்கிலாந்து 49 ரன்கள் எடுத்திருந்தது. அதிரடியாக விளையாடிய ஜோ ரூட் 75 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி இந்திய பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு அதிரடியாக விளையாடினார்கள்.

இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 141 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. 77 ரன்கள் எடுத்திருந்த ஜோ ரூட் ஜயந்த் யாதவ் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அடுத்து வந்த பென் ஸ்டோக் 18 ரன்னில் அவுட் ஆனார். ஆனால் பேர்ஸ்டோவ் மறுமுனையில் அரைசதம் அடித்தார்.
 
5975129E-FEEC-459B-A099-09F96BE6AD2C_L_s


அஸ்வின் வீசிய கடைசி ஓவரில் ஜேக் பால் அவுட்டாக இங்கிலாந்து அணி 47.3 ஓவரில் 182 ரன்கள் எடுத்திருக்கும்போது 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

பேர்ஸ்டோவ் 50 ரன்னுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி சார்பில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் ஜயந்த் யாதவ், புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளனர்.
 
92E8279B-C915-450E-B222-326AA880D96D_L_s


தற்போது வரை இங்கிலாந்து அணி 49 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் நான்கு விக்கெட்டுக்கள் உள்ளது. பேர்ஸ்டோவ் 50 ரன்னுடன் களத்தில் உள்ளார். இன்னும் படலர் உள்ளார். இந்த இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் குவித்தால் மட்டும் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. கடைசி நாளில் 100 ரன்களுக்கு மேற்பட்ட ஸ்கோலை சேசிங் செய்வது கடினமானதாகும். அப்படி 100 ரன்களுக்கு மேல் இந்தியாவிற்கு இலக்கு நிர்ணயித்தால் போட்டி பரபரப்பானதாகிவிடும்.

அதேசமயத்தில் பேர்ஸ்டோவ் அல்லது பட்லர் ஆகியோரில் ஒருவரை நாளை காலை உடனடியாக வீழ்த்திவிட்டால் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது. எப்படி பார்த்தாலும் இந்த டெஸ்டில் இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2016/12/11170021/1055617/Mumbai-Test-England-182-for-six-India-Move-to-Win.vpf

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பரபரப்பு ஆட்டம் இது.

நவீனன் உங்கள் தயவில் எல்லா போட்டிகளையும் நேரலையில் பாக்கிறேன்.நன்றி.

  • தொடங்கியவர்

அஸ்வின் அபாரம்: தொடரை கைப்பற்றியது இந்தியா

cric_600_10555.jpg

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டை 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது இந்தியா. கோலி இரட்டை சதம், இரண்டு இன்னிங்ஸிலும் அஸ்வின் 6 விக்கெட் என இங்கிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கோலி தலைமையில் இந்தியா ஒரு தொடரையும் இழக்கவில்லை என்ற சாதனை தொடர்கிறது. கடைசி டெஸ்ட் சென்னையில் 16ம் தேதி துவங்குகிறது.

http://www.vikatan.com/news/sports/74701-india-wins-4th-test-against-england-by-an-innings-and-36-runs.art

  • தொடங்கியவர்

அஸ்வின் சுழலில் 12 விக்கெட்டுகள்: இங்கிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்தியா

 

 
அஸ்வின் | படம்: தீபக்
அஸ்வின் | படம்: தீபக்
 
 

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்டில் அஸ்வின் தன் அபார சுழற்பந்துவீச்சால் 12 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இப்போட்டியில் இந்தியா ஓர் இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட் இந்தத் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது.

மும்பை போட்டியின் அற்புத ஆட்டம் மூலமாக, ஒரே ஆண்டில் மூன்று முறை இரட்டை சதங்கள் அடித்த 5-வது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.

சுருண்டது இங்கிலாந்து

கைவசம் 4 விக்கெட்கள் இருக்க 49 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி திங்கள்கிழமை கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

இங்கிலாந்து அணி வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து எஞ்சிய 6 விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது. அஸ்வினின் அற்புதமான சுழற்பந்துவீச்சில் அந்த அணி சிக்கி சின்னாபின்னமானது.

ஸ்ட்ரோக் 18 ரன்கள் எடுத்த நிலையில், அஸ்வின் பந்துவீச்சில் முரளி விஜயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பால் இரண்டே ரன்கள் எடுத்த நிலையில், அஸ்வின் பந்துவீச்சில் பார்த்தீவ் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

நிதானமாக விளையாடி வந்த பார்ஸ்டோ 51 ரன்கள் சேர்த்தார். அவரும் அஸ்வின் பந்துவிச்சில் இலக்காகி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். வோக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் அஸ்வின் பந்துவீச்சில் பவுல்ட் ஆனார். ரஷீத்தும் ஆண்டர்சனும் தலா இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வினிடம் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், 55.3 ஓவர்களில் 195 ரன்களை மட்டுமே எடுத்து இங்கிலாந்து அணி படுதோல்வியைத் தழுவியது.

இந்தியா ஓர் இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இப்போட்டியில் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

முந்தையச் செய்திப் பதிவுகள்:

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வந்த இந்தப் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 631 ரன்கள் குவித்தது. கேப்டன் விராட் கோலி 235 ரன்களும், ஜெயந்த் யாதவ் 104 ரன்களும் விளாசினர். இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.

முன்னதாக, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 142 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 451 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 136 ரன்கள் எடுத்தார்.

கோலி சாதனை

கேப்டன் விராட் கோலி 147, ஜெயந்த் யாதவ் 30 ரன்களுடன் நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். கோலி 302 பந்துகளில், 23 பவுண்டரிகளுடன் தனது 3-வது இரட்டை சதத்தை அடித்தார். இதன் மூலம் ஒரே ஆண்டில் மூன்று முறை இரட்டை சதங்கள் அடித்த 5-வது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.

மைக்கேல் கிளார்க், பிரண்டன் மெக்கலம், ரிக்கி பாண்டிங், பிராட்மேன் ஆகியோரும் இந்தச் சாதனையை படைத்துள்ளனர். இவர்களில் கிளார்க் 4 முறை இரட்டை சதம் அடித்துள்ளார்.

கோலி கடந்த ஜூலை மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 200 ரன்களும், அக்டோபர் மாதம் நியூஸிலாந்துக்கு எதிராக 211 ரன் களும் விளாசியிருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது. கோலிக்கு உறுதுணை யாக விளையாடிய ஜெயந்த் யாதவ் 196 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் தனது முதல் சதத்தை அடித்தார்.

இதன் மூலம் அவர் 9-ம் நிலையில் களமிறங்கி சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். இந்த ஜோடியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 176-வது ஓவரில் 600 ரன்களை எட்டியது. ஜெயந்த் யாதவ் 104 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டெம்பிங் ஆனார்.

கோலியுடன் இணைந்து ஜெயந்த் யாதவ் 8-வது விக்கெட்டுக்கு 241 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தார். சிறிது நேரத்தில் கோலி, வோக்ஸ் பந்தில் ஆண்டர்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கோலி 340 பந்துகளில், 25 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 235 ரன்கள் எடுத்தார்.

இதன்பின்னர் வந்த புவனேஷ்வர் குமார் 9 ரன்களில் நடையை கட்ட இந்திய அணி 182.3 ஓவர்களில் 631 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. உமேஷ் யாதவ் 7 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் அடில் ரஷித் 4 விக்கெட்கள் கைப்பற்றினார்.

231 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 47.3 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. பேர் ஸ்டோவ் 50 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார். ஜென்னிங்ஸ் 0, அலாஸ்டர் குக் 18 ரன், மொயின் அலி 0, ஜோ ரூட் 77, பென் ஸ்டோக்ஸ் 18, ஜேக் பால் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அப்போது, இந்திய அணி தரப்பில் ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் ஜெயந்த் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/அஸ்வின்-சுழலில்-12-விக்கெட்டுகள்-இங்கிலாந்துக்கு-எதிரான-தொடரை-கைப்பற்றியது-இந்தியா/article9423306.ece?homepage=true

  • தொடங்கியவர்

பேசும் படம்: அஸ்வின், கோலியின் கொண்டாட்ட தருணங்கள்

 
aswin_3102826f.jpg
 
 
 

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்டில் அஸ்வின் தன் அபார சுழற்பந்துவீச்சால் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியில் இந்தியா ஓர் இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. | விரிவான செய்தி > அஸ்வின் சுழலில் 12 விக்கெட்டுகள்: இங்கிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்தியா

கே.ஆர். தீபக் கேரமாவில் பதிவான அஸ்வின், கோலி உள்ளிட்ட இந்திய அணி வீரர்களின் வெற்றிக் கொண்டாட்ட தருணங்கள்:

001_3102827a.jpg

002_3102828a.jpg

003_3102829a.jpg

004_3102830a.jpg

005_3102831a.jpg

006_3102832a.jpg

007_3102833a.jpg

 
 

http://tamil.thehindu.com/sports/பேசும்-படம்-அஸ்வின்-கோலியின்-கொண்டாட்ட-தருணங்கள்/article9423501.ece?homepage=true

  • தொடங்கியவர்

கோலியை குறைகூற வேண்டாம்; தோல்வியை ஏற்றுக் கொள்க: ஆண்டர்சன்-அஸ்வின் வாக்குவாதம்

 

 
விரா கோலி பற்றிய ஆண்டர்சன் விமர்சனத்தை அடுத்து அஸ்வின், ஆண்டர்சன் வாக்குவாதம். | படம்: கே.ஆர்.தீபக்.
விரா கோலி பற்றிய ஆண்டர்சன் விமர்சனத்தை அடுத்து அஸ்வின், ஆண்டர்சன் வாக்குவாதம். | படம்: கே.ஆர்.தீபக்.
 
 

கோலி பேட்டிங் பற்றி இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் மும்பை டெஸ்ட் போட்டியின் போது குறைகூறியிருந்தார். இதனையடுத்து மறுநாள் கடைசி தின ஆட்டத்தில் அஸ்வினுக்கும் ஆண்டர்சனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதாவது விராட் கோலி பற்றி கூறிய கருத்து தேவையற்றது என்று அஸ்வின் ஆண்டர்சனிடம் கூறியதாக தெரிகிறது, ஆண்டர்சன் களமிறங்கியது முதல்அஸ்வின் அவரிடம் ஏதோ தீவிரமாக பேசினார், வாக்குவாதமும் தீவிரமடைந்தது.

இதனையடுத்து கேப்டன் கோலி நடுவர் எராஸ்மஸ் ஆகியோர் தலையிட்டு சமரசம் செய்து வைத்தனர்.

இந்தச் சம்பவம் பற்றி விராட் கோலி கூறும்போது, “ஜேம்ஸ் ஆண்டர்சன் களமிறங்கிய போது சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. முதல்முறையாக நான் சமாதானம் செய்யும் பங்காற்றினேன்.

ஆண்டர்சன் முதல்நாளன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய கருத்து அஸ்வினுக்கு பிடித்தமானதாக இல்லை. எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது. மைதானத்தில்தான் அஸ்வின் அதை என்னிடம் தெரிவித்தார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, நான் அதை நினைத்துச் சிரித்தேன்.

அஸ்வின், ஆண்டர்சன் கருத்தினை ஏற்கவில்லை, அவர் எந்த ஒரு கடுமையான வார்த்தைகளையும் பேசாமல் ஆண்டர்சனுக்கு தனது ஏமாற்றத்தைத் தெரியப்படுத்தியதாகவே நான் கருதுகிறேன். மேலும் தோல்வியைத் தோல்வியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது போன்ற விஷயங்களை அஸ்வின் அவரிடம் கூறியிருக்கலாம் என்று தெரிகிறது.

பிற்பாடு ஜேம்ஸ் ஆண்டர்சனிடம், இதெல்லாம் நிகழவே செய்யும், நாம் இதனை பெரிது படுத்தக் கூடாது என்றேன்” என்று கோலி விளக்கம் அளித்தார்.

கோலியின் பேட்டிங் கோளாறுகளை இந்திய பிட்ச்கள் மறைத்து விடுகின்றன என்றும் இங்கிலாந்தில் அவர் மலிவாக ஆட்டமிழந்ததிலிருந்து கோலியின் பேட்டிங் மாறியிருப்பதாக தான் உணரவில்லை என்றும் ஆண்டர்சன் தெரிவித்திருந்தார்.

http://tamil.thehindu.com/sports/கோலியை-குறைகூற-வேண்டாம்-தோல்வியை-ஏற்றுக்-கொள்க-ஆண்டர்சன்அஸ்வின்-வாக்குவாதம்/article9424696.ece?homepage=true

  • தொடங்கியவர்

டெஸ்ட் போட்டி: இந்தியா - இங்கிலாந்து அணி வீரர்கள் சென்னை வருகை

 
 
 

சென்னையில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து மற்றும் இந்திய அணி வீரர்கள் நேற்று மாலை சென்னை வந்து சேர்ந்தனர். அவர்கள் அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கிறார்கள்.

 
 
 
 
டெஸ்ட் போட்டி: இந்தியா - இங்கிலாந்து அணி வீரர்கள் சென்னை வருகை
 
சென்னை :

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இதற்கிடையே, வார்தா புயல் சென்னையை கடுமையாக தாக்கியது. புயலின் கோர தாண்டவத்தில் சேப்பாக்கம் ஸ்டேடியமும் தப்பிக்கவில்லை. அங்குள்ள உயர் கோபுரத்தில் உள்ள மின் பல்புகள் பல காற்றில் பறந்து சிதறின. ரசிகர்கள் அமரும் இருக்கைகள் ஆங்காங்கே இடம் மாறின. ஸ்டேடியத்தை சுற்றி இருந்த மரங்களும் தரையோடு சாய்ந்து இருக்கிறது. இதனால் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் காசி விஸ்வநாதன் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘புயல் காரணமாக ஆடுகளமோ (பிட்ச்), அவுட்பீல்டோ பாதிக்கப்படவில்லை. ஆனால் ஸ்டேடியத்தில் உள்ள மெகா திரை, குளிர்சாதன வசதிகள் சேதம் அடைந்து இருக்கின்றன. உயர் மின்கோபுரத்தில் உள்ள பல்புகள் காற்றில் பறந்துள்ளன. ஸ்டேடியத்திற்கு சுற்றுப்புறத்தில் உள்ள ரோடுகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் சரிந்து இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் அடுத்த 2 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டியது எங்கள் முன் இருக்கும் சவாலாகும்.

போட்டிக்குள் எல்லாவற்றையும் சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேற்கொண்டு புயல்-மழை பாதிப்பு எதுவும் இல்லை என்றால் திட்டமிட்டநேரத்தில் இந்த டெஸ்ட் தொடங்கும். விதிமுறை சர்ச்சைக்கு உள்ளாகிய 3 கேலரிகளும் இந்த டெஸ்டுக்கு பயன்படுத்தப்படமாட்டாது.’ என்று தெரிவித்தார்.

கடைசி டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்து மற்றும் இந்திய அணி வீரர்கள் நேற்று மாலை சென்னை வந்து சேர்ந்தனர். அவர்கள் அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கிறார்கள். வீரர்கள் இன்று பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பயிற்சி ஆடுகளம் தயாராக இல்லாததால் இன்றைய வலை பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை இரு அணி வீரர்களும் ஏற்றுக்கொண்டு விட்டனர்.

போட்டிக்கு முந்தைய நாளான நாளையும் பயிற்சி நடப்பது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஆடுகளம் தார்ப்பாயால் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/14080200/1055873/Test-cricket-India-England-team-players-to-visit-Chennai.vpf

  • தொடங்கியவர்

சேப்பாக்கம் ஆடுகளத்தை உலர வைக்க நிலக்கரி தணல்

இரு தினங்களாக நல்ல வெயில் அடித்ததால் சேப்பாக்கம் ஆடுகளத்தை தயார் செய்யும் இறுதிகட்ட பணியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.

 
 
 
 
சேப்பாக்கம் ஆடுகளத்தை உலர வைக்க நிலக்கரி தணல்
 
புயல், மழை எதிரொலியாக சேப்பாக்கம் ஆடுகளம் (பிட்ச்) தார்ப்பாயால் மூடி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இரு தினங்களாக நல்ல வெயில் அடித்ததால் ஆடுகளத்தை தயார் செய்யும் இறுதிகட்ட பணியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மழையால் ஆடுகளத்தில் பாதிப்பு இல்லாவிட்டாலும், ஈரப்பதம் அதிகம் இருந்தது. ஈரப்பதத்தை உலர்த்த பிட்ச் பராமரிப்பாளர்கள் பழங்கால யுக்தியை கையாண்டார்கள். அதன்படி நிலக்கரி எரிக்கப்பட்டு அதன் நெருப்பு தணலை இரும்பு பெட்டிகளில் வைத்து (சலவைபெட்டி போல) அதனை ஆடுகளத்தின் மேல்வாக்கில் காட்டி உலர வைத்தனர்.

இந்த வித்தியாசமான அணுகுமுறையை பார்த்து ஆச்சரியப்பட்ட இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், டி.வி. வர்ணனையாளருமான நாசர் உசேன் இந்த காட்சியை டுவிட்டரில் படத்துடன் பதிவு செய்து இருக்கிறார்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/15085357/1056115/Groundsmen-Use-Burning-Coal-to-Dry-Pitch.vpf

  • தொடங்கியவர்

சென்னை டெஸ்ட் போட்டிக்கான ஏற்பாடுகள் தயார்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் இன்று பயிற்சி

சென்னை டெஸ்ட் போட்டிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. இந்தியா, இங்கிலாந்து அணி வீரர்கள் இன்று பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.

 
 
சென்னை டெஸ்ட் போட்டிக்கான ஏற்பாடுகள் தயார்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் இன்று பயிற்சி
பயிற்சி இல்லாததால் ஓட்டலில் முடங்கிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஜாலியாக வீடியோ கேம் விளையாடுகிறார்கள்.
சென்னை :

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகள் இடையே ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. விசாகப்பட்டினம், மொகாலி, மும்பையில் நடந்த அடுத்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இதற்கிடையே, கடந்த திங்கட்கிழமை சென்னையை தாக்கி நிலை குலையை வைத்த வார்தா புயல் சேப்பாக்கம் ஸ்டேடியத்தையும் விட்டுவைக்கவில்லை. ஸ்டேடியத்தில் இருக்கைகள், சைடு ஸ்கிரீன், உயர்கோபுரத்தில் உள்ள மின்விளக்குகள், குளிர்சாதன வசதிகள் ஆகியவை சேதம் அடைந்தன. ஸ்டேடியத்தை சுற்றி உள்ள பகுதிகளில் பல மரங்கள் அடியோடு சரிந்தன.

இதையடுத்து புயலால் ஸ்டேடியத்தில் பாதிப்புக்கு உள்ளான அனைத்தையும் சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இருக்கைகள், சைடு ஸ்கீரின் ஆகியவை முழுமையாக சரி செய்யப்பட்டு விட்டன. போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வருகிறது. இன்று காலைக்குள் அனைத்து பணிகளையும் செய்து முடிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது. ‘போட்டிக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கிறது. குறித்த நேரத்தில் ஆட்டத்தை தொடங்க முடியும்’ என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் காசி விஸ்வநாதன் உறுதி அளித்துள்ளார்.

பிட்ச் மற்றும் ஸ்டேடியத்தை சீரமைக்கும் பணிகள் நடந்ததால் இந்தியா, இங்கிலாந்து அணி வீரர்களுக்கு நேற்று பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் வீரர்கள் ஓட்டலிலேயே நேரத்தை கழிக்க நேர்ந்தது. ‘நெட்வொர்க்’ பிரச்சினை காரணமாக வீரர்களால் இணையதள சேவையை அதிகம் பயன்படுத்த முடியவில்லை. வீடியோ கேம்ஸ் விளையாடியும், அங்குள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்தும் நேரத்தை செலவிட்டனர்.

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிமை) காலை 9.30 மணிக்கு இந்திய அணியினரும், பகல் 12.30 மணிக்கு இங்கிலாந்து அணியினரும் பயிற்சி மேற்கொள்கிறார்கள். பயிற்சி ஆடுகளம் முழுமையாக தயார் நிலையில் இல்லாததால் இரு அணியினரும் பீல்டிங் பயிற்சியில் மட்டும் ஈடுபட உள்ளனர். இதைத்தொடர்ந்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி, இங்கிலாந்து அணி கேப்டன் அலஸ்டயர் குக் ஆகியோர் பேட்டி அளிக்கிறார்கள்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/15091610/1056118/Ready-for-preparations-in-Chennai-Test-cricket-India.vpf

  • தொடங்கியவர்

சென்னை டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இல்லை

 
 
James_Anderson_3104113f.jpg
 
 
 

டெஸ்ட் தொடரை இழந்த இங்கிலாந்து அணி அதன் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனையும் சென்னை டெஸ்ட் போட்டியில் இழந்துள்ளது.

உடல் வலி காரணமாகவும் களைப்பு காரணமாகவும் அவர் சென்னை டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியிருப்பதாக இங்கிலாந்து கேப்டன் குக் தெரிவித்தார்.

கணுக்கால், தோள்பட்டை வலி அல்லது ஒருவிதத்தில் மொத்தமாக உடல் வலி என்ற காரணத்தினால் அவரை விளையாடச் செய்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று இங்கிலாந்து நிர்வாகம் தெரிவிக்கிறது.

ஏற்கெனவே காயம் காரணமாக ஸ்டூவர்ட் பிராட் கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடாத நிலையில் சென்னை டெஸ்ட் போட்டிக்காக அவர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவர் ஆடுவதும் உறுதியாகவில்லை.

இடது கை சுழற்பந்து வீச்சாளர் லியாம் டாஸன் என்பவரை அணியில் சேர்க்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்தின் சமீபத்திய 23 டெஸ்ட் போட்டிகளில் ஆண்டர்சன் 8 டெஸ்ட் போட்டிகளில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபமாக கோலி பேட்டிங் உத்தி பற்றி விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கிய ஆண்டர்சனை இந்த டெஸ்ட் போட்டியில் களமிறக்க வேண்டாம் என்ற ரீதியிலும் இங்கிலாந்து நிர்வாகம் யோசித்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

http://tamil.thehindu.com/sports/சென்னை-டெஸ்ட்-போட்டியில்-ஜேம்ஸ்-ஆண்டர்சன்-இல்லை/article9428574.ece?homepage=true

  • தொடங்கியவர்

பேசும் படங்கள்: சென்னையில் இந்திய அணியினர் பயிற்சி

 
 
001_3104086f.jpg
 
 
 

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-0 என முன்னிலை வகிக்கிறது. தொடரின் கடைசி போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றிவிட்ட நிலையில், இந்திய அணியினர் வியாழக்கிழமை சேப்பாக்கம் மைதானத்தில் உற்சாகமாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதன் புகைப்படப் பதிவுகள் சில:

005_3104087a.jpg

1_3104092a.jpg

11_3104093a.jpg

0000_3104096a.jpg

10_3104097a.jpg

003_3104098a.jpg

 
 

http://tamil.thehindu.com/sports/பேசும்-படங்கள்-சென்னையில்-இந்திய-அணியினர்-பயிற்சி/article9428505.ece?homepage=true&theme=true

  • தொடங்கியவர்

இங்கிலாந்து பேட்டிங் #INDvENG

CzngJ7PW8AQHz7b_09254.jpg

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இங்கிலாந்து அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஆன்டர்சன் மற்றும் வோக்குஸ்க்கு பதிலாக ப்ராட், டாசன் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் லியாம் டாசன் டெஸ்ட் அரங்கில் தனது முதல் போட்டியை விளையாடுகிறார்.

  • தொடங்கியவர்

தமிழகத்தின் கண்ணாடி

சென்னையில் டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு முன் சேப்பாக்கம் மைதானத்தில் மறைந்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய இந்திய மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள்.

ஜெயலலிதாவுக்கு இந்தியா, இங்கிலாந்து வீரர்கள் அஞ்சலி

23813w_10008.jpg

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் 2 நிமிடம் அஞ்சலி செலுத்தினர். மேலும், சட்டைகளில் கறுப்பு பேஜ் அணிந்து விளையாடி வருகின்றனர்.

இந்தியா-இங்கிலாந்து ஐந்தாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கடந்த 5-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

மேலும், இரு அணி வீரர்களும் தங்களது கைகளில் கறுப்பு பேஜ் அணிந்து விளையாடி வருகின்றனர். 

  • தொடங்கியவர்

அஸ்வின் புதிய சாதனை படைக்கிறார்

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 250 விக்கெட்டை தொட இன்னும் 3 விக்கெட் மட்டுமே தேவை. அவர் மேலும் 3 விக்கெட் கைப்பற்றினால் டெஸ்டில் அதிவேகமாக 250 விக்கெட் கைப்பற்றியவர் என்ற சாதனை படைப்பார்.

 
அஸ்வின் புதிய சாதனை படைக்கிறார்
 
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் தமிழகத்தைச் சேர்ந்த அவர் 43 டெஸ்ட் போட்டியில் விளையாடி 243 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

250 விக்கெட்டை தொட இன்னும் அவருக்கு 3 விக்கெட் மட்டுமே தேவை. அவர் மேலும் 3 விக்கெட் கைப்பற்றினால் டெஸ்டில் அதிவேகமாக 250 விக்கெட் கைப்பற்றியவர் என்ற சாதனை படைப்பார்.

ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லி 250 விக்கெட்டுகளை 48 டெஸ்டில் வீழ்த்தியதே சாதனையாக உள்ளது.

தற்போது சூப்பர் பார்மில் உள்ள அஸ்வின் சென்னை டெஸ்டில் மேலும் 3 விக்கெட் வீழ்த்தி அதிவேக 250 விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனை படைக்கிறார். அவர் இச்சாதனையை தனது சொந்த மண்ணில் படைப்பது சிறப்புக்குரியதாகும்.

இங்கிலாந்துக்கு எதிரான இத்தொடரில் அஸ்வின் இதுவரை 27 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். சென்னை டெஸ்டில் அஸ்வின் மேலும் 9 விக்கெட் வீழ்த்தினால் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையை பெறுவார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் (1972-ம் ஆண்டு) சந்திரசேகர் 35 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக உள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/16104954/1056356/Ashwin-creates-new-record.vpf

  • தொடங்கியவர்

சேப்பாக்கம் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து நிதான ஆட்டம்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து நிதானமாக ஆடிவருகிறது.

 
சேப்பாக்கம் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து நிதான ஆட்டம்
 
சென்னை:

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டி நடந்து முடிந் துள்ளது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது.

விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் 246 ரன் வித்தியாசத்திலும், மொகாலியில் நடந்த 3-வது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையில் நடந்த 4-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 26 ரன் வித்தியாசத்திலும் இந்தியா - வெற்றி பெற்றது.

இதனால் 3-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது.

இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசிப் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது.

இந்திய அணியில் இரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. புவனேஸ்வர் குமாருக்கு பதில் இஷாந்த் சர்மா இடம் பெற்றார். கடந்த போட்டியில் சதம் அடித்த சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவுக்கு பதில் அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இங்கிலாந்து அணியில் காயம் அடைந்த ஆண்டர்சன் மற்றும் கிறிஸ்வோக்ஸ் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதில் ஸ்டூவர்ட் பிராட், புதுமுக வீரர் டவ்சன் இடம் பெற்றனர். இரு அணி வீரர்கள் வருமாறு:-

இந்தியா: கோலி (கேப்டன்), முரளி விஜய், ராகுல், புஜாரா, கருண் நாயர், பார்த்தீவ் பட்டேல், அஸ்வின், ஜடேஜா, அமித்மிஸ்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்.

இங்கிலாந்து: குக் (கேப்டன்), ஜென்னிங்ஸ, ஜோரூட், மொய்ன் அலி, பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ்பட்லர், டவ்சன், ரஷீத், ஸ்டூவர்ட் பிராட், ஜேக்பால்.

டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் கூக் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள் குக், ஜென்னிங்ஸ் களம் இறங்கினார்கள்.

6-வது ஓவரில் இங்கிலாந்து முதல் விக்கெட்டை இழந்தது. இஷாந்த் சர்மா பந்தில் ஜென்னிங்ஸ் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் ஒரு ரன் எடுத்தார்.
3B4D5AD4-77E6-49B6-AC85-C413936FF9FE_L_s

அடுத்து ஜோரூட் களம் வந்தார். கேப்டன் கூக் 10 ரன்னில் ஜடேஜா பந்தில் ஸ்லிப் பகுதியில் கேட்ச் ஆனார். அப்போது ஸ்கோர் 21 ரன்னாக இருந்தது.
4C59D0B1-2BD5-406B-8F9A-0FBD0B4ECB39_L_s

அடுத்து ஜோரூட்டுடன் மொய்ன் அலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினார்கள்.

இங்கிலாந்து 23.1 ஓவரில் 50 ரன்னை தொட்டது. மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 29 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன் எடுத்தது. ஜோரூட் 44 ரன்னுடனும், மொய்ன் அலி 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/16122456/1056391/England-playing-steady-in-Chepauk-Test.vpf

  • தொடங்கியவர்

மயிரிழையில் சாதனையை தவறவிட்ட ஜோ ரூட், பேர்ஸ்டோவ்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே வருடத்தில் அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை மயிரிழையில் ஜோ ரூட், பேர்ஸ்டோவ் இழந்துள்ளனர்.

மயிரிழையில் சாதனையை தவறவிட்ட ஜோ ரூட், பேர்ஸ்டோவ்
 
இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரராக திகழ்ந்து வருபவர் ஜோ ரூட். விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருபவர் பேர்ஸ்டோவ். இருவரும் இந்த வருடத்தில் நம்பமுடியாத அளவில் பேட்டிங் செய்து ரன்கள் குவித்து வருகின்றனர். இந்த வருடம் இருவரும் 1000 ரன்களை கடந்து பெருமை சேர்த்தனர். மேலும், ஒரே வருடத்தில் அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற அவர்களுக்கு அதிக வாய்ப்பு இருந்தது.

இதற்கு முன் அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடந்த 2002-ம் ஆண்டு 14 டெஸ்ட் போட்டிகளில் 26 இன்னிங்சில் 1481 ரன்கள் எடுத்ததே இங்கிலாந்து வீரர் ஒரே வருடத்தில் அதிக ரன் குவித்த சாதனையாக இருந்தது.

இந்த சாதனையை ஜோ ரூட் இன்று எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 88 ரன்களில் அவுட் ஆனார். இதனால் 10 ரன்னில் சாதனையை தவற விட்டுவிட்டார். இதேபோல் பேர்ஸ்டோவ் 1469 ரன்கள் எடுத்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் 49 ரன்னில் அவுட்டானதால் 11 ரன்னில் சாதனையை தவறவிட்டுவி்ட்டார்.

இருந்தாலும் இருவருக்கும் 2-வது இன்னிங்ஸ் உள்ளது. அதில் வாகன் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/16164521/1056486/Joe-Root-Bairstow-miss-vaughan-record-reached.vpf

சென்னை டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 284/4

  • தொடங்கியவர்

11 ஆயிரம் ரன்களை விரைவாக கடந்து இங்கிலாந்து கேப்டன் குக் சாதனை

இங்கிலாந்து அணியின் கேப்டன் அலஸ்டர் குக் சென்னை டெஸ்டில் 2 ரன்னை எடுத்தபோது 11 ஆயிரம் ரன்னை தொட்டார். இதன்மூலம் விரைவாக கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

 
11 ஆயிரம் ரன்களை விரைவாக கடந்து இங்கிலாந்து கேப்டன் குக் சாதனை
 
இங்கிலாந்து அணியின் கேப்டன் அலஸ்டைர் குக் இடது கை பேட்ஸ்மேன் ஆவார். 31 வயதான இவர், இன்னும் சில தினங்களில் (டிச.25) 32 வயதை எட்டிப்பிடிக்க உள்ளார். இவர் கடந்த 2006-ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினார். அப்போது அவருக்கு 20 வயது.

தனது சிறப்பான ஆட்டத்தால் டெஸ்ட் போட்டியில் ரன்களை குவித்து வந்தார். இன்று சென்னையில் தொடங்கிய டெஸ்ட் போட்டிக்கு முன்புவரை குக் 139 டெஸ்டில் 10998 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 30 சதங்களும், 53 அரை சதங்களும் அடங்கும்.

இன்னும் 2 ரன்கள் எடுத்தால் ‘டெஸ்ட் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்’ என்ற மைல்கல்லை எட்டும் நோக்கில் இன்று களம் இறங்கினார். ஆட்டத்தின் முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து இந்த சாதனையைப் படைத்தார்.

இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களைக் கடந்த 10-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் விரைவாக 11 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இவர் 10 வருடம் 290 நாட்களில் 252 இன்னிங்ஸ் மூலம் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார்.

இலங்கை வீரர் சங்ககரா 13 வருடம் 199 நாட்களில் 208 இன்னிங்சிஸ் மூலம் 11 ஆயிரம் ரன்னைக் கடந்தார். சச்சின் தெண்டுல்கர் 17 வருடம் 254 நாட்களில் 223 இன்னிங்சிலும், பிரைன் லாரா 14 வருடம் 354 நாட்களில் 213 இன்னிங்சிலும், ரிக்கி பாண்டிங் 13 வருடம் 212 நாட்களில் 222 இன்னிங்சிலும், ராகுல் டிராவிட் 13 வருடம் 149 நாட்களில் 234 இன்னிங்சிலும், கல்லிஸ் 14 வருடம் 186 நாட்களில் 234 இன்னிங்சிலும், ஜெயவர்தனே 16 வருடம் 167 நாட்களில் 237 இன்னிங்சிலும், ஆலன் பார்டர் 15 வருடம் 30 நாட்களில் 259 இன்னிங்சிலும் 11 ஆயிரம் ரன்களை தாண்டியுள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/16164259/1056483/alastair-Cook-Record-fasted-11000-runs.vpf

  • தொடங்கியவர்

ஒரே தொடரில் ஐந்து முறை குக்கை அவுட்டாக்கி ஜடேஜா சாதனை

ஒரே தொடரில் ஐந்து முறை இங்கிலாந்து அணி கேப்டன் அலஸ்டைர் குக்கை அவுட்டாக்கி அதிக முறை அவுட்டாக்கிய பெருமையை ரவீந்திர ஜடேஜா பெற்றுள்ளார்.

 
 
ஒரே தொடரில் ஐந்து முறை குக்கை அவுட்டாக்கி ஜடேஜா சாதனை
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்தாவது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய அலஸ்டைர் குக் 10 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஜடேஜா பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவர் அவுட் ஆனார்.

இதன் மூலம் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 9 இன்னிங்சில் ஐந்து முறை ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்துள்ளார் குக். ஆகவே, ஒரே தொடரில் ஐந்து முறை குக்கை அவுட்டாக்கி ஜடேஜா சாதனைப் படைத்துள்ளார்.

ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 21 ரன்னில் குக்கை அவுட்டாக்கினார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 54 ரன்னில் அவுட்டாக்கினார்.
 
E8D32CF0-739F-4F51-B115-13465C83CD5E_L_s



மும்பையில் நடைபெற்ற டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் முறையே 46, 18 ரன்கள் எடுத்த நிலையில் குக்கை அவுட்டாக்கினார். தற்போது 10 ரன்னில் அவுட்டாக்கியதன் மூலம் ஐந்து முறை குக்கை அவுட்டாக்கிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன், தென்ஆப்பிரிக்காவின் மோர்னே மோர்கல், இந்தியாவின் இசாந்த் சர்மா, அஸ்வின், பாகிஸ்தானின் உமர் குல் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டூவர்ட் கிளார்க் ஆகியோர் நான்கு முறை குக்கை ஒரே தொடரில் வீழ்த்தியுள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2016/12/16155544/1056465/jadeja-dismissing-Cook-most-times-in-a-series.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.