Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்ச்சைக்குரிய பிக்குவின் மற்றுமொரு செயற்பாட்டால் செங்கலடியில் பதற்றம்

Featured Replies

சர்ச்சைக்குரிய பிக்குவின் மற்றுமொரு செயற்பாட்டால் செங்கலடியில் பதற்றம்

 

 

(சசி)

நீதிமன்ற ஆணையையும் மீறி பதுளை வீதியில் உள்ள பன்குடாவெளி பிரதேசத்தில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சியை மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி மேற்கொண்டுள்ளதால் குறித்த பகுதியில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

15135525_1504778412883447_612764178_n.jp

சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் மற்றும் பொதுமக்கள் பௌத்த பிக்குவை அங்கிருந்து வெளியுற்றுவதற்கு பொலிசாரின் உதவியுடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி பிற மாவட்டங்களில் இருந்து சிங்கள மக்களை பஸ் வண்டிகளில் ஏற்றி வந்து பதுளை வீதியில் உள்ள பன்குடாவெளி பிரதேசத்தில் பௌத்த விகாரை அமைக்க முயற்சித்துள்ளார்.

இதனை தடுப்பதற்கு பொதுமக்கள் பலர் ஒன்று சேர்ந்து உள்ளதாகவும் இதனால் குறித்த பகுதியில் பதட்டம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.virakesari.lk/article/13537

 

 

 

 


தனியார் காணிக்குள் அத்துமீறிய விகாராதிபதியால் பதற்றம்
 
 

article_1479279296-bb1.JPG

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், செங்கலடி - பதுளை வீதியிலுள்ள பன்குடாவெளியில் அரசமரம் உள்ள காணிக்குள்,  இன்று புதன்கிழமை காலை வந்ததையடுத்து, அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.

குறித்த இடத்தில் பௌத்த மத அடையாளங்கள் காணப்படுவதாகவும் கடந்த காலங்களில் பௌத்த வழிபாட்டுத்தலம் இருந்ததாகவும் கூறி, தனியார் காணிக்குள் அத்துமீறி நுழைந்து அமர்ந்துகொண்டதால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டது.

article_1479279307-bbb2.JPG

article_1479279317-bbb.jpg

article_1479279337-bb4.JPG

 

- See more at: http://www.tamilmirror.lk/186163/தன-ய-ர-க-ண-க-க-ள-அத-த-ம-ற-ய-வ-க-ர-த-பத-ய-ல-பதற-றம-#sthash.dtiNHpei.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

தூசணப் பிக்கர் சேவை, நம் தமிழ் பேசும் அணைவருக்கும் தேவை. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

தூசணப் பிக்கர், பயங்கர பிசி. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

சர்ச்சைக்குரிய பிக்குவின் மற்றுமொரு செயற்பாட்டால் செங்கலடியில் பதற்றம்

article_1479279317-bbb.jpg

தூசணப் பிக்கர் என்ன செய்கிறார்....??  அந்த இடமே நாறப்போகுது Bildergebnis für bad smell

  • தொடங்கியவர்

 

மட்டக்களப்பில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மீண்டும் குழப்பம்

  • தொடங்கியவர்

சர்ச்சைக்குரிய பிக்குவின் மற்றுமொரு செயற்பாட்டால் செங்கலடியில் பதற்றம்: அடம் பிடித்த பிக்கு, விரட்டியடித்த பொதுமக்கள்! (வீடியோ இணைப்பு)

 

மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், செங்கலடி - பதுளை வீதியிலுள்ள பன்குடாவெளியில் அரசமரம் உள்ள காணிக்குள், இன்று (16) காலை வந்ததையடுத்து, அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதன்போது, குறித்த இடத்திற்கு சிங்கள மக்கள் வாகனங்களில் இருந்து வருகைத்தந்ததை அடுத்து பெரும் பதற்றம் ஏற்ப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இதனையடுத்து குறித்த பிரதேச தமிழ் மக்கள் வருகைத்தந்ததை அடுத்து நிலமையை கட்டுப்படுத்த பல நடவடிக்கை மேற்கொண்டபோதும், பலனளிக்கவில்லை.

 


குறித்த தனியார் கணிக்குள் விகாராதிபதி அத்துமீறி நுளைந்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் நிலமையை பொலிஸாருக்கு தெளிவுபடுத்தியதும் உடனடியாக காணியில் இருந்து வெளியேறுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


நீதிமன்ற சட்டத்தையும் மீறி பிக்கு அத்து மீறி நுளைந்துள்ளார், குறித்த இடத்தில் பௌத்த மத அடையாளங்கள் காணப்படுவதாகவும் கடந்த காலங்களில் பௌத்த வழிபாட்டுத்தலம் இருந்ததாகவும் கூறி, தனியார் காணிக்குள் அத்துமீறி நுழைந்து அமர்ந்துகொண்டதால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.


குறித்த பிரதேசம் சிங்களவர்களுக்கு சொந்தமானது என்றும் அங்கு விகாரை ஒன்றை அமைத்து சிங்கள மக்களை குடியேற்றப்போவதாகவும் கூறிய பிக்கு அங்கிருந்த அரச மரத்தடியின் கீழ் அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதற்காக குறித்த பிக்கு வெளி மாவட்டங்களில் இருந்து பல சிங்கள குடும்பங்களையும் வாகனங்களில் அழைத்துவந்து குறித்த இடத்தில் அமரவைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த பிக்குவை அங்கிருந்து அகன்று செல்லுமாறு பொலிஸ் அதிகாரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அவர்கள் கூறியபோது “நான் இந்த இடத்தில் இருந்து எழும்ப மாட்டேன் அரசாங்க அதிபர் வந்தால் மட்டும்தான் எழும்புவேன் அவரை வரச்சொல்லுங்கள்” என்று பிக்கு கூறியுள்ளார்.


அதனை தொடர்ந்து உடனடியாக தொலைபேசியுடாக அரசாங்க அதிபரை தொடர்பு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அரசாங்க அதிபரை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தபோது அரசாங்க அதிபர் அங்கு வரமறுத்ததுடன் பொலிஸாரை கொண்டு பிரச்சினையை தீர்க்குமாறு குறிப்பிட்டுள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த தமிழ் மக்கள் அப்பகுதியில் ஒன்று திரண்டதுடன் குறித்த இடத்திற்கு விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரனுடன் இணைந்து பௌத்த பிக்குவை பொலிஸாரின் உதவியுடன் அங்கிருந்து அகற்றியுள்ளனர்.

http://www.virakesari.lk/article/13563

பிரபாகரனால் செய்ய முடியாத பல விடயங்களை எமக்கு சாதகமாக பெளத்த பிக்குகள் செய்கின்றார்கள். தொடரட்டும் இவர்களது பணி. வாழ்க வளமுடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.