Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமாதானத்தை நோக்கி நல்லாட்சி அரசு-சம்பந்தன்

Featured Replies

சமாதானத்தை நோக்கி நல்லாட்சி அரசு-சம்பந்தன்
 
 
சமாதானத்தை நோக்கி நல்லாட்சி அரசு-சம்பந்தன்
 
நல்லாட்சி அரசாங்கம் சட்டம் ஒழுங்கு, சுதந்திரம் அனைத்தையும் நிலைநிறுத்தி நாட்டை சமாதானத்தை நோக்கி கொண்டு செல்ல முயற்சித்து வருகின்றது என  இன்று காலை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது இரா.சம்பந்தன்  குறிப்பிட்டார்.
 
அத்துடன் நல்லிணக்கம்,ஜனநாயகம்,சுதந்திரத்தை வலுப்படுத்தல் மற்றும் தேசிய சமாதானத்தை நோக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னோக்கி செல்லும் எனவும் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்
 
தற்பொழுது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கம் நாட்டை ஓர் தெளிவான பார்வைக்கு இட்டுச் செல்ல வழிவகுத்து வருவதாகவும்  நாடு தற்போது புதிய அரசாங்கத்தின் வழிகாட்டலின் கீழ் செயல்பட்டு வருகின்றது எனவும் குறிப்பிட்டார்.
 
 

http://www.onlineuthayan.com/news/20302

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நவீனன் said:
சமாதானத்தை நோக்கி நல்லாட்சி அரசு-சம்பந்தன்
 
 
சமாதானத்தை நோக்கி நல்லாட்சி அரசு-சம்பந்தன்
 
நல்லாட்சி அரசாங்கம் சட்டம் ஒழுங்கு, சுதந்திரம் அனைத்தையும் நிலைநிறுத்தி நாட்டை சமாதானத்தை நோக்கி கொண்டு செல்ல முயற்சித்து வருகின்றது என  இன்று காலை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது இரா.சம்பந்தன்  குறிப்பிட்டார்.
 
அத்துடன் நல்லிணக்கம்,ஜனநாயகம்,சுதந்திரத்தை வலுப்படுத்தல் மற்றும் தேசிய சமாதானத்தை நோக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னோக்கி செல்லும் எனவும் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்
 
தற்பொழுது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கம் நாட்டை ஓர் தெளிவான பார்வைக்கு இட்டுச் செல்ல வழிவகுத்து வருவதாகவும்  நாடு தற்போது புதிய அரசாங்கத்தின் வழிகாட்டலின் கீழ் செயல்பட்டு வருகின்றது எனவும் குறிப்பிட்டார்.

 

சிங்கள மக்களின் பாதுகாப்பே முக்கியம்-பசில்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் பிக்கு மண்டைய காயவைக்கிறான் ஆனால் இந்தமனுசனோ ம்கும் நல்லது நீங்கள் நல்லா இருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒரு தகவல் தென்கச்சி  கோ சுவாமிநாதன்

தமிழ்  நாட்டில் ஒரு காலத்தில் வயலுக்கு போகும் போதும் ஆடு மாடு மேய்க்க போகும் போதும் கட்டாயமாகியது  கை ரேடியோ.. ஆல் இண்டியா ரேடியோவை கூட பின்னுக்கு தள்ளியது சிலோன் வர்த்தக சேவை வானோளி ( நம் நினைவில் சரியாக இல்லை )சரியாக காலை 7 மணிக்கு கேட்க ஆரம்பிக்கும் 10 மணியோட சிக்னல் இல்லாமல் போய்விடும் மறுபடியும் மாலை சரியாக 3:30 கேட்க ஆரம்பிக்கும் அத்தோடு இரவு 9 மணிக்கு பிபிசியின் தமிழோசை என்ற நிகழ்ச்சிக்கு பிறகு கேட்க் ஆரம்பிக்காது.. சிக்னல் கோளாறாக இருக்கலாம்..  ஆனால் சங்கு மார்க்கு லுங்கி .. ரீகல் சொட்டு நீலம் மற்றும் இன்னும் பிற... ஈழ தமிழர்கள் பேசும் சரியான தமிழ் உச்சரிப்பு.. மற்றும் துல்லியமாக இருக்கலாம்  ஆனால் சரியாக ஆல் இண்டியா ரேடியோவில் 8:00 மணி தலைப்பு செய்திகள் முடிந்த பின்பு எல்லோரும் வேறு எந்த வானோலி நிலையங்களுக்கும் மாறாமல் உறுதாக நிற்பார்கள் காரணம் தென்கச்சி கோ. சாமிநாதன்.. காரணம் அவர் கட்டயாம்  புதியதாக இன்று ஒரு தகவலில் தருவார் என்ற காரணத்திற்காகத்தான்..

டிஸ்கி

ஏன் தொடர்பு இல்லாம நாம தென்கச்சி சுவாமிநாதனை பற்றி கதைக்கவேண்டும்..? தென்கச்சி சுவாமிநாதன் தினமும் ஆக்கபூர்வமான தகவல்களை தருவாறு .. ஆனால் இந்த தென்கச்(ட்)சி சுவாமி நாதன் ..? வடக்கில் கட்சி நடாத்தி கொண்டு  தினமும்  இன்று ஒரு தகவல் தருகிறார்..

Quote

சமாதானத்தை நோக்கி நல்லாட்சி அரசு-சம்பந்தன்

இதில் ஏதாவது புதியதாக இருக்கா ?  போன வாரம் கதைத்ததை ...இந்த வாரம் ...அதற்கு முந்திய வாரம் கதைத்தை இந்த வாரம்.....?

 

  • தொடங்கியவர்

இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் வடக்கில் மீள் குடியேற்றப்பட வேண்டும் -TNA

sambanthar
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் வடக்கில் மீள் குடியேற்றப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் முஸ்லிம்கள் குடியேறுவதனை தமிழர்கள் விரும்பவில்லை என்ற ஓர் எண்ணக்கரு முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீளவும் வடக்கில் குடியேற வேண்டுமென தமிழர்கள் விரும்புவதாகத் தெரிவித்துள்ள அவர் தமிழர்கள் மற்றும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் சாசனமொன்றின் தேவை எழுந்துள்ளதாகவும் அதனை அரசாங்கம் பூர்த்தி செய்யும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ள சம்பந்தன் ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் புதிய அரசியல் சாசன தீர்வுத் திட்டம் அமைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

http://globaltamilnews.net/archives/7337

  • தொடங்கியவர்

வடக்கு,கிழக்கிற்கு விசேட செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டம்

sambandhan-1-ace6547343cd6ae1a54fda00944813169219fa56.jpg

 

விரைவில் கொண்டுவரவேண்டியது அவசியம் என்கிறார் சம்பந்தன்
(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

புதிய அர­சி­ய­ல­மைப்பு இலங்­கையின் அனைத்து சமூ­கத்­தினர் மத்­தி­யிலும் பெரும்­பான்­மையாக ஏற்­றுக்­ கொள்­ளப்­படக் கூடி­ய­தாக இருக்க வேண்டும். தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என எந்த இனத்­த­வ­ராக இருந்­தாலும் இலங்­கையர் என்று தங்­களை பெரு­மை­யாக அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்­ளக்­கூ­டி­ய­வ­கையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு அமை­ய­வேண்டும். அனைத்து இன மக்­களின் சமூக கலா­சார, மொழி மற்றும் மத அடை­யா­ளங்­க­ளையும் உறு­திப்­ப­டுத்தும் நோக்­கிலும் அமை­ய­வேண்டும் என்று எதிர்க்­கட்­சித்­ த­லை­வரும், தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.   

வடக்கில் முஸ்லிம் மக்களின் மீள்­கு­டி­யேற்ற விடயத்­திலும் உறு­தி­யான முன்­னேற்­றத்தை எதிர்­பார்ப்­ப­தாக குறிப்­பிட்ட எதிர்க்­கட்­சித்­த­லைவர் வடக்கின் முஸ்லிம் சமூக பிர­தி­நி­திகள், மீள்­கு­டி­யேற்ற  

மற்றும் புனர்­வாழ்வு அமைச்­சரின் உத்­தி­யோக பூர்வ பிர­தி­நி­திகள், வட மாகாண முத­ல­மைச்­சரின் உத்­தி­யோக பூர்வ பிர­தி­நி­திகள் இந்த விட­யத்தில் உள்ள சிக்­கல்­களை போக்கி அம்­மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை விரைவில் பூர்த்தி செய்­வ­தற்கு வழி­வ­குப்­பார்கள் எனவும் உறு­தி­ப­டத்­தெ­ரி­வித்தார்.

வடக்கு மற்றும் கிழக்­கிற்கு விரி­வான செயற்­பாட்டு நிகழ்ச்­சித்­திட்­ட­மொன்று ஏற்­ப­டுத்­தப்­பட்டு அப்­பி­ர­தே­சங்­களை சேர்ந்த மக்கள் பிர­தி­நி­தி­க­ளுடன் இணைந்து அந்த இலக்­கு­களை நிறைவு செய்­வ­தற்­காக பணி­யாற்ற வேண்டும் எனவும் எதிர்­கட்­சித்­த­லைவர் வலி­யு­றுத்­தினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை 2017ஆம் ஆண்­டுக்­கான வர­வு-­செ­ல­வுத்­திட்ட விவா­தத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவா­தத்தை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

சம்­மந்தன் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

 வரவு செல­வுத்­திட்டம் சமர்ப்­பிக்­கப்­பட்டு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சியும் இணைந்து இந்த வரவு செல­வுத்­திட்­டத்தை சமர்ப்­பித்­துள்­ளன. அமைச்­ச­ர­வையில் இரண்டு பிர­தான கட்­சி­களைச் சேர்ந்த உறுப்­பி­னர்கள் இருக்­கின்­றார்கள்.

இந்த இரண்டு கட்சி உறுப்­பி­னர்­களும் சமூக, அர­சியல் ரீதி­யாக தற்­போது இணைந்­தி­ருக்­கின்­றார்கள். ஜன­வரி எட்டாம் திகதி நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­த­லிலும், அதன் பின்னர் நடை­பெற்ற பொதுத்­தேர்­த­லிலும் தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு இறை­மையின் அடிப்­ப­டை­யி­லான மக்கள் ஆணை கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.

உண்­மை­யான ஜன­நா­ய­கத்தை பாது­காத்து நாடு ஆட்சி செய்­யப்­பட வேண்டும் என்­பதே இந்த நாட்­டி­லுள்ள அனை­வ­ரி­னதும் எதிர்­பார்ப்­பாக இருக்­கி­றது. நிதி அமைச்சர் தமது வர­வு-­செ­ல­வுத்­திட்ட உரையில் அர­சாங்­கத்தின் பொரு­ளா­தார, அர­சியல் மற்றும் சமூக நோக்­குகள் தொடர்­பாக விரி­வாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

நிரந்­தர சமா­தானம், சுதந்­திரம் மற்றும் தேசிய ஒருங்­கி­ணைப்பு என்­ப­வற்­றிற்­காக ஜன­நா­யகம், அடிப்­படை உரி­மைகள் , நல்­லி­ணக்கம் மற்றும் அபி­வி­ருத்தி போன்­ற­வற்­றினை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய எமது அரிய முயற்­சியில் தொடர்ந்தும் முன்­னேறிச் செல்வோம். அடிப்­ப­டையில் எமது நாடு பரஸ்­பர மரி­யாதை மற்றும் கலந்­து­ரை­யாடல் மீது உரு­வாக்­கப்­ப­டு­கின்ற நீடித்து நிலைக்கும் சமா­தா­னத்­திற்­கான ஒரு புதிய தூர­நோக்­கினால் வழி­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

அச்­செ­யற்­பாட்டை உறு­திப்­ப­டுத்தும் வகையில் சமூக, அர­சியல், பொரு­ளா­தார மற்றும் சர்­வ­தேச உற­வுகள் அடங்­க­லான அனைத்து பிர­தான அம்­சங்­க­ளையும் உள்­ள­டக்­கிய ஒரு இலக்கு நோக்­கிய சீர்­தி­ருத்த நிகழ்ச்சி நிர­லினை உரு­வாக்­கி­யுள்ளோம்.

நல்­லாட்­சியை மேற்­கொள்ளும் இந்த தேசிய அர­சாங்கம் அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு, சட்ட ஆட்­சியின் மீளு­ரு­வாக்கம் நீதித்­து­றையின் சுயா­தீனம் பற்றி கவனம் செலுத்தும் என்று நிதி அமைச்­சரின் வர­வு-­செ­ல­வுத்­திட்ட உரையின் 2 ஆவது பந்­தியில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய முயற்சி
தற்­போ­தைய அர­சாங்­க­மா­னது நான் ஏற்­க­னவே குறிப்­பிட்­டது போன்று இந்த நாட்­டுக்கு பொரு­ளா­தாரம், அர­சியல் மற்றும் சமூக எதிர்­காலம் தொடர்பில் புதிய பாதை­யொன்றை ஏற்­ப­டுத்த கடப்­பட்­டுள்­ளது.  

சுதந்­தி­ரத்தின் பின்னர் இந்த நாட்டை மாறி மாறி ஆட்­சி­செய்து வந்­துள்ள இரு பிர­தான கட்­சி­க­ளி­னதும் இணக்­கப்­பாட்­டுடன் புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை இயற்றும் முயற்­சி­யொன்றில் முதற்­த­ட­வை­யாக இரண்டு கட்­சி­களும் ஈடு­பட்­டுள்­ளன.

ஏனைய அர­சியல் கட்­சி­க­ளி­னதும் அதேபோல் இந்த நாட்டு மக்­க­ளி­னதும் இணக்­கப்­பாட்­டுடன் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஒன்­று­பட்டு இந்த நாட்­டுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை உரு­வாக்கும் கூட்டு முயற்­சி­யொன்று முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இவ்­வா­றான முயற்­சி­யா­னது இதற்கு முன்­ன­தாக இடம்­பெற்­றி­ராத புதி­ய­தொரு விட­ய­மா­க­வுள்­ளது. பிள­வு­ப­டாத தனி­யொரு பிரத்­தி­யேக நாடு என்ற கட்­ட­மைப்­பிற்குள் அதி­க­பட்ச சாத்­தி­ய­மான இணக்­கப்­பா­டு­களின் அடிப்­ப­டை­யி­லா­ன­தாக இது அமைந்­தி­ருக்கும்.

எமது ஒப்­புதல் இல்லை
இந்த நாட்டில் இதற்கு முன்­ன­தாக மூன்று அர­சி­ய­ல­மைப்­புக்கள் இயற்­றப்­பட்­டுள்­ளன. 1947 ஆம் ஆண்டு அர­சி­ல­மைப்­பொன்று இயற்­றப்­பட்­ட­துடன், அதன் பின்னர் 1972 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலை­மையில் அத­னது கூட்­டணி கட்­சி­களும் இணைந்து அர­சி­ய­ல­மைப்­பொன்றை இயற்­றி­யி­ருந்­தன . 1978 ஆம் ஆண்டில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் அர­சி­ய­ல­மைப்­பொன்று இயற்­றப்­பட்­டது.  

இதில் 1972, 1978 ஆம் ஆண்­டு­களில் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்ட இரு சந்­தர்ப்­பங்­க­ளிலும் அந்­தந்த காலப்­ப­கு­தியில் இருந்த அர­சாங்­கங்கள் அப்­போ­தைய பிர­தான எதிர்க்­கட்­சியின் இணக்­கப்­பாட்டை பெற்­றி­ருக்­க­வில்லை. அது­மட்­டு­மல்­லாது. தமிழ் மக்­களை பிர­தி­நித்­து­வப்­ப­டுத்­திய தமிழ் கட்­சி­களின் ஒப்­பு­தலும் அந்த அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கங்­களின் போது பெறப்­பட்­டி­ருக்­க­வில்லை.

எதிர்­பார்ப்பு
பிள­வு­ப­டாத தனி­யொரு நாடு என்ற கட்­ட­மைப்­பிற்குள் பர­வ­லான இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாகும். அவ் அர­சி­ய­ல­மைப்­பா­னது இந்த நாட்­டி­லுள்ள அனைத்து மக்­க­ளி­னதும் அபி­லா­ஷை­களை பிர­தி­ப­லிக்கும் என்றும் முதற் தட­வை­யாக எதிர்­பார்ப்பு எழுந்­துள்­ளது.   

வர­லாற்றில் முதற்­த­ட­வை­யாக பெரும்­பான்­மை­யான தமிழ் மக்­களை குறிப்­பாக வடக்கு மற்றும் கிழக்கில் பிர­தி­நித்­துப்­ப­டுத்தும் கட்­சி­யான எனது தலை­மை­யி­லான தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இந்த அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க செயற்­பா­டு­களில் பங்­கெ­டுத்­துள்­ளது. அது நிதி அமைச்சர் தமது வர­வு-­செ­ல­வுத்­திட்ட உரையில் 2ஆவது பந்­தியில் குறிப்­பிட்ட விட­யங்­களை யதார்த்­த­மாக்க உத­வி­யாக இருக்கும் என்று கரு­து­கிறோம்.

அனு­ம­திக்க முடி­யாது  
யுத்­தத்­துக்கு முன்­னரும் சரி அதற்கு பின்­னரும் சரி வடக்கு, கிழக்கு என்­பது நீண்­ட­கா­ல­மாக மிகவும் புறக்­க­ணிக்­கப்­பட்ட பிர­தே­சங்­க­ளாக இருக்­கின்­றன. வடக்கு மற்றும் கிழக்கில் இடம்­பெ­யர்ந்த மக்­களின் காணிகள் மீள் மதிப்­பீடு செய்­யப்­பட வேண்டும். அது­மட்­டு­மல்­லாது, 2017 ஆம் ஆண்டில் அம்­மக்­களின் புனர்­வாழ்வு, வீட­மைப்பு மற்றும் வாழ்­வா­தாரம் அனைத்தும் பூர்த்தி செய்­யப்­பட வேண்டும். இந்த பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான மறுப்­பு­களும் கஷ்­டங்­களும் தொடர்ச்­சி­யான நிகழ்­வு­க­ளாக இருக்க அனு­ம­திக்க முடி­யாது.  

எதிர்­பார்ப்­பு­க­ளுடன் பொறு­மை­யாக காத்­தி­ருந்து மக்கள் களைப்­ப­டைந்து விட்­டனர். ஆகவே, விட­யங்கள் தற்­போது பூர்த்தி செய்­யப்­பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வா­கி­யுள்ள 18 எம்.பி.க்களில் 16 பேர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை சேர்ந்­த­வர்­க­ளா­கவே இருக்­கின்­றனர்.

இந்த தெரி­வா­னது 90 இற்கும் அதி­க­மான சத­வீ­த­மாகும். நாம் அர­சாங்­கத்தில் இல்­லாத போதிலும் நான் கோடிட்­டுக்­காட்­டிய பணி­யி­லக்­கு­களை பூர்த்தி செய்­வ­தற்கு நாம் அர­சாங்­கத்­துடன் இணைந்து பணி­யாற்ற தயா­ராக இருக்­கிறோம். இந்த பணி­யி­லக்­கு­களை பூர்த்தி செய்­வ­தற்கு அர­சாங்கம் செயற்­பாட்டு நிகழ்ச்­சித்­திட்­ட­மொன்றை ஏற்­ப­டுத்த வேண்டும் என்று நாம் விரும்­பு­கிறோம்.

இணைந்து பணி­யாற்ற வேண்டும்
வடக்கு மற்றும் கிழக்­கிற்கு விரி­வான செயற்­பாட்டு நிகழ்ச்­சித்­திட்­ட­மொன்றை அர­சாங்கம் ஏற்­ப­டுத்த வேண்டும். அத்­துடன், இந்த பணி­யி­லக்­கு­களை பூர்த்தி செய்­வதன் நிமித்தம் அந்த பிர­தே­சங்­களில் இருந்து மக்­களால் தெரி­வு­செய்­யப்­பட்ட பிர­தி­நி­தி­க­ளுடன் அர­சாங்கம் இணைந்து பணி­யாற்ற வேண்டும். அந்த வகையில் மேற்­படி பிர­தே­சங்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் 16 உறுப்­பி­னர்கள் எனது கட்­சியில் அங்கம் வகிக்­கின்­றனர்.  

அவ்­வா­றான முன்­னெ­டுப்­பொன்று இடம்­பெறும் பட்­சத்தில் அந்த நிகழ்ச்­சித்­திட்டம் பய­ன­ளிப்­பதை உறு­திப்­ப­டுத்த எம்மால் முடிந்த அனைத்து நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்வோம் என்று நாம் வலி­யுத்­து­கிறோம். இவை தொடர்ந்தும் தட்­டிக்­க­ழிக்க முடி­யாத பணி­யி­லக்­கு­க­ளாகும். நாம் இதில் ஆக்­கப்­பூர்­வ­மான வகி­பா­க­மொன்றை மேற்­கொள்வோம்.

வடக்கு முஸ்­லிம்­களின்  மீள்­கு­டி­யேற்றம் 
வடக்கில் முஸ்லிம் மக்­களின் மீள்­கு­டி­யேற்ற விட­யத்­திலும் உறு­தி­யான முன்­னேற்­றத்தை எதிர்­பார்க்­கிறோம். வடக்கின் முஸ்லிம் சமூக பிர­தி­நி­திகள், மீள்­கு­டி­யேற்ற மற்றும் புனர்­வாழ்வு அமைச்­சரின் உத்­தி­யோ­கப்­பூர்வ பிர­தி­நி­திகள், வட மாகாண முத­ல­மைச்­சரின் உத்­தி­யோ­கப்­பூர்வ பிர­தி­நி­திகள் இந்த விட­யத்­தி­லான சிக்­கல்­களை நிவர்த்தி செய்து கொள்­வ­தற்கு செயற்­ப­டு­வார்கள். 

அதன்­மூலம் முஸ்லிம் மக்­களின் மீள்­கு­டி­யேற்ற விடயம் விரைவில் பூர்த்­தி­யாகும் என்றும் நாம் நம்­பு­கிறோம். முஸ்லிம் மக்­களின் துய­ரங்கள் தொடர வேண்டும் என்று நாம் கரு­த­வில்லை. அதுதான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னதும் தமிழ் மக்­க­ளி­னதும் கொள்­கை­யாகும். வடக்கில் இருந்து இடம்­பெ­யர்ந்து சென்ற முஸ்லிம் மக்கள் சகல வச­தி­க­ளு­டனும் மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­பட வேண்டும்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு
இந்த நாடு விரைவில் புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை பெறும் என்று நாம் நம்­பு­கிறோம். அந்த அர­சி­ய­ல­மைப்­பா­னது இலங்­கையின் அனைத்து சமூ­கத்­தினர் மத்­தி­யிலும் பெரும்­பான்­மை­யாக ஏற்­றுக்­கொள்­ளப்­படக் கூடி­ய­தாக இருக்க வேண்டும். தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்­களம் என எந்த இனத்­த­வ­ராக இருந்­தாலும் இலங்­கையர் என்று தங்­களை பெரு­மை­யாக அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்­ளக்­கூ­டி­ய­தாக இது அமைந்­தி­ருக்க வேண்டும். அத்­துடன், மக்­களின் அவ­ர­வ­ரது கலா­சார, மொழி மற்றும் மத அடை­யா­ளங்­க­ளையும் அது உறு­திப்­ப­டுத்த வேண்டும். நிலைத்­தி­ருக்க கூடிய சமா­தா­னத்தைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும்.  

கடந்த காலத்தில் அள­வுக்கு மிஞ்­சிய செல­வுகள், இரட்­டிப்­பாக்­கப்­பட்ட செல­வுகள், பெரு­ம­ளவு வட்­டிக்­கான கடன்கள், ஊழல்கள், என்­ப­ன­வற்றால் தான் படு­கடன் தொகை அதி­க­மா­னது. எனினும் நாட்டை முன்­னோக்கிக் கொண்டு செல்­வ­தற்­காக அத்­தொ­கையை குறைக்­க­வேண்­டி­யுள்­ளது.

ஏற்­று­மதி அதி­க­ரிப்பு
சீனா, இந்­தியா, தென்­கொ­ரியா சிங்­கப்பூர் உள்­ளிட்ட பல நாடு­க­ளுடன் இந்த நாடு தொடர்­பு­களை கொண்­டி­ருக்­கின்­றது. இவை உட்­பட வெளி­நா­டு­களின் நேரடி முத­லீ­டு­களை அதி­கரிச் செய்­வது குறித்தும், ஏற்­று­ம­தி­களை அதி­க­ரிப்­பது குறித்தும் அர­சாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.  

இலங்­கைத்­தீவைச் சுற்றி கடல்­வ­ளங்கள் காணப்­ப­டு­கின்­ற­போதும் அதன் பயன்­களை எமது நாடு முழு­மை­யாக பெற­வில்லை. விசே­ட­மாக கிழக்கு மாகா­ணத்தில் களப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன. அவற்றில் ஆய்­வு­களை மேற்­கொண்டு உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு ஏற்­று­ம­தி­களை அதி­க­ரிக்க வேண்டும்.

மறை­மு­க­வரி
அத்தியாவசியப்பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டதாக கூறப்படுகின்றபோதும் அவை கணிசமாக குறைக்கப்படவில்லை. வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. அரசாங்கத்துக்கு எவ்விதமான பிரச்சினைகள் ஏற்பட்டாலும் கூட வறிய மக்களின் மீது மறைமுக வரிகளை ஏற்படுத்தி கடன்சுமைகளை ஏற்றப்படக்கூடாது. வறிய மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே உரிய ஏற்பாடுகளை மேற்கொள்வது பற்றி நிதி அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். 

திருமலை மாவட்டம்
நான் பிரதிநிதித்துவப்படுத்தும் திருமலை மாவட்டத்திற்கு ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் ஒரு அர்த்தபுஸ்டியான அபிவிருத்தி ஏற்படுத்தப்படவேண்டும்.  

மக்கள் மீள்குடியேற்றப்படவேண்டும், தமது சொந்தக்காணிகளில் கமத்தொழில் புரிவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும், நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும். குறிப்பாக திருமலை மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் இவ்வாறான திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.

திருமலை மாவட்டத்தின் திருக்கடலூர், மாந்தோட்டம், வீரநகர், கள்ளித்தோட்டம் போன்ற பகுதிகள் கடலரிப்பினால் பதிப்புக்குள்ளாகின்றன. அந்தப்பகுதகிளில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனக்கேட்டுக்கொள்கின்றேன் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-18#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.