Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தண்டப்பண அதிகரிப்பு விபத்துக்களை குறைக்குமா?

Featured Replies

தண்­டப்­பண அதி­க­ரிப்பு விபத்­துக்­களை குறைக்­குமா?

 

எதிர்­வரும் 2017 ஆம் ஆண்­டுக்­கான வர­வு–செ­ல­வுத்­திட்டம் தேசிய நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் போக்­கு­வ­ரத்து விதி­மு­றை­களை மீறு­வது தொடர்­பான தண்­டப்­பணத் தொகை பாரிய அளவில் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

 இவ்­வாறு போக்­கு­வ­ரத்து விதி­களை மீறு­வது தொடர்­பான தண்­டப்­பணம் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­மை­யா­னது மக்கள் மத்­தியில் ஒரு­வ­கை­யான சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

 விசே­ட­மாக ஏழு­வ­கை­யான போக்­கு­வ­ரத்து விதி­முறை மீறல்­க­ளுக்கு 25 ஆயிரம் ரூபா தண்­டப்­பணம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அதா­வது அதற்­க­மைய காப்­பு­று­தி­யின்றி வாகனம் செலுத்­துதல், சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­மின்றி வாகனம் செலுத்தல், மது­போ­தையில் வாகனம் செலுத்தல், இட­து­பக்­க­மாக வாக­னத்தை முன்­னோக்கி செலுத்தல், அனு­ம­திக்­கப்­பட்ட வேகத்தை பார்க்­கிலும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்தல், புகை­யி­ரத கடவை ஊடாக கவ­ன­யீ­ன­மாக வாக­னத்தை செலுத்தல் மற்றும் காலா­வ­தி­யான அனு­ம­திப்­பத்­தி­ரத்­துடன் வாக­னத்தை கொண்டு செல்லல் ஆகிய ஏழு­வ­கை­யான குற்­றங்­க­ளுக்கே இவ்­வாறு 25 ஆயிரம் ரூபா தண்­டப்­பணம் விதிப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவும் போக்­கு­வ­ரத்­து­த்துறை சார் தொழிற்­சங்­கங்­களும் கடந்த திங்­கட்­கி­ழமை நடத்­திய பேச்­சு­வார்த்­தை­களின் விளை­வா­கவே இந்த தண்­டப்­பண அதி­க­ரிப்பு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஆரம்­பத்தில் போக்­கு­வ­ரத்து விதி­முறை மீறல் குற்­றங்­க­ளுக்கு விதிக்­கப்­படும் தண்­டப்­ப­ண­மா­னது 2500 ரூபா­வாக அதி­க­ரிக்­கப்­ப­டு­வ­தாக அடுத்­த­வ­ரு­டத்­திற்­கான வர­வு­–செ­ல­வுத்­திட்­டத்தில் யோசனை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

 வர­வு–­செ­ல­வுத்­திட்­டத்தின் குறித்த யோச­னைக்கு எதிர்ப்பு தெரி­வித்து போக்­கு­வ­ரத்­து­த்துறை சார் தொழிற்­சங்­கங்கள் நாடு­த­ழு­விய ரீதியில் வேலை­நி­றுத்தப் போராட்­டங்­களை நடத்­து­வ­தற்கும் தீர்­மா­னித்­தி­ருந்­தன.

 எனினும் நிதி அமைச்சின் அதி­கா­ரி­க­ளுடன் நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்­தையின் பின்னர் குறித்த வேலை­நி­றுத்தம் கைவி­டப்­பட்­டி­ருந்­தது.

அதன்­பின்னர் நிதி அமைச்சின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் போக்­கு­வ­ரத்து தொழிற்­சங்­கங்­க­ளுக்­கு­மி­டையில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­யின்­போதே இவ்­வாறு ஏழு­வ­கை­யான போக்­கு­வ­ரத்து விதி­முறை மீறல்­க­ளுக்­கான தண்­டப்­ப­ணத்தை 25 ஆயிரம் ரூபா­வாக அதி­க­ரிப்­ப­தற்கு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. தற்­போது இந்தத் தீர்­மா­ன­மா­னது மக்கள் மத்­தியில் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்­கி­றது. இந்­நிலையில் இந்த விடயம் குறித்து பாரிய விமர்­ச­னங்­களும் எதிர்ப்பு கருத்­துக்­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் ஒரு­சில தரப்­பினர் வர­வேற்­று­மி­ருக்­கின்றனர்.

இது தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள நிதி இரா­ஜாங்க அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா அபே­வர்­தன அதி­க­ரிக்­கின்ற விபத்து சம்­ப­வங்­க­ளையும் விபத்­துக்­க­ளினால் நிகழ்­கின்ற உயி­ரி­ழப்­புக்­களையும் குறைக்கும் நோக்­கி­லேயே இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­தி­ருக்­கின்றார். அதா­வது வீதி விபத்­துக்­களை குறைக்கும் நோக்கில் அல்­லது வீதி விபத்­துக்­க­ளினால் உயி­ரி­ழப்­ப­வர்­களின் எண்­ணிக்­கையை குறைப்­ப­தற்­கா­கவே அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள வினைத்­தி­ற­னான திட்­ட­மா­கவே 25000 தண்­டப்­பண அறி­விப்பை பார்க்­கிறோம் எனவும் நிதி இரா­ஜாங்க அமைச்சர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். அத்­துடன் இலங்­கையில் ஒரு நாளைக்கு 7 பேர் வாகன விபத்­தினால் இறக்­கின்­றனர். 30 வாகன விபத்­துக்கள் ஒரு நாளில் ஏற்­ப­டு­கின்­றன. அது­மட்­டு­மல்­லாது 100 பேர் வரையில் காய­ம­டை­கின்­றனர். வரு­டத்­துக்கு நோக்கும் போது 23000 வாகன விபத்­துக்கள் ஏற்­ப­டு­வ­தோடு சுமார் 2400 பேர் இறக்­கின்­றனர். இவ்­வா­றான மிகவும் பயங்­க­ர­மான சூழல் இலங்­கையில் காணப்­படும் போது வீதி பாது­காப்பு சட்­ட­திட்­டங்கள் கண்­டிப்­பாக பேணப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது என்றும் இரா­ஜாங்க அமைச்சர்

லக் ஷ்மன் யாப்பா அபே­வர்த்­தன எடுத்­து­ரைத்­தி­ருக்­கிறார்.

மேலும் நாம் சமூ­கத்தின் நன்­மையை இலக்­காக கொண்டு செயற்­ப­டுத்தும் விட­யங்­களை இவ்­வாறு மக்­க­ளுக்கு தவ­றான வகையில் கொண்டு செல்ல கூடாது. குறித்த நடை­முறைக்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்ட பின்னர் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும். இந்­ந­டை­மு­றையை மாற்­று­மாறு கோருவோர் சமூ­கத்தின் நல­னுக்­கா­க அதனைக் கூறு­வ­தாக கரு­த­மு­டி­யாது. இந்­ந­டை­முறை வினைத்­திறன் கொண்­டது என்­பதில் எவ்­வித மாற்­றமும் இல்லை எனவும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். அந்­த­வகையில் அதி­க­ரித்து செல்­லு­கின்ற போக்­கு­வரத்து விபத்­துக்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு இவ்­வாறு தண்­டப்­பணம் விதிப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்கத் தரப்பில் விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால், இவ்­வாறு தண்­டப்­ப­ணத்தை அதி­க­ரிப்­பதன் ஊடாக மட்­டுமே விபத்­துக்­களை, அதனால் ஏற்­ப­டு­கின்ற உயிர் சேதங்­க­ளையும் குறைத்­து­விட முடி­யுமா என்ற கேள்வி அனைவர் மத்­தி­யிலும் எழு­கின்­றது. குறிப்­பாக போக்­கு­வ­ரத்து துறைசார் சட்ட திட்­டங்­க­ளையும் விதி­மு­றை­க­ளையும் உரிய முறையில் அமுல்­ப­டுத்­து­வதன் மூலமே விபத்­துக்­க­ளையும் உயி­ரி­ழப்­புக்­க­ளையும் தடுக்க முடியும் எனவும் இது­போன்று தண்­டப்­பணத் தொகையை அதி­க­ரிப்­பதன் ஊடாக ஆக்­க­பூர்­வ­மான மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது எனவும் ஒரு­சில தரப்­பினர் தெரி­விக்­கின்­றனர்.

எது எவ்­வா­றெ­னினும் வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ஏழு போக்­கு­வ­ரத்து விதி­முறை மீறல் குற்­றங்­க­ளுக்­கான தண்­டப்­பணம் 25 ஆயிரம் ரூபா­வாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளமை பொது­வான வகையில் மக்கள் மத்­தியில் விசனத்­தையே ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இத­னூ­டாக அர­சாங்க அதி­கா­ரிகள் ஊழல் மோச­டியில் ஈடு­படும் சந்­தர்ப்­பமே அதி­க­ரிக்கும் எனவும் மக்கள் மத்­தியில் குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­துள்­ளன.

இது தொடர்பில் கருத்­து­ரைத்­துள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மக்­களின் வரு­மான மட்­டங்­களை கருத்தில் கொண்டே இவ்­வாறு தண்­டப்­பணத் தொகையை நிர்­ண­யிக்­க­வேண்­டு­மென சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். அதா­வது ஒரு­வரின் மாதாந்த வரு­மானம் 25 ஆயிரம் ரூபா­வாக இருக்கும் போது அவர் ஒரு­முறை இவ்­வாறு விதி­முறை மீற­லுக்கு சிக்­கி­விட்டால் அவ­ரது மாத வரு­மா­னத்தை இழக்­க­வேண்­டிய நிலைமை ஏற்­ப­டலாம். அது­மட்­டு­மன்றி இரண்டு வாக­னத்தை வைத்­தி­ருக்கும் ஒருவர் தவ­று­த­லாக ஏனைய காப்­பு­று­திப்­பத்­தி­ரத்தை எடுத்­துக்­கொண்டு மற்­றைய வாக­னத்தை செலுத்­தும்­போது அவர் இவ்­வாறு 25 ஆயிரம் ரூபா தண்­டப்­ப­ணத்தை செலுத்தும் நிலை­மைக்கு தள்­ளப்­ப­டு­கின்றார். இவை எதிர்­பா­ரா­த­வி­த­மாக நடை­பெறும். தவ­றாக இருப்­பினும் பாதிக்­கப்­ப­டு­கின்­றவர் பாரிய தொகையை செலுத்­த­வேண்­டிய நிலைமை ஏற்­ப­டு­கின்­றது. இவை தொடர்பில் சிந்­தித்து தீர்­மானம் எடுக்­க­வேண்டும் என்­ப­துடன் மக்களின் வரு­மான மட்­டத்­துடன் ஒப்­பிட்டே தண்­டப்­ப­ணங்­களை நிர்­ண­யிக்­க­வேண்டும் எனவும் மஹிந்த ராஜ­பக் ஷ சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். எது எப்­ப­டி­யி­ருப்­பினும் நாட்டில் அதி­க­ரித்து செல்­கின்ற வீதி விபத்­துக்­களை கட்­டுப்­ப­டுத்தி உயி­ரி­ழப்­புக்­களை தடுப்­ப­தற்கு அர­சாங்கம் பரந்­து­பட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்டும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்­துக்கு இட­மில்லை. இது தொடர்பில் அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுக்­கும்­போது அதனை எழுந்­த­வா­ரி­யாக குறை­கூ­றி­விட முடி­யாது. குறிப்­பாக நாட்டில் தின­மொன்­றுக்கு ஏழு அல்­லது எட்­டுப்­பேரின் உயிர்­களை பறிக்கும் வகையில் விபத்­துக்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. அது­மட்­டு­மன்றி வீதியில் நடந்து செல்­கின்ற மற்றும் மஞ்சள் கட­வை­களை கடக்­கின்ற பாத­சா­ரிகள் என்­போரும் வீதி விபத்­துக்­களில் சிக்கி உயி­ரி­ழக்கும் சம்­ப­வங்­களும் அதி­க­ரித்­துள்­ளன.

அத்­துடன் குடி­போ­தையில் வாக­னங்­களை செலுத்­து­வ­தாலும் மிக வேக­மாக செலுத்­து­வ­தா­லுமே அதி­க­மான விபத்து சம்­ப­வங்கள் பதி­வா­கின்­றன.

எனவே, இந்த வகையில் விபத்து சம்­ப­வங்­களை கட்­டுப்­ப­டுத்தும் நோக்கில் அர­சாங்கம் சட்ட திட்­டங்­களை தீவிரப் ­ப­டுத்­து­கின்­ற­மையை குறை­கூ­ற­மு­டி­யாது. ஆனால் மக்­களின் வரு­மான மட்­டங்­க­ளுடன் ஒப்­பிட்டு தண்­டப்­ப­ணத்தை நிர்­ண­யிப்­பது சிறந்­த­தாக இருக்கும். காரணம் தண்­டப்­ப­ணத்தை அதி­க­ரிப்­பதன் ஊடாக மட்டும் விபத்து சம்பவங்களை கட்டுப்படுத்திவிட முடியாது.

 விபத்து சம்பவங்களை கட்டுப்படுத்தி பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துவதற்கு சட்டம் உரிய முறையில் நடை முறைப்படுத்தப்படுவதே அவசியமாகும். அதுமட்டுமன்றி வாகனத்தை செலுத்துபவருக்கும் மக்களும் போக்குவரத்துசார் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். அவ்வாறில்லாமல் வெறுமனே தண்டப் பணத்தை மட்டும் அதிகரிப்பதன் ஊடாக இவ்வாறு விபத்துக்களை குறைக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.

எனவே, அரசாங்கம் இது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது. விசேடமாக மேற்கு நாடுகளில் போன்று மிகவும் முன்னேற்றகரமான போக்குவரத்து விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் அவற்றை உரிய முறையில் செயற்படுத்துவதன் ஊடாகவே அதிகரிக்கின்ற விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும்.

 இது தொடர்பிலேயே பரந்துபட்ட ரீதியில் கவனம் செலுத்தப்படவேண்டும். இந்த விடயங்களை கருத்தில் கொண்டு அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்பதை வலியுறுத்துகிறோம். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-24#page-4

  • கருத்துக்கள உறவுகள்

பொலிசாருக்கு இனி வசூல் வேட்டை தான். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, நவீனன் said:

தண்­டப்­பண அதி­க­ரிப்பு விபத்­துக்­களை குறைக்­குமா?

இது சட்டம் ஒழுங்காக இருக்கும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு  பொருந்தும்.
ஊழலும் கையூட்டும் நிரம்பிவழியும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இந்த சட்டம் எட்டாப்பொருத்தம்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது பழைய சை க்கிள் இருந்தால் கொடுகப்பா

இவங்க சட்டம் கடைபிடிக்காதவனுக்கு பாய்வதில்லை கடைபிடிப்பவனுக்கு மட்டுமே பாய்கிறது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.