Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரின் மூன்று முக்கிய பயனாளிகள்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரின் மூன்று முக்கிய பயனாளிகள்'

* அமெரிக்கப் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியரான ஜேம்ஸ் பெட்ராஸ். பிரேசில், ஆர்ஜென்டீனா முதலிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் பாராளுமன்றப் பாதையிலிருந்து இடப்புறமாக விலகிய இடதுசாரித் தொழிலாளிகளோடு இணைந்து களப்பணி செய்தவராதலால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவாகிவரும் இடதுசாரி அரசியல் முனைப்புப் பற்றி விரிவாகப் பேசத் தகுதிவாய்ந்தவராவார். பேராசிரியர் நோம் சோம்ஸ்கியோடு இணைந்து கட்டுரைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ள அவர், தற்போது `கனேடியன் டைமென்சன்' (Canadian Dimension) என்ற இதழின் சிறப்பாசிரியராக உள்ளார். அரசு சாராத் தன்னார்வக் குழுக்களின் செயற்பாடுகள் எப்படி ஏகாதிபத்தியத்தின் ஆசி பெற்ற சேவைகளாக மாறுகின்றன என்பதை வெளிப்படுத்திய அவருடன் எஸ்.முகம்மது இர்ஷாத் மின் அஞ்சல் மூலம் நிகழ்த்தி `மாத்யமம்' மலையாள வார இதழில் வெளியாகிய உரை

யாடலின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. கேள்வி: "முதலாளித்துவத்தின் நெருக்கடி" பற்றி உலகம் முழுவதும் பரவாலகப் பேசப்படுகிறது. பல வேளைகளில் இதுதான் ஆக்கிரமிப்புக்குக் காரணம் என்றுங் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக யூரோ நாணயத்திற்கு எதிராக டொலரின் மதிப்பு தகர்ந்தது தான் ஈராக் ஆக்கிரமிப்புக்குக் காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், ஒருமுறை, "இந்த நெருக்கடிகளில் இருந்து இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புக்களுக்கு விடைகாண முடியாது" என்று நீங்கள் எழுதினீர்கள். ஆக்கிரமிப்புகளின் உண்மையான காரணங்கள் என்ன? அவற்றுக்கெதிராக உருக்கொண்டு எழும் எதிர்ப்புகளின் பண்பை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?"

பதில்: இந்த யுத்தத்தின் பின்னணியில் சக்தி வாய்ந்த அமெரிக்க - ஸியோனிஸத் திட்டங்கள் இருந்தன என்பது ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டு விட்டது. பெண்டகன், தேசிய பாதுகாப்புக் குழு சிறப்புத் திட்டச் செயலகம் உட்பட்ட அமெரிக்கப் பாதுகாப்புத் துறையை இயக்குவது இச் சக்திகள் தான். ஈராக்குக்கு எதிராகப் போலித் தடயங்களை உருவாக்குவதில் தலைமைப்பாத்திரம் வகித்த வுல் ஃபோவிட்ஸ், டக்மஸ் ஃபெயித், டேவிட் ஃபோம் ஆகிய தீமையின் அச்சு என்று பெயர் பெற்ற மூவரின் அதிகார மையங்கள் தான் யுத்தத்துக்கும், ஆக்கிரமிப்புக்கும் முதல் துடுப்பு வலித்தன என்பதைக் காண முடியும்.

அது மட்டுமல்லாது, ஆக்கிரமிப்புக்கு அனுகூலமான சூழலை உருவாக்க இஸ்ரேல் ஆதரவுக் கூட்டணி, பத்திரிகைகள் வாயிலாகவும், அமெரிக்க காங்கிரஸ் வழியாகவும் நடத்திய முயற்சிகள் சாதாரணமானவையல்ல. யுத்தம் நீண்ட காலத்துக்கு இழுபடுவது தமது நலன்களைப் பாதிக்கும் என்ற பயத்தால், பகாசுர எண்ணெய் நிறுவனங்கள் தொடக்கத்தில் யுத்தத்துக்கு எதிராக இருந்தன. ஆக்கிரமிப்பு யுத்தத்தில் லியோனிஸ ஆதரவாளர்களைக் களத்தில் இறக்கியதன் பின்னணியில், இஸ்ரேலின் கொலனி ஆதிக்கத்துக்கு எதிராக பாலஸ்தீனம் உட்பட அரபு நாடுகள் எங்கும் உருவாகி வரும் எதிர்ப்புகளை அடக்கி ஒடுக்கும் நோக்கமும் உண்டு.

கேள்வி: ஏகாதிபத்தியத்துக்கு எதிரானப் போராட்டங்களைத் தீர்மானிப்பதில் பாராளுமன்றக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்கையும், பாராளுமன்றச் சார்பற்றக் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் பங்கையும் வேறுப்படுத்திச் சொல்ல முடியுமா? யார் ஆக்கபூர்வமாகச் செயலாற்றி உள்ளார்கள் என்று கருதுகிறீர்கள்?

பதில்; மேற்கு ஆசிய நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சமர்களை ஆக்கபூர்வமாக பாராளுமன்றம் சாராத இடதுசாரி சக்திகளாலேயே நடத்த முடிந்தது. ஏனெனில், (மேற்கு ஆசியாவில்) பல பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகள் ஏகாதிபத்தியத்தின் இறப்பர் முத்திரைகள்தான். ஐரோப்பிய நாடுகளில் பாராளுமன்ற இடதுசாரிகளுக்குப் பல்வேறு தளங்களில் செல்வாக்கு இருந்தாலும் யுத்த எதிர்ப்பு நிலைப்பாடு பற்றி அவர்கள் கொள்கை ரீதியான முடிவுகளையே எடுத்தனர். அத்தகைய நிலைப்பாடுகள் முற்றிலும் செயலிழந்தும், கிட்டத்தட்ட அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் அமைந்தன.

மேற்கு ஆசியாவில், அமெரிக்கத் தலைமையின் நர வேட்டைக்கு எதிராகக் கருத்து தெரிவித்த சுமார் 3 இலட்சம் மதச்சார்பற்ற, இறை நம்பிக்கையாளர்களான இராணுவ, காவல்துறைப் பணியாளர்கள் பணிநீக்கப்பட்டனர். அதை நியாயப்படுத்த, அவர்கள் சுதந்திரமான தனி முஸ்லிம் தேசத்தை உருவாக்கப் பின்னணிக் குரல் கொடுப்பதாகக் குற்றம் சாட்டினார்கள். ஐரோப்பா உட்பட மேற்கு ஆசியாவுக்கு வெளியே உள்ள பல நாடுகளிலும் சுதந்திரச் சிந்தனையாளர்களின் அனுபவம் இத்தகையதே.

கேள்வி: ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் பல அரசியற் சார்பற்ற அமைப்புகள் உலகெங்கும் செயற்படுகின்றபோதும், அவற்றின் செயற்பாடுகள் எவற்றாலும் அமெரிக்கக்கூட்டணியின் ஆக்கிரமிப்புகளையும், அவற்றைத் தொடரும் மோதல்களையும் தடுக்க முடியவில்லை. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இதற்குப் பின்னால் ஏதேனும் நோக்கங்கள் புதைந்துள்ளன என்று கருதுகிறீர்களா?

பதில்: இத்தகைய அமைப்புகளின் சக்தி ஈராக்கின் உள்நாட்டு எதிர்ப்புகளின் அடிப்படையில் மாறிமறைந்து கொண்டிருக்கிறது. காரணம், ஒரு டஸினுக்கு மேலான கூட்டணி நாடுகள் ஈராக்கிலிருந்து தங்களது படைகளை மீள அழைத்து விட்டன. இதற்கு தூண்டுகோலாய் அமைந்தது. இது தோல்வியடைந்த ஒரு யுத்தம்' என்பது மட்டுமல்ல, உள்நாட்டில் இது சம்பந்தமாக அலையடிப்புகள் தொடர்வதும் தான்.

அமெரிக்கப்படையினர் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட (காயமுற்ற/இறந்த) படைவீரர்களை மீளப்பெற்றுள்ளனர். யுத்தத்தின் தொடக்க நாட்களில் 15 சதவீதமாக இருந்த மக்கள் எதிர்ப்பு கடந்த ஜூனில் 65 சதவீதமாக உயர்ந்துவிட்டது. அரசியல் சாராத குழுக்களும் இயக்கங்களும் இந்த நிலைப்பாட்டுடன் ஒத்திசைந்து நீண்ட காலம் நிற்க முடியாது. திடீர்ப் பிரச்சினைகள் மூலமே இத்தகைய அமைப்புகள் வளர்ச்சி அடைய முடியும்.

எடுத்துக்காட்டாகப், ஏகாதிபத்தியத் தன்மை உள்ள ஆட்சி பீடங்களைத்தான் இத்தகைய அமைப்புகள் பெரும்பாலும் குறிவைக்கின்றன. அது வேளாண் நவீனமயமாக்கல் சம்பந்தமாகவோ, தொழில் நெருக்கடி பற்றியோ, தனியார் மயமாக்கப்பட்ட இயற்கை வளங்களை தேச உடைமை ஆக்குவது குறித்தோ இருக்கும். இப்படி தடாலடியாய் முன்னேறுவதன் மூலம் அதிகாரத்தை நிர்ணயிக்கவும், இத்தகைய தேவைகளையோ பிரச்சினைகளையோ சரிக்கட்ட வாய்ப்புக் கிடைக்கலாம். யதார்த்தத்தில் இத்தகைய முன்னேற்றந் தான் அவற்றின் பலவீனமும் ஆகும்.

கேள்வி: அமெரிக்காவின் பின் துணையோடு செயற்படும் மேற்கத்தியமயமாக்கலைத் தடை செய்யும் பொருட்டு, சுதந்திரச் சிந்தனைப் போக்கிலிருந்து தீவிர மதவாதத்தை நோக்கி ஈராக் மக்கள் பெயர்கிறார்கள் என்று கருதுகிறீர்களா? இந்த யுத்தம் அரபுச் சமூகம் முழுமைக்கும் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்ற வாதம் எவ்வளவு தூரம் சரியானது?

பதில்: இத்தகைய சிந்தனைச் சுதந்திரம் பற்றிப் பேசுவோர் பலர் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வசிக்க நேர்ந்த வணிக சமூகத்தினரும் அறிவுஜீவிகளும் ஆவர். அவர்களில் பலரும் ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டபின் உள்ளே நுழைந்தவர்கள். ஆனால், அவர்களுடைய செயற்பாடுகள், பலவேளைகளில், ஆக்கிரமிப்புக்கு எதிராகத் திரளும் தேசிய உணர்வில் திளைத்த முன்னகர்வுகளை ஒன்றுபடுத்தத் தடையாக உள்ளன. அமெரிக்கப் படைகள் பெரும் நாசம் விளைவித்த பஸ்ராவிலும் இதனைக் காண முடியும். பல வேளைகளில் இத்தகைய அமைப்புகளை, குறிப்பாக ஆக்கிரமிப்போடு சேர்ந்து ஈராக்கில் நுழைந்த அமைப்புக்களைக் கண்காணித்து நிலைநிறுத்தி வருவோர் அமெரிக்கப் படைத் தளபதிகளே.

மற்றொரு விடயம், மேற்கு ஆசிய நாடுகள் யாவுமே அரபு தேசியவாத மதவாத உணர்வுகளில் ஊறிய சமூகங்களல்ல. அவர்களிடையே மதச்சார்பற்றவர்களும், சோஷலிசவாதிகளும், சுதந்திரச் சிந்தனையாளர்களும், மதவாதிகளும் உள்ளனர். இதைப் பல தருணங்களில் ஈராக்கிலுங் காணலாம். ஆனால், மதவாதிகளால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களும், பெருஞ் சொத்தும், பலவேளைகளில், குறிப்பாக யுத்த காலத்தில், தமது நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு, மதச் சார்பற்றவர்களை ஈர்ப்பதுண்டு, இன்று அவை இரண்டையும் வேறுபடுத்திக் காட்டும் அளவீடுகள் இல்லை என்றே கூறலாம்.

கேள்வி : முஸ்லிம் சமூகமும் மேற்கத்திய சமூகமும் தம்மிடையே உள்ள வேறுபாடுகளை `நாகரிகங்களின் மோதல்' என்று சில வேளைகளில் சொல்வதுண்டு. குறிப்பாக, பல வேளைகளில், அமெரிக்கா உட்பட சக்திகள், நவநாகரிக மேற்கத்திய சமூகமும் காட்டு மிராண்டித் தனமான முஸ்லிம் சமூகமும் என்ற அடிப்படையில், மேற்கு ஆசியச் சமூகங்களை நவீனத்துவ மதிப்பீடுகட்குக் புறங்காட்டி நிற்கின்ற சமூக அமைப்புகள் என்றவாறு தான் கணக்கிலெடுக்கிறார்கள். எடத்துக் காட்டாக, இந்த யுத்தத்தை `ஜனநாயகப் பாதுகாப்பு போர்' என்றார்கள். இதை எப்படி மதிப்பிடுகிறார்கள்? அவர்கள் சொல்வது தான் சரியென்றால், வரலாறு இந்த யுத்தத்தை எப்படிச் சித்திரிக்கும்?

பதில் : முன்னர் குறிப்பிட்டது போல், இந்த ஆக்கிரமிப்பை தூண்டிய காரணிகளில் முதன்மையானதென்றாலும், அது இஸ்ரேலும் அமெரிக்காவும், குறிப்பாக புவியியல் ரீதியாக மேற்கு ஆசியாவின் முக்கியத்துவம் தொடர்பாக, தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற வடிவமைத்துக் கொண்டதாகும். இந்த ஆக்கிரமிப்பு யுத்தம், தேசிய முன்னேற்றத்தின் தலைக்கு மேலாக அநீதியாக முதலாளித்துவம் நடத்திய யுத்தம் என்பதையுங் காணலாம். ஜனநாயகப் பாதுகாப்பு என்பது யுத்தத்துக்கு ஒரு காரணம் கற்பித்தல் மட்டும் தான்.

`நாகரிகங்களின் மோதல்' பற்றிச் சொல்வதானால், பண்பாட்டு வேறுபாடுகள் நூற்றாண்டுகளாக நிலவி வருகின்றன. யுத்தத்துக்கு முன்பும், பின்பும் பண்பாட்டு இயங்கியல் தொடரும், பண்பாட்டு மோதல்கள், மதரீதியாக அமைந்தாற் கூட, தம்மளவில் ஒரு யுத்தத்துக்கு வழி வகுக்கா. அத்தகைய வரலாற்றுச் சூழல்கள் இன்று நிலவவில்லை. ஆனால், பொருளாதாரம், அரசியல் தத்துவம் சார்ந்த காரணங்கள் மோதல்களுக்கும் யுத்தத்துக்கும் வழி வகுக்கும். இன்று இத்தகைய மோதல்களுக்கு வாய்ப்பு அதிகம்.

கேள்வி : இந்த யுத்தம், பாலஸ்தீனத்துக்குப் பிறகு மேற்கு ஆசியாவில் நிரந்தரக் கலவர மையம் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்காகக் கருதுகிறீர்களா?

பதில் : குறுகிய காலத்தில் இப் பிரச்சினைக்குப் பரிகாரம் காணப்படலாம் என்று கருத இடமில்லை. இங்கே இரண்டு விடயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்க- ஐரோப்பிய காலூன்றலுக்கு எதிராக வீரியமிக்க எதிர்ப்பு ஓங்கி வருகிறது. அத்தோடு, தொடக்கத்திற் சொன்ன காரணங்களுக்கு மேலாகப் புதிய காரணங்களும் இருப்பதால் தான் தாங்கள் ஈராக்கில் தொடர்ந்து இருக்க வேண்டி இருக்கிறது என்று அமெரிக்கா செல்லி விட்டது.

இப்போது இதனை `முன்கருதல் யுத்த தந்திரம்' என்று குறிப்பிடுகிறார்கள். இது மேற்கு ஆசிய நாடுகளில் நிரந்தரமாக காலூன்றி நிற்க அமெரிக்க ஏகாதிபத்தியம் முயல்கிறது என்பதையே காட்டுவதுடன் உலகமெங்கும் பயங்கரவாத எதிர்ப்பு முனைப்புகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தான் முன்னேற்றுகின்றன.அதனால் இந்த ஐயத்தை முற்றாக நிராகரித்து விட முடியாது.

கேள்வி : பயங்கரவாதம் தேசிய Aளவிலும், சர்வதேச அளவிலும் பல சர்ச்சைகளை உருவாக்கி விட்டது. அதனுடைய பொருளாதாரத் தத்துவத்தை எப்படி மதிப்பிட முடியும்? முடிவில் அது யாருக்கு இலாபமாக அமையும்? அதன் பின்னணியில் உள்ள முக்கிய சக்திகளை (அரசியல், பொருளியல்) எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

பதில்: `பயங்கரவாத எதிர்ப்பு யுத்தம்' என்பதற்கு மூன்று முக்கிய பயனாளிகள் உள்ளனர். முதன்மையான ஆதாயம் பெறுவது இஸ்ரேலிய ஆட்சிபீடமே. ஏனெனில், யுத்தத்தின் மறைவில் குடியேற்றத்தை அதிகரிக்க இயலுவதோடு, நடக்கும் ஆக்கிரமிப்பு முயற்சிகளை அதன் பெயரில் நியாயப்படுத்த முடியும். இரண்டாவதாக வருவோர், பேரழிவு ஆயுத வியாபாரிகள், இவர்களால் திரை மறைவிற் கொள்ளை இலாம் ஈட்ட முடியும்.

அதன் மூலம் பெருமளவில் பெற்றோலியம் உட்பட இயற்கை வளத்தைச் சுரண்ட முடியும். இத்தகைய ஆக்கிரமிப்புகள் அமெரிக்க ஆட்சி பீடத்தின் கொள்கைகளை உலகம் முழுதும் பரப்ப உதவி செய்கின்றன. அத்தோடு, அதிலிருந்து ஆதாயம் பெறுகின்ற ஒரு புதிய முதலாளித்துவச் சக்திகளின் கூட்டம் உயர்ந்து வந்துள்ளது. அவர்களுக்கு இந்த யுத்தம் அமுதசுரபியாக உள்ளது.

கேள்வி: இன்றைக்கு அரபு சமூகங்களில் நிலைவும் அரசியல் நிலவரம் எவ்வகையிலேனும் பயங்கரவாதத்துக்குத் துணை போகின்றது என்று கருதுகிறீர்களா?

பதில் : ஆட்சி அதிகாரத்தின் பயங்கரவாதம் என்றால், நிகழ் காலத்தில் அது அதிகம் வெளிப்படுவது அமெரிக்காவினது இஸ்ரேலினதும் சில ஐரோப்பிய நாடுகளினதும் நடவடிக்கைகளில் தான். இந்த நாடுகளின் பணத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்திப் பயங்கரவாதம் படர்த்துகிற பல தற்கொலை படைகளும் கொலனிய இராணுவத்தினரும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். உள்நாட்டில் இ

-தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல தகவல்கள் நிறைந்த இந்த கட்டுரையை யாழில் இணைத்தமைக்கு கந்தப்பு அண்ணரே உமக்கு என் நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.