Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் அஞ்சலி நிகழ்வுகள்

Featured Replies

தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் அஞ்சலி நிகழ்வுகள்
தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் அஞ்சலி நிகழ்வுகள்

 

(3ஆம் இணைப்பு)

தமிழ் மக்களின் விடுதலைக்காக தம்முயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களி்ன் அஞ்சலி நிகழ்வு கள் இன்றுமாலை கிளிநொச்சி-கனகபுரம் மற்றும் முழங்காவில்,வன்னிவிளாங்குளம் துயி லுமில்லங்களில் மாலை6.05 மணிக்கு   மணி ஒலி எழுப்பி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்ப ட்டுள்ளது.

கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்,முழங்காவில் துயிலுமில்லத்தில்நாடாளுமன்ற உறுப்பினர் மாவை னோதிராஜா,மல்லாவி வன்னிவிளா ங்குளம்  துயிலுமில்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்க்கந்தராசா பொதுச்சுட ரை  ஏற்றி வைத்தனர்.

இந் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், யாழ் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் என ஆயிரக்கணக்கானோர் மாவீரா்களுக்கு மலர்தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். 

கிளிநொச்சியில்

1480257171_27-11-2016%2019.11.47%201.jpg

1480256380_27-11-2016%2019.11.20%204.jpg

1480256458_27-11-2016%2019.11.56%203.jpg

முழங்காவிலில்

1480256416_download%20%281%29.jpg

1480256479_download.jpg

1480256595_download%20%282%29.jpg

வன்னிவிளாங்குளத்தில்

unnamed%20%2812%29.jpg

unnamed%20%2819%29.jpg

unnamed%20%2818%29.jpg

1480258046_unnamed%20%289%29.jpg

unnamed%20%2810%29.jpg

unnamed%20%2813%29.jpg

unnamed%20%2814%29.jpg

unnamed%20%2816%29.jpg

unnamed%20%2815%29.jpg

unnamed%20%2811%29.jpg

யாழ் குருநகர் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில்

15218729_806885776117173_1846942368_n.jpg

தமிழ் தேசிய மக்கள் முன்னணி   அலுவலகத்தில்

15227876_806886936117057_261747095_n.jpg

நல்லூரில் கிட்டுப்பூங்காவில்

15227854_806905499448534_190630933_n.jpg

யாழ் பல்கலைக்கழத்தில்

15281062_806880606117690_393260102_n.jpg

15211567_806880712784346_1980541295_n.jpg

15226553_806880756117675_980027074_n.jpg

(2ஆம் இணைப்பு)

தமிழ் மக்களது விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களது வணக்க நிகழ்வுகள் இன்று மாலை கிளிநொச்சி - கனகபுரம் மற்றும் முழங்காவில் துயிலுமில்லங்களில் இடம்பெறவுள்ளன.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த வணக்க நிகழ்வையொட்டி கனகபுரம்,முழங்காவில் மாவீரர் துயிலுமில்லங்கள் மஞ்சள் – சிவப்பு கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

உயிர்நீத்த மாவீரர்களது கல்லறைகள்  இராணுவத்தினரால் சேதமாக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு எஞ்சியிருக்கும் கல்லறைகள் மீள புனரமைக்கப்பட்டுள்ளதுடன் சுடரேற்றுவதற்கான ஏற்பாடுகளும் கல்லறைகளுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன..

27-11-2016%2015.11.9%204.jpg

27-11-2016%2015.11.19%206.jpg

27-11-2016%2015.11.35%205.jpg

27-11-2016%2015.11.45%207.jpg

தமிழ் மக்களின் விடுதலைக்காக தம்முயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களி்ன் நினைவுதினம் இன்றாகும்.இதன்படி இன்றுமாலை 6.05 மணியளவில்தமிழர் தாயகப்பிரதேசமெங்கும் உணர்வெழுச்சியுடன்  அமைதியானமுறையில்   நினைவு கூரப்படவுள்ளது மாவீரர் தினம்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட கிளிநொச்சி கனகபுரம்,முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம்,முழங்காவில்  துயிலுமில்லங்கள் இன்றைய மாவீரர் நாளுக்காக  மக்களால் கடந்த இரண்டு நாட்களாக துப்புரவு செய்யப்பட்டுள்ளன.

ltte3.jpg

கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் இராணுவத்தால் உடைக்கப்பட்ட மாவீரர் துயிலும் கல்லறைகளை ஒன்று சேர்த்து அதன் மேல் மாவீரர் தீபம் ஏற்றி மாவீரர் நாளை அனுஷ்டிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி வரையில் மாவீரர்களின் வித்துடல்களும்   நினைவு தூபிகளும்  கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் வைக்கப்பட்டுள்ளன.

Kanagapuram-News-720x480.jpg

இங்கு 2150 மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டதுடன் 1000 நினைவுத் தூபிகள் அமைக்கப்பட்டும் உள்ளன. கடந்த 2009 ஆம் ஆண்டு மஹிந்த ஆட்சியின் போது இராணுவத்தினர் குறித்த பகுதியை கைப்பற்றிய பின்னர் மாவீரர்களின் நினைவு தூபிகளை உடைத்து தரைமட்டமாக்கியிருந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் குறித்த பகுதி இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது. இதனையடுத்து, உடைக்கப்பட்ட கல்லறைகளை ஒன்று சேர்த்து அதன் மேல் வீர மரணம் அடைந்த மாவீரர்களின் நினைவை அனுஷ்டிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1480220848_download.jpg

அதேபோன்று வன்னிவிளாங்குளத்திலும் மாவீரர் நினைவுதினத்தினை அனுஷ்டிக்க அனைவரையும் வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அழைப்புவிடுத்துள்ளார்.

அதேபோன்று ஜனநாயகப்போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்றுமாலை உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில்மாவீரர்நாள் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

 அதேவேளை   மன்னார் – மடு – பண்டிவிரிச்சான்  மாவீர் துயிலும் இல்லத்திலும்  அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றவுள்ளன.

இந்த அஞ்சலி நிகழ்வுகள் உயிர்நீத்த மாவீரர்களின் குடும்பங்கள் தலைமையில் இடம்பெற்றவுள்ளன. 

இந்த நிகழ்வுகளில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், மாவீரர்களின் குடும்பங்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர். 

இதேவேளை,   இன்று மாலை 6.05 அளவில்  முல்லைத்தீவு  மாவட்டத்தில் மாவீரர்களின் குடும்பங்கள் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள்  இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் தாயகப்பிரசேமெங்கும் இன்றைய மாவீரர் நாளினை அமைதியானமுறையில்   அனுஷ்டிக்குமாறு தமிழ் அரசியல் கட்சிகள், சமுக அமைப்புகள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

http://www.onlineuthayan.com/news/20714

  • தொடங்கியவர்

இலங்கை: போரில் இறந்தோரை நினைவு கூரும் மாவீரர் தினம் அனுசரிப்பு

 

இலங்கையில், கிழக்கு மாகாணத்திலும் போர்க்காலத்தில் மரணித்த விடுதலைப்புலிகளை நினைவு கூரும் மாவீரர் தினம் தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றன.

கிழக்கு பல்கலைக் கழக தமிழ் மாணவர்கள்
கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள்

கிழக்கு பல்கலைக்கழகம் வந்தாறுமுலை வளாகத்திலுள்ள பிள்ளையார் ஆலயத்தில், விடுதலைப்புலிகளின் மாவீரர்கள் நினைவாக சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து நினைவு சுடரேந்தல் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வில் குறிப்பாக ஏற்பாட்டாளர்களான தமிழ் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கிழக்கு பல்கலைக் கழக தமிழ் மாணவர்கள்

 கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள்

மட்டக்களப்பு நகரில் இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நினைவு சுடரேற்றல் நிகழ்வில், அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மாகாண சபை உறுப்பினர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் விடுதலைப்புலிகளின் மாவீரர்கள் கல்லறை ஏற்கனவே அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லம் என கூறப்படும் இடத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் நினைவு தீபம் ஏற்றினார்.

மட்டக்களப்பு மாவட்;டத்தில் சில பிரதேசங்களில் விடுதலைப்புலிகளின் மாவீரர்களை நினைவு கூறும் வகையிலான பிரசுரங்களும் வெளியாகியிருந்தன.

செங்கலடி பிரதேசத்தில் வெளியிடப்பட்ட பிரசுரமொன்றில் விடுதலைப்புலிகளின் இலச்சினை காணப்பட்ட போதிலும், எந்தவொரு அமைப்பின் பெயர்களும் அதில் குறிப்பிடப்படவில்லை.

http://www.bbc.com/tamil/sri-lanka-38122094

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னவோ பயமாக இருக்கு...பெரும்பான்மை இனத்திடமிருந்தோ ...அரசிடமிருந்தோ எந்த  வித எதிர்ப்பும் இல்லை..அமைதி ..இது எம்மை கொண்டுபோய் பெருங்குழியில்  தள்ளும் சதியாக இருக்கலாம்..என்ன பாதிப்பை ஏர்படுத்துமோ தெரியாது...இவ்வளவு அமதி நான் கண்டதில்லை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, alvayan said:

எனக்கு என்னவோ பயமாக இருக்கு...பெரும்பான்மை இனத்திடமிருந்தோ ...அரசிடமிருந்தோ எந்த  வித எதிர்ப்பும் இல்லை..அமைதி ..இது எம்மை கொண்டுபோய் பெருங்குழியில்  தள்ளும் சதியாக இருக்கலாம்..என்ன பாதிப்பை ஏர்படுத்துமோ தெரியாது...இவ்வளவு அமதி நான் கண்டதில்லை...

சத்தியமாய் நானும் இதைத்தான் யோசித்தேன்......ஏதோ ஒரு சதி நிறைந்திருக்கு.

அவர்கள் ஆளுமை இருந்த காலத்தை விட வெகு சுதந்திரமாக மாவீரர் நினைவுகள் அனுஷ்டிக்கப்பட்டிருக்கின்றன.

அழிக்க அடையாளம் தேடுகின்றார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை...சாமியார்.....காவிகள்,ஆமிகள்...ஒருவருமே மூச்சு விடவில்லை...புரட்சி அல்லது ..தீர்வுப் பொதியில் மண் தான் இருக்கும்..அல்லது ட்ரம்பிடம் போய் காலில் விழுந்து....என்னுமொரு முள்ளீ வாய்க்கால் நடக்கும்...அல்ல்து ஆமி பிடித்த காணிகள்  திரும்ப எடுப்பார்கள்.. இது நாளையே தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

மூச்,  ராஜதந்திரம்.

சம்பந்தர், வருட இறுதிக்குள் தீர்வு கண்டிடுவோம் எண்டார். இதைத்தான் சொன்னவரோ?  இதோட எல்லாத் தீர்வும் அடக்கம். நாளைக்குப் பாருங்கோ சம்பந்தர் சாணக்கியர் சாதிச்சுப்போட்டார் எண்டு சிலபேர் கூவுவினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.