Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுபல சேனாவின் ஞானாசார தேரர் இந்தியாவினால் நாடுகடத்தல்

Featured Replies

பொதுபல சேனாவின் ஞானாசார தேரர் இந்தியாவினால் நாடுகடத்தல்

[
gnanashara%20thero%20894d.jpg

தமிழ், முஸ்லிம் ஆகிய சிறுபான்மையின சமூகங்களை கள்ளத் தோணிகள் என்றும் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதாகவும் சூளுரைத்துவரும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரரை இந்திய குடிவரவுத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்தியாவின் புத்தகாயாவிலுள்ள மகாபோதி விகாரையில் வருடாந்தம் நடைபெறும் “சாஞ்சி மேலா என்ற மகாபோதி உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற நிலையிலேயே நேற்றைய தினம் இரவு ஞானாசார தேரர் இந்திய அதிகாரிகளினால் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றார்.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் சில வாரங்களுக்கு முன்னர் கலகொட அத்தே ஞானாசார தேரர், இரட்டை நுழைவு விசாவொன்றை பெற்றுக்கொண்டு இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தியா சென்றுள்ளார்.

தனது இந்திய விஜயத்தின் போது இந்தியாவில் இருந்து நேரடியாக நேபாளத்திற்கும் சென்றுள்ள ஞானாசார தேரர், அங்கிருந்து மீண்டும் இந்தியாவிற்கு சென்று ஸ்ரீலங்கா திரும்பியுள்ளார்.

இதனையடுத்து நேற்று மாலை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சாஞ்சி மேலா நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்ற நிலையிலேயே இந்திய குடிவரவுத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு உடனடியாக ஸ்ரீலங்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றார்.

விசா அனுமதி முடிவடைந்த நிலையிலும், அதுகுறித்து தெரியாத நிலையில் சென்றதாலேயே ஞானாசார தேரர் திருப்பி அனுப்பப்பட்டதாக இந்திய தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நேற்று முன்தினமே பொதுபல சேனா பொதுச் செயலாளர் ஞானாசார தேரர் இந்தியாவிற்கு செல்வதற்கு விமானப் பயணத்திற்கான டிக்கட்டை பதிவு செய்திருக்கின்றார்.

எனினும் குறித்த நேரத்திற்கு அவர் விமான நிலையத்திற்கு செல்லாததால் அவர் பதிவுசெய்திருந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

 

இதனால் விமானத்தை தவறவிட்ட ஞானாசார தேரர் மீண்டும் நேற்றைய தினத்திற்காக விமானப் பயணத்திற்கு டிக்கட்டை பதிவுசெய்து சென்ற நிலையிலேயே இந்திய குடிவரவுத்துறை அதிகாரிகளால் விமான நிலையத்தில் வைத்தே தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://ibctamil.com/news/index/34073

  • தொடங்கியவர்
வெளியேற்றப்பட்டார் ஞானசார தேரர்
 
27-11-2016 11:08 PM
Comments - 0       Views - 44

article_1480304342-BBS.jpgதமிழ், முஸ்லிம் ஆகிய சிறுபான்மையின சமூகங்களை கள்ளத் தோணிகள் என்றும் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதாகவும் சூளுரைத்து வரும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை, இந்திய குடிவரவுத்துறை அதிகாரிகள், விமான நிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பியுள்ளனர். 

இந்தியாவின் புத்தகயாவிலுள்ள மகாபோதி விகாரையில் வருடாந்தம் நடைபெறும் ‘சாஞ்சி மேலா’ என்ற மகாபோதி உற்சவத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்ற நிலையிலேயே, சனிக்கிழமை இரவு ஞானாசார தேரர், இந்திய அதிகாரிகளினால் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றார் என்று இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது. 

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் சில வாரங்களுக்கு முன்னர் கலபொடஅத்தே ஞானாசார தேரர், இரட்டை நுழைவு விசாவொன்றை பெற்றுக்கொண்டு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இந்தியா சென்றுள்ளார். 

தனது இந்திய விஜயத்தின் போது, இந்தியாவிலிருந்து நேரடியாக நேபாளத்துக்கும் சென்றுள்ள ஞானாசார தேரர், அங்கிருந்து மீண்டும் இந்தியாவுக்குச் சென்று இலங்கை திரும்பியுள்ளார். 

இதனையடுத்து, நேற்றைய தினம் மாலை, கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ‘சாஞ்சி மேலா’ நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்ற நிலையிலேயே இந்திய குடிவரவுத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றார். 

வீசா அனுமதி முடிவடைந்த நிலையிலும், அது குறித்து தெரியாத நிலையில் சென்றதாலேயே ஞானாசார தேரர் திருப்பி அனுப்பப்பட்டதாக இந்திய தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை, வெள்ளிக்கிழமையே பொதுபல சேனா பொதுச் செயலாளர் ஞானாசார தேரர் இந்தியாவுக்குச் செல்வதற்கு விமானப் பயணத்துக்கான டிக்கட்டை பதிவு செய்திருக்கின்றார். 

எனினும், குறித்த நேரத்துக்கு அவர் விமான நிலையத்துக்கு செல்லாததால் அவர் பதிவுசெய்திருந்த விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தி,லிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. 

இதனால் விமானத்தை தவறவிட்ட ஞானாசார தேரர், மீண்டும் சனிக்கிழமைக்கான விமானப் பயணத்துக்கான டிக்கட்டை பதிவுசெய்து சென்ற நிலையிலேயே, இந்திய குடிவரவுத்துறை அதிகாரிகளால் விமான நிலையத்தில் வைத்தே தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/187016/2016-11-28-03-39-38#sthash.5tg5LAer.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

 ஞானசார  தேரர்.... ஊருக்கு, வந்து..
இந்தியாவை... கிளி கிளி என்று கிழிக்கப் போறார். 
எமக்கு கொண்டாட்டம் தான்..... :grin:

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நவீனன் said:

வீசா அனுமதி முடிவடைந்த நிலையிலும், அது குறித்து தெரியாத நிலையில் சென்றதாலேயே ஞானாசார தேரர் திருப்பி அனுப்பப்பட்டதாக இந்திய தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலையங்கத்தை பார்த்தால் எதோ இந்தியா சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து சொன்னபடியால் திருப்பியனுப்பினமாதிரியிருக்கு ....ஆனால் விசா முடிஞ்ச படியால் திருப்பி அனுப்பியிருக்கினம்....

  • கருத்துக்கள உறவுகள்

 அப்பிடித்தான் நானும் முதலில்  நினைச்சேன். தமிழரை பூண்டோடு அழிப்பதுதான் அதன் இலக்கு, ஆகையால் அப்பிடியான ஒரு தவறை இந்தியா செய்யாது.  உதெல்லாம் ஊடகங்களின் குசும்பு வேலை. இந்தியாவின் சுரணை கெட்டவிதம்  சிங்களவனுக்கு தெரியும். பேசுறதெல்லாம் பேசிப்போட்டு தைரியமாய் போய், மரியாதையாய் வாறாங்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.