Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு குடும்பம் ஒரு தடையா?

Featured Replies

பெண்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு குடும்பம் ஒரு தடையா?

இவள்

நன்றி : தினக்குரல்

எனக்கு மிகவும் நெருக்கமான நண்பி ஒருவர் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் மட்டுமல்லாமல் திறமையான எழுத்தாளரும் கூட. பல சிறுகதை, கவிதை நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களின் பின்னர் அவரைச் சந்தித்த போது அவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி இருந்தார்.

அவருக்கு பிடித்தமான இலக்கியத் துறை பற்றிப் பேசிய போது... இப்போது தனக்கு முன்னரைப் போல் எழுத்தில் ஆர்வம் இல்லை எனவும், திருமணம் ஆனவுடன் ஒரு கவிதை கூட எழுத முடியவில்லை. எழுதுவதற்கும் சிந்திப்பதற்கும் நேரம் இல்லை. பிள்ளைகளின் அலுவல்கள் பாடசாலை விடயங்கள்... மின்சார, தண்ணீர், தொலைபேசி `பில்' கட்டச் செல்வது, வங்கி, சந்தை அலுவல்கள், மாலையில் மூத்த மகளை நடன வகுப்புக்குக் கூட்டிச் செல்வது, காலையில் கடைசி மகனை பாலர் வகுப்புக்கு கூட்டிச் செல்வது சமையல் ஏனைய வீட்டு வேலைகள் அத்தனையும் இவரே செய்கிறார். கணவர் ஒரு வைத்தியர். காலையில் போனால், இரவு தான் வருவார். இந்த நிலையில் தனக்குச் சிந்திக்கவும் எழுதவும் எங்கே நேரம் இருக்கிறது என்று அங்கலாய்த்தார்.

திருமணத்திற்கு முன் பலராலும் அறியப்பட்ட பாராட்டப்பட்ட ஒரு சிறந்த இலக்கிய வாதி இன்று திருமணம் என்னும் பந்தத்துள் சென்றதும் மறைந்து விட்டாள்? அல்லது மறைத்துக் கொண்டு விட்டாள்? ஏன்...? இதுவே ஒரு ஆணாக இருந்திருந்தால் திருமணம் அவனது திறமைக்கு தடை போட்டிருக்குமா?

இன்னொருத்தி பொருளியல் பட்டதாரி. திருமணத்திற்கு முன் வேலை பார்த்தாள். திருமணத்தின் பின்னர் அதனை விட்டு விட்டாள். அவளுக்கும் மூன்று குழந்தைகள். மிகவும் திறமையான அவள் தன் திறமைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு தன் கணவர், தன் குழந்தைகள் என்னும் வட்டத்தினுள் வாழப் பழகிக் கொண்டாள். வீட்டு வேலை, வெளி வேலை, எல்லாம் அவள் தான். எந்தப் ெபாழுது போக்கும் இல்லை. கணவருக்கு ஊரூராகச் சுற்றும் வேலை என்பதால் தினமும் வீட்டுக்கு வருவது கிடையாது... இந்த வாழ்க்கையை அவள் சந்தோஷமாகத் தான் வாழ்கிறாள். தன் திறமையும் படிப்பும் வீணாகிவிட்டதே என்ற ஒரு சிறு கவலை கூட அவளுக்கில்லை. இது ஏன்? திருமணம், குடும்பம் என்று வந்து விட்டால் இவற்றை தியாகம் செய்வது பெண் என்ற முறையில் தவிர்க்க முடியாது. இவ்வாறு செய்வது தான் பெண்ணில் இயல்பு, வழமை என நினைக்கிறார்களா?

இவர்கள் வற்புறுத்தலின்றி தாமாகவே இதனை ஏற்றுக் கொள்கிறார்கள். தன் குழந்தைகளின் சுறுசுறுப்பு, குறும்புகள், புத்திக் கூர்மை என்பன குறித்து தாய் என்னும் வகையில் பெருமைப்படவும் செய்கிறார்கள். ஆனால் இதற்காக அவர்கள் கொடுக்கின்ற விலை...?

குடும்பம், குழந்தைகள் என விரிவடையும் வாழ்க்கை. பெண்களின் தனிப்பட்ட வளர்ச்சியைக் குறுக்கி விடுகிறதா? கணவர், குழந்தைகள் அவர்களுடைய படிப்பு மற்றும் எதிர்காலத்திற்காகத் தமிழ்ப் பெண் தன்னையே தியாகம் செய்கிறாளா?

இந்தியாவில் மூத்த பெண் எழுத்தாளர் ஒருவர் குழந்தை பெற்றுக் கொள்வதில்லை எனத் தானும் தன் கணவரும் முடிவெடுத்திருப்பதாகவும், எழுத்து மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபடுவதற்கு இது தடையாக இருக்கும் எனக் கருதியதால் அப்படியொரு முடிவெடுத்திருப்பதாகவும் கூறியதாக எங்கோ படித்த ஞாபகம். இப்படிப்பட்ட மனோபாவம் இன்று பெருகி வருவது போல் தெரிகிறது.

குடும்பத்தில் போதிய வசதிகள் வரும்வரை குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடுகிறார்கள். குறிப்பாக தொழில் துறைகளில் உயர் பொறுப்புகளில் இருக்கும் பெண்கள் தம் திருமணத்தைக் கூட தள்ளிப் போட விரும்புகிறார்கள்.

இதனை நகர்ப்புறங்களுக்கே உரிய ஒரு தனிப் பிரச்சினையாகவும் கிராமப் புறங்களில் இவை இல்லை எனவும் பலர் நினைக்கலாம். ஆனால், அது முற்றிலும் தவறானதாகும். இந்த வழக்கம் மெல்ல மெல்ல கிராமங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது.

பொதுவாக குடும்பம், குழந்தைகள் சார்ந்து உருவாகும் சுமைகள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை அவளின் ஆளுமைகளைப் பாதிக்கின்ற அளவுக்கு ஒரு ஆணைப் பாதிப்பதில்லை. பேறு காலத்தில் அவள் தன்னுடைய எல்லா விருப்பங்களையும் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஐந்து அல்லது ஆறு வருடங்கள் முடியும் வரை அவளால் இடையூறுகள் இல்லாமல் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாமல் போய் விடுகின்றது. அந்த வகையில் திருமணத்திற்குப் பிறகு ஒரு பத்து வருடங்கள் அவள் தேங்கிப் போவது தவிர்க்க முடியாததாக இருக்கும் நிலையில் அவளால் தன்னுடைய எந்த வேலையிலாவது ஒரு தொடர்ச்சியைப் பேண முடியுமா என்பது கேள்விக் குறியே.

ஒரு வகையில் இது பெண்ணுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியே! இந்த அநீதிக்கு இயற்கையை மட்டும் குறை சொல்ல முடியுமா? குடும்பப் பராமரிப்பில் ஆண்கள் பங்கெடுத்துக் கொள்வதன் மூலம் இந்தச் சுமைகளிலிருந்து பெண்களால் விடுபட முடியுமா? இதற்கு எத்தனை ஆண்கள் தயாராக இருக்கிறார்கள்? அப்படி தயாராக இருப்பவர்களும் தங்களின் பணிச் சுமைகளை மீறி அதைச் செய்து விட முடியுமா?

இது போன்ற காரணங்களினால் குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காகத் தர வேண்டியிருக்கும் விலையின் சுமை ஒட்டு மொத்தமாகப் பெண்களின் தலையில் விழும் போது படைப்பூக்கமும் திறமையும் உள்ள பெண்கள் குடும்ப அமைப்பின் மீதே வெறுப்படைகின்றார்கள்.

குடும்பம் என்னும் அமைப்பு தனிப்பட்ட வளர்ச்சியின் எதிரியாக மாறிக் கொண்டிருக்கிறதா? அல்லது இது பெண்ணுக்குரிய இயல்பான கடமை. அவள் குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் தன்னை தியாகம் செய்து கொள்வது நியாயமானது தான் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? இவை பற்றி உங்கள் கருத்துகள் என்ன? என்பதை எழுதி அனுப்புங்கள்.

Edited by ஜனனி

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் ஏதோ வேற்றுக்கிரகவாசிகள் போல எல்லோ இப்ப பேசிக்கினம். அதுதான் சொன்னமில்ல பிடிக்கல்லையா பேசாம பெண்கள் எல்லோரும் செவ்வாய்க்குப் போயிடுங்கோ. ஆண்களுக்குள்ள பதுங்கி இருந்து கொண்டு அவங்களுக்கே நெருப்பு மூட்டிற வேலையைப் பார்க்காதீங்க. குடும்பம் என்றது வேணாம் என்றால் உலகில் எந்தப் பெண்ணும் பிள்ளை பெற்றுக்காதேங்க. திருமணம் முடிக்காதேங்க. ஆண்களோட சகவாசம் வைச்சுக்காதேங்க. அப்படியே ஒரு நுற்றாண்டுக்க அழிஞ்சு போங்க. யார் வேணான்னா. சும்மா வீரகேசரிலும் தினக்குரலிலும் விதண்டாவாதம் எழுதுறது போன்றதல்ல மனித வாழ்கை. உயிரின அடிப்படைகள் கூட பெண்களால உணர முடியாத அளவுக்கு பெண்கள் என்ன முட்டாள்களா. அப்படியென்றால் அந்தப் பிறவிகளை ஏன் உலகில்..???!

நிச்சயமா எந்த மனிதப் பெண்ணோ ஆனோ குடும்பத்தைச் சுமையாகப் பார்க்காள். அப்படிப் பார்ப்பவள் என்றாள் அவளுக்கு இவ்வுலகில் வாழ உரிமையில்லை. காரணம் அவளைத் தோற்றிவித்ததே அந்தக் குடும்பம் என்ற அலகுதான்..! :P :lol:<_<

நெடுக்ஸ் உங்கள் கருத்தாடல்கள் பலவற்றை யாழ்களத்தில் வாசித்திருக்கின்றேன்.உங்கள் எழுத்து வன்மை அபாரம்.ஆனால் உங்கள் கருத்துக்களுடன் முழுமையாக என்னால் ஒத்துப்போகமுடியவில்லை.அப்பட

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜனனி,

பெண்களின் வளர்ச்சிக்குக் குடும்பம் தடையாக இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

பெண் தானாக விரும்பி தன்னைத் தொலைக்கின்றபோது ஏன் குடும்பம் என்ற கட்டமைப்பில் பழி போடவேண்டும்? குழந்தை பெறுவதால் ஒரு பெண்ணின் தனித்துவம் கெடுகிறது என்பதை என்னால் ஏற்க முடியாது.

திறமையான ஒரு இலக்குடைய இலக்கியவாதியை எந்தச் சந்தர்ப்பமும் முடக்கிவிட முடியாது. குடும்பம் குழந்தைகள் என்ற அமைப்பு ஒரு பெண்ணுக்கு அவளின் முன்னேற்றத்திற்கு சவாலாக இருக்கிறது என்பதைக் காட்டிலும் சிறந்த அனுபவங்களைக் கொடுத்துச் செம்மைப்படுத்துகிறது என்பதுதான் உண்மை. இதுவே ஆணாக இருந்தால் திருமணம் அவனது திறமைக்குத் தடை போடுகிறதா? என்ற உங்கள் கேள்வி குழந்தைத்தனமாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஒரு கணிசமான வருமானத்தைத் தரக் கூடியதாக இருக்கும் எந்தத் தொழில்வளத்தையும் ஆணாகிலும்,பெண்ணாகிலும் போட்டி போட்டு வளர்ப்பார்கள் எங்குமே எதிலுமே இலாபங்கள் கருதியே ஒவ்வொரு நிகழ்வுகளும் நடைபெறுகிறது. இலக்கியத்துறைகளில் ஆண்கள் சாதனையாளர்களாகத் திகழ்கிறார்கள் என்றால் அது அவர்கள் அப்பணியில் காட்டும் ஆவலும், வெறியும் என்பதுதான் உண்மை. எந்தப் பெண் படைப்பாளியாகிலும் ஏதேனும் இலக்கை நோக்கி எழுதுவார்களாக இருந்தால் அவர்களைத் திருமணமோ, குழந்தைகளோ எதுவும் செய்ய இயலாது. பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட படைப்பாளி திருமணபந்தத்தினால் படைப்பிலக்கியத்திலிருந்து விலகி அலுத்துக் கொள்ள மாட்டார்.

தங்கள் சமூக சேவைக்கும், எழுத்துப்பணிக்கும் தடையாக இருக்கக்கூடும் என்று குழந்தை பெறுவதை வேண்டாம் என்று அறவே விட்டுவிட்டோம் என்று ஒரு தம்பதியினர் முடிவெடுத்து வாழ்ந்தார்கள் என்று நீங்கள் கேள்விப்பட்டதாகக் கூறும் அத்தம்பதியினர் பற்றிய முழுமையான விபரமேதும் உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் தரமுடியுமா?

திருமணம் என்பது ஆண் பெண் இருபாலருக்குமே சில இடையூறுகளைத் தோற்றுவிக்கிறது என்பது உண்மையானாலும் குடும்பம் என்ற அமைப்பில் பெண்மைக்கே தாய்மை என்ற பெரும் ஸ்தானம் கிடைக்கிறது. குழந்தையைப் பெறுவதோடு மட்டுமல்லாமல் இக்குழந்தைக்கு பாலூட்டலில் இருந்து தேவையான அனைத்தையுமே ஒரு தாயால்தான் வழங்கமுடியும். தந்தையால் முடியாது. ஏனெனில் அக்குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போதே தாயின் குண இயல்புக்கு ஏற்ற விதத்தில் இசைவாக்கம் பெற்றுவிடும். வெளியே வந்தபின் தந்தையிடம் கொடுத்து குழந்தையைப் பாரமரி என்று விதண்டாவாதம் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. இந்நிலை சரியென்று ஏற்றுக் கொள்வோமானால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நாங்களே எதிரியாக வேண்டி ஏற்படும். நீங்கள் குறிப்பிட்ட திருமணத்திற்கு முன்பு சாதிந்தவள் திருமணத்தின் பின்பு சாதிக்கவில்லை, ஒடுங்கி விட்டாள், அல்லது ஒடுக்கப்பட்டு விட்டாள் என்று அந்தக் குடும்பத்தின் வெளித் தோற்றத்தைக் கொண்டு நாங்கள் எதையும் தீர்மானிக்க முடியாது. இன்று புலம் பெயர் தேசங்களை எடுத்துக் கொண்டால் படைப்பிலக்கியத்தில் திருமணமாகி குழந்தைகளை பெற்ற பெண்களையே கணிசமாகக் காண முடிகிறது. ஒரு வேளை நீங்கள் முடக்கப்பட்டதாகக் கருதும் பெண்களுக்கு சரியான இலக்கியத் தளங்களோ, தங்கள் படைப்பிலக்கியங்களை வெளியிடக்கூடிய ஊடக வளங்களோ அவர்களுக்கு ஏற்ற வகையில் கிடைக்காமல் இருக்கலாம் அவ்விடயத்தில் ஏற்பட்ட சலிப்பினால் அவர்கள் அத்துறையில் இருந்து விலகி இருக்கலாம். எப்போதும் ஒன்றைக் கவனிக்க வேண்டும் மனைவி என்பவள் உற்சாகம் ஊட்டாவிட்டாலும் எழுத்துலகில் கால் பதிக்கும் ஆண்கள் இருக்கும் போது, கணவன் ஊக்கம் தராவிட்டாலும் தம் திறமையை வளர்க்கவேண்டும் என்று பெண்கள் நினைப்பார்களானால் அவர்கள் நிச்சயம் வளர்ந்தே ஆவார்கள். இதில் இன்னொரு விடயமும் உள்ளது. குடும்பமென்ற வட்டத்தில் நின்று எழுதும் படைப்பாளியால்த்தான் சமுதாய ஓட்டத்தையும், மனித மனங்களையும், சூழ்நிலை, யதார்த்தங்கள் என்று பூரணமான படைப்புகளைத் தரமுடியும்.

குடும்பத்தின் வளர்ச்சியை பெண்களின் தனிப்பட்ட வளர்ச்சி சாதகமாகவும், பாதகமாகவும் பாதிக்கின்றது என்பது உண்மை. இதேபோல் பெண்களின் தனிப்பட்ட வளர்ச்சியை குடும்பத்தின் வளர்ச்சி சாதகமாகவும், பாதகமாகவும் பாதிக்கின்றது என்பதும் உண்மை.

ஆனால் பெண்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு குடும்பம் ஒரு தடையாக உள்ளது என்பது ஆண், பெண் என உலகை பிரித்து பார்த்து தரிசனம் செய்யும் தீவிரவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட மிகவும் மோசமான பொய்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக நல்ல கட்டுரை ஜனனி

திருமணம் உண்மையிலே பெண்களுக்குச் சிறைதான். பெண்களுக்கு இயற்கையாகவே அமைந்து விட்ட கர்ப்பப்பை என்ற ஒன்றை வைத்து ஆணாதிக்கவாதிகள் தாய்மை புனிதம் என்றெல்லாம் கதையளக்க வெளிக்கிட்டு விட்டார்கள். பிள்ளை பெறுவதும் பெறாமல் இருப்பதும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம்.

என்னைக் கேட்டால் பெண்கள் சமூகத்திலிருந்து விடுதலையடைவதற்கு முன் தங்கள் அறியாமையிலிருந்து விடுதலையடையட்டும்.

(திருமணம் உண்மையிலே பெண்களுக்குச் சிறைதான். பெண்களுக்கு இயற்கையாகவே அமைந்து விட்ட கர்ப்பப்பை என்ற ஒன்றை வைத்து ஆணாதிக்கவாதிகள் தாய்மை புனிதம் என்றெல்லாம் கதையளக்க வெளிக்கிட்டு விட்டார்கள். பிள்ளை பெறுவதும் பெறாமல் இருப்பதும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பம்.

என்னைக் கேட்டால் பெண்கள் சமூகத்திலிருந்து விடுதலையடைவதற்கு முன் தங்கள் அறியாமையிலிருந்து விடுதலையடையட்டும்).

திருமணதிற்கு பின்பு எல்லா பெண்ணும் கர்ப்பம் அடையிறதை தான் பெருமையா நினைப்பா , தாய்ப்பாசம் ரொம்ப புனிதமானது அதற்கு உலகில் எதுவும் ஈடாகாது, எந்த பெண்ணும் தாய் ஆகிறதை விரும்பாம இருக்கமாட்டா,

இல்லை அவர்களே அவர்களுக்கு தடை.

நெடுக்ஸ் உங்கள் கருத்தாடல்கள் பலவற்றை யாழ்களத்தில் வாசித்திருக்கின்றேன்.உங்கள் எழுத்து வன்மை அபாரம்.ஆனால் உங்கள் கருத்துக்களுடன் முழுமையாக என்னால் ஒத்துப்போகமுடியவில்லை.அப்பட

ஐயா கந்தப்பு!

நீங்கள் முன்பு ஒரு முறை இங்கு ஒரு அம்மாவின் இறப்பை ஒட்டிய பதிவு ஒன்றை இங்கு இணைத்திருந்தீர்கள்( ஒரு கலைஞர் அல்லது ஊடகவியலாளரின் தனது தாய் பற்றிய அழகான படைப்பு என நினைக்கிறென், அது தமிழ்கனேடியன் இணையதளத்தினுள் கூட இருந்தது)..அதை நானும் தேடுகிறென்..காணகிடைக்குதில்ல

Edited by mooki

  • கருத்துக்கள உறவுகள்

வேறொன்றுமில்லை சிவா அவர்களே...நீங்கள் அங்கொட கேள்வி பட்டிருங்கீங்களா?

நம்ம இலங்கையில் பெயர் போன பல்கலைக்கழகம் அங்கு உள்ளது..அதின் விசேட தன்மை என்னவென்றால், அங்கு பட்டம் பெற்று வெளியேறுபவர்களை விட, தொடக்கத்திலோ, இடையிலோ வெளியேர்பவர்களுக்கு தான் மதிப்பும், மரியாதையும், அறிவும் கூட...

நெட்டுக்ஸ் கூட அங்கிருந்து, தொடக்கத்திலே மதில் ஏறி வெளியில் குதித்து வந்தவர் தான்...அதனால் தான் தனது அறிவு திறனை இங்கே கொட்டுகிறார் :P :P

பாவம் அங்கொடக்க கிடந்து அடிபட்டு மூக்கால இரத்தம் ஓடுதே என்று மதில் பாய்ஞ்சு காப்பாற்றி விட்டா வெளில வந்து இப்படியா..?! பெண்கள் குணமே இதுதானே நன்றி கெட்ட குணம்...! :lol::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வேறொன்றுமில்லை சிவா அவர்களே...நீங்கள் அங்கொட கேள்வி பட்டிருங்கீங்களா?

நம்ம இலங்கையில் பெயர் போன பல்கலைக்கழகம் அங்கு உள்ளது..அதின் விசேட தன்மை என்னவென்றால், அங்கு பட்டம் பெற்று வெளியேறுபவர்களை விட, தொடக்கத்திலோ, இடையிலோ வெளியேர்பவர்களுக்கு தான் மதிப்பும், மரியாதையும், அறிவும் கூட...

நெட்டுக்ஸ் கூட அங்கிருந்து, தொடக்கத்திலே மதில் ஏறி வெளியில் குதித்து வந்தவர் தான்...அதனால் தான் தனது அறிவு திறனை இங்கே கொட்டுகிறார் :P :P

வெளியால குதித்தவரோ இல்லாட்டி தூக்கி எறிஞ்சாங்களோ? :lol::D:D

பாவம் அங்கொடக்க கிடந்து அடிபட்டு மூக்கால இரத்தம் ஓடுதே என்று மதில் பாய்ஞ்சு காப்பாற்றி விட்டா வெளில வந்து இப்படியா..?! பெண்கள் குணமே இதுதானே நன்றி கெட்ட குணம்...! :lol::lol:

கன தூரம் தள்ளி அங்கொடக்குள்ள விழுந்து, பிறகு தப்பி பிளேன் ஏறி வந்திட்டுது (இல்லாட்டிப் பறந்து வந்திருக்கும்) :P

பாவம் அங்கொடக்க கிடந்து அடிபட்டு மூக்கால இரத்தம் ஓடுதே என்று மதில் பாய்ஞ்சு காப்பாற்றி விட்டா வெளில வந்து இப்படியா..?! பெண்கள் குணமே இதுதானே நன்றி கெட்ட குணம்...! :lol::D

அப்படியே நான் அங்கு இருந்திருந்தாலும், மூக்கால் ரத்தம் வடிந்து செத்திருந்தாலும், உமது உதவியுடன் வெளியே வர சான்சே இல்லை.. :P

அப்படி வந்திருந்தால் அது எம் இனதுக்கே கேவலம். :angry:

தவளையும் தன் வாயால் கெடும் என்டதுக்கு நல்ல உதாரணம் நெடுக்ஸ் தான்...இனிமேலும் இதை சொல்லாமல் இருக்க முடியாது...உண்மையில் இது தான் நடந்தது. :lol:

நெடுக்ஸுக்கு மதில் ஏறி பாய்வதெண்டால் ஒரு அலாதி பிரியம்.இப்படி தான் ஒரு நாள் ஒரு லேடிஸ் கொஸ்டலிற்க்குள் குதித்து விட்டார். பிறகு என்ன?..அங்கிருந்த பெண்களால் நையபுடைக்கபட்டார்..முக்கியமா நான் பாவித்த ஆயுதம், விளக்குமாறு..பின் எங்கள் காலடியில் விழுந்து அழுது, பிரதட்டை பண்ணி, இதை வெளியே சொல்லவேண்டாம் என்று விம்மி விம்மி கேட்டார்..சரி, பிழைத்துபோக்கட்டும் என்று நாங்களும் விடு விட்டோம்.. :(

அதன் பின் தான் இவருக்கு பெண்கள் என்றாலே ஒரு பயம் பீதி, அதை தான் தனக்கு பெண்கள் மேல் வெறுப்பாம் என்று சொல்லி மூடி மறைகிறார். அப்புறமா, அங்க இருக்க பயத்தில், பிலேன் ஏறி எங்கேயோ ஓடி விட்டார்..ஆனால் அங்கே போயும் அவருக்கு பயம் தெளியவில்லை..இன்னும் முகமூடி அணிந்து கொண்டு தான் திரியிறார், ஏகபட்ட பாதுகாப்புகளுடன்.

இதுவேறவா அசிட் அடிக்க முடியாது. அதுதான் முகமூடி போட்டிருக்கமே. துப்பாக்கியால் சுட முடியாது காரணம் சன்னம் எம்மை அணுகவே முடியாது. கிளைமோர் வைக்க முடியாது. எங்க போறம் எங்க வாறம் என்றது யாருக்குமே தெரியாது. கத்தி பொல்லு போத்தல் மெற்றல் பார் பிஸ்ரல் ரமிழ் காங்ஸிடம் இருக்கு. நாம் தானே காங்குக்கே கோலா வேண்டிக் கொடுக்கிறவங்களாச்சே..! :D

இப்படி அடிமட்டமா திட்டம் போட்டு முடி கொட்டப் போகுது மூக்கி. எதுக்கும் ஆளுக்காள் அடிபட்டு நீங்களே அழிஞ்சிடுவிங்க. நமக்கேன் உயிர்ப் பாவம். :lol::lol:

இந்த சம்பவத்தை தான் இவர் உல்டா பண்ணி சொல்றார்.. :lol:

ஓவரா வால் ஆட்டினீர், ஒட்ட நறுகிடுவன்..ஜாக்கிரதை! :lol:

Edited by mooki

  • கருத்துக்கள உறவுகள்

பாபா வாயால சிவலிங்கம் எடுப்பார் என்றால் நீங்கள் உலகத்தையே எடுத்திடுவீர்கள். பெண்களுக்கு புத்தி மட்டுமில்ல நாக்கும் நல்லாப் புரளும் என்பார்கள். உண்மை என்பது இங்கு நிரூபணமாகிறது.

நெடுக்ஸுக்கு புராணம் பாடுறதைக் குறைச்சிட்டு தலைப்புக்கும் கொஞ்சம் பதில் எழுதுங்கோவன்.

மனிசிமாரை வீட்டுக்க பூட்டி வைச்சிட்டு இரவுப் பூனையாட்டம் களத்தில உலவிற ஆண்கள் பெண்களைப் பற்றி சுதந்திரத்தைப் பற்றிக் கதைக்கக் கூடாது..! :(:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.