Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் விகாரை அமைப்பு மக்களுக்கல்ல அரசியல்வாதிகளுக்கே பிரச்சினை-என்கிறார் ஆளுநர் குரே

Featured Replies

வடக்கில் விகாரை அமைப்பு மக்களுக்கல்ல அரசியல்வாதிகளுக்கே பிரச்சினை-என்கிறார் ஆளுநர் குரே
 
 
வடக்கில் விகாரை அமைப்பு மக்களுக்கல்ல அரசியல்வாதிகளுக்கே பிரச்சினை-என்கிறார் ஆளுநர் குரே
தமிழ் மக்களால் கொழும்பில் கோவில் கட்ட முடியும் என்றால், முல்லைத்தீவு கொக்கிளாயில் விகாரை அமைப்பதில் என்ன பிர ச்சினை உள்ளது என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே கேள்வி எழுப்பியுள்ளார்.
 
முல்லைத்தீவில் நேற்றையதினம் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும் வேறு ஒருவரின் காணியில் மக்கள் இல்லாத இடத்தில் அவ்வாறு நிர்மாணிக்கப்பட்டால் அது குற்றம் என தெரிவித்த அவர், வேறு ஒருவருடைய காணியில் அனுமதியின்றி விகாரை அமைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளாார்.
 
எனினும் கரைதுறைப்பற்று முன்னாள் பிரதேச செயலாளரால் கொக்கிளாயில்   விகாரை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு ள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த நாட்டில் யாருக்கும் கோவில் கட்டமுடியும் பள்ளி கட்ட முடியும் அது அவர்களின் விருப்பம், ஆனால் விகாரை தொடர்பான பிரச்சினை மக்களுக்கு இல்லை எனவும் அரசியல்வாதிகளுக்கே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
இதேவேளை 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் கொக்கிளாய் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்கள் 2010 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது விகாரை அமைப்பதற்கான காணி என தெரிவித்து குறித்த பிக்கு குறித்த காணியில் மக்களை மீள்குடியேற்ற அனுமதிக்கவில்லை.
 
இந்த நிலையில்  குறித்த காணியின் உரிமையாளரின் மூத்த புதல்வரான 52 வயதுடைய திருஞானசம்பந்தர் மணிவண்னதாஸ் நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யப்பட்டபோதும், குறித்த காணி உரிமையாளரின் காணிப்பத்திரம் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என தெரிவித்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

http://onlineuthayan.com/news/21200

  • தொடங்கியவர்
'மக்களின் காணிகளை மீள வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம்'
 
10-12-2016 12:20 PM
Comments - 0       Views - 26

article_1481352735-rejinol-kure.jpgசண்முகம் தவசீலன்

கடந்த கால யுத்தம் காரணமாகவே பொதுமக்களின் காணிகளை இராணுவம் கைப்பற்றியிருந்ததாகவும் எனினும், யுத்தம் நிறைவடைந்த நிலையில் காணிகளை மக்களிடம் மீளக்கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

பொதுமக்களுக்கும் ஆளுநருக்குமிடையில் நேற்றையதினம் (09) முல்லைத்தீவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2009 ஆண்டுக்குப் பின்னர் கொக்குத்தொடுவாய் முகத்துவாரம் பகுதியில் தொழில் செய்வதற்காக தற்காலிகமாக வசித்து வரும் தென்னிலங்கை மக்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

இடம்பெற்ற காணிப்பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட தமது காணிகள் தொடர்பில் அதிகமான முறைப்பாடுகளை, காணி உரிமையாளர்கள், வடமாகாண ஆளுநரிடம் முன்வைத்திருந்தனர்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாகவே தமிழ் மக்களின் காணிகள் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டிருந்ததாகவும் எனினும், அவற்றை மீண்டும் இராணுவத்திடம் கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனக் குறிப்பிட்ட அளுநர், தொடர்ந்தும் இராணுவத்தால் மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, யாழப்பாணத்தில் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் சிலருக்கு ஆரம்ப காலங்களிலிருந்து சொந்தக் காணிகளே இருக்கவில்லை எனவும் தற்போது அரசாங்கத்தாலேயே காணிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

- See more at: http://www.tamilmirror.lk/187756/-மக-கள-ன-க-ண-கள-ம-ள-வழங-க-வத-அரச-ங-கத-த-ன-ந-க-கம-#sthash.7KcoS2rx.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

image_1481244198-44e25cb861.png

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.