Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏழை மீனவரின் ஆட்டைத் திருடி கறி காய்ச்சித் தின்ற இந்திய இராணுவம்.

Featured Replies

இந்திய முஸ்லீம்களுக்கு அனுதாப்படுவது இருக்கட்டும் தமிழ் ஈழத்தில் முஸ்லீம்கள் படுகொலை பற்றி பேசவேண்டி வரும், சும்மா வாய்க்கு அவல் கிடத்துவிட்டதாக நினைத்து பேசவேண்டாம்.

எதோ இந்தியாவில் உள்ள இந்துக்கள் மற்ற சமூகத்துக்கு விரோதிகள் போல சித்திரக்க நினைக்க வேண்டாம், இந்தியாவுக்கெதிரான துவேச கருத்துக்களை பரப்புவதை விசமிகள் நிறுத்திக்கொள்ளவேண்டும்.

  • Replies 119
  • Views 16.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய முஸ்லீம்களுக்கு அனுதாப்படுவது இருக்கட்டும் தமிழ் ஈழத்தில் முஸ்லீம்கள் படுகொலை பற்றி பேசவேண்டி வரும், சும்மா வாய்க்கு அவல் கிடத்துவிட்டதாக நினைத்து பேசவேண்டாம்.

ஈழத்து முஸ்லீம்களைப் பற்றி என்ன பேசப் போகின்றீர். ஈழத்து முஸ்லீம்களை அழித்தவர் அவர்களின் தலைவராக பின்னால் அடையாளம் காட்டிக் கொண்ட அஸ்ரப் என்பது உமக்குத் தெரியுமா? அவர் தான் அரசியலில் நுழைவதற்காக, உருவாக்கிய பிரிவினை வாதமே முஸ்லீம் தமிழ் பிரச்சனை. அங்கே அவர் தன்னை வளர்த்துக் கொள்ள, தமிழரையும் கொலை செய்து, மூஸ்லீம்களையும் கொலை செய்து, தன் அரசியல்கட்சியை வளர்த்துக் கொண்டார்.

இந்திய முஸ்லீம்களுக்கு அனுதாப்படுவது இருக்கட்டும் தமிழ் ஈழத்தில் முஸ்லீம்கள் படுகொலை பற்றி பேசவேண்டி வரும், சும்மா வாய்க்கு அவல் கிடத்துவிட்டதாக நினைத்து பேசவேண்டாம்.

எதோ இந்தியாவில் உள்ள இந்துக்கள் மற்ற சமூகத்துக்கு விரோதிகள் போல சித்திரக்க நினைக்க வேண்டாம், இந்தியாவுக்கெதிரான துவேச கருத்துக்களை பரப்புவதை விசமிகள் நிறுத்திக்கொள்ளவேண்டும்.

உம்மால் முடிந்தால் கதையும் அதற்கான தக்க பதிலை நாம் தருவோம் நீர் ஈழத்தில் நடக்கும் தமிழ் பேசும் மக்களின் போராட்டத்தை மதப்போராட்டமாக மாற்றி கொச்சைபடுத்த முயலுகிறீர் என்பது மட்டும் நிச்சயம்

ஏன் இந்தியாவில் ரயிலெருப்பு நடக்கவில்லையா,பாபர் மசுதி இடிக்கபடவில்லையா மதக்கலவரம் நடக்கவில்லையா ஏதும் அறியாத சின்ன பாப்பாக்களாக நீர் சிவசேனையையும் அதன் ஆதரவாளர்களையும் மற்றும் பா.ஜா.கா வையும் எழுதி எம்மையும் ஏமாற்றி உம்மையும் ஏமாற்றி இந்தியர்களையும் ஏமாற்றாதையும்.ஈழத்தில் சில கருத்து முரண்பாடுகள் இருந்தனவே இல்லை என சொல்லவில்லை ஆனால் தற்போது புரிந்துனர்வு வந்துவிட்டது வருத்தமும் கேட்கப்பட்டு விட்டது எம் சொந்த வீட்டுக்குள் நடந்ததை நாம் மறக்க முயல்கின்றோம்

... சரி அது போகட்டும் மும்பையில் பெண்கள் நடு ராத்திரியில கூட நடந்து போவதாக படித்து இருக்கிறேன். நீங்கள் மந்துக்குள் வேண்டுமானால் பெறுமிதம் கொள்ளுங்கள், ஆனால் நான் வெளிபடையாக பெருமிதம் கொள்கிறேன் இந்தனாக.

நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ரெட் லைட் ஏரியாவில் என்று சொன்னார்கள். இது பற்றி நீங்கள் வெளிப்படையாகவே பெருமிதம் அடைகிறீர்களே, உங்கள் பெருமையோ பெருமை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ரெட் லைட் ஏரியாவில் என்று சொன்னார்கள். இது பற்றி நீங்கள் வெளிப்படையாகவே பெருமிதம் அடைகிறீர்களே, உங்கள் பெருமையோ பெருமை.

நானும் பார்த்திருக்கிறேன் அவர்கள் இரவில் நடமாடுவதை. :blink::D:D

ஈழத்து முஸ்லீம்களைப் பற்றி என்ன பேசப் போகின்றீர். ஈழத்து முஸ்லீம்களை அழித்தவர் அவர்களின் தலைவராக பின்னால் அடையாளம் காட்டிக் கொண்ட அஸ்ரப் என்பது உமக்குத் தெரியுமா? அவர் தான் அரசியலில் நுழைவதற்காக, உருவாக்கிய பிரிவினை வாதமே முஸ்லீம் தமிழ் பிரச்சனை. அங்கே அவர் தன்னை வளர்த்துக் கொள்ள, தமிழரையும் கொலை செய்து, மூஸ்லீம்களையும் கொலை செய்து, தன் அரசியல்கட்சியை வளர்த்துக் கொண்டார்.

ஓகோ அப்படியா அது போகட்டும் இது போன்ற சுயனல ஆசாமிகள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள், எதோ இந்து அல்லாத சமூகங்கள் இந்தியாவில் வசிக்கவே பயபடுவதுபோல எழுதுவது எந்த விதத்தில் நியாயம், அங்கொன்றும் இங்கொன்றும் விரும்பதாக நிகழ்வுகள் நடகத்தான் செய்யும், ஆஸ்த்திரேலிய பாதிரியார் கொல்லப்பட்டாலும் ஒரு கிருஸ்தவ ஆலயம் தாக்கப்பட்டாலும் அதை பெறிய அளவில் சிறுபாண்மை இனத்தவர்கள் மீது தாக்குதல் என்று உலகம் முழுவதும் பரப்புவது செய்திகளை பரப்புவது வாடிக்கையாகிவிட்டது.

ஆனால் இந்துக்களை வரிசையாக நிற்க்க வைத்து கொள்ளுவதைபற்றி யாரும் பேசமாட்டார்கள். போலி மனிதாபிமானிகள் போலி மத சார்பின்ன்மை வாதிகளுக் அதிகம். ஆர் எஸ் எஸ் இல்லாவிட்டால் இந்தியாவில் இந்துக்களே நட மாட முடியாத அளவிற்க்கு வந்து விடும்.

இலங்கையில் கூட பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் அங்குள்ள தமிழ் முஸ்லீம்களுக்கு தீவிரவாத பயிற்ச்சி அளித்து வருவதாக இங்கு செய்திகள் வருகின்றன. ஒரு கட்டத்தில் பிரபாகரன் இந்தி இஸ்லாமிய தீவிரவாதிகளை எதிற்த்துவேறு போராட வேண்டி இருக்கும்போல இருக்கிறது.

கழுத்து வலிபோய் திருகு வலி வந்த கதைதான்.

Edited by rmsachitha

ம் நான் இந்துக்களை மட்டும் குறை சொல்லவில்லை நானும் ஒரு இந்துவே ஆனால் மதவெரி இல்லாதவன் மதக்கலவரம் நடப்பது இந்தியாவில் அதிகம் அதனைதான் நான் சொன்னேன் இதை சொன்னதுக்கு காரணம் நீர் இலங்கை முஸ்லீம் சம்,உகத்தை பற்றி கதைத்ததன் காரணமாகவே

  • கருத்துக்கள உறவுகள்

அம்பேத்கார் சட்டத்தை மாற்றியமைக்க முன் மனுதர்ம அடிப்படையிலேயே இந்திய அரசியல் சட்டம் இருந்தது. அம்பேத்கார் அரசியல் சட்டத்தை அமைத்து 8 ஆண்டுகளுக்குப் பிறகே பௌத்தத்தைத் தழுவுகிறார். தூயவன் வரலாற்றுப் பிழையான செய்திகளை தருகிறார்

எத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் அம்பேத்கார் மதம் மாறினவர் என்பது தெரியாது. ஆனால் மதம் தமாறுகின்றதை ஆராய்வு மூலம் எடுத்ததாகச் சொல்கின்ற ஒருவர், ஒருநாளில் எடுத்த முடிவாக அதிருக்காது என்பதும் உண்மை. மனுதர்ம அடிப்படையில் அரசியல்சட்டம் அமைந்திருந்தால், இன்றைக்கு இந்தியா இவ்வளவு தூரம், ஒன்றாக இருக்கமுடியாது. அனைத்து சமஸ்தானங்களையும் இப்படி ஒரு குடையின் கீழ் கொண்டு வந்திருக்கவும் முடியாது.

மௌலானா ஆசாத்தின் கூற்று மிகச் சரியானது. அதே நேரம் அது மட்டும் அவரது கூற்றை வலுப்படுத்தவில்லை. ஜின்னாவின் பல பேச்சுக்கள் அவர் தொடக்கத்தில் இந்திய விடுதலைப் பற்றாளராக இருந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. திலகர் போன்றவர்கள் இந்துத்துவத்தையும் முஸ்லீம்களுக்கு எதிரான வகுப்புவாத வெறியையும் வளர்த்தார்கள் என்பது மறைக்க முடியாத வெளிப்படையான உண்மை.

மனிதநேயம் சிறிதளவும் அற்ற மதவெறி இயக்கங்களுக்கு தூயவன் வக்காலத்து வாங்குகிறார்.

இது 3ம் தடவை சொல்கின்றேன் என நினைக்கின்றேன். ஜன்னா விரும்பியது நாட்டின் தலைவர் பதவி, ஆனால் அன்றைய மக்களின் தொகையில் இவருக்கு உரிய பதவி கிடைக்குமா என்ற சந்தேகத்தில் தான் அவர் முஸ்லீம் அடிப்படை வாதத்தை உருவாக்கினார். சிலவேளை அது கருணாவைப் போல இருக்கலாம். கருணாவிற்கு இருக்கின்ற வருத்தமே, ஜின்னாவிற்கும் இருந்திருக்கலாம்.

இந்துத்துவம் என்று வழமையான உம் புறம்பாடல் எதிர்பார்த்த விடயம் தான். ஆனால், தனிநாடக பாகிஸ்தான் போவதை அனுமதித்த இந்திய, மாநில சுயாட்சிக்கு அனுமதிக்காது என்று நீர் சொன்னது பொருத்தமான பதிலா?

சும்மா, வாயிற்கு வாய், ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹந்து பரிசத் மதவெறி இயக்கங்கள் என்று குத்தாட்டம் ஆடுவதை விட, இந்தியாவில் எந்த வழக்குமாட்டும், குற்றவாளியாகட்டும், அந்த அமைப்பு மீது நீதிமன்றம் குறித்திருக்கின்றதா என்பதை உம்மால் காட்டமுடியுமா?

அவை ஒரு காலத்தில் தடை செய்யப்ட்டிருந்தன. ஆனால் அதற்கான காரணம் மகாத்மா காந்தி கொன்றதற்காக மட்டுமே. ஆனால் பின் இவர்களில் பிழையில்லை என்று நீக்கிக் கொள்ளப்பட்டது. அது ஒன்று தான் பஜ்ரங்தள் அமைப்பின் மீதுள்ள ஒரே ஒரு மாசு ஆகும்.

கீழே நீர் சொன்ன எதற்கும், இம் அமைப்புக்கள் பொறுப்பல்ல. யாரோ செய்ததற்காக, எழுந்தமானத்திற்கு இவர்கள் மீது குற்றம் சாட்ட முடியாது.

அயோத்தியில் ராமர் கோவிலை இடித்தது. ஆவுஸ்திரேலியா நாட்டு கிருஸ்தவ பாதிரியாரையும் அவரது இரண்டு மகன்களையும் உயிரோடு எரித்தது. குஜராத்தில் அப்பவி முஸ்லீம்களை நூற்றுக்கணக்கா படுகொலை செய்தது, ஒரிசாவில் கிருஸ்தவக் கள்ளியாஸ்திரிகளை பாலியல் வல்லுறவு கொண்டது. ஆதே ஒரிசாவில் பள்ளிவாசல் ஒன்றில் புகுந்து 6000 இற்கும் மேற்பட்ட (சரியான எண்ணிக்கைதான்) முஸ்லீம்களை வெட்டிப் படுகொலை செய்தது. இது போன்று இன்னும் எத்தனையோ உள்ளன.

அயோத்தியில் இடித்தது, பாபர் மசூதி. அது சரி என்று சொல்லவில்லை. ஆனால் போத்திக்கீசர் ஆகட்டும், மொலாயர் ஆகட்டும், சமணர் ஆகட்டும், அனைவருமே இந்துக் கோவிலை இடித்துத் தான் அதன் மீது தங்களின் கோவில்களைக் கட்டினார்கள். காலத்துக்கு காலம், பலம் பொருந்தியவர்கள் மற்றவர்கள் மீது ஆக்கிரமிப்புச் செய்வது வழமையான ஒன்று தான். நீங்கள் பிள்ளளையார் சிலையை உடைக்கவோ, அல்லது செருப்பு மாலை அணிவித்தோ நிந்திக்கவோ இல்லையா? கண்டிப்பு என்று வந்தால் எல்லாவற்றுக்கும் கண்டணம், பதில் சொல்லித் தான் ஆகவேண்டும்

கிறிஸ்தவப்பாதிரிமார்களைக் கொன்றது தாரா சிங் என்பவன். அவன் இப்பொது ஜெயில் தண்டனை அனுவபவித்து வருகின்றன். ஆனால் அவனைக் காப்பாற்றவோ, அல்லது வழக்காடவோ இந்த அமைப்புக்கள் ஒரு போதும் முயற்சிக்கவில்லை. ஒருவன் செய்கின்ற குற்ற்ததிற்கு ஒட்டுமொத்த அமைப்பும் பொறுப்பெடுக்க முடியாது.

இன்றைக்கு கூட, கஸ்மீரத்திலும் சரி, ஏதும் கலவரம் நடந்தாலும் சரி முதலில் இந்துக்கள் தான் பாதிக்கப்படுகின்றார்கள். பல இந்துக் குடும்பங்களை முஸ்லீம் நாசகாரிகள் கொன்று இப்போதும் கஸ்மீரத்தில் புதைக்கின்றார்கள். . கோயம்புத்தூரில் அத்வானி வருகின்றபோது நடந்த குண்டுவெடிப்பால் ஏற்பட்ட கலவரமாகட்டும், கோத்ரா ரயில் எரிப்பாகட்டும், அல்லது இதர குண்டுவெடிப்பாகட்டும் எல்லாவற்றுக்கும் பின்ணனியே, பாகிஸ்தான் தான். தாவுத் இப்ராகிமை வைத்துக் கொண்டு, மத முறுகலைத் தூண்டி பிரிவினையை அதிகரிக்க பாகிஸ்தான் முயல்கின்றது. அவ்வளவே!

கம்யுனிஸ்டுகளின் கதை கழுதை தேய்ந்து கட்டேறும்பான கதை. காங்கிரஸ் என்றைக்கும் மிதவாதக் கட்சிதான் நாங்கள் அவற்றை ஆதரிக்க வில்லை. சிவசேனாத் தலைவர் வாயால் சொல்லிவிட்டு அதற்குப் பின் அவர் பாட்டுக்கு இந்துத்துவத்தை வளர்க்கப் போய்விட்டார். இன்று தமிழீழ விடுதலையை உயிர் மூச்சாகக் கொண்டு வாழும் ஐயா நெடுமாறன், திருமாவளவன், கொளத்தூர் மணி போன்றவர்கள் அனைவரும் இந்துத்துவத் தீவிர எதிர்ப்பாளர்களே. இவர்களின் ஆதரவு எங்கே?! பால்தக்ரேயின் ஆதரவு எங்கே?!

தமிழகத் தலைவர்களால் ஈழத்தமிரை் ஆதரவு என்பது வாயல் இருக்கின்றபோது, எங்கே இருக்கின்ற பால்தாக்ரே நேரடியாக வந்து ஆதரிப்பார் என்பது முட்டாள்தனமாக இல்லை. அவர் என்றும் பாகிஸ்தான் எதிர்ப்பாளராகவே இருக்கின்றார். இப்போது வயது முதிர்ந்து விட்டதால் முன்பு போல அவர் செயற்படுவதும் குறைவு. இருக்க, மற்றவர்கள் போல, அவர்களாகட்டும், பாஜகவாகட்டும், தமிழீழ விடுதலைப்போராட்டத்தை எதிர்த்து கதைக்கவில்லை.

காங்கிரஸ் கட்சி எவ்வளவு எதிர்ப்பாக இருக்கின்றது என்பது தெரியும், கம்னியுஸ்ட் ஜேவிபி கூட்டங்களில் இடையிடையே தலைகாட்டுகின்றனர். ஆனால் பாஜக அவ்வாறு எதிர்ப்பான சிந்தனைகொண்டதாக நடந்து கொள்ளவில்லை.

மற்றம்படி, நெடுமாறன் ஜயாவகட்டும், சுபவியாகட்டும் என்றைக்குமே நம்மவர்கள். அவர்களை வெளியார் போல வடமாநிலத்தவராக நினைத்து நோக்க வேண்டிய தேவையும் இல்லை.

நான் இங்கு எதிர்ப்பது இந்திய அரசின் வல்லாதிக்க போக்கைத் தானேயன்றி மக்களை அல்ல. தமிழீழத்தை ஆதரிப்பவர்கள் பிற மாநிலங்களிலும் இருக்கிறார்கள். இந்திய வல்லாதிக்க ஒடுக்கு முறை பல மாநிலங்களிலும் உள்ளது

ஐயா!

இந்திய வல்லாதிக்கம் எம் மீது அழுத்தும்போது எதிராகக் கிளம்புவோம். தவறே இல்லை. அது கட்டாயமும் கூட. ஆனால், அந்த நாட்டு மக்கள் எழும்பாத நிலமையில் நாங்கள் போய், அவர்களுக்குள் பிரிவினையை தொடக்குவது போலக் கதைப்பது தான் தவறு என்கின்றேன். இந்தியா பிரிய வேண்டும் என்ற தேவை நமக்கில்லை. மெ் மக்கள் பாதிக்கப்பட்டால் தானாகவே கிளர்ந்து எழுவார்கள்.

நன்றி புறிந்து கொண்டதற்க்கு.

இந்துக்கள் இருக்க வேண்டுமானால் ஆர்ஸ்ஸ் கண்டிப்பாக இருக்கவேண்டும். அந்த இயக்கம் வன்முறை இயக்கமல்ல, ஈழப்போறிகளுக்கெதிறாக இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துமானால் நிச்சயம் உங்கள் போரில் ஆர்ஸ்ஸ் இயக்கம் கண்டிப்பாக தோள்கொடுக்கும் நீங்கள் விரும்பினால் .நன்றி. வாழ்த்துக்கள்.

வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தவர் பால்தாக்ரே அவருக்கு நன்றி ஆனால் பல் சமுகத்தை கொண்ட ஒரு தாயகம் ஈழம் அதில் இந்துத்துவ கொள்கைக்கு துளிகூட சம்பந்தமில்லை ஆனால் பால்தாக்ரே மனிதாபிமான ரீதியில் எம்மை புரிந்து கொண்டு தனது முடிவை எடுத்திருந்தால் அதனை வரவேற்கின்றோம் நன்றி சொல்ல கடமை பட்டிருகிறோம் ஆனால் இந்துத்துவத்தை புகட்ட வேண்டும் என்ற அடிப்படையில் இருந்தால் அதற்கு வருத்தம் தெரி விப்போம்.தெளிவான புரிந்துனர்வு புலிகளின் தலைமையிடம் நிச்சயம் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

பால்தாக்ரே என்றைக்கு இந்துத்துவத்தைப் புகட்டத்தான், ஈழத்துக்கு ஆதரவளிக்கின்றார் என்று சொன்னவர்.? தமிழீழம் இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்தாவிட்டாலும

நான் சொன்னது இந்துத்துவத்தை புகட்டலாம் என்ற எண்ணத்துடன் அந்த முடிவை எடுத்தால் அது வரவேற்கதக்கதல்ல என்பதே!!

இந்துமக்கள் ஒரு பகுதியினர் என்பதை நான் ஏற்று கொள்கின்றேன் மற்றய பகுதியினர் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் இருகின்றார்கள் என்பதை நீர் ஏற்று கொள்ளுகிறீரா

ஈழம் இந்து,முஸ்லீம்,கிறீஸ்தவத்தை கொண்ட நாடாக அமையும் அன்றி இந்துத்துவத்தை முதன்னிலை படுத்தி அமையப்போவதில்லை என்பதே நிதர்சனம்

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் ஆதரவை நீங்கள் இந்துத்துவ அடிப்படையிலேயே சொல்லாதபோது, நீங்கள் எப்படி அவ்வாறு சிந்திக்கின்றீர்கள்?

இந்துக்கள் ஒரு பகுதியினர் என்று சொன்னால், மற்றவர்கள் மற்றப் பகுதியினர் என்பது தானே அர்த்தம்? என்றைக்காவது நாங்கள், தமிழீழத்தில் மற்றய பிரிவினர் வசிக்க கூடாது என்றோ சொன்னோமோ? அப்படிச் சொல்லியிருந்தால் தான் அது பிரிவினைவாதம்.

எந்த மதமும் சரி, எந்தக் கொள்கையும் சரி, மற்றவர்களைச் சுரண்டாமல் அமையுமானால் அதை ஏன் நாங்கள் எதிர்க்கின்றோம்? எனவே, கிறிஸ்தவர், முஸ்லீம்கள், பெளத்தர்கள் என்று எந்தக் கொள்கை கொண்டவரை, எவரும் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது. ஆனால் நாம் எம் கொள்கையைப் பற்றி மட்டும் தான் கதைக்கின்றோம்.

ஆக உமது கொள்கை இந்துத்துவமா துயவன் கறிவேப்பிலை போன்றதே இந்துத்துவம் கறி வேப்பிலையை ஒதுக்கி வச்சிட்டு சாப்பிடுவது போல நடைமுறைக்கு ஒவ்வாத இந்துத்துவத்தையும் புறக்கணித்து வாழ்வதே நன்ரு அதற்காக உங்கள் நம்பிக்கையை இல்லாமல் செய்ய சொல்லவில்லை நானும் இந்துவே நான் ஒரு அம்மன் பக்தன் ஆனால் இந்துத்துவம் பேசும் இந்து மதவெறியன் அல்ல :P

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் ஈழவன். வெளியால் சிலபேர், தங்களுக்குப் பக்தியில்லை என்று சொல்லிக் கொண்டு, பின்வாசல் வழியாகக் கும்பிடுவது போல நடந்து கொண்டாலும், வெளிப்படையாக உண்மையை ஒத்துக் கொள்ளும் உங்கள் மீது மரியாதை வருகின்றது.

நான் எனக்கு பக்தியிருக்கின்றதை எவ்வளவு தூரம் நம்புகின்றேனோ, அவ்வளவு தூரம் மற்றவர்கள் வந்து மதத்தை அசிங்கப்படுத்துவதையும், அனுமதிக்க முடியாது தான் என் கருத்து. அது இந்துத்துவம் என்று நீங்கள் நினைத்தால் அது என் தப்பல்ல.

சிவசேனா ஆர்.எஸ்.எஸ் காரனுங்க ஆதரிக்காம விட்டா நாம கவலைப்படத் தேவையில்லை. ஆதரிச்சானுங்கன்னத்தான் நாம கவலைப் படனும்.

ஈழப் போராட்டத்தில் சாதி கிடையாது மதம் கிடையாது. பாதிக்கப் பட்டவங்க நடத்துற நியாயமான போராட்டம் அது. எத்தனையோ இந்துக் கோவிலை சிங்களவனுங்க அடிச்சு நொருக்கினப்போ இவாளுங்க வாய் திறந்தானுங்களா?

இவாள் நோக்கமே வேற. இவாளுக்கு மக்களைப் பற்றிக் கவலை கிடையாது. மதம் அதிலும் இந்தியா இந்து நாடாகணும்.

நம்ம மகாத்மாவையே கொன்றவங்கதானே இவாளுங்க!

ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்திய செயற்கையான நிர்வாகக் கட்டமைப்பே இந்தியா. அதற்கு முன் இந்தியா என்றொரு நாடு என்றைக்கும் இருந்ததில்லை.

தனித் தமிழீழத்திற்காக நாங்கள் பல்லாயிரக் கணக்கான மக்களையும் போராளிகளையும் பறி கொடுத்ததற்குப் பின்பும் ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு என்று பிதற்றுகிறது இந்தியா.

பாகிஸ்தானோடு போரிட்டு வங்க தேசத்தை உருவாக்கிய இந்தியா வங்காளிகளைக் காட்டிலும் பல மடங்கு மோசமான அடக்குமுறைகளுக்கு உள்ளான ஈழத் தமிழர்களுக்காக ஏன் ஒரு தனி நாட்டை உருவாக்கித் தரவில்லை. இந்திய அரசின் நயவஞ்சகமும் இரட்டை வேஷமும் இதிலிருந்து தெரிகிறது.

நன்றி இளங்கோ, தமிழீலம் கண்டாலும் தாய் தமிழ்நாடு என்பது எம்போண்றோரின் கணவே. ஆகக்கூடிய காரியம் என்பது நமக்கான ஒரு இயக்கம், சரியான புரிதல், சரியான நகர்த்தல்கள்.

ஈழத்தில் சாதி கிடையாது என்பது சரி, மதம் கிடையாது என்பது சரியானதல்லவோ அங்கு பல மதங்கள் இருந்தாலும் கிருஸ்தவ மதத்தினரும், இந்து மதத்தினரும் தான் மிகவும் அடிபடுகிறார்கள்.

ஈழப்பிரச்சனைக்கு மதமா அல்லது மொழியா எது பிரச்சனை என்று எனக்கு தெரியவில்லை. புத்த பிட்ச்சுக்கள் ஏன் இந்த ரணகளம் பண்ணுகிறார்கள் என்று தெரியவில்லையே?. ஒருவேளை மதம்தான் காரணமாக இருக்குமோ?(இப்படி நான் கேட்ப்பதால் ஈழப்போராட்டத்தை கொச்சைப்படுத்தீர்கள் என்று கூறாதீர்கள் கொஞ்சம் விளக்கமாக பதில் அளியுங்கள் சுர்க்கமாக செய்வீர்களா?!!)

ஈழத்தில் சாதி கிடையாது என்பது சரி, மதம் கிடையாது என்பது சரியானதல்லவோ அங்கு பல மதங்கள் இருந்தாலும் கிருஸ்தவ மதத்தினரும், இந்து மதத்தினரும் தான் மிகவும் அடிபடுகிறார்கள்.

ஈழப்பிரச்சனைக்கு மதமா அல்லது மொழியா எது பிரச்சனை என்று எனக்கு தெரியவில்லை. புத்த பிட்ச்சுக்கள் ஏன் இந்த ரணகளம் பண்ணுகிறார்கள் என்று தெரியவில்லையே?. ஒருவேளை மதம்தான் காரணமாக இருக்குமோ?(இப்படி நான் கேட்ப்பதால் ஈழப்போராட்டத்தை கொச்சைப்படுத்தீர்கள் என்று கூறாதீர்கள் கொஞ்சம் விளக்கமாக பதில் அளியுங்கள் சுர்க்கமாக செய்வீர்களா?!!)

ஈழப் பிரச்சனை என்னவென்று தெரியாமலா இவ்வளவு நாளும் கருத்தாடினீர்கள் ?

சந்தேகமே வேண்டாம். ஈழப்போராட்டம் தமிழர்களுக்கான போராட்டம். ஆனால் பிக்குகளைப் பொறுத்தமட்டில் சிங்களமும் பௌத்தமும் பிரிக்க முடியாதவை. அவர்கள் தமிழ் பேசும் மக்களை (எந்த மதமானாலும் சரி) சம உரிமையுள்ளவர்களாக மதிக்க மறுக்கின்றனர். இலங்கைத் தீவானது சிங்கள மொழியையும் பௌத்த மதத்தையும் பாதுகாப்பதற்காக புத்த பெருமானால் தமக்கு வழங்கப்பட்டிருப்பதாக எண்ணுகின்றனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

rmsachitha!

ஈழத்தில் சாதி உள்ளது. மதம் என்று எடுத்துக் கொண்டால் சைவத்தைத் தழுவியவர்கள் பெரும் பான்மைத் தமிழர்களாகவும் கிருஸ்தவத்தை தழுவிய தமிழர்கள் இரண்டாவதாகவும் இருக்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைத் தழுவிய தமிழர்கள் தங்களை முஸ்லீம்கள் என்று மத அடிப்படைவாத சிந்தனையுடன் வாழ்கிறார்கள்.

ஜனனி ஈழம் என்ற சொல்லைப் பயன் படுத்தாமல் மிகச் சரியாக ஈழப் போராட்டம் என்று பயன் படுத்தியிருக்கிறா! அவா கூறியது உண்மைதான். ஈழப் போராட்டத்தில் சாதியும் இல்லை மதமும் இல்லை. அது மட்டுமல்ல சாதிய ஏற்றத் தாழ்வுகளை ஈழப்போராட்டம் பெருமளவு குறைத்திருக்கிறது. ஈழத்தில் சாதி முற்றிலுமாக ஒழிந்து விட்டது என்று என்னால் கூற முடியாது. ஆனால் போராளிகளிடம் அது அறவே இல்லை என்பது உண்மை. நாளை மலரப் போகும் தமிழீழத்தில் நிச்சயம் சாதி இருக்காது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

அடுத்து உமது கேள்விக்கு பதிலளிக்க விரும்புகிறேன்.

ஈழத்தில் நடப்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம் அதில் எந்த மதத்திற்கும் துளியும் தொடர்பில்லை. எங்களுக்கு பௌத்தத்தின் மீது எந்தக் கோபமும் இல்லை. தனிப்பட்ட முறையில் என்னை எடுத்துக் கொண்டால் புத்தரின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பவன்.

சிங்களப் பிக்குகள் அப்படி அல்ல. தமிழர்களை வேட்டையாடுவதற்காக சிங்களக் காடையர்களும் குண்டர்களும் பௌத்த பீடங்களில் பிக்குகளாகச் சேர்க்கப் படுகிறார்கள். பௌத்தம் சன்மார்க்கம் மிக்க மார்க்கம். அது மதமல்ல. அதனால்தான் அண்ணல் அம்பேத்கார் இந்து மத்திலிருந்து விலகி பௌத்தத்தைத் தழுவிக் கொண்டார்.

பௌத்தத்தின் கொள்கை என்பது

புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி

ஆனால் சிங்களப் பிக்குகளின் கொள்கை :

இரத்தம் சரணம் கச்சாமி, யுத்தம் சரணம் கச்சாமி, மிலிட்ரி சரணம் கச்சமி என்பதுதான்.

இந்த சிங்களப் பிக்குகளுக்கும் அன்பே அருள்வடிவான புத்தருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தமிழருக்கு எதிரான கருவியாக பௌத்தத்தை பயன் படுத்துகிறார்கள்.

Edited by இளங்கோ

நன்றி இளங்கோ.

இவர்கள் பைத்த மதத்தை தவராக பயன் படுத்துகிறார்கள். ஆனாப்பாருங்க அங்குள்ள சிங்கள ஆட்சி அரசியல் தலைவர்கள் இந்து கோவிலில் இங்கு வந்து தங்கள் செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடிக்கொள்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தில் சாதி கிடையாது என்பது சரி, மதம் கிடையாது என்பது சரியானதல்லவோ அங்கு பல மதங்கள் இருந்தாலும் கிருஸ்தவ மதத்தினரும், இந்து மதத்தினரும் தான் மிகவும் அடிபடுகிறார்கள்.

ஈழப்பிரச்சனைக்கு மதமா அல்லது மொழியா எது பிரச்சனை என்று எனக்கு தெரியவில்லை. புத்த பிட்ச்சுக்கள் ஏன் இந்த ரணகளம் பண்ணுகிறார்கள் என்று தெரியவில்லையே?. ஒருவேளை மதம்தான் காரணமாக இருக்குமோ?(இப்படி நான் கேட்ப்பதால் ஈழப்போராட்டத்தை கொச்சைப்படுத்தீர்கள் என்று கூறாதீர்கள் கொஞ்சம் விளக்கமாக பதில் அளியுங்கள் சுர்க்கமாக செய்வீர்களா?!!)

நீங்கள் கேட்டது போலவே சுருக்கமான என் பதில்:

இப்போது தமிழர் தான் அங்கு பிரச்சினை. இந்து சமயத்தினரான தமிழர்கள்! பௌத்த துறிவிகளுக்கும் புத்த மத அடிப்படைவதிகளுக்கும் இல்ங்கை சிங்கள பௌத்த நாடாக இருகவேண்டும். இதற்கு தடையாக இருப்பவர்கள் தமிழர்களே. அவர்களை இப்போது வேட்டையாடுகிறார்கள்.

ஒரு கதைக்கு தமிழர்களேஅங்கு இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது முஸ்லிம்களையும் பின்ன்ர் சிங்கள கிறிஸ்தவர்களையும் இலக்கு வைப்பார்கள். எந்த ஒரு சிறுபான்மை இனமும் தமது இன கலாச்சார அடையாளங்களுடன் இலங்கையில் வாழ்வது இவர்களுக்குப் பிடிக்காது.

சிறுபான்மையினரை சகித்துக்கொள்ளும் தன்மை இங்கு இல்லை. இது எல்லா இடங்களுக்கும் பொதுவானது என்றாலும், இல்ங்கையிலுள்ள பிட்சுகளுக்கு ஒரு சிறப்பம்சம்.

தற்போது இலங்கையில் பௌத்தமே ஆட்சி மதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் விடுதலைப்புலிகள் தமிழீழத்தில் எந்த மதமும் ஆட்சிமதமாக இருக்காது என்று தமது இடைக்கால தன்னாட்சி அதிகார வரைபு (Interim Self Governing Authority) இல் தெரிவித்திருந்தனர். ஏனெனில் தமிழீழத்தில் இருக்கக்கூடிய தமிழ் முஸ்லிம் தமிழரை பிரிக்கக்கூடியது அவர்களின் மதமே.

நன்றி இளங்கோ.

இவர்கள் பைத்த மதத்தை தவராக பயன் படுத்துகிறார்கள். ஆனாப்பாருங்க அங்குள்ள சிங்கள ஆட்சி அரசியல் தலைவர்கள் இந்து கோவிலில் இங்கு வந்து தங்கள் செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடிக்கொள்கிறார்கள்.

rmsachitha,

இலங்கையில் பௌத்த தலங்களில் இந்துக் கடவுள்களின் சிலைகள் உள்ளன. அவர்கள் இந்து சமயத்தை எதிர்ப்பதாகத் தெரியவில்லை. அதேபோல் பெரும்பாலான இந்துக்களும் புத்தரையோ புத்த சமயத்தையோ எதிர்க்கவில்லை.

மேலே குறிப்பிட்டதுபோல இலங்கையில் தமிழ் பேசும் மக்களே இவர்களின் எதிரிகள்.

...

தற்போது இலங்கையில் பௌத்தமே ஆட்சி மதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் விடுதலைப்புலிகள் தமிழீழத்தில் எந்த மதமும் ஆட்சிமதமாக இருக்காது என்று தமது இடைக்கால தன்னாட்சி அதிகார வரைபு (Interim Self Governing Authority) இல் தெரிவித்திருந்தனர். ஏனெனில் தமிழீழத்தில் இருக்கக்கூடிய தமிழ் முஸ்லிம் தமிழரை பிரிக்கக்கூடியது அவர்களின் மதமே.

எனக்கு இப்பான் ஓடி விளங்குது ISGA ஏன் சரிவராமல் போனது எண்டு. மதத்திற்கு முன்னுரிமை குடுக்காததாலை சாமிக் குற்றமாக்கிப் போட்டுது. உதுக்கு ஏதாவது பரிகாரங்கள் பிராயச்சித்தங்கள் செய்து போட்டு திருத்திய ISGA அய் மீள சமர்பித்தா தீர்வு உடனை கிடைக்கலாம்.

கடவுள் கோவம் கொண்டுதான் உந்தளவுக்கு அவலங்கள் உயிர்ப்பலிகள் இரத்த களரி என்று கிடக்கு. நல்லொரு வேள்வி நடத்தி 1 லட்சம் கும்பம் வைச்சு அபேசகம் செய்து 5 லட்சம் பிராமணருக்கு உதவி குடுத்தா கடவுளின்ரை கோவம் கொஞ்சம் தணியலாம்.

பௌத்தமதம் என்றால் அது சிங்களவர்களுக்கு மட்டுமே உரிமையானது, சிங்களவர்களே பௌத்த மதத்தின் காவலர்கள் என்ற கருத்தியலை மகாவம்ச காலத்து பிக்குகளில் இருந்து இன்றைய சிறிலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ வரை திட்டமிட்டு கட்டமைத்து பரப்பிவரும் நிலையில் அவற்றைக் கட்டுடைத்து தமிழர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கிறர்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் தமிழர்கள் கடைப்பிடித்த மகாயான பௌத்தம் கி.பி.7ம் நூற்றாண்டுவரை பரவியிருந்தது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தர்மபாலர் முதலான பல தமிழ் துறவிகள் பௌத்தமதத்துக்கான முக்கியமான தத்துவ நூல்களை எழுதியிருக்கிறார்;கள், தமிழிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஐம்பெரும் காப்பியங்களில் முக்கியமானவையான மணிமேகலை மற்றும் குண்டகேசி என்பன பௌத்த மதத்தின் மேன்மையை எடுத்து விளக்கிய நூல்கள் என்கின்ற வரலாற்று உண்மைகளை எடுத்துச் சொல்வதற்கு இன்றுவரை சற்சூத்திரப் பரம்பரையினர் தயாரக இல்லை. தமிழர்களுடைய வரலாற்றை ஆரிய பார்ப்பணிய மதக் கோட்பாடுகளுக்குள் சிக்கவைத்து பார்ப்பணிய மதத்தின் வரலாறு தான் தமிழர்களின் வரலாறு என்று ஆறுமுகநாவலரின் சற்சூத்திரப் பரம்பரை பெருமை பேசிக்கொண்டிருக்க, விகாரைகள் இருந்த இடங்கள் எல்லாம் சிங்களவர்களின் பூர்வீக பூமி என்று தேரவாத பௌத்தத்தை கடைப்பிடிக்கும் மாகவம்ச பரம்பரையினர் உரிமை கொண்டாடியதுடன் அந்த நிலப்பரப்புக்களை ஆக்கிரமிக்கும் வேலைகளையும் திட்டமிட்டுச் செய்தனா.;- செய்து வருகின்றனர்.

......வல்லிபுர ஆழ்வார் ஆலயப்பகுதியில் 1940 களில் வரலாற்று பொற்சாசனம் ஒன்று கிடைத்தது. கோவில் தேவைக்காக கிணறு தோண்டிய போது மண்ணுக்குள் இருந்து கிடைத்த இந்த பொற்சாசனம் வல்லிபுரப் பொற்சானம் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பொற்சாசனம் கிபி 2 ம் நுற்றாண்டிலே ‘படகர அதன’ என்ற இடத்திலே ஒரு பௌத்த விகாரை கட்டப்பட்ட செய்தி பிராமி எழுத்து வடிவத்திலே குறிப்ப்pடப்பட்டிருந்தது. இந்த வரலாற்றப் பொற்சாசனத்தை ஆய்வுசெய்த பரணவிதான உட்பட்ட சிங்கள வரலாற்றாசிரியர்கள் தற்போது வல்லிபுர ஆழ்வார் ஆலயம் இருக்கும் இடத்தில் பௌத்த விகாரையே இருந்த தென்றும் அங்கு சிங்கள மக்களே குடியிருந்தார்கள் என்றும் 14 ம் நூற்றாண்டுக்குப் பின்பு இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய தமிழர்கள் அந்தப்பிரதேசத்தின் பூர்வீக குடிமக்களான சிங்கள மக்களை அடித்து விரட்டிவிட்டு அங்கிருந்த விகாரையையும் அழித்து அது இருந்த இடத்தில் விஷ்ணு கோவிலை கட்டிவிட்டார்கள் என்று நிறுவ முற்பட்டிருக்கிறார்கள்.......

உண்மையில் இந்த ஆலயத்தின் வரலாறு என்பது தமிழகத்தில் உத்தவேகத்துடன் எழுந்த பக்தி இயக்க காலகட்டத்தில் (கி.பி.6ம் 7ம் நூற்றாண்டுகள்) தமிழகத்திலும் இலங்கையிலும் தமிழ்மக்கள் மத்தியல் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சமண பௌத்த மதங்கள் அழிக்கப்பட்ட வரலாற்றுடன் ஆரம்பிக்கிறது. நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கருத்தியல் போராட்டத்தில் கௌதம புத்தர் விஷ்ணுவின் அவதாரமாக அர்த்தப்படுத்தப்பட, புத்தருடைய தர்மச்சக்ரம் விஸ்ணுவினுடைய சக்கரமாக மாற்றப்பட தமிழகத்திலும் இலங்கையிலும் இருந்த மகாயான பௌத்த மதம் இந்துமதத்தின் வைஷ்ணவப் பிரிவுடன் ஐக்கியமாக அந்த மதத்திடைய விகாரைகள் விஷ்ணு கோவில்களாக மாற்றம்பெற்றன. பல விஹாரைகள் கைவிடப்பட்டு அழிந்துபோயின.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் முதல் தலைநகராக விளங்கிய கதிரமலை (தற்போதைய கந்தரோடை) மகாயான பௌத்தத்தை கடைபிடித்த தமிழ் பௌத்த தலைநகராக இருந்தது என்பதற்கு இன்றும் அங்குள்ள ஏராளமான தமிழ் பௌத்த விஹாரைகளின் தடயங்கள் சான்றாக இருக்கின்றன.ஆனால் சற்சூத்திர பரம்பரையினர் கதிரமலையின் வரலாற்றை மூடி மறைத்து மழுப்பகின்ற கைங்கரியத்தில் ஈடுபட, தேரவாத பௌத்ததை கடைப்பிடிக்கும் சிங்கள பௌத்த பேரினவாதிகள் அது தங்களுடைய வரலாற்று நகரம் என்றும் தங்களது முன்னோர்களே அந்தப் பிரதேசத்தின் பூர்வீக குடிமக்கள் என்றும் உரிமை கொண்டாடுகின்றனர்.

கதிரமலையை ஆண்ட கடைசி மன்னனாகிய உக்கிரசேனன், பாண்டிய நாட்டு இளவரசியும் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலை கட்டியவளுமாகிய மாருதப்புரவல்லியை காதல் மணம்புரிந்து அவளுக்காக இந்து மதத்துக்கு மாறி அவளின் பெயரால் உருவாக்கிய நகரமே வல்லிபுரம் ஆகும். கிபி. 6ம் நூற்றாண்டுக்கும்,7 ம் நூற்றாண்டுக்;கும் இடையில் நிகழ்ந்த இந்த வரலாற்று சம்பவத்தின் போதே மகாயான பௌத்தம் அதாவது தமிழ் பௌத்த மரபு வைஷ்ணவத்துக்குள் ஐக்கியமான வரலாற்று மாற்றமும் நிகழ்ந்தது. இந்தப் பின்னணியிலேயே நான் இங்கே குறிப்பிடும் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தோற்றமும் இடம்பெற்றது.

சிவா சின்னப்பொடி அவர்களுடைய வலைப்பதிவிலிருந்து http://sivasinnapodi1955.blogspot.com/2006/12/1_09.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.