Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் குடும்ப பெண் ஒருவர் வெட்டிக் கொலை

Featured Replies

யாழில் குடும்ப பெண் ஒருவர் வெட்டிக் கொலை

 

crime-scene-murder-body-chalk-outline-we

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியிலுள்ள பொற்பகுதி, குடத்தனை கிராமத்தில் வீட்டில் உறங்கி கொண்டிருந்தப் பெண் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

62 வயதான தங்கவேலாயுதம் கமலாதேவி என்ற பெண்ணே நேற்றிரவு 11 மணியளவில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெண்ணின் கணவர் நோயாளி என்பதால் அவர் நேற்றிரவு தூக்கமாத்திரை உட்கொண்டு விட்டு நித்திரைக்கு சென்றதால் இரவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அறிந்திருக்கவில்லை.

பெண்ணின் கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ள நபர்கள் பெண் அணிந்திருந்த தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

 பெண்ணின் சடலம் பருத்திதுறை அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், கொலை தொடர்பான விசாரனைகளை மோப்பநாய் உதவியுடன் முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/14558

  • தொடங்கியவர்

வடமராட்சியில் இரட்டைக் கொலை – திங்கள் இரவு பயங்கரம்

சகோதர்களுக்கு இடையிலான சண்டையை விலக்க சென்ற சகோதரன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்து உள்ளார்.  வடமராட்சி தும்பளையை சேர்ந்த சிவகுமார் சுவர்ணன் (வயது 20) எனும் நபரே அவ்வாறு உயிரிழந்தவராவார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
மூத்த சகோதர்கள் இருவரும் திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் தமக்குள்ள மோதிக்கொண்டு உள்ளனர். அந்த மோதலை விலக்கி விட சென்ற இளைய சகோதரன் மீது மோதலில் ஈடுபட்ட நபர் கத்தியால் குத்தி உள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கானவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். அதனை அடுத்து சடலம் மந்திகை ஆதார வைத்திய சாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

அது தொடர்பில் பருத்தித்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்து உள்ளனர்.

வயோதிப பெண் கழுத்து வெட்டி படுகொலை :

அதேவேளை வடமராட்சி குடத்தனை பகுதியை சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் திங்கட்கிழமை நள்ளிரவு கழுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.  குடத்தனை பொற்பதி பகுதியை சேர்ந்த தங்கவேலாயுதம் பரமேஸ்வரி (வயது 65) எனும் வயோதிப பெண்ணே படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

குறித்த வயோதிப பெண்ணின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் குடத்தனையில் உள்ள தனது வீட்டில் கணவனுடன் வசித்து வந்துள்ளார். அத்துடன் வீட்டுடன் சேர்ந்து சிறிய வர்த்தக நிலையம் ஒன்றினையும் நடாத்தி வந்துள்ளனர்.

அந்நிலையில் திங்கட்கிழமை நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த இனம் தெரியாத நபர்கள் வயோதிப பெண்ணின் கழுத்தை வெட்டி படுகொலை செய்துள்ளனர். குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://globaltamilnews.net/archives/10944

  • கருத்துக்கள உறவுகள்

பருத்திதுறை அரச வைத்தியசாலையில்

மந்திகை ஆதார வைத்திய சாலைக்கு  

????????

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

பருத்திதுறை அரச வைத்தியசாலையில்

மந்திகை ஆதார வைத்திய சாலைக்கு  

????????

 

இன்னும்  சில இறப்புகள் இடம் பெற்றதாக செய்திகள் கூறுகின்றன  இரு சகோதரர்களுகிடையில் தகராறு ஒருவர் வெட்டி கொலை எனவும் , முகம் கழுவ சென்ற சிறுமி கிணற்றில் விழுந்து மரணம் , ராணுவ சிப்பாய் ஒருவர்  விபத்தில் பலி என செய்திகள் சொல்கின்றன 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.