Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் அதிரடி ரெய்டு

Featured Replies

தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் அதிரடி ரெய்டு

262_10567.jpg

சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய மகன், நெருக்கமான தொழிலதிபர்கள் என மொத்தம் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்.

261_10074.jpg

சேகர் ரெட்டி வாக்குமூலத்தின் எதிரொலி என்றும் கூறுகிறார்கள். ராம மோகன ராவ் தரப்பில் இது உறுதி செய்யப்படவில்லை.

http://www.vikatan.com/news/politics/75516-tamilnadu-chief-secretary-ram-mohana-rao-house-raided-by-it.art

  • தொடங்கியவர்

தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவின் பின்னணி என்ன?

 

 
ramamohan_rao

சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவின் சென்னை அண்ணாநகர் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு தெரிந்தவர்களின் வீடுகள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக தலைமைச் செயலாளர் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது என்பது இதுவே முதல் முறை.

ராமோகன் ராவின் வீட்டில் காலை 6 மணி முதலே சோதனை நடைபெற்று வருவதால், வீட்டுக்குள் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதே போல,வீட்டுக்குள் இருந்து யாரும் வெளியே வரவும் அனுமதிக்கப்படவில்லை.

செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள், வீட்டின் வாயிலில் காத்திருக்கிறார்கள்.

தலைமைச் செயலாளருக்கு நெருக்கமான தொழிலதிபர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக தலைமைச் செயலாளராக இருக்கும் ராமமோகன் ராவ் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

1985ம் ஆண்ட பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி. இவர் ஏற்கனவே தமிழக அரசில் வேளாண், சமூக நலம், ஊரக வீட்டு வளர்ச்சி, தொழில் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியவர். கடந்த ஜூன் 8ம் தேதி தமிழக தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இவர் வரும் 2017ம் ஆண்டு செப்டம்பரில் பணி ஓய்வு பெற இருந்த நிலையில், இன்று அவரது வீட்டில் இன்று சோதனை நடந்து வருகிறது.

http://www.dinamani.com/tamilnadu/2016/dec/21/தலைமைச்-செயலாளர்-ராமமோகன்-ராவின்-பின்னணி-என்ன-2619302.html

  • தொடங்கியவர்

ராமமோகன ராவ் வீட்டின் முன்பு ஆர்பரிக்கும் தனி ஒருவன்!

Aam_admi_senthiel_protest_Home_secrector

தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் நடத்தப்பட்டு வரும் சோதனை குறித்து மக்களுக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஒருவர், தலைமைச் செயலாளர் வீடு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக தலைமைச் செயலாளராக இருந்து வருபவர் ராமமோகன ராவ். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் அமர்த்தப்பட்டார். அவருக்கு அடுத்தப்படியாக ராமமோகன ராவ் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். அப்போது, புயல் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை முன்வைத்தார். முதல்வர் ஒருபக்கம் இருந்தாலும், அரசின் அனைத்து நடவடிக்கைகளிலும் ராமமோகன ராவின் கையே ஓங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை அண்ணாநகரில் உள்ள ராமமோகன ராவ் வீடு, அலுவலகம் மற்றும் அவரது மகனுக்கு தொடர்புடைய 13 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையால் தமிழக அரசு அதிகாரிகள் கலக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Aam_admi_senthiel_attack_11230.jpg

இதனிடையே, ராமமோகன ராவ் வீட்டின் முன்பு ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் திடீரென போராட்டத்தில் குதித்துள்ளார். அப்போது, தலைமைச் செயலாளர் வீட்டில் என்ன சோதனை நடைபெறுகிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சோதனையின்போது காவலர்கள் ஏன் நிறுத்தப்படவில்லை என்று கேள்வி எழுப்பியவாறு இருந்து கொண்டே இருந்தார்.

மேலும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வீட்டில் சோதனை நடத்துங்கள், ஏன் அதிமுகவை மட்டும் குறி வைத்து சோதனை நடத்தி வருகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பினார். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செந்தில்குமார் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். அப்போது, அவர் தலையில் வைத்திருந்த கட்சி தொப்பியை அவர்கள் பிடுங்கிக் கொண்டதோடு மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்தவர்கள், தாக்குதல் நடத்தியவர்களை அங்கிருந்து அனுப்பி விட்டனர். 

ராமமோகன ராவ் வீட்டில் நடத்தப்படும் சோதனை குறித்தும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் தனி ஒருவர் கோஷங்கள் எழுப்பியவாறு நின்று கொண்டு இருப்பதால் அந்த இடமே பரபரப்புடன் காணப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/75524-aap-member-solo-protest-before-rammohan-rao-house.art

  • தொடங்கியவர்

ராமமோகன ராவ் வீட்டில் சோதனை நடத்த இதுதான் காரணம்- மு.க.ஸ்டாலின்

8a_11015.jpg

தமிழக ஆட்சியாளர்களின் முறைகேடான நடவடிக்கைகளுக்குத் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் துணையாக இருப்பதாக கட்சித் தலைவர்கள் பலரும் அப்போதே சுட்டிக்காட்டியிருந்தனர் என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஊழல் முறைகேடுகள் மூலம் லாபம் பார்த்த ஆட்சியாளர்களும் ஆட்சியை ஆட்டி வைப்பவர்களும் தப்பிவிடக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத முன்னுதாரணமாக தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே, தொழிலதிபர்கள் என்ற பெயரில் ஆளுங்கட்சியினருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அவை பற்றிய முழுமையான உண்மைத் தகவல்களை மத்திய அரசு வெளியிடவில்லை. இந்த நிலையில்தான், தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

அண்மையில் சோதனைகளுக்குள்ளான மணல் வியாபாரியான சேகர் ரெட்டி என்பவரிடம் புது 2000 ரூபாய் நோட்டுகள் உள்பட கோடிக்கணக்கக்கான ரூபாய் பணமும் கிலோ கணக்கில் தங்கமும் வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாகத் தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது. மணல் வியாபாரி சேகர் ரெட்டி, கட்டுமானத் தொழில் செய்யும் ராமலிங்கம் போன்றவர்களுடன் தமிழக அமைச்சர்கள் பலரும் தொடர்பில் உள்ளார்கள் எனத் தொடர்ச்சியாக செய்திகள் வருகின்றன. ஏற்கனவே கரூர் அன்புநாதன் என்பவரின் வீட்டில் சிக்கிய கோடிக்கணக்கான பணத்தைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் வீட்டிலும் சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். எனவே தமிழக அமைச்சர்கள் பலரும் இத்தகைய வியாபாரிகள்-தொழிலதிபர்கள் போன்றோருடன் தொடர்பில் இருப்பது உறுதியாகிறது. அமைச்சர்களுக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருகின்றனர். 

முதல்வரின் செயலாளராக இருந்த ராமமோகன ராவுக்கு தலைமை செயலாளர் பதவியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கிய போதே சர்ச்சைகள் வெளிப்பட்டன. அவருக்கு தலைமைச் செயலாளர் பதவியைத் தந்ததற்குக் காரணம், அவர் ஆட்சியாளர்களின் முறைகேடான நடவடிக்கைகளுக்குத் துணையாக இருப்பதால் தான் என்பதை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அப்போதே சுட்டிக்காட்டியிருந்தனர். இந்நிலையில், தலைமைச் செயலாளர் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை என்பது தமிழகத்தைத் தலைகுனிய வைத்துள்ளது. தமிழக நலன்களைப் புறக்கணித்து தங்கள் சொந்த லாபங்களுக்காக செயல்படும் அ.தி.மு.க அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள், ஆளுங்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது கடுமையாகவும் வெளிப்படையாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், ஊழல் முறைகேடுகள் மூலம் லாபம் பார்த்த ஆட்சியாளர்களும் ஆட்சியை ஆட்டி வைப்பவர்களும் தப்பிவிடக்கூடாது" என வலியுறுத்தியுள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/75526-stalin-says-the-reason-behind-it-raid-at-rammohan-rao.art

  • தொடங்கியவர்

ராமமோகன் ராவ் வீட்டில் ரெய்டு...  பரபர பின்னணி, அதிர்ச்சியில் அ.தி.மு.கவினர்!

 

rama_mohana_rao_house_12387.jpg

யார் இந்த ராமமோகன ராவ்

ராமமோகன ராவ், ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த 1985ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர். 2017ம் ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெற உள்ளார். கடந்த மே மாதம், நடந்த சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க வெற்றி பெற்றது. அப்போது, கூடுதல் தலைமை செயலாளர் என்ற அந்தஸ்தில் இருந்த அவர், ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தார். ஜூன் 8ம் தேதி தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆகிய பொறுப்புக்களை வகித்தவர். இவர் இதுவரை அயல் பணி என்ற வகையில் மத்திய அரசு பணிக்கு செல்ல வில்லை. 2001 முதல் 2003 வரை குஜராத் கடல்சார் வாரிய துணை தலைவராக இருந்துள்ளார். ராமமோகன ராவின் தாய்மொழி தெலுங்கு என்றாலும் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் சரளமாக பேசுவார்.

ராமமோகன ராவ், தமிழக அரசின் தலைமை செயலாளரானதும், அவருக்கு நெருக்கமானவர்களின் ஆதிக்கம் தலைதூக்கியது. தமிழக ஆளுநராக இருந்த ரேசைய்யாவுக்கும் ராமமோகன ராவுக்கும் அரசு பதவிகளை கடந்து நல்ல நட்பு இருந்தது. இவர்கள் இருவருக்கும் தூதுவராக திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் இருந்தார். இதனால் அவர் அதிகாரத்தில் கோலோச்சினார்.

இந்த சூழ்நிலையில் தொழிலதிபர் சேகர்ரெட்டியிடம் நடத்தப்பட்ட வருமானவரி சோதனைக்குப் பின்னால் பல அரசியல் சதுரங்க வேட்டை உள்ளது. கர்நாடகாவில் நடந்த வருமானவரி சோதனையில் அமைச்சர் எடப்படி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு வருமானவரித்துறை சேகர்ரெட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சேகர்ரெட்டி கொடுத்த தகவலின்படியே ராமமோகன் ராவின் சென்னை அண்ணாநகர் வீடு உள்பட 13 இடங்களில் இன்று காலை வருமானவரியினர் சோதனை நடத்தினர்.

இந்த அதிரடி சோதனையால் ராமமோகன ராவிடம் அதிக நெருக்கம் காட்டிய அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஏற்கனவே வருமான வரித்துறையினரின் சந்தேக வளையத்திலிருக்கும் அமைச்சர் ஒருவரும், முன்னாள் அமைச்சரும் அப்செட் ஆகி இருக்கின்றனர். இந்த சோதனை சங்கிலி தொடர் போல தொடரும் என்கிறது வருமானவரித்துறை. இந்த சோதனை எல்லாம் தமிழக அரசில் ஆட்சி பிடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு சோதனை காலமாக மாறி உள்ளது. சேகர் ரெட்டியிடம் நெருக்கமாக இருந்தவர்கள் பட்டியலில் ஓ.பன்னீர் செல்வமும் ஒருவர் என்கிறார்கள். இருவரும் திருப்பதியில் ஒன்றாக இருந்த புகைப்படமும் வெளியானது.

சோதனை குறித்து வருமான வரித்துறையினர் கூறுகையில், "காலை 7 மணிக்கு இந்த சோதனை தொடங்கியது. வீட்டில் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்துள்ளனர். வருமானவரித்துறை அதிகாரிகளைப் பார்த்ததும் ராமமோகன ராவின் முகத்தில் எந்தவித பதற்றமும் இல்லை. சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் முக்கியத் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது" என்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/75528-admk-members-in-shock-after-it-raids-chief-secretarys-house.art

  • தொடங்கியவர்

ராமமோகன ராவ் வீடு முன்பு துணை ராணுவம் குவிப்பு ஏன்?

 

rama_mohana_rao_house-_army_12019.jpg

தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீடு முன்பு மத்திய துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் அண்ணாநகர் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த சோதனையில் தமிழக காவல்துறையினர் யாரும் பாதுகாப்புக்கு அமர்த்தப்படவில்லை. இதனிடையே, ஆம் ஆத்மியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பும், பதற்றம் ஏற்பட்டது.

rama_mohana_rao_house-_army_1_12349.jpg

இதைத் தொடர்ந்து, துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப்படையினர், ராமமோகன ராவ் வீடு முன்பு குவிக்கப்பட்டனர். மேலும், ராமமோகன ராவின் மகன் மற்றும் உறவினர்கள் கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/75533-military-force-deployed-infront-of-ramamohana-rao-house.art

  • தொடங்கியவர்

தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை; சசிகலாவுக்கு நெருக்கடி?

 

ரெய்டு நடைபெறும் வீடுசென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் மற்றும் அவரது உறவினர் வீடுகளிலும், முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தின் உதவியாளர் ரமேஷ் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதலே  அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, சித்தூர், பெங்களுரு உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரேநேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் தொழிலதிபர் சேகர் ரெட்டி, அவரது சகோதர் மற்றும் உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைகளின் தொடர்ச்சியாக இன்று சோதனை நடத்தப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கெனவே சென்னை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் ரெட்டியின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில்போது பல கோடி ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகள், கணக்கில் காட்டப்படாத தங்க நகைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இந்நிலையில் இன்று அதிகாலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர். முதல்வர் ஒ.பி.எஸ்., பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இரண்டு நாட்கள் முன்புதான் சந்தித்து, வர்தா புயல் பாதிப்புக்கு 22,500 கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து வந்தார்.

வருமான வரித்துறையினர் சோதனையின் பின்னணி என்ன?.


முந்தைய ஆட்சியின்போது, தமிழ்நாட்டில் மின்சார வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் செய்த குற்றச்சாட்டு மற்றும் சட்டவிரோதமாக கோடிக்கணக்கான பணத்தை, ஹாங்காங்கில் முதலீடு செய்ததாக  தமிழக முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன், முன்னாள் தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன் ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.  நத்தம் விஸ்வநாதன், ஞானதேசிகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாக கடந்த செப்டம்பர் மாதம் 12-ம் தேதி திடீரென்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர்கள் கைது செய்யப்படவில்லை. அமலாக்கத்துறை சோதனை மட்டுமே நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. வருமான வரித்துறையினரும் ஏற்கெனவே நத்தம் விஸ்வநாதன் மற்றும் அவரது உறவினர் வீடுகளிலும் சோதனை நடத்தினர். தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு வெளிநாட்டிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றிருப்பது, கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதற்கான ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் அப்போதே தகவல்கள் வெளியாகின. இந்த சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் தொடர் சோதனைகள் நடைபெறும் என்று பரவலாக தகவல்கள் தெரிவித்தன.

நத்தம் விஸ்வநாதன் மற்றும் உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, சசிகலாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அந்த சமயத்திலேயே ஜெயலலிதாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

2016-ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு கரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள, ஃபைனான்சியர் அன்புநாதன் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. ஏராளமான கணக்கில் வராத பணம் அப்போது பிடிபட்டது. 

சேகர் ரெட்டியுடன் ஓ.பி.எஸ்அதன் தொடர்ச்சியாக, சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் டிசம்பர் 11-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில் இன்று, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் மற்றும் அவரது உறவினர் வீடுகளிலும், முதல்வரின் செயலாளர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடியில் இறங்கியுள்ளனர். 

ஜெயலலிதா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர், அருகில் நின்ற சசிகலாவிடம் ஆறுதல் தெரிவிக்கும் வகையில், தலையில் கைவைத்து, "சகோதரி மறைந்தால் என்ன? சகோதரராக நான் இருக்கிறேன். கவலைப்படாதீர்கள்" என்று தெரிவித்தாராம். அண்மைக்காலமாக நடைபெறும் வருமான வரித்துறையினர் ரெய்டுகளைப் பார்க்கும்போது, சகோதரர் தனது கடமையை(?) ஆற்றத் தொடங்கி விட்டார் என்று தெரிகிறது.

மேலும், ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய பின், முதல்வர் ஒ.பி.எஸ்-ஐ கட்டித்தழுவி பிரதமர் ஆறுதல் கூறினார். ஒ.பி.எஸ்-ம் மத்திய அரசின் கண்காணிப்பில்தான் உள்ளார் என்பதை குறிப்பால் உணர்த்தும் வகையில், பிரதமர் அவ்வாறு செய்தாரா? என எண்ணத் தோன்றுகிறது.

சேகர் ரெட்டி, சென்னையில் பல்வேறு அரசியல் முக்கியப் பிரமுகர்கள், அமைச்சர்களுக்கு நெருக்கமானவர் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் இப்போது தலைமைச் செயலாளராக உள்ள ராம மோகன ராவ், முன்னான் தலைமைச் செயலாளர் ஞானதேசிகனுக்கு பின்னர் பொறுப்பேற்றவர். சசிகலாவின் ஆசியுடன் ராமமோகன ராவ் தலைமைச் செயலாளர் பொறுப்புக்கு வந்ததாக அப்போதே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்த சூழ்நிலையில், ஒ.பி.எஸ்,-ன் உதவியாளர், தலைமைச் செயலாளர் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்தியிருப்பதன் மூலம் அடுத்த டார்கெட் சசிகலாவுக்கு நெருக்கமானவர்களாக இருக்கலாம் என்று, அரசியல் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது. 

அ.இ.அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக முதலில் பொறுப்பேற்பது என்ற முடிவில், கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை தூண்டிவிட்டு, அதற்கான முதல்கட்ட ஆயத்தப்பணிகளில் சசிகலா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தீவிரமாக உள்ளனர். அடுத்ததாக, முதல்வர் பதவியைப் பற்றி யோசிக்கலாம் என்ற முடிவுடன் சசிகலா காய்களை நகர்த்தி வரும் நிலையில், இன்றைய வருமான வரித்துறை ரெய்டு, பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது.

http://www.vikatan.com/news/coverstory/75530-are-these-it-raids-to-trap-sasikala.art

  • தொடங்கியவர்

தலைமைச் செயலரை சிக்க வைத்த சேகர் ரெட்டி!  -கார்டனை அதிர வைத்த வாக்குமூலம் 

 

cs_house_12438.jpg

மிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டை குடைந்து கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. 'ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்தே, தலைமைச் செயலாளரின் வர்த்தகத் தொடர்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது. அரசின் அனுமதியோடுதான் அனைத்தும் நடக்கிறது' என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில். 

மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்புக்குப் பிறகு, பாரிமுனையில் தங்கமாக வாங்கிக் குவிக்கப்பட்ட கறுப்புப் பணம் பற்றிய தகவல்களை சேகரித்தது வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு. இந்த வளையத்தில் முதலில் சிக்கியவர் கீழ்பாக்கம் கார்டனைச் சேர்ந்த தங்க வியாபாரி பிரேம்குமார். அமைச்சர் விஜயபாஸ்கரின் கல்லூரி கால நண்பரான பிரேம் குமார் மூலமாகத்தான் தங்கக் கட்டிகளை வாங்கிக் குவித்தார் சேகர் ரெட்டி. இதையடுத்து டிசம்பர் முதல் வாரத்தில் சேகர் ரெட்டி, பிரேம் குமார் வீடுகளில் ரெய்டு நடத்தினர். இதில் கணக்கில் காட்டப்படாத 130 கோடி ரூபாய் பணமும் 127 கிலோ தங்கமும்  பிடிபட்டது. அதை அப்படியே மீடியாக்கள் முன்பு காட்சிப்படுத்தினர். 

cs_ram_12597.jpg" சேகர் ரெட்டியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமும் ஆவணங்களும் தமிழக அரசில் கோலோச்சுபவர்களின் அனைத்து விவகாரங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டன. தொடர்ந்து மூன்று நாட்கள் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தினோம். கறுப்புப் பணத்தை மாற்றுவதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளைத்தான் தேடிப் போனோம். எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் வீட்டிலேயே ஆவணங்களை வைத்திருந்தார் ரெட்டி. கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக அமைச்சர்களோடும் அரசுச் செயலர்களோடும் ரெட்டி நடத்திய பரிவர்த்தனைகளையும் ஆந்திர, கர்நாடகா வர்த்தக தொடர்புகளையும் அலசினோம். அவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் அனைத்தும் சி.பி.ஐ கன்ட்ரோலுக்குச் சென்றுவிட்டது. அமலாக்கத்துறையின் துறையின் விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது. நாங்கள் கேட்பதற்கு முன்பே, ரெட்டி அனைத்து தகவல்களையும் கூறிவிட்டார்.

இதையடுத்து, தலைமைச் செயலாளர் வீட்டில் ரெய்டு நடத்த, நிதித்துறை அமைச்சகத்தின் நேரடி வரிகள் விதிப்பு வாரியத்திடம் அனுமதி கேட்டோம். ' யாராக இருந்தாலும் பாரபட்சம் காட்ட வேண்டாம். எந்த இடத்தில் வேண்டுமானாலும் சர்ச் செய்யுங்கள்' என உத்தரவிட்டனர். இதையடுத்தே, சி.எஸ் வீட்டிற்குச் சென்றோம். அவர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு என்பது பார்மாலிட்டிக்காக நடத்தப்பட்டது. சேகர் ரெட்டி வீட்டிலேயே அவர் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றிவிட்டோம்" என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில். 

" தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வீட்டை சோதனையிடச் செல்வது குறித்து, கார்டன் வட்டாரத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தகவல் சென்றது. இதற்கு சசிகலா தரப்பில் இருந்த எந்த எதிர்வினையும் காட்டப்படவில்லை. மன்னார்குடி உறவுகளோ, ' ராமமோகன ராவ் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 9 மாதம் இருக்கிறது. மத்திய அரசு என்ன செய்கிறதோ, செய்துவிட்டுப் போகட்டும். சேகர் ரெட்டி அனைத்தையும் கூறிவிட்டார். இல்லாவிட்டால் இவ்வளவு வேகமாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. அவரை அவரே காப்பாற்றிக் கொள்ளட்டும்' எனப் பேசியுள்ளனர். கடந்த ஆட்சி காலத்தில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர விசுவாசம் காட்டியதன் விளைவாக, தலைமைச் செயலாளர் பதவியை எட்டிப் பிடித்தார் ராமமோகன ராவ். அடுத்த சில நாட்களில் முந்தைய தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மீது நடவடிக்கையும் பாய்ந்தது. அவரால் பாதிக்கப்பட்டவர்கள்தான், வருமான வரித்துறையின் கவனத்திற்கு துல்லியமாகக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள். இல்லாவிட்டால், நூல் பிடித்தார்போல வருமான வரித்துறையின் ரெய்டுகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சேகர் ரெட்டி பிடிபட்ட பிறகு, தன்பக்கம் நடவடிக்கை பாயலாம் என்பதையும் ராமமோகன ராவ் எதிர்பார்த்தே காத்திருந்தார்" என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில். 

sekar_reddy1_12507.jpg

வருமான வரித்துறையின் ரெய்டு குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், " இந்த ரெய்டின் மூலம் யார் அவமானப்பட்டாலும், நமக்குக் கவலையில்லை என மத்திய அரசு நினைக்கிறது. ஆளுங்கட்சியின் தொடர்புகள் மூலம் குவிக்கப்படும் லஞ்சப் பணம் குறித்து மக்களிடம் முன்வைப்பதற்காகவே இவ்வாறு நடத்தப்படுகிறது. பொதுப் பணித்துறையின் முக்கிய ஒப்பந்ததாரராக சேகர் ரெட்டி இருக்கிறார். அவருக்கு கார்டன் வட்டாரத் தொடர்பை உருவாக்கிக் கொடுத்ததில் தலைமைச் செயலருக்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது. ரெட்டிக்கு நெருக்கமான அமைச்சர்கள்; பிரேம் குமாரிடம் தங்கத்தை வாங்கிக் குவித்த அமைச்சர்கள் என அமலாக்கத்துறையின் பார்வை விரிவடைந்து கொண்டே போகிறது. இந்நிலையில், முதல் அமைச்சர் ஓ.பி.எஸ்ஸின் உதவியாளர் ரமேஷ் வீட்டிலும் ரெய்டு எனத் தகவல் பரவியது. அதில் எந்தவித உண்மையும் இல்லை. சேகர் ரெட்டியின் தொடர்பில் இருக்கும் தலைமைச் செயலாளர் வீட்டில் மட்டுமே ரெய்டு நடக்கிறது. அடுத்து நடக்கப் போகும் ரெய்டு கிரீன்வேஸ் சாலையிலா? கார்டனுக்கு நெருக்கமான வட்டாரத்திலா என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. இதனால் கார்டனைச் சுற்றி வரும் அமைச்சர்கள் பலரும் கதிகலங்கிப் போய் உள்ளனர்" என்றார் விரிவாக. 

ஓ.பி.எஸ்ஸின் டெல்லி விசிட்டுக்குப் பிறகே, 'சி.எஸ் மீதான பிடி இறுகியது' என்ற தகவலும் கோட்டை வட்டாரத்தில் வலம் வருகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/75529-income-tax-officials-reveal-chief-secretarys-contact-with-sekar-reddy.art

 

  • தொடங்கியவர்

தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை ஏன்? மத்திய அரசு அடடே விளக்கம்

 

Nirmala_sitharaman_long_13130.jpg

தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் செயலாளராக இருந்தவர் ராமமோகன ராவ். பின்னர் அவருக்கு தலைமைச் செயலாளர் பதவி வழங்கினார் ஜெயலலிதா. அப்போது, சர்ச்சைகள் வெடித்தது. அவருக்கு தலைமைச் செயலாளர் பதவியைத் தந்ததற்குக் காரணம், அவர் ஆட்சியாளர்களின் முறைகேடான நடவடிக்கைகளுக்குத் துணையாக இருப்பதால் தான் என்பதை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அப்போதே சுட்டிக்காட்டியிருந்தனர். 

இந்த நிலையில், சென்னை அண்ணாநகரில் உள்ள தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பாதுகாப்புக்கு மத்திய துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே, மதுரை விமான நிலையத்துக்கு இன்று வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் நடத்தப்படும் சோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நிர்மலா, 'எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டு வருகிறது' என்றதோடு பேட்டியை முடித்துக் கொண்டார்.

http://www.vikatan.com/news/tamilnadu/75535-central-government-gives-reason-behind-raids-on-tamilnadu-chief-secretary.art

 

தமிழக தலைமைச் செயலர் வீட்டில் நடந்த சோதனைக்கு மம்தா பானர்ஜி கண்டனம்

  •  

தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் இல்லத்தில், வருமான வரித் துறை சோதனை நடத்திவருவதற்கு மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

மம்தா பானர்ஜி
 தமிழக தலைமைச் செயலர் வீட்டில் நடந்த சோதனைக்கு மம்தா பானர்ஜி கண்டனம்

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருக்கும் அவர், முன்பு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது; தற்போது தமிழக தலைமைச் செயலர் இல்லத்தில் நடத்தப்படுகிறது. இந்த பழிவாங்கும், நெறிமுறையற்ற நடவடிக்கை, கூட்டாட்சி அமைப்பை சீர்குலைக்கும் என்று கூறியிருக்கிறார்.

மேலும், அமித் ஷா போன்றவர்களின் இல்லத்தில் சோதனை நடத்தப்படாதது ஏன் என்றும், இம்மாதிரியான நடவடிக்கையை எடுப்பதற்கு முன்பாக மாநில அரசுடன் கலந்து பேசி, அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கிய பிறகே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் மம்தா கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் சோதனை நடக்கும் சில இடங்களில் பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராம மோகன ராவின் அண்ணா நகர் வீட்டில் சோதனை நடந்துவரும்போது, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த செந்தில் என்பவர் பிரதமர் மோதிக்கு எதிராகவும் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பிவந்தார். அவரை திடீரென சிலர் தாக்கினர்.

http://www.bbc.com/tamil/india-38388228

  • தொடங்கியவர்

மணல் குவாரி... மன்னார்குடி நட்பு : நான்கு வருமானத்துறை ரெய்டும், அதன் பின்னணியும்!

 

ரெய்டு

மிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக பதவியில் இருக்கும் தலைமைச் செயலாளர் வீட்டிலேயே ரெய்டுக்குப் போய் மிரட்டியிருக்கிறது மத்திய வருமானவரித் துறை டீம். சுரங்கம் மற்றும் கனிமத் தொழில் புள்ளியான சேகர் ரெட்டி அன்ட் கோ-வுடன்... தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் கொண்டிருந்த தொழில் நட்பு, இதன்மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராமமோகன ராவ், ஆந்திரப் பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழக வேளாண்மைத் துறை, சமூக நலம், தொழில் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியிருக்கிறார்.

தலைமைச் செயலாளர் ராமமோகன ராவுக்கு... எந்தளவுக்கு சேகர் ரெட்டி நெருக்கமோ, அதைவிடக் கூடுதலாக தமிழக முதல்வர் ஓ.பி.எஸ். அன்ட் கோ- வின் அடுத்தகட்ட மேலிட நகர்வுகளைச் சொல்லாமல் சொல்ல ஆரம்பித்துள்ளது. ஒரேநேரத்தில் ராமமோகன ராவ், அவர் மகன் மற்றும் உறவினர்கள்,  (பினாமிகள்) வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 12 இடங்களில் இன்று காலை முதல் ரெய்டு நடந்துவருகிறது. ரெய்டுகள் நிறைந்த ஆண்டாகவே 2016-ம் ஆண்டு அமைந்துள்ளது. ஆண்டின் தொடக்க ரெய்டாக கரூர் மாவட்டம், அய்யம்பாளையத்தைச் சேர்ந்த, பைனான்ஸியர் அன்புநாதன் வீட்டில் தொடங்கியது. தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய இந்த ரெய்டில்தான் 4.70 கோடி ரூபாய் சிக்கியது.

நத்தம், சைதை, கோவை கீர்த்திலால்!

சென்னையில் உள்ள முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மற்றும் அவருடைய உறவினர் வீடுகள், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, அவர் மகன் வெற்றி ஆகிய வீடுகளிலும் ரெய்டு நடந்தது. ரெய்டுகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகச் சொல்லப்பட்டது. கோவை கீர்த்திலால் காளிதாஸ் நகைக் கடைகள், அலுவலகங்கள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர்ந்து ரெய்டு நடந்தது.  இதன் அடுத்தகட்ட தொடர்ச்சியாக அப்போலோவுக்குள் படையெடுத்தது வருமானவரித் துறை டீம்.

அப்போலோவில் ரெய்டு!

அப்போலோ குழுமத்துக்குச் சொந்தமான 30 இடங்களில்... இரண்டு நாட்கள் ரெய்டு நடைபெற்றது. ஜூன் 2016 முதல் செப்டம்பர் முடிய இப்படி தொடர் ரெய்டுகள் போய்க் கொண்டிருந்தன. அடுத்து வந்த மூன்று மாதங்கள் இந்திய அளவில் எங்கோ ஓர் இடத்தில் மட்டுமே ரெய்டுகள் நடந்ததாகத் தகவல்கள் வெளியாயின. மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில்... இதுபோன்ற ரெய்டுகளில் வேகம் குறைந்திருந்தது. ஜெயலலிதா குணம் பெற வேண்டுதல்கள், நேர்த்திக் கடன்கள் என்று அ.தி.மு.க-வினர் வழிபாட்டுத் தலங்களை நோக்கிப் படையெடுத்த நேரமும் அதுதான்.

திருப்பதியில் மொட்டை போட்ட ஓ.பி.எஸ்.! 

raid-2_13041.jpg

நிதி மந்திரியாக நம்பர் டூ வரிசையில் இருந்த ஓ.பன்னீர்செல்வமும்... தன்னுடைய கணக்குக்கு, திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினர் மற்றும் தமிழக அரசின் பொதுப்பணித் துறை கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியுடன் இணைந்து, முதல்வர் குணம்பெற வழிபாடு நடத்தினார். சேகர் ரெட்டியுடன் சேர்ந்து திருப்பதியில் மொட்டையும் போட்டுக்கொண்டார். ரெட்டியும், ஓ.பி.எஸ்ஸும் இணைந்து மொட்டையுடன் (ரெட்டி போட்ட மொட்டைக்குக் காரணம் யாருக்கும் தெரியவில்லை) ஆனந்தமாய் சிரிக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியது. நீண்ட இடைவெளிக்குப் பின், டிசம்பர் 2016-ல் ரெய்டில் இறங்கிய வருமானவரித் துறை, பிரபலமான தமிழக கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி மீது பாய்ச்சலைக் காட்டியது. ‘கறுப்புப் பண ஒழிப்பு, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்ற மோடியின் நவம்பர் 8-ம் தேதி அறிவிப்புக்குப் பின், ரெய்டுகள் வேகம் பிடிக்கத் தொடங்கின.

ரெட்டியின் கூட்டாளிகள் ஓட்டம்!

கள்ள நோட்டுகளைக் கண்டெடுப்பது, கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டு வருவது போன்ற காரணங்கள் பிரதானமாகச் சொல்லப்பட்டு ரெய்டுகள் தொடர்ந்தன. சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் டிசம்பர் 8-ம் தேதியன்று வருவாய்த் துறை அதிகாரிகள் நுழைந்தனர். மூன்று நாட்கள் நடந்த இடைவிடாத ரெய்டில்... 130 கிலோ தங்கம், 170 கோடி ரூபாய் ரொக்கம் என்று தொடர்ந்து தங்கமும், பணமும் raid-5_13454.jpgகிடைத்தபடி இருந்தது. 

காவிரி மணல் குவாரி ஏஜென்ட்கள் ஓட்டம்!

தொடர்ந்து காவிரி மணல் குவாரிகளில் வருமானவரித் துறையினர் நுழைய... குவாரியை பினாமியாக நடத்திவந்த சப்-ஏஜென்ட்கள் தலைமறைவாகி உள்ளனர். காவிரி டெல்டா பகுதியில் உள்ள அரசின் மணல் குவாரிகளுக்கு நிழல் முதலாளி சேகர் ரெட்டிதான் என்ற தகவல் வருமானவரித் துறையினருக்குக் கிடைத்ததே ரெய்டுக்கு முக்கியக் காரணம். மணல் குவாரிகளில், லாரிகளில் ஏற்றி அனுப்பப்படாத மணல்களில் சேகர் ரெட்டியின் பணம், தங்கம் பெருமளவில் ஒளித்து வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலின் பேரில், அங்கு அதிகாரிகள் ரெய்டுக்குப் போயுள்ளனர்.

வேலூரிலும் ஐ.டி. நுழைந்தது!

வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் உள்ள சேகர் ரெட்டியின் பூர்வீக வீடு சோதனைக்குப் பின் சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை தியாகராயர் நகர் பசுல்லா ரோட்டில் உள்ள ஜே.எஸ்.ஆர். அலுவலகம், சாம்பசிவம் சாலை, வீரராகவா தெருவில் உள்ள வீடு போன்ற இடங்களில் கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டிருக்கிறது. 

சேகர் ரெட்டியின் சகோதரர் எனப்படும் தொழில் பங்குதாரர் சீனிவாச ரெட்டி, மற்றொரு பங்குதாரர் பிரேம் ரெட்டி வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் ரெய்டு தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறது. சேகர் ரெட்டியின் வீட்டில், 10 கோடி ரூபாய்க்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கிடைத்ததுபோல... மேலும, பல அதிர்ச்சியான விவரங்கள் கிடைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

சென்னை முகப்பேரில் என்ன நடந்தது?

சென்னை முகப்பேர் பன்னீர் நகரில் வசிக்கும் சேகர் ரெட்டியின் நண்பரான கான்ட்ராக்டர் சீனிவாச ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த ரெய்டிலும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. சேகர் ரெட்டியின் முக்கிய நண்பரும், கான்ட்ராக்டருமான பிரேம் ரெட்டியின் முகப்பேர் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. 

சி.பி.ஐ. டி.ஐ.ஜி. தேன்மொழி!

ரெய்டுக்குப் பின்னர், ‘இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. போலீஸார் ஏற்று நடத்த வேண்டும்’ என்று வருமானவரித் துறை பரிந்துரைக்கும் அளவு விவகாரம் நீள்கிறது. இப்போது சேகர் ரெட்டி உள்ளிட்ட நான்கு ரெட்டி பிரதர்ஸ் மீதான குவாரி - கான்ட்ராக்ட் விவகாரங்களை சி.பி.ஐ. போலீஸ் கையில் எடுத்துள்ளது. சி.பி.ஐ. போலீஸ் டி.ஐ.ஜி. தேன்மொழி தலைமையில், சி.பி.ஐ. களத்தில் இறங்கியுள்ளது.

ரெட்டியும்... ஓ.பி.எஸ். நட்பும்!

தமிழக பொதுப்பணித் துறை அமைச்சராக 2001-ம் ஆண்டு, ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது அவருக்கு சேகர் ரெட்டியின் நட்பு கிடைத்ததாகத் தெரிகிறது. ஓ.பி.எஸ். மூலம் மன்னார்குடி நட்பும், சில மந்திரிகள், ஐ.ஏ.எஸ்-களின் தொடர்பும் அதிகமானதாகக் கூறப்படுகிறது. ரெய்டு எதிரொலியாக திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் பொறுப்பில் இருந்து சேகர் ரெட்டியை நீக்கம் செய்து தேவஸ்தானம் அறிவிப்பு செய்துள்ளது. ரெட்டிக்கு, இந்தப் பதவியை வாங்கித் தந்தது தமிழகத்தின் முக்கிய வி.ஐ.பி-தான் என்ற தகவல், ஆரம்பத்தில் கசிந்தது. தமிழக தலைமைச் செயலாளர், ராமமோகன ராவ், சேகர் ரெட்டி அவருடைய வியாபாரத் தொடர்பு நண்பர்கள், உறவினர்கள் வீடுகளைச் சுற்றியே ரெய்டு கரங்கள் இப்போதைக்கு நீண்டுகொண்டிருக்கின்றன. சேகர் ரெட்டி, எந்த நேரத்திலும் கைது ஆகக் கூடும் என்ற தகவலும் கசிகிறது.

சேகர் ரெட்டி வீட்டில் 70 கோடி ரூபாய் புது நோட்டு!

தமிழகத்தில் புதிய மந்திரி சபை அமைந்த இரண்டாவது நாளே... பொதுப்பணித் துறையின் பிரபல கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் அடித்த ரெய்டு மூலம் ரூ.90 கோடி ரொக்கப் பணமும் 100 கிலோ தங்கமும் பிடிபட்டுள்ளது.
பிடிபட்ட ரூ.90 கோடி ரொக்கப் பணத்தில்... ரூ.70 கோடிக்கு புதிய 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மட்டும் இருந்ததைப் பார்த்து சோதனை அதிகாரிகள் அதிர்ந்துபோயுள்ளனர். சேகர் செட்டி, சீனிவாச ரெட்டி என்ற பெயர் சென்னை தொழிலதிபர்கள் வட்டாரத்தில் பிரபலமான பெயர்கள். சகோதரர்களான இவர்களின் பூர்வீகம் வேலூர் மாவட்டம். வருமானவரித் துறையினர் சென்னை தி.நகர் ஜெகதாம்பாள் தெரு, பசுல்லா தெருக்களில் உள்ள ரெட்டி சகோதரர்களின் வீடுகளில்... முன்பு, விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் இடைவிடாமல் 8 மணி நேரம் ரெய்டு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகா ஐ.ஏ.எஸ். வீட்டிலும் ரெய்டு!

raid-3_13139.jpg

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன் சக்ரவர்த்தி மற்றும் 2 அரசு அதிகாரிகளின் வீடுகளிலும், இதேபோன்று ஐ.டி. சோதனை நடத்தப்பட்டது. இங்கிருந்து கிடைத்த தகவல் அடுத்தகட்ட ரெய்டாக ஜெயச்சந்திரா என்ற அரசு அதிகாரி வீட்டுக்குத் திரும்பியது. கர்நாடக சாலை மேம்பாட்டுத் துறை முதன்மைத் திட்ட அலுவலராக இருக்கிறார், ஜெயச்சந்திரா. இவருக்குச் சொந்தமான கட்டுமான அலுவலகம், பங்களா மற்றும் பண்ணை வீடுகள் பெங்களூருவில் உள்ளன. 

கர்நாடகா அதிகாரியின் ஈரோடு வீடு!

ஜெயச்சந்திரா வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு முடித்தபின், அவருடைய மகனான தொழிலதிபர் பிரிஜேஷின் சென்னை, ஈரோடு வீடு மற்றும் அலுவலகங்களில் நுழைந்தனர். அங்கே, பல கோடி ரூபாய் மதிப்பில் புது கரன்சி நோட்டுகள், தங்கம், வைர நகைகள் போன்றவை கைப்பற்றப்பட்டன. 

இந்த ரெய்டைப் பொறுத்தவரையில்... வருமானவரித் துறை நேஷனல் என்றாலும்... அதில், ‘ஸ்டேட் பாலிடிக்ஸ்’ அதிகமாகவே உணரப்பட்டுள்ளது. அத்துடன், ரெய்டின் பாதுகாப்பு கருதி... முதல்முறையாக துணை ராணுவம் வந்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/tamilnadu/75537-a-detail-report-about-the-income-tax-raids-in-tn.art

  • தொடங்கியவர்

தமிழக தலைமை செயலகத்திலும் ஐடி ரெய்டு

 

rama_mohan_rao-_secretariate_14521.jpg

தமிழக தலைமை செயலகத்தில் வருமானத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை தமிழக தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது  தலைமை செயலகத்திலும் ரெய்டு தொடங்கிவிட்டது. இருபது அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முக்கியமாக ராமமோகன ராவ் அறையில் சோதனை நடைபெற்று வருகிறது.  இந்த சோதனையை அடுத்து தலைமை செயலகத்தில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/75547-it-raid-at-tamil-nadu-chief-secretariat.art

  • தொடங்கியவர்

உளறிக் கொட்டிய சேகர்ரெட்டி..!  அடுத்த ரெய்டு இவர்கள் வீட்டில்தானா?

 

sekar_reddy_15593.jpgசேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அடுத்து மன்னார்குடி குடும்பத்தினர் வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வருமான வரித்துறையின் சோதனையில் வசமாக மாட்டிக் கொண்டார் தொழிலதிபர் சேகர்ரெட்டி. இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் குறித்து கடந்த சில தினங்களாக விசாரணை நடத்தப்பட்டது. அடுத்து இவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீடு, அலுவலகம் உள்பட 13 இடங்களில் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறையை சேர்ந்தவர்கள் அதிரடியாக இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணைக்கு மூலக்காரணமே சேகர்ரெட்டி என்பது எல்லோரும் தெரிந்ததே. அதே நேரத்தில் சேகர் ரெட்டியிடம் முதலில் விசாரித்த போது அவர் எந்த தகவலையும் எங்களிடம் சொல்லவில்லை. அனைத்து பணமும், தங்கமும் தன்னுடையதே என்று அடம் பிடித்தார். அடுத்த எங்களது விசாரணை வேறுவிதமானது. அப்போதுதான் அவர், முக்கிய தகவல்களை சொன்னார் என்கிறார் மத்திய வருவாய் புலனாய்வுதுறை அதிகாரி ஒருவர்.

"சேகர் ரெட்டியிடம் விசாரணை நடத்திய போது, நாங்கள் கேட்ட எந்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்காமல் அமைதியாகவே இருந்தார். அதோடு பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கத்துக்குரிய வருமானத்துக்கான ஆதாரம் குறித்தும் கேள்வி கேட்டோம். அதற்கு அவர், சரியான பதிலளிக்கவில்லை. ஒருகட்டத்தில் சேகர்ரெட்டியிடம் உங்கள் குறித்த முழு விவரங்களும், அதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் சிக்கி விட்டன. இனிமேல் கடவுளே நினைத்தால் கூட உங்களை காப்பாற்ற முடியாது என்று சொல்லிய போது அவரது முகத்தில் ஒருவித பதற்றத்தை காண முடிந்தது. சேகர்ரெட்டிக்கு சிபாரிசு செய்ய ஒருசில போன் கால்கள் வந்தன. அவர்களும் ஒருகட்டத்துக்குப் பிறகு ஒதுங்கி கொண்டனர். அந்த தகவலையும் சேகர்ரெட்டியிடம் சொன்னப்பிறகு, ரகசிய லாக்கர் குறித்த விவரத்தை எங்களிடம் சொன்னார். அவர் சொன்ன இடத்திலிருந்து அந்த லாக்கரை திறந்து பார்த்த போதுதான் முழு விவரங்களும் எங்களுக்கு தெரியவந்தது. அந்த லாக்கரில் அவருடைய முழு பண பரிவர்த்தனை, பிசினஸ் விவரங்கள் இருந்தன. இதுவரை யார், யார் சேகர்ரெட்டியின் தொடர்பில் இருந்தவர்களின் பெயர் பட்டியல்கள் உள்பட முழு விவரங்களும் கிடைத்தன.

அந்த பட்டியலில் முதன்மை செயலாளர் ராமமோகன ராவ் பெயரும் இருந்தது. அவரது வீடு, அலுவலகம் ஆகியவற்றில் விசாரணை நடத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்டோம். அங்கிருந்து கிரீன் சிக்னல் வந்தவுடன் நேற்று நள்ளிரவு வருமான வரித்துறை அவசர ஆலோசனை நடத்தியது. இந்த சோதனைக்கு செல்லும் அதிகாரிகளைத் தேர்வு செய்தோம். அவர்களுக்கு அவசர அழைப்பு விடுத்து அதிகாலையில் ராமமோகன ராவ், வீட்டுக்கு அதிரடியாக சென்றோம். சேகர் ரெட்டி வசம் கிடைத்த ஆதாரங்களே எங்களுக்கு போதுமானது என்றாலும் அதற்கு சப்போர்ட்டாக சில ஆவணங்கள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.  ராமமோகன ராவை தொடர்ந்து இன்னும் சிலரது வீடு, அலுவலகங்களில் எங்களது சோதனையை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அந்த பட்டியலில் அ.தி.மு.க.வின் மூத்த அமைச்சர்கள் இரண்டு பேர் உள்ளனர். அடுத்து மன்னார்குடியை சேர்ந்தவர்களின் பட்டியலும் உள்ளது. அந்த பட்டியலில் இருப்பவர்களிடம் விரைவில் சோதனை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். சேகர் ரெட்டியால் அமைச்சர்கள், அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் சிக்குவது உறுதியாகி விட்டது. எங்களது அடுத்தக்கட்ட சோதனை நடக்கும்போது முழு தகவல்கள் வெளிச்சத்துக்கு தெரியவரும்" என்கின்றனர் வருமான வரித்துறையினர்.

தற்போது முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், ராமமோகன ராவை மாற்றும்படி டெல்லிக்கு சென்றபோது சூசகமாக சொல்லி விட்டு வந்துள்ளார். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற ஒருவரான ராமமோகன ராவ், வீடு, அலுவலகத்தில் சோதனை நடந்தவுடன் அவரை மாற்றுவதற்கான அறிகுறிகள் தலைமை செயலகத்தில் தெரிகின்றன. தமிழக அரசை டார்க்கெட் செய்யும் மத்திய அரசின் அசைமெண்ட் சரியான பாதையில் செல்கிறது என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள். 

 மேலும், சேகர் ரெட்டி கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் மன்னார்குடி குடும்பத்தினரை முழுமையாக கட்டுப்படுத்தி விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். அதைக் கொண்டே தமிழக அரசியலில் கால்பதித்து விடலாம் என்ற யோசனையும் உள்ளதாம். இதற்கு ஏற்ப காயை நகர்த்த தொடங்கி விட்டது பா.ஜ.க என்கின்றனர் அரசியல் உள்விவரம் தெரிந்தவர்கள். 

http://www.vikatan.com/news/coverstory/75555-sekar-reddy-has-provided-a-complete-list-to-it-reveals-sources.art

  • தொடங்கியவர்

தலைமைச் செயலகம்.... வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்!

 

தலைமைச்செயலகம்

லைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீடு, அவரது மகன் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டு தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இப்போது கூடுதல் அதிர்ச்சியாக தலைமைச் செயலகம்  உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலாளர் அறையிலும் ரெய்டு நடைபெற்றுள்ளது.

முதல்வர், அமைச்சர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் தலைமைச் செயலாளர் பதவி முக்கியத்துவம் வாய்ந்தது ஒன்று. அவர் நிர்வாகத்திறனுக்கும் , நேர்மைக்கும் எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும். பதவியில் இருக்கும் தலைமைச் செயலாளர்கள் மீது குற்றசாட்டுகள் எழுந்தால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். சஸ்பெண்ட் குற்றசாட்டுக்கு உள்ளானவர்கள் மீது துறை ரீதியான விசாரணைகள் நடைபெறும். ஆனால், முதன் முதலாக பதவியில் இருக்கும் தலைமைச் செயலாளர் வீட்டில் இது போன்று ரெய்டு நடப்பது முதன் முறை. அதே போல தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் ரெய்டு நடைபெற்றது தமிழகத்தில் இதுவே முதன் முறை. ஓமந்தூரார், காமராஜர், அண்ணா போன்றவர்கள் முதல்வராக இருந்து பணியாற்றிய தலைமைச் செயலகத்தில், இப்படி ஒரு தலைமை செயலாளர் இருந்தார் என்பதும் அவரது அலுவலகத்தில்  ரெய்டு நடந்தது என்பதும் தமிழகத்தின் ஆட்சி வரலாற்றில் ஒரு கறுப்பு நாள் ஆகவே பார்க்கப்படுகிறது.

ராம்மோகனராவ் 2017-ம் ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெற உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். தேர்தலுக்குப் பின்னர் அ.தி.மு.க வெற்றி பெற்ற பிறகு, முதல்வர் ஜெயலலிதா இவரைத் தலைமைச் செயலாளராக நியமித்தார். கடந்த  ஜூன் 8-ம் தேதிதான் தலைமை செயலாளராகப் பொறுப்பேற்றார். முதல்வரின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றியபோதே சக்தி மிக்கவராக வலம் வந்தவர், தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றபிறகு அவர் நடந்து கொண்டவிதம்தான் இப்போது அவரை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது என்கின்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/75557-black-day-in-the-history-of-tamilnadu-secretariat.art

  • தொடங்கியவர்

ரெய்டுக்குக் 'கிரீன் சிக்னல்' கொடுத்த ஆளுநர்!  -'500 கோடி' ஆர்.எம்.ஆரும் அடுத்த டார்கெட்டும்

 

rmr1_16432.jpg

மிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் ரெய்டு நடத்திவிட்டு, தலைமைச் செயலகத்திற்குள்ளும் கால்பதித்துவிட்டது வருமான வரித்துறை. 'கார்டன் வட்டாரத்திற்கும் ஆட்சிக்கும் பகிரங்கமாக சில விஷயங்களை உணர்த்தத் தொடங்கியுள்ளது பா.ஜ.க. அ.தி.மு.க தரப்பில் இருந்து வேறு ஒரு வலுவான தலைவர் உருவாகிவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார் பிரதமர் மோடி' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. 'ஆட்சி அதிகாரத்திற்கும் சசிகலாவே தலைமை தாங்க வேண்டும்' எனக் கட்சியின் சீனியர்கள் பேசி வருகின்றனர். பொதுக்குழு முடிந்த பிறகு, 'சில மாதங்களில் சசிகலா வசம் ஆட்சி அதிகாரம் செல்லலாம்' என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில், வருமான வரித்துறையின் அதிரடிகள், போயஸ் கார்டன் வட்டாரத்தை உலுக்கியெடுத்துள்ளது. "சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் குமார் வீடுகளில் ரெய்டு நடந்தபோது, 'அவர்களின் வர்த்தகத் தொடர்புகளுக்காக நடத்துகிறார்கள்' என்றுதான் அமைதியாக இருந்தனர் மன்னார்குடி உறவுகள். ஆனால், அடுத்தடுத்து நடக்கும் சோதனைகளை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியவில்லை. போயஸ் கார்டனின் மிக நெருங்கிய நட்பில் உள்ளவர் சேகர் ரெட்டி. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என ஆளும்கட்சியின் முக்கியப் புள்ளிகளுக்கு மிகவும் வேண்டப்பட்டவர். பொதுப் பணித்துறையின் ஒப்பந்தங்களை எடுத்துச் செய்து வருபவர். அதேபோல், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கல்லூரி கால நண்பரான பிரேம் குமார் வீட்டில் நடந்த ரெய்டிலும் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் நீட்சியே, தலைமைச் செயலாளர் தலையிலேயே கை வைத்துள்ளது" என விவரித்த அரசியல் பிரமுகர் ஒருவர், 

cs_raid_16023.jpg

"முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற அமைச்சரவையின் கோரிக்கையை கையில் எடுத்துக் கொண்டு போய், மோடியிடம் கொடுத்தார் ஓ.பன்னீர்செல்வம். டெல்லியில் இருந்து திரும்பிய அடுத்த நாளே வருமான வரித்துறையின் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. மாநில சுயாட்சிக்காக இறுதி வரையில் குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. தற்போது அரசின் அனுமதியில்லாமலேயே, மத்திய அரசின் துணை ராணுவப் படை தலைமைச் செயலாளர் வீட்டைக் காவல் காக்கிறது. இதற்குக் காரணம், ' மத்திய அரசுக்கு எதிராக கார்டன் வட்டாரத்தினர் செயல்படுகிறார்கள்' என்ற மத்திய உளவுப் பிரிவின் அறிக்கைதான். சசிகலாவின் கணவர் நடராஜன் மதுரையில் பேசும்போது, 'கறுப்புப் பண முதலைகளின் பட்டியலை மோடி வெளியிட வேண்டியதானே?' என விமர்சித்தார். அதன்பின்னர், அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன், 'மத்திய அரசு எங்களுக்கு நெருக்குதல் கொடுக்கிறது' என்றார். அதாவது, மத்திய அரசிற்கு இணக்கமாக தமிழக அரசு செயல்பட்டு வந்தாலும், 'அ.தி.மு.கவிற்கு வலுவான தலைமை அமைந்துவிடக் கூடாது' என்பதில் உறுதியாக இருக்கிறார் மோடி. கட்சிக்குள் தம்பிதுரை உள்ளிட்டவர்கள் அதிகாரம் செலுத்த வந்தால், மிகப் பெரிய தலைமை உருவாக வாய்ப்பில்லை. அதைத்தான் பா.ஜ.கவும் விரும்புகிறது.

கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட பிறகு, 'முதலமைச்சர் பதவியையும் ஓ.பி.எஸ் விட்டுக் கொடுத்துவிடுவார்' என்ற சந்தேகம் அவர்களுக்கு இருக்கிறது. அப்படி அமைந்தால், அடுத்து வரக் கூடிய தேர்தலில் காங்கிரஸோடு அ.தி.மு.க கைகோர்க்க வாய்ப்பு அதிகம். பா.ஜ.க. தமிழகத்தில் கால் ஊன்றுவது சிரமமாகிவிடும். எனவேதான், கார்டன் வட்டாரத்தை நெருக்கும்விதமாக, இதுநாள் வரையில் அவர்களுக்கு விசுவாசமாக இருந்து வந்த ஆர்.எம்.ஆர் எனப்படும் ராமமோகன ராவை குறி வைத்திருக்கிறார்கள். தமிழக அரசின் ஊழல் முகத்தை அம்பலப்படுத்துவதன் மூலம், ஊழலுக்கு எதிரானவர் மோடி என்ற இமேஜை உருவாக்குகிறார்கள். இனி அடுத்தகட்ட ரெய்டு, அமைச்சர்கள் வீட்டிலா, மன்னார்குடி உறவுகளை நோக்கியா என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்" என்றார் விரிவாக. 

cs_house_16209.jpg

" 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று வந்த நேரத்தில், கார்டன் வட்டாரத்திற்குள் நுழைந்தார் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ். அதுவரையில், தி.மு.க அரசிற்கு வேண்டப்பட்டவராகத்தான் இருந்தார். விலையில்லா மிதிவண்டி, முட்டை கொள்முதல் என மிக முக்கியமான அரசு ஒப்பந்தங்களின் பின்னணியில் ராமமோகன ராவ் இருந்தார். அவருடைய மகன் விவேக்கின் ராஜ்ஜியம் கோட்டையில் கொடிகட்டிப் பறந்தது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில் நடந்த பணிகளின் பின்னணியிலும் ஆர்.எம்.ஆர் இருந்தார். '500 கோடிக்கும் அதிகமான ஒப்பந்தம் என்றாலே ராமமோகன ராவ்தான் கவனிப்பார்' என அமைச்சர்களே வெளிப்படையாக பேசி வந்தனர். கார்டன் வட்டாரத்தின் மிக முக்கிய கஜானாவாக இருந்த, தலைமைச் செயலாளரை அசைத்துப் பார்த்துவிட்டது ஐ.டி. இது நேரடியாகவே கார்டனை குறிவைக்கும் திட்டம்தான்.

இப்படியொரு ரெய்டு நடத்தப்பட இருக்கிறது என மத்திய அரசில் இருந்து, ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தெரியப்படுத்தியுள்ளனர். அவரும் ரெய்டு நடத்துவதற்கு சிக்னல் கொடுத்துவிட்டார். தலைமைச் செயலாளருக்கு அடுத்து, ஆட்சி அதிகாரத்தில் உள்ள 'முக்கியமானவரை' குறிவைத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் பிரதமரோடு நட்பு பாராட்டுபவர்தான் அந்த முக்கியமானவர். அடுத்ததாக, கார்டன் வட்டாரத்திற்கு விசுவாசமாக இருக்கும் அமைச்சர்கள் அனைவரும் வளையத்திற்குள் கொண்டு வரப்பட இருக்கின்றனர். சேகர் ரெட்டியின் தொடர்பில் லாபம் பார்த்தவர்கள்; தலைமைச் செயலாளரின் நட்போடு காரியம் சாதித்த செயலர்கள் என அனைத்து விவரங்களையும் துல்லியமாக சேகரித்துவிட்டது வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு. அடுத்தடுத்த நாட்களைக் கடந்து போவதற்கே அ.தி.மு.க அமைச்சர்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்" என்கிறார் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர். 

அரசு அதிகாரிகளின் வர்த்தக தொடர்புகளை மக்கள் முன்வைப்பது; அ.தி.மு.க அமைச்சர்களின் ஊழலை அடையாளம் காட்டுவது; ஊழல் அரசாங்கம் என்ற இமேஜை உருவாக்குவது என தமிழக அரசைக் குறிவைத்து வெகு சீரியஸாக களம் இறங்கியிருக்கிறார் பிரதமர் மோடி. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல், ஆளுநர் துணையோடு காய்களை நகர்த்தத் தொடங்கியிருக்கிறது மத்திய அரசு. இதன் அடுத்தடுத்த அத்தியாயங்களை கவலையோடு கவனித்து வருகிறார்கள் கார்டன் வட்டாரத்தில். 

http://www.vikatan.com/news/tamilnadu/75565-governor-behind-these-raids-who-might-be-the-next-targets.art

  • தொடங்கியவர்

தொழிலதிபர் முதல் பண்ணை வீடு வரை... ராமமோகன ராவின் 'ரணகள' பக்கங்கள்..! 

 

rama_mohan_rao_long_17205.jpg

தமிழ்நாடு தோன்றிய காலந்தொட்டு வரலாற்றில் முதல் முறையாக தலைமை செயலாளர் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. தொழிலதிபர் சேகர் ரெட்டியிடமிருந்து 131 கோடி பணம், 171 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் மீது சி.பி.ஐ வழக்குப் பதிந்து கைது செய்தது. சேகர்ரெட்டி கொடுத்த தகவல் அடிப்படையில் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீடு, அலுவலகம் உள்பட 13 இடங்களில் இன்று சோதனை நடத்தப்பட்டது. ராமமோகன ராவ் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெயர் குறிப்பிட விரும்பாத ராமமோகன ராவின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், "கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ராமமோகன் ராவின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தவர் ஆவடியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். இவர் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி விட்டு பிசினஸில் கால் பதித்து அபார வளர்ச்சியடைந்தார். புகழின் உச்சியில் இருந்தபோது ஆவடியில் உள்ள கிறிஸ்தவ பள்ளி கூடத்தில் அந்த தொழிலதிபர் தன்னுடைய பிறந்த நாளை வெகுவிமர்சையாக கொண்டாடுவார். அப்போது சிறப்பு விருந்தினராக ராமமோகன ராவ் கலந்து கொள்வார். அவருடன், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் என ஒரு பட்டாளமே அந்த விழாவில் பங்கேற்கும். நகமும், சதையும் போலவே அந்த தொழிலதிபருடன் ராமமோகன ராவ் இருப்பார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்போது ராமமோகன ராவ் குடியிருக்கும் அண்ணா நகர் வீடு அந்த தொழிலதிபரின் ஏற்பாட்டில் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் பாலியல் விவகாரத்தில் அண்ணா நகரைச் சேர்ந்த ஒரு டாக்டர் சிக்கினார். அந்த வழக்கில் ஆவடி தொழிலதிபரின் பெயரும் அடிப்பட்டது. அப்போது இருந்த தி.மு.க ஆட்சியில் மூத்த அமைச்சர் ஒருவரால் ஆவடி தொழிலதிபர் தப்பினார்.

அடுத்து அந்த தொழிலதிபர் தி.மு.க.விடம் அதிக நெருக்கமானார். இதற்காக அறங்காவலர் குழு தலைவர் பதவி வரை அவருக்கு கொடுக்கப்பட்டது. அடுத்து தி.மு.க சார்பில் ஆவடி தொகுதியில் போட்டியிட விரும்பிய அந்த தொழிலதிபருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த காலகட்டத்தில் ராமமோகன ராவ் அறிவுரையின் பேரிலேயே அந்த தொழிலதிபர் செயல்பட்டதாக சொல்கிறார்கள். இதன்பிறகு தி.மு.க.விடமிருந்து ஒதுங்கிய அந்த தொழிலதிபருக்கு தொழிலிலும் பெரியளவில் சரிவு ஏற்பட்டது. இவர், தே.மு.தி.க விஜயகாந்த்தின் நெருங்கிய உறவினர்.
 

rama_mohana_rao_house_1_17589.jpg

சிஷ்யர்களான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்!

நெல்லை மாவட்டத்தில் சப்-கலெக்டராக இருந்த அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் பூர்வீகம் ஆந்திரா. பிறகு அங்கிருந்து திருவள்ளூர் மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றினார். அங்கிருந்து அவர் தென்மாவட்டத்துக்கு மாற்றப்பட்டு விட்டார். அவர், ராமமோகன ராவின் சிஷ்யர் என்றே சொல்கின்றனர். இவர்கள் இருவரும் திருவேற்காடு, மகாலட்சுமி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சந்திப்பார்களாம். அப்போதுதான் அவர்களது ஆலோசனை நடத்தப்படுமாம். மகாலட்சுமி நகர் வி.ஐ.பி.க்கள் குடியிருக்கும் பகுதி. அங்கு நள்ளிரவு வரை சந்திப்பு தொடருமாம். தொழிலதிபர்கள், மணல் குவாரி அதிபர்கள் என பலர் அந்தச் சந்திப்பில் பங்கேற்பதுண்டு. ராமமோகன ராவின் நம்பிக்கைக்குரியவரான அந்த சிஷ்யரான கலெக்டரை சென்னை சுற்றுவட்டார பகுதியிலேயே பணியமர்த்த பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதற்காக ஒரு கலெக்டர் சஸ்பெண்டே செய்யப்பட்டுள்ளார். இருந்தும் அந்த கலெக்டர் திருவள்ளூரிலிருந்து மாற்றப்பட்டு விட்டார். தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரியும் சந்தேக வளையத்தில் இருக்கிறாராம். இவரைத் தவிர இன்னும் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ராமமோகன ராவின் சிஷியர்களாக இருக்கிறார்களாம்.

சி.எம்.டி.ஏ அதிகாரி!

ராமமோகன ராவின் உள்விவரங்களை அறிந்த ஒருவர் அண்ணாநகர் மேற்கில் குடியிருக்கிறார். இவர், சி.எம்.டி.ஏ அதிகாரியாக பணியாற்றுகிறார். இவரது பெயரில் கொடைக்கானலில் எஸ்டேட் ஒன்று உள்ளதாம். அதன்மதிப்பு மட்டும் பல கோடி என்கின்றனர். அடுத்து அந்த அதிகாரியிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாம்.

முன்னாள் அமைச்சர்!

அ.தி.மு.க.வில் கோலோச்சிய அந்த முன்னாள் அமைச்சர் இப்போது ராமமோகன ராவ் வீட்டில் சோதனை என்றதும் தன்னுடைய ஆதரவாளர்களிடம் புலம்பி இருக்கிறார். "அடுத்து நான்தான். என்னிடம் விசாரணை நடந்தாலும் உங்களிடம் என்னைப்பற்றி விசாரித்தாலும் எந்த தகவலும் வெளியே சொல்லக்கூடாது. இப்போது அம்மா இல்லை. அவர் இருந்தால் விசாரணை நடந்திருக்காது. இப்போதுள்ள அரசியல் சூழ்நிலை சரியில்லை" என்று புலம்பி உள்ளார்.

பனையூர் பண்ணை வீடு!
 
ராமமோகன ராவிற்கு நெருக்கமானவர் ஒருவரின் பெயரில் பனையூர், கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பண்ணை வீடு இருக்கிறதாம். அந்த வீட்டிற்கு அடிக்கடி செல்வாராம் ராமமோகன ராவ். வார விடுமுறையில் ஓய்வெடுக்க அங்கு செல்வதுண்டாம். சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த வீட்டின் அருகில் உள்ள கோயில் இடத்தை வளைக்க முயற்சிகள் நடந்துள்ளது. அதுதொடர்பாக காஞ்சிபுரம் கலெக்டரிடம் பொது மக்கள் புகார் கொடுக்க செய்திகள் வெளியானது. இருப்பினும் அந்த இட விவகாரம் அமைதியாகி விட்டது.
இப்போது இந்த ரெய்டு விவகாரம் இன்னும் என்னனென்ன பூதங்களை கிளப்பிவிடுமோ..!?

http://www.vikatan.com/news/coverstory/75570-industrialist-to-farm-houses-tn-chief-secretarys-multi-faceted-growth.art

  • தொடங்கியவர்

சீனியர் ஐ.ஏ.எஸ்.களை எப்படி ஓரங்கட்டினார் ராமமோகனராவ் ?!

 

ராமமோகன ராவ்

மிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 24 பேர் தலைமைச் செயலாளர் நிலையில் இருப்பவர்கள். இவர்களில், வருமானவரித் துறை ரெய்டில் சிக்கியுள்ள ராமமோகன ராவ் 23-வது இடத்தில் உள்ளார். தலைமைச் செயலாளர் நிலையில் உள்ள (பிரின்ஸ்பிள் செகரட்டரி) அதிகாரிகளில் மத்திய அரசுப் பணியில் 11 பேர் போக... மீதமுள்ள 13 பேர் தமிழக அரசுப் பணிகளில் உள்ளனர். இந்த 13-பேரில் ராமமோகன ராவ், 12-வது இடத்தில் இருக்கிறார்.

இவர், 1985-ம் ஆண்டு தொகுப்பு (பேட்ச்) ஐ.ஏ.எஸ். அதிகாரி. இவரைவிடப் பணியிலும், அனுபவத்திலும் மூத்தவர்கள், இவருக்கு முந்தையத் தொகுப்பில் (1981) உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். 1981-ம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த அதிகாரிகள் 22 பேர், தலைமைச் செயலாளர் பொறுப்புக்கு காத்திருக்க... அவர்களைவிட நான்காண்டு பின்னால் (1985) ஐ.ஏ.எஸ். ஆன ராமமோகன ராவ் ரேசில் முன்னேறினார்.

சீனியர்கள் வேதனையில் காத்திருந்த நிலையில்... ராமமோகன ராவுக்கு தலைமைச் செயலாளர் பதவியை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஜூன் 2016-ல் மிகவும் சாதாரணமாக வழங்கினார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது முதல்வர் ஜெயலலிதாவுடன் பல ஐ.ஏ.எஸ்-கள் இருக்க, ராமமோகன ராவை மட்டும் அருகில் அழைத்து சில நிமிடங்கள் ஜெயலலிதா அன்று பேசினார். முதல்வர் பேசிய மறு நிமிடமே அனைவருக்கும் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்று விளங்கிவிட்டது. தலைமைச் செயலாளராக இருந்த ஞானதேசிகன் சிக்கலில் இருந்த காலகட்டமாகவும் அது இருக்க, ராமமோகன ராவ் எளிதாக முதன்மைக்கு வந்தார். முதலமைச்சரின் செயலாளராக ஐந்தாண்டுகள் (2011-15) பணியாற்றிய ராமமோகன ராவுக்கு, சீனியாரிட்டி அடிப்படை என்ற விதிமுறைகள் காற்றில் பறக்க... அவரை, தலைமைச் செயலாளராக்கினார் ஜெயலலிதா. முதலமைச்சர் அலுவலகத்தில் சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்ட சாந்தா ஷீலா நாயர் கதையும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மத்தியில் இன்றுவரை புகைந்து கொண்டுள்ள ஒன்றுதான். கோட்டை வட்டார ஐ.ஏ.எஸ்-கள் கூறும்போது, ‘‘தமிழக (கேடர்) பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சாந்தா ஷீலா நாயர், மத்தியப் பணிக்குச் சென்று 2010, ஜூலை-31-ல் பணி ஓய்வுபெற்றவர். பணி ஓய்வுபெற்று ஆறு ஆண்டுகள் ஆன... அதுவும், வெளி மாநில அதிகாரியான சாந்தா ஷீலா நாயர், தமிழ்நாடு திட்டக்குழுவின் தலைவராக 5 ஆண்டுகள் பணியாற்ற ஜெயலலிதா அரசு அனுமதித்தது. அந்த ஐந்தாண்டுகள் முடிந்த பின்னர் கிடைத்ததுதான் முதலமைச்சர் அலுவலகத்தில் சிறப்புப் பணி அதிகாரி பதவி. இதையெல்லாம் நாங்கள் வேதனையோடு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்” என்றனர்.

கோட்டையில் குமுறல் கேட்க ஆரம்பித்திருக்கிறது!

http://www.vikatan.com/news/india/75562-how-rama-mohana-rao-sidelined-ias-officials.art

  • தொடங்கியவர்

#Raid ராம மோகன ராவ் மகன் ஒப்புதல்

 

rammohan-rao-chennai-residencew_650x400_

தமிழக தலைமை செயலாளர் ராம மோகன ராவ் மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சேகர் ரெட்டியிடமிருந்து, ரூ. 17 கோடி பணம் ராம மோகன ராவ் மற்றும் அவரது குடும்பத்துக்கு கைமாறியதாகற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், ரூ.5 கோடி வருமானத்தை மறைத்ததாக ராம மோகன ராவின் மகன் விவேக் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/75582-rama-mohana-rao-son-has-accepted-that-they-have-hid-the-income.art

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் அதிரடி ரெய்டு

பன்னீர் : நமஸ்தே மோடி ஜி !
மோடி : அரெ பன்னீர்ஜி நமஸ்கார் அவோ .. அவோ! பைட்டோ ! அமாறா சகாயா கியாஜி?
பன்னீர் : புயலில் சென்னை சிக்கி சீரழந்து போய்விட்டது! தயவு செய்து ரூபா குடுத்து உதவி பண்ணுங்க..!
மோடி:கியு உங்க ஆட்களிடம்தான் பணம் அதிகமா கொட்டி கிடக்கே எடுத்து செலவு பண்ணுங்க ..
பன்னீர் : சத்தியமா எங்ககிட்ட காசு இல்லைங்க..
மோடி : அப்படியா  நீங்க தைரியமாக சென்னைக்கு போங்க அங்கயே(தமிழ்நாட்டில்) எங்கட ஆட்கள் உங்களுக்கு எடுத்து தருவார்கள்!!

டிஸ்கி :
மோடி மைண்ட் வாய்ஸ் : பணம் .. உதவி என்று எவனும் இனி டெல்லிக்கு வரபடாது !தலைவைத்து படுக்கபடாது!

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

15585156_1754296668224398_39434515199543

15585276_1754223381565060_88829289556910

  • தொடங்கியவர்

தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை: ரூ. 5 கோடி வருமானத்தை மறைத்ததாக ஒப்புதல் 

 

 
P-Rama-Mohana-Rao

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் அறை மற்றும் அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனை நிறைவுக்கு வந்துள்ளது.  

தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் அறையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சேகர் ரெட்டியிடம் இருந்து ராம மோகன ராவ் மற்றும் அவனது மகன் விவேக்கிடம்  17 கோடி கைமாறியதற்கான ஆதாரம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ. 5 கோடி வருமானத்தை மறைத்ததாக ராம மோகன ராவ் மகன் விவேக் ஒப்புக்கொண்டதாக வருமான வரித்துறை உயர் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். ராம மோகன ராவ் மற்றும் உறவினர்கள் வீடுகளில் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள புதிய ருபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும்  வருமான வரித்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. 

http://www.dinamani.com/

நள்ளிரவிலும் தொடரும் ரெய்டு... தலைமை செயலாளர் வீட்டில் சிக்கியது என்னென்ன?

 

cs_house_16209_00201.jpg

 தமிழக தலைமை செயலாளர் ராமமோகன ராவ், அவரது மகன் விவேக் வீட்டில் நள்ளிரவிலும் வருமான வரித்துறையினரின் சோதனை தொடர்ந்து நடந்து வருகின்றது. கடந்த 21-ம் தேதி காலை 5.30 மணிக்கு ஆரம்பித்த சோதனை, 14 மணி நேரத்திற்கு  மேலாக தொடர்ந்து நடந்து வருவதால் ஆளுங்கட்சியினர் மத்தியில் பெரும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது.

சென்னை அண்ணா நகரில் உள்ள தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீட்டிற்கு 21-ம் தேதி காலை 5.30 மணிக்கு அதிரடியாக வருமான வரித்துறையினர் நுழைந்தனர். ராமமோகனராவின் மகன் விவேக், அவரது உறவினர்களின் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது. சென்னையில் ஏழு இடங்களிலும், ஆந்திரா, கர்நாடகா என ராமமோகன ராவுக்கு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை கை வைத்தது. அது மட்டுமின்றி தலைமை செயலகத்திலும் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தப்பட்டு, ராமமோகனராவின் உதவியாளர்களான சேகர், குமார் ஆகியோர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

chief-secretary-716x393_00469.jpg

21-ம் தேதி மாலை வரையில் 30 லட்சம் ரூபாய் புதிய நேட்டிலான பணம், 5 கிலோ தங்கம், பல ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். ராமமோகன ராவின் உறவினர்கள் வீடு மற்றும் தலைமை செயலகத்தில் ரெய்டு முடிந்துள்ள நிலையில், அவரது மகன் வீடுகளில் நள்ளிரவிலும் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. 21-ம் தேதி இரவு பத்து மணிக்கு மேல், மேலும் இரண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் ராவின் வீட்டுக்கு வந்து தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் திருவான்மியூரில் உள்ள ராவின் மகன் விவேக் வீடு, விவேக் நடத்துவாக கூறப்படும் நந்தனத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றில் அதிகாரிகள் துருவி துருவி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

salem_IT_raid_22139_00127.jpg

சி.பி.ஐயால் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டியிடமிருந்து ரூ.17 கோடி பணம்,  ராமமோகன ராவ் மற்றும் அவரது மகன் விவேக்கிற்கு கைமாறியதற்கான ஆதாரங்கள் சி.பி.ஐயிடம் சிக்கியுள்ளாதாக தகவல்கள் வெளியாகியள்ளன. மேலும், ரூ.5 கோடி வருமானத்தை மறைத்ததாக விவேக் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலும் பல ஆவணங்கள் சிக்க கூடும் என்பதால் 22-ம் தேதி மாலை வரை சோதனை தொடரும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில்  சேலம், மத்திய கூட்டுறவு வங்கியிலும் மாலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி , சேலம் வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழுவினர் வங்கியில் ரெய்டு நடத்தி வருகின்றனர். தவிர, ஜெ பேரவைத் தலைவரும், மாநில கூட்டுறவு வங்கிகள் தலைவருமான இளங்கோவனின்  அலுவலகம் சீல்வைக்கப்பட்டு நள்ளிரவிலும் ரெய்டு தொடர்கிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/75597-raid-continuous-till-mid-night-in-tamil-nadu-chief-secretary-p-rama-mohana-rao-house.art

  • தொடங்கியவர்

#Raid ராம மோகன ராவ் மகன், உறவினர்கள் வீட்டில் கட்டுகட்டாக புதிய ரூபாய் நோட்டுகள்

 

ram_17100.jpg

தமிழக தலைமை செயலாளர் ராம மோகன் ராவ்வின் மகன் மற்றும் உறவினர்கள் வீட்டில் இருந்து 30 லட்சம் மதிப்புள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை ராம் மோகன் ராவ் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக ராவ்வின் மகன் மற்றும் உறவினர்கள் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 30 லட்சம் ரூபாய் பணம், 5 கிலோ தங்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/75569-i-t-dept-says-rs-30-lakh-in-new-banknotes-seized-in-searches-against-son-relatives-of-tn-chief-secretary.art

  • தொடங்கியவர்

#LIVE - பல்லாவரத்தில் நடக்கிறது அடுத்த ரெய்டு!

 

itraidaaa_09331.jpg

சென்னை பல்லாவரத்தில், தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கு நிறுவன மேலாண் இயக்குநர் நாகராஜன் வீட்டில் ரெய்டு நடந்து வருகிறது.

இந்த வருமான வரிச் சோதனையில் ஆறு கிலோ தங்கம், 1.5 கோடி ரூபாய் பணம் பறிமுதல் என தகவல் வெளியாகியுள்ளது. சேகர் ரெட்டி விவகாரத்துக்கும், இந்த ரெய்டுக்கும் தொடர்பில்லையாம்.

http://www.vikatan.com/news/tamilnadu/75610-it-raid-at-tamil-nadu-warehousing-corporation-managers-house.art

  • தொடங்கியவர்

தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன ராவ், 58, வருமான வரித்துறை பிடியில் வசமாக மாட்டிக் கொண்டார்.

 

Tamil_News_large_1674042_318_219.jpg

அவரது வீடு மற்றும் கோட்டையில் உள்ள, அவரது அலுவலகம் உட்பட, 12 இடங்களில், நேற்று வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அரசியல்வாதிகளின் கலெக் ஷன் ஏஜன்டாக, ராவ் செயல்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் நடந்த, இந்த சோதனையின் போது, பாதுகாப்பு பணியில், துணை ராணுவம் ஈடுபட்டது, அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசின் உயர் பதவியில் இருக்கும் ராம மோகன ராவ், ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர், 1985ம் ஆண்டு, ஐ.ஏ.எஸ்., பணியில், தமிழக பிரிவில் சேர்ந்தார். தி.மு.க., - அ.தி.மு.க., என, முந்தைய ஆட்சிக் காலங்களில், அரசு உயர் பதவிகளில் இருந்து வருகிறார்.

ஜெயலலிதா தலைமையில் நடந்த, முந்தைய, அ.தி.மு.க., ஆட்சியின் போது, முதல்வரின் தனிச் செயலராக இருந்தார்; மீண்டும், அ.தி.மு.க., ஆட்சியை பிடித்ததும், தலைமை செயலரானார். அதிரடி நடவடிக்கைஇந்நிலையில், அரசு மணல் கான்ட்ராக்டரான, சேகர் ரெட்டி என்பவர், சமீபத்தில் வருமான வரித் துறை வலையில் சிக்கினார்.

டிச., 8ல், அவரது வீடு, அலுவலகம் மற்றும் நண்பர், உறவினர் வீடுகளில், அதிரடி சோதனை கள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, ராம மோகன ராவ், வருமான வரித்துறை வலை யில் விழுந்துள்ளார்.சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்களிடம் நடத்திய தீவிர விசார ணைக்கு பின், ராமமோகன ராவ் தொடர்பு உறுதி செய்யப்பட்டது.

அது தொடர்பாக கிடைத்த தகவல்கள் அடிப்படை யில், ரகசிய விசாரணை நடத்திய வருமான வரித் துறை உயரதிகாரிகள், நேற்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

சேகர் ரெட்டியிடம் நடத்திய சோதனையில், 132 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும், 50 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், 35 கோடி ரூபாய் அளவுக்கு, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அது தான், வருமான வரித்துறையை அதிரச் செய்தது.
 

வழக்குப்பதிவு


இதையடுத்து, சி.பி.ஐ., களத்தில் இறங்கியது. ரிசர்வ் வங்கி மற்றும் வர்த்தக வங்கிகளில் விசாரணையை துவங்கியது. அதன் அடிப்படை யில், சேகர் ரெட்டி மற்றும் வங்கி அதிகாரிகள் மீது, நேற்று முன்தினம், வழக்குப்பதிவு செய்தது; நேற்று சேகர் ரெட்டியை கைது செய்தது. சேகர் ரெட்டி, அவர் தொடர்பான விசாரணையை முடித் ததும், அடுத்தகட்டமாக, நேற்று ராமமோகன ராவ் பக்கம் வந்துள்ளது.

சென்னை, அண்ணா நகரில், ராமமோகன ராவ் வீடு உள்ளது. அங்கு, நேற்று காலை, 7:00 மணிக்கு, வருமான வரித் துறையினர் புகுந்தனர். வருமான வரி கூடுதல் ஆணையர் தலைமை யில், 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில், சித்துாரில் உள்ள, அவரது மகன் விவேக்கின் மனைவியின் பூர்வீக வீட்டிலும், பெங்களூருவில் உள்ள விவேக்கின் அலுவலகத் திலும், வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை, திருவான்மியூர், ராஜாஜி நகரில் உள்ள விவேக்கின் வீடு, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகங்கள், மணப்பாக்கத்தில் உள்ள வீடு என, 10 இடங்களில் சோதனை நடந்தது.
 

அதிர்ச்சி


இந்த சோதனைகளில் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், தமிழக அரசின் தலைமை செய லகத்தில் உள்ள, ராவ் அலுவலகத்திலும், வரு மான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி னர். தமிழக வரலாற்றில் முதல் முறையாக, தலைமைச் செயலர் வீட்டிலும், தலைமை செய லகத்திலும், வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது.
 

துணை ராணுவம்


அதேபோல், இதுபோன்ற சோதனைகளின் போது, பாதுகாப்பு பணியில் போலீசார் தான் ஈடுபடுத்தப்படுவர். ஆனால், நேற்றைய சோத னைக்கு, தமிழக போலீசாரை அழைக்கவில்லை. அவர்களுக்கு பதிலாக,முதல்முறையாக, துணை ராணுவ படையினர் வரவழைக்கப் பட்டனர்.

அதற்கு காரணம், தமிழக போலீசாருக்கு உத்தர விடக்கூடிய உயர் பொறுப்பில், ராவ் இருப்பது தான். எனவே, போலீசாரின் ஒத்துழைப்பு சரிவர கிடைக்காது என்பதால், துணை ராணுவத்தினரை அழைத்து,இந்த அதிரடி நடவடிக்கையை, வரு

மான வரித்துறை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.
 

கலெக் ஷன் ஏஜன்ட்


அ.தி.மு.க., ஆட்சியில், சர்வ அதிகாரம் பெற்ற ராவ், அரசியல் பெரும்புள்ளிகளை கைக்குள் வைத்துள்ளார். அவர்கள் ஆதரவுடன், பல கான்ட்ராக்ட்களை, தன் ஆட்களுக்கு பெற்று தந்துள்ளார். அதன்மூலம் கைமாறும் பணத்தை, வசூலித்து தரும் நபராகவும் செயல்பட்டுள்ளார் என, வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்துள் ளன. அதன் அடிப்படையில், இந்த சோதனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
 

உளவு துறை தந்த தகவல்!


ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட பிறகு, ஊழல் மூலம் பணம் சேர்த்துள்ள, தமிழக அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் குறித்த விபரங்களை, மத்திய உளவுத் துறை சேகரித்துள்ளது.அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள், முறைகேடாக சம்பாதித்த பணத்தை, எங்கெல்லாம் முதலீடு மற்றும் பதுக்கி உள்ள னர்; புதிய ரூபாய் நோட்டுகளாக, எவ்வளவு மாற்றி உள்ளனர் என்ற விபரங்களையும் சேகரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளனர். அதன் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

தலைமை செயலர் மகன் வாழ்ந்த சொகுசு பங்களா


சென்னை, திருவான்மியூர், ராஜாஜி நகரில், ஒரு சொகுசு பங்களாவில், ராமமோகன ராவின் மகன் விவேக், சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். அந்த வீடு, பல கோடி ரூபாய் மதிப்புடையது. அவ ரது வீட்டினுள், நீச்சல் குளம் உட்பட, பல வசதி கள் உள்ளன.அந்த வீட்டில் நின்றிருந்த காரில், பிரதமர் மோடி சென்னை வந்த போது, அவரை வரவேற்க சென்ற, பொதுத் துறை அனுமதிய ளித்த, 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டு இருந்தது. வீட் டில் நின்ற, வனத்துறைக்கு சொந்தமான வாகன மும், பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

போலீசாரை நம்ப மறுத்தது ஏன்?

சென்னை, அண்ணா நகரில் உள்ள ராமமோகன ராவின் வீட்டில், நேற்று காலை, 7:00 மணிக்கு, வருமான வரித்துறை அதிகாரிகள் சோத னையை துவங்கினர். காலை, 10:00 மணியள வில், அங்கு வந்த, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த செந்தில் என்பவர், மத்திய அரசுக்கு எதிராக, முழக்கம் எழுப்பினார்.

ஆனால், ராமமோகன ராவை திட்டுவதாக நினைத்து, அவரது உறவினர், அந்த நபரை சரமா ரியாக தாக்கினார். அங்கிருந்த போலீசார், அதை தடுக்க தவறி விட்டனர். ஏனெனில், ராவ், உயர் பொறுப்பில் உள்ள அதிகாரி என்பதால், அவரது உறவினரை தடுக்க, போலீசார் தயங்கினர். அதை அறிந்த வருமான வரித்துறையினர், போலீசை நம்பினால் சிக்கல் என, கருதினர்.

உடனடியாக, டில்லியில் உள்ள, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் படைக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, சென்னை, ஆவடியில் உள்ள, சி.ஆர்.பி.எப்., பட்டாலியனில் இருந்து, 20 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்; அவர்கள், நான்கு குழுக்களாக, பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
 

ராமமோகன ராவ் 'பயோ டேட்டா'


சென்னை:தமிழக அரசு தலைமை செயலராக உள்ள, ராமமோகன ராவ், ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1957 செப்., 15ல் பிறந்தார். எம்.ஏ., பொருளியல், எம்.காம்., கணக்கு பதிவியலில் பட்டம் பெற்றுள்ளார். 1985ல், ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்று, தமிழகத்தில் பணியாற்ற வந்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக,1994ல் பொறுப் பேற்று, 14 மாதங்கள் இருந்தார். பின், சுகாதாரத் துறை, சமூகநல துறை, வேளாண்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, போக்கு வரத்துத் துறை மற்றும் நிலம் சீர்திருத்தத் துறையில் பணிபுரிந் தார்.ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை செயல் அதிகாரி போன்ற பதவிகளையும் வகித் துள்ளார். அயல்பணி என்ற வகையில், மத்திய அரசு பணிக்கு சென்றதில்லை. 2001 முதல், 2003 வரை, குஜராத் கடல்சார் வாரிய துணைத் தலைவராக இருந்துள்ளார்.

ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிக ளில், சரளமாக பேசும் திறன் உடையவர். 2011ல் இருந்து, ஐந்து ஆண்டுகள், முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் செயலராக பணியாற்றினார். 2016ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஜூன், 9ல், தலைமை செயலராக பொறுப்பேற்றார். இவர், தமிழக அரசின், 44வது தலைமை செயலர். 2017 செப்டம்பரில், ஓய்வு பெற உள்ள நிலையில், அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.
 

கோட்டையில் நடந்த முதல் சோதனை!


தமிழக வரலாற்றில், முதன் முறையாக, தலைமைச் செயலகத்தில் உள்ள, தலைமைச் செயலரின் அறையில், வருமான வரி அதிகாரி கள், அதிரடி சோதனை நடத்தியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நேற்று பகல், 2:20 மணிக்கு, மூன்று இனோவா காரில், 10க்கும் மேற்பட்ட,வருமான வரித் துறை அதிகாரிகள், தலைமைச் செயலகம் வந்தனர். அவர்களுக்கு

 

 

 

 

spaceplay / pause

qunload | stop

ffullscreen

shift + slower / faster

volume

mmute

seek

 . seek to previous

126 seek to 10%, 20% … 60%

 

பாதுகாப்பாக, துணை ராணுவ வீரர்கள், ஆறு பேர் வந்தனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள், தலைமைச் செயலகம், பழைய கட்டடத்தின், இரண்டாவது தளத்தில் உள்ள, தலைமைச் செயலர் அறைக்கு சென்றனர். பகல், 2:30 மணி முதல், அந்த அறை யில் சோதனை நடத்தினர்.

அந்த அறை முன், துணை ராணுவத்தினர் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த வழியே செல்ல,யாரும் அனுமதிக்கபடவில்லை. சோதனை முடிவில், ஏராளமான ஆவணங் களை, அங்கிருந்து எடுத்துச் சென்ற னர்.'தமிழக வரலாற்றில், இதுவரை தலைமைச் செயலகத் தில், இதுபோன்ற சோதனை நடந்த தில்லை' என, கோட்டை வட்டாரம் தெரிவித்தது.
 

கோட்டையில் இருந்த முதல்வர்!


தலைமைச் செயலர் அறையில் சோதனை நடத்த, வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த போது, முதல்வர் பன்னீர்செல்வம், தன் அறை யில் இருந்தார். சோதனை நடந்து கொண்டிருந்த போது, அவர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

தலைமைச் செயலர் அறையில், சோதனை நடக் கும் தகவல் வெளியானதும், அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் கள் கும்பல் கும்பலாக, தலைமைச் செய லர் அறையை பார்வையிட வந்து சென்றனர். இதன் காரணமாக, நேற்று தலைமை செயலகம் முழுவதும், பரபரப்பு நிலவியது.
 

கறுப்பு பணம் மாற்ற சிபாரிசு கடிதம்


கறுப்பு பணத்தை மாற்ற, சேகர் ரெட்டிக்கு, ராம மோகன ராவ், சிபாரிசு கடிதம் கொடுத்த தகவல் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க., பிரமுகர், சேகர் ரெட்டியிடம், 131 கோடி ரூபாயை, வரு மான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதில், 35 கோடி ரூபாய், புதிய, 2,000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன.

மத்திய அரசு, செல்லாத நோட்டு குறித்த அறி விப்பை வெளியிட்ட பின், சேகர் ரெட்டி கறுப்பு பணத்தை மாற்ற, வங்கிகளுக்கு, ராமமோகன ராவ் சிபாரிசு கடிதம் கொடுத்தது தெரிய வந்துள் ளது. இதுவே, அவர், வருமான வரித்துறையில் சிக்க காரணமாக அமைந்துள்ளது என, கூறப்படுகிறது.
 

ரூ.5 கோடி ஆவணம்5 கிலோ தங்கம்


தலைமைச் செயலர் ராவ் மற்றும் உறவினர் வீடு களில் நடந்த சோதனையில், ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள், 30 லட்சம் ரூபாய்க்கு, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஐந்து கிலோ தங்கம் ஆகியவை, முதற்கட்டமாக பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
 

வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:


சென்னை, திருவான்மியூரில் உள்ள, ராவ் மகன் விவேக் வீட்டில், ஒரு சொத்து வாங்குவதற்காக, ஐந்து கோடி ரூபாய் செலுத்தியதற்கான ஆவ ணங்கள் சிக்கின. ராவின் வீட்டில் இருந்து, இரண்டு கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் மூன்று கிலோ தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆந்திர மாநிலம், சித்துாரில் உள்ள, அவரது மருமகள் வீட்டில், 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் சிக்கின. மேலும், ராவ் மற்றும் அவரது மகன் வீடுகளில், ஐந்து லட்சம் ரூபாய் அளவுக்கு, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் சிக்கியுள்ளன.
 

தி.மு.க.,வுக்கும் நெருக்கம்


வருமான வரித்துறை வலையில் சிக்கியுள்ள, தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன ராவ், தி.மு.க., வட்டாரத்திற்கும் நெருக்கமான வர். கடந்த, 2006 - 11 தி.மு.க., ஆட்சிக் காலத்தில், ராமமோகன ராவ், வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குனர், வேளாண் துறை முதன்மை செயலர் போன்ற பதவிகளை வகித்தார். அப்போது, அவர் மீதும், வீட்டுவசதித் துறை செயலராக இருந்தவர் மீதும், பல முறைகேடு புகார்கள் எழுந்தன.

மேலும், வட மாவட்டத்தைச் சேர்ந்த, தி.மு.க., அமைச்சர் ஒருவருடன், ராமமோகன ராவ், தொழில் ரீதியிலான தொடர்பு வைத்திருந்தார். கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு பெண் சிபாரிசுடன், அப்போதும் ராவ் கோலோச்சினார். அதற்கு முந்தைய, அ.தி.மு.க., ஆட்சிக் காலத் தில், நெடுஞ்சாலை துறை செயலராக அவர் பதவி வகித்த போதும், பல முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
 

177 கிலோ தங்க கட்டிகள் ராமமோகனுக்கு சொந்தம்?


வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய, 177 கிலோ தங்கக் கட்டிகளில், பெருமளவு, ராம மோகன ராவுக்கு சொந்தமானது என, தெரிய வந்துள்ளது.சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய் யப்பட்டுள்ள, மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டி யின் வீடுகளில், வருமான வரித்துறை நடத்திய சோதனையில், 177 கிலோ தங்கக் கட்டிகள் சிக்கின.

இதில், பெருமளவு தங்கம், தமிழக அரசின், தலைமை செயலர் ராமமோகன ராவுக்கு சொந்த மானது என, தெரிய வந்துள்ளது.மேலும், தேவை படும் போது வாங்கிக் கொள்வதாக, சேகர் ரெட்டி யிடம், அவர் கூறியிருந்தார். இதையறிந்த வரு மான வரித்துறையினர், ராமமோகன ராவின் வீட்டில், சோதனை நடத்தியுள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1674042

  • தொடங்கியவர்

177 கிலோ தங்கமும் 100 கோடி ஆவணமும்...!  - கைதாவாரா ராமமோகன ராவ்? 

 

rmr1_12588.jpg

மிழக அரசின் தலைமைச் செயலாளர் வீட்டிலும் அலுவலகத்திலும் நடத்தப்பட்ட ரெய்டின் அதிர்ச்சியில் இருந்து அமைச்சர்கள் இன்னும் மீளவில்லை. 'புதிய தலைமைச் செயலாளர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். ராமமோகன ராவ் வீட்டில் நடந்த ரெய்டால் அவருக்கு ஆதரவான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வட்டாரத்திலும் அச்சம் ஏற்பட்டுள்ளது' என்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள். 

அன்புநாதன் டூ ஆர்.எம்.ஆர்!

நுங்கம்பாக்கம், ஆயக்கர் பவனில் உள்ள வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் எந்தவிதச் சோர்வும் இல்லை. நேற்று தலைமைச் செயலாளர் வீட்டில் நடத்திய ரெய்டில், ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கு மட்டுமே அவர்களுக்குக் கூடுதல் நேரம் பிடித்தது. பின்னர் தலைமைச் செயலகத்திற்குள்ளும் நுழைந்து தேடுதலை நடத்தினர். முடிவில், ' சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டதாக' தகவல் வெளியானது. தமிழக அரசின் 78 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக வருமான வரித்துறையினர் தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்துள்ளனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது' என அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதைப் பற்றியெல்லாம் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. "தலைமைச் செயலாளர் வீட்டை குறிவைத்ததன் பின்னணி நேற்று தொடங்கியதல்ல. சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கரூர், அன்புநாதன் குடோனில் பிடிபட்ட பணத்தில் இருந்தே தேடுதலை தீவிரப்படுத்தினோம். அதன்பிறகு, நத்தம் விஸ்வநாதன், முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் பண்ணை வீடுகள், கீர்த்திலால் காளிதாஸ் நகைக்கடை என ஆளும்கட்சி வட்டாரத்தின் கஜானா நீளும் இடங்களில் துருவிக் கொண்டே இருந்தோம். ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பிற்குப் பிறகு, மேலும் சில இடங்களில் இருந்து கறுப்புப் பணம் வெளியாகலாம் என சில முக்கிய நகை வியாபாரிகளை குறிவைத்தோம். பாரிமுனையில் உள்ள மார்வாடிகளின் பண பரிவர்த்தனைகளை அலசினோம். தங்கமாக வாங்கி குவிக்கும் வேலையில் தமிழக அரசுக்கு நெருக்கமானவர்கள் ஈடுபட்டிருந்தனர். தினம்தோறும் மாற்றப்பட்ட தொகைகளை, இத்தனை கோடிகள் என துண்டுச் சீட்டில் பென்சிலால் எழுதி வைத்திருந்தனர். அத்தனை தங்கமும் சேகர் ரெட்டிக்குச் சென்றது என அறிய முடிந்தது. சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தலைமைச் செயலாளருக்காக மாற்றப்பட்ட தங்கம் என்பதை கண்டறிந்தோம்" என விவரித்த வருமான வரித்துறை அதிகாரி ஒருவர், 

cs_house_12168.jpg

இரக்கமே காட்ட வேண்டாம்! 

" ஜெயலலிதா இருக்கும்போதே சேகர் ரெட்டியின் அனைத்து பரிவர்த்தனைகளும் புலனாய்வுப் பிரிவின் கவனத்திற்குக் கொண்டு சென்றுவிட்டோம். சேகர் ரெட்டி வீட்டிலேயே எங்களுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் கிடைத்துவிட்டன. அதில், தலைமைச் செயலாளரின் பங்கு பற்றியும் விரிவாகவே பேசிவிட்டார் ரெட்டி. எங்களுடைய தேடுதலில், ரெட்டி வீட்டில் இருந்து 177 கிலோ தங்கம் பிடிபட்டது. 'இது அனைத்தும் தலைமைச் செயலாளருக்கு சொந்தமானது' என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். நேற்று நடத்திய சோதனையில், ராம் மோகன ராவின் வீட்டில் ஒரு ரகசிய அறையைக் கண்டுபிடித்தோம். அதில் இருந்தும் சில ஆவணங்கள் கிடைத்துள்ளன. முப்பது லட்ச ரூபாய்க்குப் புதிய நோட்டுக்கள், 100 கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்கள் என  நாங்கள் எதிர்பார்க்காத வகையில் அனைத்தும் கிடைத்தன. சோதனைக்கு அவரிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை.

முகத்தை மட்டும் இறுக்கமாக வைத்துக் கொண்டார். அவரது வீட்டின் முன்பு தேவையற்ற தகராறு நீடித்ததால், மத்திய துணை ராணுவப் படையின் உதவியை நாடினோம். மற்றபடி, வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது. கடந்த ஐந்து ஆண்டுகளாக மாநில அரசின் திட்டங்களில் தலைமைச் செயலருக்கு வந்து சேர்ந்த தொகைகள், பொதுப் பணித்துறையின் மூலம் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தங்கள், கனிமவளம், உயர்கல்வி, பள்ளிக் கல்வி, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளில் அவர் மூலம் செயல்படுத்தப்பட்ட பணிகள் என அனைத்து விவரங்களும் நிதித்துறை அமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டு சேர்த்தோம். அன்புநாதனில் தொடங்கிய ஆட்டம் கார்டன் வரையில் எப்படியெல்லாம் முடிவடைகிறது என நிதித்துறை அமைச்சகத்திற்கு விரிவான அறிக்கையை அனுப்பினோம். ' யாரிடமும் இரக்கம் காட்ட வேண்டிய அவசியமில்லை. அதிகாரத்திற்குள் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் வளையத்திற்குள் கொண்டு வாருங்கள்' என உறுதியான குரலில் நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது எங்கள் வளையத்திற்குள் ஆளும்கட்சியின் ஐந்து அமைச்சர்கள் உள்ளனர். அவர்களின் கணக்கு வழக்குகளையே ரெட்டிதான் கவனித்து வந்திருக்கிறார்" என்றார் விரிவாக. 

sekar_reddy1_12333.jpg

மணலில் கால் வைத்த ஆர்.எம்.ஆர்! 

"மணல் வியாபாரத்திற்குள் கால் நுழைத்ததுதான் தலைமைச் செயலாளர் செய்த முதல் தவறு. ' ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி இந்தளவுக்கு இறங்கிப் போகலாமா' என சக அதிகாரிகளே சுட்டிக் காட்டினர். எதைப் பற்றியும் அவர் கண்டு கொள்ளவில்லை. அரசின் ஒப்பந்தப் புள்ளிகளில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அதைத் தீர்ப்பதில் ஆர்.எம்.ஆர்(ராமமோகன ராவ்) வல்லவர். முட்டை கொள்முதலில் கோலோச்சிய 'புஷ்டியான' நிறுவனத்திற்கு சாதகமாகவே டெண்டர் விதிகளை மாற்றினார். இதனால், முட்டை கொள்முதல் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். விலையில்லா மிதிவண்டி, சத்துணவுப் பொருட்கள், பொதுப்பணித்துறை பணிகள் என மிகப் பெரிய ஒப்பந்தங்கள் அனைத்தும் ஆர்.எம்.ஆர் சிக்னல் இல்லாமல் நிறைவேறாது. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஐ.சி.டி என்ற பெயரில் கம்யூட்டர் கல்வியை ஏழை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இதற்காக 900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்தப் பணிக்காக வந்தவர்களிடம் பேரம் படியாதததால், மத்திய அரசுக்கே இந்தப் பணம் திருப்பி அனுப்பப்பட்டது. இதன் பின்னணியில் ஆர்.எம்.ஆர் இருந்தார். கடந்த ஐந்தாண்டுகளில் ஆர்.எம்.ஆர் மகன் விவேக் வைத்ததுதான் கோட்டைக்குள் சட்டமாக இருந்தது. சீனியர் அமைச்சர்கள் துணையோடு ஆந்திராவில் ஏராளமான வர்த்தகங்களைத் தொடங்கினார். சேகர் ரெட்டி குறிவைக்கப்பட்டபோதே, தன் பக்கம் வருமான வரித்துறை பார்வை திரும்பும் என எதிர்பார்த்திருந்தார் ஆர்.எம்.ஆர். இதைத் தடுப்பற்காக டெல்லி வட்டாரத்தின் உதவியை நாடினார். ' பைல் அனைத்தும் பி.எம்.ஓ அலுவலகத்தில் இருக்கிறது. எங்களால் எதுவும் செய்ய முடியாது' எனக் கை விரித்துவிட்டனர். ' இவ்வளவு சீக்கிரம் வருவார்கள்' என அவரும் எதிர்பார்க்கவில்லை. ஆர்.எம்.ஆர் துணையோடு கோட்டைக்குள் ஒரே துறையில் நீண்டகாலம் கோலோச்சும் அதிகாரிகளையும் வருமான வரித்துறை துருவ ஆரம்பித்திருக்கிறது. இன்று மாலைக்குள் ராமமோகன ராவ் நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்" என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில். 

கைதாவாரா? 

' ராமமோகன ராவை கைது செய்ய முடியுமா?' என்ற கேள்வியை ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். " துணை ராணுவப் படையோடு ரெய்டுக்குச் சென்றது தவறில்லை. ஆனால், சட்டம் மட்டும் ஒரு நாட்டை வழிநடத்துவதில்லை. மரபுகளும் சேர்ந்துதான் வழி நடத்துகின்றன. பத்து வருடங்களுக்கு முன்பு எஸ்மா சட்டம் கொண்டு வந்து, நள்ளிரவில் அரசு அதிகாரிகளை தேடித் தேடி கைது செய்தார் ஜெயலலிதா. அதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஜெயலலிதா செய்தது சட்டப்படி தவறு கிடையாது. அதேபோல்தான் இதுவும். ஒன்றைக் கவனிக்க வேண்டும். மாநில அரசின் அதிகாரிகள் யாரும் வன்முறையில் ஈடுபடப் போவது கிடையாது. இங்கு மத்திய படையைக் கொண்டு போக வேண்டிய அவசியமே இல்லை. தமிழ்நாட்டில் ஊழல் செய்பவர்கள் மட்டும்தான் பயந்தவர்கள். தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட இரண்டு பிரதான கட்சிகளும் வழக்குகளில் சிக்கியுள்ளன. இந்த இரு கட்சிகள் மீதும், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ ஆகியவற்றைக் காட்டி பயமுறுத்தலாம். அதைத்தான் மத்திய அரசு செய்து வருகிறது. ஆர்.எம்.ஆர் வீட்டில் கைப்பற்றப்பட்டது லஞ்சப் பணம் என்று நிரூபித்தால், அவரைக் கைது செய்யலாம். பொதுவாக, வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்து என்றால் கைது செய்ய மாட்டார்கள். ஒரு வழக்கில் முக்கியமான அதிகாரி ஒருவரைக் கைது செய்ய நேர்ந்தபோது, சி.பி.ஐ கூடுதல் இயக்குநராக இருந்த சர்மா, ' நாளையே வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்து சேர்க்கவில்லை' என நீதிமன்றத்தில் நிரூபனம் ஆகலாம். ஆனால் கைது செய்துவிட்டால் களங்கம் தீராது' என்றார். கைது நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டது. மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை சட்டத்தின்கீழ் தலைமைச் செயலாளர் மீது வழக்குப் பதிவது குறித்த ஆலோசனை நடந்து வருகிறது. இது லஞ்சப் பணம் எனக் காட்டினால், கைது நடவடிக்கைகளை எடுப்பார்கள்" என்றார் உறுதியாக. 

வழக்கமாக, ஆட்சி மாற்றம் நடக்கும்போது தி.மு.க அதிகாரிகள், அ.தி.மு.க ஆட்சியால் பழிவாங்கப்படுவார்கள். ஆனால், தி.மு.க தலைமையிடம் நெருக்கம் காட்டிய ஆர்.எம்.ஆருக்கு ஜெயலலிதா கொடுக்கப்பட்ட இடத்தை பிரமிப்போடு பார்க்கிறார்கள் கோட்டையில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். 

http://www.vikatan.com/news/tamilnadu/75624-rama-mohana-rao-might-get-arrested-following-it-raid.art

  • தொடங்கியவர்

ராம மோகனராவ் அறையில் 5 மணி நேரம் நடந்த அதிரடி ரெய்டு! சிக்கியது என்ன?

 

                ராம மோகன ராவ்

மிழகத் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் அறையில் நேற்று மதியம் முதல் இரவு வரை 5 மணி நேரம் இடைவிடாமல் நடந்த அதிரடி ஐ.டி.ரெய்டு கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவரின் அறை அமைந்துள்ள இரண்டாம் தளத்தில் உள்ள மற்ற செயலாளர்களின் அறைகளிலும் பதற்றம் நிலவியது.

சென்னை அண்ணா நகரில் உள்ள ராம மோகன ராவ் வீட்டில் நேற்று (புதன் கிழமை) காலை முதல் நடத்தப்பட்ட வருமானவரித் துறையினரின் சோதனை, நாடு முழுக்க அதிகாரிகள் வட்டாரத்தில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.மேலும், தலைமைச் செயலாளர் மகன் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீட்டிலும் ஐ.டி.சோதனை  நடந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் தமிழகத்துக்குப் புதிய தலைமைச் செயலாளர் நியமிக்கப்படவேண்டும் என்றும், இந்த ரெய்டு தமிழகத்துக்குப் பெரும் தலைக்குனிவு என்றும் கூறியிருந்தனர்.

76 ஆண்டுகால தலைமைச் செயலக வரலாற்றில் முதல் ரெய்டு!

தமிழக அரசின் 76 ஆண்டுகால தலைமைச் செயலக வரலாற்றில் தலைமைச் செயலாளரின் அறையில் வருமானவரிச் சோதனை நடந்தது இதுவே முதல் முறை. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே, பிரிட்டிஷாரால் தமிழகத்தில் தலைமைச் செயலாளர் பொறுப்பு உண்டாக்கப்பட்டது. 1940-ம் ஆண்டு எஸ்.வி.ராமமூர்த்தி ஐ.சி.எஸ். தமிழகத்தின் முதல் தலைமைச் செயலாளராகப் பதவியேற்றார்.

அவரையடுத்து 1950-ம் ஆண்டுக்குப் பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாநிலத்தின் தலைமைச் செயலாளராக பதவியில் அமர்த்தப்பட்டனர். வருமானவரித் துறையின் சோதனையில் சிக்கிய ராம மோகன ராவ் தமிழகத்தின் 44-வது தலைமைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சோதனையில் சிக்கியது என்ன?

ராம மோகன ராவின் அறையில் ஐ.டி.அதிகாரிகள் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய  கணினிகள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர். மேலும், போன் அழைப்புகள், கோப்புகள் ஆகியவற்றையும் ஐ.டி.அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்துள்ளனர். 

புதன் பிற்பகல் 2.20 மணி அளவில், 12 ஐ.டி.அதிகாரிகள் மூன்று கார்களில் தலைமைச் செயலகத்தின் ஆறாவது நுழைவு வாயில் வழியாக உள்ளே வந்தனர். இரண்டாம் தளத்துக்கு லிப்ஃட் மூலம் சென்ற அவர்கள், அதிரடியாக ராம மோகன ராவ் அறையில் நுழைந்தனர். இரவு 7.30 மணி வரையில் தீவிர சோதனை நடத்தினர். அவர்களின் பாதுகாப்புக்கு துணை ராணுவப் படையினரும் உடன் வந்திருந்தனர்.

ராம மோகன ராவ் அறையில் இருந்த கணினிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள், கோப்புகள் ஆகியவற்றை அதிகாரிகள் எடுத்துக்கொண்டனர். தமிழக அரசின் மற்ற துறைகளில் அவருக்கு வணிகரீதியான தொடர்புகள் இருந்தனவா அவற்றின் மூலம் அவர் ஏதேனும் ஆதாயம் அடைந்தாரா எனவும் கோப்புகள் மூலம் ஆராய்ந்தனர். அறையில் இருந்த பல நூறு பக்கங்கள் கொண்ட ஆவணங்களை வருமானவரித் துறை அதிகாரிகள் ஸ்கேன் செய்து கையோடு எடுத்துச் சென்றனர்.

சோதனை நடைபெற்ற நேரத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அறையில் இருந்தார். காலை 11 மணியளவில் தலைமைச் செயலகம் வந்த அவர், மாலை 4.50 மணிக்குப் புறப்பட்டு, தமது இல்லம் சென்றார். சோதனை குறித்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் அமைதியாகத் தகவலை அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் அறைக்குள் இருந்த நேரத்தில், அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்றும், இதில் தமிழக அரசு சார்பில் என்ன செய்யவேண்டும் என்றும், புதிய தலைமைச் செயலாளர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்தும் நெருங்கிய அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசனை செய்தார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. அதேபோல முதல்வரின் செயலாளர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்த அதிரடி ரெய்டு கோட்டையில் உள்ள தலைமைச் செயலக ஊழியர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பினை உண்டாக்கியது. என்ன நடக்கிறது என்பதை தொலைக்காட்சிகள், இணையதளங்கள் மூலம் அவ்வப்போது அறிந்துகொண்டும், கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே கூடி விவாதித்த வண்ணம் இருந்தனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/75637-what-it-sleuths-caught-at-5-hours-raid-in-ram-mohan-rao-office.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.