Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பின் மூலம் இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை இல்லை என்பது நிரூபணம்- சுமந்திரன்

Featured Replies

ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பின் மூலம் இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை இல்லை என்பது நிரூபணம்- சுமந்திரன்
 
 
ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பின் மூலம்  இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை இல்லை  என்பது நிரூபணம்- சுமந்திரன்
நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா - ரவிராஜின் கொலைக்குப் பொறுப்பான வர்களை தண்டிக்க முடியாததொன்றாக இருப்பது இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை இல்லை என்பதை உறுதி செய்கின்றது என த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தர ணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
மேலும் நீதித்துறை மட்டுமல்ல, மத்திய அரசாங்கமாக இருந்துகொண்டு ஒற்றையாட்சி முறையின் கீழே நிறைவேற்றுத்துறை முழு மையாக மத்தியிலே இருக்கின்ற முறையிலும் எங்களுக்கு நம்பிக்கையில்லை. சட்டவாக்கத்துறையிலே மத்திய அரசாங்கத்தில் இருக்கின்ற பாராளுமன்றம் மட்டும் சட்டங்களை இயற்றுவதில் மேலாதிக்கம் செலுத்துவதிலும் எங்களுக்கு நம்பிக்கையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
 
நேற்றையதினம் கரவெட்டி பிரதேச செயலகத்தின் கலாசார விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்க ண்டவாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
நேற்று அதிகாலை 12 மணிக்குப் பிறகு முன்னாள் பா.உ. ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம்  இறுதிச் சமர்ப்பணங்கள் செய்யப்படுகின்ற வேளையில் அவரது குடும்பத்தார் சார்பில் ஆஜராகி நானும் இறுதிச் சமர்ப்பணங்கள் செய்திருந்தேன். சிங்கள மொழி பேசும் ஜூரி சபை முன்னிலையில் குறித்த வழக்கு நடைபெற்றது. ஜூரி சபை முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விண்ணப்பித்த போது பாதிக்கப்பட்ட வர்கள் சார்பாக நான் எதிர்த்து வாதிட்டேன். அது தொடர்பில் எழுத்து மூலமான சமர்ப்பணங்களும் நீதிமன்றத்திற்குச் செய்திரு ந்தோம்.
 
இந்நிலையில் ஜூரி சபையினாலே நேற்று அதிகாலை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்று தீர்ப்பு ஏக மனதாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அது நீதிமன்றத் தீர்ப்பு.
 
இதேவேளை வழக்கு நடைபெறுகின்ற காலத்திலே அந்த வழக்கைப் பற்றியோ அதன் தீர்ப்பைப் பற்றியோ எவரும் பேசக்கூடாது. பேசினால் அது நீதிமன்றத்தை அவமதிக்கின்ற குற்றமாகக் கருதப்படும். ஆனால் தீர்ப்புக்கொடுத்ததற்குப் பிறகு எவரும் அதனை விமர்சிக்கலாம்.
 
நேற்றுமுன்தினம் நீதிமன்றத்திலே நான் ஆற்றிய சமர்ப்பணத்திலே சில விடயங்களை அந்த ஜூரிசபைக்கு சுட்டிக்காட்டி யிருந்தேன். 10 வருடங்களுக்கு முன் இலங்கையின் தலைநகரிலே காலை 8.40 மணிக்கு மக்கள் வேலைக்குச் செல்கின்ற சன நெரு க்கடியான ஒரு வேளையிலே தெட்டத் தெளிவாக அனைவருக்கும் தெரியக்கூடிய நேரத்திலே பா.உறுப்பினர் ஒரு பிரதான வீதியின் நடுவிலே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
 
ஆனால் அது தொடர்பாக அதற்குப் பிறகு 9 வருடங்களுக்கு மேல் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இடையில் ஒருவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர்கள் தான் இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடி ப்படையில் நீதிமன்றின் முன்னால் நிறுத்தப்படுவதற்கு 9 வருடங்களும் வழக்கு ஆரம்பிப்பதற்கு 10 வருடங்களும் காத்திருக்க வேண்டியிருந்தது.
 
இந்த வருடம் கடந்த நவம்பர் 22ம் திகதி தான் இந்த வழக்கு ஆரம்பமாகியது. அதுவரைக்கும் நாங்கள் பொறுத்திருந்தோம். ஆனால் இந்த வழக்கில் கூட குற்றப்பத்திரிகையிலே ஆறு பேரை எதிரிகளாக இனங்கண்டு நிறுத்தியிருந்தார்கள்.
 
வழக்கு ஆரம்பமானபோது முதலாம் எதிரி ஏற்கனவே இறந்து விட்டார் என்று அறிவித்தார்கள். மிகுதி 5 பேரிலும் இருவர் இன்னமும் தேடப்படுகிறார்கள். மூவர் மட்டும் எதிரிக் கூண்டில் நின்றார்கள் என குற்றப்பத்திரிகையில் சொல்லப்படுகின்றது.
 
இந்த 6 பேருடன் சட்டமா அதிபருக்குத் தெரியாத வேறு சிலரும் சேர்ந்து தான் இக்கொலைத் திட்டத்தை தீட்டினார்கள் என்று குற்ற ப்பத்திரிகையிலே கூறப்பட்டிருக்கிறது.
 
இலங்கை குடியரசுக்குத் தெரியாத வேறு சிலர் இன்னமும் தெரியாத வேறு சிலர் இக்கொலையைச் செய்வதற்குத் திட்டம் தீட்டி யிருந்தார்கள் என்று சட்டமா அதிபரின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை மேற்கோள்காட்டி நான் கூறினேன். பா.உறுப்பினர் ஒருவரை அவ்வாறான வெளிச்சத்தில் மக்கள் மத்தியில் கொலை செய்துவிட்டு ஒருவரும் கைது செய்யப்படாமல் 9 வருடங்களுக்கு மேலாக இந்நாடு இருந்தது. ஆகவே இந்தத் திட்டம் தீட்டியவர்கள் இதற்கு உத்தரவு கொடுத்தவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும். இது எங்களுக்குத் தெரியாது. யாரோ செய்திருக்கிறார்கள் என்று சட்டமா அதிபர் சொல்வதில் அர்த்தம் கிடையாது.
 
அவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவர்கள் சட்டத்திற்கு முன்பாக கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் தற்போதைக்கு அந்த உத்தரவை நடத்தியவர்கள் இவர்கள் தான் என்று இலங்கை அரசே நீதிமன்றத்திற்கு முன்பாக நிறுத்தியிருக்கின்றது. அந்த வகையில் அவர்களும் முழுமையான பொறுப்பாளிகள். அவர்களுக்கும் இப்போது தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று நான் கூறியிருந்தேன்.
 
எங்களுடைய நாட்டின் நீதித்துறை உலகத்திலே இருக்கின்ற நாகரிகமான நாடுகளிலே காணப்படுகின்ற நீதித்துறை என்று நாங்கள் சொல்லக்கூடுமாகவிருந்தால் ஆகக்குறைந்தது இதுவாவது நடக்கப்பட வேண்டும். இது ஒரு பரீட்சார்த்தமான வழக்கு என்ற வகையில் அது நடைபெறவில்லை.
 
2015ஆம் ஆண்டு ஜெனஜவாவில் இலங்கை அரசு தனது நீதித்துறையில் இருக்கின்ற குறைபாடுகளை ஏற்றுக்கொண்டிருந்தது.இலங்கை நீதித்துறையாலே சரியான முறையில் நீதி செய்யப்படமாட்டாது என கருதியபடியால்தான் இலங்கையிலே இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறலுக்காக விசாரிப்பதற்குசர்வதேச விசாரணையாளர்கள், சர்வதேச வழக்கு தொடுநர்கள், சர்வதேச நீதிபதிகளை இணைந்த பொறிமுறையை ஏற்றுக் கொள்கிறோம் என இலங்கை அரசு அந்த தீர்மானத்திலே கைச்சாத்திட்டது.ஆனால் அந்த தீர்மானத்திற்கு இலங்கை அரசை வரச் செய்வதற்கு நிறையவே போராடியிருக்கிறோம்.
 
ஜெனிவாவிலே சர்வதேச சட்டநிபுணர்களோடு தங்கியிருந்தபோது இலங்கை அரசமைப்பு சட்டத்திலே வெளிநாட்டு நீதிபதிகள் இலங்கை நீதிமன்ற செயற்பாடுகளில் பங்குபற்றுவது தவிர்க்கப்படவேண்டியதென அமைச்சரொருவர் வந்து சொன்னபோது கூட அதற்கு எதிர்ப்பு காட்டி சர்வதேச நிபுணர்களை வெளிநாட்டு நீதிபதிகள் சட்டவாளர்களைக்கொண்ட நீதிக்கட்டமைப்பு ஒன்றுக்கு இணங்கச் செய்திருந்தோம்.
 
ஜெனிவாவிலே அதனை ஏற்றுக்கொண்ட பிறகும் கூட சர்வதேச நீதிபதிகள் தேவையில்லை எங்களுடைய நீதித்துறையே சரியான வகையில் செய்யும் எனக் கூறிக்கொண்டு வந்தார்கள்.அவர்கள் சொன்ன அந்த கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது.
 
நாங்கள் அழுத்தம் கொடுத்து இலங்கை அரசை இணங்கச்செய்த சர்வதேச நீதிமன்ற பொறிமுறையே இலங்கைக்கு பொருத்தம் என்பதை ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பு வெளிப்படுத்தியிருக்கிறது என்றார்.

http://www.onlineuthayan.com/news/21788

தமிழனைச் சுடலாம், கொல்லலாம் சுட்டவருக்கு விடுதலை நிச்சயம்

பொற்கைப் பாண்டியன் என்ற மன்னன் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது.தனது கரத்தை துண்டாக்கி மக்களுக்கு மக்களுக்கு நீதி வழங்கியவன் அவன்.

நீதி என்று வந்துவிட்டால் அவர், இவர், நமர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை நிரூபித்தவன் பொற்கைப் பாண்டியன்.

அறம், தர்மம், நீதி என்பன ஒத்த கருத்தை எடுத்துரைக்கும் சொற்பதங்கள். அறத்தை தர்மத்தை நீதியை யாரெல்லாம் மீறுகிறார்களோ அவர்களுக்கு அறமே கூற்றாகும்.

எனினும் இவற்றையெல்லாம் இன்று ஏற்பதற்கும் ஆளில்லை. எடுத்துரைப்பதற்கும் ஆளில்லை என்பதாக நிலைமை மாறிவிட்டது.

இதில் எங்கள் நாட்டில் நடக்கின்ற தீர்ப்புக்களை நினைத்தால் நெஞ்சம் வெடித்து விடும். அந்தளவுக்கு நீதியை அநீதி மேலாடி நிற்கிறது.

அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக பெரும்பான்மை இனம் சார்ந்தவர்கள் எக்குற்றம் இழைத் தாலும் அவர்களுக்குத் தண்டனை இல்லை என்பதை உறுதிபடக் கூறமுடியும்.

குறிப்பாக போர்க்கால சூழ்நிலையில் எத்தனையோ கொலைகள், குற்றங்கள் நடந்துள்ளதாயினும் தமிழர்களுக்கு தீங்கிழைக்கின்ற பெரும்பான்மை இனத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பெளத்த சிங்கள நாட்டின் விசுவாசிகள் என்பதாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலைமைதான் இலங்கையில் உள்ளது. சர்வதேச நாட்டுப் பிரதிநிதிகள் இலங்கைக்கும் தமிழர் பகுதிக்கும் வருகின்ற போது அவர்கள் தமிழ் மக்களைப் பார்த்து போர் முடிந்து விட்டது. நீங்கள் நிம் மதியாக வாழ்கிறீர்கள். இனிப் பிரச்சினை இல்லைத் தானே என்று கூறுவதைக் காணமுடிகிறது.

வெளிநாட்டுப் பிரதிநிதிகளைப் பொறுத்தவரை அவர்கள் யுத்தம் முடிந்ததால் தமிழ் மக்கள் நிம்மதியாக - சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்று கருதுகிறார்கள்.

உண்மையில் இலங்கையில் நடந்த மண் மீட்புப் போர் என்பது தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்பட்டதால் ஏற்பட்டதுதான்.

எனவே  தமிழ் மக்களுக்கான உரிமை, அவர்களுக்கான அதிகாரங்கள் என்று வழங்கப்படுகின்றதோ அன்றுதான் இலங்கையில் அமைதி ஏற்பட முடியும்.

இருந்தும் இந்த உண்மையை அறிவதற்கு எவரும் தயாரில்லை. தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் ஒற்றுமையாக வாழ முடியும் என்ற நிலைமை ஏற்பட வேண்டுமாயின் நீதி சரியாக வழங்கப்பட வேண்டும்.

சிங்கள இனம் என்றால் அதற்கொரு நீதி தமிழ் மக்கள் என்றால் அதற்கு இன்னொரு நீதி என்ற நீதிப்பாடு இருக்கும்வரை இலங்கை ஆட்சி மீதோ, சட்டங்கள் மீதோ தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள முடியாது என்பதே யதார்த்தம்.

2009ஆம் ஆண்டில் வன்னியில் நடந்த யுத்தம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்தது.  தமிழின அழிப்பு என்று சொல்லுமளவுக்கு தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர்.

ஆனால் இன்றுவரை எந்த நீதியும் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை. சர்வதேச போர்க்குற்ற விசாரணை இடம்பெறும் என்று நம்பினோம். இருந்தும் அதனைச் வெட்டிச் சரித்து உள்நாட்டில் விசாரணை என்று மாற்றீடு கூறுகிறது நல்லாட்சி.

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று ஆட்சியாளர்கள் நினைத்தால் சர்வதேச விசாரணையை அவர்களே வலிந்து கேட்டிருக்க வேண்டும்.  மாறாக சர்வதேச விசாரணைக்கு அறவே இடமில்லை. அதற்கு அனுமதிக்க முடியாது என்று நல்லாட்சி தடுக்கிறது என்றால் தமிழர்களுக்கு நீதி கிடைக்க விடமாட்டோம் என்பதே அதன் பொருளாகும்.

இந்தவகையில் 2009இல் வன்னி பெரு நிலப்பரப்பில் தமிழ் மக்களுக்கு நடந்த மிகக் கொடூரமான அழிவுகள் எதற்கும் நீதி கிடைக்கப் போவதில்லை என்பதற்கு அப்பால், யுத்த காலத்தில் நடந்த கொலைகள்,  கொள்ளைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போகச்  செய்தல்கள் இவை தொடர்பில் எந்த நீதியும் கிடைக்காது.  மாறாக குற்றவாளிகள் தப்பிக்கச் செய்யப்படுவர் அல்லது விடுதலை செய்யப்படுவர் என்பதே யதார்த்தம்.

என்ன செய்வது நாம் தமிழர்கள் என்பதால் தரப்படுகின்ற தீர்ப்பை ஏற்பதுவே எங்கள் தலைவிதியாக இருக்கிறது. இந்த உண்மையை தமிழ் மக்கள் உணர்ந்திருந்தாலும் தமிழ் அரசியல் தலைமை எப்போதுதான் உணருமோ தெரியாது. 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=12810&ctype=news

ரவிராஜ் தன்னைத்தானே சுட்டுக்கொண்டாரோ என சலிப்புத்தான் வருகிறது

நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை பார்த்தால் ரவிராஜ் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தன் காவலரையும் சுட்டுவிட்டாரோ என்று சலிப்புத்தான் வருகிறது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, 
 
நண்பர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு இந்நாட்டில் வாழும் தமிழ் மக்களையும், ஏனைய முற்போக்காளர்களையும் கடும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. 2006ம் ஆண்டு நவம்பர் 10ம் திகதி காலை வேளையில் நடைபெற்ற இந்த படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை கடந்த சில காலமாக விறுவிறுப்பாக நடைபெற்றபோது, ஏற்பட்ட எதிர்பார்ப்பு இப்போது சலிப்பில் முடிந்திருக்கின்றது. 
 
இந்த வழக்கு தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பாக ஆஜரான தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் மேன்முறையீடு செய்யப்போவதாக கூறியிருப்பதை வரவேற்கிறேன். 
 
இதேவேளை இந்த வழக்கு விசாரணையில் போலிஸ் மற்றும் சட்டமாஅதிபர் திணைக்களம் ஆகியவற்றின் போக்குகள் குறித்தும் திருப்தியடைய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பிரதமருடனும், கூட்டமைப்பு தலைவருடனும் உரையாட உள்ளேன். இந்நாட்டின் நீதித்துறை மீது உலகமும், தமிழர்களும் நம்பிக்கை வைக்க முடியுமா என்ற கேள்வி இன்று மீண்டும் எழுந்திருப்பது நியாயமானது என நினைக்கின்றேன். 
 
இந்த தீர்ப்பு நிச்சயமாக எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனிதவுரிமை கூட்டத்தில் எதிரொலிப்பதை தவிர்க்க முடியாது.

 

http://www.tamilkingdom.com/2016/12/565.html

  • தொடங்கியவர்
சர்வதேச விசாரணையே தேவை என்பதை ரவிராஜழன் தீர்ப்பு உறுதி செய்கிறது-சிவாஜிலிங்கம்
 
 
சர்வதேச விசாரணையே தேவை என்பதை ரவிராஜழன் தீர்ப்பு உறுதி செய்கிறது-சிவாஜிலிங்கம்
தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை, மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணையே தேவை என்பதை ரவிராஜ் படு கொலை சம்பவத்தின் தீர்ப்பு உணர்த்தியுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையின் நீதித்துறையில் இருந்து தமிழ் மக்களுக்கு எந்தவொரு நீதியும் கிடையாது என்ற செய்தி இதன் மூலம் மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து மூன்று கடற்படை புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து சந்தேகநபர்களும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இந்த கருத்தை கூறியுள்ளார்.
 
நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் நிறைவை மிக உற்சமாக கொண்டாடவுள்ள நிலை யில் சிங்கள பௌத்த பேரினவாதம் தெளிவான செய்தியை கூறியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
ரவிராஜின் படுகொலை மூலம் ஈழத் தமிழர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இழைக்கப்பட்ட அநீதிக்கான தீர்வு வழங்கப்படாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பி ட்டார்.
 
இந்த கொலை தொடர்பில் எந்தவொரு குற்றவாளிகளையும் கண்டறிய தவறிய அரசாங்கம், அனைத்து சந்தேகநபர்களையும் தற்போது விடுவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.onlineuthayan.com/news/21818

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Quote

 

ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பின் மூலம் இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை இல்லை என்பது நிரூபணம்- சுமந்திரன்

 

 

சுமந்திரனுக்கும் கொஞ்சப்பேருக்கும் இது விளங்க இவ்வளவு காலம் எடுத்திருக்கு.tw_angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, நவீனன் said:
ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பின் மூலம் இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை இல்லை என்பது நிரூபணம்- சுமந்திரன்
 

எல்லாச்சனமும் சுமந்திரனை நல்ல லோயர் எண்டு சொல்லிச்சுதுகள்.....ஆனால் நாத்தீட்டுதே!!!!! tw_glasses:

சிலவேளை விவாகரத்து வெட்டிவிடுற வழக்குகளுக்கு..... வரம்பு பிரச்சனை கதியால் பிரச்சனை வழக்குகளுக்கு விண்ணனாய் இருக்குமோ??? tw_tounge_xd:

மீண்டும் மீண்டும் கேலிக்கூத்தாகும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் தமிழின விரோத நீதித்துறை இயந்திரம்.  

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் இனமதவெறிக் கறை படிந்த நீதித்துறையை தமிழர்கள் ஒருபோதும் நம்பவே முடியாது என்பது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.

கடந்த 60+ வருடங்களில்  சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் நீதித்துறை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் எவைக்கும் தேவையான முழுமையான நீதியை, நிவாரணத்தை பெற்றுக்கொடுத்த சரித்திரம் இல்லை.

மிக மிக நீண்ட காலமாக தமிழின விரோதமாகவும், சிங்கள-பௌத்த பயங்கரவாதிகள் - கொலைகாரர்கள் - கொள்ளைக்காரர்கள் - பாலியல் வன்கொடுமையாளர்கள் சார்பாகவும் இயங்கி கறைகள் பல படிந்த இந்த (அ)நீதித்துறையை தமிழர்கள் இன்னொரு 60+ வருடங்களுக்கு நம்புவதற்கோ, ஏற்றுக்கொள்வதற்கோ அடிப்படைக் காரணங்கள் எதுவுமே இல்லை.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.