Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் ஆழிப் பேரலையினால் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி

Featured Replies

ஆழிப் பேரலை அனர்த்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து இன்று(26) முள்ளியவளை நினைவாலயத்தில் முல்லைத்தீவு மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி குறித்த நினைவாலையத்தில் காலை தொடக்கம் பொது மக்கள் தமது உயிர் நீத்த உறவினர்களுக்கு மலர்கள் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

2004 ஆம் ஆண்டு இதே நாள் சுனாமி எனப்படும் ஆழிப் பேரலை அனர்த்தத்தால் முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் காவு கொள்ளப்பட்டனர்.

அன்றைய நாள் ஏற்பட்ட வலிமையான நிலநடுக்கம் 9.3 ரிக்டர் அளவில் அறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப் பேரலை அனர்த்தத்தில் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலைதீவுகள் ஆகிய 14 நாடுகளில் 230,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg
625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/129426?ref=morenews

  • தொடங்கியவர்

அம்பாறை கடலோரத்தில் ஆழிப்பேரலையின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

இலங்கையிலே அதிகூடிய உயிரிழப்புகளையும் சொத்திழப்புகளையும் சந்தித்த அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் இன்று(26) பரவலாக ஆழிப்பேரலை நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இலங்கையில் 35 ஆயிரம் பேரை காவு கொண்ட ஆழிப்பேரலை அம்பாறை மாவட்டத்தில் மட்டும் அதிகூடிய அளவாக 5000 பேரை காவு கொண்டது.

இதனையொட்டி கடலோரமெங்கும் ஆத்மார்த்த பிரார்த்தனைகளை பொது அமைப்புகளுடன் இணைந்து மக்களும் அஞ்சலி செலுத்துகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

கல்முனையில் 1ஆம் 2ஆம் 3ஆம் பிரிவுகளில் ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்காக கட்டியெழுப்பப்பட்டுள்ள மாமாங்க நினைவுத்தூபி முன்றலில் பிரதான நிகழ்வு நடைபெறவுள்ளது. இப்பகுதியில் 326 பேர் பலியானார்கள்.

அவர்களது பெயர் விபரம் இந்த தூபியில் பொறிக்கப்பட்டுள்ளன. கல்முனை சைனிங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினர் ஏனைய பொது அமைப்புகளுடன் இணைந்து தூபி முன்னிலையில் விசேட ஆத்மார்த்தமாக பூஜை மற்றும் ஒளி தீபம் என்பன செய்வதோடு அஞ்சலி நிகழ்வையும் நடாத்துகின்றது.

கல்முனைப் பிரதேசத்தின் பிரபல சமூக சேவையாளர் சந்திரசேகரம் ராஜனின் அனுசரணையில் நடைபெறுகின்ற இந்த நிகழ்வில் அன்னதானமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

காரைதீவில் இந்து சமய விருத்திச் சங்கம் ஏற்பாடு செய்த ஆத்மார்த்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது காரைதீவுக் கடற்கரையிலுள்ள நினைவுத் தூபி முன்னிலையில் நடைபெறுகின்றது.

இந்து சமுத்திரத்தை உலுக்கிய ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று வருடங்கள் பன்னிரண்டாகின்றது. அதனையொட்டி நாடெங்கிலும் ஆழிப்பேரலை தினம் அனுஷ்டிப்பு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/129429?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

ஆழிப்பேரலையின்...  நினைவு வணக்க நாள் - 26.12.2016. 
தமிழீழத்தில் .... கரையோர மாவட்டங்களில்,  இயற்கையின் சீற்றத்தால்.... கடலன்னை காவு கொண்ட உறவுகளின் எண்ணிக்கை.

மட்டக்களப்பு:  2975
முல்லைத்தீவு: 2902
யாழ்ப்பாணம்: 1256
திருகோணமலை: 984
கிளிநொச்சி: 32

மொத்தம்:  8149 

தமிழகத்தில்....  சுனாமியால் இறந்து போனவர்களின் எண்ணிக்கை:
நாதுன்பமான  தினம்.கபட்டினம்:  5819. 
சென்னை:  206. 
கடலுார்:  603. 
காஞ்சி:  124.

மொத்தம்: 6752

ஈழத்  தமிழர்களையும், தமிழகத் தமிழர்களையும் சேர்த்து.....14,901 பேரை, ஆழிப்  பேரலை  காவு கொண்ட, துன்பமான  தினம்.

  • தொடங்கியவர்

ஆழிப்பேரலையின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில்

ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 12ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த அனுஷ்டிப்பு சுனாமி நினைவுக்குழுவின் தலைவர் தலைமையில் இன்று காலை ஆரம்பமானது.

இதன்போது, முதலில் பொது நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

மலர் மாலையினை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அணிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

தொடர்ந்து வருகை தந்த அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்பின் தலைவர்கள் மலர் வணக்கம் செலுத்தினார்கள்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதனையடுத்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து ஆழிப்பேரலையில் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதன் பின்பு ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்டவர்களுக்கான நினைவுரைகள் இடம்பெற்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

நினைவுரைகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் மற்றும் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சிறுவர் மற்றும் பெண்கள் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/129451?ref=home

  • தொடங்கியவர்

சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு அடிப்படை வசதிகள் இன்னும் செய்யப்படவில்லை - சிவக்தி ஆனந்தன்

சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு அடிப்படை வசதிகளைக் கூட அரசாங்கம் இன்னும் செய்து கொடுக்கவில்லை. தற்போது நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் எங்கள் எல்லோருக்கும் பெரும் கவலையை ஏற்படுத்துகின்றது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இன்று(26) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு அவர் கூறுகையில்,

இன்றைய நாளில் ஆயிரக்கணக்கானோர் தமது உறவுகளை நினைவுகூர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் அத்தனை ஆத்மாக்களும் சாந்தியடைய வேண்டும் எனப் பிரார்த்திக்க வேண்டும்.

வவுனியாவில் சுனாமி ஏற்படாவிட்டாலும் இலங்கையிலும் அதற்கு வெளியிலும் உயிர் நீத்த அத்தனை உயிர்களுக்கும் இன, மத, மொழி பேதமின்றி அஞ்சலி செலுத்துகின்றோம்.

ஆனால் உண்மையில் எங்களது நாட்டில் இன வாதம், மத வாதம் உச்சகட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில் சுனாமியில் உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசாங்கம் அடிப்படை தேவைகளான வீட்டு வசதிகள், வாழ்வாதாரம் போன்றவற்றைச் செய்ய வேண்டிய தேவை 12 ஆண்டுகள் கழிந்தும் காணப்பட்டு வருகின்றது.

இவ்வாறானவர்களின் காணிகளை இராணுவம் விடுவிக்காமல் உள்ளதாகவும் எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கின்றது. 12 ஆண்டுகளாக சுனாமியால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது.

ஆகவே அரசாங்கம் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதுடன் நிரந்தரமான சமாதானத்தை எட்டுவதற்கான செயற்பாட்டையும் முன்னெடுக்க வேண்டும்.

ஆனால் எமது நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் எங்கள் எல்லோருக்கும் பெரும் கவலையை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக மட்டக்களப்பில் பௌத்த துறவி நடந்து கொண்ட விடயமும் அதன் பின்னர் நீதி அமைச்சர் குறித்த பௌத்த துறவிக்குத் துணை போவது போல பேசியிருக்கின்ற விடயத்தினையும் கூறலாம். இவ்வாறே தற்போதைய நிலை காணப்படுகின்றது எனத் தெரித்தார்.

http://www.tamilwin.com/community/01/129453?ref=home

  • தொடங்கியவர்

மன்னாரில் ஆழிப் பேரலை நினைவு தினத்தையொட்டி அஞ்சலி

மன்னாரில் ஆழிப் பேரலையினால் உயிர் நீத்த உறவுகளின் 12 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று(26) காலை மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட கலை, இலக்கிய பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அதன் இயக்குனர் ஏ.ரி.மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது உயிர் நீத்த உறவுகளுக்காக ஒளி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுப் பேருரைகளும் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் இந்து மத குரு சிவசிறி மஹா தர்ம குமார குருக்கள், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒள்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனிமார்க் மற்றும் மன்னார் நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

http://www.tamilwin.com/community/01/129441?ref=home

  • தொடங்கியவர்

யாழில், பல்லாயிரக்கணக்கான மக்களின் அஞ்சலியும் 12 ஆண்டுகள் சோகமும்

டிசம்பர் 26. இந்த நாளை எவராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி, உலகையே நிலைக்குலையச் செய்த சுனாமியின் கோரத்தாண்டவம் அரங்கேறிய நாள்.

இன்றை தினம் சுனாமி நினைவுகளை மீட்டும் பல்வேறு நினைவஞ்சலி நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவருகின்றன.

இந்த நிலையில் யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவிடத்தில் சுனாமி நினைவுநாள் இன்றைய தினம் அனுட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி பேரலையினால் உயிரிழந்த மக்களின் 12ஆம் ஆண்டு நினைவு நாளே இன்று அனுட்டிக்கப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் சுனாமியினால் உயிரிழந்த உறவுகளின் நினைவு தினம்

சுனாமி பேரலையினால் உயிரிழந்த உறவுகளின் 12ஆவது ஆண்டின் நினைவாக இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று காலை 9.15 மணியளவில் தேசிய கொடியினை ஏற்றியதுடன், உயிரிழந்த உறவுகளுக்கு இரண்டு நிமிட அஞ்சலியும் செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து, யாழ்.மாவட்ட செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகளும் இடம்பெற்றன.

அந்த நிகழ்வின் போது, உயிரிழந்தவர்களின் ஆத்ம ஈடேற்றத்திற்காக மத குருமார்களின் ஆசியுரைகளும் இடம்பெற்றது.

எதிர்காலத்தில் அனர்த்தங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு அனைத்து மக்களும் அனர்த்த முன் ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அனர்த்தங்களின் போது, விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினரால் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், மதகுருமார்கள் மற்றும், அரச உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/129443?ref=morenews

  • தொடங்கியவர்

வவுனியாவில் சுனாமி நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள்

வவுனியா - பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையால் சுனாமி நினைவாக அமைக்கப்பட்ட முதலாவது நினைவுத் தூபியில் இன்று (26) அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் சுனாமி அனர்த்தத்திலே மரணித்த மக்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நரசிங்கர் ஆலயத்தில் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து பூந்தோட்டம் சுனாமி நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வியமுனி சோமரட்ண, பிரதேச செயலாளர் கா.உதயராசா, நகரசபைச் செயலாளர் தயாபரன், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் மற்றும் மதகுருமார் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/129438?ref=morenews

  • தொடங்கியவர்

யாழ். தெல்லிப்பளையில் இடம்பெற்ற சுனாமி நினைவு தின நிகழ்வு

யாழ் தெல்லிப்பளையிலுள்ள சிற்பாலயம் கலைக் கூடத்திலே சுனாமிப் பேரலையின் 12 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று(26) காலை 09:26 மணியளவில் "மீண்டும் எழுவோம்" எனும் தொனிப் பொருளில் இடம்பெற்றது.

மல்லாகம் தெல்லிப்பழை லயன்ஸ் கழகம் மற்றும் யாழ் திருமறைக் கலாமன்றம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு யாழ் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் லயன் பொ.சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார்.

மறைந்த சிற்பக் கலைஞர் ஏ.வி.ஆனந்தனின் கைவண்ணத்தில் உருவான வரலாற்றுப் பெருமை மிகு சுனாமி சிற்பத்தின் முன்பாக யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள், பிரமுகர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர் மெழுகுவர்த்தி ஏற்றி மெளன அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து சுனாமி தொடர்பான நினைவுரைகளும் கருத்துரைகளும் இடம்பெற்றன.

யாழ் திருமறைக் கலாமன்றக் கலைஞர் எம்.ஜேசுதாசன் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற சுனாமிப் பேரலையின் கோரத் தாண்டவத்தால் உயிர் நீத்த மக்கள் அனைவரதும் ஆத்ம சாந்தி வேண்டி நினைவுப் பாடல் ஒன்றைப் பாடினார்.

உணர்வுபூர்வமாக அவர் நினைவுப் பாடல் பாடிய வேளையில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் எழுந்து நின்று சோகமே உருவாக உயிர் நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் பேராசிரியர் நா.சண்முகலிங்கன், விளான் பங்குத் தந்தை எஸ்.மனுவல், யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் க.சிவராசா, வைத்தியகலாநிதி ஜெயந்திதேவி சேனாதிராசா, யாழ் திருமறைக் கலாமன்ற நிர்வாக இயக்குனர் கலாபூஷணம் ஜி.பி.பேமினஸ், ஆசிரியர் எஸ்.விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு நினைவுரைகளையும் கருத்துரைகளையும் ஆற்றினர்.

குறித்த நிகழ்வின் ஒரு கட்டமாகக் கடந்த இரண்டு தசாப்த காலமாக மேற்கு நாடுகள் பலவற்றிலும் காட்சிப்படுத்தப்பட்ட அமரர் ஏ.வி.ஆனந்தனின் உலகப் புகழ் பெற்ற பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களின் கண்காட்சி ஆரம்பமாகியது.

அத்துடன் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இந்த நிகழ்வில் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/129493?ref=home

  • தொடங்கியவர்

மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய அனர்த்த பாதுகாப்பு தின நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய அனர்த்த பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இன்று(26) காலை மாவட்ட செயலகத்தில் நிகழ்வொன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சுனாமி அனர்த்தத்தினால் உயிர் நீத்தவர்களின் நினைவாக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி இதன்போது செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து தேசிய அனர்த்த நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

சுனாமி அனர்த்த தினத்தை தேசிய அனர்த்த பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தி நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/129490?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழிப்பேரலையின் அகோரத்தாண்டவத்தில் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கு நினைவு அஞ்சலிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.