Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார்குடியின் மாயவலையில் சிக்கி மாண்டாரா ஜெ

Featured Replies

மன்னார்குடியின் மாயவலையில் சிக்கி மாண்டாரா ஜெ

 

"ஜெயலலிதா, சீவகசிந்தாமணி காப்பியத்தில் வரும் சச்சந்தனைப் போல், தான் வீழ்வது தெரியாமலே வீழ்ந்து வருகிறார். படோபகரமான முதல்வராக இருந்தாலும், சசிகலா, நடராஜன் என்கிற கடற்கொள்ளை யர்களின் கரங்களில் அகப்பட்ட அடிமைப் பெண்ணாகத்தான் இருக்கிறார்...

20 வருடங்களுக்கு
முன் வலம்புரிஜான்

தேநீர் விற்றவர் இந்தியாவின் பிரதமரானதையும் செருப்பு தைத்தவரின் மகன் அமெரிக்க ஜனாதிபதியானதையும் ஜனநாயகம் என்று பெருமை கொண்ட எம்மால் தற்போது பணிப்பெண்ணாக வந்த ஒருவர் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான அ.இ.அ.தி.மு.க. வின் பொதுச்செயலாளராக மாறியுள்ளதோடு முதல்வராகும் துடிப்பில் காய் நகர்த்தல்களை மேற்கொள்வதை ஏனோ உள் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

நடிகையாக இருந்து அரசியலுக்குள் நுழைந்து 6 முறை தமிழக முதல்வராக தனி ஒருவராக இறக்கும் வரை சாம்ராஜ்ஜியம் நடத்திய ஜெயலலிதாவை உலகத் தமிழர்கள் தங்களது உண்மை பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டனர் என்பதில் ஐயமில்லை. கருணாநிதி போன்ற அரசியல் சாணக்கியரையே அந்நாந்து பார்க்க வைத்தவர். டில்லியை தமிழகம் நோக்கி திரும்பிப் பார்க்க வைத்த தனி பெண் சிங்கம் போன்ற ஜெயலிதாவே இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக அரசியல் விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டிருந்தனர். அதற்கிணங்க பாராளுமன்றத்தின் மூன்றாவது கட்சியாக நடப்பில் அ.தி.மு.க.வை ஜெயலலிதா கட்டியெழுப்பினார். எம். ஜி.ஆர் விட்டு சென்ற அ.தி.மு.க. இரண்டாக உடைந்து கட்சியின் இரட்டை இலை சின்னம் கூட இல்லாது ஆக்கப்பட்ட போது அதனை தனது ஆளுமையால் இன்று ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட கட்சியாக கட்டியெழுப்பியவர் ஜெயலலிதா. இத்தனை வல்லமை கொண்ட ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மத்தை மட்டும் யாராலும் விளக்க முடியாமல் உள்ளது. இந்த மர்மத்தை விளக்க முடிந்த ஒருவர் இறுதிவரை ஜெயலலிதாவின் அருகில் இருந்த சசிகலா. ஆனால் அவர் இது தொடர்பில் வாய் எதுவும் திறக்கவில்லை. அவரது மன்னார்குடி உறவுகள்தான் ஜெயலலிதாவை கொலை செய்துவிட்டதாக பலர் பகிரங்கமாகவே கூறி வருகின்றனர். ஜெ.மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டு பின் அடித்து கொல்லப்பட்டார் என நடிகர் மன்சூர் அலிக்கான், கராத்தே வீரர் உசேனி , அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா , ராம்குமார் வழக்கில் பரபரப்பை ஏற்படுத்திய தமிழச்சி உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும் நடிகை கௌதமி உள்ளிட்டோர் பிரதமர் மோடியிடம் ஜெ. மரணத்தை விளக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். பலர் இது தொடர்பில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கூட ஜெயலலிதா மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் இது எதனையும் அ.தி.மு.க. அமைச்சர்களும் முக்கிய நிர்வாகிகளும் கருத்தில் கொண்டதாக தெரியவில்லை. இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக நேற்று முன்தினம் சசிகலா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கெசட் கடை விற்பனையாளராக இருந்து ஜெயலலிதா வீட்டுக்கு பணிப்பெண்ணாக வந்து நட்பு கொண்டு, அவருக்கு உற்ற தோழியாகி, பின்னர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி என அழைக்கப்பட்ட சசிகலா, இப்போது அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர். கட்சியிலும், ஆட்சியிலும் எந்த பொறுப்பும் இதுவரை வகிக்காமல் நேரடியாக பொதுச்செயலாளர் ஆனதன் மூலம் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளார் சசிகலா.

 சசிகலா, ஜெயலலிதாவுக்கு அறிமுகமானது 1982க்கு பின்னரே வீடியோ கடை நடத்தி வந்த சசிகலா, ஜெயலலிதாவுக்கு திரைப்பட கெசட்களை தரத் தொடங்கினார். இதன்பின்னர் அடிக்கடி ஜெ. வீட்டுக்கு வர இருவருக்கும் நட்பு அதிகரித்தது. பின்னர் ஜெயலலிதா வீட்டிலேயே தங்கினார். 30 வருடங்களுக்கு மேலாய் இறக்கும் வரை தொடர்ந்த இந்த நட்புக்கு வீடியோ கெசட் மட்டும் காரணம் அல்ல. அதை விட முக்கியமானது மாயமந்திரம்.

ஆம்... 1982-க்குப் பிறகு ஜெயலலிதாவின் கவனம் ஜாதகம், ஜோதிடம், மாயம், மாந்திரிகம் பக்கம் திரும்பியது. அவர் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தது, சசிகலா அவருடன் நெருங்கியது, ஜோதிடம், ஜாதகத்தில் அவருக்கு நம்பிக்கை ஏற்படத் தொடங்கியது என்ற மூன்றும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் நிகழ்ந்தன. மிக பெரிய நட்சத்திரமாக சினிமாவில் வலம் வந்த போது கூட ஜெயலலிதா ஜாதகம் ஜோதிடத்தில் ஈடுபட்டதில்லை. ஜெயலலிதாவிடம் ஏற்பட்ட இந்தப் புதிய மாற்றத்துக்கு காரண கர்த்தாக்கள், எம்.ஜி.ஆர், சசிகலா என்ற இருவரே. எம்.ஜி.ஆர் ஜோதிடத்தின் நம்பிக்கை உள்ளவர். கை பார்த்து சோதிடம் கூட சொல்லக் கூடியவர் இது அவருடன் நெருக்கமாக இருந்த ஜெயலலிதாவுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியது. சசிகலா இந்த ஈர்ப்பை ஜெயலலிதாவிடம் வளர்த்தெடுத்தார். சசிகலா ஒவ்வொரு அசைவையும் குறிபார்த்து, ஏடு படித்து, ஜோதிடம் கேட்டு, மாயம் வைத்து, மாந்திரிகம் செய்தே சாதிக்க முடியும் என்ற ஆணித்தரமான நம்பிக்கை உள்ளவர். இது போன்ற விடயங்களில் சசிகலாவின் ‘மாயம்மா’ அவருடைய அண்ணி சந்தான லெட்சுமி தான். இவர் சசிகலாவின் மூத்த அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவி. சசிகலாவின் ஒப்புதல் இல்லாமல் எதையும் செய்யமாட்டேன் என்ற நிலையில் ஜெயலலிதா இருந்தபோது, சந்தான லெட்சுமியின் ஒப்புதல் இல்லாமல் எதையும் செய்யமாட்டேன் என்ற நிலையில் சசிகலா இருந்தார். சந்தானலெட்சுமி சொன்ன விடயங்களை சசிகலா ஜெயலலிதாவுக்குச் சொன்னார். ஜாதகம், ஜோதிடம், மாயம், மாந்திரிகம், யாகம் போன்ற விடயங்களினால் ஜெயலலிதா மனதில் மாயக்கனவுகளை சசிகலா விதைத்தார். அவற்றில் சில நனவானபோது, ஜெயலலிதா அதில் மயங்கினார். அவருக்கு அது பிடித்தமானதாக இருந்தது. இப்படி ஏற்பட்ட மயக்கம், ஜெயலலிதாவின் மனதை ஜோதிடம், ஜாதகம், மாயம், மாந்திரிகத்துக்குள் கட்டிப்போட்டது.இதன் மூலம் சசிகலாவிடம் ஜெயலலிதா இறுக்கமாக பிணைக்கப்பட்டார். “சாதாரணப் பணிப்பெண்ணாக வந்த சசிகலாவை, ஜெயலலிதா இவ்வளவு நம்புவதற்கு, ஜாதகமும், மாயமந்திரங்களும்தான் காரணம்” என்று சொல்கிறவர்கள், காவிரி டெல்டா மாவட்டங்களிலும் கட்சிக்குள்ளும் இன்னும் இருக்கிறார்கள்.

சசிகலா, ஜெயலலிதாவின் ஜாதகத்தையும் தனது ஜாதகத்தையும் ஏற்கனவே கணித்து வைத்திருந்தார். அதில், ஜெயலலிதாவுக்கு முதலமைச்சர் யோகம் இருக்கிறது என்பதைத் தெரிந்து வைத்திருந்தார். அதைச் சொல்லிச் சொல்லியே ஜெயலலிதாவுக்கு ருசி ஏற்றி வைத்திருந்தார். அதன்பிறகுதான், ஜெயலலிதா தன்னுடைய ஜாதகங்களை எடுத்துக் கொண்டு ஊர் ஊராகப்போய் பலன் கேட்டார். கேட்ட இடங்களில் எல்லாம், ஜெயலலிதாவின் ஜாதகத்துக்கு சாதகமான வார்த்தைகளே வந்து விழுந்தன. அதில் அவர் மனம் குளிர்ந்து போனார். அந்த நேரத்தில், டில்லியில் ஜாதகம் பார்ப்பதில் வல்லவராக இருந்தவர், ‘பாபாஜி’ பத்திரிகை ஆசிரியர் லட்சுமண் தாஸ். அவர் இல்லஸ்ட்ரேட் வீக்லி, டைம்ஸ் ஒப் இந்தியா போன்ற பத்திரிகைகளில் எழுதக்கூடியவர். டில்லி பிரபலங்களுக்கு மிக நெருக்கமானவர். முன்னாள் பிரதமர்கள் ராஜிவ் காந்தி, சந்திரசேகர் போன்றவர்களுக்கு ஜாதகம் பார்த்துப் பலன் சொல்பவர்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 30 நாட்களில் மரணம் அடைவார் என்று எழுதிக் கொடுத்தவர் என லட்சுமணன்தாஸ் பற்றிப் பெருமையாகச் சொல்வார்கள். அவரிடம் ஜெயலலிதா ஜோதிடம் கேட்க ஆர்வமாக இருந்தார். ஆனால், தான் ஜாதகம் கேட்கும் தகவல் எம்.ஜி.ஆருக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருந்தார். அதனால், தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர் ஒருவர் மூலம், தனது ஜாதகத்தைக் கொடுத்து அனுப்பினார். லட்சுமணன்தாஸ், “ஜெயலலிதா எம்.பி. பதவியைவிட மிகப்பெரிய பதவியை அடைவார். ஜெயலலிதாவுக்கு ஒரு பெண்ணால் ஆபத்து உண்டு. ஜெயலலிதா எந்த அளவுக்கு புகழோடு இருந்தாரோ, அதே அளவுக்கு மக்களால் தூற்றவும் படுவார். ஜெயலலிதாவுக்குப் பில்லி சூனியங்களால் ஆபத்து உண்டு” என்று கணித்துக் கொடுத்தார்.

“தனக்கு ஆபத்தை உருவாக்கப்போகும், அந்தப் பெண், ஜானகி அம்மாள்தான்” என்று ஜெயலலிதா அப்போது நம்பினார். இதற்குப் பிறகு, வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம், ஜெயலலிதா தன்னுடைய ஜாதகத்தைப் பரீட்சித்துப் பார்ப்பார். ஒருகட்டத்தில் அவரே, ஜோதிடம் கற்றுக் கொள்ள முயன்றார். ஆனால், அது ஈடேறவில்லை. ஆனால், நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது. ஜெயலலிதாவின் கவனத்துக்கு பல சோதிடர்களை ஒருவர் மாற்றி ஒருவராக சசிகலா அறிமுகம் செய்து கொண்டே இருந்தார். இப்படித் தொடர்ந்த நம்பிக்கைதான், கட்சியில் வேட்பாளர் தேர்வுக்கு வருபவர்களிடம் கூட ஜாதகத்தையும் கேட்டு வாங்கும் பழக்கம் இப்போதும் அ.தி.மு.க.வில் இருக்கிறது.

ஜெயலலிதாவின் மனம் மந்திரவாதத்தில் கொண்ட நம்பிக்கையில் மயங்கிக்கிடந்தது. அதைத் தெளியவிடாமல் சசிகலா வைத்திருந்தார். மித்ரன் நம்பூதிரியிடம் குறி கேட்பது, வைத்தீஸ்வரன் கோயிலில் ஏடு பார்ப்பது, சேலையூர் ஜோதிடரிடம் ஜாதகம் பார்ப்பது, சோட்டானிக்கரையில் மாயம் செய்வது, கானாடுகாத்தானில் மாந்திரிகம் செய்வது, கொல்லிமலைச் சாமியார்களிடம் வாக்கு கேட்பது என்று நீண்டு, ஜோதிடக்காரர்களையும், மந்திரவாதிகளையும் தேடி வெளிமாநிலங்களுக்குப்போகும் நிலை உருவானது. ஜெயலலிதாவின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஜோதிடர், காழியூர் நாராயணன். இவர்தான், 2016-வரை ஜெயலலிதாவின் அரசியல் செல்வாக்கை அசைக்க முடியாது என்று 25 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வைத்தவர் . தனது ஜாதகத்தின்படி வைணவத்தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதால்தான், ஜெயலலிதா அடிக்கடி திருப்பதிக்குச் செல்ல ஆரம்பித்தார். கட்சிக்கு சின்னம் சேவலா? புறவா? என்று வந்தபோது, அதையும் திருப்பதி ஏழுமலையான் முன்பு சீட்டுக்குலுக்கிப்போட்டுத்தான் சசிகலா சேவல் சின்னத்தைத் தேர்ந்தெடுத்தார். ஜெயலலிதாவுக்காக இத்தனை ஜோதிடர்களையும், மாந்தீரிகர்களையும் ஏற்பாடு செய்யும் சசிகலா, தன்னுடைய ஜாதகத்தைக் கணிக்காமல் இருப்பாரா? சசிகலாவுக்கு ஆஸ்தான ஜோதிடர், வடுகப்பட்டி தர்மராஜன். அவர், “ஒரு காலத்தில் சசிகலா, தமிழகத்தின் முதலமைச்சர் ஆகிவிடுவார்” என்று இருபது ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வைத்திருந்தார். வடுகப்பட்டி தர்மராஜன் அன்று போட்ட புதிருக்கு பதில் கிடைக்கும் நேரம் நெருங்கிவிட்டது. இன்னும் சில மாதங்களில் வடுகப்பட்டி தர்மராஜன் சொன்னது பலிக்குமா? பலிக்காதா? என்பது தெரிந்துவிடும்.

 இதேவேளை, 2005இல் இறந்த பிரபல எழுத்தாளரும், அ.தி.மு.க., முன்னாள், எம்.பி.யுமான, வலம்புரி ஜான் எழுதிய, 'வணக்கம்' என்ற புத்தகத்தின் பல வரிகள் தற்போது உண்மைதானோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.அந்த புத்தகத்தில், இருந்து, சில வரிகள்: ஜெயலலிதா, சீவகசிந்தாமணி காப்பியத்தில் வரும் சச்சந்தனைப் போல், தான் வீழ்வது தெரியாமலே வீழ்ந்து வருகிறார். படோபகரமான முதல்வராக இருந்தாலும், சசிகலா, நடராஜன் என்கிற கடற்கொள்ளையர்களின் கரங்களில் அகப்பட்ட அடிமைப் பெண்ணாகத்தான் இருக்கிறார்.ஜெ.யின் விசுவாசமிக்க ஊழியர்களை, ஒவ்வொருவராக பழிவாங்கி, உடன் பிறந்த சகோதரன் ஜெயக்குமாரை கூட, ஜெ.யோடு சேர விடாமல் செய்து, உண்மைகளை அறிய விடாமல் செய்தனர். தங்களுக்கு சகாயம் செய்த திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருச்சி சௌந்தர்ராஜன் போன்றவர்கள் கூட, தாங்கள் இல்லாமல், ஜெ. யை பார்க்க கூடாது என்ற நிலைக்கு மாற்றினர். எல்லா பாதகங்களையும் செய்து, தங்களை அதிகார இயந்திரத்தில் நிலைப்படுத்திக் கொள்ள சசிகலாவும், நடராஜனும் இதை செய்தனர். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். விசுவாசிகளை சசிகலாவால் பழிவாங்கினார். சசிகலாவோ ஜெ. விசுவாசிகளையே பழிவாங்கினார். நடராஜனும், சசிகலாவும் தமிழகத்தை கொள்ளை அடிப்பதற்கு இடைஞ்சலாக இருந்தவர்களை, ஜெ.யின் பார்வையில் படாமல் துரத்தினர். ஜெ.யை தூக்கி வளர்த்த மாதவன் நாயர், அவரின் அன்பை பெற்றார் என்பதற்காக, 35 ஆண்டுகள் பணியாற்றிய அவரை, '36 ஆயிரம் ரூபாய் வங்கியில் வைத்துள்ளார்' என்று காரணம் காட்டி, ஓரம் கட்டியது சசிகலாவும், நடராஜனும் தான். இதெல்லாம் ஒரு காலத்தில் கோடி, கோடியாக கொள்ளை அடிக்கலாம் என்பதற்காகவும், தன் சொந்த, பந்தங்களை மாத்திரமே வாழ வைக்கலாம் என்பதற்கான சசிகலா, நடராஜனின் கூட்டுத் திட்டமே காரணம். தங்களது சொந்தங்களுக்காக, தமிழகத்தில் ஆட்சி இயந்திரத்தை சசிகலாவும் நடராஜனும் உருக்குலைத்து விட்டனர். இந்த சசிகலா, எம்.ஜி.ஆர். ஆளுமல்ல, ஜெயலலிதாவின் ஆளுமல்ல. சசிகலா சசிகலாவின் ஆள். இதை தமிழ்நாடு முழுவதுமாக உணரும். அப்போது கூட ஜெயலலிதா உணரமாட்டார். இப்படி, சசிகலா பற்றி, 20 ஆண்டுகளுக்கு முன்பே வலம்புரி ஜோன் எழுதியிருந்தார்.

எது எப்படியோ ஜெயலலிதா சசிகலாவை துரோகி என கூறி கட்சியிலிருந்து இருமுறை வெளியேற்றினார். சசிகலா கணவர் உள்ளிட்டோரை சிறையில் அடைத்தார். மேலும் தான் சொத்துக்குவிப்பு வழக்கில் தான் சிக்கியமைக்கு மிக முக்கிய காரணம் சசிகலாவின் குடும்பத்தார் என்பதை அவர் அறியாமல் இருந்திருக்க மாட்டார். ஆயினும் தன்னுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தமையால் தனது தோழி என்று மட்டுமே இறக்கும் வரை சசிகலாவை கூறினார். ஒருபோதும் அவரை அரசியலுக்குள் அவர் கொண்டு வரவில்லை. 30 வருடத்துக்கு மேலாக தன்னுடன் இருந்தவருக்கு ஒரு எம். பி. பதவி கூட வழங்கவில்லை.

இதிலிருந்து சசிகலா அரசியலுக்குள் வருவதை ஜெயலலிதா விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால் அம்மா அம்மா... என்று ஜெயலலிதாவுக்கு உயிரையும் கொடுப்போம் என்று ஜெ. உயிருடன் இருக்கும் வரை கதறிக்கொண்டிருந்த அ.தி.மு.க. அரசியல் வாதிகள் இன்று சசிகலாவை சின்னம்மா என்றும் ஜெயலலிதாவின் வாரிசு என்றும் கூறி அவரை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக மாற்றியுள்ளதோடு முதல்வராக்க வேண்டும் என்று முனைப்பில் உள்ளனர். இந்த முட்டாள்தனமான முடிவு அ.தி.மு.க.வின் இரு இலைகளும் உதிர்ந்து விட்டது. இனி அது ஒருபோதும் துளிர்க்க வாய்ப்பில்லை என்ற நிலைக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-31#page-7

  • கருத்துக்கள உறவுகள்

15726768_944594748973553_502867490010805
:D:

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, இசைக்கலைஞன் said:

15726768_944594748973553_502867490010805
:D:

 

சகிக்கல :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, இசைக்கலைஞன் said:

15726768_944594748973553_502867490010805
:D:

:218_frog:

என்ன கட்டுமரத்திற்கு கொண்டாட்டம் தான் 

 

யார் யாரோ தமிழனின் பணத்தை கொள்ளை அடிக்கிறாங்கள், அதில் ஒருவன் தமிழனாக இருந்துட்டு போகட்டும்......

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Ahasthiyan said:

:218_frog:

என்ன கட்டுமரத்திற்கு கொண்டாட்டம் தான் 

 

கட்டுமரம் அறளை பெயர்ந்து போய் இருக்குது.

பிரச்னை என்னவெண்டால், கட்டுமரத்தின், 3 வாரிசுகள் கட்சியை கையகப் படுத்த, அவர் இருக்கும் போதே அடி பட்டுக் கொள்வதால், அவர் பெரும் மன வேதனையில் உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

தேவர்களின் புண்ணியத்தால் இனி ஏதும் சாதி கலவரம் வராது என்று நம்புவம் ..! மற்றும் கள்ளர்களால் தமிழகத்தின் சொத்துக்கள் சூறையாட பட மாட்டாது என்று நம்புவமாக ..!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.