Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் காலத்தில் வடக்கில் இருந்த அர்ப்பணிப்பு தற்போது இல்லை..!

Featured Replies

தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் வடக்கு மாகாணத்தில் பணியாற்றிய வைத்தியர்களும் சுகாதார ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.

அதற்கு மக்களிடமிருந்தும் வலுவான ஆதரவு கிடைக்கப்பெற்றதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். எனினும், தற்போது அவ்வாறான சூழல் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம், தேவிபுரப் பிரதேசத்தில் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வடக்கின் சுகாதார தேவையானது ஏனைய மாகாணங்களை விட அதிகமானது.

அவற்றை நிவர்த்திசெய்வதற்கு ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது. அத்துடன், மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லையெனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களும், முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களும் அதிகமாக வடக்கில் வாழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அவர்களின் நலன் கருதி பாரிய சுகாதார வேலைத்திட்டங்களை உருவாக்கவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/special/01/130538?ref=home

5 hours ago, போல் said:

தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் வடக்கு மாகாணத்தில் பணியாற்றிய வைத்தியர்களும் சுகாதார ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.

யார் இதைச் சொன்னாலும்,  அது தானே உண்மை!

  • கருத்துக்கள உறவுகள்

அர்ப்பணிப்போ.. ஆயுதத்துக்கு பயந்து பணி செய்தவை என்று தான் சொல்லுவினம். கேட்டுப் பாருங்கோ. இஞ்சையே அப்படிச் சொல்ல நிறையப் பேர் இருக்கினம். 

ஆனால்.. ஒரு விடயம்.. அப்பட்டமான உண்மை.  எம்மவர்களிடம் அர்ப்பணிப்பு தானா வராது.  ஆயுதம் மற்றவர்களிடம் இருந்தாலும் வராது. ஆனால் அதே தேசிய தலைவரின் தலைமையின் கீழ் விடுதலைப்புலிகளிடம் இருந்த படியால் வந்தது.. என்பது தான் முழு யதார்த்தம். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, போல் said:
தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் வடக்கு மாகாணத்தில் பணியாற்றிய வைத்தியர்களும் சுகாதார ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.

அதற்கு மக்களிடமிருந்தும் வலுவான ஆதரவு கிடைக்கப்பெற்றதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். எனினும், தற்போது அவ்வாறான சூழல் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியர்கள் மட்டுமல்ல

எல்லொரமே அர்ப்பணிப்படன் தான் பணியாற்றினர்

மக்களும் அவ்வாறே இருந்தனர்

காரணம் மிக மிக சுலபம்

அவர்களுக்கு முன்னே வழி காட்டிகளாக இருந்தவர்கள்

அர்ப்பணிப்படன்

நீண்டகால தூர நொக்கடன்

மக்களின் அபிலாசைகள் சார்ந்து தியாக சிந்தனையுடன் இருந்தனர்

முன் நடந்தனர்.

இப்போ???????

புலிகள் இல்லை என்று சொல்லிவிட்டு

எல்லோரும் தத்தமது கடமைகளிலிருந்து தவறி வருகின்றனர்

இது யார் தப்பு???

சம்பந்தன் க்கான பட முடிவு 

 

சாதரான அரசியல்வாதிகள் இப்படி நாங்கள் ஏத்தி வைச்சது 

சம்பந்தன் க்கான பட முடிவு கதை இப்படியாகிட்டுது இப்படி அரசியல் தலைமைகளே காணி பறிப்பிலும் இப்படியும் சாதரான ஊழியர்களை பாவம் விடுங்கையா .

 

Edited by TNT

  • தொடங்கியவர்
15 hours ago, Rajesh said:

யார் இதைச் சொன்னாலும்,  அது தானே உண்மை!

உண்மை  தான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.