Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சர் அனுராவுக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தலாம்!

Featured Replies

அமைச்சர் அனுராவுக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தலாம்!

ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட்டால் தன்னை கடத்திச் சென்று மின்கம்பத்தில் தொங்கவிடப்போவதாக அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவரே ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.

தமது தொலைபேசிக்கு மூன்று தடவைகள் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் கொலை மிரட்டல் பாணியில் கதைத்தார் எனவும் மூன்றாவது தடவை குறித்த நபர் தன்னைத் திட்டித் தீர்த்தார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று அமைச்சர் மங்கள சமரவீரவையும் மாத்தறைப் பகுதியில் மின்கம்பத்தில் தொங்கவிடப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் அனுரா கூறினார்.

இதனை ஒரு விளையாட்டாகக் கருதமுடியாது எனத் தெரிவித்த அமைச்சர், இதுகுறித்து அமைச்சர்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் தாம் முறையிட்டுள்ளார் என்றும் சொன்னார்.

-Sudaroli-

இவர்களுக்கே இந்தகதியெனில் தமிழனின்கதி என்ன சர்வதேசம் பதில் சொல்ல வேண்டும் இதற்கு நமது தரப்பில் இருந்து மிகப்பெரிய பரப்புரை தேவை சம்மந்தப்பட்டவர்கள் செய்வார்களா

Mystery over 8 missing persons

Military claims three suspects were trained by LTTE for attacks

The military yesterday claimed the three Sinhalese persons arrested by the Army on Monday night confessed that they had received arms training from the LTTE in Kilinochchi and revealed details of arms hidden at several places in Colombo and suburbs.

Military Spokesman Prasad Samarasinghe told the Daily Mirror last night that these persons had allegedly been tasked to carry out several major missions including assassinations of VIPs and explosions in the Colombo city.

“They had been given a ten-day training in Kilinochchi on explosives a few months ago to carry out the missions in Colombo,” Brigadier Samarasinghe said.

The three suspects had been handed over to the CID for further investigation, he said.

Among the weapons and military equipment recovered are six kilograms of C-4 explosives, four T-56 weapons, 449 T-56 ammunition, two micro pistols and 49 rounds of ammunition, 9 mm pistol, two claymore mines each weighing 1 kilo and 60 electronic detonators.

Meanwhile, the family members of the three suspects and five other persons had lodged complaints that their relatives were abducted by an unknown group on Monday night. However the military claimed these persons were arrested for questioning since it had received evidence of their links to the LTTE.

It is learnt that a group of seven persons claiming to be CID officials had stormed the house of one of the suspects in Athurugiriya and asked him to come with them. When his wife had queried for reasons, she was told that he was needed for questioning.

She had then lodged a complaint with the Athurugiriya police who told her that CID had confirmed they had not taken in anyone by that name for questioning.

The matter had been brought to the notice of President Mahinda Rajapaksa, Defence Secretary Gotabhaya Rajapaksa and IGP Victor Perera on the same night immediately after the alleged abductions.

Referring to the alleged abductions the Free Media Movement issued a statement requesting human and democratic forces to exert pressure on the authorities to look into these abductions immediately and make arrangements to release them unharmed or produced them in a court of law.

Meanwhile condemning the alleged abductions several government unions yesterday launched a protest campaign in front of the Fort Railway Station. Free Media Movement also participated.

http://www.dailymirror.lk/2007/02/07/front/2.asp

ஆக மகிந்த தலையிடாவிட்டால் காணாமற் போனவர்கள் காணாமற் போனவர்களே! அல்லது அனாதை பிணங்களாக வாவியிலும் வீதியோரங்களிலும் கண்டெடுக்கப்படுவார்கள்.

சிங்களவருக்கே இந்தக் கதியெண்டால் தமிழர் எம்மாத்திரம்?

தமிழர் காணமற்போன போது நாய்கள் காணமற்போனது போன்று கண்டும் காணாது இருந்த சுதந்திர ஊடகவியளாளர் சங்கம் இப்போது வீதியிலிறங்கியிருப்பது கேவலமானது.

FMM என்பதை SMM என்று அதாவது Sinhala Media Movement என்று மாற்றிக்கொள்வதே தகுந்தது.

மூன்று ஊடகவியலாளர்களும் புலிகளிடம் பயிற்சி

பெற்றவர்களாம். அனுராவும் அப்படியாகத்தான்

இருக்கவேண்டும். கொலை செய்துவிட்டுப் பின்

வீடியோ படம் காட்டி புலிகள்தான் செய்ததாகச்

சொல்வார்கள் .

ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட்டால் தன்னை கடத்திச் சென்று மின்கம்பத்தில் தொங்கவிடப்போவதாக அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவரே ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.

எனக்கென்ன பயமெண்டால் இந்தாளை தொங்க விடக்கூடிய பலமான மின்கம்பங்கள் எங்கையிருக்கெண்டு சிலவேளை லக்ஸபாணாவிலை றைபண்ணலாம்

இல்லை அவருக்கே ஏக்கர் கணக்கில் தோட்டம் கிடக்கு. ஒரு தென்னையில் கட்டி விடலாம்

எனக்கென்ன பயமெண்டால் இந்தாளை தொங்க விடக்கூடிய பலமான மின்கம்பங்கள் எங்கையிருக்கெண்டு சிலவேளை லக்ஸபாணாவிலை றைபண்ணலாம்

அநுராவுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் உடனடி விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

ஜ08 - குநடிசரயசல - 2007ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ

அமைச்சர் அநுரா பண்டாரநாயக்காவுக்கு விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கொலை மிரட்டல் குறித்து உடனடி விசாரணைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்துஇ பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவின் பணிப்பின் பேரில் இரு பொலிஸ் குழுக்கள் நேற்று புதன்கிழமை விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை தனக்கு தொலைபேசி மூலம் பல தடவைகள் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அநுரா பண்டாரநாயக்கா தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக தானும் அமைச்சர் மங்கள சமரவீரவும் சென்றால் தங்களை கொன்று சடலங்களை மின்கம்பங்களில் தொங்க விடப் போவதாக அந்த அநாமதேய தொலைபேசி அழைப்புகள் மூலம் தான் மிரட்டப்பட்டதாகவும் அநுரா தெரிவித்திருந்தார்.

இதையடுத்துஇ இந்தக் கொலை மிரட்டல் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதி நேற்று பணித்திருந்தார்.

இதற்கமைய இரு பொலிஸ் குழுக்கள் நேற்றுக் காலை முதல் இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத் லூகொட தலைமையில் ஒரு குழுவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் (சி.ஐ.டி) ஒரு குழுவும் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.?

தினக்குரல்

தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளலோ தெரியல

ஜனாதிபதியை சுற்றி இருப்பவர்ளே எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தனர்.

- பண்டார வன்னியன் வுhரசளனயலஇ 08 குநடிசரயசல 2007 14:59

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சுற்றி இருப்பவர்களே தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக தேசிய பாரம்பரிய அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை முன்வைத்து சிறப்புரிமை தொடர்பாக உரையாற்றிய அமைச்சர், நேற்றுமுன்தினம் தன்னைத் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்ட இனந்தெரியாத நபர் தனக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்தாகக் குறிப்பிட்டார். கொலை அச்சுறுத்தல் விடுத்தவர் நிச்சயமாக விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவராக இருக்க முடியாதெனக் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி மஹிந்தவைச் சுற்றியிருப்பவர்களே இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் ஒருபோதும் முன்னெச்சரிக்கை விடுத்துவிட்டுப் படுகொலை செய்வதில்லை. இது நிச்சயமாக மஹிந்தவைச் சுற்றியுள்ளவர்களின் வேலையே. நேற்றுமுன்தினம் நான் வீட்டில் இருக்கும்போது, நாடாளுமன்றத்திலிருந்து தொடர்புகொள்வதாகக் கூறி 9.00 மணியளவில் தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்ட நபர்;, ஜனாதிபதிக்கு எதிராகவோ அல்லது அரசாங்கத்துக்கு எதிராகவோ செயற்பட வேண்டாமென எச்சரித்தார்.

அநாகரீகமான முறையில் பேசிய அவர், ஜனாதிபதிக்கு எதிராகச் செயற்பட்டால் என்னையும், மங்கள சமரவீரவையும் கொலைசெய்து என்னை அத்தனகலவிலும், மங்களவை மாத்தறையிலும் கட்டித் தூக்கப்போவதாக மிரட்டினார். எனினும், இந்த மிரட்டலுக்கு நான் பயப்படாமல் பதில் கொடுத்தேன். நான்கு ஐந்து தடவைகள் இவ்வாறான தொலைபேசி அழைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. நான் அத்தனகல்லவுக்குச் சென்றிருந்தபோதும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததது. அதனைத் தொடர்ந்தே நான் பொலிஸில் முறைப்பாடு செய்தேன்.

நான் 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பல ஜனாதிபதிகளின் ஆட்சியின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். அவர்களையும் நான் விமர்சித்திருந்தேன். அப்படியாயின் முன்னாள் பிரதமர் பிரேமதாசவின் ஆட்சிக்காலத்திலேயே நான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். எனினும், ஜனநாயக ரீதியாக நான் செயற்பட்டு வந்ததால் எனக்கு எதுவும் நடக்கவில்லை. ஆனால் மஹிந்தவின் ஆட்சியில் எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு நானும், மங்கள சமரவீரவும் இணைந்து செயற்பட்டிருந்தோம். அத்தனகல்லவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை நான் பெற்றுக்கொடுத்திருந்ததுடன், மங்கள சமரவீர மாத்தறையில் 17ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொடுத்திருந்தார். ஜே.வி.பி.ஜாதிக ஹெல உறுமய இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாது. எதிர்க்கட்சி ஜனநாயக ரீதியாகச் செயற்பட்டு வருவதால் அக்கட்சியின் தலைவரோ அல்லது கட்சியின் உறுப்பினர்களோ இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட மாட்டார்கள்.

இது நிச்சயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சுற்றியிருப்பவர்களின் வேலைதான். எனது தந்தை இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக உயிரை நீத்தார், தாய் குடியுரிமை இழந்தார், எனது சகோதரி கண்ணை இழந்தார். தற்பொழுது எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

பல்வேறு சிறப்புரிமை மீறல் சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன. இவை நிச்சயமாக தீர்க்கப்படுவதில்லை. எனினும், தனக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் குறித்து நாடாளுமன்றம் கவனம் செலுத்த வேண்டும் என அவர்மேலும் தெரிவித்துள்ளார்.

சங்கதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.