Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பைரவா விமர்சனம்

Featured Replies

பைரவா விமர்சனம்


நடிகர்கள்: விஜய், கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சதீஷ், டேனியல் பாலாஜி

ஒளிப்பதிவு: சுகுமார்

இசை: சந்தோஷ் நாராயணன்

தயாரிப்பு: விஜயா புரொடக்ஷன்ஸ்

இயக்கம்: பரதன்

எந்த விஜய் படத்துக்கும் இல்லாத அளவுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இந்த பைரவாவுக்கு இருந்தது ரசிகர்களிடம். காரணம் தன்னை வைத்து படம் இயக்கி தோற்ற ஒரு இயக்குநருக்கு மீண்டும் விஜய் வாய்ப்புக் கொடுத்தது. அந்த வாய்ப்பை பரதன் எப்படி பயன்படுத்தியிருக்கிறார்?

 

வாங்க பார்க்கலாம்...

ஒய் ஜி மகேந்திரன் மேலாளராக இருக்கும் வங்கியில் கடன் வசூலிக்கும் வேலைப் பார்ப்பவர் விஜய். ஒய்ஜி சிபாரிசில் ரூ 64 லட்சத்தை கடனாக அந்த வங்கியில் பெறும் மைம் கோபி, அதைத் திருப்பித் தராமல் ஏமாற்றுகிறார்.

இதனால் ஒய்ஜி மகள் திருமணம் நிற்கும் நெருக்கடி. பெரும் சிக்கலுக்குள்ளாகும் ஒய்ஜி, அந்தக் கடனை வசூலிக்க விஜய்யை அனுப்புகிறார். வசூல் மன்னன் விஜய்யும் அந்தப் பணத்தை மீட்டுக் கொடுக்கிறார். ஒய்ஜி மகள் திருமணம் நடக்கிறது.

Bairava Review

அந்தத் திருமணத்துக்கு, திருநெல்வேலியிருந்து பெண்ணின் தோழியாக வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷைப் பார்த்ததுமே அவள் மீது காதல் விஜய்க்கு காதல் வந்துவிடுகிறது.

கீர்த்தி சுரேஷிடம் காதலைச் சொல்ல விஜய் முற்படும் நேரத்தில், ஒரு கொலைகார கும்பல் கீர்த்தியை கொல்லப் பார்க்கிறது. இதையெல்லாம் கவனிக்கும் விஜய், அந்த கொல்லை கும்பல் பற்றி கீர்த்தியிடமே கேட்கிறார்.

அங்கே ஒரு ஃப்ளாஷ்பேக்.

திருநெல்வேலியில் மருத்துவக் கல்லூரி மாணவி கீர்த்தி. கல்லூரியின் முதல்வர் ஜெகபதி பாபு, கீர்த்தியின் தோழியை கொன்றுவிடுகிறார். ஆனால் பழியை கீர்த்தி மீது சுமத்த, ஜெகபதி பாபுவுக்கு எதிராக வழக்குப் போடுகிறார் கீர்த்தி. இதனால் கீர்த்தியையும் அவர் குடும்பத்தையும் தொடர்ந்து மிரட்டி வருகிறார் ஜெகபதி.

Bairava Review


உடனே திருநெல்வேலிக்குப் போய் கீர்த்திக்காக ஜெகபதி பாபுவை எதிர்க்கிறார். அப்புறம் என்ன ஆகியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?

மருத்துவப் படிப்பு நாட்டுக்கு மிக முக்கியமானது. அந்தப் படிப்பை வைத்துக் கொண்டு தனியார் கல்வி முதலாளிகள் எப்படியெல்லாம் ஆட்டம் போடுகிறார்கள் என்பதைச் சொல்ல முயற்சித்திருக்கிறார் பரதன். ஆனால் சொன்ன விதம்தான் எடுபடவில்லை. ஜென்டில்மேன் ரேஞ்சுக்கு வந்திருக்க வேண்டிய படம். ஆனால் தன் ஸ்க்ரிப்டை தானே சொதப்பியிருக்கிறார் இயக்குநர்.

Bairava Review

 

படத்தின் ஹீரோ விஜய் செம்மையாக சண்டை போடுகிறார். சண்டைக் காட்சிகளில் அவரை ரொம்பவே ரசிக்க முடிகிறது. பாட்டும் டான்சும் விஜய் படங்களின் ஸ்பெஷல். சந்தோஷ் நாராயணன் அதைக் கெடுத்திருப்பதால், இந்தப் படத்தில் விஜய்யின் சண்டைக் காட்சி மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதல். மாடுலேஷன் என்ற பெயரில் வசனங்களை இழுத்து இழுத்து பேசுகிறார். இது நன்றாக இருக்கிறது என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் அந்த இம்சையை படத்துக்குப் படம் தொடர்கிறார். தாங்க முடியலீங்ணா! விஜய் இயல்பாக, தன் ஸ்டைலில் பேசினாலே நன்றாக இருக்கும். கில்லி, போக்கிரி, துப்பாக்கியில் அந்த விஜய்யைத்தானே ரசித்தார்கள்?

விஜய்க்கும் கீர்த்தி சுரேஷுக்கும் ஜோடிப் பொருத்தம் நன்றாகத்தான் உள்ளது. கீர்த்தியின் இளமை, அழகு, சின்னச் சின்ன மேனரிசங்கள் ரசிக்க வைக்கின்றன.

Bairava Review

 

ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி இருவரும் வில்லன்கள். இருவரின் வில்லத்தனத்திலும் அத்தனை செயற்கை. சதீஷ் காமெடி ஓரிரு இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறது. தம்பி ராமையா வீணடிக்கப்பட்டுள்ளார்.

ஒய்ஜி மகேந்திரன் பாத்திரம் அபத்தம். இப்படியா ஒரு வங்கி மேனேஜர் கடனை வசூலிக்கப் போவார்?

படத்தின் முதல் பாதியில் அட்டகாசமாக அறிமுகமாகும் விஜய், ஒரு கால் மணி நேரம்தான் வருகிறார். ப்ளாஷ்பேக் என்ற பெயரில் ஜவ்வாய் இழுக்கிறார்கள். ஒரு அளவுக்கு மேல் போனால் சண்டைக் காட்சியெல்லாம் ரசிகனுக்கு எத்தனை நரகம் என்பதை இந்தப் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

சுகுமாரின் ஒளிப்பதிவு டாப் க்ளாஸ். ஆனால் சந்தோஷ் நாராயணன்... ம்ஹூம். விஜய் போன்ற மாஸ் ஹீரோக்கள் படங்களுக்கு இசையமைப்பது தனி கலை. அதில் தேற சந்தோஷ் நாராயணன் இன்னும் மெனக்கெட வேண்டும். வர்லாம் வர்லாம்... மட்டும் பரவாயில்லை.

Bairava Review

மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பை கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர் பரதன். இந்த ஸ்கிரிப்டை விஜய் கேட்காமலேயே ஒப்புக் கொண்டாரா அல்லது தெரிந்தேதான் இந்தப் படத்தைச் செய்தாரா என்பது விஜய் அபிமானிகளுக்கே கூட புரியாத புதிர்!
Read more at: http://tamil.filmibeat.com/reviews/bairava-review-044234.html

  • தொடங்கியவர்

இணையத்தில் வெளியான 'பைரவா': படக்குழுவினர் அதிர்ச்சி

 

 
18CP_Trade-Wind_GH_3117204f.jpg
 
 
 

பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 'பைரவா', முதல் நாளே இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பைரவா'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியாயுள்ள இப்படத்தை விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்ரீக்ரீன் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மேலும், படத்தின் முதல் நாள் வசூல் தமிழகத்தின் முந்தைய விஜய் படங்களின் சாதனையை முறியடிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், 'பைரவா' வெளியான முதல் நாளே இணையத்தில் முழுப்படமும் வெளியானது. 3GP, Mp4, Single Print என பல்வேறு வடிவங்களில் வெளியாகியிருப்பதைப் பார்த்து படக்குழுவினர் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். மேலும், இவற்றை நீக்குவதற்காக படக்குழுவினர் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/இணையத்தில்-வெளியான-பைரவா-படக்குழுவினர்-அதிர்ச்சி/article9477689.ece?homepage=true

  • தொடங்கியவர்

விஜய்-யின் பைரவா: சினிமா விமரிசனம்

 

 
bairavaa1

 

ஒரு வழக்கமான வெகுஜன மசாலா திரைப்படம் இது. விஜய் போன்ற மக்கள் திரளின் பெரும் அபிமானம் பெற்ற நடிகர்கள், தங்களின் பாதுகாப்பான பாதையிலிருந்து விலகவே விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கும் இன்னொரு சலிப்பான படைப்பு. சமகால சமூகப் பிரச்னைகளை ஊறுகாயாகத் தொட்டுக்கொண்டு அதன்மூலம் தன்னை அவதார நாயகனாக முன்நிறுத்திக் கொள்ளும் எம்.ஜி.ஆர் காலத்து ஃபார்முலாவை 'பைரவா'வும் சலிக்க சலிக்கப் பின்பற்றியிருக்கிறது. 'கத்தி' திரைப்படத்தில் விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றி பேசுவதாக அமைந்த பாவனை, இத்திரைப்படத்தில், ரவுடிகளாக இருந்தவர்கள் கல்வித் தந்தைகளாக மாறியிருக்கிற ஆபத்தைப் பற்றியதாக மாறியிருக்கிறது. அவ்வளவே. மற்றபடி வெகுஜன திரைப்படத்தின் அதே வழக்கமான விஷயங்கள். 

***

நாயகன் (விஜய்) சென்னையில் கலெக்ஷன் ஏஜெண்ட்டாகப் பணிபுரிபவன். பெரும் நிதியைக் கடனாக வாங்கிவிட்டு பிறகு வங்கி அதிகாரியை மிரட்டி ஏமாற்ற முயலும் ரவுடிக்கும்பலை அடித்து உதைத்து பணத்தை மீட்கும் சாகசங்களோடு படம் தொடங்குகிறது. அதிகாரியின் மகளுடைய திருமணத்துக்குச் செல்லும்போது நாயகியிடம் (கீர்த்தி சுரேஷ்) வழக்கம்போல் முதல் சந்திப்பிலேயே காதலில் விழுகிறான். அவளுக்குப் பின்னால் சில ஆபத்துகள் ஒளிந்திருப்பதை அறிகிறான். என்னவென்று விசாரிக்கிறான். நாயகி படிக்கும் மருத்துவக் கல்லூரி தொடர்பான மோசடிகளை அறிகிறான். கசாப்புக் கடை வைத்திருந்த ரவுடியொருவன் தனது பலத்தின் மூலமும் அரசியல் தொடர்பின் மூலமும் கட்டியிருக்கும் வணிக சாம்ராஜ்யத்தை நாயகன் வீழ்த்தும் காட்சிகளோடு படம் நிறைகிறது. முதல் பாதி சென்னையிலும் பிற்பாதி நெல்லையிலும் நிகழுமாறு காட்சிகள் அமைகின்றன.  

வெகுஜன மனநிலைக்கு இணக்கமான ஒரு திரைப்படத்தை உருவாக்குவது அத்தனை சுலபமான விஷயமில்லை. எந்த அடுக்கில் காட்சிகளை எப்படி அடுக்கினால் அவர்கள் ரசிப்பார்கள் என்பது தொடர்பான நுணுக்கங்கள் அத்துப்படியாக தெரிந்திருக்கவேண்டும். இயக்குநர் பரதனுக்கு இதில் அடிப்படையான திறமை வாய்த்திருக்கிறது. 'பைரவா'விலும் அப்படி ரசிக்கக்கூடிய சில காட்சிகள் இருக்கின்றன. இந்தக் கதை சொல்லும் திறமையை வைத்துக்கொண்டு ஒரு புதிய களத்தில், பாணியில் இறங்கி விளையாடினால் பார்வையாளர்கள் நிச்சயம் வரவேற்பார்கள். ஆனால் தேய்வழக்கான திரைக்கதை, காட்சிகளின் மிகையான வடிவமைப்பு போன்றவை சலிப்பூட்டுகின்றன.  


***

விஜய்க்கு 42 வயதாகிறது. ஆனால் இன்னமும் தன்  இளமையைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் என்பது ஆச்சர்யம். ஒரு காட்சியில் தன் சட்டையைக் கழற்றி விட்டு ஓடுகிறார். அவர் தன் உடலை கச்சிதமாக வைத்துக் கொண்டிருக்கும் விதம் பாராட்ட வைக்கிறது. ஆனால் இளமை மாறாதிருப்பதைப் போலவே அவருடைய நடிப்பிலும் பல வருடங்களாக மாற்றமில்லை என்பதுதான் அதிகம் சோர்வூட்டக்கூடியது. 'பைரவா'வில் அவருடைய தலையில் 'விக்' சேர்ந்திருப்பதுதான் கவனிக்கத்தக்க மாற்றம். 

கீர்த்தி சுரேஷ் வழக்கமான நாயகி. சில கோணங்களில் அழகாகவே இருக்கிறார். ஜெகபதி பாபு வழக்கமான வில்லன். துணை வில்லனான டேனியல் பாலாஜி சிறிது வித்தியாசம் காட்ட முயன்றிருக்கிறார். ஆனால் பாவம், அவரும்தான் என்ன செய்யமுடியும்? 

Laughing gas துணை கொண்டு பாத்திரங்களைச் சிரிக்க வைப்பது போல சில காட்சிகள் வருகின்றன. சதீஷூம் தம்பி ராமையாவும் அவ்வாறே நம்மைச் செயற்கையாக சிரிக்க வைக்க முயல்கிறார்கள். ஒன்றும் தேறவில்லை. விஜயராகவன் போன்ற அற்புதமான மலையாள நடிகர்கள் எல்லாம் ஓரமாக வந்து வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். 

***

இதன் உருவாக்கத்தில் குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியவர்களாக ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரையும் சண்டைக்காட்சி வடிவமைப்பாளர் அனல் அரசுவையும் சொல்ல வேண்டும்.  இவர்களின் கூட்டணி ஒத்திசைவில் சண்டைக்காட்சிகள் மிகையாக இருந்தாலும் அனல் தெறிக்கிறது. ஆனால் இவர்கள் போன்றவர்களின் அசாதாரணமான உழைப்பு மோசமான திரைக்கதைகளுக்காக வீணாகிக்கொண்டிருக்கும் பரிதாபமும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிகழ்கிறது. 

தாம் நிரம்பும் பாத்திரத்துக்கேற்ப நீர் தன்னை உருமாற்றிக் கொள்வதற்கேற்ப, சந்தோஷ் நாராயணன் போன்ற புதுமையான இசையமைப்பாளர்களும் வணிகப்படங்களுக்கேற்ப மாற வேண்டிய பரிதாபம். 'நில்லாயோ' பாடல் மட்டும் அருமை. 'காற்றின் உடலா, பெண்பால் வெயிலோ' என்று வசீகரிக்க முயன்றிருக்கிறார் வைரமுத்து. இதர பாடல்கள் சப்தங்களின் தொகுப்பு. 'வர்லாம் வா' பாடலும் அதன் இசையும் அவசியமான இடங்களில் படத்தின் விறுவிறுப்புக்கு நன்றாக உதவியிருக்கிறது. ஒரு சண்டைக்காட்சியில் வழக்கமான பின்னணி இசையாக அல்லாமல் மாறுதலான இசையை சந்தோஷ் முயன்றிருப்பது வரவேற்கத்தக்கது.

விறுவிறுப்பான காட்சியோடு தொடங்கும் திரைப்படம், கீர்த்தி சுரேஷ் தன் ஃபிளாஷ்பேக்கை விவரிக்கும் நீளமான பின்னணிக் காட்சிகளால் சுவாரசியத்தை இழந்துவிடுகிறது. பிறகு நாயகன் வில்லனை வெற்றி கொள்ளும் காட்சிகள். அத்தனை பலம் பொருந்திய வில்லனை ஒற்றை ஆளாக நாயகன் எதிர்கொள்வது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. எதிலுமே புதுமையோ, வித்தியாசமோ இல்லை. நாயகனின் உடலில் எரிபொருளை வீசி தீப்பற்ற வைக்கும் காட்சி சற்று ஆர்வத்தை தூண்டி, பிறகு எதுவுமே இல்லாமல் அணைந்து போகிறது. போலவே இதன் கிளைமாக்ஸ். இப்படியொரு உச்சக்காட்சியை சிந்திப்பதற்கெல்லாம் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் மூளையமைப்பும் துணிச்சலும் வேண்டும். திருநெல்வேலியில் காவல்துறை அதிகாரியாக இருக்கும் நாயகியின் தந்தையே அங்குள்ள கல்லூரி  மோசடிகளை அறியாத அப்பாவியாக இருக்கிறார் என்பது போன்று பல தர்க்கப் பிசிறுகள். 

சமூகப் பிரச்னைகளைத் தங்களின் வணிகத்துக்காகத் தந்திரமாகப் பயன்படுத்தும் இதுபோன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் ஆகப் பெரிய சோகங்களுள் ஒன்று.

http://www.dinamani.com/cinema/movie-reviews/2017/jan/13/விஜய்-யின்-பைரவா-சினிமா-விமரிசனம்-2632230.html

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

 

:D:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.