Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இந்தியாவிற்கு சிறிலங்கா அரசு சொல்லும் செய்திகளும், தமிழீழ விடுதலைப் புலிகள் சொல்லும் செய்திகளும்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-சபேசன் (அவுஸ்திரேலியா)-

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, ஐந்து ஆண்டுகள் முழுமையடையப் போகின்ற இக்காலகட்டத்தில் சிறிலங்கா அரசு வெளிப்படையான, வலிந்த போர் ஒன்றை தமிழ் மக்கள் மீது மேற்கொண்டு வருகின்றது.

சிறிலங்காவின் தற்போதைய அரச அதிபர் மகிந்த ராஜபக்ச போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விடயங்களை முறையாக நடைமுறைப்படுத்தாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றிற்கு எதிரான செயற்பாடுகளைத்தான் முடுக்கி விட்டு வருகிறார்.

மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் அரச அதிபராகப் பதவியேற்ற பின்பு நடைபெற்ற ஜெனிவா பேச்சுவார்த்தைகளில் ஏற்;றுக் கொள்ளப்பட்ட விடயங்களை கூட அவர் நடைமுறைப்படுத்த முன்வரவில்லை. சிறிலங்கா அரசின் அராஜக போக்குகள் மேலும் தொடர்ந்தும் பெருகி வருவதைத்தான் நிலைமைகள் சட்டிக்காட்டுகின்றன.

'இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு உகந்தது அல்ல" - என்று அனைத்துலக நாடுகள் தொடர்ந்தும் கூறி வருகின்ற போதிலும் மகிந்தவின் அரசு அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை. ஜெனிவாப் பேச்சு வார்த்தைகளின் போது ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களை களைவதற்கு சிறிலங்கா அரசு இணங்கியது. ஆனால் அவ்வாறு நடைபெறாதது மட்டுமல்ல, ஒட்டுக்குழுக்கள் புதிய அலுவலகங்களை கொழும்புஇ மட்டக்களப்புஇ அம்பாறை, திருகோணமலை போன்ற பகுதிகளில் அமைப்பதற்கும் சிறிலங்கா அரசு உதவிகளை செய்தது. தமிழ்ப் பகுதிகளுக்கான பிரதான நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. தமிழ் மக்கள் மீது பொருளாதார, உணவு, மருந்துத் தடைகள் விதிக்கப்பட்டன. பொதுமக்கள் மீதான வன்முறைகள், படுகொலைகள், கட்டாய ஆட்கடத்தல்கள் என்பன முடுக்கி விடப்பட்டுள்ளன. மாவிலாறு-சம்பூர்-வாகரை என்று தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்ப்பொதுமக்கள் மீது வான் தாக்குதல்களும், எறிகணைத் தாக்குதல்களும் நடாத்தப்பட்டு வருகின்றன.

'இப்படிப்பட்ட மிகக் கடுமையான சூழ்நிலையில் அனைத்துலக நாடுகள், வெறும் அசைவற்ற நிலையில், எந்தவிதமான உணர்வையும் வெளிப்படையாக தெரிவிக்காத போக்கில் இருப்பதனால், சிறிலங்கா அரசு, தனது வன்முறை அரசியலையும், இராணுவத் தீர்வையும் தொடர்ந்து முன்னெடுக்கிறது" - என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு சு.ப.தமிழ்;ச்செல்வன் தெரிவித்துள்ளார். 'இதனால் அனைத்துலகத்தின் நிலைப்பாடு தொடர்பாக தமிழ் மக்களின் சந்தேகம் அதிகரித்து செல்கிறது. இலங்கைப் பிரச்சனை தொடர்பில் இரண்டு தரப்பினர்கள் மீதும் அனைத்துலகம்; கொண்டுள்ள அணுகுமுறை தொடர்பாகக் கடும் சந்தேகமும் தமிழ் மக்களிடம் காணப்படுகி;ன்றது" - என்றும் திரு.சு.ப.தமிழ்;ச்செல்வன் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

அனைத்துலக நாடுகள் இவ்வாறான அசைவற்ற நிலையில் இருக்கும் வேளையில், தற்போது 'அசைவதாக" தெரிகின்ற இந்தியாவிற்குஇ சிறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது அமைச்சர்களும், அதிகாரிகளும் விஜயங்களை மேற்கொண்டு வருவதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. இவை குறித்து கருத்து வெளியிட்ட திரு சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் 'மகிந்த ராஜபக்ச தன்னுடைய சிங்கள-பௌத்த பேரினவாதச் சிந்தனையையும், தான் நடத்திவருகின்ற தமிழினப் படுகொலைகளையும் மறைத்து நாடகம் ஆடும் பொருட்டும், தமிழீழ மக்களுக்கும், இந்தியாவுக்கும் இடையே உள்ள உறவுக்கு ஆப்பு வைப்பதற்காகவும்இ தமிழ் நாட்டு மக்களினால் எழுந்துள்;ள அழுத்தங்களைத் தணிப்பதற்காகவுமஇ; இந்திய விஜயங்களை மேற்கொள்ளுகின்றார்" என்று நிலைமையை தெளிவாக கூறியுள்ளார்.

அத்தோடு திரு சு.ப.தமிழ்;ச்செல்வன் மிக முக்;கியமான கருத்துக்களையும் நியாயமான எதிர்பார்ப்புக்களையும் வெளிப்படுத்;தியுள்ளார். 'இலங்கைப் பிரச்சனை குறித்து தமிழக முதல்வர் கருணாநிதிஇ இந்திய மத்திய அரசிடம் விடுத்துள்ள கோரிக்கைகள் தமிழ் நாட்டு மக்களின் மனநிலையை பிரதிபலிப்பவையாகும். உண்மையான கள நிலரவரத்தைஇ இந்திய மத்திய அரசு இப்போது புரிந்து கொண்டிருக்க கூடுமாகையால் இந்திய அரசு சிறிலங்கா குறித்து உறுதியான முடிவுகளை இனி எடுக்க வேண்டும். இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு. இந்தியாவில் வாழுகின்ற கோடிக்கணக்கான தமிழ் மக்கள் எமது சகோதர இனத்தவர்கள். ஆகையால் தமிழ் மக்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் வேட்கைகளையும் இந்திய அரசு புரிந்து கொண்டு எமக்கு நீதியான ஆதரவை தரவேண்டும். இந்தியா சிறிலங்காவிற்கு அளித்து வருகின்ற நிதியுதவிகளை நிறுத்தி சிறிலங்கா அரசை ஓர் ஒழுங்குக்கு கொண்டு வரவேண்டும். அத்தோடு மட்டுமல்லாது மற்றைய சர்வதேச நாடுகளும் இவ்வாறு செய்;ய வேண்டும் என்று சர்வதேச நாடுகளுக்கு இந்தியா வேண்டுகோள் விடுக்க வேண்டும்"- என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் திரு சு.ப.தமிழ்;ச்செல்வன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மிக முக்கியமான கால கட்டத்தில், மிக முக்கியமான கருத்துக்களையும், எதிர்பார்ப்புகளையும், வேண்டுகோளையும் திரு.சு.ப.தமிழ்;ச்செல்வன் வெளியிட்டுள்ளார். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில அடிப்படையான விடயங்களைச் சுட்டிகாட்டி தர்க்;கிப்பது பொருத்தமானதாக அமையக் கூடும்.

இந்தியாவின் பூகோள நலன்இ ஈழத்தமிழர்களோடு இணைந்த ஒன்றாகும். இது வரலாற்று ரீதியான உண்மையாகும். அடிப்படையில் சிங்கள தேச மக்கள் இந்தியாவின் நலனுக்கு எதிரான எண்ணங்களைக் கொண்டிருக்கையில் தமிழீழ மக்கள் இந்திய தேசத்தின் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருந்து வந்துள்ளார்கள். தவிரவும், சிறிலங்கா அரசுகளின் இந்திய விரோத மனப்பான்மை என்பதானது ஒரு வெளிப்படையான விடயமாகும். வரலாற்றைத் திரும்பி பார்த்தால் சில விடயங்களை சுட்டிக்காட்ட முடியும். இந்திய - சீன யுத்தத்தின் போதும,; இந்தியா - பாகிஸ்தான் யுத்தத்தின் போதும் சிறிலங்கா அரசுகள் இந்தியாவின் நலனுக்கு எதிரான கோட்பாட்டையும், செயற்பாடுகளையும் கொண்டிருந்தன.

இந்தியா-சீனா யுத்தத்தின் போது இலங்கைத்தமிழ் மக்கள் இந்திய அரசுக்கு அனுப்புவதாக நிதி சேகரிப்பை நடாத்திஇ சேகரித்த நிதியைஇ இலங்கைக்கான இந்தியத் தூதுவரிடம் கையளித்தார்கள். ஆனால் அந்த நிதியை இந்தியாவிற்கு அனுப்ப விடாமல் சிறிலங்கா அரசு தடை செய்து விட்டது. ஓரு காலகட்டத்தில் இந்திய திரைப்படங்கள், சஞ்சிகைகள் போன்றவற்றின் இறக்குமதியையும், வணிகப்பொருட்களின் இறக்குமதியையும் சிறிலங்கா அரசு மட்டுப்படுத்தியிருந்ததையும

ஆம் காலியில் இருப்பது சீனாவின் அரச ஆயுத தளபாட நிறுவனமான நொறிகோ வின் களஞ்சியம் தான். ஆனால் அந்த government to government bonded warehouse, 2002 போர்நிறுத்த உடன்படிக்கைக்கு முதலே இருக்குது என்பது பரகசியம். அதாவது குறுகிய கால அவகாசத்தில் ஆயுத தளபாடங்கள், முக்கியமாக ammunitions (குண்டுகள் எறிகணைகள்) என்பவற்றை தேவையான பணத்தை செலுத்தியோ அல்லது அதுபற்றி ஒரு உடன்பாடு எட்டியவுடன் சீனாவில் இருந்து வரும் வரை காத்திருக்காது உடனே எடுத்து பாவிக்க வசதியாக போர்க்களத்தில் இருந்து நியாயமான தூரத்தில் சீனா தனது விற்பனப்பனைப் பண்டத்தை களஞ்சியப்படுத்தி வைக்க உருவாக்கப்பட்டது. அதாவது அவை சிறீலங்காவில் இருந்தாலும் சீனாவின் சொத்துக்கள் சீனாவில் அனுமதியில்லாது பாவிக்க முடியாது.

காலித்துறைமுகத் தாக்குதலில் களஞ்சியம் பாதிக்கப்பட்டதா இல்லையா என்று சம்பவம் நடந்த அன்றே சந்தேகங்கள் கிளப்பப்பட்டது. ஆனால் secondary explosions என்று நிலமை நீடிக்காததால் களஞ்சியத்திற்கு உண்மையான பாதிப்பு வரவில்லை என அன்றே தெரிந்து விட்டது.

ஆனால் சீனா இந்த ஆயுதங்களை இலங்கையில் வைத்தே பாவிக்கலாம் தானே?

அதுக்கு ஒரு சின்ன ஒப்பந்தம் எழுதினால் கானும் தானே?

இந்தியாவால் இதை கருணா குழுவை வைத்து சமாளிக்க முடியுமா? :P :P :P

இல்லை தனது நாட்டில் ஒரு ஆட்டோ தொழில் செய்து வாழ்ந்த ஒருவனை கொலை செய்த டக்கிளஸை வைச்சு தீர்க்களாமா?

எதிரிக்கு எதிரி நண்பன்.

இது வரையில் இந்தியா தமிழருக்கா அல்லது சிங்களவருக்கா நண்பன்.

இந்தியா ஒரு வலுவுள்ள அண்டை நாடு அவ்வளவுதான். ஆனால் அது

தனது நலனுக்காகவேனும் எங்களை இது வரையிலும் ஏற்றுக் கொள்ளத்

தயாரில்லை. தனது நலனை மேம்படுத்த இந்தியா நினைத்தால் சிங்கள

அரசுடன் சேர்ந்து எமது போராட்டத்தை நசுக்க முயலலாம். அதற்குத்

தமிழ்நாட்டின் அழுத்தம் எதுவும் செய்துவிடப் போவதில்லை. இந்தியா

விற்கு எதிரான ஏதோ ஒரு சக்தி எமது போராட்டத்தினை அங்கீகரித்தால்

நாம் வேண்டாமென்று சொல்லிவிடப் போகின்றோமா? முடிந்தவரை அண்டை

நாடுகளுடன் நல்லுறவை வளர்ப்பதற்குக் கோரிக்கைகளைத்தான் விடுக்க

முடியும். அதைவிடுத்துக் காலில் விழவா முடியும். தமிழ்ச்செல்வனின்

செயலும் ஒரு கோரிக்கைதான். அதை இந்தியா ஏற்றுக் கொள்ளாது

என்பது தெளிவு. களத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களின் முடிவுதான்

அயல் நாடுகளில்மட்டுமல்ல உலகின் பிற நாடுகளிலும் மாற்றத்தை

ஏற்படுத்தும். இந்தியா எம்மை ஆதரித்து இப்போதுள்ள நிலையில்

குரல் கொடுக்கப் போவதில்லை. இந்தியா வலுமிக்க ஒரு அண்டை நாடு

அவ்வளவே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.