Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் போராட்டம்! நல்லூரில் அணிதிரள அழைப்பு!

Featured Replies

தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கக்கோரி தமிழகம் எங்கும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் அலங்கா நல்லூரில் இரவிரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மாணவர்களை இன்று காலை பொலிஸார் கைது செய்தனர்.

இதனால் தமிழகம் எங்கும் மாணவர்கள், இளைஞர்கள் கொதித்தெழுந்தனர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

சென்னையில் பெரும் போராட்டம் முற்றியது. மாணவர்களை விடுதலை செய். பீட்டாவை தடை செய். எங்கள் கலாச்சாரத்தை அழிக்காதே.

தமிழ் நாடு தனிநாடாகும் போன்ற கோசங்களை எழுப்பி மாணவர்கள் இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த நிலையில் தமிழக இளைஞர்களுக்கு ஆதரவாக நாங்களும் இருக்கிறோம் என்று கூறி யாழ் இளைஞர்கள் தன்னெழுச்சியான போராட்டம் ஒன்றிற்கு சமூக வலைத்தளங்களினூடாக அழைப்பு விடுத்துள்ளனர்.

''தமிழ் மரபினை காக்கப் போராடும் தமிழக உறவுகளுக்காக யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் கவனயீர்ப்பு'' என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை மாலை நான்கு மணிக்கு யாழ். நல்லூரில் அனைவரையும் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தன்னெழுச்சியாக கூடியிருக்கும் இவ்வேளையில், ஈழத்தமிழர்களின் சார்பில் பூரண ஆதரவை வெளிப்படுத்துவதற்காக அனைவரும் ஒன்று திரண்டு நல்லூருக்கு வாருங்கள் என இளைஞர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

http://www.tamilwin.com/politics/01/132122?ref=home

  • தொடங்கியவர்

அலங்கா’நல்லூர்’ ஆடும் வரை, ஈழ’நல்லூர்’ அடங்காது? யாழில் ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர் யுவதிகள்...!

தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தமை தொடர்பில் யாழ்ப்பாணம் நல்லூரில் தற்போது பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் ஒன்றிணைந்து குறித்த ஆர்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 03 ஆண்டுகளாக தடைவிதித்துள்ள நிலையில், அதற்கெதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக உறவுகளே நீங்கள் எக்காரணம் கொண்டும் போராட்டத்தினை கைவிடாதீர்கள் என்று பதாதைகளை ஏந்தியவாறு இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பீட்டா அமைப்பினை வன்மையாக கண்டித்தும், தமிழக அரசு இதற்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி கோஷமிட்டனர்.

இனத்தின் வீர விளையாட்டு! எனும் தலைப்பின் கீழ் "ஏறு தழுவுதல்" மீட்புப் போராட்டத்தில் உயிர் உருகும் தாய்த் தமிழக உறவுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஈழத்தமிழ் உறவுகள் நாங்கள்!, தடை அதை உடை! போன்ற பிரதானவாசகத்தைத் தாங்கியும்,

"அலங்கா நல்லூர் ஆடும் வரை ஈழ நல்லூர் அடங்காது!","உயிரனைய தமிழகமே உறவுணர்ந்து எழுகின்றோம்", "உலகம் தமிழனை உற்று நோக்கும் எங்கள் ஒற்றுமை உங்களை ஓட விரட்டும்!",

"PETA எம் இனத்தின் எதிரி! நின்று பார் எம் நெருப்பின் முன்னாள்!","ஜல்லிக்கட்டு எமது பாரம்பரியம்" உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைத் தாங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக குறித்த பகுதியில் ஆயிரக்கணக்கில் மக்கள் ஒன்றிணைந்ததால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

 

 

http://www.tamilwin.com/community/01/132239?ref=home

  • தொடங்கியவர்

கடல் கடந்த ஜல்லிக்கட்டு போராட்டம்...! லண்டன் நகரில் ஒன்று திரண்ட தமிழர்கள்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

அலங்காநல்லூரில் ஆரம்பித்த இந்த போராட்டம், கடந்த இரண்டு நாட்களாக சென்னை மெரீனா கடற்கரையில் ஆயிரக்கணக்கில் ஒன்று குவிந்துள்ள மாணவர்கள், இளைஞர்களின் ஒத்துழைப்புடன் மேலும் தீவிரம் பெற்றுள்ளது.

குறிப்பாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டும், பீட்டா அமைப்பு தடைசெய்யப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவாக உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், லண்டனில் இந்திய தூதரக அலுவலகம் முன் திரண்ட லண்டன் வாழ் தமிழர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாதைகளை கைகளில் ஏந்தி நின்ற ஆர்ப்பாட்டகாரர்கள், இந்த விவகாரத்தில் இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரியம் அழிவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது என்று கூறிய அவர்கள், இதற்காக உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் குரல் கொடுப்போம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.tamilwin.com/special/01/132287?ref=home

 

தமிழரின் ஒற்றுமைக்கு பலம் சேர்க்கும்!
கலாச்சார பண்பாட்டு அடக்கு முறைகளை வெல்ல கொழும்பிலும் இளைஞர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

  • தொடங்கியவர்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் ஒன்றுதிரண்ட ஈழத்து இளைஞர்கள்! 'தமிழகத்திற்காக ஈழம்'

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக இன்று கிளிநொச்சியிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று மாலை குறித்த போராட்டம் இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தை கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாச்சார அமையம் ஏற்பாடு செய்திருந்தது.


“மோடி அரசே, மோடி அரசே ஜல்லிக்கட்டை நடத்த விடு - இல்லையே தமிழகத்தை பிரித்து விடு ,

 

வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும்,

தமிழகத்திற்காக ஈழம், ஈழத்திற்காக தமிழகம்” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/132372?ref=editorpick

Edited by போல்

  • தொடங்கியவர்

இலங்கை: மட்டக்களப்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்

தமிழக மக்களின் ஜல்லிக்கட்டு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையிலும் தமிழர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்
மட்டக்களப்பு நகரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்

இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு நகரில் காந்தி சதுக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் ஆர்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு ஒருமித்து கோஷங்களை எழுப்பினர்.

பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம்பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம்

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட குறிப்பாக இளைஞர்களினால் வலியுறுத்தி கூறப்பட்டது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எதிர்வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் மத்தியிலும் இடம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலரும் வெளியிட்டனர்.

http://www.bbc.com/tamil/38679120

  • தொடங்கியவர்

இலங்கையில் எதிரொலிக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு கோரிக்கையை ஆதரித்து இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள், யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையில் எதிரொலிக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்

தமிழகத்தின் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஏந்தியிருந்தனர்.

இலங்கையில் எதிரொலிக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்

யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த இளைஞர் கழகங்கள், இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இதில் பங்கெடுத்திருந்தனர்.

     இலங்கையில் எதிரொலிக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்

http://www.bbc.com/tamil/sri-lanka-38661968

  • தொடங்கியவர்

கொழும்பிலும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து போராட்டம்

உலகளாவிய ரீதியில் தமிழர்கள் பலரும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் கொழும்பிலும் ஜல்லிக்கட்டு விவகாரத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தில் ஜல்லிக்கட்டின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://www.tamilwin.com/community/01/132360?ref=home

 
  • தொடங்கியவர்

ஜல்லிக்கட்டு எழுச்சிகள் காட்டுவது என்ன ?

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமெனக் கோரி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மூன்றாவது நாளாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

மூன்றவது நாளாக சென்னையில் போராட்டம் தொடர்கிறது

சென்னையின் மெரினா கடற்கரையில் பிரதானமாக கூடியிருக்கும் கூட்டம் கடந்த மூன்று நாட்களாக அதே இடத்தில் அமைதியாக போராட்டங்களை நடத்தி வருகிறது. அதேபோல, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஊர்வலங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் என ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் நடந்துவருகின்றன.

  சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம்

இந்தப் போராட்டங்கள் அனைத்துமே தன்னிச்சையான, ஒருவிதமான ஒழுங்கோடு, தலைமை ஏதுமின்றி நடைபெற்றுவருகின்றன. 1965ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு, இவ்வளவு பெரிய அளவில் ஒரு தன்னெழுச்சியான போராட்டம் நடக்கவில்லை என்பதை பலரும் சுட்டிக்காட்டிவருகின்றனர்.

இந்தப் போராட்டங்களில் பெரும்பகுதி ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் வெளியிடப்படும் தகவல்களின் மூலமும் வாட்ஸப் தகவல்களின் மூலமும் ஒருங்கிணைக்கப்படுகிறது என்பதை போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

  ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குதித்த ஐடி ஊழியர்கள்

அமைதியான முறையில் இந்தப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுவது, வன்முறையின்றி தொடர்ந்து நடத்தப்படுவது, பெண்களும் பெரிய அளவில் இந்தப் போராட்டங்களில் பங்கேற்பது ஆகியவை இந்தப் போராட்டத்தின் குறிப்பிடத்தகுந்த பண்புகளாக சுட்டிக்காட்டப்படுகின்றன.

பல்வேறு அதிருப்திகளின் உச்சகட்டமாகவே இந்தப் போராட்டம் எழுந்திருக்கிறது என்கிறார் சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் வரலாற்றுப் பேராசிரியரான ஆ.இரா. வேங்கடாசலபதி.

"எப்போதுமே பண்பாட்டு அம்சங்களை முன் வைத்துத்தான் பெரிய அளவிலான போராட்டங்கள் உருவெடுக்கும். பண மதிப்பு நீக்கம், விவசாயிகள் மரணம் போன்ற பிரச்சனைகளின் மீது பெரிய அளவில் அதிருப்தி இருந்தாலும், அவற்றுக்கும் ஒரு எதிர்ப்பாகவே இந்தப் போராட்டத்தைப் பார்க்க முடியும். இது வெறும் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமான போராட்டம் அல்ல. தங்களுக்கு இருக்கும் பல்வேறு அதிருப்திகளை வெளிப்படுத்தும் விதமாகவே இந்தப் போராட்டத்தை அவர்கள் நடத்திவருகிறார்கள்" என்கிறார் வேங்கடாசலபதி.

ஜல்லிக்கட்டு போன்ற தமிழகத்தின் சில பகுதிகளில் நடத்தப்படும் ஒரு விளையாட்டு தடைபடும்போது பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் நிலையில், பணமதிப்பு நீக்கம், விவசாயிகள் மரணம், நீட் தேர்வு போன்றவற்றுக்காக வெடிக்காதது ஏன் என்பது குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டுவருகின்றன.

மாடுகளையும், கன்றுக் குட்டிகளையும் அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்மாடுகளையும், கன்றுக் குட்டிகளையும் அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்

"அறிவுஜீவிகளைப் பொறுத்தவரை இம்மாதிரி பிரச்சனைகளுக்கு மக்கள் போராட வேண்டுமென நினைக்கிறோம். ஆனால், மக்கள் உணர்வுபூர்வமான விஷயங்களுக்கே முக்கியத்துவம் தருவார்கள். தற்போதைய காலகட்டத்தில் எல்லோருக்குமே ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. அம்மாதிரியான ஒரு அடையாளத்தில் கைவைக்கப்படும்போது எல்லோரும் கிளர்ந்தெழுகிறார்கள். சமூக வலைதளங்கள் இதனைக் கண்ணுக்குத் தெரியாமல் ஒருங்கிணைக்கின்றன" என்கிறார் தலித் ஆய்வாளரான ஸ்டாலின் ராஜாங்கம்.

தமிழ்நாடு போன்ற முழுவதும் நகர்மயமான ஒரு மாநிலத்தில் திருவிழாக் காலங்களில் சொந்த ஊர் சென்று, தன்னுடைய கலாசார அடையாளமாக ஒரு விஷயத்தை கொண்டாடுவது மக்களுக்கு ஆசுவாசமளிக்கிறது. அந்த கலாச்சார அடையாளம் தடைபடும் என்று சொல்லும்போது பலர் போராட முன்வருகிறார்கள் என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

ஆனால், இம்மாதிரி போராட்டங்களுக்கு ஒரு நீண்ட காலத் தன்மை இருப்பதில்லை. அண்ணா ஹசாரேவின் போராட்டம், பிரபாகரனின் மகன் சுட்டுக்கொல்லப்பட்ட செய்திகளுக்கு பிறகு வந்த எழுச்சி, மது விலக்கு தொடர்பான போராட்டங்கள் போன்றவையெல்லாம் அந்தந்தத் தருணங்களோடு முடிந்துவிட்டன என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

  ஜல்லிக்கட்டு 

தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தற்போதைய போராட்டத்தை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தோடு ஒப்பிட்டுப் பேசியிருந்தார்.

அப்போதைய இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கும் தற்போதைய போராட்டத்திற்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன என்கிறார் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் முன்னாள் தலைவரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவருமான பேராசிரியர் ராமசாமி.

"ஆனால், அந்தக் காலகட்டத்தில் தகவல் தொடர்பு என்பது மிகக் கடினமாக இருந்தது. நான் ஒரு தகவலை தொலைபேசி மூலம் தெரிவிக்க அரை நாள் தந்தி அலுவலகத்தில் காத்திருந்திருக்கிறேன். இப்போது வாட்ஸப் மூலம் உடனுக்குடன் தகவல்கள் அனுப்பப்பட்டுவிடுகின்றன" என்கிறார் ராமசாமி.

மேலும் அப்போது ஒரே ஒரு நாளிதழைத் தவிர பிற நாளிதழ்கள் எல்லாமே இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு எதிராக இருந்தன என்கிறார் ராமசாமி. மேலும் வானொலி அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்த தகவல்கள் மிகவும் குறைவாகவே மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டன. ஆனால், தற்போது நிலைமை முற்றிலும் வேறானது என்று சுட்டிக்காட்டுகிறார் ராமசாமி.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஒட்டுமொத்த தமிழ் அடையாளமாக முன்னிறுத்துவதும் பல்வேறு தளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. "பண மதிப்பு நீக்கம் போன்ற நடவடிக்கைகள் ஒவ்வொரு தரப்பினரையும் ஒவ்வொரு விதமாகப் பாதிக்கின்றன. அதேபோல மீனவர் மீதான தாக்குதல்கள் ஒரு தரப்பினருக்கானது என சிலரால் கருதப்படுகின்றன. ஆனால், ஜல்லிக்கட்டை ஒரு பொது அடையாளமாக கருதி இந்த போராட்டங்கள் நடக்கின்றன. அப்படித்தான் நடக்கும்" என்கிறார் பேராசிரியர் வேங்கடாசலபதி.

போராட்ட களமாக மாறிய அலங்காநல்லூர்போராட்ட களமாக மாறிய அலங்காநல்லூர்

"முதலாவது உலகப் போருக்கு செரயோவாவில் ஆஸ்திரிய இளவரசர் சுட்டுக்கொல்லப்பட்டது காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் பல்வேறு அம்சங்கள்தான் உலகப் போருக்குக் காரணமாக அமைந்தன. அதைப்போலத்தான் ஜல்லிக்கட்டை முன்வைத்து இந்தப் போராட்டங்கள் நடந்தாலும் பல்வேறு அதிருப்திகளை வெளிப்படுத்துமுகமாகவே இந்தப் போராட்டங்கள் நடக்கின்றன" என்கிறார் மானுடவியல் ஆய்வாளரான ராஜன் குறை.

தங்கள் அடையாளங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் அதனை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கையிலும் இந்தப் போராட்டங்கள் நடக்கின்றன என்கிறார் ராஜன் குறை. இந்தப் போராட்டங்கள் எதையும் சாதிக்காமல் முடிந்துவிட்டால்கூட, அவற்றின் தாக்கம் மறைமுகமாக மிக வலுவானதாக இருக்கும் என்கிறார் ராஜன் குறை.

இந்தப் போராட்டங்களை தனி நபர்கள், சில இயக்கங்கள் பின்னிருந்து இயக்குவதாக சொல்லப்படுவதை புறந்தள்ளுகிறார் வேங்கடாசலபதி. "அவ்வளவு சக்திவாய்ந்த நபர்கள் தமிழகத்தில் இருந்தால் அவர்களை நான் சந்திக்க விரும்புகிறேன். அப்படி யாரும் கிடையாது" என்கிறார் வேங்கடாசலபதி.

அலங்காநல்லூர், சென்னை மெரீனா உள்ளிட்ட பல இடங்களில் பெண்கள், குழந்தைகளுடன் இரவில் போராட்டக் களங்களிலேயே தங்கிவருகின்றனர். அதேபோல பெரிய எண்ணிக்கையில் இந்தப் போராட்டங்களிலும் பங்கேற்றுவருகின்றனர்.

பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெற்றிருப்பது, தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதற்குக் காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறன.

http://www.bbc.com/tamil/india-38674588

  • தொடங்கியவர்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாழைச்சேனையில் பேரணி...!

இந்தியாவின் தமிழ் நாட்டில் தமிழரின் பண்பாட்டு மரபான ஜல்லிக்கட்டை நடாத்துவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தமைக்கும், இந்திய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாழைச்சேனையில் இன்று(19) மாலை பாரிய கண்டனப் பேரணி இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை - கோறளைப்பற்று பிரதேச இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப் பேரணியானது கிண்ணையடி சந்தியில் இருந்து ஆரம்பமாகி வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக வந்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தி வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டப் பேரணியில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டு தமிழரின் பண்பாட்டு மரபினை அழிக்காதே, தமிழரை அடக்காதே என இந்திய அரசுக்கு எதிராக பல கோசங்களை எழுப்பியுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அத்தோடு, மரபு வழி தமிழ் தேசியத்தின் பண்பாட்டு மரபினை அழித்து தமிழின அடையாளங்களை அழிக்க வெறி கொண்டு கொக்கரிக்கும் இந்திய அரசே உலகத் தமிழர்கள் உன் கொட்டத்தை அடக்க திரண்டெழுவார் குறித்துக் கொள் என்ற வசனம் பொறிக்கப்பட்ட பதாதையுடன் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும்,சோழனின் கொடி பறக்கும் சோழியின் குடும்பி அறும், அலங்கா நல்லூர் ஆடும் வரை ஈழம் அடங்காது, ஜல்லிக்கட்டு எம் உரிமை அள்ளிக்கட்டு அரசை, போராட்டம் எம் இனக்குணம் சீண்டாதே சிதறுவாய், எமது மொழி எமது பண்பாடு, எமது தனித்துவம், நாங்கள் தமிழர்கள் என பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோசங்களுடன் இளைஞர் கலந்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/132406?ref=morenews

இலங்கையில் தமிழர் அழிந்தபோது

 

Bilderesultat for கருணாநிதி உண்ணாவிரதம்

  • தொடங்கியவர்
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குங்கள் யாழ்.நல்லூரில் இளைஞர்கள் திரண்டு நேற்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம்
13100.jpg
இந்தியாவில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழ்நாடு எங்கும் பாரியளவிலான போராட்டங்கள் நடத்தப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், அப்போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இந்திய அரசாங்கமானது ஜல்லிகட்டு நடத்துவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் யாழ்.நல்லூரில் இளைஞர்கள் பலர் ஒன்றுகூடி பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடாத்தியுள்ளார்.
 
சமூக வலைத்தளங்களினூடாக இளைஞர்களது ஆதரவினை பெற்று நடத்தப்பட்ட இப் போராட்டமானது நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்றலில் மாலை நான்கு மணியளவில் ஆரம்பமாகியிருந்த நிலையில் இப் போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் மற்றும் வெளி மாவட்டங்களிலும் இரு ந்து வருகை தந்திருந்த பெருந்திரளான இளைஞர்கள் ஒன்றுகூடி உணர்வுபூர்வமாக இப்போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
 
தமிழகத்தில் பீட்டா அமைப்பினால் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் காரணமாக ஜல்லிக்கட்டு காளை மாடுகளை துன்புறுத்தும் செயலாகும் என கூறி இந்திய உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு மீது தடை விதித்திருந்தது. எனினும் இந்த தடை யுத்தரவை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாமல், காளைகளை நாங்கள் துன்புறுத்தவில்லை. மாறாக அவைகளை எமது பிள்ளைகள் போன்று பராமரித்து வளக்கின்றோம். 
 
ஜல்லிக்கட்டு எமது பாரம்பரியம் அதனை தடுத்து நிறுத்த யாருக்கும் உரிமையில்லை. என தெரிவித்து சமூக வலைத்தளங்கள் ஊடாக போராட்டங்களை முன்னெடுக்கப்பட்டன. இவை விஸ்தரிப்பு அடைந்து மிகப் பெரிய போராட்டங்களாக வெடித்தன. குறிப்பாக தமிழக கல்லூரி மாணவர்கள் கல்லூரிகளை புறக்கணித்து போராடி வருவதுடன் இளைஞர்கள் இலட்ச கணக்கில் திரண்டு ஆதரவு தெரிவித்து போராடி வருகின்றனர்.
 
இதற்கும் மேலாக பல இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றமையால் பொலிஸார் அவற்றை தடுப்பதற்கு தீவிரமாக செயற்பட்டனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது பொலிஸார்  தடியடி நடத்தியமையால் போராட்டக்காரர்களும் பொலிஸார் மீது தாக்குதலை தொடுத்தனர். இதனால் தமிழகமே கொந்தளித்துள்ள நிலையில், நூறுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளிலும் அடைக்கப்பட்டனர். 
 
இந்த நிலையிலேயே தமது தமிழ் மரபினை காக்க போராடும் தமிழக உறவுகளுக்காக ஆதரவு தெரிவிப்பது நேற்றைய தினம் மாலை யாழ்.நல்லூரில் இந்த போராட்டமானது சமூக வலைத்தள போராளிகளாலும் இளைஞர்களாலும் பல நூற்றுக்கணக்கானவர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது.இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவிக்கையில், ஜல்லிக்கட்டு என்பது காலம் காலமாக தமிழ் மக்களால் நடத்தப்பட்டு வந்த ஒர் பாரம்பரிய வீரவிளையாட்டு. இதனூடாக காளைகளை நாம் துன்புறுத்தவில்லை. அவற்றை அன்போடுதான் அடக்குகின்றோமே தவிர துன்புறுத்தி அடக்கவில்லை. 
 
இவ்வாறான நிலையில் இவ் பாரம்பரிய நிகழ்வை நிறுத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக செயற்படும் பீட்டா எனும் அமைப்பானது சர்வதேச நாடுகளுடைய அரசியலோடு தொடர்புபட்ட ஒன்று. இவ்வமைப்பினூடாக வழக்கு தாக்கல் செய்து இவ் பாரம்பரியத்தை நிறுத்துவதனூடாக தமிழகத்தில் இருக்கும் காளை மாடுகளது இனப்பெருக்கத்தை நிறுத்தி வெளிநாட்டு மாடுகளை தமிழகத்தில் சந்தைபடுத்துவதற்கான வழியாகவே இதனை செய்கின்றார்கள்.
 
தற்போதே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற மாடுகளானது உள்ளூர் மாடுகள் கொடுக்கின்ற பாலினை விடவும் அதிகமாக பால் கொடுக்கின்றது. இது எப்படி சாத்தியமாகின்றது என்றால் அவை உருவாக்கப்பட்ட அவற்றுக்கு கொடுக்கப்பட்ட இரசாயன உரங்களாலேயே ஆகும். இந்நிலையில் இவ் மாடுகளால் கொடுக்கப்படும் பாலினை அருந்தும் மக்களுக்கு பல்வேறு உடலியல் கோளாறுகள் ஏற்படுகின்றன. இவ்வாறு உடலியல் கோளாறு ஏற்பட்டதும் அதற்கான மருந்தையும் அந்த மாட்டை விற் பனை செய்த நாடே வழங்கப்போகின்றது.
 
இத்தகைய செயற்பாட்டால் அந்த வெளிநாட்டுக்கு இரட்டிப்பு வருமானமும் இலாபமும் கிடைக்கப்போகின்றது. இத்தகைய பின்புலங்களை வைத்துக்கொண்டே வல்லரசு நாடுகள் இத்தகைய அமைப்புகளை பயன்படுத்தி அந்த நாடுகளில் உள்ள பாரம்பரியமான செயற்பாடுகளை இல்லாமல் செய்து தமது வியாபார நோக்கங்களை நிறை வேற்றிக்கொள்ளப் பார்க்கின்றன. 
 
உண்மையில் பீட்டா அமைப்பானது மிருகங்களை வதை செய்வதற்கு எதிராக போராடும் அமைப்பானால் உலகில் எத்தனை நாட்டில் எந்தனை உயிர்கள் தினம் தினம் கொல்லப்படுகின்றன ஏன் அவை அனைத்தும் உயிர் வதையாக அவ் அமைப்புக்கு தெரியவில்லையா? எனவே வல்லரசு நாடுகளும் சர்வதேச அரசியல் பொருளாதாரத்தை இலக்காக கொண்டு எமது பாரம்பரியத்தை அழிக்க முயற்சிப்பவர்களது செயற்பாடுகளுக்கு இடம் கொடுக்காமல் எமது பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு நாம் எப்போதும் போராட வேண் டியதுடன் தமிழகத்தில் இடம்பெறுகின்ற இவ் ஜல்லிக்கட்டு தடை நீக்கல் போராட்டத்திற்கு ஈழத்தவர்களும் எப்போதும் துணையிருப்பார்கள் எனவும் அவர்கள் குறிப்பிட்டிருந் தனர்.    
  • தொடங்கியவர்

தமிழ் மீது வெளிநாட்டு பெண்ணின் பற்று...! ஜல்லிக்கட்டின் நிலை..!

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குமாறு வலியுறுத்தி, தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அவர்களுக்கு தமது ஆதரவினை வெளிப்படுத்தி நேற்று இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் யாழ். நல்லூரில் பல கோரிக்கையினை தமிழக அரசிற்கு முன்வைத்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் அங்கு வந்த வெளிநாட்டு பெண் ஒருவர் " ஜல்லிக்கட்டிற்கு தாமும் முழு ஆதரவினை தமிழ் மக்களுக்கு தருவதாக" பாதையினை பெற்று தானும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

குறித்த வெளிநாட்டு பெண்ணின் தமிழ் மீதான பற்று அங்கிருந்த அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்திருந்தனர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.png

 

அத்துடன் தமிழகத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து மத்திய அரசை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசர சட்டம் இயற்ற வலியுறுத்துவதற்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருந்தார்.

இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த இன்று பகல் 12 மணிக்குள் அவசரச்சட்டம் இயற்ற வேண்டும் என மெரினா போராட்டக்குழு அறிவித்திருந்தது. அவசர சட்டம் இயற்றாவிட்டால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றும் போராட்டக்குழுவினர் எச்சரித்திருந்தனர்.

போராட்டகுழுவினர் விதித்த காலம் முடிந்துள்ள நிலையில், இதுவரை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் ஆளுநர் மாளிகை மற்றும் மத்திய அரசு அலுவலகங்ளை முற்றுகையிட போராட்டக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இணையத்தில் தொடர்ந்து தங்கள் பிரச்னையை பதிவு செய்து வரும் இந்த இளைஞர்களுக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.

இணையத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளித்து இந்தியா உள்ளிட்ட யூ.ஏ.இ, கட்டார் , சிங்கப்பூர், ஓமன், இலங்கை, பஹ்ரைன், குவைத், மலேசியா, சவுதி அரேபியா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, அயர்லாந்து, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற 19 நாடுகளில் பெரிய ஆதரவு இணையத்தின் வழியாக கிடைத்துள்ளது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.png

 

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/living/01/132338?ref=youmaylike3

 
  • தொடங்கியவர்

யாழ் வல்வெட்டித்துறையில் ஆர்ப்பாட்டம்: அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு

தமிழகம் எங்கும் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தமைக்கு எதிராக பாரிய போராட்டம் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் தமிழக அரசு கொண்டு வர உள்ள அவசர சட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சு ஒப்புதல் அளித்து ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது.

இருந்தாலும் தமிழ் நாடெங்கும் தற்போது தீப்பரவல் போல போராட்டங்கள் ஆங்காங்கு வெடித்து வருகின்றதனை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் இன்று முதல் எங்கள் தியேட்டர்களில் வெளிநாட்டு குளிர்பானங்களான பெப்சி, கொக்ககோலா போன்றவற்றை விற்க மாட்டோம் என தியேட்டர்கள் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு பெரும் ஆதரவினை வழங்கு பல நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுத்துவருகின்ற நிலையில் இலங்கையிலும் தமிழர்கள் மத்தியில் ஒரு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறவேண்டும்.

அந்த வகையில் பல இடங்களில் ஈழத்தில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் "வீரம் விளைந்த மண்ணில் இருந்து .. தமிழ் பரம்பரியத்திற்காக ஒன்றிணைய வாரீர்" என நாளை யாழ்ப்பணம் வல்வெட்டித்துறையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளனர்.

ஒரு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது. அதற்கு அனைத்து மக்களின் ஆதரவினை தருமாறு இளைஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/132496?ref=home

  • தொடங்கியவர்

உலகத் தமிழர்கள் அனைவரையும் தட்டி எழுப்பிய ஜல்லிக்கட்டு : நாளை கொழும்பில் ஆரம்பம்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு முன்புவரை ஒரே ஒரு அலங்காநல்லூர் ஆக இருந்த இடம் இன்று அடங்காதநல்லூராக முழு இடமும் மாறிவிட்டது என்றால் அதற்கு ஒரே காரணம் இந்த ஜல்லிக்கட்டு போராட்டம்.

தமிழர்களின் ஒட்டுமொத்த உரிமைகளையும் அடக்கிய அரசு இனிமேலும் தமது கலாச்சாரத்தில் ஒரு சிறு துளியேனும் மூக்கினைநுழைக்க கூடாதென்பதே இந்த போராட்டத்தின் வெளிப்பாடாக உள்ளது.

வெறும் தமிழர்கள் மட்டுமே இங்கு ஆதரவினை தந்துகொண்டிருக்கின்றார்கள் என்று கூறுவது உண்மைக்கு புறம்பான செயேல். குறிப்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து உறவுகளுக்கும் எமது சகோதர மதத்தவர்கள் (முஸ்லிம் மக்கள்) உணவு வழங்கியுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

 

கடந்த 4 நாட்களுக்கு வெறும் தமிழகம் மட்டுமே ஜல்லிக்கட்டிற்காக போராட்டம் நடத்துகின்றது என்றால் ஏற்றுக்கொள்ள முடியாது. அமெரிக்க முதல் தமிழீழம் வரை கொந்தளிக்கின்றது இந்த ஜல்லிக்கட்டு தடைக்கு.

இவ்வாறு தமிழர்களின் ஒற்றுமையினை இங்கு வெளிப்படுத்துவதற்கு இலங்கையில் பல இடங்களில் பாரியளவிலான போராட்டங்கள் உருவெடுத்து வருகின்றது.

அந்த வகையில் நாளை தலைநகரான கொழும்பில் காலிமுகத்திடலில் போராட்டம் ஒன்று இளைஞர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த அளவிற்கு இளைஞர்கள் ஒன்று கூடுவார்கள் என இந்திய அரசு கண்டிருக்கவே இயலாது. மக்களை கலக்க கூட எண்ணுகின்ற அளவிற்கு இன்று மெரீனா கடற்கரைக்கு வடநாட்டு தமிழர்களும் அயல் கிராம மக்களும் கிடைக்கும் வண்டியில் எல்லாம் வந்து சேர்கின்றனர்.

நாளை குடியரசு தலைவர் நாட்டுக்கு வரும் பட்சத்தில் அவரிடம் சட்ட திருத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும், தானே ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பேன் என சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மகிழ்ச்சியாக பேட்டியளித்தார்.

எவ்வாறு இருந்தாலும் நாளை ஒரு உரிய முடிவினை பெறலாம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/132507?ref=home

  • தொடங்கியவர்

வவுனியாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று மாலை இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா மாவட்ட இளைஞர்களின் ஏற்பாட்டில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டத்திற்கு வடமாகாணசபை உறுப்பினர் செ.மயுரன், சிறீ ரெலோ கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் கார்த்திக் இளைஞர்களுடன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

தடை அதை உடை, ஜல்லிக்கட்டு நம் இனத்தின் அடையாளம், காப்போம் காப்போம் மாட்டைப் பாதுகாப்போம், தமிழகத்திற்காக ஈழம் ஈழத்திற்காக தமிழகம், போன்ற வாசகங்களுடன் கோசங்களை எழுப்பியவாறு பெருமளவான இளைஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/132511?ref=home

தமிழகத்தில் ஜல்லிகட்டு நாளை நடைபெறும் என தெரிகிறது.
போராட்டத்தில் வெற்றியை நோக்கி நகரும் தமிழக சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலையில் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலை - மெய்கெய்சர் விளையாட்டரங்கு முன்பாக இன்று(21) மாலை 04 மணியளவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தை அந்த பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்தள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது, ஆர்பாட்டக்காரர்கள் பல கோசங்களை எழுப்பியதுடன், தங்களது ஆதரவையும் தெரிவித்தள்ளனர்.

அத்துடன், அனைவரும் பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் பங்கேற்றதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையில் பல பாகங்களில் போராட்டம் இடம் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மன்னாரில் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பிரதான வீதியில் இன்று (21) மாலை 4.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்பாட்டத்தினை மன்னார் மீன் விற்பனையாளர் சங்கம் மற்றும் முக நூல் நட்புக்கள் ஆகியோர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் போது, தமிழகம் எங்கும் கண்ணீர் என்ன செய்கின்றார் பன்னீர், தமிழர் உரிமையை தடுக்காதே, ஜல்லிக்கட்டு எங்கள் மரபுரிமை அதை தடை செய்ய பீட்டாவுக்கு ஏது உரிமை, ஊரை சுத்தும் மோடி நீ தமிழர் பக்கம் வாடி, உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு தங்களது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக இந்த வீதியூடாக சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற பகுதிக்கு சென்று போக்குவரத்தை சீர் செய்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

மேலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மன்னாரில் சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

 

 

http://www.tamilwin.com/community/01/132640?ref=youmaylike1

  • தொடங்கியவர்

ஜல்லிக்கட்டுக்காக பலியான முதல் உயிர்..! சோகக்களமாக மாறிய போராட்டம்..!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் போராட்டத்தில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக தமிழகமே சோகத்துடன் உள்ளது.

தமிழக அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்த போதிலும், அதனையும் ஏற்காமல் நிரந்தர தீர்வு வேண்டும் என்று கூறி தமுக்கம் மைதானத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த 5 நாட்களாக தமிழகம் எங்கும் இடம்பெற்றுவரும் இந்த எழுச்சி போராட்டத்தில் முதலாவதாக ஒரு உயிர் பிரிந்துள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

ஜல்லிக்கட்டு வேண்டும் என்று மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்கிய போராட்டம் தொடர்ந்து 5 நாட்களாக இரவு பகல் பாராமல் மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவரும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

போராட்டக்களத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் 48 வயதான சந்திரமோகனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதே இடத்திலேய விழுந்து இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவமானது போராட்டக்களத்தில் இருப்பவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. என்றாலும் போராட்டம் இடைநிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/india/01/132706?ref=youmaylike3

 

செட்டிகுளத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்

வவுனியா, செட்டிகுளம் பஸ் நிலையத்திற்கு முன்னால் தமிழகத்தின் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று காலை இளைஞர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செட்டிகுளம் பகுதி இளைஞர்களின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதேவேளை ஒன்று கூடிய இளைஞர்கள், யுவதிகள் ' தடை அதை உடை, உங்களுக்காய் நாங்கள் எங்களுக்காய் நீங்கள், தமிழால் இணைவோம் தமிழனுக்காக வா தமிழா, கடல்கடந்தும் கலாச்சாரத்தை பாதுகாப்போம், தமிழர்களின் அடையாளத்தை அழிக்காதே, மத்திய அரசே தமிழகத்தின் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடு' என எழுதப்பட்ட பல்வேறு சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

இவ் ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணிநேரம் வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/132700?ref=youmaylike2

  • தொடங்கியவர்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்முனையில் ஆர்ப்பாட்டம்

தமிழ் நாட்டு தமிழர்களின் பாரம்பரியங்களுக்கு மதிப்பளிப்பது மத்திய அரசின் தலையாய கடமையாகும் என்பதன் அடிப்படையில் இந்தியாவில் முன்னெடுக்கப்படும் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கல்முனையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை கல்முனை மாநகரில் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியானது இன்று கல்முனை பஸ்தரிப்பு நிலையம் முன்பாக ஆரம்பித்து கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியூடாகச்சென்று கல்முனை அமானா வங்கிக்கு முன்னால் நிறைவடைந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கல்முனை வாழ் இளைஞர்கள் கருத்து தெரிவிக்கையில் ..

 

இந்தியாவிலே தடைசெய்யப்பட்டிருக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை நீக்கி அவர்களது கலாசார பண்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே இளைஞர்களால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இன்று ஆரம்பித்திருக்கும் இந்த போராட்டமானது எமது இனத்தினுடைய குரல்களை ஒடுக்குகின்ற செயற்பாடுகளுக்கு எதிரானதாக இதனை பார்க்கின்றோம்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

ஒரு இனமானது தங்களுடைய மொழி, நிலப்பாகுபாடு, இன கலாசார ஒற்றுமைகளை வலியுறுத்தியதாக இருக்க வேண்டும் அந்த வகையில் தமமிழர்களாகிய நாங்கள் எங்கு வாழ்ந்தாலும் சரி எங்களுக்கான எதிர்ப்புக்கள் வருகின்றபோது அதற்காக ஒன்று பட்டு குரல் கொடுப்பதற்கு ஒன்று சேர்ந்து இருக்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும், தடைசெய் தடைசெய் பீட்டாவை தடைசெய், என்னிடம் காளை இல்லை நான் ஜல்லிக்கட்டு வீரனுமில்லை தமிழ்நாடு என் ஊருமில்லை இந்தியா என் நாடுமில்லை ஆனால் ஜல்லிக்கட்டை நாங்கள் ஆதரிப்போம், போன்ற வாசகங்கள் எழுதிய அட்டைகளையும் கோசங்களையும் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/132595?ref=youmaylike3

  • தொடங்கியவர்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வெள்ளவத்தையில் ஆர்ப்பாட்டம் ! பெருமளவானோர் பங்கேற்பு

கொழும்பு வெள்ளவத்தையில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து தற்போது போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வெள்ளவத்தை Laugfs Super Market முன்பாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/132614?ref=youmaylike1

  • தொடங்கியவர்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக டக்ளஸ் எம்.பி போர்க்கொடி..! மாட்டு வண்டி சவாரியும் தடைசெய்ய வேண்டும்

தமிழர் பண்பாடு என்ற போர்வையில் நடாத்தப்படும் மிருகவதை தடைசெய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு மிருகவதை அதனை ஏற்க முடியாது. ஜல்லிக்கட்டு மாத்திரமல்ல இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளான வடகிழக்கில் நடாத்தப்படும் மாட்டு வண்டிச் சவாரி போன்ற நிகழ்வுகளையும் தடை செய்ய வேண்டும்.

இவை அனைத்தும் நாகரீகமற்ற மிருகவதை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். தனது கட்சி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஜல்லிக்கட்டுக்கு போட்டிக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்டுள்ள தன்னெழுச்சி போராட்டத்தை வரவேற்கிறேன். எனினும். ஜல்லிக்கட்டு என்பது மிருகவதை. ஆகவே ஜல்லிக்கட்டு போட்டிக்கு தான் எதிரானவன்.

தமிழர்களின் பண்பாடு என கருதப்படும் உடன்கட்டை ஏறுதல், மற்றும் சிறுவயது திருமணம் என்பன தற்போது நடைமுறையில் இல்லை. அதே போன்று மிருகவதையான ஜல்லிக்கட்டையும் நாம் கைவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழ் நாடு உள்ளிட்ட தமிழர்கள் வாழும் நாடுகளில் போராட்டம் வெடித்துள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கருத்து பல விதமான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படும் என சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

 

http://www.tamilwin.com/politics/01/132746?ref=home

  • தொடங்கியவர்
ஜல்லிக்கட்டில் ஒன்றுபட்டதால் தமிழர் மரபு காப்பாற்றப்பட்டது
 
13148.jpg
ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்ததன் காரணமாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் எங்கும் சூடேற்றின.
 
தமிழர்களின் மரபு வழிப்பண்பாட்டு நிகழ்வான காளை அடக்குதல் என்ற ஜல்லிக்கட்டை தடுத்ததால் இளங்காளைகள் சிங்கங்களாகப் பாய்ந்தன.
 
அட! கட்டுக்கடங்காத காளைகளையே பாய்ந்து அடக்கும் எங்களை அடக்க முடியுமா? என்பது போல நம் தமிழகத்து இளைஞர்கள் பேரணியாகத் திரண்டு எழ, அதன் உணர்ச்சிப் பிரவாகமாக எங்கள் மண்ணிலும் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவான கோசங்கள் எழுந்தன.
ஜல்லிக்கட்டில் அப்படி என்னதான் உண்டு என்று யாரேனும் கேட்கலாம்.
 
தமிழ் இனத்தின் வீரத்தை பறைசாற்றுகின்ற நிகழ்வுதான் ஜல்லிக்கட்டு. எனவே அந்த ஜல்லிக்கட்டை தடை செய்ய அனுமதியோம் என்று வீறுகொண்ட இளைஞர்கள் போர்க்கொடி தூக்க, தமிழகம் முழுவதும் ஒன்று சேர்ந்து ஒரணியாகி, பேரணியாகி எழுக தமிழ் என்று ஆர்ப்பரிக்கலாயிற்று.
இதன் முடிவாக ஜல்லிக்கட்டை நடத்தலாம் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
இங்கு தடைவிதிக்கப்பட்டது ஜல்லிக்கட்டுக்காயினும். அதற்காக எழுந்த இளைஞர்களின் ஆவேசமும் இளைஞர்களின் பின்னால் தமிழகம் முழுவதும் திரண்டதும் கவனிக்கத்தக்க விடயமாகும். 
 
கூடவே தமிழகத்து இளைஞர்களின் ஒற்றுமை என்ற மாபெரும் சக்தி தமிழகம் என்ற எல்லை கடந்து உலக நாடுகளிலும் வியாபகம் பெற்றது.
 
ஆக, தமிழினம் ஒற்றுமைப்பட்டதன் விளைவாக தமிழர்களின் மரபுரீதியான - தமிழர்களின் வீரம் பொருந்திய நிகழ்வை மீண்டும் அமுல்படுத்த வேண்டிய தேவை பாரதத்திற்கு ஏற்பட்டது.
 
இதற்காக சில விசேட சட்டங்களும் கொண்டு வரப்படலாயிற்று. ஜல்லிக்கட்டுக்காக இத்தனை ஆர்ப்பாட்டங்கள் தேவைதானா என்ற கேள்வியும் ஜல்லிக்கட்டு நிகழ்வில் ஜீவகாருண்யம் கசங்கிப்போகிறது. அல்லவா? என்ற கருத்தும் இருக்கலாம். இது குறித்த வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். 
 
இந்த வாதப் பிரதிவாதங்கள் பேச்சளவில் இருந்துவிட்டுப் போகலாமே அன்றி செம்மொழியாம் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழினத்தின் பண்டைய நிகழ்வாகவும் தமிழர்களின் வீரத்தை - இளைஞர்களின் துணிச்சலை செப்புகின்ற பாரம்பரிய நிகழ்வாக வும் இருக்கக்கூடிய ஜல்லிக்கட்டை தடைசெய் வது என்பதும் அது கண்டு பேசாமல் இருப்பதும் தமிழ் இனத்திற்கு அவ கெளரவத்தை கொடுக் கக்கூடியது. 
 
ஆகையால் தமிழகத்து இளைஞர்களும் அவர்களோடு இணைந்து தமிழகத்து மக்களும் நடத்திய ஆர்ப்பாட்டம் வெற்றி தந்தது. தமிழினத்தின் மரபுவழிப்பண்பாடு பாதுகாக்கப்பட்டது.
 
இந்த திருப்தியோடு தமிழ்மக்கள் ஒற்றுமைப்பட்டால் எதையும் சாதிக்கமுடியும் என்ற செய்தி சொல்லப்படுகின்றது. கூடவே ஜல்லிக்கட்டு மீதான தடை தமிழினத்தை உசார்ப்படுத்தியுள்ளது.
 
ஒற்றுமைப்படுத்தியுள்ளது. தமிழர் வீரத்தின் பக்கம் உலக நாடுகளை ஈர்த்துள்ளது என்ற உண்மைகளை நாம் அடிக்கடி நினைக்க வேண்டும். இந்த நினைப்பு எங்களுக்கு மிகவும் பலமானதாக இருக்கும். 
 

போராட்டக்காரர் முக்கால்வாசி கிணற்றை தாண்டிவிட்டனர்.
பிடிவாதக்கார முதலமைச்சர் ஜெயலலிதா இல்லை என்றவுடன் தமிழரை சுலபமாக ஏமாற்றலாம் என்று நினைத்தவர்களுக்கு மரண அடி விழுந்துள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.