Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“வவுனியா-பிரம்டன்” ஒப்பந்த நடவடிக்கை இடம்பெறவில்லை. நற்பெயரை இழக்கும் ஆபத்தில் பிரம்டன் மேயர்!

Featured Replies

வவுனியாவை பிரம்டன் நகருடன் சகோதர நகரமாக்குவது தொடர்பான தகவல்களில் உள்ள தவறுகளால் பிரம்டன் நகர முதல்வர் லிண்டா ஜெப்ரி அவர்கள் மிகவும் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துள்ளதாக பத்திரிகைகள் சுட்டிக் காட்டியுள்ளன.

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பிரம்டன் நகர மேயரைச் சந்திக்கச் சென்ற அன்று முதல்வர் நகரசபையில் பிரசன்னம் தரமால், விடுமுறை எடுத்துச் சென்றத சம்பவம் இடம்பெற்றிருந்ததோடு, அன்றைய தினம் கவுன்சில் கூட்டமும் இடம்பெறவில்லையென்ற போதும் “அடையாளத்திற்கான ஒரு சம்பிரதாய கூட்டமாக” சிலரைச் சந்தித்து விட்டு முதலமைச்சர் சென்ற நிகழ்வானது இந்த விவகாரத்தை ஏற்கனவே அடையாளம் காட்டியிருந்தது.

பிரம்டன் மேயர் தனது வவுனியாவை இணை நகரமாக்குவது தொடர்பான விவகாரத்தில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளார் என எழுதியுள்ள பிரம்டன் கார்டியன் பத்திரிகை அதற்கான காரணமாக டிசம்பர் 20ம் திகதி வெளியிடப்பட்ட முதல்வரின் அறிக்கையைச் சுட்டிக் காட்டியுள்ளது.

பிரம்டன் நகரம் அவ்வாறானதொரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதனால் அதன் அதிகாரிகள் இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை ஆராய்ந்து நகரசபைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையை நகரசபை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.

அவ்வாறான நிலைகள் ஏதும் ஏற்படததாலேயே பிரம்டன் மேயர் தன்னால் அழைக்கப்பட்ட விருந்தினரான விக்கினேஸ்வரன் வரும் போது தான் நகரசபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

இதேவேளை மார்க்கம் நகராட்சியுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் ஒரு “நட்பு நகர ஒப்பந்தமேயாகும்”[Friendship Agreement]. இதனைத் தமிழ் ஊடகங்கள் “இரட்டை நகர ஒப்பந்தம்”, “சகோதர நகர ஒப்பந்தம்” [Sister city Agreement / Twin City Agreement]. எனத் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தாலும்,

இது ஒரு வெறும் நட்பு நகர ஒப்பந்தமே என்பதும், இதனால் முல்லைத்தீவிற்கு பொருளாதார உதவிகளைச் செய்யவோ, அல்லது மனிதவள உதவிகளைச் செய்யவோ மார்க்கம் நகரம் முன்வராது [NO financial consideration / NO Human Resources Consideration] என்பதை கீழுள்ள அதன் ஒப்பந்த நகலில் காணலாம்.

கனடாவுக்கு வருகை தரும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இங்குள்ள இரண்டு நகரசபைகளோடு இரட்டை நகர் உடன்பாடு எழுதுவதற்கு வருவதாக பரப்புரை செய்யப்பட்டது. இந்தப் பிரச்சாரமே அவர் இங்கு தங்கியிருக்கும் வரையும் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அதில் உண்மையில்லை என்ற விவகாரம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தற்போது இந்த விவகாரத்தை வெளிக்கொணர்ந்திருக்கின்ற பிரம்ரன் நகரத்துக்கும் வவுனியா நகரத்துக்கும் இடையிலான ஒப்பந்தம் என்ற விவகாரத்தில், விக்னேஸ்வரனைச் சந்திப்பைத் தவிர்ப்பதற்காக மேயர் இந்த நாட்டிலேயே இல்லை. அவர் சுற்றுலா போய்விட்டார்.

முதல்வர் தான் தமிழர்களிற்காக வெளியிட்ட செய்திக் குறிப்பை அவமானத்தால் தனது இணையத்தில் இருந்து நீக்கியிருந்தாலும், பிரம்ரனின் நல்லாட்சிக்கும், சிறந்த நிர்வாகத்திற்குமான அமைப்பு Citizens For Better Brampton அவரது நீக்கப்பட்ட அறிக்கையை படமாக்கி அவரது செயலிற்கு ஜனவரி முதல் வாரத்திலேயே ஆட்சேபனை தெரிவித்திருந்தது.

பிரம்ரன் நகர உறுப்பினர்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவித்த காரணத்தால் அந்த செய்தி அறிக்கை பிரம்ரன் நகரின் உத்தியோக பூர்வ இணையதளத்தில் இருந்து அகற்றப்பட்டது. இது மேயருக்கும் பிரம்ரன் நகரத்துக்கும் பெரிய சங்கடத்தை [embarrassment] உண்டாக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஈழத்தமிழர்களிற்கும், கனடியத் தமிழர்களிற்கும் கூட மயங்கந் தரும் செய்திகளை இந்த விவகாரத்தில் வெளியிட்டு வந்த முதலமைச்சர் தரப்பு பத்திரிகைகளிற்கு தந்த அறிக்கைகளில் சாதித்ததாகக் உண்மைக்குப் புறம்பாகக் குறிப்பிட்ட விடயங்களிற்கு மேலாக தமிழர்கள் இந்த விவகாரத்தில் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதே கீழேயுள்ள இணைப்புக்களும், படங்களும் தெரிவித்து நிற்கும் செய்தியாகும்.

பிரம்டன் நகர முதல்வரிடம் இந்த ஒப்பந்தந் தொடர்பாக இரண்டு கேள்விகளை மின்னஞ்சலினூடாக கனடாவில் பதிவு செய்யப்பட்ட பத்திரிகையாளர் கேட்டதையறிந்த தமிழர்கள் ஊடகவியலாளருக்கு இடைஞ்சல் கொடுத்த போது, முதல்வர் தானாகவே பொலிசாரைத் தொடர்பு கொண்டு ஊடகவியலாளருக்கு ஏற்பட்டுள்ள இடைஞ்சலையறிந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரியவர் என்பது அவர் ஒரு நல்ல நடுநிலையாளர் என்பதைக் காட்டி நின்றது.

Screen-Shot-2016-12-30-at-3_33_59-PM

Markham-page-001

 

 

 

http://www.canadamirror.com/canada/78825.html

  • கருத்துக்கள உறவுகள்

sister city agreement ஐயும் friendship agreement இரண்டையும் போட்டு குழப்பியடித்திருக்கிறார்கள். இணையத்தள பக்கத்தையும் வேறு கடிதத்தின் இரண்டாவது பக்கத்தையும் சேர்த்து இணைத்து ஒரே ஆவணம்போல காட்டி தாங்கள் சொல்லும் கருத்துக்கு வலச்சேர்க்கவும் முயன்றிருக்கிறார்கள். இணைப்பக்கத்தில் எங்குமே friendship agreement என்ற சொல் பாவிக்கப்படவில்லை அதேபோல் இரண்டாம் பக்கத்தில் sister city agreement என்ற சமாசாரம் குறிப்படப்படவில்லை.

விக்கிக்கு சேறுபூசுவதற்கும் பொறிவைப்பதற்கும் நடக்கும் பல முயற்சிகளில் இதுவும் ஒன்று. ஆனால் ஈழத்தமிழனுக்கு organisation பற்றிய அறிவு எப்பவுமே இப்படித்தான். Government ஐ அரசு என்பார்கள் Committee ஐ நிர்வாகம் என்பார்கள் இப்படி பல உதாரணங்கள்.

3 hours ago, vanangaamudi said:

sister city agreement ஐயும் friendship agreement இரண்டையும் போட்டு குழப்பியடித்திருக்கிறார்கள். இணையத்தள பக்கத்தையும் வேறு கடிதத்தின் இரண்டாவது பக்கத்தையும் சேர்த்து இணைத்து ஒரே ஆவணம்போல காட்டி தாங்கள் சொல்லும் கருத்துக்கு வலச்சேர்க்கவும் முயன்றிருக்கிறார்கள். இணைப்பக்கத்தில் எங்குமே friendship agreement என்ற சொல் பாவிக்கப்படவில்லை அதேபோல் இரண்டாம் பக்கத்தில் sister city agreement என்ற சமாசாரம் குறிப்படப்படவில்லை.

விக்கிக்கு சேறுபூசுவதற்கும் பொறிவைப்பதற்கும் நடக்கும் பல முயற்சிகளில் இதுவும் ஒன்று. ஆனால் ஈழத்தமிழனுக்கு organisation பற்றிய அறிவு எப்பவுமே இப்படித்தான். Government ஐ அரசு என்பார்கள் Committee ஐ நிர்வாகம் என்பார்கள் இப்படி பல உதாரணங்கள்.

இதில் என்ன தான் உண்மை!

உங்களுக்கு தெரிந்திருந்தால் நாங்களும் அறிந்துகொள்ளலாம்.

  • தொடங்கியவர்

கைச்சாத்திட்ட உடன்படிக்கைகள் குறித்து வடக்கு முதல்வர் விளக்கம்

முல்லைத்தீவு- மார்க்கம் மற்றும் பிளம்ரன்- வவுனியா உடன்படிக்கைகள் ஊடாக வடமாகாண மக்கள் அதிகளவான நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாக சுட்டிக்காட்டியிருக்கும் வடமா காண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அந்த உடன்படிக்கை காத்திரமானது அல்ல என பலர் விமர்சிப்பதற்கு காரணம் அவை தற்போது தொடக்க நிலையில் இருப்பதேயாகும் எனவும் கூறியுள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் அண்மையில் வெளிநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற் கெண்டு முல்லைத்தீவு- மார்க்கம், மற்றும் வவுனியா- பிளம்ரன் ஆகிய நகரங்களுக்கிடையிலான இரு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருந்தார்.

மேற்படி உடன்படிக்கைகள் தொடர்பாகவும், அதனால் வடக்கு மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் கேட்டபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

அண்மையில் வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டு மேற்படி இரு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டிருக்கின்றேன்.

இந்த உடன்படிக்கைகளை சகோதரி நகர் உடன்பாடு, நட்புறவு உடன்பாடு என வகைப்படுத்துவார்கள்.

இதில் முதற்கட்டமாக நட்புறவு உடன்பாட்டையே செய்வார்கள். அவ்வாறு நட்புறவு உடன்பாடு செய்யப்பட்டால் அது நடைமுறை ப்படுத்தப்பட்டே ஆகவேண்டும். அதன் பின்னர் சகோதரி நகர் உடன்பாடு கைச்சாத்திடப்படும்.

இந்நிலையில் நாங்கள் தற்போது பூர்வாங்க ஆய்வுகளை நடத்தி நட்புறவு உடன்பாட்டை செய்திருக்கின்றோம்.

அதன் பின்னர் அடுத்த கட்டம் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் கூடிய வலுவுள்ளவற்றை செய்யாமல் இதை செய் கிறீர்களே? என சிலர் கேட்கிறார்கள். இந்த உடன்படிக்கை ஒரு பூர்வாங்க நடவடிக்கையாகவே செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கையில் ஒன்றுமே இல்லாமல் வெளிநா டு சென்ற ஒருவர் தற்போது வெளிநாட்டில் மிக நல்ல நிலையில் வாழ்கிறார். அவர் இங்கே பல திட்டங்க ளை செய்ய விரும்புகிறார்.

அதனடிப்படையில் தற்போது அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளும் செய்யப் படுகின்றது. அவர் நிச்சயமாக செய்வார். இப்படி பலர் ஆர்வத்துடன் இருக்கின்றார்கள்.

எனவே இந்த உடன்படிக்கைகள் ஊடாக வடமாகாண மக்களுக்கு பலன நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள் ளது. குறிப்பாக பாரிய தொழில் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கா ன செயற்றிட்டங்களை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு பல திட்டங்களை செய்யலாம். அதற்கான பூர்வாங்க ஆய்வுகளை செய்து வருகின்றோம்.

இந்நிலையில் இந்த உடன்படிக்கைகள் காத்திரமானது அல்ல என விமர்சிக்கப்படுவதற்கு காரணம் இவை தொடக்க நிலையில் இருப்பதேயாகும் என முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://www.tamilwin.com/politics/01/133278?ref=morenews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.