Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் உறவுகளின் உண்ணாவிரதம் தொடர்கிறது ; ஆதரவாக தமிழ் அரசியல் கைதிகளும் போராட்டத்தில் குதிப்பு

Featured Replies

வவுனியாவில் உறவுகளின் உண்ணாவிரதம் தொடர்கிறது ; ஆதரவாக தமிழ் அரசியல் கைதிகளும் போராட்டத்தில் குதிப்பு

 

 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிடக்கோரியும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியா தபால் நிலையம் அருகே இன்றைய தினம் 3 ஆவது நாளாக உண்ணாவிர போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

fsafa.jpg

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடுமுழுவதும் உள்ள தமிழ் அரசியல் கைதிகள்அனைவரும் நாளை வியாழக்கிழைமை ஒருநாள் அடையாள உண்ணவிரத போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து 5 முக்கிய அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணவிரத போராட்டதை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்துள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் உடல்நிலை மிகவும் சோர்வடைந்து காணப்பட்டதால் மருத்துவர்கள் அவ்விடத்துக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

அவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள், இளைஞர்கள் உட்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அரசியல் கைதிகளும் தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 10 பேரும் அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 18 பேரும் கண்டி தும்பர சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 19 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 10 பேரும் அத்துடன் ஏனைய சிறகைளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஒன்றிணைந்து ஒருநாள் அடையாள உண்ணவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்தந்த சிறைச்சாலை நிர்வாகத்தினருக்கு அறிவித்துள்ளனர்.

 

பூஸா முகாமில் இரண்டாயிரம் பேரை தடுத்து வைத்திருக்கும் பிரிவில் இரண்டு பேரை மாத்திரம் தடுத்து வைத்திருப்பதை கண்டித்தும் தம்மை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரியும் 2 தமிழ் அரசியல் கைதிகள் இன்றில்  இருந்து உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பத்துள்ளனர்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட தங்கராசா விமலன் மற்றும் கனகரத்தினம் ஆதித்தன் ஆகிய இருவரும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு நீதிமன்றில் அவர்களின் வழக்கு இடம்பெற்று வந்தது. பின்னர் 2012 ஆம் ஆண்டு மேலதிக விசாரணைக்கான பூஸா முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு 15 கீழ் 1 என்ற பிரிவில் இன்றுவரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரம் பேர் தடுத்து வைக்கக்கூடிய அப் பிரிவில் 2 பேர் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். தாம் காரணம் தெரியாமல் அங்கு தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தம்மை தங்கலை சிறைக்கு மாற்றி தமது வழக்கு விசாரணைகள் இடம்பெற வேண்டும் என கோரி இன்றில் இருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். தமது நிலை அறிந்து தமிழ் அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கவனம் எடுத்து குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு இரு அரசியல் கைதிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை அரசால் உரிய தீர்வு அறிவிக்கும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என உறவினர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/

  • கருத்துக்கள உறவுகள்

16195613_1399238766792889_66267885862877

வவுனியாவில் இரண்டாவது நாளாக தமது காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடருகின்றனர்.

7 வருடங்களாக பொறுத்து பொறுத்து பார்த்தவர்கள் இனியும் பொறுக்க முடியாது என்பதால் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

•அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்ட வேண்டும்

•காணாமல் போனோர் பிரச்சனைக்கு முடிவு காணப்பட வேண்டும்

•பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனே நீக்க வேண்டும்

அவர்கள் முன்வைத்துள்ள மேற்கண்ட 3 கோரிக்கைளும் நியாயமானவை. எனவே அவற்றை நிறைவேற்றுமாறு குரல் கொடுக்க வேண்டியது அனைத்து தமிழ் மக்களினதும் கடமையாகும்.

சர்வதேச மன்னிப்பு சபைகூட பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசு நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளது.

ஆனால் இலங்கை அரசோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மிக இலகுவாக காலம் கடத்துகிறது. அதற்கு ஜ.நா வும் மேலும் தவணை வழங்குகிறது.

தமிழ் மக்களின் வாக்கில் பதவியைப் பெற்றுள்ள அரசு தமிழ் மக்களை ஏமாற்றுகிறது. அதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்குகிறது.

இனியும் இந்த அயோக்கியதனம் தொடர அனுமதிக்க முடியாது. தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இதற்கு ஒரு முடிவு காண வேண்டும்.

தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் உலகில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபடுவார்கள் என்பதை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்த்தோம்.

எனவே தமிழ் மக்கள் அனைவருக்கும் இப் பிரச்சனையை கொண்டு சேர்ப்போம். அனைவரும் இதற்காக ஒன்று திரள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடம்

 

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

fase.jpg

வவுனியாவில் காணாமற்போனோர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் காலவரையறையற்ற உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்றும் மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

feeq.jpg 

இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நால்வரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

fgg.jpg

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வைத்தியர்கள் குழுவினர் பரிசோதனை நடாத்தியதுடன் தொடர்ந்தும் உண்ணாவிரதம் மேற்கொண்டால் மேலும்  உடல் நிலை கவலைக்கிடமாக வாய்ப்புள்ளதாகவும் வைத்தியர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

fsfff.jpg

எனினும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

gerwd.jpg

http://www.virakesari.lk/article/15829

  • தொடங்கியவர்

சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் இளைஞர்கள் சிலர் இணைவு

 


சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் இளைஞர்கள் சிலர் இணைவு
 

வவுனியாவில் முன்னெடுக்கப்படும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் இளைஞர்கள் சிலர் இன்று இணைந்துகொண்டனர்.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் பதில் கூறப்பட வேண்டும் எனும் கோரிக்கையுடன் கடும் மழைக்கு மத்தியிலும் மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்கின்றது.

வவுனியா தபால் நிலையத்திற்கு அருகில் கடந்த திங்கட்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

தற்காலிகக்கூடாரம் அமைத்து, இரவு பகலாக தொடர்ச்சியாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

காணாமற்போனோரின் உறவினர்களால் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அரசியல் கைதிகளின் உறவினர்கள் சிலர் பின்னர் இணைந்து கொண்டனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், 55 முதல் 70 வரையான வயதுகளை உடையவர்கள் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இன்று சென்றிருந்தார்.

வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்திலிருந்தும் பொதுசன தொடர்பாடல் அதிகாரியொருவர் உண்ணாவிரதம் இடம்பெறும் இடத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், உண்ணாவிரதத்தை வலுப்படுத்தி தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இளைஞர்கள் சிலரும் இன்று போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த சிலர் வலுவிழந்த நிலையில், அவர்களை இன்று மாலை வைத்தியர்கள் பரிசோதித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காணாமலாக்கப்பட்டவர்களுக்கு பதில் கூறப்பட வேண்டும், சகல அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://newsfirst.lk/tamil/2017/01/சாகும்-வரையிலான-உண்ணாவிர/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

C3CW9AbXAAI_3Ez.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.