Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா - இங்கிலாந்து 20 ஓவர் போட்டி செய்திகள்

Featured Replies

இந்தியா - இங்கிலாந்து 20 ஓவர் போட்டி கண்ணோட்டம்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 20 ஓவர் போட்டிகள் பற்றி சில கண்ணோட்டங்களை பார்ப்போம்.

 
 
இந்தியா - இங்கிலாந்து 20 ஓவர் போட்டி கண்ணோட்டம்
 
இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் முதல் முறையாக 2007-ல் மோதின. தென்ஆப்பிரிக்காவில் நடந்த உலககோப்பையில் இந்தியா 18 ரன்னில் வெற்றி பெற்றது.

இரு அணிகளும் இதுவரை 8 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 3 ஆட்டத்திலும், இங்கிலாந்து 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்திய அணி 2007-ல் டர்பன் மைதானத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன் குவித்ததே இங்கிலாந்துக்கு எதிரான அதிகபட்ச ஸ்கோராகும். அந்த அணி அதிகபட்சமாக 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்து இருந்தது.

விராட்கோலி 6 ஆட்டத்தில் 184 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இங்கிலாந்து கேப்டன் மோர்கன் 176 ரன் எடுத்து அதற்கு அடுத்த நிலையில் உள்ளார். அவர் 71 ரன் எடுத்ததே தனிப்பட்ட வீரரின் அதிகபட்சமானது. ஹர்பஜன்சிங் அதிக பட்சமாக 8 விக்கெட் கைப்பற்றி உள்ளார். டென்பெஞ்ச் 7 விக்கெட் எடுத்துள்ளார்.

ஹர்பஜன் 12 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியதே சிறந்த பந்துவீச்சு ஆகும்.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/25130511/1064090/T20-match-overview-about-India-vs-England.vpf

  • தொடங்கியவர்

கான்பூரில் நாளை முதல் ஆட்டம்: 20 ஓவர் தொடரிலும் இந்தியா ஆதிக்கம் நீடிக்குமா?

இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் முத்திரை பதித்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நாளை நடக்கும் 20 ஓவர் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்துமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
கான்பூரில் நாளை முதல் ஆட்டம்: 20 ஓவர் தொடரிலும் இந்தியா ஆதிக்கம் நீடிக்குமா?
 
கான்பூர்:

மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே நவம்பர்- டிசம்பரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று இருந்தது.

அடுத்து இரு அணிகள் இடையே 20 ஓவர் போட்டி நடைபெறுகிறது. இந்தியா-இங்கிலாந்து இடையேயான மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் கான்பூரில் நாளை (26-ந்தேதி) நடக்கிறது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் முத்திரை பதித்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்துமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலி, டோனி, யுவராஜ்சிங், ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஒருநாள் போட்டியில் தொடக்கம் சரியாக அமையவில்லை. ராகுலும், தவானும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் ஆடினார்கள். இதில் தவான் 20 ஓவரில் இடம் பெறவில்லை. இதனால் நாளைய போட்டியில் ராகுலுடன் மனிஷ் பாண்டே தொடக்க வீரராக இடம் பெறலாம்.

ஒருநாள் தொடரில் அதிரடியாக விளையாடிய கேதர் ஜாதவ் 20 ஓவர் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. சுரேஷ் ரெய்னா அவர் இடத்தை பிடித்திருக்கிறார்.

முன்னணி சுழற்பந்து வீரர் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. பர்வேஷ், அமித் மிஸ்ரா ஆகியோருக்கு அவர் இடத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேகப் பந்தில் புவனேஸ்வர் குமார், பும்ரா, ஆசிஷ் நெக்ரா உள்ளனர்.

கொல்கத்தாவில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இருந்ததால் இங்கிலாந்து அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

கேப்டன் மோர்கன், ஜோரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி, ஹால்ஸ், டேவிட் வில்லி, பட்லர் போன்ற சிறந்த வீரர்கள் இங்கிலாந்து அணியில் உள்ளனர்.

மேலும் அந்த அணி கடைசியாக இந்தியாவுக்கு எதிராக விளையாடிய கடைசி இரண்டு 20 ஓவர் போட்டியிலும் வெற்றி பெற்று இருந்தது. இதனால் அந்த அணி 20 ஓவர் தொடரையாவது வென்று விடவேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிராக தான் யுவராஜ்சிங் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து முத்திரை பதித்திருந்தார். இதனால் அவரது அதிரடி ஆட்டத்தை காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய ஆட்டம் மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் மற்றும் தூர்தர்சனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ராகுல், மனிஷ் பாண்டே, யுவராஜ்சிங், டோனி, ரெய்னா, ஹர்த்திக் பாண்டியா, அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், ஆசிஷ் நெக்ரா, பர்வேஷ், பும்ரா, மன்தீப்சிங், ரிஷப் பண்ட், யசுவேந்திரஷால்.

இங்கிலாந்து: மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஹால்ஸ், ஜோரூட், மொய்ன்அலி, பென் ஸ்டோக்ஸ், பட்லர், சாம் பில்லிங்ஸ், ஜேக்பால், டாசன், கிறிஸ் ஜோர்டான், புளுன்செட், மில்ஸ், ஆதில் ரஷீத், டேவிட் வில்லி.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/25110737/1064048/India-vs-England-first-t20-match-tomorrow-start-in.vpf

  • தொடங்கியவர்

வைடு யார்க்கர்கள் வீச வேண்டாம்: எச்சரிக்கும் தோனியின் பேட்டிங் சிறப்புப் பயிற்சி

 

 
தோனி, யுவராஜ். | கோப்புப் படம்: கே.ஆர்.தீபக்.
தோனி, யுவராஜ். | கோப்புப் படம்: கே.ஆர்.தீபக்.
 
 

கேப்டன் பொறுப்பை உதறியது முதல் தோனி மிகவும் மகிழ்ச்சியுடன் கிரிக்கெட் ஆட்டத்தை ஆடி வருகிறார். இதன் வெளிப்பாடாக அவரது அதிரடியைக் கட்டுப்படுத்த எதிரணிகள் கடைபிடிக்கும் ஆஃப் திசை வைடு யார்க்கர்கள் உத்தியை முறியடிக்க சிறப்புப் பயிற்சியை தோனி மேற்கொண்டு வருகிறார்.

2011 ஆஸ்திரேலியா தொடர் முதலே தோனிக்கு வைடு யார்க்கர்களை வேகப்பந்து வீச்சாளர்களும், ஸ்பின்னர்களுமே கூட வீசி வந்தனர், என்னதான் வாரிக்கொண்டு அடித்தாலும் கவர், மிட் ஆஃபைத் தாண்டாது, ஒரு ரன் கிடைக்கும், இதனால் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் குறைந்ததோடு, வெற்றிகரமான விரட்டல் வீரர், நிறைவு செய்யும் வீரர் என்ற பெயர் தோனியிடமிருந்து தொலைந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் கான்பூரில் நாளை தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்த ‘வைடு யார்க்கர்’ உத்தியை முறியடிக்க சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டார் தோனி.

இந்திய அணியில் தற்போது வேகமான யார்க்கர்களை வீசி வரும் ஜஸ்பிரீத் பும்ராவை அழைத்து வைடு யார்க்கர்களை வீசச் செய்தார் தோனி.

அதாவது ஆஃப் ஸ்டம்பிலிருந்து பக்கவாட்டில் தன்னுடைய பேட் நீளத்துக்கு ஒரு இடத்தில் வெள்ளை கூகபரா பந்தை அந்த இடத்தில் வைத்தார். அதாவது பும்ரா வீச வேண்டிய லைனைக் குறிக்கும் வைடு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயான யார்க்கரை வீச வேண்டிய அடையாளம் அது.

பிறகு பும்ராவை அந்த இடத்தில் தொடர்ச்சியாக வீசுமாறு தோனி அறிவுறுத்தினார். ஆனால் அந்த வைடு யார்க்கர்களை அடித்து நொறுக்கினால் பயன் தராது என்பதால் அதனை மட்டையால் திருப்பி விடும் பயிற்சியை மேற்கொண்டார் தோனி.

டி20, ஒருநாள் கிரிக்கெட்டில் டீப் பாயிண்ட், டீப் தேர்ட் மேன் திசையில் கடைசி ஓவர்களில் வீரர்களை நிறுத்த மாட்டார்கள். அங்கு பந்து செல்லாதவாறு பவுலர்கள் வீச வேண்டும். அதற்கு வைடு யார்க்கரும் ஒரு உத்தி. இந்தப் பந்தை இடைவெளி இருக்கும் அப்பகுதியில் திசைதிருப்பி விட்டால் 4 ரன்கள் கிடைக்கும். இதைத்தான் தோனி பயிற்சி செய்து வருகிறார்.

இது குறித்த சிறிய வீடியோவை பிசிசிஐ.டிவி வெளியிட்டுள்ளது.

இதில் தோனி, பும்ரா வீசிய வைடு யார்க்கர்களை கற்பனையான பாயிண்ட் பீல்டருக்கு இடது புறம் திருப்பி விட்டு ஷாட் ஆடிக்காட்டினார்.

கேப்டனாக இருக்கும் போது ஏகப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்புகள், அணிக்கூட்டங்கள், பயிற்சியாளருடன் சந்திப்பு என்று பயிற்சிக்கு நேரமில்லாததால் அவரது பேட்டிங் பாதித்தது, ஆனால் தற்போது தனது முழு ரேஞ்ச் ஷாட்களையும் ஆடும் முனைப்புடன் தனது எதிரியான வைடு யார்க்கர்களையும் பதம் பார்க்க களமிறங்கிவிட்டார் தோனி. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம்.

எதிரணியினர் இந்த ஷாட்டைக் கட்டுப்படுத்த பீல்டரை நிறுத்தினால் தோனி பலமாக ஷாட்களை ஆடும் பகுதியில் பீல்டரை நிறுத்த வாய்ப்பில்லை, எனவே இதில் தோனி இரட்டை உத்தியைக் கடைபிடிக்கிறார். இந்த ஷாட் வெற்றியடைந்தால் நிச்சயம் அவரைக் கட்டுப்படுத்த முடியாது, அப்படி பீல்டரை நிறுத்தி கட்டுப்படுத்தினால் காலியாக இன்னொரு இடம் தோனி வெளுத்துக் கட்டும் ஒரு இடமாக இருக்கும்.

நாளை கான்பூரில் தோனி இந்த வைடு யார்க்கரை எப்படி ஆடுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

http://tamil.thehindu.com/sports/வைடு-யார்க்கர்கள்-வீச-வேண்டாம்-எச்சரிக்கும்-தோனியின்-பேட்டிங்-சிறப்புப்-பயிற்சி/article9502031.ece

  • தொடங்கியவர்

'150 கி.மீ புயலான இவர்தான் எங்கள் 'கொம்பன்'!' - இங்கிலாந்தின் கெத்து

இங்கிலாந்து பவுலர் தைமல் மில்ஸ்தான் இப்போதைக்கு கிரிக்கெட் உலகின் ஹாட் டாபிக். டெஸ்ட் விளையாட மாட்டேன், ஒருநாள் போட்டி விளையாட மாட்டேன், டி - 20 போட்டியில் மட்டும்தான் ஆடுவேன் என சொல்லியடித்து கலக்குறார் கைல் மில்ஸ். கோஹ்லியோ, தோனியோ, யுவராஜோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடும் சவால் கொடுக்கக் கூடிய பவுலர் இவர்தான் என தைமல் மில்ஸை அடையாளம் காட்டுகிறது இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம்.

இங்கிலாந்து பவுலர்  கைல் மில்ஸ்

யார் இந்த  தைமல் மில்ஸ்?

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் கைல் மில்ஸ். டியூஸ்பெரியில் பிறந்தவர். பொதுவாக இங்கிலாந்து அணியில் ஸ்விங் செய்யும் பந்து வீச்சாளர்கள் அதிகம் இருப்பார்கள். பவுன்சரும், ஸ்விங்கும் இருந்தால் போதும்  இங்கிலாந்து ஆடுகளங்களில் அசத்திவிடலாம் என்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுவதுதான் இங்கிலாந்து  அணிக்குள்  நுழைய முயற்சிக்கும் வேகப்பந்து வீச்சாளர்களின் பழக்கம்.

நிலைமை இப்படி இருக்க, அதிவேகமாக பந்து வீச வேண்டும் என்பதையே ஆசையாகக் கொண்டு இளம் வயதில் இருந்தே பயிற்சி எடுத்து வந்த இங்கிலாந்து பவுலர்தான் தைமல் மில்ஸ். இதற்காக பல முறை இவருக்கு முதுகுத்தண்டு மற்றும் மூட்டு பகுதிகளில் அடி பட்டிருக்கிறது. நம்மூருக்கு அதிவேகம் தேவையே கிடையாது, அதிவேகமாக பந்து வீசுவதில் கவனம் செலுத்தினால் ஸ்விங் செய்ய மிகவும் சிரமமாக இருக்கும். 130 கி.மி வேகத்தில் பந்து வீசி பழகு என சொன்னால், ‛இல்லை என்னால் முடியும், ஒருநாள் ஷான் டெயிட், சோயிப் அக்தர் சாதனைகளை உடைப்பேன், பொறுத்திருந்து பாருங்கள்’ என மென்மையாகச் சொல்லிவிட்டு மீண்டும் கடுமையான பயிற்சிக்குத் தயாராவது இவரது வழக்கம்.

உள்ளூர் போட்டிகளில் ஆடியதில் பெரிய அளவில் விக்கெட்டுகள் கிடைக்கவில்லை எனினும் இவரது வேகத்தை பார்த்த டி20 கிரிக்கெட் நடத்தும் கிளப் அணிகள் வலை விரித்தன. நாட்வெஸ்ட் டி20 தொடராக இருந்தாலும் சரி, பிக்பாஷ் போட்டிகளாக இருந்தாலும் சரி அடிக்கடி 150  கி.மீ  வேகத்தில் பந்துவீசுவதை லட்சியமாக வைத்திருக்கிறார். சராசரியாகவே ஒரு ஓவரை 140 கி.மீ வேகத்தில் பந்து வீசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

நாட்வெஸ்ட் டி20 தொடர் ஒன்றில் கிறிஸ் கெயிலை இவர் அவுட்டாக்கிய விதம், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் அத்தனை பேரின் புருவத்தையும் உயர்த்த வைத்தது. கெயிலுக்கு எதிராக சுமார் 151 கி.மீ வேகத்தில் இவர் வீசிய பந்து அவரை ஏமாற்றி ஸ்டம்புகளை பதம் பார்த்தது. அந்த  வீடியோ அப்போதே பரபரப்பாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இன்னொரு முறை 152 கி.மி வேகத்தில் பந்து வீசினார் மில்ஸ். இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வேகமாக பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு இங்கிலாந்து அணி இவரை அடையாளம் கண்டு கொண்டது. கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு டி20 போட்டியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதோ  இப்போது இந்திய அணிக்கு எதிரான போட்டியில் முக்கிய ஆயுதமாக இவரை பட்டைத் தீட்டி வருகின்றது. அஷ்வின், ஜடேஜா என இந்தியாவில் முக்கிய பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்து அணி பவுலிங் வரிசையை வலு கூட்டி வருகிறது

விராட் கோஹ்லியை அடக்குவதற்கு இவரே சரியான நபர் என கருதுகிறது இங்கிலாந்து அணி. இந்திய அணிக்கு எதிரான டி20 தொடர் குறித்து தைமல் மில்ஸ் பேசுகையில் ‛‛நியூசிலாந்து மைதானங்கள் சிறியது, அதில் பெரிய டென்ஷன் இல்லை, பிபிஎல் ஆடும் போது சுமார் 40 - 50 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் ஆடினேன். அதில் கொஞ்சம் பதற்றம் இருந்தது. இதோ இப்போது இந்தியாவில் கொல்கத்தாவில் நடக்கவிருக்கும் டி-20 போட்டியில் சுமார் 70 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் ஆட வேண்டும். இப்போது பயமில்லை, ஆனால்  பொறுப்பு கூடியிருக்கிறது. எனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. என்னை சரியான முறையில் நிரூபிக்க முடியும் என நம்புகிறேன்’’ என பாசிட்டிவாகச் சொல்லியிருக்கிறார். 

http://www.vikatan.com/news/sports/78806-150-km-speed-bowler-the-secret-weapon-for-england-in-this-t20-series.art

  • தொடங்கியவர்

20 ஓவர் தொடரையும் இந்தியா வெல்லும்: விராட் கோலி

இந்தியா டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றி இருப்பதால் 20 ஓவர் தொடரையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

 
20 ஓவர் தொடரையும் இந்தியா வெல்லும்: விராட் கோலி
 
கான்பூர்:

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது.

மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை தூர்தர்சன் மற்றும் ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது. இதேபோல 20 ஓவர் தொடரையும் கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

20 ஓவர் போட்டி தொடர்பாக இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

இங்கிலாந்து அணி 20 ஓவர் ஆட்டத்துக்காக இடது கை வேகப்பந்து வீரரான மில்சை புதுமுக வீரராக அறிமுகப்படுத்துகிறது. 90 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய அவரது பந்துவீச்சை கண்டு நாங்கள் கவலைப்படவில்லை.

இங்கிலாந்து அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்பது எந்த சந்தேகமும் இல்லை. நாங்கள் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றி இருப்பதால் 20 ஓவர் தொடரையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி பலத்துடன் திகழ்கிறது. இதனால் 11 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்வது சவாலானது. அனுபவம் வாய்ந்த வீரர்களும், புதுமுக வீரர்களும் அணியில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/26140613/1064316/Virat-kohli-says-india-win-20-over-series.vpf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

#CricketUpdates: இந்தியா பேட்டிங்!

India England First T20

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி கான்பூரில் நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இதில் ஜடேஜா மற்றும் அஸ்வினுக்கு ஓய்வு கொடுத்து அவர்களுக்கு பதிலாக மிஸ்ரா மற்றும் ரசூல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  • தொடங்கியவர்

இந்தியா 123/6

  • தொடங்கியவர்
இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 147 ரன்கள்
 
இங்கிலாந்துக்கு 148 ரன்கள் இலக்கு 
 
இந்தியா சார்பில் அதிகபட்சமாக தோனி 36 ரன்கள்
  • தொடங்கியவர்

முதல் டி20: இங்கிலாந்து பந்துவீச்சில் இந்தியா திணறல்

 

ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்த ரெய்னா | படம்: ஏபி
ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்த ரெய்னா | படம்: ஏபி
 
 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில், முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 147 ரன்களை எடுத்தது. இங்கிலாந்தின் கட்டுப்பாடான பந்துவீச்சில் இந்திய வீரர்கள் 7 பேர் ஆட்டமிழந்தனர்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. கேப்டன் கோலி, ராகுலுடன் களமிறங்கினார். முதல் 4 ஓவர்களில் 33 ரன்கள் வர இந்தியா சிறப்பான துவக்கத்தைப் பெற்றது.

8 ரன்கள் எடுத்திருந்த ராகுல் ஜோர்டன் பந்தில் ஆட்டமிழந்தார். ரெய்னா களமிறங்க, அடுத்த சில ஓவர்களில் கோலி 29 ரன்களுக்கு வெளியேறினார். இதற்கு பின் ஆட வந்த யுவராஜ் சிங் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடி வந்த ரெய்னா 34 ரன்களுக்கு வீழ்ந்தார்.

தொடர்ந்து மனீஷ் பாண்டே 3, பாண்ட்யா 9 என ஆட்டமிழக்க 19 ஓவரில் இந்திய அணி 135 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

கடைசி ஓவரில் தோனி சற்று ஆறுதல் தந்தார். முதல் பந்திலும், கடைசி பந்திலும் 2 ரன்கள், நடுவில் 2 பவுண்டரி என 12 ரன்களை தோனி சேர்த்தார். 4வது பந்தில் மறுமுனையில் இருந்த ரசூல் ரன் அவுட் ஆக, இந்திய 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் என்ற நிலையில் தனது இன்னிங்ஸை முடித்தது.

சிறப்பான துவக்கத்துக்குப் பிறகு இந்தியா கண்டிப்பாக நல்ல ஸ்கோரை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்தின் பந்துவீச்சு இந்தியாவை 147 ரன்களுக்கு கட்டிப்போட்டது.

http://tamil.thehindu.com/sports/முதல்-டி20-இங்கிலாந்து-பந்துவீச்சில்-இந்தியா-திணறல்/article9503066.ece?homepage=true

  • தொடங்கியவர்

முதல் இருபது-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

 

258400.jpg

கான்பூரில் இன்று இரவு நடைபெற்ற முதல் இருபது20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபது20 கிரிக்கெட் தொடர் இன்று கான்பூரில் ஆரம்பமானது. 

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் மோர்கன்  முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள முடிவு செய்தார். 

இந்திய அணியில் ரெய்னா, புதுமுக வீரராக பர்வேஸ் ரசூல் ஆகியோர் இடம்பிடித்தனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணியில் டோனி 36 ரெய்னா 34 மற்றும் கோலி 29 ஓட்டங்களை பெற்றனர்.

 பின்னர் 148 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ரோய், பில்லிங்ஸ் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களம் இறங்கினார்கள். 

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 3.2 ஓவரில் 42 ஓட்டங்களை குவித்தது. 2ஆவது ஓவரை பும்ப்ரா வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ், மூன்று பவுண்டரிகளுடன் 20 ஓட்டங்களை; விளாசினார் பில்லிங்ஸ்.

 

4ஆவது ஓவரில் சாஹல் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 3ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோ ரூட், மோர்கன் நெருக்கடி இல்லாமல் எளிதாக விளையாடினார்கள். 

இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டுக்காக 83 ஓட்டங்களை பெற்ற போது மோர்கன் 38 பந்தில் 51 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.  

 

4ஆவது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். 18.1 ஓவரில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ஜோ ரூட் 46 ஓட்டங்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 2 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

 

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருபது20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2ஆவது இருபது20 கிரிக்கெட் போட்டி 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாக்பூரில் நடைபெறவுள்ளது.

http://www.virakesari.lk/article/15892

  • தொடங்கியவர்

இன்று 2-வது 20 ஓவர் ஆட்டம்: புதுமுக வீரர் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு

 

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடக்கிறது. இதில் புதுமுக வீரர் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
இன்று 2-வது 20 ஓவர் ஆட்டம்: புதுமுக வீரர் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு
 
நாக்பூர்:

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம் ஸ்டார் கிரிக்கெட் மற்றும் தூர்தர்சனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

கான்பூரில் நடந்த 20 ஓவர் ஆட்டத்தில் இந்தியா அதிர்ச்சிகரமாக தோற்று இருந்தது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி பழி தீர்க்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இங்கிலாந்தை வீழ்த்த முடியும். அந்த அணியின் ஜோர்டான் மிகவும் நேர்த்தியாக பந்து வீசி வருகிறார். அவர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக விளங்குவார்.

இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ராகுலின் பேட்டிங் மோசமாக இருக்கிறது. ஒரு நாள் தொடரில் அவர் 24 ரன்களே எடுத்தார். இதனால் அவர் நீக்கப்பட்டு புதுமுக வீரர் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை அந்த அணியில் எந்தவித மாற்றமும் செய்யாமல் முதல் போட்டியில் ஆடிய வீரர்களே இடம் பெற்று இருப்பார்கள்.

இந்திய அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடனும், இங்கிலாந்து அணி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/29114532/1064890/Newcomer-player-the-opportunity-Rishabh-Pant-in-2nd.vpf

  • தொடங்கியவர்
India 144/8 (20/20 ov)
England 139/6 (20/20 ov)
India won by 5 runs
  • தொடங்கியவர்
2 ஆவது இருபது20 போட்டியில் இங்கிலாந்தை வென்றது இந்தியா
2017-01-29 22:36:04

இங்கிலாந்துடனான சர்வதேச இருபது20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 5 ஓட்டங்களால் வென்றது.

 

22054india-beat-england-2.jpg


நாக்பூர் நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்களைப் பெற்றது.

 

 லோகேஷ்  ராகுல் 47 பந்துகளில் 71 ஓட்டங்களையும், மனீஷ் பாண்டே 26 பந்துகளில் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிகிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 139  ஓட்டங்களையே பெற்றது.


கடைசி பந்தில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்டன. பம்ரா வீசிய அப்பந்தை எதிர்கொண்ட மோயின் அலி ஓர் ஓட்டத்தைப் பெற்றார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=22054#sthash.48Fh8lEi.dpuf

பும்ரா அபார பந்து வீச்சு : பரபரப்பான போட்டியில் இந்தியா திரில் வெற்றி

 

india-vs-england-live-bumrah.jpg

நாக்பூரில் நடந்த இங்கிலாந்து-இந்திய அணிகளுக்கிடையேயான இரண்டாவது இருபது-20 கிரிக்கெட் போட்டியில் பும்ராவின் அபார பந்து வீச்சியுடன் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபது20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

மூன்று போட்டிகளை கொண்ட இத் தொடரில் கன்பூரில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் தீர்க்கமான இரண்டாவது போட்டி நாக்பூரில் நடைபெற்றது.

இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்தும், முதல் வெற்றியை பதிவு செய்ய இந்தியாவும் களமிறங்கியுள்ளதால் இப்போட்டி பரபரப்பாக அமைந்திருந்தது.

 முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதலில்  20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக இந்திய அணியில் லோகேஷ் ராகுல் 71 ஓட்டங்களை பெற்றார். மணிஷ் பாண்டே 30 ஓட்டங்களை எடுத்தார். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

 அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி , 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்று   5 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய நெஹ்ரா 3, பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

http://www.virakesari.lk/article/15984

  • தொடங்கியவர்

ஜோரூட் அவுட் சர்ச்சை: மேட்ச் நடுவரிடம் இங்கிலாந்து முறையீடு

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஜோரூட் அவுட் சர்ச்சை குறித்து போட்டி நடுவரிடம் தெரிவிக்க உள்ளதாக இங்கிலாந்து அணி கேப்டன் தெரிவித்தார்.

 
ஜோரூட் அவுட் சர்ச்சை: மேட்ச் நடுவரிடம் இங்கிலாந்து முறையீடு
 
நாக்பூர்:

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 144 ரன்கள் எடுத்தது. 145 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 139 ரன்களே எடுத்தது.

பரபரப்பான ஆட்டத்தின் கடைசி ஒவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது. பும்ரா அந்த ஓவரை சிறப்பாக வீசி, வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் (ஜோருட், பட்லர்) சாய்த்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.

இந்நிலையில், கடைசி ஓவரில் ஜோரூட் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது. பும்ரா வீசிய முதல் பந்தில் அவருக்கு நடுவர் எல்.பி.டபிள்யூ கொடுத்தார். ஆனால் டெலிவிசன் ரீபிளேயில் பந்து பேட்டில் பட்டு தான் காலில் விழுந்தது தெளிவாக தெரிந்தது. ஏற்கனவே டிஆர்எஸ் முறையை பயன்படுத்திவிட்டதால், இப்போட்டியில் அவர்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லை.

எனவே, நடுவரின் இந்த முடிவால் இங்கிலாந்து கேப்டன் மார்கன் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்தார். இதுகுறித்து மேட்ச் நடுவரிடம் முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

‘அடுத்த போட்டிக்கு முன்னதாக நடுவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. வழக்கமாக, போட்டி முடிந்ததும் நடுவர் மூலம், எங்கள் கருத்துகக்ள் அடங்கிய அறிக்கையை வழங்குவோம். இந்த முறை, ஜோரூட்டின் சர்ச்சைக்குரிய அவுட் குறித்தும் அதில் பதிவு செய்வோம்’ என்றார் மார்கன்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/30123917/1065096/England-to-raise-Root-lbw-with-match-referee.vpf

 

 

  • தொடங்கியவர்

டி20 கிரிக்கெட்: விராட் கோலியின் யுக்தியில் சற்று குறைபாடு உள்ளதா?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியின் டி20 கிரிக்கெட் போட்டிக்கான யுக்தியில் சற்று குறைபாடு உள்ளது போன்று தோன்றுகிறது.

 
டி20 கிரிக்கெட்: விராட் கோலியின் யுக்தியில் சற்று குறைபாடு உள்ளதா?
 
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்த விராட் கோலி, டெஸ்ட் போட்டியில் இருந்து டோனி ஓய்வு பெற்றதும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வெண்டுமென்றால் 20 விக்கெட்டுக்களை வீழ்த்த வேண்டும் என்ற யுக்தியுடன் களம் இறங்கினார். இதனால் பெரும்பாலான போட்டியில் ஐந்து பந்து வீச்சாளர்களை களம் இறக்கி அஸ்வின் மற்றும் விக்கெட் கீப்பர் ஆகியோருக்கு பேட்டிங் பணியிலும் அதிகக் கவனம் செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். அதன்படியே அஸ்வின், விக்கெட் கீப்பர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரை வரிசையாக வென்றுள்ளார்.

தற்போது இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இருந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிக்கான கேப்டன் பொறுப்பையும் பெற்றுள்ளார். ஒருநாள் போட்டியில் ஒருமுனையில் ஒருவர் அடித்து விளையாடும்போது மறுமுனையில் நிற்கும் வீரர் நங்கூரம் போன்று நிலைத்து நின்று எதிர்பேட்ஸ்மேனுக்கு வசதியாக ஒவ்வொரு ரன்னாக (ரொட்டேட்டிங் ஸ்ட்ரைக்) எடுக்க வேண்டும். இந்த முறையில் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தி தொடரை 2-1 என கைப்பற்றியது.

இது எண்ணத்துடன் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் களம் இறங்கியது. ரன்கள் குவிக்கும் போட்டியான டி20-யில் இந்தியா முதல் போட்டியில் 147 ரன்களும், 2-வது போட்டியில் 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. விராட் கோலி, லோகேஷ் ராகுல், ரெய்னா, யுவராஜ் சிங், டோனி, மணீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா ஆகிய 7 பேட்ஸ்மேன்கள் மட்டுமே உள்ளனர். 120 பந்துகள் மட்டுமே என்பதால் இரு முனையிலும் நிற்கும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட வேண்டும்.

ஆனால் இந்திய அணியில், தற்போது விராட் கோலி அடிக்க ஆரம்பித்தால் லோகேஷ் ராகுல் நிதானமாக விளையாடுகிறார். 2-வது போட்டியில் அப்படிதான் நடந்தது. கோலி முதலில் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். அப்போது லோகேஷ் ராகுல் நிதானமாக நின்றார். விராட் கோலி அவுட்டானதும் அதிரடி பொறுப்பை லோகேஷ் ராகுல் ஏற்றுக் கொண்டார். மணீஷ் பாண்டே ஒவ்வொரு ரன்னாக எடுக்க ஆரம்பித்தார்.

இதனால் ஒரு வீரர் 45 பந்தில் 70 ரன்களுக்கு மேல் குவித்த பின்பும், அணியில் 150 ரன்களை தாண்ட முடியவில்லை. இதேபோல்தான் கடைசி நேரத்தில் டோனி அனைத்து பந்துகளையும் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் ஒரு ரன் ஓடக்கூடிய நேரத்தில் அந்த ரன்னை தவிர்த்து விடுகிறார். இதனால் இந்தியாவின் ஸ்கோரில் ஒன்றிரண்டு ரன்கள் குறைய வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்தமாக இரண்டு பக்கமும் உள்ள பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடினால்தான் அதிக அளவு ரன்கள் குவிக்க இயலும். அதைபோல் ரிஷப் பாண்ட், மந்தீப் சிங் போன்றோரையும் பயன்படுத்த கவனம் செலுத்த வேண்டும். தனது டி20 யுக்தி குறைவினால் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க இயலாத சூழ்நிலை உள்ளது. இந்த குறையை வரும் காலங்களில் விராட் கோலி போக்கினால் சிறப்பான வெற்றிகளை குவிக்கலாம்.

இந்திய அணியில் மட்டுமல்ல. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியில் ஐதராபாத் அணிக்கெதிராக 200 ரன்களுக்கு மேலான ரன்னை சேஸிங் செய்யும்போது கெய்ல் ஒருபுறம் அதிரடியாக விளையாடினார். அப்போது விராட் கோலி அவருக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் ஒன்றிரண்டு ரன்களாக சேர்த்தார். கெய்ல் அவுட்டானதும் கோலி அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். இறுதியில் பெங்களூர் அணி சொற்ப ரன்களில் வெற்றியை இழக்கும் நிலை ஏற்பட்டது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/30192353/1065186/Virat-Kohli-flawed-strategy-and-team-selection-in.vpf

  • கருத்துக்கள உறவுகள்

16388149_1313680358668806_77578556052089

  • கருத்துக்கள உறவுகள்

சின்னம்மாவின் அறிவுரைகளை உள்வாங்கி தவறான ஆட்டமிழப்பை வழங்கினேன் - நடுவர் சம்சுதீன் பெருமிதம்.

  • தொடங்கியவர்

2-வது டி20: வெற்றி தோல்வியைத் தீர்மானித்த சர்ச்சைக்குரிய நடுவர் தீர்ப்புகள்

 

 
 
தவறான தீர்ப்பில் ஆட்டமிழந்த ஜோ ரூட், தோற்றபிறகு விராட் கோலிக்கு கை கொடுக்கிறார். | படம்.| பிடிஐ.
தவறான தீர்ப்பில் ஆட்டமிழந்த ஜோ ரூட், தோற்றபிறகு விராட் கோலிக்கு கை கொடுக்கிறார். | படம்.| பிடிஐ.

நாக்பூரில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா 5 ரன்களில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் வெற்றி, தோல்வியை 2 நடுவர் தீர்ப்புகள் தீர்மானித்தன.

ஆட்டம் தொடங்கி 3-வது ஓவரில் ஜோர்டான் வீசிய 2-வது பந்தில் இந்திய கேப்டன் விராட் கோலி ‘பிளம்ப்’ எல்.பி. ஆனார். ஆன் திசையில் கோலி ஷாட் ஒன்றை முயற்சி செய்ய பந்து தாழ்வாக வந்து கோலியின் பேடைத் தாக்கியது. நடுவர் நாட் அவுட் என்றார். சந்தேகத்தின் பலனை அவர் கோலிக்கு சார்பாக அளித்தார், ஆனால் ரீப்ளேயில் பந்து நேராக மிடில் ஸ்டம்பை தாக்குவது தெரிந்தது.

கோலி அப்போது 7 ரன்களில் இருந்தார். நாட் அவுட் தீர்ப்புக்குப் பிறகு கோலி 1 பவுண்டரி 1 சிக்சருடன் மேலும் 14 ரன்களைச் சேர்த்து 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இம்முறை ஜோர்டானே கோலியின் விக்கெட்டைக் கைப்பற்றினார். வேகம் குறைந்த பந்து லாங் ஆனில் டாசனிடம் கேட்ச் ஆனது.

அவுட் கொடுக்க வேண்டியதை நாட் அவுட் என்ற பிறகு 14 ரன்கள் என்பது டி20 போன்ற குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதே. அதுவும் குறைந்த ரன்கள் போட்டியில் இத்தகைய தீர்ப்புகள் எதிரணிக்கு கடும் வெறுப்பை ஏற்படுத்துபவை.

2-வதாக நடுவர் மேலும் மோசமான தவறிழைத்தது, கடைசி ஓவரில். பும்ரா வீசுகிறார், இங்கிலாந்து வெற்றிக்குத் தேவை 8 ரன்கள், ஜோ ரூட், பும்ரா பந்தை ஷாட் ஆடும் போது ஜோ ரூட் மட்டையின் உள்விளிம்பில் பட்டது. ஆனால் இந்திய அணியினர் முறையீடு செய்தவுடன் சற்றும் யோசிக்காமல் அவுட் கொடுத்தார் நடுவர். ஜோ ரூட் 38 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த நிலையில் தொடரை இங்கிலாந்து நிச்சயம் வெல்லும் என்ற தருணத்தில் இந்த மோசமான தீர்ப்பு இங்கிலாந்தின் தோல்வியை தீர்மானித்தது.

ஆனால் மீதமுள்ள 5 பந்துகளில் 8 ரன்கள் பெரிய டீல் இல்லையே என்று நமக்கு தோன்றலாம், ஆனால் இத்தகைய பிட்சில், இரவு வெளிச்சத்தில் புதிய பேட்ஸ்மென் வந்து அழுத்தத்தில் ஆடுவது சாதாரண விஷயமல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஓவரில் பட்லரை பவுல்டு செய்தார் பும்ரா, கடைசி ஓவரில் 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றினார், இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-1 என்று சமனிலை எய்தியது.

இது குறித்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் இயன் மோர்கன் வெளிப்படையாகவே குறிப்பிட்டு விட்டார், “ஒரு தீர்ப்பு எங்களுக்கு எதிராகச் சென்றது” என்றார். பும்ராவின் கடைசி ஓவருக்கு முதல் ஓவரில் நெஹ்ரா 16 ரன்கள் விளாசப்பட்டார். நெஹ்ரான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் பும்ரா 4 ஓவர்களில் 20 ரனக்ளுக்கு வெற்றிகரமான 2 விக்கெட்டுகளை கைப்பற்றி ‘வெற்றி’க்கு இட்டுச் சென்றதால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்த ஆட்டத்தின் ஒரே அரைசதத்தை எடுத்தவர் ராகுல் மட்டுமே. அவர் 47 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 71 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்ததாக இந்திய அணியில் மணிஷ் பாண்டே 1 சிக்சருடன் 26 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோர்டான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்திய அணியின் பெரிய பெயர்களான ரெய்னா, யுவராஜ் சிங், தோனி ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்டினர், இந்தியா 144 ரன்களையே எடுக்க முடிந்தது.

இங்கிலாந்து இலக்கைத் துரத்திய போது ஆஷிஷ் நெஹ்ரா ராய், பில்லிங்ஸ் இருவரையும் 4 ஓவர்களுக்குள் வீழ்த்தினார், 22/2 என்ற நிலையில் மோர்கன் (17), ரூட் (38) சேர்ந்து ஸ்கோரை 10 வது ஓவரில் 65 ரன்களுக்கு உயர்த்திய போது அமித் மிஸ்ராவிடம் மோர்கன் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இங்கிலாந்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் கூட்டணியாக ஸ்டோக்ஸ், ரூட் இணைந்து 40 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து ஸ்கோரை 117க்கு உயர்த்தினர். 27 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் ஸ்டோக்ஸ் 38 ரன்கள் எடுத்து நெஹ்ராவிடம் எல்.பி.ஆனார். இது பிளம்ப் எல்.பி.ஆகும்.

இதன் பிறகு பும்ரா 18-வது ஓவரில் தனது வேகம் குறைந்த பந்துகள் மூலம் கட்டுப்படுத்தி 3 ரன்களையே கொடுத்தார். நெஹ்ராவின் இறுதி ஓவர் 16 ரன்கள் விளாசப்பட்டது, பட்லர், கோலியின் கையைத் தள்ளிக் கொண்டு செல்லுமாறு ஒரு சிக்ஸ் அடித்தார். அதன் பிறகே கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது, அப்போதுதான் மட்டையில் பட்டுச் சென்ற பந்துக்கு நடுவர் ரூட்டிற்கு எல்.பி. தீர்ப்பளித்தார். இது இங்கிலாந்தை முடித்தது.

பந்தின் திசையை தீர்மானிப்பதில் நடுவர் தீர்ப்பு தவறாக முடிவதை புரிந்து கொள்ளலாம், ஆனால் மட்டையின் உள்விளிம்பில் பட்டதை நடுவர் கவனிக்காமல் இருந்தார் என்றால் அது நடுவரின் கடமை தவறலே.

http://tamil.thehindu.com/sports/2வது-டி20-வெற்றி-தோல்வியைத்-தீர்மானித்த-சர்ச்சைக்குரிய-நடுவர்-தீர்ப்புகள்/article9509633.ece?homepage=true&ref=tnwn

  • தொடங்கியவர்

20 ஓவர் தொடரை வெல்வது யார்?: இந்தியா - இங்கிலாந்து நாளை மோதல்

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் பெங்களூரில் நாளை நடக்கிறது. இரு அணிகளும் சமபலம் பொருந்தி காணப்படுவதால் தொடரை வெல்வது யார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

 
20 ஓவர் தொடரை வெல்வது யார்?: இந்தியா - இங்கிலாந்து நாளை மோதல்
 
பெங்களூர்:

மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டித் தொடரில் கான்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்திலும், நாக்பூரில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியா 5 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நாளை (பிப்ரவரி 1-ந்தேதி) நடக்கிறது.

இரு அணிகளும் சமபலம் பொருந்தி காணப்படுவதால் தொடரை வெல்வது யார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது. இதேபோல இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரையும் வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது.

இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமநிலையில் திகழ்கிறது. தொடக்க வீரர் ராகுல் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலமே. கோலி, ரெய்னா நிலையாக ஆடக்கூடியவர்கள். யுவராஜ்சிங் திறமையை கண்டிப்பாக வெளிப்படுத்த வேண்டும். மனிஷ் பாண்டே, ஹர்த்திக் பாண்டியா ஆட்டத்தில் முன்னேற்றம் தேவை.

பந்துவீச்சில் பும்ரா, யுசுவேந்திர சகால், ஆசிஷ் நெக்ரா நல்ல நிலையில் உள்ளனர். நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்றே தெரிகிறது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இங்கிலாந்து அணி 20 ஓவர் தொடரையாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது.

அந்த அணியில் கேப்டன் மோர்கன், ஜோரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, ஜோர்டான், மில்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இரு அணிகளும் தொடரை வெல்ல கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2 போட்டியிலும் குறைந்த அளவில் தான் ரன் எடுக்கப்பட்டன. பெங்களூர் ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்பதால் ரன் குவிப்பு அதிகமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இரு அணிகளும் நாளை மோதுவது 11-வது போட்டியாகும். இதுவரை நடந்த 10 ஆட்டத்தில் இந்தியா 4-ல், இங்கிலாந்து 6-ல் வெற்றி பெற்றுள்ளன.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் கிரிக்கெட் மற்றும் தூர்தர்சனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், ரெய்னா, யுவராஜ்சிங், டோனி, மனிஷ் பாண்டே, ஹர்த்திக் பாண்டியா, அமித் மிஸ்ரா, யுசுவேந்திர சகால், ஆசிஷ் நெக்ரா, பும்ரா, பர்வேஷ் ரசூல், புவனேஷ்வர் குமார், ரிஷப் பண்ட், மன்தீப் சிங்.

இங்கிலாந்து: மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், சாம் பில்லிங்ஸ், ஜோரூட், பென் ஸ்டோக்ஸ், பட்லர், மொயின் அலி, ஜோர்டான், ஆதில் ரஷீத், மில்ஸ், டேவிட் வில்லி, பேர்ஸ்டோவ், ஜேக்பால், புளுன்கெட், டாசன்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/31132001/1065312/India-vs-England-who-won-the-t20-series.vpf

  • தொடங்கியவர்

#CricketUpdates: இந்தியா அசத்தல் வெற்றி!

indiavictroy_22223.jpg

இந்தியா-இங்கிலாந்து இடையே பெங்களூருவில் நடந்த மூன்றாவது டி-20 போட்டியில், முதலில் ஆடிய இந்திய அணி 202 ரன்கள் எடுத்தது. ரெய்னா மற்றும் தோனி அரை சதம் அடித்து அசத்தியிருந்தனர். இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 16.3 ஓவர்களில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சஹால் 6, பும்ரா விக்கெட்டுகள் வீழ்த்தினர். இங்கிலாந்து அணியில் ரூட் 42, கேப்டன் மோர்கன் 40 ரன்கள் எடுத்தனர். 

முக்கியமாக கடைசி 8 ரன்களில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்தியா.  இந்த வெற்றி மூலம் இந்திய அணி 2-1 என்ற நிலையில் தொடரையும் வென்றது.

  • தொடங்கியவர்

அதிரடியாக ஆறு விக்கெட்டுகளை கைப்பறினார் சஹால் : தொடரை வென்றது இந்தியா

 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபது-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 75 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.Yuzvendra-Chahal-record.jpg

பெங்களூரில இன்று இரவு நடைபெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பில் சுரேஷ் ரெய்னா 63 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், டோனி இருபதுக்கு-20 போட்டிகளில் தனது முதலாவது அரைச்சதத்தை பூர்த்திசெய்து 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் 203 என்ற சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 16.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியடைந்தது.

இந்திய அணியில் அபாரமாக பந்து வீசிய சஹால் அதிரடியாக ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட இருபது-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

http://www.virakesari.lk/article/16111

  • தொடங்கியவர்

யார் என்று தெரிகிறதா இவர் ஸ்பின் பவுலர் என்று புரிகிறதா?

ஹரியானாவின் சிங்கக்குட்டி யுவேந்திர சஹல் 23 ஜூலை 1990-ல் பிறந்தவர். இங்கிலாந்துக்கு எதிராக இன்று நடந்த ஃபைனல் டி-20 போட்டியில் கெத்து காட்டியவர். ஒன்றுக்கு ஒன்று வெற்றி என இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் சம நிலையில் இருந்ததால், இரு அணிக்கும் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. முதலில் பேட் செய்த இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரண்களை பெற்றிருந்ததது. அடுத்த ஆடிய இங்கிலாந்தை தெறிக்கவிட்டு  6 விக்கெட்களை விழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றுள்ளார் சஹல். சஹல்க்கு  பாப்பாய் என்ற பட்டப்பெயரும் உண்டு. இவர் கிரிக்கெட்டில் மட்டுமல்லாது செஸ் போட்டியிலும் கில்லாடி தான். 
 

Yuzvendra-Chahal_00232.jpg

  • தொடங்கியவர்

ரெயினா அடித்த சிக்ஸ்சர் சிறுவனைக் காயப்படுத்தியது

 

நேற்று ஆறு சிக்ஸ்சர்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு களம் அமைத்துக் கொடுத்த ரெயினா அடித்த ஒரு சிக்ஸ்சர் பார்வையாளராக உட்கார்ந்திருந்த ஒரு ஆறு வயதுச் சிறுவனைக் காயப்படுத்தி இருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன . இடது தொடைப் பகுதியில் பந்து பட்டு காயப்பட்ட சிறுவனை உடனடியாக கர்நாடகா மாவட்ட கிரிக்கெட்  மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள் .சிறு காயத்துடன் தப்பிய சிறுவனுக்கு முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் போட்டியை நேரில் பார்க்க அவன் மீண்டும் மைதானத்திற்கு கொண்டுவந்து விடப்பட்டுள்ளான். தலையிலோ கழுத்திலோ பந்து பட்டிருந்தால் நிலைமை வேறாகி இருக்கும் என்று சிகிச்சை அளித்த மருத்துவர் அபிப்பிராயப்பட்டுள்ளார் .

raina

2012இலும் இடம்பெற்ற ஐபீஎல் மோதல் ஒன்றின்போது ஒரு 10வயதுச் சிறுமியின் முகத்தை கிரிஸ் கெயில் அடித்த பந்து காயப்படுத்தி இருந்தது

http://onlineuthayan.com/sports/?p=3560

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.