Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசுக்குள் இருக்கும் குழு ஒன்றே ஆட்கடத்தல்களில் ஈடுபடுகின்றது! மனோ கணேசன் எம்.பி. குற்றச்சாட்டு.

Featured Replies

அரசுக்குள் இருக்கும் குழு ஒன்றே ஆட்கடத்தல்களில் ஈடுபடுகின்றது! மனோ கணேசன் எம்.பி. குற்றச்சாட்டு.

அரசுக்குள் இருக்கும் ஒரு குழுவே ஆட்கடத்தலில் ஈடுபடுவதாக தெரியவருகிறது. கொழும்பில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபரொருவரை கைதுசெய்ய கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு உதவினோம். மூன்று மாதங்களாகியும் அந்த நபர் குறித்து எதுவித தகவலும் இல்லை. நீதிமன்றத்தில் அவர் ஆஜர் செய்யப்படவுமில்லை என்று கொழும்பு மாவட்ட ஐ.தே.கட்சி எம்.பி. மனோ கணேசன் கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் பேசும்போது தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கும் நீடிக்கும் பிரேரணை மீது அவர் தொடர்ந்து பேசும்போது கூறியதாவது: வடக்கு கிழக்குக்கு வெளியே 64 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 12 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். சிலர் பணம் பறிக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த பத்து மாதங்களில் வடக்குகிழக்கில் ஆயிரத்து 500 பேர் கடத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் பட்டப்பகலில் அமைச்சரவை அமைச்சர் சந்திரசேகரனின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் கடத்தப்பட்டுள்ளார். பிரதியமைச்சர் சச்சிதானந்தனின் நெருங்கிய நண்பரொருவர் வெள்ளவத்தையில் பட்டப்பகலில் கடத்தப்பட்டார்.

அமைச்சர் மங்கள சமரவீர மாத்தறையில் மின்கம்பத்தில் கொலைசெய்யப்படுவார் என அச்சுறுத்தப்பட்டுள்ளார். இதேபோல் அமைச்சர் அநுரபண்டரநாயக்கவை அத்தனகலையிலுள்ள மின்கம்பத்தில் தொங்கவிடுவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரை மின்கம்பத்தில் தொங்கவிட்டால் மின்கம்பம் உடைந்துவிடும். எனவே, அவரை ஹொரகொல்லவில் உள்ள சமாதியிலுள்ள தூண்களில் தொங்கவிடுங்கள். அப்போது அது ஸ்ரீல.சு.கட்சியின் சமாதியாக மாறிவிடும்.

மூன்று சிங்கள பத்திரிகையாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எனக்கும் கடத்தல் விடயத்தில் தலையிடவேண்டாம் என அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. முன்னர் தெற்கின் மனிதஉரிமை மீறல்களுக்கு எதிராக இப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முழு ஈடுபாட்டுடன் குரல் கொடுத்தார். அவர் இது தொடர்பாக ஜெனிவாக்கும் சென்றார். அன்று அவர் செய்தவற்றைத்தான் இன்று நான் செய்துவருகிறேன் இது தவறா? என்றார் மனோ கணேசன்.

-Sudaroli-

Edited by யாழ்வினோ

உண்மை தான் !வழக்கமாக கடத்திப்போட்டுதள்ளுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தில் உள்ளவர்களே தனக்கு கொலை மிரட்டல் விட்டது என்று சொன்னதற்காக மகிந்தவால் கட்சியை விட்டுத் தூக்கியடிக்கப்பட்டார் அனுரா பண்டாராநாயக்கா. மனோ கணேசன் அவர்கள் இப்படியான நிலமையில் தனது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செ்யவது மிகமிக அவசியமாகும். சிங்களப் போரினவாத காட்டேரிகள் இரத்த வெறி கொண்டு அலைகின்றார்கள்.

ரவிராஜ் கொலை வழக்கில் கொட்டலண்ட் ஜாட் பொலிஸ் உதவி என்று உடனே மகிந்த அறிக்கை விட்டார். ஆனால் இன்றோடு சரியாக ரவிராஜு கொல்லப்பட்டு 4 மாதங்கள் கடந்து விட்டன. அது பற்றிய விசாரணைகளும் மறக்கடிக்கப்படுகின்றன.

எல்லாம் தானாகவே வெளிவரும்.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டினில் நீதி மறையட்டுமே

தன்னாலே வெளிவரும் தயங்காதே - வன்னியில்

தலைவன் இருக்கிறான் மயங்காதே. :unsure::unsure:

மனோகணேசன் அவர்களே இப்போ மலையக மக்களிடம் அரசியல் இடைவெளி வந்து விட்டது. சந்திரசேகரும். தொண்டைமானும் அரசின் காலுக்கு கீழ் இருகிறார்கள்

மலையக மக்களுடன் நான் இருக்கிறேன் என்ற இடத்தை நிரப்ப நீங்கள் முயற்சிக்கிறீர்கள் . கவனம் சிங்களம் விட்டுவைக்காது.

Edited by நேசன்

மனோ கனேசன் ஐயா,

எஞ்சியிருக்கும் ஒரே ஒரு மக்களின் குரல் நீங்கள் தான் உங்கள் பாதுகாப்பில் மிகவும் கவனமாக இருங்கள். "எதாவது நடந்தால் அரசுதான் பொறுப்பென்று" சர்வதேச அமைப்புகளுக்கு உங்கள் பாதுகாப்பு தொடர்பாக முன்கூட்டியே அறிவித்து விடுங்கள்.

நன்றியுடன்.

மனோ கனேசன் ஐயா,

எஞ்சியிருக்கும் ஒரே ஒரு மக்களின் குரல் நீங்கள் தான் உங்கள் பாதுகாப்பில் மிகவும் கவனமாக இருங்கள். "எதாவது நடந்தால் அரசுதான் பொறுப்பென்று" சர்வதேச அமைப்புகளுக்கு உங்கள் பாதுகாப்பு தொடர்பாக முன்கூட்டியே அறிவித்து விடுங்கள்.

நன்றியுடன்.

அதுதான் தமிழர்களை வதைக்கும் அவசரகாலச்சட்டத்திக்கு ஆதரவு அளிச்சவரோ..???

அதுசரி அரசுதான் கொலை செய்யுறது என்பதை ஏன் மறைச்சு அவர்களுடனான ஒரு குழு எண்று அரசுக்கு சம்பந்தம் இல்லாத்து போல என்னத்துக்கு சொல்லுறார்...?? அரசாங்கத்துக்கு வக்காலத்தா..???

Edited by Thala

மானோ கனேஸன் ஆதரிச்சு வாக்கு போடவில்லை தலை.

அதுதான் தமிழர்களை வதைக்கும் அவசரகாலச்சட்டத்திக்கு ஆதரவு அளிச்சவரோ..???

அதுசரி அரசுதான் கொலை செய்யுறது என்பதை ஏன் மறைச்சு அவர்களுடனான ஒரு குழு எண்று அரசுக்கு சம்பந்தம் இல்லாத்து போல என்னத்துக்கு சொல்லுறார்...?? அரசாங்கத்துக்கு வக்காலத்தா..???

Emergency extended for another month in Sri Lanka

[TamilNet, Wednesday, 07 February 2007, 17:48 GMT]

Sri Lankan parliament Wednesday adopted motion to extend the State of Emergency for another month with a majority of 105 votes. 122 parliamentarians voted for the motion and 17 voted against.

Parliamentarians of the ruling party United People's Freedom Alliance (UPFA), main opposition United National Party (UNP), the Sri Lanka Muslim Congress (SLMC), Janatha Vimukthi Peramuna (JVP), Jathika Hela Urumaya (JHU), Ceylon Workers Congress (CWC) and Upcountry People's Front (UPF) supported the motion to extend the State of Emergency.

Seventeen parliamentarians of the Tamil National Alliance (TNA) and Western People's Front (WPF) voted against, sources said.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21177

தல இருப்பவன் எல்லாம் தலைOne அல்ல...

தலையே இல்லாமலிருப்பவனே Thala ஆகலாம்..

இந்த மகுடம் உங்களுக்கு நல்லாப் பொருந்துது தலை, இதை மாத்திக்குங்க.

இந்த முறை சறுக்கிட்டு போல....பரவாயில்லை...better luck next time.

Edited by saanakiyan

மானோ கனேஸன் ஆதரிச்சு வாக்கு போடவில்லை தலை.

உப்பிடி நீர் எத்தினை தரம் செய்திருப்பீர்........ விடுங்கப்பா.........க. க. க.

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் தமிழர்களை வதைக்கும் அவசரகாலச்சட்டத்திக்கு ஆதரவு அளிச்சவரோ..???

அதுசரி அரசுதான் கொலை செய்யுறது என்பதை ஏன் மறைச்சு அவர்களுடனான ஒரு குழு எண்று அரசுக்கு சம்பந்தம் இல்லாத்து போல என்னத்துக்கு சொல்லுறார்...?? அரசாங்கத்துக்கு வக்காலத்தா..???

நான் அறிந்தவரை இதுவரைக்கும் மனோ கணேசன் அவசரகாலச்சட்டத்தை ஆதரித்து வாக்களிக்கவில்லை. மேலும், இவர், ரவிராஜ், மகேஸ்வரன், ராதா கிருஸ்ணன் போன்றவர்கள் சேர்ந்து தான்கொழும்பில் தமிழ்மக்களைப் பாதுகாப்பிற்காக குழு ஒன்றை அமைத்தார்கள். ஆனால் மகிந்தவின் கடும்போக்கினை இவர்களால் மாற்றமுடியவில்லை என்பது உண்மை தான். ஆனால் இது இவர்களது தப்பு அல்ல.

இப்போது ரவிராஜ் கொல்லப்பட்டு விட்டார். அடுத்த குறி தனக்குத் தான் என்று சில நாட்கள் மனோ கணேசன்இந்தியாவில் தஞ்சமடைந்திருந்தார் என நினைக்கின்றேன். மகிந்த இப்போது வழமை போல உறுதி வழங்கியிருக்கின்றார் பா.உ பாதுகாப்பை வழங்குவோம் என்று. ஆனால் கொலைகாரனே அவனாக இருக்கும்போது மனோவால் என்ன செய்ய முடியும்?

இப்போது அவரது காணாமல் போகின்றவர்கள் விபரங்கள் இவரால் தான் திரட்டப்படுகின்றன. முக்கியமாக இந்த சமயத்தில் எதிரிகளின் கொடூரப்பிடியில் இருந்து அவரைக் காக்க வேண்டியது மிகமுக்கியமாகும்.

பதவியில் இருக்கின்ற ராதா கிருஸ்ணனும், தமிழ்மக்களுக்கான பாதுகாப்பு விபரத்தைத் திரட்டுவதாகச் சொல்கின்றார். ஆனால் இவரது மலையக மக்கள் முன்ணனி அரசாங்கத்தில் இணைந்திருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.