Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேப்பாப்புலவு மக்களின் மண்மீட்பு போராட்டம் தொடர்கிறது ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

Featured Replies

கேப்பாப்புலவு மக்களின் மண்மீட்பு போராட்டம் தொடர்கிறது

p15-e3ddf8d1a354126f60698637713457a784502b3e.jpg

 

ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

(கே.குமணன்,கண்டாவளை நிருபர்)

முல்­லைத்­தீவு கேப்­பா­ப்பு­லவு மக்கள் தமது சொந்த நிலத்தை கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள விமா­னப்­ப­டை­யினர் அதனை விடு­விக்­க­வேண்­டு­மெனக்கோரி விமா­னப்­படை முகாமின் முன்­பாக கொட்டும் பனி­யி­ர­வையும் சுட்­டெ­ரிக்கும் வெயி­லையும் பொருட்­ப­டுத்­தாது முன்­னெ­டுத்­துள்ள தொடர் கவ­ன­யீர்ப்புப் போராட்டம் நேற்று நான்காவது நாளாகவும் இடம்பெற்றது.

கேப்­பாப்­பு­லவு பிலக்­கு­டி­யி­ருப்பு கிரா­மத்தில்  84 குடும்­பங்­க­ளுக்கு சொந்­த­மான 40 ஏக்­க­ருக்கு  மேற்­பட்ட காணி­களை கைய­கப்­ப­டுத்தி விமா­னப்­ப­டைத்­தளம் அமைத்­துள்ள விமா­னப்­ப­டை­  யினர், அதனை பலப்­ப­டுத்தி வேலிகள்  அமைத்து மக்கள் செல்­ல­மு­டி­யா­த­வாறு தடை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 31ஆம் திகதி காணிகள் அள­வி­டப்­படும் எனவும் காணி­க­ளுக்கு சொந்­த­மான மக்கள் அனை­வ­ரையும் அப்­ப­கு­திக்கு வரு­மாறும் கேப்­பா­ப்பு­லவு கிரா­ம­சே­வகர் அறி­வித்தல் விடுத்­தி­ருந்த நிலையில் அப்­ப­கு­திக்கு வரு­கை­தந்­தி­ருந்­த­மக்கள் நாள்­மு­ழு­வதும் வீதியில் காத்­தி­ருந்த போதும் அதி­கா­ரிகள் எவரும் காணிகள் அள­விட வரு­கை­தந்­தி­ருக்­க­வில்லை. 

இந்த நிலையில் ஆத்­தி­ர­ம­டைந்த மக்கள் அன்­றைய தினம் முதல் தாம் தமது சொந்த நிலங்­களில் காலடி எடுத்து வைக்கும் வரை போராட்டம் தொட­ரு­மென கூறி தொடர் போராட்­டத்­தி­லீ­டு­பட்டு வரு­கின்­றனர். இந்த நிலையில் நேற்று முன்­தினம் போராட்டம் இடம்­பெறும் பகு­திக்கு முல்லைத்தீவு மாவட்ட அரச அதி­பர்,கரைத்­து­றைப்­பற்று பிர­தேச செய­லா­ளர் மற்றும் வன்னி பிராந்­திய விமா­னப்­படை தள­ப­தி, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் என பலரும் வருகை தந்து மக்­க­ளோடு கலந்­து­ரை­யாடி சம­ரச முயற்­சி­களில் ஈடு­பட்ட போதிலும் மக்கள், தமது சொந்த நிலத்தில் காலடி எடுத்து வைத்­தால்தான் இந்த போராட்டம் நிறை­வு­பெறும் என கூறி தொடர்ந்து போராடி வரு­கின்­றனர். 

இந்த நிலையில் நாலா­வது நாளா­கவும் நேற்றும் சிறு­வர்கள், குழந்­தைகள், பெண்கள், ஆண்கள், முதி­ய­வர்கள் என அனை­வரும் இணைந்து தமது போராட்­டத்தை முன்­னெ­டுத்தனர். இதேவேளை போராட்­டத்­தி­லீ­டு­பட்டு வந்த முதி­யவர் ஒருவர் திடீ­ரென மயக்­க­முற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுக்­கு­டி­யி­ருப்பு ஆதா­ர­வைத்­தி­ய­சா­லையில் இருந்து வரு­கை­தந்த நோயாளர் காவு­வண்­டியில் இவர் முல்­லைத்­தீவு மாவட்ட வைத்­தி­ய­சா­லைக்கு கொண்­டு­செல்­லப்­பட்டார்.இவ்­வாறு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டவர் தொடர்ச்­சி­யாக போராட்­டத்தில் ஈடு­பட்டு வந்த மாணிக்கம் கணேசன் (வயது 50) என்­ப­வர் ஆவார். 

மேலும் நேற்றுமுன்தினம் இரவு போராட்ட இடத்­துக்கு தமிழர் விடு­த­லைக்­கூட்­ட­ணியின் தலைவர் வீ.ஆனந்­த­சங்­கரி, வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­மோகன், வடக்கு மாகாண சபை உறுப்­பினர் துரை­ராசா ரவி­கரன், அனந்தி சசி­தரன் ஆகியோரும் வரு­கை­தந்­தி­ருந்­தனர்.

மேலும் நேற்றையதினம் குறித்த பகு­திக்கு வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­மோகன், வடக்­கு­மா­கா­ண­சபை பிரதி அவைத்­த­லைவர் கம­லேஸ்­வரன் மற்றும் வடக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் ரவி­கரன் ஆகியோர் வரு­கை­தந்­தி­ருந்­தனர்.

மக்களுக்கான உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள், பாய் போன்ற பொருட்களை வர்த்தகர்கள் நலன்விரும்பிகள், இளைஞர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் வழங்கி ஆதரவளித்து வருகின்றனர். அத்தோடு மக்கள் தாம் வீசும் குப்பைகளை தாமாகவே அகற்றி சூழலை சுத்தமாக வைத்திருந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-04#page-1

  • தொடங்கியவர்
காலியில் சுதந்திரதினம் வீதியில் நாம், விடுதலை எமக்கு எப்போது? கேப்பாலிலவு மக்கள் பேரணி
காலியில் சுதந்திரதினம் வீதியில் நாம், விடுதலை எமக்கு எப்போது? கேப்பாலிலவு மக்கள் பேரணி
கேப்பாபுலவில் விமானப்படையின் பிரதான நுழைவாயிலிருந்து புலவுக்குடியிருப்பு வரை காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களால் பேரணி ஒன்று  இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
இன்று காலை கறுப்புக்கொடிகளை ஏற்திய வண்ணம் பொதுமக்கள் பேரணியாக சென்றனர்.
 
காலியில் சுதந்திரதினம் வீதியில் நாம், விடுதலை எமக்கு எப்போது?, எமது மண்ணை ஆக்கிரமித்து நம்மை வீதியில் அலையவிட்டு நல்லிணக்கம் பேசுதல் முறையா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை பேரணியில் ஈடுபட்ட மக்கள் ஏந்தியிருந்தனர்
 
இதேவேளை  கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட விமானப்படை  அதிகாரி  ஆகியோர் சந்தித்து கலந்துரை யா டியுள்ளனர்.
 
இந்த நிலையில் காணி விவகாரம் தொடர்பில் கேப்பாபுலவில் நிலைகொண்டுள்ள விமானப்படையினர் மேலிட உத்தரவுக்கு காத்தி ருப்பதாகவும் உத்தரவு கிடைத்ததும் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும், தம்மிடம் தெரிவித்ததாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மக்களிடம் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் மக்களின் போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோ ரிடம் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.
 
1486192218_download%20%282%29.jpg1486192218_download%20%283%29.jpg
1486192253_download.jpg1486192253_download%20%281%29.jpg

http://onlineuthayan.com/news/23491

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ மண்ணில் இருந்து சிறீலங்கா படையினரே வெளியேறு  என்று முல்லைத்தீவு மாவட்ட மக்கள் நடத்தும் போராட்டம் ஐந்தாவது நாளாகவும் தொடர்கின்றது. 

C3zQSX9WIAAcXJH.jpg

  • தொடங்கியவர்

கேப்பாப்புலவு  பேராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்தார் வடக்கு முதலமைச்சர் 

 

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் அமைந்துள்ள பகுதியில், அப்பகுதி மக்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது இன்று சுதந்திரதினத்திலும் கறுப்புக்கொடி பறக்கவிடப்பட்டு 5 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

16507258_1257454460959124_1565262207_n.j

முதலமைச்சரின் குறித்த விஜயத்தின் போது வட மாகாண சபை விவசாயத் துறை அமைச்சர் ஐங்கரநேசன், வட மாகாண சபை உறுப்பினர் உறுப்பினர்களான சிவாஜிலிங்கம்,சிவநேசன் மற்றும் ரவிகரன் உள்ளிட்டவர்களும் சென்றுள்ளனர்.

16507292_1257461090958461_795009126_n.jp

16468639_1257459817625255_180559194_n.jp

மேலும் புதுக்குடியிருப்பு மற்றும் கேப்பாப்புலவில் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக முள்ளியவளை, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் ஆகியநகரங்களில் அமைந்துள்ள கடைகள் அனைத்து மூடப்பட்டு, இன்றையதினம் அர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுவருவதால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

16558524_1257451837626053_406642527_n.jp

விமானப்படையினர் வசமுள்ள 30 ஏக்கர் காணியை விடுவிப்பதாக அரச அதிகாரிகள் மக்களுக்கு தெரிவித்தபோதிலும் அது குறித்த தினத்தில் விடுவிக்கப்படவில்லை. இதன்காரணமாக குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள் என 50 க்கும் மேற்பட்ட கேப்பாப்புலவு குடியிருப்புமக்கள் தொடர் போராட்டத்திலீடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/16225

  • தொடங்கியவர்

சுதந்திரதினத்திலும் கறுப்புக்கொடி கட்டி கேப்பாப்புலவு மக்கள் 5 ஆவது நாளகவும் போராட்டம் ; மக்களை சந்தித்தார் ரிஷாத்

Published by Priyatharshan on 2017-02-04 12:38:15

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் அமைந்துள்ள பகுதியில் அப்பகுதி மக்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது இன்று சுதந்திரதினத்திலும் கறுப்புக்கொடி பறக்கவிடப்பட்டு 5 ஆவது நாளகவும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மக்கள் மற்றும் விமானப்படையினருடன் கலந்துரையாடியுள்ளார்.

16466519_1257370554300848_1152172847_o.j

முல்லைத்தீவில் இடம்பெற்ற சுதந்திரதின வைபவங்களை முடித்துக்கொண்டு காணிகளை விடுவிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்த அமைச்சர் ரிஷாத், மக்களுடனும் விமானப்படை அதிகாரிகளுடனம் பேச்சுவார்த்தை நடாத்தினார்.

16466162_1257369244300979_166039727_o.jp

இதையடுத்து காணிகளை விடுவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும் மேலிடத்தில் இருந்து உத்தரவு கிடைத்ததும் தாம் காணிகளை விடுவிப்பதாக படை அதிகாரிகள் தெரிவித்ததாகவும் தான் உரியதரப்பினருடனும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனும் இது தொடர்பில் பேசுவதாகவும் அமைச்சர் மக்களிடம் தெரிவித்தார்.

16466315_1257369194300984_132443949_o.jp

இதேவேளை,புதுக்குடியிருப்பு மற்றும் கேப்பாப்புலவில் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக முள்ளியவளை, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் ஆகியநகரங்களில் அமைந்துள்ள கடைகள் அனைத்து மூடப்பட்டு இன்றையதினம் கர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுவருவதால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 16491381_1257369204300983_1876999121_o.j

விமானப்படையினர் வசமுள்ள 30 ஏக்கர் காணியை விடுவிப்பதாக அரச அதிகாரிகள் மக்களுக்கு தெரிவித்தபோதிலும் அது குறித்த தினத்தில் விடுவிக்கப்படவில்லை. இதன்காரணமாக குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள் என 50 க்கும் மேற்பட்ட கேப்பாப்புலவு குடியிருப்புமக்கள் தொடர் போராட்டத்திலீடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

16491431_1257370784300825_1832087613_o.j

16492494_1257370707634166_1915485004_o.j

16522384_1257370644300839_1818268867_o.j

http://www.virakesari.lk/article/16219

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.