Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா படத்தை ஏன் வெளியிட வில்லை? ரிச்சர்ட் பீலே பதில்

Featured Replies

ஜெயலலிதா படத்தை ஏன் வெளியிட வில்லை? ரிச்சர்ட் பீலே பதில்

Pela_14566.jpg

ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஏன் வெளியிட வில்லை என்ற கேள்விக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே பதில் அளித்துள்ளார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டர் டாக்டர் ரிச்சர்ட் பீலே இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், “முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாகவே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு இருந்தது. உடல் பரிசோதனையில் நோய் தாெற்றால் கடுமையாக ஜெயலலிதா பாதிக்கப்பட்டிருந்தார்.

நோய் தொற்றுக்கான காரணத்தை தீவிரமாக ஆராய்ந்தோம். ஜெயலலிதாவின் இதயம், நுரையீரலில் நோய்தொற்று அதிகமாக இருந்தது. மருத்துவ முறைகளுக்குட்பட்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டிரக்கியோஸ்டோமி செய்தபின் சுயநினைவு திரும்பியது.

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஜெயலலிதா உணர்ந்தார். நோயாளியின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. கைரேகை வைத்தபோது ஜெயலலிதா பேசினார்” என்று கூறினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/79934-there-was-no-need-for-releasing-photo-of-jayalalithaa-saysdoctor-richard.art

ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? டாக்டர்கள் குழு பேட்டி

 

சென்னை: ‛சென்னை அப்பல்லோ மருத்துமனைக்கு முதல்வர் ஜெயலலிதா சுயநினைவுடன் தான் வந்தார்; தேர்தல் ஆவணங்களில் சுயநினைவுடன் தான் கைரேகை வைத்தார்' என, அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே மற்றும் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் டாக்டர்கள் இன்று அளித்த பேட்டி:
 

 

சுயநினைவுடன் இருந்தார் :

கடந்த ஆண்டு செப்., 22ம் தேதி இரவு காய்ச்சல், நீர்சத்து குறைபாடு, சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளுடன் முதல்வர் ஜெயலலிதா மருத்துவனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் சுயநினைவுடன் தான் இருந்தார். அவரது நுரையீரல், இதயம், சிறுநீரகத்தில் நோய் தோற்று பாதிப்பு இருந்தது. தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவர் உணர்ந்து இருந்தார். எனினும், செப்சிஸ் போன்ற நோய் தொற்றினால் உடல் உறுப்புகள் செயல் இழக்க தொடங்கின. மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. ரத்தத்திலும் தொற்று இருந்தது.


 

 

கைரேகை வாங்கியது ஏன்

அக்., 22ம் தேதி அவரிடம் தேர்தல் ஆணையத்தின் ஆவணங்கள் படித்து காட்டப்பட்டு தான் கைரேகை வாங்கப்பட்டது. அப்போது டாக்டர்கள் பாலாஜி, பாபு ஆகியோர் உடன் இருந்தோம். அப்போது அவர் சுயநினைவுடன் தான் இருந்தார். கையில் டிரிப் ஏற்றி, கை வீக்கத்துடன் இருந்ததால் தான் கையெழுத்து வாங்க முடியவில்லை. கைரேகை பெறப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவரின் புகைப்படம் வெளியிடுவது வழக்கம் இல்லை.அவ்வப்போது செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அவருக்கு இதயம் செயலிழப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தான் உயிரிழப்பு நேரிட்டது. அவரது கால்கள் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

 

எம்பால்மிங் நடந்தது

டாக்டர் சுதா சேைஷயன் கூறியதாவது: ஜெயலலிதா உடல் பதப்படுத்துதல் எனப்படும் எம்பால்மிங் செய்யப்பட்டது தான். டிச., 5ம் தேதி இரவு 12.20 முதல், 20 நிமிடங்களுக்கு உடலை பதப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒருவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் போது, சீதோஷண நிலை காரணமாக உடல் கெட்டு விட கூடாது என்பதற்காக தான் எம்பால்மி ங் செய்யப்படும்.மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., உடல் கூட எம்பால்மிங் செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1705527

ஜெயலலிதா உடல் பதப்படுத்தப்பட்டது உண்மையே; கால்கள் அகற்றப்படவில்லை: அப்போலோ புதிய விளக்கம்

 

 
 
Richard_Beale_3128961f.jpg
 
 
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அவரது மறைவுக்குப் பின்னர் பதப்படுத்தப்பட்டது உண்மையே என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும், அவரது கால்கள் அகற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே திங்கள்கிழமை விளக்கமளித்தனர்.

அப்போது, "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அவரது மறைவுக்குப் பின்னர் பதப்படுத்தப்பட்டது உண்மையே. டிசம்பர் 5-ம் தேதி இரவு 12.20 மணிக்கு பதப்படுத்தப்பட்டது. 15 நிமிடங்களுக்கு எம்பாமிங் எனப்படும் பதப்படுத்தப்படுத்துதல் நடைபெற்றது. உடலை பதப்படுத்த ஐந்தரை லிட்டர் திரவம் செலுத்தப்பட்டது. பெருந்தலைவர்கள் மறைவுக்குப் பின் அவர்களது உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்பதற்காக எம்பாம்பிங் செய்யப்படுவது வழக்கம். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் கூட இதுபோல் எம்பாம்பிங் செய்யப்பட்டது.

ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்படவில்லை. இரண்டு கால்களுடன் தான் இருந்தார்.

அவர் மருத்துவமனைக்கு வரும்போது காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டுடன் வந்தார். அவருக்கு அடுத்தகட்ட சோதனைகள் மேற்கொண்டபோது அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. அடுத்ததாக அவருக்கு ரத்தத்தில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டது. செப்சிஸ் நோய் தாக்கம் உடல் முழுதும் பரவியதால் அவரது உடல் உறுப்புகள் அடுத்தடுத்தாக செயலிழக்கத் தொடங்கின. ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை அளித்தோம். ஆனால், அவருக்கு துரதிர்ஷ்டவசமாக மாரடைப்பு ஏற்பட்டது.

அவர் சுயநினைவுடனேயே இருந்தார். அவருக்கு அவ்வப்போது மயக்க மருந்து அளிக்கப்பட்டதால் அவர் தூக்கநிலையில் இருந்தார். தேர்தல் ஆணைய நோட்டீஸில் ஜெயலலிதா சுயநினைவுடனே கைரேகை வைத்தார். கைகளில் வீக்கம் இருந்ததால் ஹையெழுத்திட முடியவில்லை" என்றனர்.

ரிச்சர்ட் பியல் கூறும்போது, "தமிழக அரசு கேட்டுக் கொண்டதால் ஜெயலலிதா சிகிச்சை குறித்தி விளக்கமளிக்க சென்னை வந்திருக்கிறேன்" என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/ஜெயலலிதா-உடல்-பதப்படுத்தப்பட்டது-உண்மையே-கால்கள்-அகற்றப்படவில்லை-அப்போலோ-புதிய-விளக்கம்/article9524148.ece?homepage=true

1 hour ago, நவீனன் said:

ரிச்சர்ட் பீலே பதில்

1j2jaw.jpg

  • தொடங்கியவர்

ஜெயலலிதா கால் அகற்றப்பட்டதா? ரிச்சர்ட் பீலே பதில்

pela_1_15191.jpg

ஜெயலலிதா கால் அகற்றப்பட்டதா என்பது குறித்த கேள்விக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே பதில் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரிச்சர்ட் பீலே, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி தெரிவிக்கப்பட்டது. தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளரிடமும் விளக்கினோம். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையின் கண்ணாடி வழியாக ஆளுநர் அவரை பார்த்தார். சிகிச்சை முறைகள் குறித்து ஆளுநருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இரண்டாவது முறை ஆளுநர் வந்தபோது ஜெயலலிதாவை பார்க்கவில்லை.

ஜெயலலிதாவின் கால் உள்பட எந்த உறுப்பும் அகற்றப்படவில்லை. அவருக்கு எந்த உறுப்புமாற்று அறுவைசிகிச்சையும் செய்யப்படவில்லை. எங்களிடம் ஜெயலலிதா சைகை செய்தார். சிகிச்சை அறையில் ஜெயலலிதா சில அடி தூரம் நடந்தார். நோயாளிக்கு பிரச்னை என்றால் முதலில் மருத்துவர்தான் கவலைப்படுவார். கையில் வீக்கம் இருந்ததால் அவர் கைரேகை வைத்தார். எதிர்பாராதபோது திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மாரடைப்பு ஏற்பட்டதால் உடல்நிலை முன்னேற்றத்தில் பின்னடைவு ஏற்பட்டது. ஜெயலலிதாவுக்கான சிகிச்சை அறையில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. எனது குடும்பத்தைப் பற்றி ஜெயலலிதா விசாரித்தார். ஜெயலலிதாவிடம் நான் நேரடியாக பேசினேன். உணவை பற்றியும், எனது குழந்தைகளை பற்றியும் ஜெயலலிதாவிடம் பேசினேன். சிகிச்சை முறை பற்றி சசிகலாவிடம் தினமும் விளக்கினோம். பிசியோதெரபி சிகிச்சைக்கு ஜெயலலிதா ஒத்துழைத்தார்.

சசிகலாவைத் தவிர ஜெயலலிதாவின் உறவினர்களும் அவரிடம் பேசினர்.  அருகில் இருந்தவர்கள் பற்றி ஜெயலலிதா அதிகம் அறியவில்லை. உயர் சிகிச்சைக்காக லண்டனுக்கு கொண்டு செல்வது பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஆனால் உலகத்தரமான சிகிச்சை அப்போலோவில் இருந்ததால் லண்டன் செல்லவில்லை. சிறந்த மருத்துவக்குழுவினர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். அதிநவீன சோதனைகள் மூலம் பிரச்னைகள் கண்டறிந்து சிகிச்சை அளித்தோம். ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது டாக்டர்கள் இருந்தனர். ஜெயலலிதாவால் பேச முடிந்தது. ஆனால், தெளிவாக அவரால் பேசமுடியவில்லை என்று கூறினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/79938-removal-of-legs-is-a-false-theory--says-doctor-richard.art

 

 

 

 

ஜெயலலிதா உடல் பதப்படுத்தப்பட்டது உண்மையே; கால்கள் அகற்றப்படவில்லை: அப்போலோ புதிய விளக்கம்

 
படம்: எல். சீனிவாசன்
படம்: எல். சீனிவாசன்
 
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அவரது மறைவுக்குப் பின்னர் பதப்படுத்தப்பட்டது உண்மையே என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும், அவரது கால்கள் அகற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அப்போலோ மருத்துவமனை மருத்துவர் பாபு ஆப்பிரஹாம், அரசு மருத்துவர் பாலாஜி, லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் விளக்கமளித்தனர்.

அப்போது, "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அவரது மறைவுக்குப் பின்னர் பதப்படுத்தப்பட்டது உண்மையே. டிசம்பர் 5-ம் தேதி இரவு 12.20 மணிக்கு பதப்படுத்தப்பட்டது. 15 நிமிடங்களுக்கு எம்பாமிங் எனப்படும் பதப்படுத்தப்படுத்துதல் நடைபெற்றது. உடலை பதப்படுத்த ஐந்தரை லிட்டர் திரவம் செலுத்தப்பட்டது. பெருந்தலைவர்கள் மறைவுக்குப் பின் அவர்களது உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்பதற்காக எம்பாமிங் செய்யப்படுவது வழக்கம். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் கூட இதுபோல் எம்பாம்பிங் செய்யப்பட்டது" என உடற்கூறியல் துறை இயக்குநர் மருத்துவர் சுதா சேஷயன் விளக்கமளித்தார்.

மருத்துவர்கள் பாலாஜி மற்றும் ஆப்பிரஹாம் கூறும்போது, "ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்படவில்லை. இரண்டு கால்களுடன் தான் இருந்தார்.

அவர் மருத்துவமனைக்கு வரும்போது காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டுடன் வந்தார். அவருக்கு அடுத்தகட்ட சோதனைகள் மேற்கொண்டபோது அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. அடுத்ததாக அவருக்கு ரத்தத்தில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டது. செப்சிஸ் நோய் தாக்கம் உடல் முழுதும் பரவியதால் அவரது உடல் உறுப்புகள் அடுத்தடுத்ததாக செயலிழக்கத் தொடங்கின. ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை அளித்தோம். ஆனால், அவருக்கு துரதிர்ஷ்டவசமாக மாரடைப்பு ஏற்பட்டது.

அவர் சுயநினைவுடனேயே இருந்தார். அவருக்கு அவ்வப்போது மயக்க மருந்து அளிக்கப்பட்டதால் அவர் தூக்கநிலையில் இருந்தார். தேர்தல் ஆணைய நோட்டீஸில் ஜெயலலிதா சுயநினைவுடனே கைரேகை வைத்தார். கைகளில் வீக்கம் இருந்ததால் கையெழுத்திட முடியவில்லை" என்றனர்.

ரிச்சர்ட் பீலே கூறும்போது, "தமிழக அரசு கேட்டுக் கொண்டதால் ஜெயலலிதா சிகிச்சை குறித்து விளக்கமளிக்க சென்னை வந்திருக்கிறேன்.தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களை புகைப்படம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் அப்படி செய்வதில்லை. ஜெயலலிதாவின் எந்த ஓர் உடலுறுப்பும் அகற்றப்படவில்லை. அவரது உள் உறுப்புகள் ஏதும் மாற்றப்படவில்லை. அவருக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர் சற்று முன்னதாகவே மருத்துவமனைக்கு வந்திருக்க வேண்டும். ஜெயலலிதாவுடன் நான் பேசினேன். அவருக்கு தொலைக்காட்சியில் என்ன பார்க்க விருப்பம் எனக் கேட்டிருக்கிறேன். அது குறித்து பேசியிருக்கிறோம். என் குடும்பத்தைப் பற்றியும் விசாரித்தார். சசிகலாவிடம் பேசினார். யாருடன் பேச வேண்டும் என்பதே அவரே முடிவு செய்தார்.

beale_2_3128991a.jpg

செய்தியாளர்கள் சந்திப்பில் ரிச்சர்ட் பீலே

ஆரம்பத்தில் அவரை லண்டன் அழைத்துச் செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அவரது உடல்நிலை அதற்கு ஏற்புடையதாக இல்லை. பின்னர், அவர் உடல்நிலை சற்று தேறியபின்னர் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு செல்வதை அவரே விரும்பவில்லை" என்றார்.

மாரடைப்பு.. எக்மோ சிகிச்சை:

"ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி மாலை 5 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது. 20 நிமிடங்களுக்கு அவருக்கு சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் இதயத் துடிப்பு சீராகவில்லை. உடனடியாக எக்மோ மருத்துவக் குழுவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 24 மணி நேரம் காத்திருந்தோம். ஆனாலும் அவரது இதயத் துடிப்பில் முன்னேற்றம் இல்லை. எக்மோ இயந்திரம் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருந்தது. இதனையடுத்து உறவினர்களுக்கு தெரிவித்துவிட்டு எக்மோ இயந்திரம் நிறுத்தப்பட்டது” என மருத்துவர் பாபு தெரிவித்தார்.

மருத்துவ செலவு ரூ.5.5 கோடி:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணம் ரூ.5.5 கோடி. அந்த கட்டணத்துக்கான ரசீது உறவினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது" என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/ஜெயலலிதா-உடல்-பதப்படுத்தப்பட்டது-உண்மையே-கால்கள்-அகற்றப்படவில்லை-அப்போலோ-புதிய-விளக்கம்/article9524148.ece?homepage=true

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிரஸ் மீட்டை நடத்துவது அரசுதான்.. போட்டு உடைத்த லண்டன் டாக்டர்!

 

நடராஜன் அட்மிட் இதற்குத்தானா? லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, இந்த பிரஸ் மீட் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதே தவிர, அப்பல்லோவால் கிடையாது என்று போட்டு உடைத்தார்.

சென்னை: அரசுதான் அப்பல்லோ பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்தது என்று, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய டாக்டர் ரிச்சர்ட் பியல் தெரிவித்தார். அதேநேரம், ரிச்சர்ட்டுக்கு சென்னையில் வேலை இருந்ததாகவும் அதனால்தான் அவர் வந்ததாகவும், அப்பல்லோ டாக்டர் தெரிவித்து குழப்பம் ஏற்படுத்தினார்.

ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் நிலையில், இன்று அப்பல்லோ மருத்துவமனை சார்பில் டாக்டர்கள் பிரஸ் மீட் செய்தனர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல், டாக்டர் பாலாஜி, டாக்டர் பாபு உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசினர். 

Apollo Press conference is arranged by the government, says doctors

அப்போது ஏன் இவ்வளவு தாமதமாக பிரஸ் மீட் செய்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பாலாஜி, "டாக்டர் ரிச்சர்ட் இன்று சென்னையில் ஒரு நிகழ்வில் பங்கேற்க வந்தார். அவர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த நிபுணர் என்பதால் அவரும் இருக்கும்போது பிரஸ் மீட் செய்யலாம் என்பதால் இன்று பிரஸ் மீட் செய்கிறோம்.

அரசு தரப்பில் இருந்து எங்களுக்கு பிரஸ் மீட் செய்ய எந்த அழுத்தமும் வரவில்லை" என்றார். அதேநேரம் மற்றொரு கேள்வியின்போது ரிச்சர்ட் பீலே, இந்த பிரஸ் மீட் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதே தவிர, அப்பல்லோவால் கிடையாது என்று போட்டு உடைத்தார்.

சசிகலாவின் கணவர், நடராஜன், நேற்று இரவுதான், இதே அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த கொதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டன. ஆனால் பிரஸ் மீட்டில் என்ன பேச வேண்டும் என்று டாக்டர்களுக்கு அவர்தான் கதை தயாரித்து கொடுக்க வாய்ப்புள்ளதாக திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் டிவிட்டில் கூறியுள்ளார்.

இப்போது, லண்டன் டாக்டரே, இது அரசால் நடத்தப்படும் பிரஸ் மீட் என ஒப்புக்கொண்டது இந்த சந்தேகத்தை உறுதி செய்வதாக உள்ளது. அதேநேரம், அப்பல்லோ டாக்டர் பாலாஜியோ அரசு தரப்பிலிருந்து அழுத்தம் வரவில்லை என முரண்பட்ட தகவலை தெரிவித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/apollo-press-conference-is-arranged-the-government-says-doctors-273410.html
 

ஜெ. மறைந்த 60 நாட்களுக்கு பிறகு திடீர் விளக்கம்! அதே பல்லவியை பாடிய லண்டன், அப்பல்லோ டாக்டர்கள்!!

 

ஜெயலலிதா மறைந்த 60 நாட்களுக்குப் பிறகும் அவருக்கு தரப்பட்ட சிகிச்சை விவரங்களை மீண்டும் மீண்டும்தான் அப்பல்லோ மருத்துவர்கள் ஒப்புவித்துள்ளனர்.

சென்னை: ஜெயலலிதா மறைந்த 60 நாட்களுக்குப் பிறகு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியால் உள்ளிட்ட அப்பல்லோ மருத்துவர்கள் இன்று திடீரென செய்தியாளர்களுக்கு விளக்கம் தந்தனர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது பாடிய அதே பல்லவியை இன்றும் அப்பல்லோ மருத்துவர்கள் பாடினர். உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியால், சிங்கப்பூர் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்

ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ந் தேதி காலமானார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுப்பபட்டு வருகின்றன. இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை அமைதி காத்துவந்தது. ஆனால் அதிமுக பொதுச்செயலராகிவிட்ட சசிகலாவை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகிகள் சில நாட்களுக்கு முன்னர் சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதா மரணத்தில் எந்த சர்ச்சையுமே இல்லை என்றார்.

 

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியால் திடீரென இன்று சென்னை வருகை வந்தார். தமிழக முதல்வராக சசிகலா பதவி ஏற்க உள்ள நிலையில் ஜெயலலிதாவின் மரண சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே ரிச்சர்ட் வரவழைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அப்பல்லோ மருத்துவர்கள், ரிச்சர்ட் பியால் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

 

இச்சந்திப்பின் போது செப்டம்பர் 22-ந் தேதி முதல் டிசம்பர் 5-ந் தேதி வரை என்னவெல்லாம் அப்பல்லோ நிர்வாகம் ஒப்புவித்ததோ அதையே திரும்பவும் கூறினர். இச்சந்திப்பில் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தார்; சிற்றுண்டி சாப்பிட்டார் என 60 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனை கூறியதையே ஒப்புவித்தனர். அத்துடன் ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் முக்கியமான சந்தேகமான கால்கள் எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கும் கால்கள் வெட்டி எடுக்கவில்லை என விளக்கம் தந்தனர்.

 

அத்துடன் ஜெயலலிதா சுயநினைவுடனேயே தேர்தல் ஆணையத்துக்காக கடிதத்தில் கை ரேகை வைத்தார் எனவும் விளக்கம் தரப்பட்டது. மேலும் ஜெயலலிதாவின் உடல் பதப்பட்டது தொடர்பாகவும் டாக்டர் சுதா சேஷய்யன் விளக்கம் அளித்தார். ஜெயலலிதாவின் முகத்தில் 3 புள்ளிகள் இருந்தது என்பது, நீண்டகாலமாக மருத்துவமனையில் இருந்ததால் ஏற்படக் கூடியது எனவும் விளக்கம் தரப்பட்டது.

ஜெயலலிதா மறைந்த 60 நாட்களுக்குப் பிறகு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியால் உள்ளிட்ட அப்பல்லோ மருத்துவர்கள் இன்று திடீரென செய்தியாளர்களுக்கு விளக்கம் தந்தனர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது பாடிய அதே பல்லவியை இன்றும் அப்பல்லோ மருத்துவர்கள் பாடினர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/london-dr-richard-meet-media-today-273372.html

. 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜெயலலிதா என்ன பேசினார்... எம்பாமிங் முறை... மருத்துவச் செலவு... ரிச்சர்ட் பீலே பேட்டி 

richerd_beale_17307.jpg

ஜெயலலிதா என்ன பேசினார்; எம்பால்மிங் முறை; மருத்துவச் செலவு குறித்து லண்டன் டாக்டர் ரிச்சர்ட பீலே விளக்கமாக கூறினார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டர் டாக்டர் ரிச்சர்ட் பீலே, அப்போலோ மருத்துவர்கள் பாலாஜி, பாபு மற்றும் அரசு மருத்துவர் சுதா சேஷய்யன் ஆகியோர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். 

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து யாரிடம் தெரிவித்தீர்கள்?

ரிச்சர்ட் பீலே: மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி தெரிவிக்கப்பட்டது. தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளரிடமும் விளக்கினோம்.

ஜெயலலிதா யாரையெல்லாம் சந்தித்தார்?

ரிச்சர்ட் பீலே: யாரை சந்திப்பது குறித்து ஜெயலலிதாவே முடிவு செய்வார். யார் வந்திருக்கிறார்கள் என்பதை கடிதத்தில் எழுதி ஜெயலலிதாவிடம் காட்டினோம்.

ஜெயலலிதாவை ஆளுநர் நேரில் பார்த்தாரா?

ரிச்சர்ட் பீலே: ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையின் கண்ணாடி வழியாக ஆளுநர் அவரை பார்த்தார். சிகிச்சை முறை குறித்து ஆளுநருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இரண்டாவது முறை ஆளுநர் வந்தபோது ஜெயலலிதாவை பார்க்கவில்லை.

ஜெயலலிதா எப்படிப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டார்?

ரிச்சர்ட் பீலே: முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாகவே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு இருந்தது. உடல் பரிசோதனையில் நோய் தொற்றால் கடுமையாக ஜெயலலிதா பாதிக்கப்பட்டிருந்தார். நோய் தொற்றுக்கான காரணத்தை தீவிரமாக ஆராய்ந்தோம். ஜெயலலிதாவின் இதயம், நுரையீரலில் நோய்தொற்று அதிகமாக இருந்தது. மருத்துவ முறைகளுக்குட்பட்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டிரக்கியோஸ்டோமி செய்தபின் சுயநினைவு திரும்பியது.

ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஏன் வெளியிடவில்லை?

ரிச்சர்ட் பீலே: நோயாளியின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. 

ஜெயலலிதாவின் கால் அகற்றப்பட்டதா?

ரிச்சர்ட் பீலே: ஜெயலலிதாவின் கால்கள் எடுக்கப்பட்டதாக பரவிய தகவல் வதந்தி. ஜெயலலிதா இறக்கும் போது அவருக்கு இரண்டு கால்களும் இருந்தது. ஜெயலலிதாவின் கால் உள்பட எந்த உறுப்பும் அகற்றப்படவில்லை. அவருக்கு எந்த உறுப்புமாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்படவில்லை. எங்களிடம் ஜெயலலிதா சைகை செய்தார். சிகிச்சை அறையில் ஜெயலலிதா சில அடி தூரம் நடந்தார். நோயாளிக்கு பிரச்னை என்றால் முதலில் மருத்துவர்தான் கவலைப்படுவார்.

ஜெயலலிதா கைரேகை வைத்தாரா?

ரிச்சர்ட் பீலே: கையில் வீக்கம் இருந்ததால் அவர் கைரேகை வைத்தார்.

ஜெயலலிதா அறையில் சிசிடிவி கேமராக்கள் இருந்ததா?

ரிச்சர்ட் பீலே: ஜெயலலிதாவுக்கான சிகிச்சை அறையில் சிசிடிவி கேமராக்கள் இல்லை.

ஜெயலலிதாவிடம் பேசினீர்களா?

ரிச்சர்ட் பீலே: ஜெயலலிதாவிடம் நான் நேரடியாக பேசினேன். எனது குடும்பத்தை பற்றி ஜெயலலிதா விசாரித்தார். உணவைப் பற்றியும், எனது குழந்தைகளை பற்றியும் ஜெயலலிதாவிடம் பேசினேன்.

ஜெயலலிதாவால் பேச முடிந்ததா?

ரிச்சர்ட் பீலே: தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஜெயலலிதா உணர்ந்தார். கைரேகை வைத்தபோது ஜெயலலிதா பேசினார். ஆனால், தெளிவாக அவரால் பேசமுடியவில்லை. பிசியோதெரபி சிகிச்சைக்கு ஜெயலலிதா ஒத்துழைத்தார்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டதா?

ரிச்சர்ட் பீலே: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை பற்றி சசிகலாவிடம் தினமும் விளக்கினோம். சசிகலாவைத் தவிர ஜெயலலிதாவின் உறவினர்களும் அவரிடம் பேசினர். அருகில் இருந்தவர்கள் பற்றி ஜெயலலிதா அதிகம் அறியவில்லை.

 

richerd_beale_1_17039.jpg

சசிகலாவைப் பற்றி...

ரிச்சர்ட் பீலே: சிகிச்சைக்காக நான் இங்கு இருக்கும் போதெல்லாம் சசிகலாவை பலமுறை பார்த்திருக்கிறேன். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாகவும் நம்பிக்கைக்குரியவராகவும் அவர் இருந்தார்.


ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்காதது ஏன்?

ரிச்சர்ட் பீலே: ஜெயலலிதாவுக்கு உயர் சிகிச்சை அளிப்பதற்காக லண்டனுக்கு கொண்டு செல்வது பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஆனால் உலகத்தரமான சிகிச்சை அப்போலோவில் இருந்ததால் லண்டன் செல்லவில்லை. சிறந்த மருத்துவக்குழுவினர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். அதிநவீன சோதனைகள் மூலம் பிரச்னைகள் கண்டறிந்து சிகிச்சை அளித்தோம்

ஜெயலலிதாவுக்கு எப்போது மாரடைப்பு ஏற்பட்டது?

ரிச்சர்ட் பீலே: எதிர்பாராதபோது திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மாரடைப்பு ஏற்பட்டதால் உடல்நிலை முன்னேற்றத்தில் பின்னடைவு ஏற்பட்டது. ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது டாக்டர்கள் இருந்தனர்.

ஜெ.வுக்கு எக்மோ சிகிச்சை ஏன்?

ரிச்சர்ட் பீலே: ஒரு நோயாளிக்கு இதயத் துடிப்பு முடக்கம் (கார்டியக் அரெஸ்ட்) ஏற்படும்போது, எக்மோ சிகிச்சை கொடுக்கப்படுகிறது. இந்த சிகிச்சையின் பலன் என்பது பெரும்பாலும் எதிர்மறையாகத்தான் இருக்கும். கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு CPR கொடுக்கப்பட்ட பின்தான், எக்மோ சிகிச்சையை தேர்வு செய்தோம். இது மருத்துவ ரீதியில் எடுக்கப்பட்ட முடிவு. எக்மோ சிகிச்சை கொடுக்கப்போவது பற்றி அரசுக்கும் ஜெயலலிதாவின் குடும்பத்துக்கும் தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்படுகிறதே?

ரிச்சர்ட் பீலே: ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை.

ஜெயலலிதா உடல் எம்பாமிங் செய்யப்பட்டது ஏன்?

ரிச்சர்ட் பீலே: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்பு அவரது உடலுக்கு எம்பாமிங் செய்யப்பட்டது. 5-ம் தேதி இரவு அவருக்கு எம்பாமிங் செய்யப்பட்டது. வி.ஜ.பி.களுக்கு இந்த நடைமுறை சாதாரணம் தான்.

ஜெயலலிதா உடல்நிலை குறித்து கடிதம் எழுதியது ஏன்?

ரிச்சர்ட் பீலே:ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையை வைத்தே ஒன்றும் செய்ய முடியாது என கடிதம் எழுதினேன்.

வைகோவை சந்தித்தீர்களா?

ரிச்சர்ட் பீலே: வைகோவைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் விடைபெறும் போது, என் விசிட்டிங் கார்ட்டை வாங்கிச் சென்றார். 

ஜெயலலிதா சாப்பிட்டதாக கூறப்பட்டது. இது உண்மையா?

டாக்டர் பாலாஜி: ஜெயலலிதா டிவி பார்த்தது, தயிர் சாதம் சாப்பிட்டது உண்மை.

ஜெயலலிதா சிகிச்சைக்கான செலவு எவ்வளவு?

டாக்டர் பாலாஜி: ஜெயலலிதாவுக்கான சிகிச்சை செலவு ரூ.5.5 கோடி. இந்த பணத்தை ஜெயலலிதாவின் குடும்பத்தினரே செலுத்தினர். 

இரண்டு மாதங்களுக்குப் பிறகு விளக்கம் அளிப்பது ஏன்?

டாக்டர் பாபு: ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் உலவியதால் தற்போது விளக்கம் அளிக்கிறோம். செய்தியாளர்கள் சந்திப்பில் எந்தவித அரசியல் அழுத்தமும் இல்லை. அரசாங்கமே அழைத்து கூறச்சொன்னதால் செய்தியாளர்கள் சந்திப்பு நடக்கிறது. 

ஜெயலலிதா எப்போது சுயநினைவுக்கு திரும்பினார்? 

டாக்டர் பாபு: ஜெயலலிதா குணமடைய வேண்டும் என மருத்துவர்கள் போராடினோம். டிரக்கியோஸ்டோமி செய்தபின் ஜெயலலிதா சுயநினைவுக்கு திரும்பினார்.  மருத்துவ முறைகளுக்குட்பட்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜெயலலிதா எப்படி இறந்தார்?

டாக்டர் பாபு: மாரடைப்பு வருவதற்கான காரணத்தை கணிக்க இயலாது. ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட பின்னர் இதய துடிப்பு சிறிதும் இல்லாமல் இறந்துவிட்டார். ஜெயலலிதா சிகிச்சை விவரத்தில் அனைத்தையும் கூற இயலாது. ஜெயலலிதாவை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. மாரடைப்பு வராமல் இருந்திருந்தால் ஒரு வாரத்தில் ஜெயலலிதா வீடு திரும்பி இருப்பார்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதில் நெருக்கடி ஏற்பட்டதா?

டாக்டர் பாபு: ஜெயலலிதாவுக்கு சுதந்திரமாக சிகிச்சை அளித்தோம். எந்த நெருக்கடியும் இல்லை.

ஜெ. உடல் பதப்படுத்தப்பட்டது ஏன்?

 

அரசு டாக்டர் சுதா சேஷய்யன்: ஜெயலலிதா உடல் டிசம்பர் 5-ம் தேதி இரவு 12.20 மணிக்கு பதப்படுத்தப்பட்டது. மக்கள் அஞ்சலியின்போது உடல் கெடக்கூடாது என்பதால் பதப்படுத்தப்பட்டது. உடலை பதப்படுத்த ஐந்தரை லிட்டர் திரவம் செலுத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கும் எம்பாமிங் செய்யப்பட்டது.

 

http://www.vikatan.com/news/tamilnadu/79954-doctor-richard-beale-speaks-to-media-regarding-jayalalithaas-health-and-much-more.art

  • தொடங்கியவர்

நடராஜன் அனுமதியும்... ரிச்சர்ட் பீலே பேட்டியும் - நடந்தது இதுதான்!

ரிச்சர்ட் பெயில்

“ஜெயலலிதாவுக்கு நாங்கள் அளித்தது உயர்தர சிகிச்சைதான். அவருடைய கால்கள் ஏதும் எடுக்கப்படவில்லை” என்று அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் அடைந்து அறுபது நாட்கள் கடந்த நிலையில், திடீரென அவருக்கு லண்டனில் இருந்து சென்னை வந்து சிகிச்சை அளித்த மருத்துவர் ரிச்சர்ட் பீலே, தமிழகம் வந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? இத்தனை நாட்களுக்குப் பின்னால் லண்டன் டாக்டரின் பேட்டிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது ஏன்? என்பன போன்ற பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் உலவுகின்றன. சசிகலா முதல்வராக பதவியேற்க உள்ள நேரத்தில், பீலே வருகையும், அவரது பேட்டியும் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. 

சசிகலாவின் கணவர் நடராஜன், பிப்ரவரி 5-ம் தேதி அன்று இரவு சென்னை கிரிம்ஸ்சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். சசிகலாவை அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராக அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுத்த பின்னர் திடீரென்று நடராஜனுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். அவர் அப்போலோவில் அட்மிட் செய்யப்பட்டதும் அப்போலோவின் முக்கிய மருத்துவக் குழுவினர்தான் நடராஜனுக்கு சிகிச்சை அளித்துள்ளார்கள். அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, நடராஜன் உடல்நிலை குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

இந்தநிலையில்தான் சென்னைக்கு ரிச்சர்ட் பீலே வந்து இருக்கும் தகவலை நடராஜனிடம் சொல்லியுள்ளனர். அவர் மூலம் போயஸ்கார்டனுக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் நடராஜனின் சாணக்கிய மூளையைப் பயன்படுத்தி, பீலேயை வைத்தே பேட்டி கொடுக்கச் செய்தால், ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டு விடும் என்று கணக்கு போட்டார் நடராஜன். ஜெயலலிதா மரணத்தில் சசிகலா பல உண்மைகளை மறைப்பதாக, தமிழகத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சசிகலாவும் இதுகுறித்து எதுவும் வாய் திறக்காமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' என கணக்கு போட்டுத்தான் நடராஜன், இந்த ஐடியாவை பிரதாப் ரெட்டி காதுக்கு கொண்டுசென்றார். பிரதாப் ரெட்டியும், ரிச்சர்டு பீலேவிடம் இதுகுறித்துப் பேச “நோ ப்ராப்ளம். நான் ரெடி” என்று பீலே தெரிவித்த தகவல், நடராஜனுக்கு  தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் உயர் அதிகாரிகள் சிலர் அவசரமாக அப்போலோவுக்கு வருகை தந்தார்கள். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழு ஆலோசனையில் இறங்கினார்கள். அவர்களுடன் தமிழக அரசு அதிகாரிகளும் இருந்துள்ளார்கள். அதன் பிறகு பத்துபேர் கொண்ட மருத்துவக் குழுவோடு ரிச்சர்ட் பெயிலுடன் சந்திப்பு நடைபெற்றது. அரசுத் துறை சார்பில் இந்தப் பேட்டி கொடுக்கப்படுவதால், அனைத்து ஊடகங்களுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டலில் பேட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு முன், பீலேவிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் என்ன பேசவேண்டும்? எப்படிப் பேச வேண்டும்? போன்ற விவரங்களை வகுப்பாக எடுத்துள்ளார்கள்.  மருத்துவர் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் உடன் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த மீட்டிங் விவரங்கள் அனைத்தும் நடராஜனுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது. 

நடராஜன்

ஜெயலலிதா மரணம் அடைந்த விவகாரத்தில், சசிகலா மீதான மக்களின் இமேஜ் அதலபாதாளத்துக்குத் தள்ளப்பட்டு இருப்பதால் அதனைத் தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. அதற்கு நல்வாய்ப்பாக பீலே வருகை இருந்ததால் அதை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார் நடராஜன். 
செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய டாக்டர் பீலே, “ஜெயலலிதாவுக்கு உயர்தர சிகி்ச்சைதான் அளிக்கப்பட்டது. அவர் என்னோடு பேசினார். எனது குடும்பத்தைப் பற்றி கேட்டறிந்தார். அவருக்கு இதயத்தில் முடக்கம் ஏற்பட்டதால்தான் மரணம் சம்பவித்தது. டிசம்பர் 5-ம் தேதி அன்றுதான் ஜெயலலிதாவின் மரணம் நிகழ்ந்தது. ஜெயலலிதா கால்கள் ஏதும் அகற்றப்படவில்லை. 'எம்பார்மிங்' செய்யப்பட்டது உண்மைதான். ஜெயலலிதாவின் மருத்துவ செலவு 5.5 கோடி ரூபாய் ஆனது" என்று தமிழக அரசு எதிர்பார்த்தது போன்றே பேசினார். 

பீலேவிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அருகில் இருந்த மருத்துவர்  பாலாஜிதான் துண்டுச்சீட்டில் குறிப்பு எழுதி கொடுத்துக் கொண்டே இருந்தார். பல கேள்விகளுக்கு அருகில் இருந்த மருத்துவர்களே குறுக்கிட்டுப் பதில் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். இந்தப் பேட்டியால் சசிகலாவின் இமேஜ் உயர்ந்து விடும் என்று அவரது உறவினர்கள் நினைக்கிறார்கள். பழி சொல்லில் இருந்து தப்பிக்கத் தான் இந்தப் பேட்டி!

http://www.vikatan.com/news/tamilnadu/79973-london-specialist-dr-richard-beale-press-meet-about-jayalalithaas-death.art

  • தொடங்கியவர்

ஜெயலலிதா மரணம் : மருத்துவர் குழுவின் 10 முக்கிய தகவல்கள்

 
ஜெயலலிதாபடத்தின் காப்புரிமைARUN SANKAR

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் குறித்து மருத்துவர் குழு வெளியிட்ட 10 முக்கிய தகவல்கள்

  • ஜெயலலிதா, `செப்சிஸ்' என்ற தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இது மிக விரைவாகத் தாக்கும் ஆற்றல் கொண்டது. அதனால், இதயம் பாதிக்கப்பட்டு, சிறுநீர் தொற்றும் ஏற்பட்டு. உடல் உறுப்புக்கள் செயலிழக்கத் தொடங்கின.
  • மாலை 5 மணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. எக்மோ கருவி பொருத்தப்பட்டு, 24 மணி நேரத்துக்குப் பிறகும் அவரது இதயம் துடிக்கவில்லை. அதன் பிறகு, குடும்பத்தார், அமைச்சர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
  • மாரடைப்பு ஏற்படும் வரை ஜெயலலிதா பேசினார். மூச்சுவிட முடியவில்லை என்று கூறினார். அதற்கு முந்தைய நாட்களில், சசிகலாவோடு ஜெயலலிதா பேசுவார். மேலும், அவர் அனுமதித்தவர்களும் அவருடன் பேச அனுமதிக்கப்பட்டார்கள்.
  • ஜெயலலிதா உடல்நிலை குறித்து, மருத்துவமனைத் தலைவரின் அலுவலகத்தில் தினசரி விளக்கங்கள் தரப்பட்டன. அதில், சசிகலா, தலைமைச் செயலர், சுகாதாரத்துறைச் செயலர் மற்றும் அமைச்சர்கள் இருந்தார்கள்.
  • இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்பு மனுவில் ஜெயலலிதா கையெழுத்துப் பெற வேண்டிய நேரத்தில், கையில் வீக்கம் இருந்ததால் கைரேகை பெறப்பட்டது. அப்போது அவர் சுயநினைவோடுதான் இருந்தார்.
  • ஜெயலலிதா தொலைக்காட்சி பார்த்தார், தயிர் சாதம் சாப்பிட்டார் என்பது உண்மைதான்.
  • ஜெயலலிதா அறையில் சி.சி. டிவி காமராக்கள் இல்லை. இருந்தாலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளியின் புகைப்படங்களை வெளியிடுவது நடைமுறை அல்ல.
  • ஜெயலலிதாவை லண்டனுக்கு எடுத்துச் செல்வதில் உள்ள ஆபத்துக்களை உணர்ந்து, வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.
  • ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்படவில்லை. எம்.ஜி.ஆர். உடலைப் போலவே, ஜெயலலிதா உடலும் பதப்படுத்தப்பட்டது. நள்ளிரவு 12.20 மணிக்குத் தொடங்கி, 15 நிமிடம் நடைபெற்றது.
  • ஜெயலலிதா சிகிச்சைக்கான மருத்துவச் செலவு 5.5 கோடி ரூபாய். இதற்கான பில் குடும்பத்தாரிடம் கொடுக்கப்பட்டது.

http://www.bbc.com/tamil/india-38886369

  • கருத்துக்கள உறவுகள்
Quote

பீலேவிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அருகில் இருந்த மருத்துவர்  பாலாஜிதான் துண்டுச்சீட்டில் குறிப்பு எழுதி கொடுத்துக் கொண்டே இருந்தார். பல கேள்விகளுக்கு அருகில் இருந்த மருத்துவர்களே குறுக்கிட்டுப் பதில் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். இந்தப் பேட்டியால் சசிகலாவின் இமேஜ் உயர்ந்து விடும் என்று அவரது உறவினர்கள் நினைக்கிறார்கள். பழி சொல்லில் இருந்து தப்பிக்கத் தான் இந்தப் பேட்டி!

ரிச்சர்ட் பீலா ....!!

 

டிஸ்கி :

பிம்பிளிக்கா... பிளாப்பி ..!  மாமா பிஸ்கோத்து ...!! :cool:

  • தொடங்கியவர்

அப்போலோ பத்திரிகையாளர் சந்திப்புகளில் இடம் பிடித்திருந்த டாக்டர் சிவக்குமார் நேற்று எங்கே..?

பிரஸ் மீட்

டந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அன்று, உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜெயலலிதா. டாக்டர் சிவக்குமார்போயஸ்கார்டனில் அவர் இருந்தவரை உடன் இருந்து சிகிச்சை செய்தவர் டாக்டர் சிவக்குமார். சசிகலாவின் அண்ணன் மருமகன். பிளாஸ்டிக் சர்ஜனான இவர், அப்போலோ மருத்துவமனையில் பணிபுரிகிறார்.

அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாட்களும் உடன் இருந்து கவனித்துக்கொண்டவர் டாக்டர் சிவக்குமார். அவரது மகன் டாக்டர் கார்த்திகேயனும் அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் குழுவில் இடம்பெற்றிருந்தார். ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்போலோவில் 'பிரஸ் மீட்' நடந்தபோதெல்லாம் டாக்டர் சிவக்குமார் தவறாமல் இடம்பெற்றிருப்பார்.

இந்த நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது உடல்நிலை ஏன் மோசம் அடைந்தது என்பது பற்றியெல்லாம் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பெய்ல், பிப்ரவரி 6-ம் தேதி சென்னையில் நடந்த பிரஸ் மீட்டில் விளக்கம் அளித்தார். இந்த பிரஸ்மீட்டில் டாக்டர் சிவக்குமார் மிஸ்ஸிங். அவர் எங்கே போனார் என்று நிருபர்கள் கேட்டபோது, மருத்துவக்குழுவினரிடம் இருந்து சரியான பதில் இல்லை. ஜெயலலிதாவின் உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டடிருந்தபோது தான், டாக்டர் சிவக்குமாரை கடைசியாகப் பார்க்க முடிந்தது. அதன் பிறகு, அவர் எங்கும் வருவதில்லை.

 
 

இதுபற்றி அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் கூறும்போது, "ஜெயலலிதா அப்போலோவில் இருந்தபோது, சிவக்குமாரிடம் நன்றாகப் பேசினார். ஒரு கட்டத்தில், நினைவு திரும்பியபோது, 'இத்தனை நாள் இங்கே இருந்து விட்டேனே?.. நான் நன்றாக இருக்கிறேன் என்று மக்களுக்குத் தெரிய வேண்டாமா? என்னுடைய புகைப்படத்தையும் என் அறிக்கையையும் வெளியிட ஏற்பாடு செய்யுங்கள்' என்று சிவக்குமாரிடம் ஜெயலலிதா சொன்னாராம். இதை சிவக்குமார், சசிகலாவிடம் தெரிவித்தபோது, ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட அவர் மறுத்து விட்டாராம். அதிலிருந்தே சிவக்குமார் படிப்படியாக விலக்கி வைக்கப்பட்டார். போயஸ்கார்டனுக்கு போவதையும் குறைத்துக் கொண்டார். அதனால்தான், டாக்டர் ரிச்சர்ட் பெய்ல் அளித்த பிரஸ் மீட்டிற்கு சிவக்குமார் அழைக்கப்படவில்லை" என்றார். ஜெயலலிதா உடல்நிலை பற்றிய முழு விவரம் தெரிந்த டாக்டர் சிவக்குமாரை ஏன் சசிகலா ஓரம்கட்டி வைத்திருக்கிறார்? என்பது புரியாத புதிராகவே உள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/80014-why-drsivakumar-didnt-participate-in-apollo-press-meet.art

  • கருத்துக்கள உறவுகள்

16508282_1784499705204094_41553308170619

  • தொடங்கியவர்

ஜெயலலிதா மரணம்... ரிச்சர்ட் பெயில் விளக்கம்... அப்போலோவுக்கு சில கேள்விகள்!

ஜெயலலிதா மரணம் குறித்து விளக்கும் ரிச்சர்ட் பியெல்

ப்போலோ நிர்வாகத்துக்கு,

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து செப்டம்பர் 2016 முதலே எழுப்பப்பட்டு வந்த மக்களின் சந்தேகங்களுக்கு அவர் மறைந்த இரண்டு மாதங்கள் கழித்து பொறுமையாய் முற்றுப்புள்ளி வைக்க முன்வந்ததற்கு நன்றி. தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் சூழலுக்கும் இந்தத் திடீர் சந்தேகத் தீர்ப்புக் கூட்டத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றே எடுத்துக் கொள்கிறோம். ஆனால் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்விகளுக்குப் பதில் அளித்த டாக்டர் பாபு ஆபிரகாம், "டிசம்பர் 4-ம் தேதி மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது உடனடியாக எக்மோ கருவி பொறுத்தப்பட்டது. ஆனால் கருவி மட்டுமே இயங்கியது ஜெயலலிதாவின் இதயம் இயங்கவேயில்லை" என்கிறார். அப்படியென்றால் ஜெ இறந்தது என்று? 4-ம் தேதியா அல்லது 5-ம் தேதியா? 4-ம் தேதி என்றால் அவரது இறப்பை அறிவிக்கத் தாமதம் ஏன்? அவரது நலனுக்காகவா அல்லது சிலரின் அரசியல் நலனுக்காகவா?

4-ம் தேதி இறந்தார் என்று டாக்டர். பாலாஜி கூறியதை வாய்தவறிச் சொல்லி விட்டார்  என்றே எடுத்துக் கொள்கிறோம்  ஆனால் வேறு சில அலுவலாக ரிச்சர்ட் சென்னை வந்தார் என்றார் அவர், ஆனால் டாக்டர் ரிச்சர்டோ தான் அரசு அழைத்து வந்தேன் என்றார். உண்மையில் யார் அழைத்து அவர் வந்தார்? யாரைக் காப்பாற்ற இந்தத் திடீர் வரவு?

"ஜெயலலிதாவின் படுக்கை அருகில் இருந்த பலபேரைத் தனக்குத் தெரியாது" என்கிறார் டாக்டர்.பாபு ஆபிரகாம். "எப்போது போனாலும் அங்கே சசிகலா இருந்தார்" என்கிறார் டாக்டர்.பியேல். வெளிநாட்டில் இருக்கும் மருத்துவர் குறிப்பிடும் பெயரைக் கூட அப்போலோவில் இருக்கும் டாக்டர்கள் அறிந்திருக்கவில்லையா?

ஜெயலலிதா

"நான்தான் இங்கு இன்சார்ஜ் என்றாராம்" டாக்டர்.பியெல்."இல்லை இங்கு இன்சார்ஜ் நான் தான் என்றாராம் ஜெ."  இது நடந்தது டாக்டர்.பியெல் முதன்முதலில் ஜெ- விடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட போது. ஆனால் அதே அக்டோபர் 1-ம் தேதி ஜெ-வை அப்போலோவில் முதன்முதலில் பார்க்கச் சென்ற ஆளுநர் அவரைப் பார்க்க முடியாமல் திரும்பி இருக்கிறார். டாக்டரிடம் சைகை மொழியில் பேசியவர், 'மாண்புமிகு' ஆளுநரைப் பார்க்காதது ஏன்?

காப்பாற்ற முடியாது என்று தெரிந்ததும் டாக்டர்களே முடிவு செய்து கருவியை அகற்றினோம், செயலாளர்களுக்குத் தகவல் தெரிவித்தோம் என்றார் டாக்டர் பாபு ஆபிரகாம். மாநில முதல்வரின் உயிர் பற்றி முடிவெடுக்க அப்போலோ நிர்வாகத்துக்கு யார் அனுமதி தந்தது?  எப்போதும் அந்த அறையில் உடனிருந்த குடும்பத்தினர் அப்போது எதுவுமே சொல்லவில்லையா?

ஜெ. மரணப் படுக்கையில் இருக்கிறார் என்ற தனது டிசம்பர் 5ம் தேதி அறிக்கையில் கூட அவருக்கு என்ன நோய் இருந்தது என்று குறிப்பிடவில்லை, அப்போலோ தான் வெளியிட்ட அறிக்கைகளிலும் அவருக்கு இருந்த சிக்கல்கள் பற்றிக் குறிப்பிட்டதே ஒழிய நோய் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இறந்து இரண்டு மாதங்கள் கழித்து இங்கு முதலமைச்சர் மாற்றப்படும் நேரத்தில் ஜெ.வுக்கு ’செப்சிஸ்’ நோய் இருந்தது  அதன் பாதிப்பால் இறந்தார் என்று குறிப்பிடக் காரணம் என்ன?.

ஏன்? ஏன்? என்று எத்தனை முறை கேட்டாலும் சந்தேகமே இல்லை இயற்கையாய்தான் எல்லாமே நிகழ்ந்தது என்று எல்லா மருத்துவர்களுமே தெளிவாகத் திருப்பித் திருப்பிக் கூறுகிறார்கள். சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை. யார் சொல்லிக் கொடுத்து இதையெல்லாம் கூறுகிறார்கள்?

http://www.vikatan.com/news/politics/80067-an-open-letter-to-apollo-administration-on-jayalalithaas-death-and-the-recent-press-meet-of-doctor-richard-beale.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.