Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: காவல்துறையின் கட்டுப்பாட்டில் கூவத்தூர் சொகுசு விடுதி

Featured Replies

உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: காவல்துறையின் கட்டுப்பாட்டில் கூவத்தூர் சொகுசு விடுதி

 

 
 
கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து சொகுசு விடுதிக்கு செல்லும் சுழல் விளக்கு பொருத்தப்பட்ட கார் உள்ளிட்ட வாகனங்கள் | கோப்புப் படங்கள்: கோ.கார்த்திக்
கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து சொகுசு விடுதிக்கு செல்லும் சுழல் விளக்கு பொருத்தப்பட்ட கார் உள்ளிட்ட வாகனங்கள் | கோப்புப் படங்கள்: கோ.கார்த்திக்
 
 

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறையும், ரூ.10 கோடி அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கூவத்தூர் சொகுசு விடுதி உள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு 4 ஆண்டுகள் சிறையும், ரூ.10 கோடி அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் சொகுசு விடுதிக்குள் காவல்துறை நுழைந்தது.

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அதிமுக எம்எல்ஏக்களை, காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் பேட்டையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் கடந்த புதன்கிழமை முதல் 7 நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 200 அதிவிரைவுப் படையைச் சார்ந்த வீரர்கள் சொகுசு விடுதிக்குள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கூவத்தூர் சொகுசு விடுதி காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

http://tamil.thehindu.com/tamilnadu/உச்ச-நீதிமன்ற-தீர்ப்பு-எதிரொலி-காவல்துறையின்-கட்டுப்பாட்டில்-கூவத்தூர்-சொகுசு-விடுதி/article9540971.ece?homepage=true

  • தொடங்கியவர்

சசிகலா தங்கியிருக்கும் கோல்டன் பே ரிசார்ட்டுக்குள் அதிவிரைவுப்படை நுழைந்தது!

கூவத்தூரில் சசிகலாவும்,  அ.தி.மு.க எம்.எல்.ஏக்களும் தங்கியிருக்கும் கோல்டன் பே ரிசார்ட்டில் தற்போது அதிவிரைவுப்படையினர் நுழைந்துள்ளனர்.

Kuvathur-Striking-Force-Golden-Bay

 

கூவத்தூர் பகுதி முழுக்கவும் அதிவிரைவுப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சசிகலா தங்கியிருக்கும் ரிசார்ட்டில் அதிவிரைவுப்படை நுழைந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.vikatan.com/news/sasikala/80728-striking-force-deployed-at-kuvathur-golden-bay-resorts-where-sasikala-is-staying.html

கூவத்தூர் சொகுசு விடுதிக்குள் புகுந்தது போலீஸ்
 
 
 
 
Tamil_News_large_1710850_318_219.jpg
 

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சசிக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் சொகுசு விடுதிக்குள் போலீசார் நுழைந்தனர்.அந்த ரிசார்ட்டிற்குள் 200க்கம் மேற்பட்ட அதிவிரைவுப்படை போலீசார் உள்ளே சென்று தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து, அங்கு கலவரம் வெடித்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அங்கிருந்த பத்திரிகையாளர்கள் சிதறி ஓடினர்.
கூவத்தூரில், மத்திய மற்றும் வடக்கு மண்டல ஐ.ஜி., தலைமையில் எஸ்.பி., மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 8 தாசில்தார்கள் தலைமையில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு மாநில அரசு பஸ்களை போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710850

பதிவு செய்த நாள் : 14, பிப்ரவரி 2017 (12:10 IST) 
மாற்றம் செய்த நாள் :14, பிப்ரவரி 2017 (12:18 IST)

 
சசிகலா உள்ள கூவத்தூர் ரெசார்ட்: தீர்ப்புக்குப் பின்னர் போலீஸ் குவிப்பு - பதட்டம் (படங்கள்)
 
GBR.jpg
 
படங்கள்: செண்பகபாண்டியன்

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=184367

  • தொடங்கியவர்

கூவத்தூர் செல்கிறார் முதல்வர் பன்னீர்! பரபரப்பில் ரிசார்ட்

O.Panneerselvam

கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்க முதல்வர் பன்னீர்செல்வம் கூவத்தூர் செல்கிறார்.

சற்று நேரத்துக்கு முன்பு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்,  'ஜெயலலிதாவின் ஆன்மா உயிரோடுதான் இருக்கிறது. ஜெயலலிதாவின் நல்லாட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் இந்த நல்லாட்சி தொடரும். எனக்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி’ என்று பேசினார். இதனையடுத்து தற்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூவத்தூரில் இருக்கும் கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கியுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்கச் செல்கிறார். 

கூவத்தூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிவிரைவுப்படையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். அங்குதான் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவும்  இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.vikatan.com/news/tamilnadu/80754-opannerselvam-travels-to-koovathur.html

WR_20170214115755.jpeg

ரிசார்ட்டின் உள்ளே குவிக்கப்பட்டுள்ள போலீசார்.

WR_20170214115659.jpeg

சசிகலாவிற்கு எதிராக தீர்ப்பு வந்ததையடுத்து கூவத்தூர் ரிசார்ட்டில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்

  • தொடங்கியவர்

முரண்டு பிடிக்கும் சசிகலா

Tamil_News_large_1710875_318_219.jpg
 

சென்னை: சுப்ரீம் கோர்ட்டால், ‛குற்றவாளி' என, முத்திரை குத்தப்பட்ட பிறகும், சசிகலா முரண்டு பிடிக்கிறார். கூவத்தூர் சொகுசு விடுதியில் இருந்து அவர் வெளியேற மறுப்பதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

நகர மறுப்பு

சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என சுப்ரீம் கோர்ட் இன்று காலை, 10:38 மணிக்கு அறிவித்தது. இதன் பிறகு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு தொற்றி கொண்டது.

நேற்று மாலை முதல் கூவத்தூர் சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.,க்களுடன் தங்கி உள்ள சசிகலா தற்போது அங்கிருந்து நகர மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் உட்பட மூன்று பேரும், பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என பெங்களூரு உயர்நீதிமன்ற பதிவாளர் கூறி விட்டார்.

ஆனால், சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஜாமின் கேட்கவோ, மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவோ சட்டத்தில் இடம் இல்லை, என சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆச்சார்யா கூறியுள்ளார். ஆனால், தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட சசிகலா ஆதரவாளர்கள் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகின்றனர்.
 

 

பாதியில் நிறுத்தம்

எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க முதல்வர் பன்னீர்செல்வம் கூவத்தூர் செல்கிறார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், அமைச்சர் பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் முனுசாமி உள்ளிட்ட சிலர் தான் அவர் தரப்பில் கூவத்தூர் புறப்பட்டனர். கூவத்தூர் விடுதியில் இருந்து சசிகலா வெளியேறும் வரை வர வேண்டாம் என கூறி அவர்களை கிழக்கு கடற்கரை சாலையில் கோவளத்தில் தடுத்து நிறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நேரத்தில், சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் முதல்வர் பன்னீர்செல்வம், போன் மூலம் சிலருடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710875

கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

10 அமைச்சர்களுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

. // தந்தி டிவி 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

அமைச்சர் மாஃபா வாகனம் தடுத்து நிறுத்தம்; கூவத்தூரில் 144 தடை உத்தரவு!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூவத்தூர் நட்சத்திர விடுதியில்  உள்ள அதிமுக எம்.எல்.ஏக்களை சந்திக்க சென்றனர். அப்போது, கோவளம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜனின் வாகனத்தை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

Police security Kuvathur

இதையடுத்து, அசாதாரண சூழல் நிலவுவதால் கூவத்தூரில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம். அதன்படி, கல்பாக்கம் முதல் கூவத்தூர் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி கூறியுள்ளார். 

மேலும், கூவத்தூர் வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

http://www.vikatan.com/news/tamilnadu/80780-144-implemented-in-kuvathur.html


எடப்பாடி பழனிச்சாமி + 12 பேர் கூவத்தூரில் இருந்து ஆளுநரை சந்திக்க புறப்பட்டனர். வீதிகளில் தடை. // தந்தி டி வி 

கூவத்தூரில் இருந்து எம்.எல்.ஏக்கள் வெளியேற உத்தரவு
 
கூவத்தூர் ரிசார்ட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதால் எம்.எல்.ஏக்களை வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.  
 
விருப்பப்படியே ரிசார்ட்டில் தங்கியிருப்பதக கூறி வெளியேற மறுக்கும் எம்.எல்.ஏக்களுடன் போலிசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 
ரிசார்ட்டை சுற்றிலும் 600 போலீசார் கைத்தடிகளுடன் குவிக்கப்பட்டுள்ளனர். 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=184417

கூவத்தூர் விடுதியில் மின்சாரம் துண்டிப்பு
 
கூவத்தூர் ரிசார்ட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதால் எம்.எல்.ஏக்களை வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.  விருப்பப்படியே ரிசார்ட்டில் தங்கியிருப்பதக கூறி வெளியேற மறுக்கும் எம்.எல்.ஏக்களுடன் போலிசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 
வேறு வழியின்றி, விடுதிக்கு வரும் தண்ணீர், சாப்பாட்டை அனுமதிக்க மறுக்கப்பட்டு வருகிறது.  மேலும் தற்போது ரிசார்ட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.  இதனால் ரிசார்ட் இருளில் மூழ்கிக்கிடக்கிறது.   இதையடுத்து எம்.எல்.ஏக்கள்  தானாகவே வெளியேறிவிடுவார்கள் என்று போலீசார் எதிர்பார்க்கின்றனர்.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=184418

கூவத்தூரில் பத்திரிகையாளர்கள் மீது
 மீண்டும் தாக்குதல்
 
கூவத்தூர் ரிசார்ட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதால் எம்.எல்.ஏக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  அவர்கள் வெளியேற மறுத்து வருகின்றனர்.
 
 செய்தி சேகரிக்க கடந்த ஒருவாரமாக அங்கேயே நின்று வரும் பத்திரிகையாளர்கள் மீது நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பத்திரிகையாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.  பின்னர் சசிகலா கோஷ்டியினர் சமாதானப்படுத்தினர
 
இந்நிலையில் இன்று இரவு 8. 30 மணிக்கு மேல் செய்தியாளர்களை சசிகலா கோஷ்டியினர் மீண்டும் தாக்கினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.  

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=184423

தாக்குதலை கண்டித்து கூவத்தூரில் செய்தியாளர்கள் போராட்டம்
 
கூவத்தூர் ரிசார்ட்டில் கடந்த 7 தினங்களாக சட்டவிரோதமாக எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கின்றனர்.  குறிப்பிட்ட சில செய்தியாளர்கள் மட்டும் ரிசார்ட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.  இன்று இரவு மற்ற செய்தியாளர்களூம் ரிசார்ட்டுக்குள் செல்ல முற்பட்டபோது, சசிகலாவின் பாதுகாவலர்கள் டைம்ஸ் ஆப் இந்தியா புகைப்பட நிபுணரை  கடுமையாக தாக்கினர்.
 
இதனால் செய்தியாளர்கள் அனைவரும் ரிசார்ட் முன்பாக சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=184425

கூவத்தூரில் இருந்து சசிகலா புறப்பட்டார்
 
கூவத்தூர் ரிசார்ட்டுக்கு நேற்று சென்ற சசிகலா அங்கேயே தங்கிவிட்டார்.  சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்றும் 4 ஆண்டுகள் தண்டனை உறுதியானதும், பெங்களூர் கோர்ட்டில் சரணடைய வேண்டியிருக்கும் நிலையில், சசிகலா இன்று இரவு 9.45 மணிக்கு கூவத்தூரில் இருந்து புறப்பட்டார்.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=184428

  • தொடங்கியவர்

கூவத்தூர் ரிசார்ட்டிலிருந்து சசிகலா புறப்பட்டார்!

_22230.jpg

கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் தங்கியிருந்த சசிகலா சற்றுமுன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

தமிழகத்தில் நிலவும் அசாதாரணமான சூழல் காரணமாக, சசிகலாவை ஆதரிக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூவத்தூர் ரிசார்ட்டில் கடந்த சில நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று சென்னை போயஸ் கார்டனில் இருந்து, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுடன் தங்கினார். 

இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கில், 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தது. மேலும், சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் உடனே ஆஜர் ஆக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தோடர்ந்து, தனது உடல் நிலையை காரணம் காட்டி, நான்கு வாரம் காலம் அவகாசம் கேட்டிருந்தார். இதற்கு நீதிமன்றம் எந்த பதிலும் கூறாத நிலையில், கூவத்தூரில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து தற்போது வரை, கூவத்தூரில் தங்கியிருந்த அவர், சற்று முன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்

http://www.vikatan.com/news/tamilnadu/80839-sasikala-leaves-from-kuvathur-golden-bay-resort.html

  • தொடங்கியவர்

எனக்கு வந்துள்ளது தற்காலிக பிரச்னைதான்' - சசிகலா

கூவத்தூரில் இருந்து புறப்படுவதற்கு முன் சசிகலா எம்.எல்.ஏக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், ' இந்த வழக்கு திமுகவால் தொடரப்பட்டுள்ளது. எனக்கு வந்துள்ளது தற்காலிக பிரச்னைதான். அதை என்னால் சமாளிக்க முடியும். சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு நமக்கு உள்ளது. எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

Sasikala

சட்டமன்ற கட்சி தலைவரை தேர்ந்தெடுத்த பிறகும், ஆளுநர் ஏன் இன்னும் அழைப்பு விடுக்காமல் இருக்கிறார்?. எந்த சக்தியாலும் அதிமுகவை அழிக்க முடியாது. நான் எப்போதும் கட்சியை குறித்துதான் சிந்தித்து வருகிறேன். விரைவில் ஆளுநர் அழைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80840-this-is-temporary-problem-only-says-sasikala.html

 
 
தி.மு.க என்ற கட்சியே இருக்க கூடாது : சசி ஆவேச பேச்சு
 
 
 
 
 
 
 
Tamil_News_large_1710947_318_219.jpg
 

கூவாத்தூர் : ‛அ.தி.மு.க.,வை அழிக்க நினைக்கும் தி.மு.க என்ற ஒரு கட்சி இருக்க கூடாது' என கூவத்தூரில் சசிகலா ஆவேசமாக பேசினார்.

சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் சசிகலா பேசியதாவது:என்னை தான் சிறையில் அடைக்க முடியும். எனது மனதை யாரும் சிறையில் அடைக்க முடியாது. கட்சியின் மீதுள்ள பாசத்தையோ, அக்கறையையோ சிறையில் அடைக்க முடியாது. நான் எந்த மாநிலத்தில் இருந்தாலும் என் மன ஓட்டம் கட்சியின் மீதே இருக்கும். கட்சிக்காக அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

எனக்கு வந்துள்ளது தற்காலிக பிரச்னை தான். என்னால் அதை சமாளிக்க முடியும். நான் எங்கு இருந்தாலும் அதி.முக மீதான சிந்தனை எப்போதும் எனக்கு இருக்கும் . அ.தி.மு.க,வை என்னிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.

எம்.எல்.ஏக்களின் ஆதரவு நமக்கு உள்ளது. கூடிய விரைவில் ஆட்சி அமைப்போம். சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை வைப்போம். அ.தி.மு.க.,வை அழிக்க நினைக்கும் தி.மு.க., என்ற ஒரு கட்சி இருக்க கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710947

  • தொடங்கியவர்

"எல்லோரும் தைரியமாக இருங்கள்" - சசிகலா பரபரப்பு பேட்டி

koba_sasikla__14287_23569.jpg

கூவத்தூரில் இருந்து போயஸ் கார்டன் வந்த வந்த சசிகலாவிற்கு பூ தூவி வரவேற்றார்கள் அவரது ஆதரவாளர்கள். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசியவர், "நீங்கள் எல்லோரும் தைரியமாகவும் கட்டுக்கோப்புடனும் இருக்க வேண்டும். அனைவரும் சிங்கம் போல இருக்க வேண்டும். என் இதயத்தில் இருந்து அதிமுகவை பிரிக்க முடியாது. நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது. மக்கள் நலனில் அக்கறை செலுத்தி அதிமுகவினர் பயணத்தை தொடர வேண்டும். நான் எங்கு இருந்தாலும் கட்சிப் பணிகளையும், உங்களையும் பற்றி கேட்பேன். நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம். பேரறிஞர் அண்ணா எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார். அந்த இதயம் எனக்கு இருக்கிறது." என்றார். நாளை காலை பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைவார் எனவும் சொல்லப்படுகிறது.

http://www.vikatan.com/news/sasikala/80842-all-are-be-brave---an-interview-with-sasikala-in-poes-garden.html

  • தொடங்கியவர்
பன்னீர் பக்கம் போய் விடாதீர்கள்!
எம்.எல்.ஏ.,க்களிடம் சசிகலா கண்ணீர்
 
 
 

கூவத்துார் விடுதியில் தங்கிய சசிகலா, அங்குள்ள எம்.எல்.ஏ.,க்களிடம், 'பன்னீர் செல்வம் பக்கம் போய் விடாதீர்கள்' என, கண்ணீர் மல்க கெஞ்சிய தகவல் வெளியாகி உள்ளது.

 

Tamil_News_large_171095920170214233330_318_219.jpg

முதல்வர் பதவியில் இருந்த பன்னீர் செல்வத்தை, ராஜினாமா செய்ய வைத்த சசிகலா, அந்த பதவியை பிடிக்க முயற்சித்தார். எம்.எல்.ஏ.,க்கள், பன்னீர்செல்வம் பக்கம் சென்று விடக்கூடாது என்பதற்காக அவர்களை, கல்பாக்கம் அருகே, கூவத்துார் தனியார் சொகுசு விடுதியில் அடைத்து வைத்தார்.

பிப்., 11 முதல், தினமும் போயஸ் கார்டனி லிருந்து கூவத்துார் விடுதிக்கு சென்று, எம்.எல். ஏ.,க்களை சந்தித்து பேசி வந்தார். நேற்று முன் தினம் அங்கு சென்ற போது, சொத்து குவிப்பு வழக்கில், நேற்று காலை, 10:30 மணிக்கு, தீர்ப்பு வழங்கப்பட உள்ள தகவல் வெளியானது.

அதைத் தொடர்ந்து, விடுதியிலேயே சசிகலா தங்கினார். அங்கு அனைத்து, எம்.எல்.ஏ.,க்களிட மும் உருக்கமாகப் பேசி உள்ளார். 'ஜெ., ஆட்சி தொடர, அனைவரும் ஒற்றுமையாக இருக்க

வேண்டும். இங்கு இருக்கும், 120 பேரும் முதல்வர் தான். யாரும், பன்னீர்செல்வம் பக்கம் போய் விடாதீர்கள்' என, கண்ணீர் விட்டபடி பேசி உள்ளார்.

இக்கூட்டம், நள்ளிரவு, 1:00 மணி வரை நடந்துள் ளது. அதன்பின், அமைச்சர்களுடன் தீர்ப்பு குறித்து விவாதித்துள்ளார். இரவு, 2:00 மணியளவில், அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடன டியாக, அங்கிருந்த ஐந்துமருத்துவர்கள், அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

நேற்று காலை, 6:00 மணிக்கு எழுந்து தயாரான சசிகலா, பெண் எம்.எல்.ஏ.,க்களை அழைத்து, 'யாரும் பன்னீர் செல்வம் பக்கம் போய் விடாதீர்கள்' என, மீண்டும் கெஞ்சி உள்ளார்; அப்போதும் அழுதுள்ளார். எம்.எல்.ஏ.,க்கள், அவருக்கு ஆறுதல் கூறி உள்ளனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும், மனம் உடைந்தார்; அறையை விட்டு அவர் வெளியே வரவில்லை. பின், கண்ணீர் சிந்தியபடி வெளியே வந்த அவர், மூத்த அமைச்சர்களை அழைத்து பேசினார். உடனே, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில், ஒவ்வொருவரிடமும், 'பன்னீர்செல்வம் பக்கம் செல்ல மாட்டோம்' என, ஜெயலலிதா பெயரில் உறுதி அளிக்கும்படி கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, முதல்வர் பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்பது குறித்து, ஆதரவு அமைச்சர்கள் சிலருடன் ரகசிய பேச்சுநடத்தினார்.

அதில், தன் தீவிர ஆதரவாளரான, எடப்பாடி பழனிச் சாமியை, சசிகலா பரிந்துரை செய்துள்ளார். அவரையே தேர்வு செய்யும்படி, மூத்த அமைச்சர் களிடம் கூறினார். அதன் படியே, சட்டசபை கட்சி

 

தலைவராக, எடப்பாடி தேர்வு செய்யப்பட்டார்.

சசி உறவினர் ஏற்பாடு செய்த'ஜிம் பாய்ஸ்' தப்பியோட்டம்! கூவத்துார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்ட, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் கள் தப்பி செல்வதை தடுக்க, சசிகலா உறவினர் பாஸ்கரன் ஏற்பாட்டில், திரைத்துறையில், 'ஜிம் பாய்ஸ்' என்றழைக்கப்படும், ஸ்டன்ட் நடிகர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஐந்து எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒருவர் வீதம், கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சசிகலா தங்கியிருந்த, சென்னை, போயஸ் கார்டன் இல்லத்திலும், 'ஜிம் பாய்ஸ்' நியமிக்கப் பட்டிருந்தனர். கார்டனில், சசிகலாவின் உறவினர்கள் பலரும் உள்ளனர். அவர்களை பாதுகாப்பதற்காகவே, 'ஜிம் பாய்ஸ்' நியமிக் கப்பட்டிருந்தனர். சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதும், கூவத்துார் விடுதியில் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். உடனே அங்கிருந்து, 'ஜிம் பாய்ஸ்'கள் தப்பி சென்றனர். போயஸ் கார்டனில் இருந்தும் வெளியேறி விட்டனர். - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710959

சசிகலா, எடப்பாடி மீது கடத்தல் வழக்கு பதிவு : தப்பி வந்த எம்எல்ஏ புகாரில் போலீசார் நடவடிக்கை
 
azzzzzzzzzzz.jpgமதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணன். இவர் காவல்துறை இயக்குநரிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் மீது கூவத்தூர் காவல்நிலையத்தில் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
அதிமுக எம்எல்ஏக்களை கடத்தி அடைத்து வைத்திருப்பதாகவும், அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் சரவணன் புகார் மனுவில் கூறியுள்ளார். 
 
கூவத்தூரில் உள்ள தனியார் ரெசார்ட்டில் தான் உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தாகவும், தான் மாறு வேடத்தில் தப்பி வந்ததாகவும், அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் பலர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவானவர்களாக உள்ளனர் என்று சரவணன் தெரிவித்திருந்தார். 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=184460

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.