Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் மீது துப்பாக்கிப்பிரயோகம் – வைத்தியசாலையில் அனுமதி

Featured Replies

மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் மீது துப்பாக்கிப்பிரயோகம் – வைத்தியசாலையில் அனுமதி

gun.jpg
மட்டக்களப்பு களுதாவளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று  இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த  மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரான 31 வயதான  நேசகுமார் விமல்ராஜ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

உடனடியாக  களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்  மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக  தெரிவிக்கப்படுகின்றது.

களுதாவளை கடற்கரை  வீதியிலுள்ள அவரது வீட்டுக்கு வந்த இனந்தெரியாத நபர்கள்  அவரை வெளியே அழைத்து அவர்மீது  துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடிப்  பொலிஸார் விசாணைகளில் ஈடுபட்டுள்ளனர்

http://globaltamilnews.net/archives/18718

  • கருத்துக்கள உறவுகள்

மாலை வேளையில் நண்பர் கூறினார் ஆனால் யார் காரணம் எதற்க்காக என்று என்று இன்னும் தெரியவரவில்லை  

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மட்டு களுதாவளையில் நடைபெற்ற, கொலை முயற்சியின் பின்னணியில் திடுக்கிடும் காரணங்கள்………

மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளையில் கொலை முயற்சி அல்லது அச்சுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பு மிக்க பதவியான காணி சீர்திருத்த பணிப்பாளர் போன்ற தமிழர் இனி இப்படி பதவியில் வருவதற்கு அஞ்ச வேண்டும் எனும் தொனியில் துப்பாக்கியால் உயிரை எடுப்பதற்கு முயற்சி நடைபெற்றது.

சில வேளை இவர் உயிரிழந்திருந்தால் இவ்விடத்திற்கு சகோதர இனத்தை சார்ந்தவர் வரக்கூடியநிலை காணப்பட்டது.

மட்டக்களப்பில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புகளுக்கு எதிராக துணிந்து செயற்பட்ட மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் தமிழரான நேசகுமார் விமல்ராஜ் அவர்கள் நேற்று சுடப்பட்டுள்ளார்.

குறிப்பாக ஏறாவூர் புண்ணைக்குடா வீதி, தளவாய், சவுக்கடி போன்ற பிதேசங்களில் இடம்பெற்ற அத்துமீறிய குடியேற்றங்கள் , பனைவளங்களின் அழிப்பு, அரசகாணிகளை அபகரித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக துணிந்து விரைவாக நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு அதிகாரி.
பல தடவை ஏறாவூரை சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினரான சுபைர் ஆதரவாளர்களால் அச்சுருத்தப்பட்டார்.

எத்தனையோ அரசியல்வாதிகள் அச்சத்தில் மௌனங்காத்த போதும் கூட பாதிக்கப்பட்ட மக்களோடு நியாயத்துக்காக கூடவே நின்றவர். தொடர்ந்தும் நிற்பவர்.
நிச்சயமாக இவரைப் போன்ற நேர்மையான அதிகாரிகளைப் பாதுகாக்க வேண்டும். அத்துடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெறாவண்ணம் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வழங்கப்படவும் வேண்டும்.

யுத்தம் கிழக்கை விட்டு 2008ம் ஆண்டு மௌனித்த பின் இதுவரை முஸ்லிம் நகரங்களின் அருகிலுள்ள தமிழ் கிராம ஆலயங்கள், பண்பாட்டு தலங்கள் தாக்கப்பட்டு அச்சுறுத்தியும், பெண்களை பாலியல் சேட்டைகளை செய்து பாதுகாப்பாற்ற நிலையை உருவாக்கி முஸ்லிம் இன மக்களுக்கு காணியை விற்பனை செய்ய வேண்டும், ஆக்கிரமிக்க இலகுபடுத்த நுணுக்கமாக ஒவ்வொரு காரியமும் நடைபெறுகின்றது.

யுத்தத்தின் பின் கிழக்கில் வாகனேரி பிள்ளையார் ஆலயம் மூன்று தடவை சேதம், ரிதிதென்ன பிள்ளையார் ஆலயம் மீதான தாக்குதல், மீறாவோடை ஆலயம் மீதான தாக்குதல், ஆரையம்பதி நரசிம்மர் ஆலயம் தாக்குதல், காத்தான்குடி ஆரையம்பதி எல்லை சிலை சேதம், கல்முனை நகர் தரவைச்சித்தி பிள்ளையார் ஆலயம், கடற்கரை கண்ணகி ஆலயம் உண்டியல் கதவு உடைப்பு, சம்மாந்துறை அகோரி மாரியம்மன் கோயில் சிலை உடைப்பு, திராய்க்கேணி மீனாட்சியம்மன் ஆலயம் தாக்குதல், காரைதீவு கண்ணகியம்மன் ஆலயம் கதவு உடைப்பு,பெரியநீலாவணை சவுக்காலை கல்லறை உடைப்பு ,திருகோணமலை கல்லடி நீலியம்மன் ஆலயம் எரிப்பு இப்படி தொடர்ந்து தமிழர்களின் பண்பாட்டு தலங்களை குறித்த 9வருடத்தில் சேதமாக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல்கள் பலவற்றில் சகோதர இனத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதும் மனநோயாளிகள் என குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் பல உண்டு.
கடந்தமாதம் 31ம்திகதி ஏறாவூரில் துப்பாக்கியுடன் ரவூப் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.அதற்கு முந்திய கிழமை இன்னொருவரிடம் இருந்து துப்பாக்கி ரவை கைப்பற்றப்பட்டமை போன்ற இவ் கொலை முயற்சியிற்கு ஏதும் தொடர்புள்ளதா என சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.

இனி வரும் காலங்களில் கிழக்கு தமிழ் மக்கள் தமிழ் அரசியல்வாதிகளை நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை கருதாமல் வடக்கில் கோப்பா புலவு மக்களை போன்று நமது காணி ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் மாற்று இனத்தவர் அச்சுறுத்தலுக்கு எதிராக போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

 

http://itntamil.com/?kala-2.jpg?resize=600%2C313

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக மேலே கூறப்பட்ட சம்பவம் நல்ல உதாரணம் எப்போது கிழக்கு மாகாணம் ,முதலமைச்சர் பதவி அவர்களிடம்கொடுக்கப்பட்டதோ அன்றிலிருந்து இன்று வரை தமிழ் மக்களின் நிலங்கள் சிங்கள் மக்களாலும் , முஸ்லீம் மக்களாலும் கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது உடமைகள் கூட அழிக்கப்பட்டு வருகிறது 

முன்னர் இருந்த பிள்ளையான் பரவாயில்லை போல் இருக்கிறது அவர் துரோகி என்றாலும் கிழக்கில் பெரிதாக நிலம் கையப்படுத்தப்படவில்லை. என்ன துரோகி என்போம்  எதிரிக்கு எதிரிக்கு நண்பன் போல் நமக்கு தூரோகிகள் பரவாயில்லை போல் இருக்கிறது ( கிழக்குமக்களுக்கு ) ஏற்பட்ட நிலமை அப்படி இந்த  பிரச்சினையின் ஆரம்பம் ஏறாவூரில் ஏற்பட்ட தகரால் இருக்கும்  அத்துமீறிய காணிக்கு  தடை போட்டார் அந்த உத்தியோகத்தர் அதனால் சுடப்பட்டு இருக்கிறார் என்பது மறைவாக தெரியும் உன்மை 

  • தொடங்கியவர்

காணி சீர்திருத்த ஆணைக்குழு பணிப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு: விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணை

 


காணி சீர்திருத்த ஆணைக்குழு பணிப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு: விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணை
 

காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இதேவேளை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நேசகுமார் விமல்ராஜ் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பொலிஸ் பாதுகாப்புடன் அவர் அனுப்பி வைக்கப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீது நேற்றிரவு 7.00 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

களுவாஞ்சிக்குடி – களுதாவளை பகுதியிலுள்ள அவரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்த விமல்ராஜ் உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் அத்துமீறி காணிகள் கையகப்படுத்தப்படும் முயற்சியைத் தடுப்பதற்கு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் அண்மைக்காலமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி ஏறாவூர் – புன்னக்குடா பகுதியில் அத்துமீறி காணிகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் அவர் தடுத்து நிறுத்தியிருந்தார்.

இந்த காணி அபகரிப்பு முயற்சி தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று (22) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த வழக்கு விசாரணைகளுக்காகவும் நேசகுமார் விமல்ராஜ் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேசகுமார் விமல்ராஜ் மீதான துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக, மௌன கண்டன கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

மாவட்ட செயலகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

அரச அதிகாரிகளுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

 

http://newsfirst.lk/tamil/2017/02/மட்டக்களப்பு-காணி-சீர்தி/

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

‘தவழ்ந்து, தவழ்ந்தே மருமகன் வீட்டுக்குள் சென்றுள்ளார்’
 

article_1487914552-s.jpgவடிவேல் சக்திவேல்

“ஒரு பிள்ளையின் தந்தையான என்னுடைய மருமகன், வீட்டு வாசலில் அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோதே, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவர் மீது துப்பாகிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். காயமடைந்த அவர், வாசலிலிருந்து தவழ்ந்து, தவழ்ந்தே வீட்டுக்குள் சென்றுள்ளார்” என்று காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண  பிரதிப் பணிப்பாளர் நேசகுமாரன் விமல்ராஜின் (வயது 31) மாமியார் வாக்குமூலம் அளித்துள்ளார்.  புதன்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு சம்பவம் தொடர்பில், விமல்ராஜின் மாமியாரான ஓய்வு பெற்ற ஆசிரியை ஞானம்மா குழந்தை வடிவேல், நேற்று (23) தொடர்ந்து வாக்குமூலமளிக்கையில்,   

“எங்களுடைய வீட்டு வாசலில், இந்தச் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றபோது, வீட்டில் நான் இருக்கவில்லை. களுதாவளையில் உள்ள என் தங்கையின் வீட்டிலேயே நான், அப்போது நின்றேன்.   

மருமகன் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவருடைய வலது கையிலும், விலா பகுதியிலும் துப்பாக்கிச்சூட்டு காயங்கள் உள்ளதாகவும் அன்றிரவு 7:30க்கே எனக்குக் தெரிவித்தனர்.   

களுதாவளையிலுள்ள, எங்களுடைய வீட்டில் திருத்த வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற காணத்தினால், கிரான்குளத்தில் உள்ள மருமகனின் தயார் வீட்டுக்குச் செல்வதற்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்துள்ளனர்.  

மகளும், பேரப்பிளையும் வீட்டுக்குள் இருந்துள்ளனர். மருமகன், தன்னுடைய தாயாரின் வீட்டாருடன் அலைபேசியில், வீட்டின் வாசலில் நின்று கதைத்துகொண்டிருந்துள்ளார்.   

அப்போது, மோட்டார் சைக்கிளில் இருவர் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர், இறங்கி படலையை (கேட்) திறந்து கொண்டு உள்ளே சென்று ‘நீங்களா? விமல்?’ என்று கேட்டதாகவும், அதற்குப் பின்னரே தன்மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், மருமகன் தெரிவித்துள்ளார்” என்றும் வாக்குமூலமளித்துள்ளார்.   

“திடீரென இரண்டு தடவைகள், ஏதோ வெடிச்சத்தம் கேட்டுள்ளது. அதுவும் வீட்டின் முன்வாசல் பக்கமாகவே அந்தச் சத்தம் கேட்டுள்ளது. என்னவென்று தெரியாமல், ஓடோடி வந்துபார்த்தபோது, அவருடைய கணவன் (எனது மருமகன்) வாசலில் விழுந்து கிடந்துள்ளார்.  

விபரீதத்தை அறிந்து, வீட்டுக்கு வெளியே, தான் வரவில்லை என்றும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, மோட்டார் சைக்கிளில் இருவர், மிகவேகமாக பயணித்துள்ளதை தான் அவதானித்ததாக, பின்னர் என்னிடம் தெரிவித்தார்.   

காயமடைந்து, மயக்கமடைந்த நிலையில் வாசலிலேயே விழுந்து கிடந்த என் மருமகன், தவழ்ந்து தவழந்து ஒருமாதிரியாக வீட்டுக்குள் சென்றுவிட்டார்.   

துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய இருவரும், தலைகவசம் அணிந்திருந்ததுடன், ஜெக்கட் அணிந்திருந்ததாகவும் அயலவர்கள் தெரிவித்தனர் என்றும் தன்னுடைய வாக்குமூலத்தில், ஞானம்மா குழந்தை வடிவேல் தெரிவித்துள்ளார்.   

காயமடைந்த என் மருமகன் நேசகுமார் விமல்ராஜ், களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உடனடியாக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றார். மட்டக்களப்பு, ஏறாவூர், புன்னன்குடா பிரதேசத்தில், காணி அபகரிப்பு தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளில், மேற்படி பணிப்பாளரே ஈடுபட்டு வந்துள்ளார். இது விடயமாக, கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர், புன்னன்குடா பிரதேசத்தில் வைத்து, அவர் மீது தாக்குதல் நடத்த முயலப்பட்டுள்ளது.   

இந்நிலையில், காணிகளை பலவந்தமாகப் பிடித்து வைத்திருக்கும் மக்களை, அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நீதிமன்ற ஆணையைப் பெற்றுக்கொள்வதற்காக, புதன்கிழமை (22) அவர், ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்துக்கும் சென்றிருந்தார். நீதிமன்றத்திலிருந்து வீடு திரும்பிய ஓரிரு மணித்தியாலங்களிலேயே, இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. 

- See more at: http://www.tamilmirror.lk/192131/-தவழ-ந-த-தவழ-ந-த-மர-மகன-வ-ட-ட-க-க-ள-ச-ன-ற-ள-ள-ர-#sthash.4O4iqJBi.dpuf

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.