Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேப்பாப்புலவு நீதியும், யாழ்ப்பாணம் சோனகதெருவுக்கு அநீதியும்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஹம்மத்- கேப்பாபுலவில் வாழ்ந்த 84 குடும்பங்களின் காணிகள் இராணுவத்தால் விடுவிக்கப் படவில்லை என்று கேப்பாப் புலவு மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களும் தமது ஆதர்வுகளை வழங்கியிருந்தனர்.

போராட்டம் நடத்தும் பொதுமக்களுக்காக உணவு ஏற்பாடுகளையும் அவர்கள் செய்திருந்தனர். அதேவேளை இந்த போராட்டத்துக்கு யாழ்ப்பாண முஸ்லிம்களும் தமது ஆதரவை தெரிவித்து மாணவர்களை வீதியில் இறக்கி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். ஒஸ்மானியா கல்லூரி மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றியிருந்தனர்.

இவ்வாறு தமிழர் தரப்பு நியாயமான போராட்டங்களுக்கு முஸ்லிம்கள் ஆதரவு கொடுத்து வந்தாலும் முஸ்லிம்கள் விடயத்தில் தமிழ் அதிகாரிகள் அரசியல் வாதிகள் நியாயமாக நடந்து கொள்வதில்லை என்பது கசப்பான உண்மையாகும். முல்லைத்தீவு தண்ணீரூற்று பிரதேசத்தில் நிலவும் இடப் பற்றாக் குறை காரணமாக முஸ்லிம்கள் புதிய காணிகளை பெற வேண்டியது காலத்தின் தேவையாக இருந்தது. அவ்வாறு காணியொன்று பெறப்பட்ட போது அதற்கெதிராக தமிழர்கள் சிலர் செயற்பட்டிருந்தார்கள். இதனால் அந்தத் திட்டம் பாதியிலே விடப்பட்டுள்ளது.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் உடைந்து போயுள்ள ஐநூறு வீடுகளைத் திருத்த கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. முஸ்லிம்கள் சமர்ப்பித்த 3200 மீள்குடியேற்ற விண்ணப்பங்களில் 150 குடும்பங்களுக்கே வீடமைப்பு உதவிகள் வழங்கப் பட்டுள்ளன. மிகுதி 3050 குடும்பங்களின் மீள்குடியேற்றம் நஷ்ட ஈடு என்பன இழுத்தடிக்கப் படுவதுடன் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் பரச்சேரி வயல் பிரதேசத்தில் 25 ஏக்கர் காணிகள் விவசாய செய்கைக்கு உட்படுத்தப் படாமல் கைவிடப்பட்டிருந்தன. பின்னர் இவை முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் விற்கப் பட்டிருந்தன.

இந்த காணிகளின் தரைகள் அருகிலுள்ள நாவாந்துறை கடலில் தாக்கத்தினால் உவர்ப்பு நிலங்களாக மாறி விவசாயம் செய்ய முடியாத பயனற்ற நிலங்களாக மாறியிருந்தது. இதனால் அவை குடியிருப்புத் தேவைகளுக்காக விற்கப் பட்டன. முஸ்லிம்கள் இப்பிரதேசத்தில் வீடமைக்க அங்கீகாரம் கேட்ட வேளையில் அவை வயல் காணிகள் அவற்றில் நீங்கள் குடியிருப்புகளை அமைக்க முடியாது என பிரதேச செயலகமும் மாநகர சபையும் கூறிவிட்டன. கேப்பாப் புலைவை பொருத்தவரை அவர்களுக்கு குடியிருக்க காணிகளும் வீடுகளும் வேறு இடங்களில் உள்ளன. அந்த 20 ஏக்கர் காணி விவசாய காணிகளும் ஏணைய காணிகளையும் உள்ளடக்கிய தொகுதி ஆகும். அப்படியிருந்தும் கேப்பாப்புலவு மக்கள் தமது நிலத்துக்காக போராட்டம் நடத்துகின்றனர். அதற்கு யாழ் முல்லை முஸ்லிம்களும் ஆதரவு தெரிவித்து வருகின்ரனர். இந்த 84 குடும்பங்களில் கேப்பாப் பிலவுக்கு இவ்வளவு போராட்டங்களை நடத்தும் தமிழர்கள் முஸ்லிம்கள் விடயத்தில் அநீதியாக நடந்து கொள்வது முறையா? யாழ் பல்கலைக்கழக மாணவர்களே! தமிழ் அரசியல் வாதிகளே! இது உங்களின் கவனத்துக்கு.

AkuranaToday | Read more at http://www.akuranatoday.com/news/?p=112837 .

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்புப் படை அடாத்தாக பிடித்ததை, மீட்க்கும், பாதிக்கப் படடோர் போராட்டத்தை   வேறு ஒரு சிவில் விடயத்துடன் போட்டுக் குழப்புவதா....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

வரலாற்றை எவ்வளது விரைவாக மறந்து போகின்றோம்...கொழும்பான்!

கண்டியின் கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்கன் காலத்தில்...பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில்..அப்போது வர்த்தக நோக்கத்தில் வந்த முஸ்லிம்களுக்கு...மன்னனால் 'கந்தளாய்' என்னுமிடத்தில் நிலம் ஒதுக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டது!

இரு நூற்றாண்டுகள் கடந்த நிலையில்...இன்று கந்தளாய் நிறைந்தது மட்டுமன்றி...மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்,புத்தளம்  போன்ற பல நிலப்பகுதிகள் அனைத்தும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்வதற்காக ...தமிழர்களினால்..விற்கப் பட்டது..அல்லது ஒதுக்கப் பட்டது!

இவர்கள் தமிழர்களுடன் கலந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது!

ஆனால் அவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று எப்போதும் நினைத்து மிகவும் குறைவு! ( மிகச் சிலரைத் தவிர). அவர்களுக்குள் எனது நண்பர்களும் அடக்கம்!

உண்மையில்...அப்போதைய கல்வி அமைச்சர் பதியுதீன் மகமூத் அவர்களின் தரப்படுத்தல் முறையே...ஆயுதப் போராட்டமொன்றை நோக்கி..இளைய தலைமுறையை நகர்த்தியது!

மத அடிப்படையில், இனத்தை வரையறுக்கும் புத்த பிக்குகளுக்கும், முஸ்லிம் மதத் தலைவர்களுக்கும் என்ன வித்தியாசமுண்டு எண்டு நீங்கள் நினைக்கிறீர்கள்?

மத அடிப்படையில்...ஒரு தமிழன் ..உரிமைப் போராட்டம் நடத்திய வரலாறு உண்டா?

இனமாக இணைந்து கொள்ளுங்கள் என்று முஸ்லிம்களுக்கு..எவ்வளவோ தடவைகள் வேண்டுகோள் விடுக்கப்பட்டது!

அவர்கள் ...தங்கள் லாப நோக்கில்..தேவைக்கேற்ப இனமாகவும்...மதமாகவும் தங்களை அடையாளம் காட்டிக்கொள்வார்கள்!

மேலுள்ள ...உங்கள் பதிவில்...தங்கள் தேவை கருதி....இன அடையாளத்தைக் காட்டுகிறார்கள் என்பது எனது கருத்து!

  • கருத்துக்கள உறவுகள்

சோனகதெருவுக்குப் பதில் யாழ் மின்சார நிலையவீதி - நவீன சந்தைப் பகுதி.. முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கே. அதை எவன் கவனிக்கிறான். :rolleyes:tw_blush: மூதூரில் தமிழ் மக்களின் நூற்றுக்கணக்கான வாழ்விடங்கள் இன்னும் குடியேற முடியாத நிலையில் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கே.. கல்முனையில் அப்படி. இதெல்லாம்.. எந்தக் கணக்கில்....................................... இதனை ஏன் முஸ்லீம் சகோதரர்களுக்காக எழுதிக் கிழிப்பவர்கள்.. அவர்களிடம் கேட்பதில்லை..??! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதங்கமும் / வேதனையும் புரிகின்றது. புங்கை.
இலங்கையில் மாத்திரம் தான் தமிழர்கள் தாங்களை முஸ்லீம்கள் என அழைத்துக்கொள்கின்றார்கள்.
அவர்கள் தாங்களை அரபுக்ளின் வாரிசுக்களாக கருதுகின்றார்கள். இப்போ எல்லோரும் அரேபிய உடைகளையே அணிகின்றார்கள்.     

  • கருத்துக்கள உறவுகள்

அக்குறண ருடே....

தமிழ் மொழியில் பேசுவார்கள், எழுதுவார்கள்... தமிழர்கள் அல்ல... 

அரபி பேசுவார்கள், எழுதுவார்கள்... அரபிகள் அல்ல... 

மதரீதியாக மட்டும் தம்மை அடையாளப்படத்துவதால் அன்னியத்தன்மையை (not belonging) தமக்குத்தாமே ஏற்படுத்துகிறார்கள்.

தமிழகத்தில்.... தமிழர்கள் என்று சொல்வதால் இணைந்து வாழ முடிகிறது.

இலங்கை வாழ் முஸ்லீம்கள் பலவகை: தமிழகத்தில் இருந்து வந்தோர்...  மத்தியகிழக்கில் இருந்து வந்தோர் (சிரியாவின் அல்பபோ பகுதியில் இருந்து பலர், சில நூறாண்டுகளுக்கு முன் வந்தவர்கள் வம்சாவளியே ரவுப் கக்கீம்).

பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள்
இன்னோர் வகை. 

மத்தியகிழக்கில் இருந்து, மலேசியா, இந்தோனேசியா சென்று இஸ்லாத்தை பரப்பியவர்கள், போகும் வழித்தடத்தில், தங்கிவிட்ட, இடங்கள்: கிழக்கும், மாலைதீவும்.

முஸ்லீம் மக்கள், மதரீதியாக தம்மை அடையாளப்படுத்துவதை ஒரு பக்கமாக வைத்துவிட்டு, ஒன்று சிங்களம் படித்து தம்மை சிங்களவர் எனவோ, அல்லது தமிழர் எனவோ அடையாளம் காண்பிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/02/2017 at 8:28 AM, Nathamuni said:

அக்குறண ருடே....

தமிழ் மொழியில் பேசுவார்கள், எழுதுவார்கள்... தமிழர்கள் அல்ல... 

அரபி பேசுவார்கள், எழுதுவார்கள்... அரபிகள் அல்ல... 

மதரீதியாக மட்டும் தம்மை அடையாளப்படத்துவதால் அன்னியத்தன்மையை (not belonging) தமக்குத்தாமே ஏற்படுத்துகிறார்கள்.

தமிழகத்தில்.... தமிழர்கள் என்று சொல்வதால் இணைந்து வாழ முடிகிறது.

இலங்கை வாழ் முஸ்லீம்கள் பலவகை: தமிழகத்தில் இருந்து வந்தோர்...  மத்தியகிழக்கில் இருந்து வந்தோர் (சிரியாவின் அல்பபோ பகுதியில் இருந்து பலர், சில நூறாண்டுகளுக்கு முன் வந்தவர்கள் வம்சாவளியே ரவுப் கக்கீம்).

பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் ( அசாத் அலி ) இன்னோர் வகை. 

மத்தியகிழக்கில் இருந்து, மலேசியா, இந்தோனேசியா சென்று இஸ்லாத்தை பரப்பியவர்கள், போகும் வழித்தடத்தில், தங்கிவிட்ட, இடங்கள்: கிழக்கும், மாலைதீவும்.

முஸ்லீம் மக்கள், மதரீதியாக தம்மை அடையாளப்படுத்துவதை ஒரு பக்கமாக வைத்துவிட்டு, ஒன்று சிங்களம் படித்து தம்மை சிங்களவர் எனவோ, அல்லது தமிழர் எனவோ அடையாளம் காண்பிக்க வேண்டும்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.