Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களின் காணிகளிலிருந்து வெளியேறுகிறது இராணுவம்

Featured Replies

மக்களின் காணிகளிலிருந்து வெளியேறுகிறது இராணுவம்

 

 

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்களின்  காணிகளிலிருந்து இராணுவத்தினர் தற்போது வெளியேறி வருகின்ற நிலையில், காணிகளை துப்புரவு செய்யும் நோக்கில் மக்கள் இராணுவத்தின் முகாம் அமைந்திருந்த பகுதிகளுக்குள் சென்று கொண்டிருப்பதாக எமது  செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 unnamed-_9_.jpg

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஐந்தாவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

unnamed-_13_.jpg

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது.

unnamed-_12_.jpg

அதன்போது மக்களின் காணிகளை பிரதேச செயலாளர் அடையாளப்படுத்தியதன் பின்னர் தாம் வெளியேறுவதாக இராணுவத்தினர் உறுதியளித்திருந்தனர். 

unnamed-_11_.jpg

அதன்படி, நேற்றைய தினம் மக்கள் தமது காணிகளை பிரதேச செயலாளருக்கு அடையாளம் காட்டியிருந்த நிலையில் இன்று ஐந்தாவது நாளாகவும் தமது போராட்டத்தை தொடர்ந்து வந்த நிலையிலேயே இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

unnamed-_10_.jpg

அத்துடன் மக்கள் முகாம் அமைந்துள்ள பகுதிகளுக்குள் சென்று காணிகளை சுத்தப்படுத்தவும் இராணுவத்தினர் அனுமதியளித்துள்ளனர். எனினும் குறித்த பகுதியைவிட்டு இராணுவம் முழுமையாக வெளியேறும்வரை ஊடகவியலாளர்கள் அப்பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

http://www.virakesari.lk/article/17028

  • தொடங்கியவர்

அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் நிறைவேறவில்லை, எமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ; பரவிப்பாஞ்சான் மக்கள்

Published by Priyatharshan on 2017-02-24 15:09:35

 

பல்வேறு அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரால் காணி விடுவிப்பு தொடர்பில்  கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் போது பல வாக்குறுதிகள் வழங்கப்பட்ட நிலையில் அவை எதுவும் நிறைவேறாத பட்சத்தில் தங்களினால் மேற்கொள்ளப்பட்ட தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே தாம் இதனை கருதுவதாக கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் மக்கள் தெரிவித்துள்ளனர்.

unnamed-_15_.jpg

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான்  பிரதேசத்தில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகளை விடுவிக்கக்கோரி கடந்த திங்கள் முதல் பாதிக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்பு  போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் காணிகள் விடுவிக்கப்படும் என்ற உத்தரவாதத்தினையடுத்து இன்று கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதோடு மக்களும் தங்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

unnamed-_14_.jpg

2008 ஆம் ஆண்டுக்கு  பின்னர் இன்று முதல் தடவையாக தங்களின் வீடுகளுக்குச் சென்று  துப்ரபுவு செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். அத்தோடு குறித்த பிரதேசங்களில் இருந்து படையினரும் படிப்படியாக வெளியேறிவருகின்றனர். குறித்த பகுதிகளில் படையினரால் அமைக்கப்பட்ட வேலிகள் அகற்றப்பட்டு அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

unnamed-_18_.jpg
இந்த நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை பொதுமக்களின் காணிகள் உத்தியோகபூர்வமாக படையினரால் மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளன.

unnamed-_17_.jpg

பின்னர் பிரதேச செயலகம் ஊடாக காணிகள் உரிய மக்களிடம்கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

unnamed-_16_.jpg

பல்வேறு அரசியல்வாதிகள் , அதிகாரிகள் ஆகியோரால் காணி விடுவிப்பு தொடர்பில்  கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் போது பல வாக்குறுதிகள் வழங்கப்பட்ட நிலையில் அவை எதுவும் நிறைவேறாத பட்சத்தில் தங்களினால் மேற்கொள்ளப்பட்ட தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே தாம் இதனை கருதுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/17029

  • கருத்துக்கள உறவுகள்

இது மக்களுக்கு தேவையில்லாத வேலை ..........

சம்மந்தன் ஐயாவும் சுமந்திரன் ஐயாவும் இரவு பகல் பாராது 
அயராது  உழைத்து ஒரு சுமூக நிலையை தோற்றுவித்து ... தீர்வு 
இன்றோ .. நாளையோ என்று இருக்கும் நேரத்தில்...

போராட்டம் அது இது என்று சொல்லி 
உறவில் விரிசலை ஏற்படுத்த .... மக்கள் செய்யும் இந்த செயலை 
வன்மையாக கண்டிக்கிறேன் !

  • கருத்துக்கள உறவுகள்

ஐ நா கூட்டத்தொடர் முடிய மீண்டும் வாள்வெட்டுக் கும்பலை அனுப்பிட்டு.. பாதுகாப்புக் கொடுக்கிறம் என்ற போர்வையில்.. பின்னால போய் குந்தக் கணக்கா இருக்கும். 

சிங்களவனுக்கு உலகை ஏய்க யாரும் பாடம் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. எங்கட ஏமாளி.. கோமாளி அரசியல்வாதிகளே போதும். tw_blush:

1 hour ago, nedukkalapoovan said:

சிங்களவனுக்கு உலகை ஏய்க யாரும் பாடம் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. எங்கட ஏமாளி.. கோமாளி அரசியல்வாதிகளே போதும். tw_blush:

அதுதானே, எங்கட Alias முருகனையே ஏமாத்தீட்டாங்களாம் - இவங்கெளெல்லாம் ஒரு ஜுஜுபி.   :grin::grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.