Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவில் இன்று மங்கள உரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவாவில் இன்று மங்கள உரை

1683919244mangala_samaraweera.jpg

வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் இன்று இடம்பெறும் மனித உரிமைகள் அமர்வில் உரையாற்றவுள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகியுள்ளதோடு, எதிர்வரும் 24ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 
 

http://tamil.adaderana.lk/news.php?nid=88544

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“இதயத்தில் இடம்பிடித்த நாடு சிறிலங்கா” – மங்களவிடம் மனம் திறந்த ஐ.நா பொதுச்செயலர்

 

mangala - UN Secretary-General Antonio Gueterres (1)ஜெனிவாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கடந்த ஜனவரி முதலாம் நாள் புதிய ஐ.நா பொதுச்செயலராகப் பொறுப்பேற்ற பின்னர் அன்ரனியோ குரெரெசை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முதல்முறையாகச் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பலப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்ற ஐ.நா பொதுச்செயலர்,  மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கு உதவ ஐ.நா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

mangala - UN Secretary-General Antonio Gueterres (1)mangala - UN Secretary-General Antonio Gueterres (2)

அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையராக பணியாற்றிய போது உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில், 1978ஆம் ஆண்டில் இருந்து தாம் பலமுறை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டதாகவும், சிறிலங்கா தமது இதயத்தில் இடம்பிடித்த நாடு என்றும் ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2017/02/28/news/21654

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவா ஐ.நா.மனித உரிமை பேரவையில் குவிந்துள்ள தமிழர்கள்.

 

media in genevaஐ.நா.மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிய நிலையில் இக் கூட்டத்தொடரில் அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக சுமார் 25க்கு மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பி.ரி.எவ் எனப்படும் பிரித்தானிய தமிழர் பேரவை, கனடிய தமிழ் கொங்கிரஸ், உலக தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், ஈழத்தமிழரவை, பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம், உட்பட பல அமைப்புக்களின் பிரதிநிதிகளை இம்முறை ஜெனிவாவில் காணக்கூடியதாக உள்ளது.

இலங்கையிலிருந்தும் சிலர் வருகை தந்துள்ளனர்.

இதேவேளை சிறிலங்கா அரச தரப்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் சுமார் 10க்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்துள்ளனர்.

media-in-geneva.jpg

http://thinakkathir.com/?p=67982

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் இலங்கை உறுதியாகவுள்ளது – ஐநாவில் மங்கள

 

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் இலங்கை உறுதியாகவுள்ளதாக, அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  இன்றையதினம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின் 34வது அமர்வில் உரையாற்றுகையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பில் கடந்த 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இணைப் பங்காளர்களாக இணைந்து கொண்டு சுமார் 15 மாதங்கள் கடந்துள்ள நிலையில் தான் இன்று உரையாற்றுவதாக தெரிவித்த அவர்  சிலர் தமது  செயற்பாட்டை நாட்டை காட்டிக் கொடுத்ததாகவும்   துரோகமிழைத்தாகவும்  விமர்சித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

1948ம் ஆண்டு சுதந்திரத்தினைப் பெற நாம் அனைவரும் ஜாதி, மத, இன பேதங்களின்றி ஒன்றாக பணியாற்றி வெற்றி பெற்ற போதும்  அனைத்து மக்களையும் சமமாக நடத்தி hட்டை கட்டியெழுப்பத் தவறியமையால் கடந்த 69 வருடங்கள் வலிகள், வன்முறைகளுடன் பயணித்தாகவும்  விலைமதிப்பற்ற மனித வளங்கள் மற்றும் வாழ்க்கை என்பவற்றை இழந்தோம் எனத் தெரிவித்தார்.

மேலும்  இலங்கையை நீதியான ஆட்சியை கட்டியெழுப்ப கோருகிறோம் எனக் குறிப்பிட்டுள்ள அவர் சுமார் 5,515.98 ஏக்கர் அரச காணிகள் மற்றும் 2,090.03 ஏக்கர் தனியார் காணிகள் 2016ம் ஆண்டில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 1,383.51 அரச காணிகள் 30.54 ஏக்கர் தனியார் காணிகள் கடந்த மாதம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

அத்துடன், நல்லிணக்க கலந்தாய்வுச் செயலணி பாதிக்கப்பட்ட சுமார் 7000 பேரின் கருத்துக்களை எழுத்து மூலம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், இந்த அறிக்கை தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/archives/19388

போர் குற்ற விவகாரம் : கால அவகாசம் கிடைக்கும் பட்சத்தில் முழுமையான தீர்வினை ஏற்படுத்த முடியும் : மங்கள சமரவீர

 

 

இன்னும் இரண்டு வருடங்கள் கொடுக்கும் பட்சத்தில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு, சாதகமான முடிவுகளை ஏற்படுத்த முடியுமென்பதோடு, புதிய அரசியலமைப்பு மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை இவ்வாண்டுக்குள் எட்டுவோம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் இன்று உறுதி வழங்கியுள்ளார்.

hqdefault.jpg

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர்  நேற்று திங்­கட்­கி­ழமை (27) ஐ.நா.மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹசைனின் உரை­யுடன் ஆரம்­ப­மா­னது.

எதிர்­வரும் மார்ச்  மாதம் 24 ஆம் திக­தி ­வரை நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத்  தொடரில் உலக நாடு­களின்  மனித உரிமை நிலை­மைகள் குறித்து  ஆரா­யப்­ப­ட­வு­டள்­ளன. 

இந்நிலையில் இன்று உரையாற்றிய  வெளிவிவகார அமைச்சர், இலங்கை அரசானது சுதந்திரமடைந்த கடந்த 69 ஆண்டுகாலமாக நிகழ்ந்த இரத்தம் சிந்திய போராட்ட சூழல் மற்றும் பதற்ற சூழலை எதிர் கொண்டதால், சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திகளை எட்ட முடியாமல் போனதை தாம் ஏற்று கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த காரணங்களினாலேயே இலங்கை அரசாங்கமானது, விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. இவற்றை எதிர்கொள்ளவே, காணாமல் போனோரை கண்டு பிடிப்பதற்கான தனியான ஆணைக்குழு, தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டு குழு மற்றும் தகவலறியும் உரிமைச்சட்டம் உருவாக்கல் போன்ற செயற்பாடுகளை கடந்த ஆறு மாதங்களுக்குள் செயற்படுத்தியுள்ளது.

இருப்பினும் தனியார் தொண்டு நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக, இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்கும், இராணுவத்திற்கும் எதிரான குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு, சர்வதேச நீதிபதிகளின் ஊடான விசாரணை பொறிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

தனது சார்பில் யுத்தக்குற்றங்கள் குறித்த எவ்வித குறிப்புகளையும் வெளியிடாத நிலையில், குறித்த விவகாரம் இலங்கையில் நடைமுறையிலுள்ள ஒன்றித்த அரசாங்கத்தின் செயற்பாடுகளில், சர்ச்சைக்குரிய விடயமாக இருப்பதனால் ஜனாதிபதிய மைத்திரிபால சிறிசேன, குறித்த சர்வதேச நீதிபதிகள் பொறிமுறையை நிராகரித்து வருவதாக விளக்கமளித்துள்ளார்.

சுமுகமான தீர்மானம் ஒன்றை ஏற்படுத்த பிரிட்டனின் அனுசரனைகள் கிடைத்திருந்தாலும், இலங்கையின் போர்க்குற்ற பொறுப்பு கூறலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் கொடுக்கும் பட்சத்தில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு, சாதகமான முடிவுகளை ஏற்படுத்த முடியுமென தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் வடக்கு கிழக்கு பிராந்தியங்களில் இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள நிலங்கள் கட்ட கட்டமாக விடுவிக்கப்பட்டு வரும் சம்பவத்தால், ஆணையாளர் அரசாங்கத்தை விமர்சித்து வரும் நிலையில், எதிர்வரும் வாரங்களில் இலங்கையின் நடப்பு விவகாரங்கள் தொடர்பான விவாதங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/17195

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.