Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 26/03/2017 at 5:37 PM, தமிழ் சிறி said:

அட... இந்த முறை,  பழனி....  கோவணம் கட்ட வில்லை. :unsure:
இந்த களேபரத்துக்குள்ளை.... கோவணப் பிரச்சினை, பெரிய  பிரச்சினையாய்  கிடக்குது. :grin: :D:

கதை, நன்றாக போகின்றது சுவியர். தொடர்ந்து அசத்துங்கள்.:)

சிறியர் ..., இந்தக் கதையில் துருச்சாமியுடன் அவருடைய தண்டம், கமண்டலம் , கோவணம், தூளிப்பை  எல்லாம் ஒவ்வொரு பாத்திரமாக உலவுகின்றது. அதனால் கோவணம் தவிர்க்க முடியாத ஒன்று....!  tw_blush:

On 26/03/2017 at 9:16 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஐயோ சுவி அண்ணா சிரிச்சு மாளேல்லை. நீங்களும் கசிப்பு கிசிப்பு அடிச்சிட்டுத்தான் கதையை எழுதுறியளோ >???

நன்றி சகோதரி....! நான் இன்றுவரை எந்த ஒரு மதுபானமோ அல்லது சிகரெட் போன்ற வஸ்துக்களோ,அன்றி பல வருடங்களாக மாமிசங்களும் பாவித்ததில்லை.ஆனால் எல்லோரோடும் கூட்டாளியாக இருந்துள்ளேன், இருக்கின்றேன்....! tw_blush:

On 27/03/2017 at 3:18 AM, புங்கையூரன் said:

துருச்சாமி......எனது எதிர்பார்ப்புக்கள் எல்லாவற்றையும்....தவிடு பொடியாக்கிய படியே....தன் பாட்டில் போய்க்கொண்டிருக்கிறார்!

அவரது விழுப்புண்கள், ஏற்பட்ட விதங்களை வாசித்த பிரமிப்பு இன்னும் அடங்கவேயில்லை!

ஆனால் ஒரே ஒரு குறை.....!

நம்ம சிலுக்கைப் பற்றி...துருச்சாமி ..ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கலாம்!:cool:

எதோ ஒரு வேகத்தில எழுதிட்டன் . பின்பு வாசிக்கும் பொது எனக்கும் ரசிப்பாகத்தான் இருந்தது......! tw_blush:

On 27/03/2017 at 2:26 PM, ஜீவன் சிவா said:

சொந்த அனுபவம் போலவே இருக்குதே சுவியர் ... :grin:

அடபாவி, வாசிக்காமலா இத்தனை பச்சையும் போட்டீங்கள் / இனி வாசித்தப்புறம் என்ன பண்ணுவீங்கள்  :grin:

இதெல்லாம் சொந்த அனுபவம் கிடையாது. அனுபவஸ்தர்களுடன் மிக அருகில் இருந்து பெற்ற பேரனுபவம் .....! tw_blush:

On 27/03/2017 at 5:43 PM, ஈழப்பிரியன் said:

பொதுவாக பெண்களில் குற்றச் சாட்டு என்னவென்றால்

கட்டிப் பிடித்தால் விடுங்கோ விடுங்கோ என்று முணு முணுப்பார்களே தவிர பிடியில் இருந்து தப்ப முயற்சிக்கவே மாட்டார்கள் என்று.

யாழிலே ரொம்பவும் பிசியான ஆள். அதால தான்.

இதில் நான் ஒன்றும் சொந்தமாய் எழுதவில்லை ஈழப்பிரியன். அய்யன் வள்ளுவனின் 1121 வது குறளுக்கு  ஒரு உருவகம் கொடுத்திருந்தேன் அவ்வளவுதான்.2000 ஆண்டுக்கு முன்பே காதலை எவ்வளவு கொண்டாடி இருக்கிறார்கள்...! tw_blush:

On 27/03/2017 at 7:18 PM, வல்வை சகாறா said:

இந்தத் துருச்சாமியால யாழில உள்ள ஆண் உறுப்பினர்கள் எல்லோரும் ஏகாந்த உலகத்திற்குப் போய் இருக்கிறார்களாம். ஐயா சுவியரே நகைச்சுவை பதிவென்றாலும் அதற்கும் அப்பால் போதை... பேதை என்று சமூகவெளியில் கடாசிக் கிடக்கும் பலதையும் எழுத்தில் குவிக்கிறீர்கள். வாசிக்கும்போது குபீர் என்று சிரிக்கவைக்கும் கதையோட்டத்தின் பின்னால் ஆற அமர சிந்திக்கும்போது சந்தர்ப்பங்களும், சபலங்களும், நிலையற்ற தன்மையும் கொண்ட ஸ்திரமற்ற வாழ்வின் ஓட்டத்தையும் பார்க்கமுடிகிறது. ஒழுக்கம் என்பது மனிதர்களுக்கு மனிதர் வேறுபடும். வெகுளித்தனத்தில் உறவின் தன்மைகள் விரிசல்படுவதும், கள்ளத்தனங்கள் குடிகொள்வதும் என்று இந்தத் துருச்சாமியுடன் பயணிக்கும்போது அறியக்கூடியதாக இருக்கிறது. ஆக மொத்தத்தில் ஏமாற்றும்  உலகின் நியங்களின் தரிசனம்.

நன்றி சகோதரி..., இந்தக் கதை எழுத ஊக்கம் தந்தத்துக்கு நீங்களும் ஒரு காரணம். கதை எழுத எண்ணம் வந்ததும் சும்மா சகட்டுமேனிக்கு எழுதாமல் நகைச்சுவையாக எழுதலாம் என்று யோசித்தேன். அப்போது எனக்கு தோன்றியவர்கள் அரசியல்வாதி, வைத்தியர், சாமியார்.... இதில் சாமியார் வந்திட்டார்....!  tw_blush:

On 27/03/2017 at 10:45 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வரவர சுவி அண்ணாவின் பதிவை எட்டிப் பாக்கவே பயமாய் இருக்கு. குமர்ப் பிள்ளையளும் நடமாடிற இடம் அண்ணா. பாத்து எழுதுங்கோ.

இதெல்லாம் பல்வேறு எழுத்தாளர்களின் ( சுஜாதா, புஷ்பா, ஜெயகாந்தன், சாண்டில்யன்,சோபா) போன்ற ஏராளமான எழுத்தாளர்களை விட நான் ஒரு தூசு ......! அப்படியும் இரண்டாவது காண்டம் தடை (disclaimer)  வைத்துத்தான் எழுதியுள்ளேன். இப்ப நினைக்கின்றேன் இங்கு ஏனைய திரிகளை கருத்துக்களையும் பார்க்கும்போது அதுகூட அவசியமில்லையென்று.......!  tw_blush:

On 27/03/2017 at 11:12 PM, கிருபன் said:

அந்தக் குமர்ப்பிள்ளையளுக்காகத்தானே சுவியர் disclaimer போட்டிருக்கின்றார். கவனிக்கவில்லையா.

 

அடுத்து வாலிபர் காண்டம். இதில் இரண்டு படலங்கள் இருக்கின்றன. இதை வாசிக்க சில கட்டுப்பாடுகளை கம்பெனி விதித்துள்ளது

நன்றி கிருபன். என்னையும் ஏதோ ஒன்று எழுதவைத்ததற்கு மீண்டும் நன்றி.....!  tw_blush:

On 27/03/2017 at 11:56 PM, புங்கையூரன் said:

ஐயோ,,,ஐயோ.....ஐயோ..!

கடைசி வரியை வாசிக்கிற போதே....வயித்துக்குள்ளை வண்ணாத்திப் பூச்சி பறக்கிற மாதிரிக் கிடக்குது!

உடம்பெல்லாம் புல்லரிச்சு....ஓய்ஞ்சு போற மாதிரி...ஒரு பீலிங்!

சிலுக்கு பெயரை...எங்கையாவது பாத்தால்...எப்பவுமே...இப்படித்தான்!

நன்றி.....சுவியர்!

46788-647x450.jpg

 

ஆஹா.... சேம்பிளட்.... ஐ லைக் யு .....!  tw_blush:

  • Replies 104
  • Views 15k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 28/03/2017 at 4:43 AM, Kavallur Kanmani said:

சுவியின்ர படத்தில சிலுக்கும் பிரசன்னமாகிற்றா  இனி  துருச்சாமி  வெற்றிப்படம்தான். கதை நகைச்சுவையுடன் நன்றாக நகர்கிறது. தொடருங்கள்

உண்மைதான் சகோதரி...... ஒருகாலத்தில் கமல் ரஜனி படங்களின் வெற்றியை தீர்மானித்ததே சிலுக்குதானே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி....!  tw_blush:

On 28/03/2017 at 8:45 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட இப்பிடி ஒண்டு போட்டிருக்கா என்ன. பாக்கவே இல்லையே.:cool:

எனக்குத் தெரியும் நீங்கள் கதையோடு ஒன்றிப் போய் விட்டிர்கள் என்று...., நன்றி சகோதரி....!  tw_blush:

On 28/03/2017 at 6:23 PM, தனி ஒருவன் said:

ஹாஹாஹாஹஹா   சுவி அண்ணை இனி பெடிச்சிகள் யாரும் உந்தப்பக்கம் வரமாடினும் tw_blush:

சிறந்த எழுத்துப்பதிவு  ஒரு மொழி பழகும் போது அதன் கெட்ட வார்த்தைகள்  முதலில் அறிவோம் அது போல்  வார்த்தைகளால் விளையாடியுள்ளீர்கள் மிகுதி மிகுதி :unsure:

தனி விளையாடுறீங்களா, குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இனி ஒரு கதை மாதிரி எழுதநேர்ந்தால் பெடிச்சியல் எல்லாம் துடிச்சுக் கொண்டு ஓடி வாற மாதிரித்தான் எழுதுவது. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி....!  tw_blush:

On 28/03/2017 at 7:41 PM, விசுகு said:

உதெல்லாம்  இப்பத்தைய பயலுகளுக்கு அண்ணா

நீங்க  எழுதும்போதே எமக்கு அது தேவையில்லை என்று  நினைத்திருப்பீர்கள்

தொடருங்கோ..

ஆஹா அத்தனையும் உண்மை விசுகு. நன்றி...!  tw_blush:

On 28/03/2017 at 8:13 PM, கிருபன் said:

சுவியர் படம் பார்க்கும்போது ஒவ்வொரு ஃபிரேமாகப் நிறுத்தி நிறுத்திப் பார்ப்பாரோ?

உண்மைதான் கிருபன்.... நான் தனியா இருந்து பார்த்தால் அதிகம் படத்தை ஓடவிட மாட்டன். நன்றி கிருபன் ....!  tw_blush: 

On 28/03/2017 at 8:58 PM, ஈழப்பிரியன் said:

சுவியர் இந்த கதை எங்காவது பார்த்து எழுதுகிறீர்களா இல்லை நீங்களாகவே எழுதுகிறீர்களா?
ஒரே தலையைச் சுற்றுது.பசு மாதிரி இருந்த சுவி இப்போ புலியாக பாய்கிறாரே?எங்கேயோ போயிட்டீங்க.

இதுக்கு பதில் கீழே கிருபன் கூறியதுதான்..... நன்றி பிரியன்....! tw_blush:

On 28/03/2017 at 9:05 PM, கிருபன் said:

காலம்காலமாக தலைக்குள்ள பெளத்திரமாக ஒளித்து வைத்ததை பார்த்துப் பார்த்து தட்டச்சு செய்கின்றார் என்றுதான் நினைக்கின்றேன். கடைசியாக வந்த பதிவை நான் கலாதியான "கலைப்படங்களில்"கூடப் பார்க்கவில்லை.?

நீங்களே ரசித்திருக்கின்றீர்கள் என்றால் ஏதோ சுமாராய் வந்திட்டுது என நினைக்கின்றேன்....!  tw_blush:

On 28/03/2017 at 9:42 PM, nochchi said:

உண்மையிலேயே சுவியவர்களே!

சிரிசிரிஎன்று சிரித்து வயிற்று நோவந்திட்டுது. தொடருங்கள். உண்மையிலே ஒரு சிறந்த நகைச்சுவையோடு நடைமுறை சார்ந்த ஏமாறும் மக்கள் என்று பல்வேறு விடயங்களைத் தொட்டுத் தடவித் தழுவிச்........................... செல்கிறீர்கள். வளர்க!
nTBMGXayc.gif

பின்ன... நான் நகைச்சுவை கதை என்று சொன்னதுக்கு பிறகும் யாரும் சிரிக்கவில்லை என்றால் மனம் எவ்வளவு வேதனைப் படும்.... நன்றி நொச்சி...!  tw_blush:

On 29/03/2017 at 0:03 AM, புங்கையூரன் said:

சுவியர்....உவமான, உவமேய விசயங்களில்.....கம்பன் கூட ...உங்களிடம் பிச்சை வாங்க வேண்டும்!

இப்போது ..கதையை மேலோட்டமாக் மேய்வதில்லை!

ஆற அமர அமர்ந்து ....ஒவ்வொரு வரியையும்..உள்வாங்கிய படியே.....வாசித்து அனுபவிக்கிறேன்!

தொடர்ந்தும்..வீணையை...மீட்டுங்கள்!

கண்களை மூடிய படியே...நாங்களும் அந்த நாதத்தின் சுகத்தில் திளைப்போம்!

சிறு திருத்தம்.... எல்லாம் கம்பன், சாண்டில்யன், பாகவதம் போன்றவற்றில் பொறுக்கியதுதான்....! நன்றி புங்கை....!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 29/03/2017 at 7:37 PM, கிருபன் said:

வசனம் அந்தமாதிரி வந்திருக்கு.

" அத்தனை மதச்சின்னங்களும் மாட்டின் முதுகில ... ஆனால் மாட்டுக்கு ஏது மதம். மனிதனுக்கு பிடித்திருக்கு"

இது கவிஞர் வாலி ஐயாவின் பாதிப்புதான், ஆனால் நன்றாக வந்திருக்கு.....! tw_blush:

On 30/03/2017 at 10:51 AM, ஜீவன் சிவா said:

1md1ef.jpg

1md1hh.jpg

ஸ்....ஸ்...... அவர்கள் மஹாமேதைகள்.....! அவர்களின் முழங்கையால் ஒழுகிய கூழ்தான் இது....! tw_blush:

On 30/03/2017 at 10:58 AM, putthan said:

 ஐயா வாசிச்சு வயிறு நோகிறது.....முழுதும் வாசித்த பின்பு எழுதுவோம் என்றிருந்தேன்....ஆனால் முடியவில்லை ...

நன்றி புத்தன் வருகைக்கும் கருத்துக்கும்......! tw_blush:

On 30/03/2017 at 2:01 PM, ஜீவன் சிவா said:

நம்ம ஊரிலையும் இப்படி ஒருவர் + அவரின் மாடுகள் + வண்டில்.

மாட்டையும் வண்டிலையும் காணேல்ல எண்டு யாரும் தேடுவதில்லை. அது தானாக சிங்கனின் சிங்கி வீட்டிற்கு போய் கொல்லை பக்கத்தில பார்க் பண்ணீற்று நிக்குமாம். :grin: 

ஆமா இவர் இப்ப யாரை கேட்டு சுபம் போட்டார்.

 

ஜீவன் முன்பு மாநகரசபை குப்பை அள்ள மாட்டு வண்டில்கள் பாவித்தனர். அள்ளுவதற்கு கையில் இரண்டு தகரங்கள் வைத்திருப்பார்கள். இந்த மாடுகள் குப்பைகளுக்கு அருகில் சென்று நின்று விடும். அவர்கள் குப்பை அள்ளிப் போட்டதும் தகரத்தைத் தட்ட மாடுகள் நகரத் தொடங்கும். பின்பு சபை அந்த மாடுகளை ஏலத்தில் விட அவற்றை வாங்கியவர்களுக்கு தொல்லையாகி விட்டது. மாடுகள் குப்பையைக் கண்டதும் நின்றுவிட இவர்கள் தகரத்தைத் தட்டி ஓட்ட வேண்டி இருந்தது.....!tw_blush:

On 30/03/2017 at 3:19 PM, வல்வை சகாறா said:

சுவியண்ணா இந்தக்கதையை நீங்கள்தான் எழுதினீர்கள் என்று நம்பவே முடியவில்லை. இவ்வளவு நாளும் பயங்கர அவையடக்கமாக இருந்துவிட்டு இப்போது பயங்கர அட்டகாசமாக.... இனிமேல் அப்பாவிகளையெல்லாம் நம்பக்கூடாது. சாண்டில்யனும் தோத்துப்போனான். இந்தச் துருச்சாமியாலேயே உங்களால் வாசகர்களைக் களேபரப்படுத்தமுடிகிறதென்றால் நீங்கள் மட்டும் நாவல் எழுதினால்....... யாழ் தாங்காது.eTMkB58Ac.gif

நன்றி சகோதரி. வசிட்டர் வாயால் பாராட்டு கேட்டமாதிரி  இருக்கு. நாவல் என்ன பெரிய நாவல் எழுதிட்டால் போச்சு. ஒரு தலைப்பை போட்டு விடுங்கோ சீரியஸ்ஸாய் எழுதிறன் சிரிக்காமல் வாசிக்க வேண்டும்.....ஐ வில் ட்ரை....! tw_blush:

On 30/03/2017 at 6:03 PM, வாதவூரான் said:

தாத்தா என்ன இது ஒரு அருமையான நாவலை இப்பிடி சடாரென்று முடித்துவிட்டீர்களே.  சாண்டில்யனின் நாவலைப் போல இருந்தது. என்ன அருமையான வர்ணனை சொல்லி வேலையில்லை.

நன்றி வாதவூரான்....உங்களின் கருத்துக்கள் வருவது குறைவு ஆனால் துருச்சாமி கூட்டி வந்திட்டார்...சாண்டில்யனின் அதிகமான கதைகள் படித்துள்ளேன்.அதன் தாக்கம்தான்..! tw_blush: 

On 30/03/2017 at 5:48 PM, தனி ஒருவன் said:

அதுக்குள்ள சுபம் போட்டு விட்டியளே ச்ச இன்னும் எதிர்பார்த்தேன் சாமியின் லீலைகள் tw_blush:

ஒருநாளைக்கு ஒரு லீலை காணாதா தனி, பாடி வீக்காயிடாது....!  tw_blush:

On 30/03/2017 at 5:57 PM, விசுகு said:

அருமையண்ணா..

இதை  நீங்கள் விரைவாக முடிக்கணும் என எதிர்பார்த்தேன்

காரணம் இது போன்ற  தொடர்களை  எழுதும் நாட்களில் ஒருவித மன  நடுக்கம்தொற்றிக்கொள்ளும்

அதை நீடித்தல்  உங்கள்  உடலுக்கு நல்லதல்ல.

 

கதையைப்பற்றி  நான்  எழுதுவதை விடஇதோ  சகாரா..

நன்றி விசுகு வருகைக்கும் கருத்துக்கும்.உண்மைதான், எழுதி முடிக்கும்வரை கொஞ்சம் டென்ஷன்....!  tw_blush:

On 30/03/2017 at 6:58 PM, ஜீவன் சிவா said:

பின்ன மண்டபத்தில யாரோ எழுதினதை கொண்டு வந்தாரா:grin:

உங்களுக்கு இது புதுமையாக இருக்கலாம், ஆனால் சுவியருக்கு யாழ் களத்தின் அவைப்புலவர் என்ற பட்டத்தை கொடுத்து சில வருடமாக அவரை செல்லமாக சீண்டிக்கொண்டிருந்த எனக்கு ஆச்சரியம் இல்லை.

அவருக்குள் எதோ ஒண்டு இருக்கு எண்டு தெரியும் 

ஆனால் அது இதுதான் எண்டு இப்பதான் தெரிந்தது.:grin::grin:

நன்றி ஜீவன்....! tw_blush:

On 30/03/2017 at 8:47 PM, கிருபன் said:

சின்ராசு, மாறன், மோகனா, கருப்பு எல்லாரையும் வைத்து இன்னும் "கலாதியாக"?? கதையைக் கொண்டுபோவீர்கள் என்று பார்த்தால் சுபம் போட்டு முடித்துவிட்டீர்களே சுவியர்☹️

நன்றி கிருபன். எல்லோரையும் தப்பு செய்யப்பண்ண விரும்பவில்லை. செண்பகம் போன்ற காரக்ட்டர் சமூகங்களில் ஓரிருவர் இருப்பினம். சாமியும் சிறுவயதில் இருந்தே அந்தமாதிரியான சேர்க்கையில் வளர்ந்திட்டுது.....!tw_blush:

On 30/03/2017 at 10:05 PM, ஜீவன் சிவா said:

பாவம் அவைப்புலவர்

அருமையான கதையை எழுதிய பின்னர் ஆளாளுக்கு கேள்வி கேட்க ரியாக்சன் இப்படி இருக்குமோ :grin:

 

 

 

திரையரங்குகளில் கட்டவுட் வைத்தமாதிரி இந்தக் கதைக்கு எனர்ஜி உங்களின் படங்களே. நன்றி ஜீவன்...! tw_blush:

On 31/03/2017 at 1:29 PM, putthan said:

என்ன ஐயா கதையை படக்கென்று முடிச்சிட்டியள்....

ஒருநாளைக்கு என்று கணக்கு பண்ணிக் கொண்டு எழுதியதால், கதையின் சுவாரஸ்யத்தில் கெதியாய் முடிந்ததுபோல் இருக்கு என நினைக்கின்றேன்.....! tw_blush:

On 31/03/2017 at 3:15 PM, கலைஞன் said:

கதை சூப்பர் குருஜி! :96_ok_hand:

நன்றி குருஜி, வருகைக்கும் கருத்துக்கும்....! tw_blush:

On 31/03/2017 at 3:57 PM, நந்தன் said:

ஜீவனிடம் கதைத்த போது பத்து வார்த்தைக்கு ஒரு தடவை சுவி அண்ணையை கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று சொன்னார்.அதன் காரணம் இப்போது புரிகின்றது. இவ்வளவு காலமும் எங்கே இருந்தாய் தலைவா

நன்றி நந்தன்.... ஜீவன் சும்மா டூப் அடிப்பார் நம்பாதையுங்கோ......!  tw_blush:

On 31/03/2017 at 4:00 PM, ஈழப்பிரியன் said:

கடந்த பல நாட்களாக புன் சிரிப்புடன் சுவியரின் கதையை வாசிக்க முடிந்தது.

பொலிவூட்டிலிருந்து ஒரு கோஸ்டி ஒன்று யார் இந்த சுவி என்று தேடி ஐரோப்பா முழுவதும் அலைவதாக ஒரு கேள்வி.

நன்றி ஈழப்பிரியன் வருகைக்கும் கருத்துக்கும்....மகிழ்ச்சி.....!  tw_blush:

On 01/04/2017 at 4:50 AM, ஜீவன் சிவா said:

யு மீன் கொழும்பு கோட்டைக்கு டிக்கெட் எடுத்துவிட்டு மருதானையில குதிச்ச பீலிங்.:grin:

 

tw_blush:

On 01/04/2017 at 5:10 AM, புங்கையூரன் said:

இல்லை..ஜீவன்!

படம் பார்த்துக் கொண்டு இருக்கும் போது .. இடைவேளைக்குப் பதிலாய் 'சுபம்' வந்த மாதிரி....!  

:cool:

tw_blush:  tw_blush:

On 01/04/2017 at 0:47 AM, புங்கையூரன் said:

சுவியர் ...ஒரு நல்ல படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது...ஒரு சுவாரசியமான கட்டத்தில்...படம் டக்கெண்டு முடிஞ்சு போன மாதிரி...ஒரு பீலிங்க்!

கடைசி...அந்தச் சங்கிலிக் கருப்பனாவது...சாமிக்குச் சங்கிலியாலஇரண்டு தட்டாவது...தட்டியிருக்க வேண்டும்!

வில்லன் தண்டிக்கப்படாமல்..படம் முடிவது...எமது கலாச்சாரத்தில் ஏற்றுக்கொள்ளப் பட முடியாத ஒன்று!

நம்பியாரும்...அசோகனும்...சிறைக்குப் போகாமல்...எம்.ஜி.ஆர்..படங்கள் எப்போதாவது முடிந்தது உண்டா?

என்றாலும்...முடிவு எனக்குப் பிடித்திருக்கின்றது!

ஏனெனில்....எங்கள் எல்லோருக்குள்ளும்....ஒரு துருச்சாமி வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்!

சந்தர்ப்ப சூழ்நிலைகள்....சமூக வலை...என்பன எம்மைக் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றன என்று நினைக்கிறேன்!

அடுத்த கதை....எப்போது தொடங்குகின்றது?

துருச்சாமி அவ்வளவு மோசமான சாமியல்ல நல்லசாமி புங்கை. யோசித்து பாருங்கள், அவர் முதல் சுட்டுக் கொண்டுவந்த காய்கறி கோழி எல்லாம் ஊரே அன்னதானம்போல் சாப்பிட்டு விட்டினம். தனது பிள்ளை என்று தெரியாமலே சங்கிலி போட்டு விடுகின்றார். ராசப்புவுக்கு மிசின் வாங்க காசும் குடுத்து மோதிரமும் குடுத்து விடுகுது. பின்பு மோகனாவுக்கும் நகையும் பணமும் குடுத்து விடுகுது. பெரிதாக தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. மொத்தத்தில் அன்றைய நாள் நல்லா முடிந்தது.....!

ஐடியா இதுவரை இல்லை. ஒரு தலைப்பு போடுங்கோ சும்மா இருக்கும்போது ட்ரை பண்ணலாம். நன்றி புங்கை....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

ஒருநாளைக்கு ஒரு லீலை காணாதா தனி, பாடி வீக்காயிடாது....!  tw_blush:

எனக்கு சின்ன வயது தானே தாங்கும் அண்ணை அடுத்த லீலை சீ சீ  கதை எப்ப வரும்tw_blush:

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image associée Image associée

மிகப்பிரமாண்டமான இரண்டாவது வெளியீடு.......இக் கார்த்திகைத் தீபத் திருநாளில் அன்பர்கள் யாவரும்  துருச்சாமி  படித்து வீடு பேறடையவும் ......!  ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.