Jump to content

இம்மாலையில் ஏகாந்தமாய்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 ஏகாந்தமாய் இம்மாலையில்

 

 

lovely-sad-girl-sitting-wallpaper.jpg

அன்பே, உன் தோள் சாய நான்

தூங்காமல் காத்திருக்கிறேன்

தூக்கத்தில் மட்டுந்தான்

நீ வருவாயா?

நான் விழித்திருக்கும் நேரமெல்லாம்

நீ விழி மூடிக்கிடக்கிறாய்.

நான் விழி மூடும் நேரமெல்லாம்

என் விழிகளுக்குள் நடக்கிறாய்

இருவரும் சேர்ந்தே நடப்பதுவும்

சேர்ந்தே விழிப்பதுவும் எப்போது?

பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும்

புரிந்து கொள்ளவும்

எம்மால் மட்டும் முடிகிறது.

உடலுக்கு மட்டுமல்ல உணர்வுகள்

மனதிற்கும் உண்டு

முடிவே இல்லாத வாழ்வும்

பிரிவே இல்லாத உறவும்

என்றுமே இருந்ததில்லை

இருந்தும்

ஏகாந்தத்தை இரசிப்பதுவும்

நேசிப்பை ருசிப்பதுவும்

எமக்குப் பழக்கமானவை

பொத்தி வைத்த தருணங்கள்

பூக்களாய் இதழ் விரிக்க

மயிலிறகாய் வருடும்

உன் நினைவுகளால் சிரிக்கிறேன்

கரை தொடும் அலையென

என் கனவினில் மட்டும்

வாஞ்சையுடன் வருடும்

உன் பிரிவினில் உணர்கின்றேன்

வாழ்வின் அர்த்தத்தை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றாக இருக்கிறது அக்கா கவிதை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் விழித்திருக்கும் நேரமெல்லாம்

நீ விழி மூடிக்கிடக்கிறாய்.

நான் விழி மூடும் நேரமெல்லாம்

என் விழிகளுக்குள் நடக்கிறாய்

இது நல்ல ரசனையாய் இருக்கு சகோதரி....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kavallur Kanmani said:

 

ஏகாந்தத்தை இரசிப்பதுவும்

நேசிப்பை ருசிப்பதுவும்

எமக்குப் பழக்கமானவை

பொத்தி வைத்த தருணங்கள்

பூக்களாய் இதழ் விரிக்க

மயிலிறகாய் வருடும்

உன் நினைவுகளால் சிரிக்கிறேன்

கரை தொடும் அலையென

என் கனவினில் மட்டும்

வாஞ்சையுடன் வருடும்

உன் பிரிவினில் உணர்கின்றேன்

வாழ்வின் அர்த்தத்தை.

அருமையான வரிகள்

எந்த வரியை தவிர்ப்பது எந்த வரியை இரசிப்பது என்றே பிரிக்கமுடியவில்லை அத்தனையும் நன்றாக கொலுவிட்டு அமர்ந்துள்ளன. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தோழி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மயிலிறகாய் வருடும் உன் நினைவுகளால் சிலிர்க்கிறேன் என்றுதான் எழுதினேன்  சிரிக்கிறேன் என்று இங்கு தட்டச்சில் வந்து விட்டது.  நான் விழித்திருக்கும் நேரத்தில் கனவு காண முடியாதல்லவா? அதனால்தான் நான் விழி மூடும் நேரத்தில் என் கனவில் உலாவரும் என்னவனின் நினைவுகளை கவிதையில் வடித்தேன் நன்றிகள் சுவி. என் கவிதையை படித்து ரசித்து கருத்திட்ட கவிதாயினிக்கும் நன்றிகள்.அத்துடன் விருப்பிட்ட அத்தனைபேருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, Kavallur Kanmani said:

 

அன்பே, உன் தோள் சாய நான்

தூங்காமல் காத்திருக்கிறேன்

தூக்கத்தில் மட்டுந்தான்

நீ வருவாயா?

நான் விழித்திருக்கும் நேரமெல்லாம்

நீ விழி மூடிக்கிடக்கிறாய்.

நான் விழி மூடும் நேரமெல்லாம்

என் விழிகளுக்குள் நடக்கிறாய்

 

அருமையான.... ரசித்த வரிகள். கண்மணி அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் ரசனைக்கு நன்றிகள் தமிழ்சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.