Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இம்முறை தேசிய மீலாதுன் நபி விழா யாழ்ப்பாணத்தில் ; அமைச்சர் ரிஷாத் அறிவிப்பு .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை தேசிய மீலாதுன் நபி விழா யாழ்ப்பாணத்தில் ; அமைச்சர் ரிஷாத் அறிவிப்பு .. April 8, 2017 சுஹைப் எம் காசீம் தேசிய மீலாதுன் நபி விழா இம்முறை யாழ்ப்பாணத்தில் நடாத்தபடும் என அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் இன்று(08/04/2017) யாழ்ப்பாணத்தில், அரசாங்க அதிபர் என். வேதநாயகம் தலைமையில் யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள் தொடர்பில் இடம்பெற்ற உயர்மட்ட கூட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய மீலாதுன் நபி விழாவின் மூலம் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களால் மக்களுக்கு இன்னும் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் கலாசார மேம்பாட்டை விருத்தி செய்ய உதவும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மீலாத்விழா இனநல்லுறவை பேணுவதற்கு வழி வகுக்கும் என்றார்  ஜனாதிபதி மற்றும் பிரதமர் இந்த விழாவில் அதிதிகளாக கலந்துகொள்வர் எனவும் குறிப்பிட்டார்.  முஸ்லிம் சமயவிவகார அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீம் அவர்களிடம் தாம் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்று இந்த விழாவை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு அமைச்சர் தனது நன்றிகளையும் வெளிப்படுத்தினார்.

இந்த விழாவின் மூலம் யாழ் மற்றும் கிழிநொச்சி மாவட்ட முஸ்லிம்கள் பெரிதும் நன்மை அடையும் என அவர் குறிபிட்டார். முன்னதாக யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக நடைபெற்ற உயர்மட்ட மகாநாட்டில் அவர்களின் பிரச்சினைகள் விரிவாக ஆராயப்பட்டு பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முடிவுகள்  எட்டப்பட்டது. மீள்குடியேறியுள்ள யாழ் முஸ்லிம்களின் பிரதிநிதிகளுக்கும் அரச அதிபர் மற்றும் அதிகாரிகளுக்கும் இடையில் சுமுகமான கலந்துரையாடலாவும்  இது அமைந்தது. காணியற்றோருக்கு  காணிகளை பெற்றுக்கொடுக்கும் வழிமுறைகள்  இங்கு ஆராயப்பட்டதுடன் வீடுகள் இல்லாதோருக்கு விடுகளை அமைத்து தர தான் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சரின் இணைப்பு செயலாளர் இர்சாத் ரஹ்மதுல்லாஹ் அமைச்சரின் பொது தொடர்பு அதிகாரி மொஹிடீன், உப்புக்கூட்டுத்தாபண தலைவர் அமீன்   அமைச்சரின் யாழ் மாவட்ட மீள் குடியேற்ற இணைப்பாளர் மௌலவி சுபியான் மற்றும் மக்கள் காங்கிரசின் யாழ் மாவட்ட அமைப்பளர் அமீன் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்தனர்.

AkuranaToday.com | Read more http://www.akuranatoday.com/news/?p=123639 .

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம அமைச்சர் நானா எதுசரி செஞ்சாலும், முஸ்லீம்கள் நல்லமாதிரிக்கு தான் என்னு எடுக்க வாணாம், வாப்பா.

இப்படித்தான் மன்னார் முஸ்லீம் மக்களுக்கு நல்ல வெசயம் செய்யறேன் பாரு என்று செல்லீட்டு, உள்ள பூந்து அனங் மனங் பண்ணி, அவனுவள, நடுத்தெருவில உட்டுட்டு, இப்ப யாழ்பாணம் பேத்திட்டு பெருநாள் கொண்டாடுறது பத்தி பேசிட்டு ஈக்காரு.

யாதி ஆளுவா அவரு.:unsure:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இன்சா அல்லா .... நல்லது நடக்கட்டும்....

வடக்கு மாகாணம் மிக வேகமாக இஸ்லாமிய மயமாகி வருவது  கணக்குடு ஆனால் அதை தடுக்க எந்தவொரு தமிழனுக்கும் வக்கில்லை.

சைவமதம் வடக்கில் அழிக்கபப்ட்டும் பொது தான் புலம்பெயர் புண்ணியவான்களுக்குக்கு புத்தி வரும்.

10 hours ago, Nathamuni said:

நம்ம அமைச்சர் நானா எதுசரி செஞ்சாலும், முஸ்லீம்கள் நல்லமாதிரிக்கு தான் என்னு எடுக்க வாணாம், வாப்பா.

இப்படித்தான் மன்னார் முஸ்லீம் மக்களுக்கு நல்ல வெசயம் செய்யறேன் பாரு என்று செல்லீட்டு, உள்ள பூந்து அனங் மனங் பண்ணி, அவனுவள, நடுத்தெருவில உட்டுட்டு, இப்ப யாழ்பாணம் பேத்திட்டு பெருநாள் கொண்டாடுறது பத்தி பேசிட்டு ஈக்காரு.

யாதி ஆளுவா அவரு.:unsure:

உண்மை தான் இவர் மகிந்தவின் கைப்பிள்ளை.

மகிந்த இன்னமும் அரசில் இருந்தால், தமிழர் கதை இப்பொழுது முடிந்து இருக்கும்.

இப்பொழுது வெறும் தவளை போல் கத்திக்கொண்டு திரிகிறார்.  
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

வடக்கு மாகாணம் மிக வேகமாக இஸ்லாமிய மயமாகி வருவது  கணக்குடு ஆனால் அதை தடுக்க எந்தவொரு தமிழனுக்கும் வக்கில்லை.

சைவமதம் வடக்கில் அழிக்கபப்ட்டும் பொது தான் புலம்பெயர் புண்ணியவான்களுக்குக்கு புத்தி வரும்.

உண்மை தான் இவர் மகிந்தவின் கைப்பிள்ளை.

மகிந்த இன்னமும் அரசில் இருந்தால், தமிழர் கதை இப்பொழுது முடிந்து இருக்கும்.

இப்பொழுது வெறும் தவளை போல் கத்திக்கொண்டு திரிகிறார்.  
 
றிசாத் பதியுதீன் மிக மோசமான இனவாதி என்பதில் சந்தேகமே இல்லை. இவர் ஒரு அப்பழுக்கில்லாத தமிழ்நாடு ரக அரசியல்வாதி.

அந்தப் பக்கமா, சிங்கள பகுதிகளில் காணிகளை  ஆட்டையை போட வெளிக்கிட்டு, பொது பல சேன, எதிர்த்துக் கிளம்ப, இந்தப் பக்கமா, வந்து ஆடடையைப் போட கிளம்பி விட்டார்.

முதலில் முல்லைத்தீவு பகுதியில், மக்கள் யுத்த அவலங்களின் இருந்து மீள முன்னர், மகிந்த ஆதரவுடன், காணிகளை பிடித்துக் கொண்டார்.

முன்னர் இருந்த மக்களை மீளக் குடியேற உதவுவது சரிதான். ஆனால் அவர், முல்லைத்தீவு கச்சேரியில் தான் சொல்வதைக் கேட்க்கும் ஆக்கள் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். அவ்வகையில் பல தமக்கு  சொந்தமில்லாத காணிகளை பிடித்துக் கொண்டார்.

கிழக்கிலும் தமது கைவரிசை காட்டிட சென்ற போதும், உள்ளூர் அரசியல் வாதிகளை இவரது, கிழக்கின் அரசியல் முயல்வுகளுக்கு இடம் தரவில்லை.

மன்னார் வில்பத்து பாதுகாப்புக்குரிய வனப்பகுதிகளை ஏப்பம் இட முயன்ற போது சிக்கிக் கொண்டார். அதுவும் பொது பல சேனா போன்ற சிங்கள அமைப்புகள் களம் இறங்கிய பின்னர் தான் நடந்தது.

நம்ம அரசியல் வாதிகளோ ஒரே மொழி, சகோதரத்துவம் என வழக்கம் போல தூங்குகிறார்கள்.

இவரோ பொம்மைவெளி, ஓட்டுமடம் என யாழ்ப்பாணத்தின் பகுதிகளில் எல்லாம் புகுந்து வருகின்றார்.

அவரது வேலைத் திட்டங்களுக்கு தேவையான பணம், மத்தியகிழக்கு ஷேக்குகளிடம் இருந்து வருவதாக, 'பிலிம்' காட்டினாலும், கொழும்பு ஆங்கில பத்திரிகைகளின், குறிப்புகள் படி, பல வித  சட்ட விரோதமான வழிமுறைகளில் வருவது போலவே தெரிகிறது. 

நீதிபதிகளைப் பயமுறுத்துவது போன்ற சேட்டைகளை எல்லாம் தயக்கம் இன்றி செய்யும் இவர் குறித்து, நாட்டின் சகல இன மக்களும் அவதானமாக இருக்க வேண்டும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் கிழக்கு தப்பியது 

எய்னைக்காம் நடக்கபோவுது வாப்பா............tw_blush:

57 minutes ago, Nathamuni said:

இதுக்கெல்லாம் ஆப்பு வந்து விட்டது. எல்லா காணி உரிமையாளர்களும் தமது காணிக்கு உரிய பாத்திரங்களை ஒப்படைக்குமாறு இப்பொழுது ஒரு உத்தரவு வந்து இருக்கின்றது.  

நீங்கள் ஆதாரம் சமர்பிக்காவிடில் அது அரச காணியாகி விடும்.

25 minutes ago, முனிவர் ஜீ said:

நல்ல காலம் கிழக்கு தப்பியது 

எய்னைக்காம் நடக்கபோவுது வாப்பா............tw_blush:

கிழக்கில் எல்லாம் செய்து முடிச்சாச்சு இனி அங்கு ஒன்றும் மிச்சமில்லை ???

அதே போல் 90% தமிழ் மக்கள் வாழும் வடக்கில் இவரது திருட்டுத்தனம் எடுபடாது.

இறுதியில் வில்பத்து போல் தான் இவரது யாழ்பாணம்பாத்  கனவும் முடியும்.

இதற்கு தமிழ் மக்கள் செய்ய வேண்டியது விழிப்புணர்வு.

அதே போல் இவர் கிழக்கைப் போல் ஆக்கிரமிக்க இவர் அஷ்ரப் ,ஹிஸ்புல்லா போல் அறிவாளியும் அல்ல, மகிந்த/ கோத்தபாயவின் எடுபிடி அவ்வளவு தான்  
 
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Dash said:

இதுக்கெல்லாம் ஆப்பு வந்து விட்டது. எல்லா காணி உரிமையாளர்களும் தமது காணிக்கு உரிய பாத்திரங்களை ஒப்படைக்குமாறு இப்பொழுது ஒரு உத்தரவு வந்து இருக்கின்றது.  

நீங்கள் ஆதாரம் சமர்பிக்காவிடில் அது அரச காணியாகி விடும்.

வெளிநாடுகளில் இருக்கும் காணி உரிமையாளர்கள் தமக்கு தந்து விட்டதாகவும் அல்லது விற்று விட்டதாகவும் கள்ள உறுதிகள் முடித்துக் கொண்டு வந்தால், என்ன கதை ?

அரசுக்கு தெரியும் உண்மையான உரிமையாளர் யார் என.

ஆனால் அவர்களா வித்தார்கள் என அரசுக்கு, அவர்கள் வந்து இல்லை என சொல்லும் வரை தெரியவராது.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதியுதீனை உடனடியாக கைது செய்ய வேண்டும் ; ஆனந்த தேரரின் அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை

photo_934777-1491733148.jpg?resize=618%2C618

நாட்டின் வன வளங்களை அழித்து நாசப்படுத்தும் பதியுதீனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வில்பத்துவை பாதுகாப்போம் என்ற அமைப்பு  ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ரிஷாத் பதியுதீனின் சூழல் பயங்கரவாதத்துக்கு எதிராக இலங்கை வாழ் பிரஜைகள் அனைவரும் ஒன்றினைய  வேண்டும் என சர்ச்சைக்குறிய ஆனந்த தேரரின் இயக்கப்படும் அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ள அதேவேளை. கடந்த சில நாட்களாக தங்களால் மேற்கொள்ளப்பட்ட தமது நடவடிக்கைகளினால்,பதியுதீனின் குடும்ப நிறுவனத்துக்கு வில்பத்துவில் வீடுகளை நிர்மாணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புத்தாண்டு வாரத்தில் வன பாதுகாப்பு அதிகாரிகள் விடுமுறையில் சென்றவுடன் வில்பத்து, தப்போவ, வீரக்குளிச்சோலை மற்றும்  கல்லாறு வனப் பிரதேசங்களில் மரங்களை  வெட்டுவதற்கு பாரிய திட்டமிடப்பட்டுள்ளதாகவுன் இதற்கு  வன பாதுகாப்பு அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பு  குறிப்பிட்டுள்ளது.

AkuranaToday.com | Read more http://www.akuranatoday.com/news/?p=123672 .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.