Jump to content

பட்டர் நாண்


Recommended Posts

பதியப்பட்டது

பட்டர் நாண்

 

sl5232.jpg

என்னென்ன தேவை?

மைதா - ஒரு கப்
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
தயிர் - 2 டீஸ்பூன்
பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
வெண்ணெய், உப்பு - தேவையான அளவு

 

எப்படிச் செய்வது?

ஒரு கிண்ணத்தில் மைதா, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் உருக்கிய வெண்ணெய், தயிர், பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். ஊறிய மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, நீளமான சப்பாத்தி போல தேய்த்துக்கொள்ளவும்.

தவாவை சூடாக்கி பிறகு சிம்மில் வைத்துக் கொள்ளவும். தவாவில் படும் நாண் பகுதியை சுட்டு எடுப்பதற்கு முன் அதன்மீது சிறிது தண்ணீரை தொட்டு தடவிக்கொள்ளவும். பின் தண்ணீர் தடவிய பகுதியை தவாவில் படும்படி போட்டு 5 நிமிடம் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். எடுத்த பின் எண்ணெய் தடவி பரிமாறவும்

http://www.dinakaran.com

 

Posted

வேளைக்கு ... என்றால் சாப்பிடலாம், உது நல்ல உணவல்ல.

தெரிந்ததொருவர் உதுகளை சாப்பிட்டு பெருங்குடலின் கொஞ்சத்தை வெட்டவேண்டியதாய்ப்போய்விட்டது

http://www.cancer.ca/en/cancer-information/cancer-type/colorectal/signs-and-symptoms/?region=on

 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.