Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆப்கானில் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது அமெரிக்கா

Featured Replies

ஆப்கானில் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது அமெரிக்கா

 

 

காபூல்: ஆப்கானில் ஐ.எஸ். புதுங்கியுள்ள பகுதி மீது அமெரிக்கா முதன் முறையாக குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் நங்கார்கன் மாகாணத்தில் உள்ள கணவாய்ப்பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தின் மீது அமெரிக்கா 21 ஆயிரம் பவுண்ட் எடையுள்ள மிகப்பெரிய குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. MOAB ‛‛மதர் ஆப் ஆல் பாம்'' என்ற பெயரில் இந்த குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. இதன் பாதிப்பு 300 மீட்டர் தொலைவிற்கு பாதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் எம்.சி.-130 ரக போர் விமானம் மூலம் இந்த தாக்குதல் நடந்ததாக அமெரிக்கா ராணுவ தலைமையகமான பென்டன் செய்தி வெளியிட்டுள்ளது,.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1750996

  • தொடங்கியவர்

ஆப்கானிஸ்தான் மீது அணு அல்லாத மிகப்பெரிய குண்டை அமெரிக்கா வீசியதாக பென்டகான் தகவல்

ஆப்கானிஸ்தான் மீது அணு அல்லாத மிகப்பெரிய குண்டை அமெரிக்கா வீசியதாக பென்டகான் தகவல் தெரிவித்துள்ளது.

 
 
ஆப்கானிஸ்தான் மீது அணு அல்லாத மிகப்பெரிய குண்டை அமெரிக்கா வீசியதாக பென்டகான் தகவல்
 
வாஷிங்டன்:

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் இடத்தை குறிவைத்து அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லை அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு முகமை பென்டகான் உறுதி செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் மீது மிகப்பெரிய அணு அல்லாத குண்டை அமெரிக்கா வீசியதாகவும் பென்டகான் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் நாங்கார்ஹார் மாகாணத்தில் அச்சின் மாவட்டத்தில் உள்ள சுரங்கப்பாதை மீது ஜிபியு - 43பி எனப்படும் மிகப்பெரிய அணுசக்தி அல்லாத பேரழிவு ஏற்படுத்தும் வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.
201704140027596575_pentagon1._L_styvpf.g
நேற்று மாலை 7.32 மணியளவில் இந்த தாக்குதல் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது நடத்தப்படும் முதல் போர்முறை தாக்குதல் இது என்று பென்டகர் செய்தித்தொடர்பாளர் ஆடம் ஸ்டம்ப் கூறினார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/14002749/1079877/US-drops-biggest-non-nuclear-bomb-in-Afghanistan-Pentagon.vpf

  • கருத்துக்கள உறவுகள்
  1. 9 retweets10 likes
     
     
     
     
     
     
     
  2.  

    2/3 weapons. It is upon us,Afghans, to stop the #USA.

    10 replies161 retweets85 likes
     
     
     
     
     
     
  3.  

    2/2 military. This is not the war on terror but the inhuman and most brutal misuse of our country as testing ground for new and dangerous...

    14 replies219 retweets132 likes
     
     
     
     
     
     
  4.  

    I vehemently and in strongest words condemn the dropping of the latest weapon, the largest non-nuclear #bomb, on Afghanistan by US...1/2

  • தொடங்கியவர்

ஆப்கன் மீது வீசப்பட்டது 'வெடிகுண்டுகளின் தாய்'!

 

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதக் குழு இயங்கி வந்ததாகக் கருதப்படும் பகுதியில் அமெரிக்கா நேற்று விமானத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது, 'வெடிகுண்டுகளுக்கு எல்லாம் தாய் (Mother of all bombs)' என்று அழைக்கப்படும் GBU-43 வெடிகுண்டை அமெரிக்கா வீசியது.

US_00342.jpg

அமெரிக்கத் தயாரிப்பில் அணுகுண்டுகள் இல்லாத ரகத்தில் இதுதான் மிகப் பெரிய வெடிகுண்டு. சுமார் 9,797 கிலோ எடை கொண்ட இந்த பிரமாண்ட வெடிகுண்டை ஈராக் போர் தொடங்குவதற்கு முன் கடந்த 2003-ம் ஆண்டு அமெரிக்கா பரிசோதித்துப் பார்த்தது. 20 அடி நீளம் கொண்ட இதில், 9 ஆயிரம் டன் வெடிபொருள்கள் அடங்கியிருக்கும்.ஆனால், இதுவரை எந்தப் போரிலும் அமெரிக்கா இந்த வெடிகுண்டை பயன்படுத்தியதில்லை. போர்விமானத்தில் எடுத்துச் சென்று வீசப்பட்டதும் இதுதான் முதன்முறை. GBU-43 வெடிகுண்டு பரிசோதனையின் போது, 32 கிலோமீட்டர் சுற்றளவிற்கு புகை மூட்டம் ஏற்பட்டது. 

பென்டகன் செய்தி தொடர்பாளர் ஆடம் ஸடம்ப் கூறுகையில், '' பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஆச்சின் பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள மலைக்குகைகளில் வெடிகுண்டு வீசப்பட்டது. ஆப்கன் நேரப்படி இரவு 7.32 மணிக்கு எம்.சி-130 ரக போர் விமானம் வெடிகுண்டை சுமந்து சென்று வீசியது. ஐ.எஸ் தீவிரவாதிகள் மலைக்குகைகளை கேடயமாக பயன்படுத்தி செயல்படுகின்றனர். அதனை தகர்க்கும் வகையில்  GBU-43 வீசப்பட்டது'' எனத் தெரிவித்துள்ளார். 

தாக்குதலில் உயிரிழப்புகள் குறித்து உடனடித் தகவல் எதுவும் இல்லை.  ஐ.எஸ் இயக்கத்தின் நிலைகள் முற்றிலும் தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/86402-us-drops-largest-non-nuclear-bomb-on-isis-caves-in-afghanistan.html

  • கருத்துக்கள உறவுகள்

A test detonation of the GBU-43 bomb in Florida in 2003 (USAF via Getty Images)

 

moab-explosion.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா கடைசியாய் கண்டுபுடிச்ச குண்டுகளை எல்லாம் அனுபவிக்கிற பாக்கியம் தம்பி வடகொரியனுக்குத்தான் எண்டு நான் நினைக்கிறன் :grin:

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
ஆப்கனில் பலியான ஐ.எஸ்.,பயங்கரவாதிகள் கேரளாவை சேர்நதவர்கள் என தகவல்
 

 

காபூல்: ஆப்கனில் அமெரிக்கா நடத்திய சக்தி வாய்ந்த ‛தாய்குண்டு‛ தாக்குதலில் பலியான ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கேரளாவை சேர்நதவர்கள் சிலரும் அடக்கம் என தகவல் வெளியாகியிருக்கிறது.
இது வரை பயன்படுத்தாத அதி சக்தி வாய்ந்த குண்டை அமெரிக்கா ஆப்கனில் அதிரடியாக வீசி தாக்கியது. இதில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் முகாம் அழிக்கவே இந்த முயற்சி என அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதலில் 36 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. பலியானவர்களில் கேரளாவை சேர்ந்த சிலரும் இங்கு தங்கி இருந்தனர் என பாதுகாப்பு வட்டார தகவல் தெரிவிக்கிறது. கேரளாவை சேர்ந்தவர்கள் எத்தனை பதுங்கி இருந்தனர் என்பது உறுதியாக ஏதும் தெரியவில்லை.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1751460

அமெரிக்க தாக்குதலில் 36 பேர் பலி; ஆப்கன் தகவல் Share on Facebook Share on Twitter
  • தொடங்கியவர்

அமெரிக்காவின் மாபெரும் குண்டுத் தாக்குதல்: எடை 9800 கிலோ, நீளம் 30 அடி

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படுகின்ற சுரங்கப்பாதை வளாகத்தில் 9,800 கிலோ எடையுடைய, மிகப்பெரிய குண்டு ஒன்றை வீசி தாக்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்திருக்கிறது.

இந்த தாக்குதலில் 36 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் தளம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"எல்லா குண்டுகளுக்கும் மேலான தாய்" என்று அறியப்படும் ஜிபியு-43/பி என்ற விமானத் தாக்குதலுக்கான மாபெரும் வெடிகுண்டுதான் (Massive Ordnance Air Blast Bomb - MOAB) ஒரு மோதலில் அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டுள்ள மிகப் பெரிய அணு ஆயுததமில்லாத வெடிகுண்டு என தெரிவிக்கப்படுகிறது.

நன்கார்ஹார் மாகாணத்தில் இந்த வெடிகுண்டு வீசப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் தலைமை அலுவலகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

சிரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தவறுதலாக 18 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதை பென்டகன் ஒப்பு கொண்ட சில மணிநேரங்களுக்கு பிறகு இந்த செய்தி வெளிவந்துள்ளது.

இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் நிலை கொண்டிருப்பதாக கூட்டணி படைப்பிரிவு ஒன்று தவறுதலாக அடையாளம் காட்டியதால், ஏப்ரல் 11 ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்காவால் ஆதரவு அளிக்கப்படுகின்ற சிரியா ஜனநாயக படைப்பிரிவுகளை சேர்ந்த 11 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் அரேபிய நாடுகளில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு வந்துள்ளனர்படத்தின் காப்புரிமைAFP Image captionஇஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் அரேபிய நாடுகளில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு வந்துள்ளனர்

தீவிரவாதிகள் பலர் சாவு

நன்கார்ஹாரில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடும் அமெரிக்க சிறப்பு படைப்பிரிவுகளின் படையினர் ஒருவர் கடந்த வாரம் இறந்ததை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் ஏறக்குறைய 10 ஆயிரம் கிலோ எடையுடைய குண்டு வீசப்பட்டுள்ளது.

அச்சின் மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை ஜிபியு-43/பி குண்டு வீசப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இது 9 மீட்டர் (30 அடி) நீளமுடைய வெடிகுண்டாகும்.

 

2003 ஆம் ஆண்டு சோதனை செய்யப்பட்ட இந்த வெடிகுண்டு இந்த தாக்குதலுக்கு முன்னதாக வேறு எங்கும் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"அந்த பகுதியில் இருக்கின்ற அமெரிக்க ராணுவ ஆலோசகர்கள் மற்றும் ஆப்கன் படைப்பரிவுகளை எளிதாக குறிவைத்து தாக்குவதை எளிதாக்குகின்ற, இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு பயன்படுத்தப்படுகின்ற சுரங்கப்பாதைகளையும், குகைகளையும் கொண்ட அமைப்பு ஒன்றை குறிவைத்து தாக்கியுள்ளோம்" என்று வெள்ளை மாளிகையின் செய்தித்துறை செயலர் ஷோன் ஸ்பைசர் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்க போர் விமானம்படத்தின் காப்புரிமைWATHIQ KHUZAIE/GETTY IMAGES Image caption"எல்லா குண்டுகளுக்கும் மேலான தாய்" என்று அறியப்படும் இந்த வெடிகுண்டு முன்னதாக வேறு எங்கும் பயன்படுத்தப்படவில்லை

இந்த குண்டு வீசப்பட்டபோது, பொது மக்கள் கொல்லப்படுவதையும், பக்க சேதங்கள் ஏற்படுவதையும் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வெடிகுண்டு பயன்படுத்தப்பட்ட இடம் பெரும்பாலும் மலைப்பாங்கான மக்கள் குறைவாகவே வாழுகின்ற இடமாக இருக்கிறது என்று பிபிசி செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

பக்கத்திலுள்ள இரண்டு மாவட்டங்களில் சப்தம் கேட்கும் அளவுக்கு இந்த குண்டுவெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது என்று உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலின் விளைவுகளை அமெரிக்கா இன்னும் வெளியிடாத நிலையில், இஸ்லாமிய அரசு தீவிரவாத மூத்த தலைவர் ஒருவரின் சகோதரர் உள்பட, அதிக தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

இதனை "இன்னொரு வெற்றிகரமான தாக்குதல்" என்று டொனால்ட் டிரம்ப் புகழ்ந்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global-39597643

  • தொடங்கியவர்

அமெரிக்காவின் மகா குண்டு இலக்கைத் துல்லியமாகத் தாக்கியது எப்படி?

 

ஆஃப்கானிஸ்தானில் உள்ள கிழக்கு மாகாணமான நங்கர்ஹாரில், போரின் போது முதல்முறையாக அணு ஆயுதமல்லாத மிகப்பெரிய வெடிகுண்டு ஒன்றை அமெரிக்க ராணுவம் வீசியுள்ளது.

அமெரிக்காவின் மகா குண்டு எவ்வளவு சக்தி வாய்ந்தது?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஜிபியு-43/பி என்ற மாபெரும் வெடிகுண்டு (Massive Ordnance Air Blast Bomb - MOAB), ராணுவ மொழியில் " குண்டுகளுக்கெல்லாம் தாய்" என்றழைக்கப்படும் இது நேற்று (வியாழன்) வீசப்பட்டது.

இஸ்லாமிய அரசு என்று தங்களைஅழைத்துக் கொள்ளும் அமைப்பினர் அச்சின் மாவட்டத்தில் பயன்படுத்தி வந்த சுரங்கங்களின் பிணையம் இலக்காக வைக்கப்பட்டது.

இது ஆணு ஆயுதமாக இல்லாததால், எம்ஒஏபி குண்டை பயன்படுத்துவதற்கு அமெரிக்க அதிபரின் அனுமதி தேவையில்லை.

இந்த வெடிகுண்டு 30 அடி நீளமும், 9800 கிலோ எடையும் மிகப் பிரம்மாண்டமானது. ஜி பி எஸ் தொழில்நுட்பம் கொண்ட இந்த வெடிகுண்டு எம் சி 130 சரக்கு விமானத்தின் கதவுகள் வழியாக குண்டு வீசப்பட்டு தரையை தொடுவதற்குமுன் வெடிக்க வைக்கப்பட்டது.

அமெரிக்காவின் மகா குண்டு எவ்வளவு சக்தி வாய்ந்தது?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

விமானத்திலிருந்து வீசப்பட்ட வெடிகுண்டின் பக்கங்களில் பாராசூட் ஒன்று கட்டப்பட்டிருந்தது. அது ஆயுதத்தை காற்றில் சறுக்கிக் கொண்டு செல்ல, நான்கு கிரிட் போன்ற துடுப்புகள் வெடிகுண்டை நிலைப்படுத்தவும், வழிகாட்டவும் பயன்படுத்தப்பட்டது.

அதன் முதன்மை விளைவானது மிகப்பெரிய வெடிப்பு அலையை ஏற்படுத்துவது.

இதிலுள்ள 18,000 பவுண்டுகள் கொண்ட டி என் டி ஒவ்வொரு திசையிலும் சுமார் ஒரு மைல் தூரம் வரை வெடிப்பு அலைகளை நீட்டிச் செல்லும் திறன் படைத்தது.

இந்த வெடிகுண்டின் மெல்லிய அலுமினிய கவசம், வெடிப்பினால் ஏற்படும் தாக்கத்தின் பரப்பளவை அதிகரிக்கும் சக்தி கொண்டது.

நிலத்துக்கு அடியில் உள்ள பதுங்கு குழிகளையும், சுரங்கப் பாதைகளையும் தகர்க்கக் கூடிய சக்தி வாய்ந்தது,

இராக் போரில் பயன்படுத்துவதற்காக இந்த ஆயுதம் தயாரிக்கப்பட்டது.

 

இதன் ஒன்றின் தயாரிப்பு செலவானது சுமார் 16 மில்லியன் டாலர்கள் என கூறப்பட்டது.

2003ல் முதன்முறையாக சோதிக்கப்பட்ட இந்த வெடிகுண்டானது தற்போதுவரை போரில் பயன்படுத்தப்படவில்லை.

அமெரிக்காவின் மகா குண்டு எவ்வளவு சக்தி வாய்ந்தது?படத்தின் காப்புரிமைPUBLIC DOMAIN

மேலும், எம் ஒ ஏ பி மட்டுமே அமெரிக்க ராணுவத்தில் உள்ள மிகப்பெரிய அணு ஆயுதமில்லா வெடிகுண்டு அல்ல.

அமெரிக்காவை போன்றே ரஷ்யாவும் அதன் சொந்த மரபுவழி வெடிகுண்டை தயாரித்துள்ளது. அதற்கு 'குண்டுகளின் தந்தை'' என்று செல்லப் பெயர் சூட்டியுள்ளது.

எஃப் ஒ ஏ பி எரிபொருள் காற்று ரகத்தை சேர்ந்த வெடிகுண்டாகும். தொழில்நுட்ப ரீதியாக உயரழுத்த ஆயுதம் என்று அறியப்படுகிறது.

அமெரிக்காவின் மகா குண்டு எவ்வளவு சக்தி வாய்ந்தது?படத்தின் காப்புரிமைUSAF/GETTY IMAGES

உயரழுத்த வெடிகுண்டுகள் பொதுவாக இரு நிலைகளில் வெடிக்கும்.

எம் ஒ எ பி வெடிகுண்டை அலபாமா சார்ந்த வானியல் நிறுவனமான டைநெட்டிக்ஸ் மேம்படுத்தியுள்ளது.

http://www.bbc.com/tamil/global-39598414

  • தொடங்கியவர்
அமெரிக்க குண்டுவீச்சில் பலியான பயங்கரவாதிகள் 92 ஆக உயர்வு

 

காபூல்:ஆப்கானிஸ்தா னில் அமெரிக்கா நடத்திய, 'மதர் ஆப் ஆல் பாம்ஸ்' எனப்படும், அணு ஆயுதம் இல்லாத மிகப்பெரிய குண்டு வீச்சில், பலியான பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது.


மேற்காசிய நாடான சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் செயல்பட்டு வரும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, ஆப்கானிஸ்தானிலும் செயல்பட்டு வருகிறது. இவர்களின் கொட்டத்தை அடக்கும் வகையில், 2016, அக்டோபர் மாதம் முதல், இந்தப் பகுதிகளில், அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான் படைகளும் தரைவழி தாக்குதலை நடத்தி, இழந்த பகுதிகளை மீட்டு வருகிறது. இந்த நிலையில், 'மதர் ஆப் ஆல் பாம்ஸ்' என்று அழைக்கப்படும், 'ஜிபியு 43/பி' என்ற மிகப் பெரிய, அணுஆயுதம் இல்லாத குண்டை, நங்கார்ஹர் மாகாணத்தில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியில், அமெரிக்கா நேற்று முன்தினம் வீசியது.இந்த தாக்குதலில், 36 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக, ஆப்கானிஸ்தான் அரசு நேற்று தெரிவித்தது.


அமெரிக்காவின் தாக்குதலில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த குகை, சுரங்கபாதை மற்றும் பதுங்கு குழிகள் ஆகியவை சேதமடைந்துள்ளதாகவும், பலியான பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். இதில் ராணுவம் மற்றும் பொது மக்கள் அதிகாரி யாரும் பலியாகவில்லை எனவும் கூறினர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1752041

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.